|
சமீபத்திய பதிவுகள்
அன்றாடம் மனித உரிமைகள் மீறல்கள் உச்சம்
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரே தமிழருக்கு எதிரான அடக்குமுறை ஆட்சி!. சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று டிசம்பர் வியாழக் கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. உயிரினங்களில் மனத்தை உடையவன் மனிதன், அத்தகைய ஆறறிவுடைய சமூகப்பிராணியான மனிதனில், விரிந்த உளவியல் செயற்பாடு இல்லாமையே மனித உரிமைகள் மீறப்படுவதற்குக் காரணம். வல்ல ஓர் சாரார் பலவகையிலும் நலிந்த இன்னோர் சாராரை அடக்கி, ஒடுக்கி வருவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல என சர்வதேச மனித உரிமைகள் சாசனமும் சட்டமும் கூறுகின்றன. மனிதன் என்ற வகையில் பால், இன, மொழி, நிற, குல, நாடு, மதம் என்ற வேறுபாடுகள் மூலம் ஒரு மனிதனை இன்னொரு மனிதனோ, இனமோ, அரசோ எந்த வகையிலும் அடக்க முடியாது.ஆனால், இலங்கையில் தமிழ்மக்கள் கடந்த 61 வருடங்களாக அடிப்படை மனித உரிமைகளைக்கூட இழந்து அடிமைகள் போன்று வாழும் நிலை இருந்து வருகின்றது. தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அம்மக்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் தொடர்ந்து சிறுபான்மையாக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாதம் என்ற பொய்ப் பிரசாரங்களின் மூலம் தமிழ்மக்களின் உரிமைகள் அடக்கப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிற்பாடும் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டங்களை ஸ்ரீலங்கா சிங்கள அரசு தன் இஷ்டம்போல மாதம் மாதம் நீடித்து வருவதன் நோக்கம் தமிழ்மக்களின் மனித உரிமைகளை மீறும் செயலாகும். பாதுகாப்பு என்ற பொய்க் கவசத்தை அணிந்துகொண்டு தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக இன்னும் சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், கைதுகள், தமிழர் வீடுகளில் முகாம்கள், காவல் நிலையங்கள், சித்திரவதைகள், காணாமற் போதல் என்பன தொடர்கின்றன.பயங்கரவாத செயற்பாடுகளினாலேயே மஹிந்த, மனித உரிமைகளை மீறும் செயல்களை மேற் கொண்டார் என்று ரஷ்ய பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் கூறியதாக ஸ்ரீலங்கா ஊடக அமைச்சர் கூறினார்.சர்வதேச சமூகம் ஒன்றை மட்டும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இனவாதம் என்பது 1921 ஆம் ஆண்டே மலரத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்து சேர். பொன். அருணாசலம் தானாகவே வெளியேறினார். ஆனால், 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிற்பாடுதான் தமிழ்மக்கள் மீதான சிங்கள ஆட்சி யின் அப்பட்டமான மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.தமிழனாகப் பிறந்த காரணத்தி னால் சொந்த வீட்டில் கூட நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலை தமிழ்மக்களுக்கு இருந்து வருகின்றது. இந்த இனம் என்ன பாவம் செய்ததோ தெரியாது. தமிழனே தமிழனுக்கு எதிரியாக இன்றுள்ளான்.இத்தகைய தமிழர் ஒரு சிலரை வைத்துக்கொண்டு இந்திய அரசையும், சர்வதேச சமூகத்தையும் பேய்க்காட்டி வருகின்றது அப்பட்டமான மனித உரிமை களை மீறும் ஸ்ரீலங்கா அரசு.தமிழ்மக்களின் மனித உரிமைகள் பயங்கரவாதம் என்ற போர்வையில் மறுக்கப்பட்டு அம்மக்கள் மீது அடக்கி ஒடுக்கப்படும் அரச பயங்கரவாதமே அரசு சார்பு தமிழ் ஆயுதக் குழுக்களின் உதவியுடன் நடைபெற்று வருகின்றது. எவ்விதமான தேர்தல்களும் தேவையில்லை. தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களை நேரடியாக அழைத்து தமிழ்மக்களின் மனித உரிமைப் பிரச்சினைகளை ஒரு மாதகால தவணைக்குள் தீர்வுகாண முடியும். சிங்கள மக்களை வைத்தே ஆட்சி நடத்த முடியாமல் திண்டாடும் சிங்கள ஏகாதிபத்திய முதலாளித்துவ கனவான்கள், தமிழ்மக்களையும், அவர்களின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களையும் ஆக்கிரமித்து ஆட்சி நடத்தி கண்ட பலன் அப்பாவித் தமிழ்மக்களை பல வகைகளிலும் சர்வதேச மனித உரிமைகளை மீறிக்கொன்று குவித்ததுதான். இதை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனமும், ஐ.நா. சபையும் நன்கு அறியவேண்டும்.தமிழ்மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் அவர்கள் விரும்பியபடி வாழவிடுங்கள். ஏனைய ஏழு மாகாணங்களிலும் சிங்கள மக்கள் சந்தோஷமாக வாழட் டும் இதுதான் மனித உரிமை.இந்திய அரசு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு, அது எப் பொழுதும் தன் சொந்த நலனுக்காகவே ஸ்ரீலங்கா சிங்கள பேரினவாத அரசின் தமிழ்மக்கள் மீதான மனித உரிமைகள் மீறல்களை மூடி மறைத்து சர்வதேச நாடுகளை தலையிடாமல் செய்துவருகின்றது.இதேபோல சீனா, வியட்நாம், கியூபா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஈழத் தமிழ்மக்களின் 61 வருடகால இனப்பிரச்சினை பற்றிய விளக்கம் போதாமல் இருக்கலாம். இல்லையேல், அவர்களுக்குத் தவறான தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.சரியான சர்வதேச சோஷலிச ஸ்தாபனங்கள் ஈழத் தமிழ்மக்களின் மனித உரிமைக்கான விடு தலைப் போராட்டங்களின் வரலாற்றை விளக்கவேண்டியது தலையாய கடமையாகும்.நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அப்பொழுதுதான் உண்மையான ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தெரியவரும். 2011 ஆம் ஆண்டு நடத்த இருக்கும் இம் மாநாடு கூட அவுஸ்திரேலியாவில் தான் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் இருந்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டுவருவது தெரிகின்றது. கடந்த 30 வருடகால ஈழத் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறல் களுக்கான யுத்தத்தில் அப்பாவித் தமிழ்மக்கள் இரண்டு லட்சம் பேர்கள் வரை ஸ்ரீலங்கா சிங்கள அரசு கொன்று குவித்துள்ளதை இந்திய அரசு சர்வதேசத்துக்கு மூடிமறைத்து வருகின்றது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சிப்பீடம் ஏறிய எந்த அரசும் அதன் தலைமைகளும் விரிந்த உளவியல் செயற்பாடுகளுடன் நடந்திருந்தால் என்றோ தமிழ்மக்களின் மனித உரிமைகளை வழங்கியிருக்க முடியும். மார்க் அன்ரனி
தமிழ்மக்களின் மனித உரிமைகளை ஜனநாயக வழிகளில் கேட்டபொழுதெல்லாம் ஏமாற்றி வந்த சிங்கள அரசு, பின் அஹிம்சை வழிப் போராட்டங்களையும், சிங்கள கூலிப்படைகளைக்கொண்டு அடக்கியது. வேறு வழிகளின்றியே தமிழ்மக்கள் மனித உரிமைக ளுக்காக ஆயுதத்தை நாடினார்கள்.
ஆனால், ஸ்ரீலங்கா பேரினவாத அரசு தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சில வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்களை வைத்துக்கொண்டு சர்வதேச சமூகத்தையும், சர்வதேச ஸ்தாபனங்களையும் ஏமாற்றி வருகிறது சிங்கள பேரினவாத அரசு.
குறைந்த பட்சத் தீர்வான வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கி தமிழ்பேசும் தமிழ், இஸ்லாமிய மக்கள் சம உரிமையுடன் வாழக் காட்டியதாக செய்யமுடியும். அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை பல கூறுகளாகப் பிரித்து செயற்படுவது சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகும்.தமிழ்மக்களின் மனித உரிமைகள் என்று அவர்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த சரித்திர, ஆன்மீக, புவியியல் ரீதியிலான தொடர்புள்ள வடக்கு, கிழக்கு மாநிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் 1833 ஆம் ஆண் டில் இருந்த "மதசார்பற்ற சோஷலிச தமிழீழம்' என்ற நாட்டைத்தான் கேட்கின்றனர். இது அவர்களின் மனித உரிமை.
நாளாந்தம் விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடும்பொழுது அரசு பாதுகாப்பு செலவீனங்களுக்கென்று இருநூறு கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இவை தமிழ்மக்களின் மனித உரிமைகளைத் தொடர்ந்தும் அடக்குவதற்கேயாகும்.
பொதுநலவாய மாநாட்டை 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்த அரசு எடுத்த நடவடிக்கையைக் கூட மனித உரிமைகளை ஸ்ரீலங்கா அரசு மறுத்து வருவதினால், பொது நலவாய நாடுகள் அதை இலங்கையில் நடத்த விரும்பவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான், இதுவரை கட்டுப்பாட்டுடன் தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைகளுக்காக நேர்மையான முறையில் செயற்பட்டு வருகின்றது.அந்தக் கூட்டமைப்பைக்கூட ஆட்சியாளர்கள் பல வகைகளிலும் உடைப்பதற்குச் சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர்.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல். எவ்., ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக் கான ஒரு சரியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் ஒன்றுபட்டு செயற்பட்டு வருவது கண்கூடு.உண்மை என்றும் அழியாது. அது என்றோ ஓர்நாள் வெற்றிபெறும். சத்தியம்தான் தர்மநீதி, அரசியலில் அறம் பிழைத்தால் அறமே கூற்றுவனாக வந்து ஆட்சி நடத்துவோரைக் கொல்லும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இது உலக வரலாறு.தமிழ்மக்களுக்கு மனித உரிமைப் பிரச்சினைகள் உள்ளன. அதை நீண்டகாலத்திற்குப் பயங்கரவாதம் என்று பொய் கூறி மக்களை, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது.காலம் ஒருநாள் மாறும். பொய்கள் ஒருநாள் அம்பலமாகும். அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் மக்களின் மனித உரிமைகள் சர்வதேச ரீதியில் மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நிரூபிக்கும்.ஆறறிவு கொண்ட மனிதனுக்கு விரிந்த உளவியல் செயற்பாடு இல்லாமையே மனித உரிமைகள் மீறக் காரணம். அது இருந்தால் சகல உயிர்களும் உலகும் இன் புற்று வாழும்.
--
www.thamilislam.co.cc
கூகுள் பிரைவசி
நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது.
ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர்.
இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.
http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால், அதனை நீக்கவும் இடம் உள்ளது.
பச்சைப் பாசி'யில் பவர்புல் பேட்டரிகள் : சுவீடன் விஞ்ஞானிகள் சூப்பர் கண்டுபிடிப்பு
மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக "அல்கே' (பச்சை பாசி) மூலம் பேட்டரிகள் தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தண்ணீரில் வளரக்கூடிய, முடி போன்ற இழைகளாலான இந்த பாசிகள், பார்ப்பதற்கு அருவருப்பாகவும், நாற்றம் கொண்டதாகவும் இருக்கும். source:dinamalar
தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத, மெல்லிய, எடை குறைவான, உலோகம் இல்லாத, வளையக்கூடிய, விலை குறைந்த, எளிதாக பயன்படுத்தும் வகையிலான பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இம்முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர். சாதாரணமான "கிளடோபோரா' என்ற பச்சை பாசியை கொண்டு பேட்டரி தயாரிக்கும் ஆராய்ச்சி பலன் அளித்துள்ளது.காகிதத்தை விட 100 மடங்கு செலுலோஸ் அதிகம் கொண்டதாக இந்த தாவரம் உள்ளது. மின்சாரத்தை சேமிக்கவும், வெளியேற்றவும் தேவையான ஆற்றல், பாசிக்கு உள்ளது.
"சுற்றுச்சூழல் பாதிக்காத, விலை, எடை குறைந்த, பெரிய அளவில் மின் சேமிப்பு முறையை பாசியை கொண்டு தயாரிக்க முடியும்' என, சுவீடனை சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்ப வல்லுனர் மரியா ஸ்ரோமி கூறியுள்ளார். தற்போதுள்ள பாலிமர் பேட்டரிகளை ஒப்பிடும் போது, பாசியை கொண்டு தயாரிக்கும் பேட்டரி 40 முதல் 50 நானோ மீட்டர் அளவு சிறியதாக இருக்கும். காகிதத்திற்குள் வைக்கப்படும் பச்சை பாசியின் தடிப்பு 20 முதல் 30 நானோ மீட்டர் அளவு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிமர் பேட்டரிகளை விட 50 முதல் 200 சதவீதம் அதிகமாக இந்த புதிய பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். சாதாரண பேட்டரிகளில் ஒரு மணி நேரத்தில் ரீசார்ஜ் செய்யும் மின்சாரத்தை புதிய பேட்டரிகள் 11 வினாடி முதல் 8 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்து விடும். ரீசார்ஜ் பேட்டரிகளை பயன்படுத்துபவர்களுக்கு புதிய பேட்டரிகள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாலிமர் பேட்டரிகளில் 60 முறை ரீசார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது 50 சதவீதம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், புதிய பேட்டரிகளில் 100 முறை சார்ஜ் செய்தாலும், 6 சதவீத இழப்பே ஏற்படும்.
--
www.thamilislam.co.cc
"பெரியாரின் கொள்ளைகளை" அழியாத தமிழ்..!'
சென்னை, டிச.9,2009 : மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, தமிழ் சொற்களை பிழைகளுடன் உச்சரித்து, பார்வையாளர்களை குரலெழுப்பச் செய்துவிட்டார். அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார், முதலமைச்சர் கருணாநிதி. 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, 'வள்ளுவர்' என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்'' என்றும் கூறினார். 'உளியின் ஓசை' என்பதற்கு 'ஒளியின் ஓசை' என்றார். பார்வையாளர்களிடம் இருந்து கூச்சல் எழவே, "இது தமிழுங்க. 30 பேஜ் இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க," என்று கெஞ்சினார் குஷ்பு. இதற்கெல்லாம் மேலாக, "பெரியாரின் கொள்கைகளை" என்று சொல்வதற்கு பதிலாக "பெரியாரின் கொள்ளைகளை" என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. அப்போது, சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரத்தில், சற்றே உஷாரான அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அவசரம் அவசரமாக குஷ்புவின் பேச்சை இடைமறித்து, முதலமைச்சர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். அப்போது மேடையில் இருந்து குஷ்பு சென்றுவிட்டார். அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார். இந்த தமிழ் குளறுபடியை தனது உரையில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கருணாநிதி, "நான் எழுதிய வசனங்களை வைத்துக் கொண்டே ஒரு கற்பனை நாடகத்தை இங்கே நடத்தினார்கள். அதில் வசந்த சேனைக்கு பதிலாக இப்போது ஆங்கிலம் வந்து அமர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, தமிழைக் காப்பாற்றியே தீருவோம் என்றனர். தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழின் அந்த மொழி வல்லமை எத்தகையது என்பதை நாம் உணரலாம். தமிழுக்கு அத்தகைய சக்தி உண்டு. அதனால் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கின்றது," என்றார் முதலமைச்சர் கருணாநிதி. source:vikatan
குஷ்பு பேசியும் அழியாத தமிழ்..!'
--
www.thamilislam.co.cc