சமீபத்திய பதிவுகள்

சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும்

>> Wednesday, December 23, 2009


ஹர்சிம்ரன் சிங் புதுடெல்லி கம்ப்ïட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய சிறிய வகை மடி கம்ப்ïட்டர்களை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளன. இதனையடுத்து `நெட்புக்' என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையில் பெரும் எழுச்சி ஏற்படும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த கம்ப்ïட்டர்கள் `மினி நோட்புக்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றன. முதன் முதலில்... `லேப்டாப்' என்றழைக்கப்படும் மடி கம்ப்ïட்டர்கள் பேட்டரியில் இயங்கக் கூடியவை. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்லக்கூடிய இந்த கம்ப்ïட்டர்களை தொழிலதிபர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்து கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபல கம்ப்ïட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏ.எஸ்.யு.எஸ்., சிறிய வகை மடி கம்ப்ïட்டரை முதன் முதலில் உருவாக்கியது. அளவில் சிறிய, எடை குறைவான, சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் பெரும்பாலும் இணையதளத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் பயன்பாடு இன்னும் அதிகரிக்கத் தொடங்கவில்லை. எனினும் அடுத்த ஒரு சில ஆண்டு களில் இப்பிரிவு அபார வளர்ச்சி காணும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கார்ட்னர் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் தீப்தரூப் சக்ரவர்த்தி கூறும்போது, "ஒரு வாடிக்கையாளர் முதன் முதலாக கம்ப்ïட்டர் வாங்கும்போது, மடி கம்ப்ïட்டரை விரும்புவதில்லை. எனவே இது இரண்டாவது தேர்வாகத்தான் உள்ளது. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடு களில் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள், சாதாரண கம்ப்ïட்டருக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளன. சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையில் `நெட்புக்'குகளின் பங்களிப்பு 20 சதவீத அளவிற்கே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பல இல்லங்களில் சாதாரண கம்ப்ïட்டரே இல்லை. எனவே மடி கம்ப் ïட்டர்கள் பயன்பாடு மெதுவாகத்தான் வளர்ச்சி காணத் தொடங்கும்'' என்று தெரிவித்தார். சாதாரண கம்ப்ïட்டர் இந்தியாவில் இன்று சாதாரண கம்ப்ïட்டர் பயன்பாடு 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் (ஜுலை-செப்டம்பர்) நம் நாட்டில் மொத்தம் 21.80 லட்சம் சாதாரண கம்ப்ïட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இதில், மடி கம்ப்ïட்டர்கள் விற்பனை 7.30 லட்சம் என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனை 70,000 என்ற அளவில்தான் இருந்தது. எனினும் வரும் 2010-ஆம் ஆண்டில் இவற்றின் விற்பனை 3,25,000-ஆக உயரும் என கார்ட்னர் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதே சமயம் சர்வதேச அளவில் விற்பனை 6 கோடியாக அதிகரிக்கும் என ஏ.பீ.ஐ. ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. விற்பனை சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களைப் பெற்றுள்ளன. விலையும் குறைவாக உள்ளது. டெல், எச்.பி., ஏசர், எச்.சி.எல். மற்றும் லினோவா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்களை தயாரித்து அளித்து வரு கின்றன. நடப்பு 2009-ஆம் ஆண்டில் இதுவரை, 1,35,000 சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையாகி உள்ளன. உள்நாட்டில் தற்போது சிறிய மடி கம்ப்ïட்டர் ஒன்றின் விலை சுமார் ரூ.20,000-ஆக உள்ளது. உயர்ந்த பிராண்டு சிறிய வகை மடி கம்ப்ïட்டர் ஒன்று ரூ.15,000 என்ற விலையிலேயே கிடைக்கிறது. மின்சாரம் தற்போது சிறிய வகை மடி கம்ப்ïட்டர் ஒன்றில் உள்ள பேட்டரி 7-8 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கூடியது. இவ்வகையில், பெரும்பாலான கம்ப்ïட்டர்கள் 10 அங்குல திரையைக் கொண்டுள்ளன. சில மாடல்கள் 12 அங்குல திரையைக் கொண்டுள்ளன. பொதுவாக வழக்கமான மடி கம்ப்ïட்டர்கள் 1.50 முதல் 2 கிலோ வரை எடை உள்ளதாக இருக்கும். அதே சமயம் `நெட்புக்' ஒன்றின் எடை 1.30 கிலோவாக உள்ளது. ஒரு நுகர்வோர் மடி கம்ப்ïட்டர் ஒன்றை வாங்கும் போது அதன் எடை மிகவும் குறைவாக இருப்பதையே விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில், மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையில் சிறிய வகை கம்ப்ïட்டர்களின் பங்களிப்பு 10 முதல் 11 சதவீதமாக உள்ளது. சாதாரண கம்ப்ïட்டர்களை விஞ்சி இவற்றின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும் என லினோவா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமர் பாபு கூறினார். எனினும் தற்போது, பல நகரங்களில், குறிப்பாக நடுத்தர நகரங்களில் சிறிய மடி கம்ப்ïட்டர்கள் பயன்பாடு உயரத் தொடங்கியுள்ளது. எனவே, முதல் தேர்வாக சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே பல நிறுவனங்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கைதான அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள்: வருத்தம் சிறிதுமின்றி தியாகிகளாக விருப்பம்


  

லாகூர்:பாகிஸ்தானில் கைதான அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் ஐந்து பேரும், பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிட்டதற்காக வருந்தவில்லை. அதற்கு மாறாக தங்களை தூக்கிலிட்டால், தாங்கள் வீரத்தியாகியாகி விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.இதுதொடர்பாக லாகூர் சர்கோதா மாவட்ட போலீஸ் அதிகாரி உஸ்மான் அன்வர் கூறியதாவது:அமெரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஐந்துபேர் பாகிஸ்தானில் கைதாகினர். பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியதற்காக, அந்த ஐந்து பேரும் சிறிது கூட வருந்தவில்லை. அதற்கு மாறாக, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தங்களின் உயிரைக் கொடுக்க முடியாமல் போய் விட்டதே என, வருத்தம் தெரிவித்தனர்."பயங்கரவாத சதித் திட்டங்களை நிறைவேற்றி அதன் மூலம் உயிர் தியாகம் செய்ய நாங்கள் நினைத்தோம். போலீசார் கைது செய்து விட்டதால், அது நடக்கவில்லை. அதனால், தூக்கில் போட்டாவது எங்களை தியாகியாக்குங்கள்' என்றும் கூறினர்.கைதான ஐந்து பேருக்கும் எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபணமானால், ஆயுள் தண்டனை பெற நேரிடும். இளைஞர்கள் ஐந்து பேரும் ஆப்கானிஸ்தானுக்கு சென்று, அமெரிக்கப் படைகளுக்கு எதிராக போரிட விரும்பினர். உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமெரிக்காவே காரணம் என, அவர்கள் நினைக்கின்றனர். பாகிஸ்தானில் உள்ள முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்க்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.இவ்வாறு போலீஸ் அதிகாரி அன்வர் கூறினார்source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தவறு செய்துவிட்டேன்: ராஜபக்சே புலம்பல்

 

 

altஇலங்கை அதிபராக தாம் பதவியேற்ற உடன் உயரதிகாரிகளை நியமிப்பதில் சில தவறுகளை செய்துவிட்டதாக ராஜபக்சே கூறியுள்ளார். 

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்சே, தாம் முதன்முதலில் அதிபர் பதவிக்கு வந்து உயர் அதிகாரிகளை நியமித்தபோது 2, 3 தவறுகளைப் புரிந்துவிட்டதாகக் கூறினார்.


தமக்கு விசுவாசமாக நம்பிக்கையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நிர்வாகத்தின் உயர் பதவிகளை அவர்களிடம் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


அவ்வாறு யார் தமது நம்பிக்கைக்கு விசுவாசமாக நடக்கவில்லை எனப் பெயரேதும் குறிப்பிடாத அவர், ஆனால் இச்செய்கை தனக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.


சந்தர்ப்பத்துக்கு தக்கமாதிரி அனைத்து நடவடிக்கைகளுக்கும் சரியான நபர்கள் இருந்தனர்.சில சந்தர்ப்பத்தால், மிகவும் துரிதமாக சமயோசிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சமயத்தில் ஆறுதலாக தெளிவாக விவரித்துக்கொண்டிருக்கும் ராஜதந்திரியை நியமித்திருந்தேன்.


அல்லது சாந்தமாக, தந்திரமாக நடக்கவேண்டிய அரசியல்வாதி ஒருவர் தேவையான இடத்தில் தந்திரமான, முரட்டுத்தனமாக செயற்படும் ராணுவ அதிகாரியை நியமித்திருந்தேன்.இதனால் முழுநாடும் இப்போது ஆபத்தில் மாட்டியுள்ளது என்று ராஜபக்சே கூறினார்.


source:swissmurasam

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சச்சின்-கார்த்திக் "சதம்' ரகசியம்! * கடைசி கட்டத்தில் நடந்தது என்ன?

 

 

புதுடில்லி: கட்டாக் போட்டியில் சச்சின் சதம் அடிக்கும் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் அநியாயமாக பறித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடைசி கட்டத்தில் நிலைமையை புரிந்து கொள்ளாமல் ஆடிய கார்த்திக் ஒரு சிக்சர் அடிக்க, சச்சின் 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது.
இப்போட்டியின் 42வது ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. அப்போது சச்சின் சதத்தை எட்ட 10 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இதனை உணர்ந்து சச்சினுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை தினேஷ் கார்த்திக். 5வது பந்தில் வீணாக ஒரு சிக்சர் அடித்தார். 43வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு ரன் எடுத்த சச்சின் 96 ரன்களை எட்டினார். நான்காவது பந்தில் தினேஷ் கார்த்திக் "வைடாக' வந்த பந்தை தட்டி விட 5 ரன் எடுக்கப்பட, சச்சின் 46வது சதத்தை எட்ட முடியவில்லை. 96 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.


சுமார் 7 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், தனது சதத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று சச்சின் சொன்னதால் தான், கார்த்திக் அதிரடியாக ஆடினாரா என்பது தெரியவில்லை. இதற்கு முன் 17 முறை 90களில் அவுட்டாகியுள்ள சச்சின் நிச்சயமாக சதம் அடித்திருப்பார் என்றும் உறுதியாக கூற முடியாது. இப்பிரச்னை குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் கூறியது:


சையது கிர்மானி: சச்சின் 90 ரன்கள் எடுத்திருந்த போது, கார்த்திக் சிக்சர் அடித்தார். அப்போது கார்த்திக் அருகில் சென்ற சச்சின், ஏதோ கூறினார். சரி, சரி என தலையசைத்து வந்தார் கார்த்திக். அதன் பின் ஒன்று, இரண்டு ரன்களாகத்தான் எடுக்கப்பட்டன. உண்மையில் சச்சின், கார்த்திக்கிடம் என்ன கூறினார் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


 பாபு நட்கர்னி: சச்சின் தனது 46வது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பை, கார்த்திக் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிக எதிர்பார்ப்பில் இருந்த அவர் சிக்சர் அடிக்கிறார். அந்தநேரத்தில் சிக்சருக்கு என்ன தேவை வந்தது. கார்த்திக் இன்னும் அனுபவம் அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. 
சந்து போர்டே: சச்சினுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கார்த்திக் ஒருவித பதட்டத்துடன் இருந்தார் என்பதே உண்மை. அனுபவமின்மை மற்றும் சிந்தனையில்லாமல் செயல்பட்ட கார்த்திக், சச்சின் சதத்தை வீணடித்து விட்டார்.


கவாஸ்கர்: சச்சினின் வயது அதிகமாகிக்கொண்டு வரும் நிலையில் அவர் சதத்தை தவற விட்டிருக்கக் கூடாது. அவர் 80 ரன்னை தாண்டியவுடன் "பேட்டிங் பவர் பிளே'யை எடுத்து இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சற்று அதிக போராட்டத்தை வெளிப்படுத்தி, சச்சின் விரைவில் சதம் கடந்திருக்கலாம். 


சேட்டன் சவுகான்: நிறைய ஓவர்கள் மீதமிருந்த நிலையில் சச்சினுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பை கார்த்திக் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் கார்த்திக் செயலை விமர்சிப்பது சரியல்ல. ஏனெனில் அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்வார்கள். எல்லா வீரர்களும் தனிப்பட்ட சாதனையை கணக்கில் கொள்ளாமல், வெற்றி பெறுவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் விளையாடுவார்கள். கார்த்திக்கும் அதைத்தான் செய்தார்.
 


அப்பாஸ் அலி பெய்க்: சச்சின் எப்போதும் தனது சொந்த சாதனைக்காக விளையாடுகிறார் என பலதரப்பட்ட மக்களும் கூறிவருகிறார்கள். சதத்தை நெருங்கிய சச்சின், கார்த்திக்கிடம் தனக்கு பேட்டிங் வாய்ப்பு தருமாறு கேட்கவில்லை. சுயநலமில்லாமல் தனது அணிக்காகத்தான் விளையாடுகிறார் என்பது சச்சினின் இந்தச் செயல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
 


source:dinamalar

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட் - மெடிகல் ஸ்பெல் செக்கர்


 

 மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான ஸ்பெல்லிங், பின்பற்றவும் அறிந்து கொள்ளவும் மிகக் கஷ்டமான ஒன்றாகும். அந்தத் துறையில் உள்ளவர்களே தடுமாறும் அளவிற்கு இருக்கும். ஏனென்றால் மருத்துவ கலைச் சொற்கள் அனைத்தும் ஆங்கிலவழி வந்தவை அல்ல. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம்களில் உள்ள ஸ்பெல் செக்கர்கள் என்னும் எழுத்து திருத்தும் டூல், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களின் எழுத்துப் பிழைகளைத் திருத்த இயலாது. ஏனென்றால் இதில் தரப்பட்டுள்ள டிக்ஷனரிகள், சாதாரண அன்றாட ஆங்கிலப் பயன்பாட்டில் உள்ள சொற்களை மட்டுமே கொண்டவையாகும். அப்படியானால் மருத்துவ கலைச் சொற்களை எழுத்துப் பிழையின்றி எப்படி அறிந்து கொள்வது? அதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது மெடிகல் ஸ்பெல் செக்கர் (Free Medical Spell Checker).  இந்த புரோகிராமினைhttp://download.cnet.com/FreeMedicalSpellChecker/30002079_410154940.html?tag=lst01 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிப் பந்து கொள்ளலாம். இது சாதாரண சிறிய அப்ளிகேஷனாகப் பதிந்து அமர்ந்து கொள்கிறது. இந்த சிறிய விண்டோவில் நீங்கள் எழுத்துப் பிழையின்றி காண விரும்பும் மெடிகல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கலாம். ஒவ்வொரு கீ அழுத்தத்திற்குமாக அடுத்த அடுத்த எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு முழு சொல் கிடைக்கிறது. இதன் மூலம் நமக்கு மருத்துவச் சொற்கள் அடங்கிய நல்லதொரு டிக்ஷனரி கிடைக்கிறது. ஆனால் சொற்களுக்குப் பொருள் கிடைப்பதில்லை. 
இந்த மெடிகல் ஸ்பெல் செக்கர் இலவசமாகக் கிடைப்பதால் வேர்ட் போன்ற புரோகிராம்களுடன் இணைந்து இயங்குவதில்லை. தனியே இயக்கித்தான் எழுத்துப் பிழைகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதே போன்று உள்ள மற்ற மெடிகல் ஸ்பெல் செக்கர்கள் வேர்டில் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. ஆனால் அவற்றைக் கட்டணம் செலுத்திப் பெறவேண்டும். அவை கிடைக்கும் தள முகவரி: http://www.notypos. com/downloads.htm இந்த தளத்தில் இலவசமாக சில நாட்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கவும் தொகுப்புகள் கிடைக்கின்றன.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP