சமீபத்திய பதிவுகள்

10 வயது சிறுமியை கற்பழித்த மதரசா ஆசிரியர்-Madrasa teacher arrested for raping 10-yr-old

>> Sunday, November 16, 2008

A madrasa teacher was arrested on Monday for allegedly raping a 10-year-old student at Moonamkadavu, about 40 km from Kasaragod.

The girl has been admitted to hospital in serious condition, police said.

V T Ayoob (28) was arrested following a complaint that the girl was sexually harassed by him last evening inside a room in the Madrassa located near Badakam village, police said.

The incident came to light after the girl fainted on reaching her home last evening. The fifth standard student was rushed to the District hospital in Kanhangad and shifted to the ICU at the Pariyaram Medical College Hospital near Kannur, police said.

The locals nabbed Ayoob, a married man with children, hailing from Kolathur in Malappuram district. He has been working as teacher in the Madrassa for the last three years, police said.

Ayub confessed to having committed the crime, police said, adding the girl had stated that the man had made a similar attempt earlier.
 

StumbleUpon.com Read more...

ஆஸ்திரேலியா,சீனாவில் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
 
lankasri.comஆஸ்திரேலியாவின் வனாட்டு தீவு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 3மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகாக பதிவானது.இதில் எவ்வித உயிரிழப்பும் இல்லை.பொருள்சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை.

நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 69கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. எனினும்,உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

 

 
சீனாவில் நிலநடுக்கம்
lankasri.comசீனாவின் வடமேற்கு பகுதியான வென்ஜுவானில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவானது.

இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம்,பொருள்சேதம் குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை.
 
 

StumbleUpon.com Read more...

இந்து தீவிரவாதிகளுக்கு ஜல்லியடிக்கும் உள்துறை அமைச்சர்

மலேகாவ் சம்பவத்தை மதத்துடன் தொடர்புபடுத்தாதீர்கள்:சிவராஜ் பாட்டீல்
 
lankasri.comமலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தை யாரும் எந்த ஒரு மதத்துடனும் தொடர்புபடுத்தாதீர்கள் என,மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கேட்டுக்கொண்டார்.சண்டீகரில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் பாட்டீல் இவ்வாறு தெரிவித்தார்.

மலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் வேண்டுமென்றே இந்து மதத் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் சிவராஜ் பாட்டீல் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்து மதமாக இருக்கட்டும்,இஸ்லாம் மதமாக இருக்கட்டும் அல்லது கிறிஸ்தவ மதமாக இருக்கட்டும்.எந்த ஒரு மதமும் நல்லதையே போதிக்கின்றன.நமக்குள் எவ்வாறு அன்பை வளர்த்துக் கொள்வது;ஒருவருக்கொருவர் எவ்வாறு மதிப்பளித்து வாழ்வது என்பதையே அனைத்து மதங்களும் நமக்கு கற்பிக்கின்றன.

இதுபோன்ற நிலையில் மலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலர் குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசி வருகிறார்கள்.அவ்வாறு பேசுபவர்கள் தங்களது பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தில் ஊடகங்களும் எந்த ஒரு மதத்துடனும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றார் சிவராஜ் பாட்டீல்.

மலேகாவ் குண்டுவெடிப்பில் 6பேர் உயிரிழந்தது குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடைபெறுகிறதா?என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,இதுகுறித்து நான் எவ்வித பதிலையும் அளிக்க முடியாது.வழக்கை முறைப்படி விசாரித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொறுப்பை விசாரணை அதிகாரிகளிடமே விட்டுவிடுகிறேன். அதன் பின்னர் சரியான தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கட்டும் என்றார்.

மலேகாவ் குண்டுவெடிப்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள ராணுவ அதிகாரி புரோஹித்,பெண் துறவி பிரக்யா தாகூர் ஆகியோருக்கு சம்செ?0;ா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் என ஹரியாணா ரயில்வே போலீஸ் சந்தேகிப்பதாகவும்,அவர்களிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்த முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறித்து கேட்டதற்கு,இதுகுறித்து என்னிடம் எவ்வித விவரமும் இல்லை.இதற்கு பதிலளிக்க நான் ஒன்றும் புலனாய்வு அதிகாரியும் அல்ல என்று கூறி அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் சிவராஜ் பாட்டீல்.

நாட்டில் சட்டம்-ஒழுங்கு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் உள்ளது என்றார்.

அதேசமயம்,தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அரங்கேறிய பயங்கரவாதச் சம்பவங்களைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் குறைவாகவே நடந்துள்ளது என்றும் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.

 

 

StumbleUpon.com Read more...

நாங்கள் இலங்கை போய் சண்டை போட முடியாது : விஜய்

                  


                    இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம் இருந்தார். விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன், அம்மா ஷோபா சந்திரசேகரன், மனைவி சங்கீதா ஆகியோரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.


                மேலும் இந்த உண்ணாவிரதத்தில் விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டன்ர்.  பழ.நெடுமாறன், தா.பாண்டியன், சுப.வீரபாண்டியன் ஆகியோரும்  உண்ணாவிரத பந்தலுக்கு வந்து விஜய்க்கு சால்வை அணிவித்து விஜய்யின் தமிழ் உணர்வுக்கும் ம்னிதாபிமானத்துக்கும் நன்றி சொன்னார்கள்.   இந்த உணர்வு இத்தோடு நின்று விடாமல் நீடிக்க வேண்டும் என்றும் விஜய்யிடம் கேட்டுக்கொண்டார்கள்.

                உண்ணாவிரத்தின் முடிவின்போது பேசிய விஜய்,

            ''எனது ரசிகர் நற்பனி மன்றம் சார்பில் தமிழகமெங்கும் உண்ணாவிரதங்கள் நடைபெறுகிறது.  இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும்.  தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் . அதை வலியுறுத்தித்தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

            இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று நாங்கள் அங்கே போய் சண்டை போட முடியாது.  அதனால்தான் உண்ணாவிரதத்தின் மூலமாக எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்..

எங்களைப் போலவே பல்வேறு தரப்பினரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வ்ருகிறார்கள். நிச்சயம் இலங்கை பிரச்சனை முடிவுக்கு வரும். போர் நிறுத்தம் வரும்.''  என்று தெரிவித்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=325

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP