சமீபத்திய பதிவுகள்

சீனாவில் நிலநடுக்கம்;வீடுகள் குலுங்கின

>> Monday, November 10, 2008

 
 
lankasri.comசீனாவின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5புள்ளிகளாக பதிவானது.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.

சிங்காய் மாகாணத்தில் கோல்மட்,சினிங் ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

கோல்மட் பகுதியில் நிலக்கரி அரங்கங்கள் பொட்டாசியம் தொழிற்சாலை உள்ளன.நிலநடுக்கத்தால் சுரங்கம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் உயிர் இழந்தார்களா?என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226306772&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இராக்கில் குண்டுவெடிப்பு:28 பேர் மரணம்

 
 
lankasri.comஇராக் தலைநகர் பாக்தாத்தில் திங்கள்கிழமை காலை இரு குண்டுகள் வெடித்தன.இதில் 28பேர் பலியாகினர்.68பேர் காயமடைந்தனர்.பாக்தாத்தின் சன்னி மாவட்டத்தில் மார்க்கெட் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

முதலில் அங்குள்ள உணவகம் அருகே இந்திய நேரப்படி காலை 8மணி அளவில் கார் குண்டு வெடித்தது.இந்த குண்டு வெடித்த அடுத்த சில நிமிடங்களில் மனிதக் குண்டு வெடித்து சிதறினார்.

மக்கள் பரபரப்பாக அலுவலகங்களுக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்தன.குண்டுகள் வெடித்த நேரத்தில் பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் வந்தது.இதில் 5மாணவிகள் பலியாகினர்.மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226330410&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இந்தியா வெற்றி! பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது

 
lankasri.comநாக்பூர் டெஸ்டில் சற்று முன் ஆஸ்ட்ரேலிய அணியை இ‌ந்‌தியா 172-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியதோடு,பார்டர்-கவாஸ்கர் கோப்பையை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்தது.ஆஸ்ட்ரேலியா 209-ரன்களுக்கு சுருண்டது.

2005ஆஷஸ் தொடருக்கு பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியைக் கூட வெல்லாமல் ஆஸ்ட்ரேலியா படுதோல்வி அடைந்துள்ளது.மேலும் கடந்த சிட்னி டெஸ்டிற்கு பிறகு இந்தியாவுடன் விளையாடிய 6டெஸ்ட்களில் இந்தியா 3டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

இன்று காலை 13/0 என்று துவங்கிய ஆஸ்ட்ரேலியா,இலக்கை எ‌‌ட்டுமாறு அடித்து ஆட வேண்டும் என்ற அறிவுபூர்வமான முடிவை எடுத்தது.

அதற்கு இணங்க ஹெய்டன் அதிரடியாக விளையாடிஅனர்.ஆனால் அவர் 77ரன்களில் ஆட்டமிழந்த பிறகு,முன்னதாக பாண்டிங்கும்,கிளார்க்கும் கூட போன பிறகு வெற்றி பெறுவது சாத்தியமில்லாது போய் விட்டது.

இந்திய அணியில் ஹர்பஜன் சிங் 4விக்கெட்டுகளையும், அமித் மிஷ்ரா 3விக்கெட்டுகளையும்,இஷாந்த் ஷர்மா 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கடைசியாக மிட்செல் ஜான்சன் ஹர்பஜன் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆன போது இந்திய அணியினர் ஸ்டம்புகளை தரையிலிருந்து எடுத்து கொண்டாட்டத்தை துவங்கினர்.

ஆட்டத்தின் கடைசி ஒரு சில ஓவர்களை கங்கூலி தலைமையின் கீழ் ஆடுமாறு செய்தார் தோனி.கங்கூலியின் கடைசி டெஸ்ட் தினம் இது என்பதால் தோனி அவ்வாறு முடிவு செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஆ‌ட்ட நாயகனாக ‌கிரேஜாவு‌ம்,தொட‌ர் நாயகனாக 15 வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌திய இஷா‌ந்‌த் ச‌ர்மாவு‌ம் தே‌ர்வு செ‌ய்‌ய‌ப்ப‌ட்டன‌ர்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1226310504&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

கிளிநொச்சியில் இரு இடங்களில் கடுமையான விமானத் தாக்குதல்


கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விடுதலைப்புலிகளின் இரு நிலைகள் மீது கடும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் சந்திக்கு மேற்கே சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கடற்புலிகளின் கட்டளை நிலையம் மீதும் பூநகரிக்கு தென் கிழக்கே சுமார் 6 கிலோ

மீற்றர் தூரத்திலுள்ள புலிகளின் ஆட்லறி நிலைகள் மீதுமே இந்த விமானத் தாக்குதல்கள் நடைபெற்றதாக விமானப் படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

பிற்பகல் 12.50 மணியளவில் இரு இலக்குகள் மீதும் ஒரே நேரத்தில் துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபடும் படையினருக்கு ஆதரவாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

இதேநேரம், யாழ்ப்பாணம் முகமாலை பகுதியிலும் கிளிநொச்சியில் அக்கராயன்கும் பகுதியிலும் மணலாறில் ஆண்டான்குளம் பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.thinakkural.com/news/2008/11/10/importantnews_page61659.htm

StumbleUpon.com Read more...

ஒபாமா கொண்டுவர நினைக்கும் உலகளாவிய மாற்றங்கள் எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

-ஜிம் லோப்-

ஜனாதிபதி பராக் ஹூஸெயின் ஒபாமா அமெரிக்காவின் வித்தியாசமான முகத்தை உலக நாடுகளுக்கு காண்பிக்க இருக்கும் அதேவேளை, அவர் கடைப்பிடிக்க இருக்கும் உண்மையான வெளிநாட்டு கொள்கை எவ்வளவுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருபுறம் ஏற்கனவே பதவியிலிருக்கும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தனிச்சையான, இராணுவ அணுகுமுறைக்கு மாறாக நீண்டகால அமெரிக்க பகைமை நாடுகள் உட்பட உலக நாடுகளுடன் பல்தரப்பட்டதும் இராஜதந்திர ரீதியிலானதுமான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை ஒபாமா அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

மறுபுறம் பால்கன்ஸ், சூடான், ஈராக் ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தவிர்ப்புக் கொள்கை, அயல் அரபு நாடுகளுடான பேச்சுவார்த்தைகளின் போது விட்டுக் கொடுக்கும் கொள்கையை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்துவதில் காண்பிக்கப்பட்ட தயக்கம் மற்றும் அதனை அடுத்து 8 வருட காலத்திற்கான அத்திவாரத்தை இடுவதற்கு அமெரிக்காவே பெரிதும் உதவியது என்ற எண்ணம் ஆகியன உட்பட தனது சொந்த தாராள தலையீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்த ஜனாதிபதி பில் கிளின்டனின் நிருவாகத்தில் ஊறிப்போனவர்களே ஜனாதிபதி புஷ்ஷின் ஆலோசர்களாக இருக்கிறார்கள்.

நிருவாகத்தில் இன்னமும் கிளின்டனின் குணாம்சங்கள் நிறைய உள்ளன என்று புதிய அமெரிக்க மன்றம் என்ற அமைப்பின் அமெரிக்க உத்தித் திட்டப் பிரிவின் தலைவரான ஸ்டீபன் கிளெமன்ஸ் தெரிவித்தார். கிளின்டனின் முன்னாள் சிரேஷ்ட உதவியாளரான ராஹ்ம் இமானுவேல் என்பவரை ஒபாமாவின் நிருவாகத்தில் வெள்ளை மாளிகை பிரதம அதிகாரியாக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டதை "கிளின்டன்3' நிருவாகம் புனர் ஜன்மம் எடுப்பதற்கான பல அறிகுறிகளில் ஒன்றாக ஸ்டீபன் சுட்டிக் காட்டினார்.

சிறு பராயத்தின் பெரும்பாலான காலத்தை இந்தோனேசியாவிலும் மிகுதித் காலத்தை அமெரிக்காவின் பல்கலாசார மாநிலமான ஹாவாயிலும் கழித்த, கென்ய தந்தை ஒருவரின் ஈரின புதல்வரான ஒபாமா தற்போதைய அல்லது வேறெந்தவொரு ஜனாதிபதியிலும் பார்க்க மிக வித்தியாசமான அமெரிக்காவை உலக நாடுகளுக்கு தெளிவாக அறிமுகம் செய்வாரென்பதில் எதுவித சந்தேகமுமில்லை. அவரது பின்னணியும் உடல் தோற்றமும் ஒருபுறமிருக்க, அவரது மொழியாள்கைத்திறன், கொந்தளிப்பான நிலைமையின் போது அவர் கடைப்பிடிக்கும் மன அமைதி, சிந்தனையில் புத்திக் கூர்மை, விடயங்களை அறியத் துடிக்கும் ஆர்வம் ஆகியனவும் புஷ்ஷ?க்கு மிகவும் மாறானவையே.

கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் மூலதனம் படு மோசமாக சீரழிந்துள்ளதால் ஒபாமா மிக வேறுபாடான அமெரிக்கா ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்வது அத்தியாவசிமானதொன்றாகும் என்று லீஹை பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ராஜ் மேனன் தெரிவித்தார்.

ஆனால், பல உலக நாடுகளும் அவருக்கு வாக்களித்த பெரும் தொகை வாக்காளர்களும் எதிர்பார்க்கும் பாரிய மாற்றங்களை உறுதிப்படுத்த பிரசாரத்தின் போது அவர் அளித்த வெளிநாட்டுக் கொள்கை வாக்குறுதிகள் போதியதாக இல்லை என்று கருதப்படுகின்றது.

குவாந்தனாமோ தடுப்பு முகாமை மூடுவது, பூமி வெப்பமடைவதற்கு காரணமாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சியில் அமெரிக்கா மீண்டும் இணைந்து கொள்வது, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது போன்ற ஜனநாயக நாடுகளுக்கும் அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் உற்சாகம் தரும் உறுதிமொழிகளை ஒபாமா குறுகிய காலத்திற்குள் நிச்சியம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு.

ஆனால், காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள போதிலும் விரிவான பரிசோதனைத் தடை உடன்படிக்கை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான ரோம உடன்படிக்கை ஆகியவற்றை அங்கீகரித்தல் மற்றும் தொழிலாளர் உரிமைகளையும் சுற்றாடல் பிரமாணங்களையும் பலப்படுத்துவதற்காக வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை திருத்தியமைத்தல் போன்ற ஈரிடை ஆதரவைத் தேவைப்படும் சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு அரசியல் மூலதனத்தை செலவிட ஒபாமா அதிகம் விரும்பாதிருக்கலாம்.

பெரும் நாணய நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில். ஒபாமா இரண்டு மாதங்களுக்கு முன்னர் எண்ணியது போல் வெளிநாட்டுக் கொள்கையில் கவனம் செலுத்த அதிக நேரத்தை செலவிடுவார் போலத் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் ஈராக் யுத்தம் அல்லது பயங்கரவாதம் ஆகியவற்றிலும் பார்க்க பொருளாதாரப் பிரச்சினைகளே முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருத்துத் தெரிவித்தமை கூடுதலான வெளிநாட்டுக் கொள்கைத் தீர்மானங்களை தமது உதவி ஜனாதிபதியான செனெற் வெளியுறவுக் குழுத் தலைவர் ஜேசேப் பிடெநிடமும் புதிதாக நியமிக்கப்படவிருக்கும் உதவியாளர்களிடமும் விட்டுவிடலாமென கருதப்படுகிறது.

அநேகமான உதவியாளர்கள் உலகினை ஒரு யுத்தகளமாக நோக்கும் தாராள தலையீட்டுக்காரர்களை காப்பாற்றும் முயற்சிலிருந்து அநேகமாக முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவலைப் போன்ற இராணுவத் தலையீட்டை விரும்பும் புஷ்ஷை சுற்றியுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களைப் போன்றோரே ஆவர். செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் நிதி நெருக்கடி தோன்றியதிலிருந்து தேர்தல் பிரசாரத்திலிருந்து வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்படாததால் ஒபாமாவின் நிலைப்பாடும் இந்த விடயத்தில் எவ்வாறிருக்கிறது என்பது பல அவதானிகளுக்கு தெளிவாக இல்லை.

ஒபாமா ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதே பலரது ஊகமாகும். பிடென் போன்ற தலையீட்டுக்காரர்களுடன் முரண்பாடில்லாத அதேவேளை சூடானில் இனக் கொலையை நிறுத்துவதற்கு அவசியமேற்பட்டால் டர்பூர் பிரதேசத்திற்கு மேலாக விமானங்களை பறக்காத வலயம் ஒன்றை பிரகடனப்படுத்துவதை ஒபாமா அங்கீகரித்துள்ளார். பகைவர்களை அவர்களது மனித உரிமை பேணல் வரலாற்றை பொருட்படுத்தாமல் இராஜதந்திர ரீதியில் அவர்களை ஈடுபடுத்துவது ஒபாமாவின் யதார்த்தவாதத்தையே பிரதிபலிக்கிறது. உண்மையில், அவரது நியமனங்களில் இரண்டு துருவங்களுக்கிமிடையே சமதன்மையை ஏற்படுத்த அவர் முயற்சிக்கலாம்.

இவ்வாறாக, பென்டகன் தலைமைப் பதவிக்கான அவரது முதலாவது தேர்வு குடியரசுக் கட்சி ஆட்சியில் பதவி வகித்த றொபேட் கேற்ஸ் ஆவார் என்று நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேற்ஸ் நிருவாகத்தில் இணைந்து கொண்டதிலிருந்து கொலின் பவலின் பதவிக்கு நியமிக்கப்பட்ட கொன்டோலிஸா றைஸுடன் சேர்ந்து அமெரிக்க கொள்கையை முன்னெடுத்து சென்ற பெருமையை பெற்றிருந்தார்.

16 மாத கால நேர அட்டவணையில் ஈராக்கிலிருந்து சகல போர்ப் படையினரையும் வாபஸ் பெறுவது, புது வகையான அணுவாயுதங்களின் உற்பத்தியை தடை செய்வது போன்ற ஒபாமாவின் தேர்தல் பிரசார உறுதிமொழிகள் பலவற்றுக்கு கேற்ஸ் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த போதிலும் அவரது தகுதி, அனுபவம் மற்றும் ஒபாமாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பை வழங்குவது ஆகியவற்றைப் பொறுத்த வரையில் விரும்பத்தக்கவராகவே கணிக்கப்படுகிறார்.

மேலும், ஒபாமா கேற்ஸை விரும்பாவிட்டால் அல்லது கேற்ஸ் ஒபாமாவின் நியமனத்தை ஏற்றுக் கொள்ளவிட்டால் மற்றுமொரு குடியரசுக் கட்சி யதார்த்தவாதியை இராஜாங்க செயலாளராகவும் கிளின்டனின் முன்னாள் கடற்படை செயலாளர் றிச்சாட் டன்சிக் என்பவரை பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்க ஒபாமா தயங்க மாட்டார். இன்டியானா மாநிலத்தின் சிரேஷ்ட செனற் வெளியுறவுக் குழு உறுப்பினர் றிச்சட் லூக, பதவியிலிருந்து வெளியேறும் நெப்ராஸ்கா மூதவை உறுப்பினர் சூக் ஹேகல், அமெரிக்காவின் ஐரோப்பிய படைப்பிரிவின் தலைவரும் தேர்தலின்போது மெக்கெயினுக்காக பிரசாரம் செய்தவருமான ஜெனரல் ஜேம்ஸ் அல். ஜோன்ஸ் ஆகிய மூவரும் இதுவரை ஒபாமாவின் நியமனங்களில் இடம்பெறுவார்களென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரும் அரபு இஸ்ரேல் பிரச்சினைக்கு தீரவு காண்பதில் நடுநிலையாக செயற்படுவோர் என்றும் ஈரான் விவகாரத்தில் தற்போதைய நிருவாகத்திலும் பார்க்க மோதல் தவிர்ப்பு மனப்பான்மையை கொண்டவர்கள் என்றும் உறுதியான யதார்த்தவாதிகளென்றும் நம்பப்படுகிறார்கள்.

இதேவேளை, கேற்ஸ் பென்டகன் தலைவராக தொடர்ந்து இருந்தால் இராஜாங்க செயலாளராக ஒரு ஜனநாயக கட்சிக்காரரை ஒபாமா தெரிவு செய்யலாம். மேற்குறிப்பிட்ட மூன்று குடியரசுக்கட்சி உறுப்பினர்களைத் தவிர அதிகமாக அடிபடும் பெயர்களாவன கூடுதலாக லிபரல் கட்சியை சார்பவரும் 2004 ஆம் வருட ஜனாதிபதி வேட்பாளருமான செனற்றர் ஜோன் கெறி, கிளின்டனின் முன்னாள் நியூ மெக்ஸிகோ மாநில ஆளுநர் பில் றிச்சாட்ஸன் ஆகியோராவர். அமெரிக்க எதிரிகளுக்கெதிராக போராடும் இவரது ஆர்வம் இவரை ஒரு யதார்த்தவாதியாக்கியுள்ளது. கிளின்டனின் மற்றுமொரு முன்னாள் ஐக்கிய நாடுகள் தூதுவர் றிச்சாட் ஹோல்புறுக்கும் ஒபாமாவின் பட்டியலில் இருந்த போதிலும் கடந்த சில வாரங்களாக ஒபாமாவின் செல்வாக்கை பெறத் தவறியுள்ளார்.

கிளின்டனின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவரும் தலையீட்டுக்காரர்களின் பக்கம் சாய்பவராகவும் கணிக்கப்பட்ட ஜேம்ஸ் ஸ்டீன்பேர்க் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படலாமென கருதப்படுகிறது. கிளின்டனின் முன்னாள் அட்டோர்னியும் ஜனநாயகக் கட்சி யதார்த்தவாதியும் கிறெக் கிறேய்க் பிரதி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படலாம்.

கிளின்டனின் முன்னாள் ஆபிரிக்க உதவியாளரும் லிபரல் கட்சி யதார்த்தவாதியுமான சுசான் றைஸ் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியையும் ஐக்கிய நாடுகள் தூதுவர் பதவியையும் பெறக் கூடுமென நம்பப்படுகிறது. கிளின்டனிடம் பதவி வகிக்காதவர்களும் ஒபாமாவின் நெருங்கிய வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர்களுமான டெனிஸ் மெக்டொனோ, ஜெனரல் ஸ்கொட் கிறேஷன், பேச்சு எழுத்தாளர் பென் றோட்ஸ் ஆகிய மூவரும் வெள்ளை மாளிகைப் பதவிகளைப பெறலாமென நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஈராக், மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து பேக்கர் ஹமில்டன் அறிக்கையை தயாரித்த இணை எழுத்தாளர் கிறேஷன் ஒரு யதார்த்தவாதியாவார்.

ஐ.பி.எஸ்.

http://www.thinakkural.com/news/2008/11/10/articles_page61607.htm

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் 8 வயதுச் சிறுவனால் தந்தையும் மற்றொருவரும் சுட்டுக்கொலை

 
 
 
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனால் அவனது தந்தையும் மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அரிசோனாவின் போனிக்ஸ் பகுதியின் வடகிழக்கு பகுதியிலுள்ள சிறியதொரு சமூகத்திலேயே இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
22 ரகக் கலிபர் துப்பாக்கி மூலமே தனது தந்தையான வின்சன் றொமேறோ (வயது 29) மற்றும் ரிமோதி றொமன்ஸ் (வயது 39) ஆகியோரை இச்சிறுவன் சுட்டுக்கொன்றுள்ளான்.
ஆனால் இதுவரை காலமும் எந்தவொரு துர்நடத்தைக்காகவும் பாடசாலையிலோ அல்லது வீட்டிலோ இச்சிறுவன் தண்டிக்கப்படவில்லையென அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் கூறியிருப்பதுடன் பொலிஸாரினாலோ நீதிமன்றினாலோ எந்தவிதமான தண்டனைகள் கூட இச்சிறுவனுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லையெனவும் கூறியுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் தான் என்ன செய்வது என்பதைத் தெரியாமலே இச்சிறுவன் இக்கொலையைப் புரிந்திருக்கலாமென தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தந்தையையும் மற்றைய நபரையும் சுட்ட பின்னர் அயலிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற சிறுவன், தனது தந்தை மரணமடைந்துவிட்டதாக தான் நம்புவதாகக் கூறியுள்ளான்.
வீட்டில் வெளிப்புறமிருந்து ஒரு சடலத்தையும், மாடியிலிருந்து மற்றொரு சடலத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விருகொலைகளையும் தானே செய்ததாக பொலிஸ் விசாரணையின் போது சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிறுவனை நன்நடத்தை தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறும் உளவியல் ரீதியான பரிசோதனைகளுக்கு சிறுவனை உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதை ஏற்கமுடியாது


* முதலாவது செய்தியாளர் மாநாட்டில் ஒபாமா

அமெரிக்கா எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் முதல் தடவையாக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிக்காக்கோவில் ஒபாமா செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, தான் ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள இந்தச் சூழலில் அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்கள் மற்றும் அதை சமாளிக்கப்போகும் விதம் குறித்து செய்தியாளர்களிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்கா இதுவரை சந்திக்காத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் நாட்டில் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வரிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சவால்களை சமாளித்து, நடுத்தரக் குடும்பங்களை வரிச்சுமையில் இருந்து விடுவிப்பதே எனது முதல் நோக்கம்.

வேலைவாய்ப்பின்மையும் நாட்டில் முக்கிய பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. எனவே, கூடுதலான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் உடனடியாகக் கவனம் செலுத்தப்படும்.

நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படும் என நினைக்கிறேன்.

இல்லையேல் நான் பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் அந்த நிதி மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலுவேன்.

எனது தலைமையில் திறமையானவர்களைக் கொண்ட அமைச்சரவை அமையவுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையை நன்கு உன்னிப்பாகக் கவனிப்பார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் மீது இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய காரணிகளைக் கண்டறிந்து அவற்றை களைவார்கள் எனத் தெரிவித்தார்.

ஒபாமா சிக்காக்கோவில் 20 நிமிடம் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு முன்னதாக அவர் தனது பொருளாதார ஆலோசகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரான் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒபாமா ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றே நான் கருதுகிறேன். இதனைத் தடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.

தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஈரான் போன்ற நாடுகளை அணுகுவதில் அதிக கவனம் செலுத்தப்படும். உலக நாடுகளில் உள்ள பல பிரச்சினைகளை கவனமாக, சரியான முறையில் கையாள வேண்டும். மேலும், நான் இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இல்லை. ஜனவரி 20ஆம் திகதிக்குப் பின்தான் ஜனாதிபதியாக செயல்பட இருக்கிறேன் என்றார் ஒபாமா.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து, ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்துக்குப் பதில் அனுப்பிவீட்டீர்களா என்று செய்தியாளர்கள், கேட்டதற்குப் பதிலளித்த ஒபாமா அந்தக் கடிதத்தைப் பரிசீலித்து அவருக்கு சரியான பதிலை அனுப்புவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷ?ம் அவரது மனைவியும் வெள்ளைமாளிகைக்கு வருமாறு தனக்கு அழைப்புவிடுத்துள்ளதாகத் தெரிவித்த ஒபாமா எந்த விவகாரம் குறித்தும் பேச்சு நடத்த நான் வெள்ளைமாளிகைக்கு செல்லவில்லை. அவரது அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாகவே நான் அங்கு செல்கிறேன் எனத் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news%5C2008%5C11%5C10%5Cforeignnews_page61611.htm

StumbleUpon.com Read more...

மலேகான் குண்டு வெடிப்பு:மேலும் ஒரு சாமியாருக்கு தொடர்பு-ஆசிரமத்தில் போலீஸ் சோதனை

 
 
lankasri.comமராட்டிய மாநிலம் மலேகானில் கடந்த செப்டம்பர் மாதம் குண்டு வெடித்து 6பேர் பலியானார்கள்.இந்த குண்டு வெடிப்பில்"அபினவ் பார்"என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.அதன் தலைவர் சமீர் குல்கர்னி கைது செய்யப்பட்டர்.

இந்து பெண் சாமியார் பிராக்யா,ராணுவ அதிகாரி பிரசாத் ஸ்ரீகாந்த் ஆகியோர் உள்பட மேலும் 8பேரும் கைது செய்யப்பட்டனர்.

இப்போது மேலும் ஒரு சாமியாருக்கு குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்.அவரது பெயர் சுவாமி அசிமானந்தா.குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் அவர் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இவர் கைதான பெண் சாமியார் பிராக்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.பிராக்யா அடிக்கடி இவருடன் டெலிபோனில் பேசி உள்ளார்.

எனவே அசிமானந்தாவுக்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே போலீசார் அந்த ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.அப்போது சாமியார் அங்கு இல்லை.அவரது அறை பூட்டி கிடந்தது.வாகாவ் என்ற இடத்தில் சாமியார் விடுதி ஒன்று நடத்தி வந்தார்.அங்கும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.சாமியார் இல்லாததால் ஆசிரமத்தின் கேஷியர் கனிலிடம் விசாரணை நடந்தது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1226306402&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

நக்சலைட் தீவிரவாதிகள் அட்டூழியம்:பா.ஜனதா தலைவர்கள் 2பேர் சுட்டுக் கொலை

 
 
நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலமான சதீஸ்காரில் வருகிற 14ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.இங்கு பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நடக்கிறது.வேட்பாளர்களும்,கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்து இருந்தனர் இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பிரசார பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தந்தே வாடா மாவட்ட பாரதீய ஜனதா துணை தலைவர் ரமேஷ்சிங் ரத்தோர்,வட்டார பாரதீய ஜனதா தலைவர் சூரியபிரசாத் சவுகான் ஆகியோர் அங்குள்ள கிராம பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

பண்ட குண்டாரா என்ற இடத்தில் அவர்கள் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் அங்கு திடீரென வந்தனர்.பொது மக்கள் முன்னிலையிலேயே தலைவர்கள் 2பேரையும் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தது.

தலைவர்கள் இருவருக்கும் பாதுகாப்பாக போலீசார் வந்திருந்தனர்.ஆனால் நக்சலைட்டுகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.பின்னர் நக்சலைட்டுகள் அவர்கள் வந்த காருக்கு தீவைத்து விட்டு ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தை பார்த்து பீதியடைந்த மக்கள் ஊரை விட்டு ஓடினார்கள்.

சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் படை விரைந்தது.கொலை நடந்த இடம் ஆந்திர மற்றும் மராட்டிய மாநிலம் எல்லையில் உள்ளது.எனவே எல்லையை சீல் வைத்து நக்சலைட்டுகளை தேடி வருகிறார்கள்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1226306586&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அவாள் விரிக்கும் நடை பாவாடை!

அவாள் விரிக்கும் நடை பாவாடை!

- மின்சாரம்

பார்ப்பனர்கள் பேசும் எழுதும் விஷயங்களில் சில மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது நியாயத் தொனி போல தோன்றும். சற்று ஆழமாகப் பார்த் தால் அது இடமாறு தோற்றப் பிழையாக இருக்கும்.

இலங்கையில் நடக்கும் பிரச்சினைகள்பற்றி இந்தப் பார்ப்பன ஏடுகள், இதழ்களின் நடத்தைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியாமல் போகாது.

எடுத்துக்காட்டாக, இவ்வார கல்கி இதழில் (9.11.2008) தலையங்கத்தைப் படித்து பார்த்தால் இந்த உண்மை வெளிப்படாமல் போகாது.

ராஜபக்சே இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி யில் வடக்கு - கிழக்குப் பிராந்திய தமிழர் பகுதிகளுக்கு படிப்படியாக அதிகாரமும், அந்தஸ்தும் வழங்க ஒரு திட்டத்தை விவரித்துள்ளார். இது வெளியான 24 மணி நேரத்தில் புலிகள் தலைநகரைத் தாக்கியிருப்பதால், இந்தத் திட்டம் செயலாற்றுவ தற்கான சாத்தியக் கூறுகளும் சேர்ந்தே தாக்கப் பட்டுள்ளன என்று கல்கி கவலை தெரிவிப்பது போல் பாசாங்கு செய்கிறது.

ராஜபக்சே இதுவரை எந்த வார்த்தையைக் காப்பாற்றி யிருக்கிறார்? அவர் என்றைக்காவது நம்பகத் தன்மையுடன் நடந்து கொண்டது உண்டா?

இவர் அதிபராகப் பொறுப்பேற்ற நிலையிலேயே இலங்கையில் ஒற்றை ஆட்சிமுறைதான் (Unitarystate) என்று அறிவித்தார்.

அவர் யாருடன் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்? ஜனதா விமுக்த பெரமுனா (ஜெ.வி.பி)வுடன் கூட்டணி வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அக்கட்சி ஒற்றை ஆட்சி முறையை முக்கியமாக வலியுறுத்தக் கூடிய சிங்கள வெறி கொண்டதாகும். அக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோதே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே எதிர்த்தார். இது கட்சியின் கொள்கைக்கு விரோதமானது என்றும் கூறினார். அவர் அளித்த பேட்டி டெய்லி மிரர் என்னும் இதழில் வெளிவந்தது (10.11.2005)

இன்றைக்கு எந்த இந்து ஏட்டில் ராஜபக்சே கொடுத்த பேட்டியை எடுத்துக்காட்டி கல்கி ராஜ பக்சே நல்லெண்ணத்துடன் கூறுவதாகக் காட்ட முயலுகிறதோ அந்த இந்து ஏட்டுக்குக் (9.11.2005) கட்சியின் தலைவரான சந் திரிகா அளித்த பேட்டியை ஒரு முறை புரட்டிப் பார்ப்பது நல்லது.

ஜனதா விமுக்த பெரமுனா (ஜெ.வி.பி.) ஜாதிகா ஹெலா உருமயா (ஜே.எச்.யு) சிங்கள உருமயா ஆகிய மூன்று கட்சிகள் சிங்களத் தீவிரவாத கட்சிகள் என்று பேட்டியளித்த சந்திரிகா இக்கட்சிகளுடன் கூட்டு வைத்திருப்பது அடால்ஃப் ஹிட்லருடன் ஒத்துப் போவதற்குச் சமம் என்றாரே!

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் முக்கியமாக இடம் பெற்ற ஒன்றாகும் (1987).

அதன் நிலை இப்பொழுது என்ன? ஜெ.வி.பி. மூலம் வழக்குத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் மூலம் அது செல்லாது என்று தீர்ப்பினையும் பெற்றுக் கொண்டு விட்டாரே!

இதுதான் ராஜபக்சேயின் நல்லெண்ணத்துக்கான எடுத்துக்காட்டா? கிழக்கு மாகாணத்தில் வெறும் எட்டு விழுக்காடு இருந்த சிங்களவர்கள் இப்பொழுது 30 விழுக்காடாக எண்ணிக்கையில் அதிகமானது எப்படி? அது திட்டமிட்ட வகையில் சிங்களவர் களைக் குடியேற்றச் செய்த ஏற்பாடு அல்லவா!

இந்தக் கொடுமையாளரிடம் ஏதோ தமிழர்களுக் கான திட்டம் இருக்கிறதாம் - கல்கி எழுதுகிறது - இதனை நம்பிடத் தமிழர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா?

போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில் அதனைத் தானடித்த மூப்பாக முறியச் செய்தது யார்? கல்கிக்குத் தெரியாதா?

இலங்கையின் தலைநகரான கொழும்பில் விடுதலைப்புலிகள் குண்டு போட்ட காரணத்தால் தமிழர்களுக்காக ராஜபக்சே வைத்திருந்த திட்டம் தகர்க்கப்பட்டு விட்டதாம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களையெல்லாம் இலங்கை இராணுவம் மீட்டு விட்டது. இன்னும் சில நாள்களில் அனைத்துப் பகுதிகளும் இராணுவ வசம் வந்துவிடும். விடுதலைப்புலி களின் தலைவர் பிரபாகரன் இருக்கும் இடத்தை நோக்கி இராணுவம் நெருங்கிவிட் டது. அவரும் பிடிபடுவார் என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பலவாறு எழுதிக் குவித் தன.

புலிகள் பலகீனம் அடைந்துவிடவில்லை - நாங்கள் பலமாக இருக்கி றோம் என்பதற்கு ஒரு எடுத் துக்காட்டுதான் கொழும்பின் மீது புலிகள் விமானம் நடத் திய தாக்குதல்!

இவ்வளவு பாதுகாப்பு இருக்கும் பொழுது எப்படி அது சாத்தியமானது என்று இலங்கையின் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் மூளை யைக் கசக்கிப் பிழிந்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.

கல்கி வகையறாக்களுக்கு எது மாதிரியான செய்திகள் கிடைத்தால் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரியிருக்கும்?

விடுதலைப்புலிகள் முற் றாக அழிக்கப்பட்டு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி வரும் போதுதான் அவர்களுக்கு நல்ல தூக்கம் வரும்.

பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டார். இதோ இறுதி ஊர்வலம் நடந்து கொண்டு இருக்கிறது என்று வருண னைகளைக் (Running Commentry) கொடுத்துக் கொண்டிருந்த கூட்டம் அல்லவா? அதற்காகவே கரு மாதி பத்திரிகை என்ற பட் டத்தைச் சூட்டிக் கொண் டதும் தினமலர் என்ற பார்ப்பன ஏடுதானே!

தினமலர் மட்டுமல்ல மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு எனப்படும் இந்து ஏடும்கூட பிரபாகரன் சுட்டுக் கொல்லப் பட்டார் என்ற செய்தியை வெளியிட்டு (24.7.1984) ஆனந்தக் கூத்தாடவில்லையா?

நரகாசுரனைக் கொன்று தீபாவளி கொண்டாடும் கொண்டாட வைக்கும் கொலைகாரக் கூட்டமா யிற்றே! தமிழர் எதிர்ப்பு என் னும் அந்த வஞ்சகம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பதற்குச் சாட்சியங்களே இன்றைய நடப்புகளாகும்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் (Genocide) என்று அதிகாரப் பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தவர்தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி (16.8.1983) ஒரு நாட்டில் இனப்படு கொலை நடக்கிறது என்றால் அதனைத் தட்டி கேட்க தலையிட மற்ற நாடுகளுக்கும் உரிமை உண்டு. அய்.நா. அங்கீகரித்த சட்டம் இது (The Genocide Convention - 1948).

உண்மை இவ்வாறு இருக்க - இலங்கை - இன்னொரு நாடு - அதன் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை என்பது அப்பட்டமான அறியாமை அல்லது பொய்யுரையாகும்.

ராஜபக்சே என்னும் ஹிட் லரின் ஆட்சியின் போக்கை அவர் கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவே ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறீலங்கா சுதந்திரா கட்சியின் மாநாடு கொழும்பு புதியநகர மண்டபத்தில் நடை பெற்றது (12.6.2008). இதில் கலந்து கொண்டு உரையாற் றிய கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா மகிந்த ராஜபக்சேமீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினாரே!

பயங்கரவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கை அவசியமானது. ஆனால் ஆட்சியாளர்கள் ஒரு போதும் பயங்கரவாதிகள் போன்று செயல்படக் கூடாது. சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நாட்டைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது முன்னணியை அமைக்க வேண்டும்.

சிலர் யுத்தம் மூலமே தீர்வு என்கின்றனர். இது சாத்தியமா காத விடயம். சில அடிப்படை வாதிகள் இலங்கை சிங்களப் பவுத்தர்களுக்குச் சொந்தமான நாடென்றும், ஏனைய மக்கள் அடிமைகளாக வாழ வேண்டும் என்கிற போக்கில் நடந்து கொள் கின்றனர். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்களின் எண்ணம் அதுவல்ல.

எனவே, நாட்டை சீரழிவில் இருந்து பாதுகாக்க அரசியல் முரண்பாடுகளைக் கைவிட்டு, அனைவரும் இணைந்து பரந்த அளவிலான முன்னணியை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே!

கூறியிருப்பவர் முதல் அமைச்சர் கலைஞரல்லர். தமிழர் தலைவர் மானமிகு வீரமணியும் அல்லர். இலங் கைத் தீவின் முன்னாள் அதி பரும், அக்கட்சியின் (ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி) தலைவருமானவரே கூறுகி றாரே - கல்கிகளின் இந்து தினமலர் வகையறாக்களின் பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் இலங்கை அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்ககே என்ன கூறுகிறார்?

ராஜபக்சேயின் குடும்ப நிர்வாகமும், அரசாங்கமும் யுத்தத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது. நாட்டின் பிரச்சி னையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக் கிறது. எனினும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கின்றனர். சகல தரப்புகளிலும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசாங்கத்தின் யுத்த வாதக் கொள்கை தோல்வியை அடைந்திருப்பதுடன், சர்வதேசப் பகைமையையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.

ஊழலும், மோசடியும், பித்தலாட்டமும் நிறைந்து காணப் படுகின்ற குடும்ப நிர்வாகம் தனது அரசாங்கத்தின் அமைச்சர வையைப் பாதுகாத்துக் கொள் வதிலேயே குறியாக உள்ளது. (ஈழச் சுதந்திரன் 2008 நவம்பர்).

ராஜபக்சேயிடம் நல்லெண்ணம் மலர்ந்துள் ளது; இந்த நேரத்தில் யாழ்ப் பாணத்தில் விமானத் தாக் குதல் நடத்தலாமா என்று தமிழின அழிப்பாளர்களுக்கு நடை பாவாடை விரிக்கும் கூட்டத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

 

source:http://files.periyar.org.in/viduthalai/20081108/snews01.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP