சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு : அமெரிக்கா

>> Wednesday, June 24, 2009

விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு : அமெரிக்கா

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் விடுதலை புலிகள்
அமைப்புத் தொடர்ந்தும்
இடம்பெற்றுள்ளது.<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>

<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>
1997ஆம் ஆண்டு முதல் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடை
செய்திருந்தது. இந்தத் தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீக்குவதில்லையென அமெரிக்க
ராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கிரேக் சுலிவான்,
தெரிவித்துள்ளார்.<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>

<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>
கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற அவர்களின்
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தாம் கண்டிப்பதாகவும், நாடு கடந்த அரசாங்கமொன்றை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் மேலும்
தெரிவித்தார்<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>

StumbleUpon.com Read more...

TATA Nano car-நேனோ கார் குலுக்களில் தேர்வு செய்யப்பட்ட அதிஷ்டசாலிகள் பட்டியல்

நேனோ கார் புக் செய்தவர்களின் பட்டியலில் இருந்து கணிணி மூலம் குலுக்கள் நடத்தப்பட்டு வாடிக்கையாளர்களை டாடா நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
இதன் தேர்வு செய்யப்பட்ட அதிஷ்டசாலிகள் பட்டியலை பார்வையிடலாம் என்று டாடாவின் இணைய அரங்கத்துக்குள் நுழைந்தால் எனக்கு கீழகண்ட செய்தியை மட்டுமே திரும்ப திரும்ப காண்பிக்கப்பட்டது.
இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் நேனோவின் வரவேற்பை.

StumbleUpon.com Read more...

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து: நேரு

சட்டசபையில் போக்குவரத்து துறை மான்யத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் நேரு,

செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால், சம்பந்தப்பட்ட நபரின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிததாக 3000 பேருந்துகள் வாங்கப்படும் என அமைச்சர் ‌நேரு தெரிவித்துள்ளார். மேலும் 3000 புதிய பேருந்துகளும் 362 கோடி ரூபாய் செலவில், 3 மாத காலத்துக்குள் வாங்கப்படும் என்றார். மேலும் 3500 மினி பஸ்களும், 7500 ஆட்டோக்களையும் இயக்க அனுமதி தரப்படும் என நேரு தெரிவித்தார்.
 

StumbleUpon.com Read more...

2 மாத குழந்தை மீது வரதட்சணை வழக்கு

 

மும்பை : பெரியம்மா கொடுத்த வரதட்சணை புகாரின் அடிப்படையில் 2 மாத கைக்குழந்தையின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் போலீசார் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான். இவர், தனது மனைவி ஷகிலாவை 2 ஆண்டுக்கு முன் விவகாரத்து செய்தார்.பின்னர், ரேஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரேஷ்மாவுக்கு 2 மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. 
 
 
   குழந்தைக்கு ஜோயா என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் சம்சுதீன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்தியதாக ஷகிலா போலீசில் புகார் செய்தார். 2 ஆண்டுக்கு முன்பே விவாகரத்து பெற்ற போதும், அந்த புகாரில் தன்னை கொடுமைப் படுத்துபவர்கள் பட்டியலில் ரேஷ்மா மற்றும் 2 மாத கைக்குழந்தை ஜோயாவின் பெயரையும் ஷகிலா குறிப்பிட்டிருந்தார். சம்சுதீன் கான், ரேஷ்மா, ஜோயாவை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். மதியம் 1 மணிக்கு போலீஸ் நிலையம் வந்தவர்களை இரவு 10 மணிக்குதான் திருப்பி அனுப்பினர். வேறு வழியின்றி, போலீசார் முன்னிலையில்தான் குழந்தைக்கு தாய்பால் கொடுத்ததாக ரேஷ்மா கூறினார். முதல் தகவல் அறிக்கையில், குற்றவாளிகளாக குழந்தை ஜோயா உட்பட 8 பேரின் பெயரையும் போலீசார் சேர்த்தனர். 2 மாத கைக்குழந்தையின் பெயரை சேர்க்காதீர்கள் என்று போலீசிடம் ரேஷ்மா கெஞ்சினார். ஆனால்,   குழந்தையின் பெயரை வழக்கில் சேர்ப்பது முதல் முறை அல்ல என்று போலீசார் கூறிவிட்டனர். 
 

  ஜோயா உட்பட 8 பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த செசன்ஸ் நீதிபதி சர்தேசாய் குழந்தை ஜோயா உட்பட 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கினார். சம்சுதீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார். பெரியம்மாவின் புகாரின்பேரில் 2 மாத கைக்குழந்தை மீது வரதட்சணை கொடுமை வழக்கு போட்ட போலீசுக்கும், குழந்தைக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கும் சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சட்டநிபுணர் ராம் ஜெத்மலானி கூறுகையில், ÔÔ2 மாத குழந்தை மீது வழக்கா? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. புகார் கொடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்Õ என்றார்.மும்பை முன்னாள் மேயரும் வக்கீலுமான நிர்மலா சவந்த் கூறுகையில், ÔÔ7 வயது வரை ஒரு குழந்தையை அப்பாவியாகவே சட்டம் கருதுகிறது. ஏனென்றால், எது சரி, எது தவறு என்று அந்த குழந்தைக்கு அதுவரை தெரியாது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இளம்சிறார் சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த நிலையில் 2 மாத கைக்குழந்தை மீது வழக்கு போட்டது விந்தையாக இருக்கிறது. அந்த குழந்தைக்காக முன்ஜாமீன் கேட்டிருக்கவே வேண்டாம். நீதிமன்ற வரலாற்றில் சிறு குழந்தைக்கு எந்த நீதிபதியும் முன்ஜாமீன் கொடுத்தது இல்லை. குழந்தை ஜோயாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது சட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டதுÕÕ என்றார்.
 

 

 

StumbleUpon.com Read more...

எப்படி தப்பினார் மதிவதனி?--பிரபாகரன் போட்ட உருக்கமான கட்டளை...

 

 

இந்திய 'ரா' உளவு அமைப்பினர், லேட்டஸ்டாக வேறொரு தகவலையும் டீல் செய்துகொண்டிருக்கிறார்கள். 'சுற்றி வளைக்கப்பட்டோம்.

 நடப்பது இறுதித் தாக்குதல்...' என்று பிரபாகரன் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அவருடைய மனைவி மதிவதனி எவ்வாறு திட்டமிட்டபடி கொல்கத்தா வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதே அவர்களுக்குக் கிடைத்த அந்தத்தகவல்.  இந்தியாவின் உள்துறை உளவு அமைப்பான ஐ.பி-யில் பணியாற்றி, தற்போது 'ரா'வின் தெற்காசிய விவகாரங்களை கவனிக்கும் முக்கிய அதிகாரி ஒருவரிடம் இதுபற்றிப் பேசினோம்.

 நம்முடைய நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு மெள்ள வாய் திறந்தார் அவர்.

''நமது 'ரா' அமைப்பின் உலகளாவிய ரகசிய பிரதிநிதிகள் கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவிலுள்ள சில முக்கிய புலித் தலைகளின் ஆதரவாளர்களையும், நிதி சேகரிப்பாளர்களையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 'பிரபாகரனின் மனைவி மதிவதனி, பிள்ளைகள் துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பத்திரமாக இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார்கள்' என்ற தகவல், இந்தோனேஷியாவிலுள்ள ஒரு நபர் மூலமாக 'ரா'-வுக்குக் கிடைத்தது.

வாரகாவும், பாலச்சந்திரனும் இறுதிக் கட்டப் போருக்கு முன்பாக, கடந்த 2008 அக்டோபர் மாத இறுதியிலேயே கடல் வழியாக இந்தோனேஷியா சென்றிருக்கிறார்கள். பின்பு அங்கிருந்து அயர்லாந்துக்கு சென்று விட்டார் கள். மனைவி மதிவதனியையும் அவர்களுக்குத் துணையாக அயர்லாந்துக்கு செல்லும்படி பிரபாகரன் கட்டளை யிட்டும் மதிவதனி, பிரபாகரனை விட்டுப் பிரிய மறுத்திருக்கிறார். ஆனால், 'ஈழப் போராட்டத்துக்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்ப வேண்டும் என்பது நான் வகுத்த விதி. ந

மது குடும்பத்திலோ நான், நமது மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி என ஒருவருக்கு இருவராகக் களத்தில் இருக்கிறோம். அதனால் மற்ற இரு குழந்தைகளின் நலனுக்காக வன்னியை விட்டு நீ வெளியேறத்தான் வேண்டும்!' என மதிவதனியை நிர்ப்பந்தப்படுத்தினாராம் பிரபாகரன். மதிவதனி ஒரு வழியாக இதற்கு சம்மதித்தபோது... கடல் பகுதியில் பாதுகாப்பை இறுக்கிவிட்டது இலங்கை ராணுவம். அந்தக் கட்டுக்காவலையும் மீறித்தான் மதிவதனியை இந்தியா வழியாகத் தப்ப வைத்திருக்கிறார் பிரபாகரன்!'' என்றார் அந்த அதிகாரி.

''கடந்த ஜனவரி மாத இறுதியில் மதிவதனியின் புகைப் படத்தை ஒட்டி வசந்தி, க/பெ. மாரிமுத்து, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயரில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய மூன்று ஆவணங்களை இணைத்து, திருச்சியிலுள்ள ஒரு புரோக்கர்தான் அதற்கு விண்ணப்பித்திருக்கிறார். இதை ஓ.எஸ்.ஆர். (originel, scene, return) முறையில் செக் செய்து பாஸ்போர்ட் அதிகாரி 'அக்செப்டட்' என சீல் குத்தியிருக்கிறார். ஜனவரி இறுதியில் தயாரான இந்த பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டுதான் மதிவதனி இந்தியா வழியாகத் தப்பி யிருக்கிறார்.

போர் இறுதிக் கட்டத்தை எட்டிய மே முதல் வாரம், வேதாரண் யம் வழியாக இந்தியா வந்திருக்கிறார் மதிவதனி. தமிழகம் முழுவதும் தேர்தல் டென்ஷனில் மூழ்கியிருந்த அந்த சமயத்தில், போலீஸாரின் கண்களிலிருந்து தப்பி கொல்கத்தாவுக்குப் போயிருக்கிறார். அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் மூலமாக கடந்த மே 10-ம் தேதி ஹாங்காங் சென்றிருக்கிறார் மதிவதனி. ஹாங்காங்கிலிருந்து கனடா சென்று, பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினியின் ஏற்பாட்டில் மிகப் பாதுகாப்பான ஓரிடத்தில் இருக்கிறார்.

இதற்கிடையில் வசந்தி என்ற பெயரில் எடுக்கப்பட்ட பாஸ் போர்ட் தவிர, ஜானகி என்ற பெயரிலும் ஒரு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. அது யாருக்காக எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை!

இதெல்லாம் எங்கள் கவனத்துக்கு வந்ததுமே, கடந்த வாரம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் சென்று, சம்பந்தப்பட்ட அந்த இரு பாஸ்போர்ட் ஃபைல்களையும் கைப்பற்றி விட்டோம். ஆன்லைனில் இருந்த அந்த பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களையும் முடக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரி களை எங்களின் டெல்லி அலுவலகத்துக்கே அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறோம். மேலும், இதே பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து ரவி மற்றும் பாஸ்கர் ஆகிய இலங்கைத் தமிழர்களுக்கும் 'தத்கல்' முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ஆவணங்களும் போலி என தெரிய வந்திருக்கிறது. இந்த பாஸ்போர்ட் மூலமாக, புலிகள் இயக்கத்தின் வேறு முக்கிய தளபதிகள் யாரும் தப்பினார்களா என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

எப்படியிருந்தாலும்... உலகின் பவர்ஃபுல் உளவு அமைப்புகளில் ஒன்றான ரா-வின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மதிவதனி தப்பியிருப்பது, அதிர்ச்சிக்குரிய ஒன்றுதான். உலகம் முழுவதும் புலிகளுக்கு உள்ள சொத்து விவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் புலிகள் அமைப்பு செயல்பட வேண்டிய தளம், திசை குறித்த சில திட்டங்களையும் மதிவதனியிடம்தான் பிரபாகரன் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மதிவதனியை நாங்கள் சந்திக்க முடிந்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது!'' என்று நீளமாகப் பேசி நிறுத்தினார் அந்த அதிகாரி.

----விகடன்---

StumbleUpon.com Read more...

கனடாவில் ரகசிய இடத்தில் பிரபாகரன் மனைவி உயிருடன் இருக்கிறார்; தமிழகம் வந்து கொல்கத்தா வழியாக தப்பிச் சென்றார்

 
இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான உடல் ஆதார காட்சிகளையும் சிங்கள ராணுவம் வெளியிட்டது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகளின் உளவுத்துறை அறிவித்தது. ஆனால் கடந்த வாரம் உளவுத்துறை பொறுப்பாளர் கதிர்காம அறிவழகன் வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று கூறியிருந்தார்.
பிரபாகரன் ரகசிய இடத்தில் நல்ல உடல்நலத்துடன் உயிரோடு இருக்கிறார். தேவையான நேரத்தில் வெளியில் வருவார் என்று அவர்கள் உறுதியுடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பிரபாகரன் மரண விஷயத்தில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.

அவரை கொன்று விட்டதாக கூறிய சிங்கள ராணுவம் கூட பிரபாகரன் எப்படி மரணம் அடைந்தார் என்பதை உறுதியாக இன்னமும் சொல்லவில்லை.

பிரபாகரன் குடும்ப உறுப்பினர்களில் அவரது மூத்த மகன் சார்லஸ், போரில் கொல்லப்பட்டது மட்டுமே உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பிரபாகரன் மகள் துவாரகா, இளையமகன் பாலச்சந்திரன் இருவரையும் ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்று விட்டதாக முன்பு ஒரு தகவல் வெளியானது. பிரபாகரன் மனைவி மதிவதனியும் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

ஆனால் பிரபாகரன் உடலையும் அவரது மகன் சார்லஸ் உடலையும் டி.வி.யில் காட்டிய சிங்கள ராணுவம், மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரது உடல்களை, ஆதாரமாக காட்டவில்லை. இதனால் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேர் பற்றி மர்மம் நீடித்தது. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய உளவு அமைப்பான ஐ.பி. கூறி வந்தது.

இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் மூவரும் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய உளவு அமைப்பின் ரா பிரிவு இதை கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இது தொடர்பான முழு விபரம் வருமாறு:-

இலங்கை அரசு கடந்த ஆண்டு விமான குண்டு வீச்சை தீவிரப்படுத்தியதும் பிரபாகரன் தன் குடும்பத்தை விட்டுப்பிரிய முடிவு செய்தார். போர்க்களத்தில் குடும்பத்தில் ஒருவர் இருக்கவேண்டும் என்ற கொள்கைக்கு ஏற்பதானும், மூத்த மகன் சார்லசும் இருப்பதாகவும், மற்றவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி பிரபாகரன் உத்தரவிட்டார்.

ஆனால் மதிவதனி அதை ஏற்கவில்லை. பிரபாகரனை விட்டு பிரிய மறுத்து விட்டார். இதையடுத்து மகள் துவாரகாவையும் இளைய மகன் பாலச்சந்திரனையும் பிரபாகரன் வலுக்கட்டாயமாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கையில் இருந்து வெளியேற்றினார்.

துவாரகாவும் பாலச்சந்திரனும் கடல் வழியாக இந்தோனேசியா சென்றனர். அங்கிருந்து அயர்லாந்து நாட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் எங்கு சென்றனர், யார் பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இதற்கிடையே இலங்கையில் சிங்கள ராணுவத்தின் ஆக்ரோஷ தாக்குதல்கள் அதிகரித்தது. சிங்கள படை முற்றுகையை உணர்ந்த பிரபாகரன் மதிவதனியை நாட்டை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்தம் செய்தார். மகள் துவாரகா எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரிந்து செல்ல உத்தர விட்டார்.

பிரபாகரனை விட்டு பிரிய மனம் இல்லாத மதிவதனி நீண்ட யோசனைக்குப்பிறகு வெளிநாடு செல்ல சம்மதித்தார். ஆனால் அதற்குள் கிழக்கு கடற்கரை முழுவதிலும் சிங்கள கடற்படை பாதுகாப்பை இறுக்கி இருந்தது. இதனால் கடல் வழியாக இந்தோனேசியாவுக்கு மதிவதனி தப்ப இயலாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மதிவதனியை தமிழ்நாடு வழியாக தப்பு விக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் மதிவதனி புகைப்படம் ஓட்டி, திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு போலி பாஸ்போர்ட் எடுக்கப்பட்டது.

அந்த போலி பாஸ்போர்ட்டில் மதிவதனி பெயரை வசந்தி என்று குறிப்பிட்டிருந்தனர். கணவர் பெயர் மாரிமுத்து என்றும், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக்கணக்குப்புத்தகம் ஆகிய 3 ஆவணங்களை இணைத்து இந்த போலி பாஸ்போர்ட் பெறப்பட்டது.

ஜனவரி மாத இறுதியில் இந்த பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்டது. இந்த தகவல் ஈழத்தில் இருந்த பிரபாகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தன் நம்பிக்கைக்குரிய தளபதிகள் உதவியுடன் மதிவதனியை தமிழ்நாட்டுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்.

மே மாதம் போர் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் தான் பிரபாகரனிடம் இருந்து மதிவதனி விடை பெற்றார். மே முதல் வாரம் அவர் கடல் வழியாக வேதாரண்யம் வந்தார். அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு நிலவியது. இதனால் மதிவதனி வருகையை போலீசாரால் கண்டுபிடிக்க இயல வில்லை.

வேதாரண்யத்தில் இருந்து மதிவதனி சென்னை அழைத்து வரப்பட்டார். இங்கிருந்து மிக, மிக, ரகசியமாக கொல்கத்தாவுக்கு சென்றார். அங்கிருந்து மே 10-ந்தேதி ஆங்காங் நாட்டுக்கு தப்பிச்சென்றார்.

ஆங்காங்கில் இருந்து கனடாவுக்கு சென்று சேர்ந்தார். கனடாவில் பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசித்து வருகிறார். அவர் மதிவதனியை ரகசியமான ஒரு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார்.

மதிவதனி கனடா சென்று சேர்ந்த சில தினங்களில் அதாவது மே 18-ந்தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அப்போது மதிவதனியும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் தகவலை பரப்பியது.

ஆனால் இந்திய உளவுத்துறை இதுபற்றி தீவிரமாக விசாரித்து வந்தது. கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள விடுதலைப்புலி தலைவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர். புலி ஆதரவாளர்களிடமும் தகவல் திரட்டினார்கள். இதன் மூலம் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் மூவரும் உயிருடன் இருப்பது முதன் முதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரனை தேசியத்தலைவராக போற்றி  வரும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்திய உளவுத்துறையின் தகவல் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
நன்றி :மாலைமலர்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP