சமீபத்திய பதிவுகள்

வருங்கால கணிணி இப்படித்தான் இருக்குமாம்-வீடியோ

>> Monday, October 19, 2009

StumbleUpon.com Read more...

கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் டி.டி.410

 
 


பல்வேறு அளவுகளிலும், வடிவமைப்பிலும் பிளாஷ் டிரைவ்களை விற்பனை செய்துவரும் கிங்ஸ்டன் நிறுவனம், அண்மையில் தன் டேட்டா ட்ராவலர் டி.டி. 410 (Data Traveler DT 410)பிளாஷ் டிரைவினை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விநாடியில் 20 எம்பி டேட்டாவினைப் படிக்கவும், எழுதவும் செய்கிறது. 4ஜிபி முதல் 32 ஜிபி வரையிலான கொள்ளளவில் கிடைக்கிறது. இதில் உள்ள டேட்டாவின் பாதுகாப்பிற்கு செக்யூர் ட்ராவலர் (Secure Traveler) என்னும் சாப்ட்வேர் இதில் பதியப்பட்டுள்ளது. சிறிய அளவில் டேட்டா பயன்படுத்துவோருக்கு 10 எம்பி வேகத்தில் டேட்டாவினக் கையாளும் பிளாஷ் டிரைவ் ஒன்றும் கிடைக்கிறது. இவற்றின் விலை பின்வருமாறு: 4ஜிபி கொள்ளளவு கொண்டது ரூ.999; அடுத்த நிலையில் 8 ஜிபி திறன் கொண்டது ரூ. 1,650; 16 ஜிபி ரூ. 3,350க்கும், 32 ஜிபி ரூ. 5,777க்கும் விலையிடப்பட்டுள்ளது. விற்பனையில் ட்ரான்ஸென்ட் நிறுவனத்தின் ஜெட் பிளாஷ் பென் டிரைவ் களுடன் இவை போட்டியிலாம்.

வயர்லெஸ் கீ போர்டு
மதர் போர்டு மற்றும் கிராபிக்ஸ் கார்டுகளை வடிவமைத்து வழங்கி வரும் கிகாபைட் (Gigabyte) நிறுவனம் அண்மையில் வயர்லெஸ் கீ போர்டு மற்றும் மவுஸ் என இரண்டையும் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இவை சாதாரணமாக கிடைக்கும் பேட்டரிகளில் இயங்குகின்றன. கீ போர்ட் வடிவமைப்பு மிகவும் பயனுள்ளதாகவும், குறைந்த எடை உள்ளதாகவும் உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரை அல்லது லேப்டாப்பினை டிவியுடன் இணைத்துவிட்டு சற்று தள்ளி சோபாவில் அமர்ந்து கம்ப்யூட்டரை இயக்குபவரா நீங்கள்! அப்படியானால் உங்களுக்கான கீ போர்டு இதுதான். ஏறத்தாழ 10 அடி தூரத்தில் வைத்தும் இவற்றை நல்ல முறையில் இயக்க முடிகிறது. கீ போர்டிம் மேலாக மல்ட்டி மீடியா கீகள் தரப்பட்டுள்ளன. வலது மேல் புறத்தில் வால்யூம் கண்ட்ரோல் செய்திட டயல் தரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் பயன்படுத்தினால், பேட்டரிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் செயல்படுகிறது.
இந்த இரண்டும் இணைந்து ரூ.2,199 என விலையிடப்பட்டுள்ளது. சற்று விலை அதிகம் தான். விலை காலப்போக் கில் குறைக்கப் படும் என எதிர்பார்க் கலாம். இருந்தாலும் வாங்கினால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இரண்டும் எதிர்பார்த்த செயல்பாட்டினைத் தருகின்றன.

பிஷ்ஷிங் மெயில்கள் எக்கச் சக்கம

மெசேஜ் லேப்ஸ் (Message Labs) என்னும் நிறுவனம் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக செல்வது குறித்துத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிறுவனமாகும். அண்மையில் இந்நிறுவனம் வெளியிட்ட சில தகவல்களின் படி, பிஷ்ஷிங் மெயில்களின் எண்ணிக்கை கற்பனையில் எண்ண முடியாதபடி உயர்ந்துள்ளனவாம். 
பிஷ்ஷிங் என்பது இன்டர்நெட்டில் வரும் வேஷம் போட்ட இமெயில்களாகும். பிரபல நிறுவனங்களிலிருந்து வரும் இமெயில்களைப் போல இவை நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். இவை நம்மை முட்டாள் ஆக்குவதோடு, லிங்க்குகளைக் கொடுத்து, அவற்றில் கிளிக் செய்து பிரபலமான நிறுவனங்களின் இணைய தளங்களைப் போல தளங்களை உருவாக்கிஅவற்றில் நம்மைக் கொண்டு போய் நிறுத்து. பின் நம்மை நம்பச் செய்திடும் தகவல்களைக் கூறி, அவற்றின் மூலம், நம் பாஸ்வேர்ட், மெயில் முகவரி ஆகியவற்றைத் திருடிப் பயன்படுத்தும். 
ஐ.சி.ஐ.சி. ஐ. பேங்க், சிட்டி பேங்க், மைக்ரோசாப்ட், பே பால் எனப் பிரபலமான பல நிறுவனங்களின் பெயர்களில் எனக்கு வாரந்தோறும் குறைந்தது ஏழு பிஷ்ஷிங் மெயில்களாவது வருகின்றன. பார்த்த மாத்திரத்தில் அவற்றை டெலீட் செய்து, பின் ட்ராஷ் பெட்டியிலிருந்தும் நீக்கிவிடுகிறேன்.

மீடியா பிளேயரில் பயன்படும் ஷார்ட் கட் கீகள்
விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்
ALT+1: 50  சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர 
ALT+2 : ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரையில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T: டூல்ஸ் மெனு செல்ல
ALT+P: பிளே மெனு செல்ல
ALT+F4:  மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1:  மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2:  மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B  இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F :வரிசையில் அடுத்த பைலை இயக்க 
CTRL+E:  சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+Pஇயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T:  இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F:  ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S:  வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க 
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க 
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/ வீடியோ இயக்க
F8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9 மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar: ஒரு பைலை இயக்க

டிப்ஸ்.... டிப்ஸ்....
பிட் தகவல்களை எழுதி வைக்க:
நாம் நம் டேபிளில் சிறிய சிறிய பிட் பேப்பர்களில் ஏதாவது எழுதி வைப்போம். குறிப்பாக டெலிபோன் எண்கள், டெலிபோனில் நண்பர்கள் கூறும் செய்திகள் என ஏதாவது இருக்கும். இதே போல் கம்ப்யூட்டரிலும் தகவல்களை பிட்பிட்டாக அமைத்து வைக்கலாம். இவற்றை நோட்ஸ் என்னும் தலைப்பில் அமைத்துவிட்டால் தேவைப்படும்போது விரித்துப் பார்க்க எளிதாக இருக்குமே. டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். பின் கிடைக்கும் மெனுவில் New என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் Text Document  என்பதனைத் தேர்வு செய்திடவும். அதற்கு 'notes' எனப் பெயரிடவும். இனி எப்போது இதில் குறிப்புகளை எழுத வேண்டும் என எண்ணினாலும் டபுள் கிளிக் செய்து இதனைத் திறக்கவும். அதன்பின் எப்5 அழுத்தினால் அன்றைய தேதியும் நேரமும் அதில் பதியப்படும். அதன்பின் நீங்கள் எழுத விரும்பும் குறிப்புகளை எழுதவும். எழுதி முடித்தவுடன் கண்ட்ரோல் +எஸ் கீகளை அழுத்தி சேவ் செய்து வெளியேறவும். பின் இதில் என்ன எழுதினோம் என்பதனை நினைவு படுத்திப் பார்க்க மீண்டும் டபுள் கிளிக் செய்து திறக்கலாம்.

* ஸ்டேண்ட் பை Vs ஹைபர்னேட் 
சிஸ்டத்தை ஹைபர்னேட் செய்தால் என்ன நடக்கும்? உங்கள் கம்ப்யூட்டர் ஹைபர்னேட் வழிக்குச் செல்கையில் மெமரியில் என்ன என்ன இருக்கிறதோ, அவை அனைத்தையும் ஹார்ட் டிஸ்க்கிற்கு மாற்றி சேவ் செய்திடும். அதன் பின் ஷட்டவுண் செய்திடும். ஹைபர்னேஷன் முடிந்து மீண்டும் திரும்புகையில் பழைய நிலைக்குத் திரும்பும்.சிஸ்டம் ஹைபர்னேட் செய்வதற்கு 503 எம்பி இடம் தேவைப்படும். அப்படி யானால் ஸ்டேண்ட் பை என்பதற்கும் ஹைபர்னேட் என்பதற்கு வேறுபாடு என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஸ்டேண்ட் பை நிலையில் உங்கள் கம்ப்யூட்டர் குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்துகிறது. அந்த நேரத்தில் நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள். உடன் பயன்படுத்த வேண்டும் என்றால், உடனே கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்குக் கிடைக்கும். 
ஹைபர்னேட் செய்திடுகையில், மெமரியில் உள்ள டேட்டா அனைத்தும் சேவ் செய்யப்படும். சிஸ்டம் ஷட் டவுண் ஆகும். ஹைபர்னேஷனிலிருந்து நீங்கள் வெளியே வருகையில், நீங்கள் திறந்து வைத்திருந்த அனைத்து பைல்களும் அந்த புரோகிராம்களில் திறக்கப் படும். இதனால் லேப் டாப் போன்ற சாதனங்களில் பேட்டரி பயன்பாடு மிச்சப்படுத்தப்படுகிறது.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

5 பெண் மந்திரவாதிகளை நிர்வாணமாக்கி ஊர்வலம் :Five women stripped, paraded naked in Jharkhand


கொடுமை:5 பெண் மந்திரவாதிகளை நிர்வாணமாக்கி ஊர்வலம் 
 
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோசார் மாவட்டத்தில் மந்திர, தந்திர செயல்களில் அதிக நம்பிக்கை நிலவுகிறது.  இங்குள்ள பதர்காதியா கிராமத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. 


இது பற்றி அங்குள்ள ஒரு மந்திரவாதிகளால் அழைத்து குறி கேட்டனர். அதற்கு அவர்,   இங்குள்ள 5 பெண் மந்திரவாதிகளை தான் தீங்கு ஏற்படுகிறது. என்று அவர்களுடைய பெயர்களை குறிப்பிட்டார்.

 உடனே கிராம மக்கள் திரண்டு சென்று அந்த 5 பெண்களையும் வெளியே இழுத்து வந்தனர். அவர்களும் மந்திர, தந்திர செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
 
கிராம மக்கள் அவர்கள் 5 பேரின் ஆடைகளையும் கழற்றி நிர்வாணமாக்கினார்கள். பின்னர் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது 2 பெண்களை மனித மலத்தை திங்கவைத்து கொடுமை படுத்தினார்கள். 
 
இது பற்றி போலீசுக்கு புகார் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று 5 பேரையும் மீட்டனர். இது தொடர்பாக 6 பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

source:nakkheeran

Five women were stripped and paraded naked in Deoghar district of Jharkhand after being charged of witchcraft, police said on Monday.

Five women, including three widows, were forcibly brought to a field Sunday in Patharghatia village in Deoghar, about 350 km from state capital Ranchi. They were stripped and paraded naked and two of them were forced to eat excreta, police said.

"Sushila Kumahrin, Sagiran Beebi, Hafijan Beebi, Sujan Beebi and Gulnar Beebi were tortured to accept that they were witches and practise black magic. The incident took place at the instruction of a witch doctor. The witch doctor said that these women were practising black magic and were causing problems in the village," a police officer said.

The women were rescued when local government officials and police reached the spot. However, the perpetrators managed to escape.

According to reports, hundreds of people witnessed the incident.

"We have lodged an FIR (First Information Report) against 11 people, including six women. We will soon arrest the perpetrators," the officer added.

Majority of perpetrators were Muslims and four of the five victims belonged to the same community.

In Jharkhand, women are subjected to different forms of torture after being branded witches. There are instances when women have been paraded naked, forced to eat human excreta and even killed.

According to official data, more than 700 people, majority of them women, were killed after being branded witches. The witch doctors manage to escape as people fear black magic if they are named.


 source:hindustantimes

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஓவியர் புகழேந்தியின் உயிரோட்டமுள்ள வன்னிப் பேரவல ஓவியங்கள்


மனமெங்கும் வேதனைகளும் வலிகளுமாய்க் கதறியழ, வெடித்துக் கிளம்பும் துன்பப் பேராற்றில் மூழ்கி, இனியும் எமக்கான வெளிச்சம் எங்கிருந்தேனும் கிளம்பாதா என வாழ்வின் இறுதிக் கணங்களிலும் நம்பிக்கையைத் தேடிக் களைத்து - சிதைபட்டு, சின்னாபின்னமாகி - அவலத்தின் கொடுமையான சாட்சிகளாகி நிற்கும் தமிழீழ மக்களின் உறைந்த கணங்களை மீண்டும் பதிவு செய்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினதும் தமிழீழ மக்களதும் உணர்வுகளை, ஒரு உடன்பிறந்தானாய் உள்வாங்கும், அவர் படைத்த �- எரியும் வண்ணங்கள், உறங்கா நிறங்கள், அதிரும் கோடுகள், புயலின் நிறங்கள் வரிசையில் � பாளம் பாளமாய் இதயங்கள்
கதறியழ, நடந்து முடிந்த வன்னிப் பேரவலத்தை, உலகின் முன் ஓவியங்களின் வழி, வேதனைகளின் பதிவுகளாய் மட்டுமன்றி, இனியும் தொடர்ந்தேயாக வேண்டிய ஓர்மத்தின் வெளிப்பாடாகவும் காட்டுகிறது - `உயிர் உறைந்த நிறங்கள்' - தமிழீழத்தின் ஓர் இரத்தப் ஓடுக்கப்பட்டு, வதைபட்டு - இனியும் வேண்டாம் அடக்குமுறை வாழ்வு என கிளர்ந்தெழுந்த ஒரு சுதந்திரப் போராட்டம் - தன்னாட்சியும் தகுதியும் மிக்கதொரு விடுதலைப் போராய்ப் பரிணமித்து, உரியதொரு தலைமையையும் பெற்று, பெருமையும் வீறும் கொண்டெழுந்த நிலையில் � திட்டமிட்டுச் சூழ்ந்த பேரினவாதமும், அதற்குத் துணையான பிராந்திய �- சர்வதேச சக்திகளும் கூட்டாய்ப் பின்னிய சதிவலைக்குள், தமிழீழமும் மக்களும் கண்டிருக்கும் குருதி தோய்ந்த வரலாற்றுச் சரிவை - தன் தூரிகையால் உள்ளக் குமுறல்களோடு சொல்லியிருக்கும் புகழேந்தியின் உணர்வுகள்,
`மனிதம்' பற்றிய பெரும் கேள்விகளை தட்டி எழுப்புகின்றன.
1
அருகே, உயிர்காற்றுக்காய் ஏங்கித் தவிக்கும் சோதரர்களின் குரல்கள் தமிழக
மண்ணை எட்டியபோதும், `எங்கே உங்கள் கைகளைத் தாருங்கள்' என தமிழீழ மக்கள்
கதறியபோதும் - ஒருபுறம் உயிர்க்கொடை தந்தும் உயிரோடு எரிந்தும்
தமிழகம் சிலிர்ந்த வேகமும்,
மறுபுறம் - சீறும் எழுச்சியை தணித்த அரசியற்
சதுரங்கங்களும் - கண்முன்னே
வரலாறாய் நிகழ்ந்த காலப் பகுதிகளில் �- `என்றும்
உங்களோடு
இருப்போம்'
எனத்
தோழமையுடன்
கிளம்பும்
குரல்களில்
வலிதானதாய் ஒலிக்கிறது புகழேந்தியின் ஓவியக் குரல்.
தமிழீழத்தைக் காணமுன்பு, அவர் காட்டிய வர்ண வெளிப்பாடுகள், எவ்வளவுக்
கெவ்வளவு தமிழீழ மக்களது
உணர்வலைகளை தன்னாக்கம் செய்து நின்றதோ,�
அதனின்றும் இன்னும் நெருக்கத்துடன், அவர் தமிழீழம் கண்டு திரும்பிய பின்
படைத்திருக்கும் `உயிர் உறைந்த நிறங்கள்'
-
அவர்
நேரில் கண்ட அம்மண்ணின்
வளமான வாழ்வு,
வேதனைகளின் சாக்காடாய் இன்று உயிர் தொலைத்து நிற்பதை �
விழிகசியும் ஈரத்துடன் சொல்லிச் செல்கிறது.
பேரினவெறியின் கால்களில் மிதிபட்டுக் கதறிய தமிழினத்தை, தமிழ்ப் பெண்களின்
உயிர்ச் சுவடுகளையும் கிழித்தெறிந்த இனவாத அரக்கத்தனத்தை `பெண்ணின் சிதைவு'
உளம்கொதிக்க பதிவு செய்கிறது.
வாழ்ந்த இடம் விட்டு, அகதிகளாகி, எங்கே காப்பிடம் என்று ஓடியும் ஒதுங்கியும்
அவலப்பட்ட தமிழினம், `தகர்க்கப்பட்டது எங்கள் வீடுகள் மட்டுமல்ல, நான் போற்றிய
நாடுமன்றோ' எனக் கதறுவதை `வெறி'யும்
`அலைவு'ம்
வெளிப்படுத்துகின்றன.
அடிமைத்தனத்தின் வெட்கம் சுமந்த வாழ்வின் நீட்சியாய், இன்று வதை முகாம் வாழ்வை
தந்திருக்கும் எதிரியை 'அலைவு' இன்னும் சுட்டி நிற்கிறது.
2
கடற்கரை மணல் நடுவே,
பதுங்கு குழிகளே வாழ்வாகி - கண்முன்னே
உறவுகளையும் நட்புக்களையும் நாளாந்தம் பறிகொடுத்த மனவெடிப்பைச் சொல்கின்றன
`பதுங்கு குழி' , `பெருமூச்சு' ஓவியங்கள். விமானக் குண்டுகளும், ஆட்லறிகளும்
பதுங்கு குழிகளைத் தாக்க,
அவையே
சாக்குழிகளாகவும் ஆனதைச் சொல்கிறது
`நாங்கள் புதைபடாத குழிகளும் உண்டு . . .'
புகழேந்தி - `யாழ்.
வெளியேற்றம்'
பற்றி வரைந்த ஓவியம் - இன்று `வன்னி
வெளியேற்றம்' ஆகி - `சிறகு விரித்து விதையொன்று அலையும் முளைக்க ஒரு பிடி மண்
தேடி . . .' செல்கிறது.
`பிணவாடை வீசும் தென்திசைக் காற்றில் அசோக மரத்துக் கிளைகள் துளிர்த்தன`
என்னும் 'வல்வைப் படுகொலையும்',
`புதைக்கப்பட்ட
கடைசிச் சொற்கள் வேர்களாய்
நீளும், எம் தூரிகை கேட்டும் - மவுனம் காக்கும் மனச்சாட்சிக்கு முன்பு எரியும்
முழங்கிக்
காட்டும்'
என்னும்
`செம்மணி'யும்
-
இற்றைவரை
முள்ளிவாய்க்காலிலும், பொக்கணையிலும் மாறிப் போகாதிருப்பதை; சிங்கள இனவாதம்
இன்னும் அசுரத்தனமாய் வேகம் கொள்வதை �- ஒப்பீடு செய்கின்றன.
முள்ளிவாய்க்காலில்,
திரும்பிய பக்கங்கங்களெல்லாம் பிணக்
குவியல்களாக,
சடலங்கள் வீதிகளெங்கும் நிறைந்து கிடந்ததை - கண்களில் நீர் வழியக் காட்டும்
`முள்ளியவளை மே 17, 2009' - 'நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலானது, இருபதாயிரம்
தமிழ் உயிர்களா?, உலகின் மனச்சாட்சியா?' என நியாய ஆவேசங் கொள்கிறது.
தம் வாழ்வின் இறுதிவரை -� விடுதலையே உயிர்மூச்சாய்
சுமந்து
நின்று
களமாடிய மாவீரரைப் போற்றும், `விதைக்கப்பட்டவர்கள்' - `நாளைய மானுடப் பிஞ்சு
முகங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம்' என - வணங்கி
3
தானீன்ற சேயின் உடல் முழுதும் காயங்களின் வலி கதறித் துடிக்க வைத்தாலும் -
`இவள் கவலை, ஒரு குழந்தையின் எதிர்காலம் அல்ல, ஒரு தாய் மண்ணின் எதிர்காலம்'
என்ற 'களம்' - 'விடியும் எம் வாழ்வு' என ஏங்கி நிற்கும், தமிழ்த்தாயைப் போற்றுகிறது.
உலகின் பரப்புகளில் எத்தனை கதைகள் உலாவினாலும் - எமக்கான வாழ்வை
நம்பிக்கையுடன் தொடக்கி வைத்து கரம் பிடித்த, நாளையும் வழி தொடரும் என்ற பெரும்
எதிர்பார்ப்பை எமக்குள் ஆழ வேரூன்றிய எம் தலைவன் `பிரபாகரன்' தோற்றத்தை �-
'மறுக்கப்பட்ட மனித விடுதலை தெற்கில் ஒரு புள்ளியாய் முளைத்தது' என்று,
போராட்டத்தின் அடித்தளம் மனிதத்திற்கான தேடலே என உலகெங்கும் ஓங்கிச்
சொல்கிறது ஒரு ஒவியம்.
இழப்பதற்கு ஏதுமில்லை என்றபோதும்,
உறுதி தொடரும் உறவுகளை -
`உதறுவதற்கு இன்னும் ஓரிரு கனவுகள்' என்கிறது `பயணம் தொடரும்' பதிவு.
நாளை விடியும் என்ற நம்பிக்கை மட்டுமே எம்மை வாழவைக்கும் என்பதை `எந்த
இன்றுக்கும் உண்டு நாளை' என்கிறார் புகழேந்தி. `வீழும் அருவி ஆறாய் விரியும்' என்னும்
`விடிந்தேதான் ஆகவேண்டும் இரவு' என்னும் படைப்பும்
- இருளகற்றும்
நாளைய வெளிச்சத்திற்கான நம்பிக்கையையும் உறுதியையும் பாய்ச்சி நிற்கின்றன
பார்ப்பவர் உள்ளங்களில்.
ஒருபுறம், வன்னிப் பெருநிலப்பரப்பில் வேதனைகளையும் வலிகளையும் சொல்லும்
புகழேந்தியின் படைப்புக்கள் � மறுபுறம், எத்துணை இழப்புக்களின்றும் நிமிர்ந்தேயாக
வேண்டிய அவசியத்தையும் சுட்டுவது, தமிழினம் தலைநிமிர்ந்து வாழும் வாழ்க்கைக்கான
வேட்கையைத் தட்டி எழுப்புகிறது.
4
படைப்பாளன்
என்பவன் -
தனியே
பதிவுகளோடு
நின்று விடாமல்,
மக்களை வழிசெலுத்தும் பாதைகளின் பங்குதாரனாகவும் நின்றாக வேண்டும் என்ற
வேண்டுகையை புகழேந்தியின் ஓவியங்கள் தெளிவுடனே எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு ஒவியனாக மட்டுமல்லாது,
தமிழீழ
விடுதலைப் போராட்டத்தை, அதன்
தலைமையை, தமிழீழ மக்களை மனதார நேசிக்கும்,
விசுவாசிக்கும் ஒரு கலைப்
போராளியாக � தன்னை மீண்டும் அழுத்தத்துடன் பதிவு செய்கிறார் புகழேந்தி.
அவரது இந்தப் படைப்புக்கள் � ஒரு வரலாற்றுப் பதிவு என்ற நிலை கடந்து,
உலகின் மனச்சாட்சியை, நேர்மையை தட்டிக்கேட்கவும், ஒரு கலைத்துவ படைப்பாக்கத்தின்
சாதாரண
பார்வையாளரை
மட்டுமல்லாது
புலமையாளர்களையும்,
கலாரசிகர்களையும், ராஜதந்திரிகளையும் ஈர்த்து - ஈழத்தமிழினம் கண்ட அவலம் வழியே
அவர்தம் எதிர்காலம் பற்றிய உரத்த சிந்தனைகளை எழுப்பவும் - பயன்படுத்தப்பட்டே
ஆகவேண்டியது அவசியம்.
உலகின் பார்வை இன்று ஈழத்தமிழினம் பால் திரும்பி வரும் சூழலில், � உரிமைப்
போராட்டத்தின் தர்க்க நியாயங்களை எட்டுத்திக்கிலும் எடுத்துச் செல்லும் கலை ஊடகப்
பணிகளில் � புகழேந்தியின் ஓவியங்களும் பாரிய தூண்டு விசையாய் அமைவது திண்ணம்.
பல்கும் போராட்டப் பாதைகளில் புகழேந்தியின் ஓவியப் பாதையும் பலமிக்கதாக அமைய

இக் கட்டுரையின் ஆக்கம் : அருண


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி நாளை தமிழர்களே கொண்டாடுவதா?

தமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி நாளை தமிழர்களே கொண்டாடுவதா? – நக்கீரன்


naragasuranதமிழர்கள் ஒரு ஆண்டில் மூன்று விழாக்களை முக்கியமாகக் கொண்டாடுகிறார்கள். பொங்கல், புத்தாண்டு, தீபாவளி ஆகியவையே அந்த மூன்று விழாக்கள் ஆகும்.

பொங்கல் உழவர் திருநாள். தமிழர்களுக்கே சொந்தமான விழா. வயலை உழுது, பண்படுத்தி, விதைத்து, களை எடுத்து, நெல் விளைந்தபோது அதனை அறுவடை செய்ததன் பின்னர், அந்த அறுவடையை கொண்டாடி மகிழவும், கமம் விளைந்ததற்கு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கவும், உழவன் புதுப் பானையில் புத்தரிசி, பால், வெல்லம், பாகு, பருப்பு இட்டுப் பொங்கி அதனை ஞாயிற்றுக்குப் படைத்தான். அடுத்த நாள் அவனுக்கு எல்லாவிதத்திலும் பயன் கொடுக்கும் மாடுகளுக்குப் பட்டிப் பொங்கல் எடுத்து மகிழ்ந்தான். இந்த விழாவில் பொருள் இருக்கிறது.

அது போலவே புத்தாண்டும் ஓரளவு வானியல், புவியியல் தொடர்பு பட்டது. ஞாயிறு சித்திரைத் திங்கள் 13 – 14ல் மேடராசியில் புகும் காலமே புத்தாண்டு பிறக்கிறது. இது தமிழர்களுடைய புத்தாண்டு அல்ல. இந்துக்களது புத்தாண்டு. காரணம் அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றேனும் தமிழில்லை. எல்லாமே வடமொழிப் பெயர்கள் ஆகும்.

ஆனால் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள். தமழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். இது பற்றிய புராணக் கதை என்ன சொல்கிறது?

நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.

ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார். உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.

உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். "எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்"" என்கிறான் நரகாசுரன்.

தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா? ஆனால் புராணிகர்கள் அப்படித்தான் 'பரம்பொருளைச்' சித்தரித்திருக்கிறார்கள்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்கக் கடவுள் அவதாரம் செய்ததாகவும் சொல்கின்றன. இவையெல்லாம் அன்றைய ஆரிய – திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, உடும்பு போன்றவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் 'அவிர்ப்பாகம்' என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிட்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களை கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமிதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விட்ணுவிடம் முறையிட்டாள். உடனே "பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்" என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு.

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய 'வீரன்" என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமிபாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், உடன்பிறப்பைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசனாக ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

இராம – இராவண யுத்தம் ஆரிய – திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய னுளைஉழஎநசல ழக ஐனெயை என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும் அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான் (ஆரண்ய காண்டம், 10வது சருக்கம்).

"தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று""
என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய 'தமிழர் சமயம்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

"தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை"" எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய "மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு"" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

"தீபாவளி சமணசமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால தினமே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை" (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை )
என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய "சமணமும் தமிழும்"" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

"ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி"
என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய "தமிழர் மதம்"" என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் -

"ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன் மதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்"
(வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).

""மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்"" என்று சிலர் சொல்லக் கூடும். அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன் படியுங்கள்.

தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589)

இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழர்கள் செக்குமாடுகள் போல் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள்,

ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு,

உயர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்.

தீபாவளி கொண்டாடும் தமிழர்கள் மகாகவி பாரதியாரின் ஏக்கத்தைப் போக்க முன்வர வேண்டும்.

source:nerudal
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP