சமீபத்திய பதிவுகள்

கலைஞர் டிவி செய்திகள்

>> Friday, February 6, 2009

StumbleUpon.com Read more...

கார் லைசென்ஸ் 771 வது தடவையும் தேர்ச்சி அடைய தவறிய பெண்மணி !-வித்தியாசமான சமாச்சாரம்

கார் லைசென்ஸ் 771 வது தடவையும் சித்தியடையத் தவறினார் பெண்மணி !

 

771-licens.jpg 

டென்மார்க் 06.02.09

 கடந்த 2005 ம் ஆண்டு கார் ஓடுவதற்கான எழுத்துப் பரிட்சையில் சித்தியடைந்த சீ என்ற 68 வயதுடைய தென்கொரிய பெண்மணி சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான டிரைவிங் பரிட்சையில் நேற்று 771 வது தடவையும் சித்திபெற தவறினார். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு தவறை விட்டுவரும் பெண்மணி 772 வது தடவையாவது தான் சித்தியடைவேன் என்று தெரிவித்தார். இப்பெண்மணி தென்கொரியாவில் இருந்து முயல்வதால் 2 மில்லியன் யென்வரையே செலவிட்டிருக்கிறார். இதுபோல ஐரோப்பாவில் முயற்சிக்க இயலாது என்பது தெரிந்ததே. தள்ளாத வயதிலும் சாரதி அனுமதிப் பத்திரம் எடுப்பதை இலக்காக கொண்டு முயற்சிக்கும் சீ லைசென்ஸ் எடுக்காவிட்டாலும் உலக சாதனை படைத்திருக்கிறார். கைகளில் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் அடைய முடியாத புகழை இவர் அடைந்துள்ளார்.
 

StumbleUpon.com Read more...

என்னினமே என்சனமே எங்கள் குரல் கேட்கிறதா? வன்னி மண்ணிலிருந்து எழுதும் கடிதம் இது

 

fire_eyeஅன்புக்குரிய தமிழகம் வாழ் தமிழ் பேசும் சகோதர சகோதரியருக்கு!வணக்கம். இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் வடகிழக்கு மண்ணின் மருதமும் முல்லையும் நெய்தலும் ஒன்றிணைந்த தமிழீழ மண்ணின் ஒரு பகுதியில் உள்ள காப்பகழிக்குள் இருந்து…..

நாமே தயாரித்த குப்பி விளக்கொளியில்………கையில் கிடைத்த காகிதத்தில்…… இந்த அஞ்சலை அஞ்சாமல் யான் வடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எமக்காக எமது மண்ணிற்காக இக்கணம் வரை வீரச்சாவடைந்த மானமாவீரரை நினைந்து, அந்நியனது அழிப்பில் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களை எண்ணியவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் வரைந்தனுப்ப முயல்கிறேன்.

கடந்த ஆண்டு இறுதிவரை நாங்கள் வாழ்ந்த வர்த்தக - நிர்வாக நகரினை விட்டேகி அங்குல அங்குலமாய் நகர்ந்து நாமிங்கு வந்து நான்கு வாரங்களாகிய நிலையில் எதிர்வரும் நாட்கள் பெரும் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் நகர்கின்றன.

வள்ளுவப் பெருந்தகையின் முந்நூற்று ஐம்பத்து நான்கு குறள்களுக்கு முந்நூறு 'குறளோவியம்' தீட்டிய கலைஞர் ஆட்சியில், உங்களில் சிலர் இந்நேரத்துக் கனவுலகில் சஞ்சரிக்க, எங்களின் கதியை எண்ணி உறங்க முடியாது பலர் தவித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் என்பதை அண்மைக் கால உங்களது எழுச்சி மிகு செயற்பாடுகளில் இருந்து உணர்ந்தறிந்தபடி, இங்குள்ள நாங்களோ, ஒப்பற்ற தேசியத் தலைவர் வழி நடந்து, வளமான நம் மண்ணை - தமிழீழ தேசத்தை ஆக்கிரமித்து அழித்தொழிக்க முயன்று குரல் வளையை நெரிப்பதாக நெருங்கி வந்து கொண்டிருக்கிற சிங்களப் பேரினவாத அரசின் படைகளுடன் அறுதியாகப் போரிட்டு, இறுதியாக 'வெற்றிக் கனி' பறித்திடுவதற்கான தயாரிப்பில் சலிப்பில்லாது ஈடுபட்டு இயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.

வந்தாரை எல்லாம் வரவேற்று நலமே வாழ வைத்த வன்னி மண்ணின் மைந்தர்கள் காலமிட்ட கட்டளை ஏற்று வரலாற்று வரிகளில் முழுமையாய் இணைந்துள்ள இந்நேரத்தில் - உயிர் கொடுத்துத் தம் 'உதிரத்தால் ஓர் உயிரோவியம்' வரைந்து கொண்டிருக்கும் இந்தக் கணங்களில்……..கிடைத்த பொழுதில் கண்ணயராது உங்களுக்குக் கடிதம் நானெழுதக் காரணம் ஆயிரம்.

ஆனாலும் அதையெல்லாம் எழுத விடாது வந்து வீழும் பகைவனின் எறிகணைகளுக்கிடையேயும் எரிகுண்டுகள் மற்றும் கொத்தணிக் குண்டுகளிடையேயும் ஒரு சில காரணங்களையாவது சுட்டிக்காட்டிடலாமென்று எண்ணி நம்பித் தொடர்கிறேன். ஒரு வேளை, இதுவே நாம் உங்களுக்கு எழுதும் இறுதி மடலாகவும் கடைசி வேண்டுகோளாகவும் இருக்கவும் கூடும்.

பாசத்துக்குரியவர்களே! உலைக் கூடத்திலே கொட்டப்பட்ட புழுக்களின் கூட்டமல்ல நம் மக்கள். பகை சூழும் போர்க் களத்திலே கழுத்தில் நஞ்சு மாலை அணிந்து "…….இருப்பது ஓர் உயிர் தானே! அது போகப் போவதும் ஒரு முறை தானே…………" என்று கூறி, அநியாயம் செய்து நெருங்கி வரும் பகைவனின் படைகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி - நம் மக்கள்………அணியணியாக…….

"அநியாயத்தை எதிர்த்து நில்லுங்கள்! வாருங்கள் அடிபடும் உங்களுக்கு நான் தலைமை வகிக்கிறேன்…" எனக் கூறி நம்மெல்லோரையும் காத்துச் செல்லும் நம் தானைத் தலைவர் தலைமையில், அவர் சுட்டும் திசையில் எங்கும் செல்வோம் - எதிலும் வெல்வோம் என்றவாறு திரள் திரளாக - நம் சகோதரர்கள்……
இந்நிலையில், ஆறாண்டுகள் முன் கைச்சாத்தாகிய 'யுத்த நிறுத்த உடன்படிக்கை'யையும் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்குச் சற்று மேற்பட்ட இன்று வரையான நாட்களுக்குள் நம் தாயகத்தில் நிகழ்ந்தவற்றையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

அவ்வொப்பந்தத்தில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டு எம்மையும் சமதரப்பாக ஏற்றுக் கொண்ட சிங்கள அரச தரப்பு, எம்மை ஏமாற்றிப் பலவீனப்படுத்தி விட்டதாகக் கூறி எக்காளமிடுகிறது தற்போது. இது பற்றிப் பாராமுகமாய் - கண்டும் காணாதவார்களாய் இருக்கிறார்கள் அப்போது சாட்சியாய் இருந்தவர்கள் என்பது, கசப்பானதொரு உண்மையல்லவா?

அன்பானவர்களே! கடந்த அறுபது ஆண்டுகளில் நம் தேசம் காணாத பேச்சுவார்த்தையுமில்லை, ஒப்பந்தமுமில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இதற்கு முன், தங்கள் நாட்டரசும் எமது 'அயல் நாட்டுக் குள்ளநரியும்', எமது ஏக பிரதிநிதிகளை நிர்ப்பந்தித்து, தான்தோன்றித்தனமாகச் செய்த "இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும்" நீங்களோ நாங்களோ மறப்பதற்கில்லை.

அதேபோல், அந்த உடன்படிக்கை கிழிந்த - கிழித்தெறியப்பட்ட ஒக்டோபர் பத்தையும் அதன் பின்னான விளைவுகளையும் அவற்றின் பக்கவிளைவுகளையும், நாங்கள் யாருமே மறுப்பதற்குமில்லை, மறைப்பதற்கும் இல்லை.

இருந்தும், கால நிர்ப்பந்தங்களையும் புதிய உலக ஒழுங்கையும் சரிவரப் புரிந்து நம் தலைமை சர்வதேசங்களுமறிய நம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் சுமைகளைக் குறைப்பதற்காக இறுதியாகச் செய்த அவ்வுடன்படிக்கையின் கதி, என்னவாயிற்று??

ஏறத்தாழ முந்நூற்று எண்பது நாட்களுக்கு முன் ஒருதலைப்பட்சமாக அவ்வொப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேறி, கொக்கரித்துக் கொண்டும் சூளுரைத்துக் கொண்டும் வஞ்சகமாக நம் மக்களைக் கொன்றொழித்தும் ஆண்டாண்டுகளாய் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களை அழித்தொழித்து வன்பறிப்புச் செய்தும் வரும் சிங்களத்தின் உண்மைப் பேரினவாத முகம் உலகிற்குப் புரியாவிட்டாலும் - புரிந்தும் புரியாதவர்களாய் இருந்து கொண்டாலும், எவர் என்ன சொன்னாலும், ஆறரைக் கோடி தமிழ் மக்களான உங்களுக்கு இப்போ நன்கு தெரிகிறது என்பதும் வேறுபாடுகளை மறந்து நீங்கள் கொடுக்கும் ஒருமித்த குரலும் எமக்குப் பெருந்தொல்லைகளின் மத்தியிலும் பேருவகை அளிக்கவே செய்கிறது.

அதே வேளை, புலத்தின் வளத்தில் மக்கள் பலத்தில் களத்தில் நிற்கும் நம் வீரருக்கும், வாழ்க்கையே போராட்டமாகவும் போராட்டமே வாழ்க்கையாகியும்விட்ட பின்தளத்து மக்களுக்கும் நேரடியாகக் கவசமாய் இருந்து உங்களால் காப்பாற்ற முடியாதிருந்தாலும், பட்டினி கிடந்து அவல வாழ்வு வாழும் நம் சொந்தங்களுக்காக மனிதாபிமானத்துடன் நீங்கள் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒன்றுபட்ட உணர்வோடு அனுப்பியவை போன்று தற்போதும் அனுப்ப முயல்கின்ற அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் வந்து சேர்வதற்குள், ஆக்கிரமிப்பாளனுக்கு, வேண்டியளவு போர்த் தளபாடங்களும் உதவியாகப் படையினரும் உவ்விடமுள்ள தொடருந்தில் ஏற்றப்பட்டுக் கப்பல் கப்பலாக இங்கு வந்திறங்கியதாக அறிந்த போது, அதிர்ச்சியில் திகைத்தே விட்டோம்.

அவை மட்டுமா? எம் மக்களை வல்வளைப்புச் செய்து எமது மண்ணைச் சிறிது சிறிதாகக் கபளீகரம் செய்யும் எதிரிப்படைகளுக்குப் போர்ப்பயிற்சியும் நவீன இராணுவ தொழில்நுட்ப உதவிகளும் கூடவே உளவுத் தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றனவாமே?

அன்புக்குரியவர்களே! கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்கின்ற இந்த யுத்த சன்னதத்தால் எம் சுற்றாடல் சீர்குலைந்து உறவுகள் வயது வேறுபாடின்றிப் பெரும் துன்பத்துக்குள் தள்ளப்பட்டு, அன்றாடம் அடுத்து விடும் மூச்சுக்கே உத்தரவாதமற்ற சூழ்நிலையில் இருக்கையில், சிலதினங்கள் முன் உவ்விடமிருந்து வான் வழி வந்த சேதிகள் எம்மைப் பெரும் பிரமிப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தின.

ஆம்! உண்மைதான் - அங்கிருந்து, இங்கிருக்கும் எமக்காக, எம் நிலையைக் கண்டும் வாளாதிருக்கும் சில அரசியல்வாதிகளுடைய கையாலாகாத்தனத்தை வெளிக்கொணர்வதற்காகவும் இரட்டை வேடமிட்டு கபட நாடகங்களுக்குத் துணை போகும் அத்தகையவர்களின் போலி முகங்களின் திரையினைக் கிழிக்கும் வகையிலும் தமிழகக் குடிமக்கள் இருவர் தமக்கே தீயிட்டுச் சாவடைந்தார்கள் என்ற செய்தி எம் கண்களில் கண்ணீருடன் நெஞ்சிலே இரத்தததையுமல்லவா வரவழைத்து விட்டது?

சகோதரரே! ஒன்றா இரண்டா………..? எத்தனை ஆயிரம் உயிரிழப்புகள் இதுவரை…….?! ஆனால், இவை அத்தனையும் வீணாகிப் போகக் கூடாது என்றால், இவற்றை எல்லாம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்றால், எமது இருப்பை நாம் தான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இத்தகையதொரு வரலாற்றுப் புறநிலைகள் மிக்க கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோரும், இனியாவது நண்பர்களை இனம் கண்டு, எதிரிகளைப் புறந்தள்ளி துரோகிகளையும் ஒட்டுப்படையினரையும் தவிர்த்து அழித்து எம் அசைவுகள் ஒவ்வொன்றையும் அர்த்தமுள்ளதாக்கி, சரியான திசையில் ஒரே கொள்கையுடன் உண்மைத் தலைவன் வழியில் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகவே பயணித்தாக வேண்டும்.

எமது பாரம்பரிய மண்ணை அபகரித்த நிலையில் மக்களைப் பல்லாயிரக் கணக்கில் இடம்பெயர்த்து அகதிகளாக்கி அழித்தொழித்த வண்ணம் இன்று தனது அறுபத்து ஓராம் சுதந்திரதினத்தை ஆணவத்தோடும் இறுமாப்பபுடனும் பன்னாட்டுச் சமூகத்துக்குப் பொய்கள் பல உரைத்து, தன் நாட்டு மக்களுக்கு உண்மைகளை மறைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சுதந்திர நாளில் - அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட எம் கடந்த கால வரலாறு, இதைத் தவிர வேறெந்த வழியையும் எமக்கு விட்டு வைக்கவில்லை என்ற பெரும் உண்மையை, நாம் எல்லோரும் ஒன்றிணைத்து, உலகின் மூலை முடுக்கெங்கும் பறை சாற்றியாகவே வேண்டும்.

அன்பானவர்களே! நாங்கள் நீந்துவது, எவ்விதமான கால வரையறையும் செய்ய முடியாத விடுதலை எனும் நீண்ட நெருப்பாற்றில் என்பது எமக்கு நன்கு தெரியும். இதுவரை காலமும் புலம்பெயர்ந்து பனிவிழும் தேசங்களிலும், பாலைவனங்களிலும் இயற்கையோடு போராடி வாழும் நம் உடன்பிறப்புகளின் உதவிகளுடன் நாங்கள் இதுவரை பயணித்து வந்து விட்டோம்.

தற்போது, சில மைல்கள் தொலைவிலுள்ள தொப்பூழ்க்கொடி உறவுகளான உங்களது அன்பும் ஆதரவும் பூரணமாக எமக்குள்ள நிலையில், அது தரும் தெம்புடன் நாம், நம் தாயகப் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்கின்ற நேரத்தில், கடந்த சில வாரங்களாக உவ்விடத்தில் நிகழும் சகல போராட்டங்களுக்கும் உடலால் புலம்பெயர்ந்தும் மனத்தால் எம்முடனேயே வாழும் நம் பாசத்துக்குரியவர்களின் கவனயீர்ப்பு, உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, தீப்பந்தப் பேரணி போன்ற முன்னெடுப்புகளுக்கும் இங்குள்ளவர்களின் சார்பாக எமது அன்பையும் உளமார்ந்த நன்றிகளையும் இம்மடலூடாகத் தாழ்மையுடனும் உரிமையுடனும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அதே வேளையில், உங்களின் அசைவுகள் எவையும் இதுவரை - சிங்கள அரசின் கொடூரத் தாக்குதல்களையோ, மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள், அரச சார்பற்ற, தொண்டர் நிறுவனங்கள் மீதான கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையோ தடுத்திராவிட்டாலும், பொருளாதாரத் தடை, போக்குவரத்துத் தடை, மருந்துத் தடை, கல்வித்தடை, தொடர்பாடல் தடை போன்றவற்றை நீக்காது விட்டாலும் நீங்கள், தளராத மனதோடு தொடர்ந்தும் நியாயத்தின்பால் நிற்கும் உங்களின் செயற்பாடுகளைத் தீவிரமாக்கித் துணிவுடன் சரிவர முன்னேடுப்பீர்களென்றே எதிர்பார்க்கிறோம்.

அன்பானவர்களே! ஐக்கிய நாடுகள் சபையில் - ஆயிரமாயிரம் வேங்கைகள் இரத்தத்தில் நாம் ஏற்றுகிற எமது தேசியக் கொடியாம் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கும் வரை, சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த - செய்து வருகின்ற அத்தனை அநியாயங்களுக்கும் முடிவு கண்டு, சர்வதேச நீதி மன்றில் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் வரை, அல்லலுற்றுள்ள எமது மக்களுக்கு நிரந்தரமான நீதியான சமாதானமும் சுகவாழ்வும் கிட்டும் வரை, நீங்களும் நாங்களும் ஒன்றுபட்டு, வலிகளை வலிமையாக்கி சுமைகளைச் சுகங்களாக்கி வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுவோமாக என்று கூறி இம்மடலை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நன்றிகளுடனும் நல்வாழ்த்துக்களுடனும்,
தமிழீழ தேசம் விடுதலை காண உழைத்துக் கொண்டிருக்கும் உங்கள் பாசத்துக்குரியவர்கள் சார்பாக,

- உடன் பிறவாச் சகோதரி -

 

http://www.nerudal.com/nerudal.480.html

StumbleUpon.com Read more...

அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 3

அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 3

 
அப்துல் மஜீத் அவர்கள்:

க‌ர்த்த‌ரின் சாந்தியும் ச‌மாதான‌மும் ந‌ம் அனைவ‌ரின் உண்டாகுவ‌தாக‌,த‌ங்க‌ளுடைய‌ ப‌திலை க‌ண்டு மிக்க ம‌கிழ்ச்சி அடைந்தேன் ந‌ண்ப‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளே. இஸ்லாம் வாளால் ப‌ர‌விய‌து என்ற குற்றச்சாட்டுக்கு நீங்க‌ளே ப‌திலும் ம‌றைமுக‌மாக‌ கொடுத்துவிட்டீர்க‌ள். முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு, இஸ்லாமை விட்டு வெளியேறிய நாடுகள்:

(The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates') From Wikipedia, the free encyclopedia

The Ridda wars (Arabic: حروب الردة), also known as the Wars of Apostasy) were a set of military campaigns against the rebellion of several Arabic tribes against the Caliph Abu Bakr during 632 and 633 AD, following the death of Muhammad. The revolts, in Islamic Historiography later interpreted as religious, were in reality mainly political.[1][2]

umar please note the underlined,mainly political.

அடக்குமுறையால் எந்த‌ ஒரு மார்க்க‌த்தையும் நிர‌ந்த‌ர‌மாக‌ திணிக்க‌ முடியாது என்ப‌த‌ற்கு த‌ங்க‌ளுடைய‌ இந்த‌ ப‌திவே ஒப்புத‌ல். formats are mine.

Umar said:

அருமையான சகோதரருக்கு,

விகிபீடியாவில் "Mainly Political" என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கூற நீங்கள் விரும்புகிறீர்கள்?

  • முஹம்மது அவர்கள் உயிரோடு இருக்கும் போது, மற்ற நாடுகள் இஸ்லாமிய கட்டுப்பட்டுக்குள் வந்தது, இஸ்லாமின் கோட்பாட்டைக் கண்டு பிரபித்து வந்தவர்களா அல்லது அவரது "வாளுக்கு" பயந்து வந்தவர்களா?
  • முஹம்மது அவர்கள் உயிரோடு இருந்த போது, இஸ்லாமிய நாடுகளாக அல்லது ஜிஸ்யா வரி கட்டுகிறவர்களாக மாறிய நாடுகள், ஆன்மீக மேன்மைக்காக வந்தவர்களா அல்லது அரசியலுக்காக(ஏன் வீணாக உயிரை விட்டு, நாட்டை இழப்பானேன் என்பதற்காக) வந்தவர்களா?
நீங்கள் நபியாக கருதும் முஹம்மது அவர்கள் மரித்த பிறகு, இஸ்லாமிய நாடுகளாக(அல்லது அவருக்கு வரிகட்டுகிற நாடுகளாக) மாறியிருந்த நாடுகள், இஸ்லாமை விட்டு வெளியேறின அல்லது ஜிஸ்யா வரி கட்ட மறுத்தன. இதைப் பற்றி நாம் இப்போது சிந்திப்போம். இதில் நீங்கள் சொன்னது போல கூட ஒரு தெரிவை(Option) நாம் சிந்திப்போம்.

ரித்தா போர்கள்(Ridda Wars) என்பது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது(This is your view)

அல்லது

ரித்தா போர்கள்(Ridda Wars) என்பது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படவில்லை


நீங்கள் சொன்னதுபோலவே, இந்த ரித்தா போர்கள் அரசியல் காரணங்களுகாக நடத்தப்பட்டது என்றே நாம் இப்போது நினைத்துக்கொள்வோம். இதனால் கீழ் கண்ட பிரச்சனைகள் இருவாகின்றன, இவைகளுக்கு நீங்கள் பதில் சொல்லமுடியுமா என்றுப் பாருங்கள்.

• முஹம்மது மரித்தது, அந்த நாடுகள்(இஸ்லாமிய நாடுகள்) ஏன் ஜிஸ்யா வரியை கொடுக்க மறுத்தனர்? இவர்கள் இஸ்லாமின் போட்பாடுகளை விரும்பி, நீங்கள் நபியாக கருதும் முஹம்மதுவை நேசித்து, இஸ்லாமிய நாடுகளாக மாறியிருந்தால், அவர் மரித்ததும் ஏன் திடீரென்று மாறவேண்டும்?

• முஹம்மது அவர்கள் உயிரோடு இருந்த போது தேனைப்போல இனிமையாக இருந்த இஸ்லாம் அவர் மரித்ததும் "பாவக்காய்" போல கசப்பாக மாறிவிட்டதா? அல்லது,

• இஸ்லாமின் முதல் காலிஃபாவாக இருந்த அபூ பக்கர் அவர்கள் ஒரு நல்ல இஸ்லாமிய ஆட்சியைச் செய்யவில்லையா?(இதை இஸ்லாமியர்கள் ஏற்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்) அல்லது

• அந்த நாடுகளின் தலைவர்கள் வேண்டுமென்றே, முஹம்மது மரித்ததும் எதிர்த்தார்கள், ஜிஸ்யா வரியை கட்ட மறுத்தார்கள் என்றுச் சொல்ல வருகிறீர்களா? இப்படி நீங்கள் சொன்னால், இவர்கள் முஹம்மது உயிரோடு இருக்கும் போது இஸ்லாமை ஏற்றது உயிருக்கு பயந்து தான் என்பது விளங்குகிறது, அல்லது முஹம்மதுவிடமிருந்து தப்பிக்க வெளி வேஷம் போட்டு இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் வந்தார்கள் என்பது விளங்குகிறது.

இதில் எது சரியானது?

ஒன்று, அவர்கள் உயிருக்கு பயந்து இஸ்லாமியராக மாறியிருக்கவேண்டும் அல்லது அவர்கள் இஸ்லாமுக்கு மாறியது ஒரு "வெளி வேஷமாக" இருக்கவேண்டும். இதில் எது சரியானதாக இருந்தாலும், "இஸ்லாமிய கோட்பாடுகளைக் கண்டு, நாடுகள் அப்படியே முன்வந்து இஸ்லாமுக்கு மாறியது" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் பொய்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

அபூ பக்கர் ஒரு நல்ல இஸ்லாமிய‌ ஆட்சி செய்யவில்லை என்று பொருளா?

மேலே சொன்னது சரியானது அல்ல என்று நீங்கள் சொன்னால், இன்னொரு தெரிவை நாம் கவனிக்கலாம், அதாவது ஒரு இஸ்லாமிய ஆட்சி செய்வதற்கு அபூ பக்கர் அவர்கள் தகுதியானவர் அல்ல என்று அந்நாடுகள் கண்டுக் கொண்டு, நல்ல ஆட்சியாளர்(முஹம்மது) மரித்துவிட்டார், இந்த அபூ பக்கர் நமக்கு தேவையில்லை, அவருக்கு இனி நாம் ஜிஸ்யா கட்டவேண்டியதில்லை என்று அந்நாடுகள் மாறியிருக்கவேண்டும். இதையாவது, இஸ்லாமியர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் உங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.

அப்படியே, அபூ பக்கர் அவர்கள் காலிபா அல்ல என்று அவர்கள் நினைத்து, ஜிஸ்யா வரி கட்ட மறுத்து இருந்தாலும், எதிர்த்து இருந்தாலும், ஏன் அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேற வேண்டும்? அவர்கள் அபூ பக்கரை மட்டும் எதிர்க்க திட்டமிட்டு இருந்தால், இஸ்லாமை விட்டு ஏன் வெளியேற வேண்டும்? (அபூ பக்கர் அவர்கள் காலிபாவாக மாறியதை, முஹம்மதுவின் மகளான‌ பாதிமாவும், அலி அவர்களும் எதிர்த்தாலும், அவர்கள் இஸ்லாமியராகவே இருந்தார்கள், இவர்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தது, ஆனால், யார் தலைவராக வரவேண்டும் என்ற கருத்து வேறு பாடு மட்டும் இருந்தது).

அருமை இஸ்லாமிய சகோதரரே, முஹம்மது மரித்ததும் மற்ற நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறின என்றுச் சொன்னாலே, அவர்கள் ஆரம்பத்தில் எப்படி இஸ்லாமுக்குள் வந்தார்கள்? என்பது சந்தேகத்திற்கும் விவாதத்திற்கும் உரியதாக மாறிவிடுகிறது.

எனவே, உங்கள் நபி உயிரோடு இருக்கும் போது, மற்ற நாடுகளை இஸ்லாமிய நாடுகளாக மாறியது இஸ்லாமின் போட்பாடுகளைக் கண்டு வியந்து, சந்தோஷமாக மாறிய நாடுகள் அல்ல, அப்படி இருந்திருந்தால், ஏன் அவர்கள் அபூபக்கரை அதாவது முஹமமதுவிற்கு பிறகு இஸ்லாமை நடத்த நியமிக்கப்பட்ட ஒருவரை அவர்கள் எதிர்க்கபோகிறார்கள்? அப்படி எதிர்த்தார்கள் என்பது உண்மையானால், அவர்கள் இஸ்லாமியராக‌ மாறியது வெறும் வெளி வேஷமே!

அப்துல் மஜீத் அவர்கள்:

ச‌ரி விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம்,ந‌பிக‌ள் நாய‌க‌ம் மெக்காவில் இருந்து ம‌தினாவுக்கு ஹிஜ்ர‌த் செய்து போன‌ பொழுது அங்கே இருந்த‌வ‌ர்க‌ளுட‌ன் போர் செய்து வாள் முனையில்தான் எல்லோரையும் முஸ்லிமாக‌ மாற்றினாரா அல்ல‌து அக‌தியாக‌ போனாரா?பிற‌கு எப்ப‌டி அவரால் அங்கிருந்த‌வ‌ர்க‌ளை க‌த்தியின்றி ர‌த்த‌மின்றி வென்றெடுக்க‌ முடிந்த‌து.

Umar said:

எப்படி எப்படி, கத்தியின்று இரத்தமின்றியா? எங்கே மறுபடியும் சொல்லுங்கள்?

உங்களுக்கு உண்மை சரித்திரம் தெரியுமா அல்லது உங்கள் இமாம்கள் உங்களுக்கு சொல்வது மட்டும் தெரியுமா?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முஹம்மதுவும் அவரது மக்களும் மதினாவிற்குச் சென்று, அங்கு ஒரு ஆசிரமம் போட்டு, அவர் அமர்ந்துக்கொண்டு, வருகிறவர்களுக்கு அல்லாவைப் பற்றிச் சொல்லி, தன்னை பின்பற்றுகிறவர்களை ஊர் ஊராக அனுப்பி, அல்லாவின் வழியை தெரிவித்து வாருங்கள் என்றுச் சொன்னது போலவும். இவரது ஆன்மீக, தெய்வீக நடத்தையைக் கண்டு, மதினாவின் மக்கள், இவர் தான் பெரிய மகான், இவர் சொல்வது தான் வேதவாக்கு என்றுச் சொல்லி, இவரது காலடியில் தங்கள் நாட்டை ஆளும் ஆட்சிப்பொருப்பை வைத்துவிட்டுச் சென்றது போலச் சொல்கிறீர்கள்? உண்மையாகவே அமைதியாக தன் மார்க்கத்தை பரப்புகிறவர்களும் உங்களைப்போல பெருமைப் படமாட்டார்கள்.

கீழ் கண்ட கொலைகள் பற்றி படிக்கவும்: இவைகள் "கத்தியின்றி இரத்தமின்றி" என்றுச் சொல்வார்களா? என்று சிந்திக்கவும்.

"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். (முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் - http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "
எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார்.( "மர்வானின் மகள் அஸ்மா" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்: - http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "
இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள்(Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். - http://www.answering-islam.org/tamil/authors/green/torture.html

மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)- அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவ‌ர் பத்ரூ போரில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌போது முஹம்மது அவருக்கு ம‌ர‌ண‌ த‌ண்டனையை வழங்கினார். அப்போது அக்பா மிகுந்த ம‌ன‌ச்ச‌ஞ்ஞ‌ல‌த்துட‌ன் "
முஹம்மதுவே! என் பிள்ளைக‌ளை யார் காப்பாற்றுவார்க‌ள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்க‌ளுள் ஒருவ‌னின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது. (http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html)

முஹம்மது அநியாயமாக‌ சுமார் 600 யூத ஆண்மக்களைக் கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்துகிறார் …….முஹம்மதுவின் தீர்ப்பு: 600 ஆண்க‌ளை சிர‌ச்சேத‌ம் செய்த‌ல் (சில‌ இஸ்லாமிய‌ ஆதார‌ங்க‌ள் 900 ஆண்கள் என‌க் குறிப்பிடுகின்ற‌ன‌), பெண்க‌ளையும் குழந்தைக‌ளையும் அடிமைகளாக எடுத்துக்கொள்ளுதல் (அவ‌ர் ஒரு யூத‌ அழ‌கியைத் த‌ன‌க்குப் ப‌ரிசாக‌ எடுத்துக் கொண்டார்). (http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html)

இவைகள் எல்லாம் "கத்தியின்று இரத்தமின்றி" உங்கள் முஹம்மது நாடுகளை ஜெயித்தார் என்றுச் சொன்னீர்களே, அவைகளுக்கான ஒரு சில‌ ஆதாரங்களாகும். இவைகள் எல்லாம் தமிழ் கட்டுரைகள் தான், உங்கள் இதயத்திற்கு தாங்கிக்கொள்ள வலிமை இருந்தால், சென்று படிக்கவும்.

அப்துல் மஜீத் அவர்கள்:

மேலும் இந்தியாவில் எப்பொழுது,எப்ப‌டி இஸ்லாம் ப‌ர‌விய‌து? எந்த‌ கலிஃபா போர் எடுத்தார்? ந்தோனேஷியா,ம‌லேஷியா,சிங்க‌ப்பூர்,ஃபிலிப்பைன்ஸ்,புருனே போன்ற நாடுக‌ளுக்கு யார் க‌டித‌ம் எழுதி மிர‌ட்டி வாள் முனையில் இஸ்லாத்தை ப‌ர‌ப்பினார்க‌ள்? ந‌ண்ப‌ரே காழ்ப்புணர்ச்சி இல்லாம‌ல் ந‌டு நிலையாக‌ கொஞ்ச‌ம் சிந்தித்து பாருங்க‌ள்,

Umar said:

முஹம்மதுவை விட நாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள்

அருமையான அப்துல் மஜீத் அவர்களே, நான் கேட்டது, முஹமம்து எப்படி இஸ்லாமை பரப்பினார் என்று, நீங்கள் பதில் சொல்வது இஸ்லாம் எப்படி இப்போது ஒரு சில நாடுகளில் பரவியுள்ளது என்று. இதைப் பற்றி நான் ஏற்கனவே, "இஸ்லாமிய இணைய பேரவைக்கு" ஒரு பதிலை எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன். முதலாவது உங்கள் நபி எப்படி தன் இஸ்லாமை பரப்பினார் என்று விளக்குங்கள், அவரது கடிதங்கள் என்ன சொல்கின்றன அவைகளின் உண்மை விளக்கம் என்ன? என்று விளக்குங்கள்.

பிறகு தற்கால நாடுகளில் இஸ்லாம் எப்படி பரவிக்கொண்டு இருக்கிறது, நிலை நிற்கிறது என்பதை பிறகு சிந்திக்கலாம். ஒரு மரத்தின் வேரே சரியில்லை என்றுச் சொல்லும் போது, அந்த மரத்தின் கிளையைப் பற்றி பெருமையாக பேசுவதில் என்ன பயன்? அப்படி பேசினால், வேரை விட கிளைகளே முக்கியமானவைகள் என்று சொல்வதற்கு சமமாகும்.

Colgate Close- Up Technique

இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு டெக்னிக் என்னவென்றால், நாம் ஒன்றைச் சொன்னால், அவர்கள் வேறு ஒரு பதில் சொல்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு மலிகை சாமான் கடைக்குச் சென்று, கோல்கேட் பேஸ்ட் இருக்கின்றதா என்று கேட்டால், அந்த கடையில் அப்போதைக்கு கோல்கேட் இல்லையானால், அந்த கடைக்காரார் புத்திசாலியாக இருந்தால், "க்ளோசப் பேஸ்ட்" இருக்கிறது என்பார். ஆனால் கேட்டது கோல்கேட், அவர் சொல்வது க்ளோசப் இருப்பதாக. இப்படி இருக்கும் இவர்களின் வாதம்.

நான் பதித்த கட்டுரை "முகமது எப்படி இஸ்லாமை பரப்பினார்?" என்பதைப் பற்றியது. இவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல், இஸ்லாம் எப்படி இப்போது பரவுகிறது என்று சொல்கிறார்கள். இதைத் தான் நான் "கோல்கெட், க்ளோசட் டெக்னிக் – Colgate Close-up Technique" என்பேன்.

இஸ்லாமிய இணைய பேரவை அண்ணன்களா? முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் என்று முதலில் விளக்குங்கள், அவர் எழுதிய கடிதங்களில் அமைதியை கண்டுபிடியுங்கள். அதை விட்டுவிட்டு, இந்தோனேஷியாவில் எப்படி பரவியது, இன்று மேற்கத்திய நாடுகளில் எப்படி பரவுகிறது என்றுச் சொல்லி, கோல்கேட் கேட்பவருக்கு, க்ளோசப்பை விற்க முயற்சி எடுக்காதீர்கள்.

ஒன்று செய்யுங்கள், உங்கள் நபி அனுப்பிய கடிதங்கள் போல, எல்லா உலக நாடுகளுக்கும் கடிதங்கள் எழுதுங்கள், இஸ்லாமை ஏற்றுக்கொள், மறுத்தால் சண்டை தான் என்று எழுதுங்கள். நீங்கள் தான் உங்கள் நபியின் அடிச்சுவடிகளில் நடப்பவர்கள் தானே. இப்படி எழுதிப்பாருங்கள், பிறகு தெரியும், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமை எப்படித்தான் பரப்ப வேண்டும் என்று. மேற்கத்திய நாடுகளுக்கும் வேண்டாம், சைனாவிற்கும், ஜப்பானுக்கும் இப்படிப்பட்ட கடிதம் எழுதி அனுப்பும் படி இஸ்லாமிய நாடுகளை கேட்டுக்கொள்ளுங்கள், பிறகு பாருங்கள் என்ன நடக்கும் என்று?

இப்படி சொல்வதினால், நீங்கள் இஸ்லாமை பரப்பும் விதம் உங்கள் நபியைப்போல வன்முறையில் இல்லாமல், அமைதியான முறையில் பரப்புகிறோம் என்று உங்கள் நபிக்கு எதிராக நீங்களே சாட்சியிடுகிறீர்கள். உங்கள் நபியை விட நீங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்கிறீர்கள்.

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/iiop/iiop-colgate-closeup.html

மீதமுள்ள இஸ்லாமிய சகோதரத்துவம், கிறிஸ்தவ ஜாதிகள் போன்ற அப்துல் மஜீத் அவர்களின் வரிகளுக்கு அடுத்த பதிவில் பதிலைக் காணலாம்.
Isa Koran Home Page Back - Debate Index page
1
 

StumbleUpon.com Read more...

உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

 

What Indeed Was the Sign of Jonah?

ஆசிரியர்: ஜான் கில்கிறைஸ்ட் (John Gilchrist)

"யோனாவின் அடையாளம்" கட்டுரையின் உப‌தலைப்புக்கள்


1. கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

2. "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றால் என்ன?

3. நினிவே மக்களுக்கு யோனா ஒரு அடையாளம் ஆவார்?

4. யோனாவின் அடையாளமே அன்றி வேறு அடையாளமில்லை

5. "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளுக்குள்ளே இதை"

6. யோனாவின் அடையாளத்தின் முக்கியத்துவம்

• இயேசுவின் உயிர்த்தெழுதல்

• யார் கல்லை புரட்டியது?

THE SIGN OF JONAH

யோனாவின் அடையாளம்

பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி, இஸ்ரவேல் நாட்டில் இயேசு தன் குறுகிய கால அந்த மூன்று வருட ஊழியத்தின் போது அனேக பலமுள்ள அற்புதங்கள் செய்தார். அந்த அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டு பல யூதர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள். இயேசுவின் அற்புதங்கள் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தாலும், யூத தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டனர், மற்றும் அவரிடம் அடையாளம் காட்டும் படி, அல்லது வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டும் படி கேட்டனர்(மத்தேயு 16:1). ஒரு முறை அவர்களுக்கு "ஒரே ஒரு அடையாளம் தருவேன்" என்று இயேசு பதில் அளித்தார்:

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40)

யோனா என்பவர் இஸ்ரவேலின் ஒரு பெரிய தீர்க்கதரிசியாவார். அசீரியாவின் நினிவே என்ற பட்டணத்தின் அழிவு நாளைப்பற்றி அந்நாட்டு மக்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்லவேண்டுமென்று தேவனால் அவர் அழைக்கப்பட்டார். ஆனால், நினிவே பட்டணத்திற்குப் போகாமல் தர்ஷீஷ் என்ற பட்டணத்திற்கு அவர் போக நினைத்தபோது, அவர் செல்லும் கப்பலை மிகப்பெரிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு தாக்கியபோது, அந்த கப்பலில் பிரயாணம் செய்த மக்களால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார் ம அப்போது அவரை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மீனின் வயிற்றிலிருந்து உயிரோடு தூக்கி எறியப்பட்டு அந்த நினிவே பட்டணத்திற்குள் சென்றார்.

அந்த மீனின் வயிற்றில் யோனா இருந்த மூன்று நாட்களைப் பற்றி "யோனாவின் அடையாளம்" என்று இயேசு குறிப்பிட்டார். மற்றும் இந்த ஒரே ஒரு அடையாளம் மட்டுமே, தன் மீது நம்பிக்கை வைக்காத யூதர்களுக்கு தான் கொடுக்கும் அடையாளம் என்று இயேசு கூறினார். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரத்தில் உள்ள "இஸ்லாமிய பிரச்சார மையம் (Islamic Propagation Centre)" என்ற இயக்கத்தைச் சார்ந்த அஹமத் தீதத்(Ahmed Deedat) என்பவர், 1976ம் வருடத்தில் "யோனாவின் அடையாளம் என்ன?(What was the Sign of Jonah?)" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவ‌ர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால், உண்மையில், தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும். முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான். அஹமத் தீதத் அவர்களின் இந்த இரண்டு யூகங்களை ஆராய்ந்து, இந்த தலைப்பைப் பற்றி அலசி, யோனாவின் அடையாளம் என்றால் உண்மையில் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

1. WAS JESUS ALIVE OR DEAD IN THE TOMB?

1. கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

பைபிளில் உள்ள யோனா புத்தகத்தின் கிறிஸ்த‌வ‌ விள‌க்க‌வுரைக‌ளின் ப‌டி, யோனா மீனின் வ‌யிற்றிலிருந்த‌ அந்த மூன்று நாட்கள் அற்புத‌வித‌மாக‌ உயிரோடு பாதுகாக்க‌ப்ப‌ட்டு இருந்தார் என்ப‌தை நாம் அறிகிறோம். அவ‌ர் மீனின் வ‌யிற்றில் இருக்கும் போது ஒரு நாழிகையும் ம‌ரிக்காம‌ல் இருந்தார், மற்றும் அந்த மீன் அவரை உயிரோடு கரையில் போட்டது.

அஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது "யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் (As Jonah was ... so shall the Son of man be)" என்று கூறுகிறார்.

If Jonah was alive for three days and three nights, then Jesus also ought to have been alive in the tomb as he himself had foretold!

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் உயிரோடு இருந்திருந்தால், இயேசு சொன்னது போல, தான் அப்படியே கல்லரையில் இருந்த நாட்களில் உயிரோடு இருந்திருக்கவேண்டும், (Deedat, What was the Sign of Jonah?, p.6).

இயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை. ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார், எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார். இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம். எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும். ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது(One cannot stretch this further, as Deedat does, to say that as Jonah was ALIVE in the fish, so Jesus would be alive in the tomb). அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை. இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

"As Moses lifted up the serpent in the wilderness, so must the Son of man be lifted up". (யோவான் 3:14-15)

மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது "உயர்த்தப்பட்டது - LIFTED UP" என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும். மோசே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும். சர்ப்பம் மோசேயினால் உயர்த்தப்பட்டது, யூதர்கள் ஆரோக்கியம் அடைவதற்காக, இயேசு உயர்த்தப்படவேண்டியது உலக நாடுகளின் ஆரோக்கியம், மற்றும் இரட்சிப்பிற்காக. இந்த நிகழ்ச்சியில், மோசே உருவாக்கிய வெண்கல சர்ப்பமானது உயிரோடு இருந்ததில்லை, மற்றும் தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic- வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும். அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல. அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது (அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார், அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன).

இவைகள் நமக்கு எதை காட்டுகின்றன? இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்ற விவரம் யோனாவோடும், "தூணில் உயர்த்தப்படுதல்" என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம். இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை (It does not matter whether Jonah was alive or not - this has nothing to do with the comparison Jesus was making).

யோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி "யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்" என்று கூறுகிறார். அதாவது யோனா மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும். ஆனால், தீதத் அவர்கள் வழிமுறையைப் பின்பற்றி நாம் மேற்கோள் காட்டிய மற்ற வசனங்களை ஆராய்ந்தால், தீதத் அவர்கள் சொன்னதற்கு முரண்பட்ட விவாரம் தான் கிடைக்கிறது. சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் "சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும் (As the serpent ... so shall the Son of man be)". இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.

ஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும். ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது (So we see that Deedat's first objection falls entirely to the ground. A contradictory conclusion automatically results from his line of reasoning and no objection or argument which negates itself can ever be considered with any degree of seriousness).

2. THREE DAYS AND THREE NIGHTS

2. மூன்று நாட்கள் இரவும் பகலும் என்றால் என்ன?

இயேசு வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அதை தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்றும் ஒரு சிலரை தவிர உலகமுழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயம் அங்கீகரிக்கிறது. இயேசு கல்லரையில் ஒரு நாள் மட்டும் தான் முழுவதுமாக‌ இருந்தார், அதாவது அந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் இருந்தார் என்று தீதத் அவர்கள் வாதம் புரிகின்றார் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவு என்று இரண்டு இரவுகள் மட்டும் தான் அவர் கல்லரையில் இருந்தார் என்றுச் சொல்கிறார். இப்படி சொல்வதின் மூலம், யோனாவின் அடையாளம் பற்றி இயேசு சொன்ன கால விவரத்தை மறுக்க முயன்றுள்ளார் தீதத் அவர்கள். தீதத் கூறுகிறார்:

Secondly, we also discover that he failed to fulfil the time factor as well. The greatest mathematician in Christendom will fail to obtain the desired result - three days and three nights.

"இரண்டாவதாக, இயேசு நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தையும் நிறைவேற்ற தவறிவிட்டார். கிறிஸ்தவ உலகின் சிறந்த கணித மேதாவி மூன்று நாட்கள் இரவும் பகலும் என்பதை கணக்கிட தவறிவிட்டார்." (Deedat, What was the Sign of Jonah?, p.10).

துரதிஷ்டவசமாக, தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார். தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும். அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார். அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.

யூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை(serious mistake) செய்துள்ளார்கள். அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள். நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின் படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப் படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும் (The expression three days and three nights is the sort of expression that we never, speaking English in the twentieth century, use today. We must obviously therefore seek its meaning according to its use as a Hebrew colloquialism in the first century and are very likely to err if we judge or interpret it according to the language structure or figures of speech in a very different language in a much later age).

நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் பேசும் போது, "இத்தனை நாட்கள் இரவும் பகலும்" என்ற வழக்கப்படி நாம் பேசுவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு ஒரு ஊருக்கு செல்வதாக இருந்தால், நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "ஃபோர்ட்நைட்(Fortnight) அல்லது இருவாரங்கள் அல்லது 14 நாட்கள்" என்றுச் சொல்வார். நான் இதுவரையில் ஆங்கிலத்தில் இவ்விதமாக சொல்பவரை, அதாவது "நான் பதினான்கு நாட்கள் இரவும் பதினான்கு நாட்கள் பகலும் ஊருக்குச் செல்கிறேன்" என்று சொல்பவரை நான் கண்டதே இல்லை(I have never yet met anyone speaking the English language say he will be away fourteen days and fourteen nights). அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் (Figure of Speech in the Hebrew). இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும் போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன‌ பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது. இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு/எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும் போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்(Furthermore we must also note that the figure of speech, as used in Hebrew, always had the same number of days and nights).

மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்(யாத் 24:18)

Moses fasted forty days and forty nights (Exodus 24.18).

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் மீனின் வயிற்றில் இருந்தார்(யோனா 1:17)

Jonah was in the whale three days and three nights (Jonah 1.17)

யோபுவின் நண்பர்கள் அவரோடு ஏழு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து இருந்தார்கள் (யோபு 2:13)

Job's friends sat with him seven days and seven nights (Job 2.13).


எந்த ஒரு யூதனானாலும் சரி,

"ஏழு பகல் மற்றும் ஆறு இரவுகள் - seven days and six nights" என்றோ அல்லது

"மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் - three days and two nights " என்றோ கூறமாட்டார்,

உண்மையிலேயே அவர் இந்த குறிப்பிட்ட காலத்தை குறிப்பிட நினைத்தாலும் கூட‌ இப்படி கூறமாட்டார். எபிரேய மொழியின் பேச்சு/எழுத்து வழக்கத்தின் படி(colloquialism) எப்போதும் இரவும் பகலும் ஒரே எண்ணிக்கையை உடையதாக இருக்கும். ஒரு யூதன் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் பற்றிக் கூறுவதாக இருந்தாலும், "மூன்று பகல் இரவுகள்" என்று தான் கூறுவார்.

இந்த விவரம் பற்றி மிகவும் தெளிவான உதாரணத்தை அல்லது விளக்கத்தை எஸ்தர் புத்தகத்தில் காணலாம். அதாவது "யாரும் மூன்று நாட்கள் இரவும் பகலும்" ஒன்றுமே புசிக்கவேண்டாம், உபவாசம் இருங்கள் என்று எஸ்தர் இராணி சொல்கிறார் (எஸ்தர் 4:16). ஆனால், மூன்றாம் நாளிலேயே, அதாவது இரண்டு இரவுகள் மட்டும் கழித்து, இராணி உபவாசத்தையும் முடித்துக்கொண்டு இராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்கிறாள்.

ஆக, யூதர்களின் வழக்கப்படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்(So we see quite plainly that "three days and three nights", in Jewish terminology, did not necessarily imply a full period of three actual days and three actual nights but was simply a colloquialism used to cover any part of the first and third days).

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், எப்போதும் சரி, இரவுகள் மற்றும் பகல்கள் பற்றிய எண்ணிக்கையைப் கூறும் போது இரண்டிற்கும் ஒரே எண்ணை குறிப்பிடுவார்கள், உண்மையில் பகல்களை விட இரவுகள் ஒன்று குறைவாக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட பேச்சு வழக்கத்தின் படி இன்று நாம் பேசுவதில்லை. மட்டுமல்ல, நம்முடைய தற்கால பேச்சு வழக்கத்தின் பொருள் தான் அக்காலத்தின் பேச்சுக்களுக்கு வரும் என்றுச் சொல்லி திணித்து கட்டாயப்படுத்த முடியாது.

இந்த விவரம் பற்றிய மிகவும் தெளிவான ஆதாரம் ஒன்று பைபிளில் உள்ளது. இயேசு யூதர்களுக்குச் சொல்லியிருந்தார், அதாவது மூன்று நாட்கள் இரவும் பகலும் நான் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பேன் என்று. ஆகையால், இயேசு சொன்ன இந்த விவரம் ஒரு வேளை தீர்க்கதரிசனமாக இரண்டு இரவுகள் முடிந்தவுடன் நிறைவேறி விடும் என்று எண்ணி, யூதர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட மறுநாளில் அதாவது ஒரே இரவு மட்டுமே ஆன பிறகு (சனிக்கிழமை), யூதர்கள் பிலாத்துவிடம் சென்று கீழ்கண்டவிதம் கூறினார்கள்:

Sir, we remember how that impostor said, while he was still alive, 'After three days I will rise again'. Therefore order the sepulchre to be made secure until the third day.

ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும என்றார்கள் (மத்தேயு 27:63-64).

"மூன்று நாளைக்குப் பின்" என்ற‌ சொற்றொடரானது "நான்காவ‌து நாளைக்" குறிக்கின்ற‌து என்று நாம் புரிந்துக் கொள்கிறோம். ஆனால், யூதர்களின் பேச்சு வழக்கின் படி(colloquialism), இது மூன்றாம் நாளைக் குறிக்கும் என்று யூதர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் யூத‌ர்க‌ள் மூன்று முழூ ப‌கல்கள் ம‌ற்றும் மூன்று முழூ இர‌வுக‌ள் க‌ல்லரையை பாதுகாக்க ஜாக்கிரதைப்படவில்லை, அதற்கு பதிலாக இரண்டாம் இரவு ஆனவுடன் மூன்றாம் நாள் வரை மட்டுமே காவல் காக்க பிரயாசப்பட்டனர். ஆக, யூதர்களின் பேச்சுவழக்கத்தின் படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்றுச் சொன்னால், மற்றும் "மூன்று நாளுக்குப்பின்" என்றுச் சொன்னால், நாம் நம் வழக்கத்தின் படி கருதுவது போல் அது மூன்று முழூ நாட்களின் மொத்த நேரத்தைக் குறிக்காமல், அதாவது 72 மணி நேரத்திற்கு பிறகு என்றுக் குறிக்காமல், அந்த மூன்றாவது நாளில் எந்த ஒரு பகுதியையும் குறிக்கும்(Clearly, therefore, the expressions "three days and three nights" and "after three days" did not mean a full period of seventy-two hours as we would understand them, but any period of time covering a period of up to three days.)

இந்நாட்களில் நம்மிடம் ஒருவர் வெள்ளிக்கிழமை மதிய சமயத்தில் வந்து "நான் உங்களை மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சந்திக்கிறேன்" என்றுச் சொல்வாரானால், அவர் நம்மை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமைக்கு முன்பு வந்து சந்திப்பார் என்று நாம் எதிர்பார்க்கமாட்டோம். அவர் செவ்வாய்க் கிழமைக்கு பிறகு தான் நம்மை சந்திக்கவருவார் என்று நான் எதிர்ப்பார்ப்போம். ஆனால், யூதர்கள் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவலைப்பட்டு, கல்லரையை மூன்றாம் நாள் வரை மட்டும் பாதுகாத்தால் மட்டும் போதும் என்பதால், அரசரிடம் சென்று ஞாயிறு வரைக்கும் காவல் வைக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும், அதாவது "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றாலோ அல்லது "மூன்று நாளுக்கு பின்பு" என்றுச் சொன்னாலோ, தங்கள் வழக்கத்தின் படி அந்நாட்களில் அது மூன்றாம் நாளை குறிக்குமே அல்லாமல், மூன்று முழு நாட்களுக்கு பின்பு நான்காம் நாளை குறிக்காது.

ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், நம்முடைய பேச்சு வழக்கில் இல்லாத ஒரு சொற்றொடரை படிக்கும் போது எப்படி அதன் பொருளை சரியாக புரிந்துக் கொள்வது? இதற்கு பதில் "யூதர்கள் எப்படி அக்காலத்தில் அவர்களின் பேச்சுவழக்கத்தின் படி படித்தார்கள்" என்பதை புரிந்துக்கொண்டால் தான் நமக்கு அச்சொற்றொடரின் அர்த்தம் சரியாகப் புரியும். இயேசுவின் சீடர்கள் மிகவும் தைரியமாக, "இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்றுச் சொன்னபோது, அதாவது ஞாயிறு அன்று வரை இரண்டு இரவுகள் மட்டுமே கடந்திருந்தாலும், சீடர்கள் இப்படி தைரியமாகச் சொன்னபோது(அப் 10:40), எந்த ஒரு யூதனும் சீடர்களிடம் வந்து தீதத் அவர்கள் இப்போது சொல்வது போல, மூன்று இரவுகள் கடக்காமல் இரண்டு இரவுகள் தானே ஆனது அப்படியானால் எப்படி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று கேள்வி கேட்கவில்லை. இந்த பிரச்சனை அக்கால யூதர்களுக்கு இருந்ததில்லை, ஏனென்றால், அவர்களின் பேச்சு வழக்கம் அவர்களுக்கு மிகவும் நன்றாகவே புரிந்து இருந்தது. ஆனால், தீதத் அவர்களுக்கு யூதர்களின் பேச்சு வழக்கம் தெரியாத காரணத்தால் தான், இயேசுவின் தீர்க்கதரிசனத்தை தாக்கி எழுதுகிறார், அதாவது, இயேசு மூன்று முழு பகல்கள், மூன்று முழு இரவுகள், கல்லரையில் இல்லை, அவர் 72 மணி நேரம் கல்லரையில் இல்லை, ஆகையால் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை என்று அறியாமையினால் இப்படிச் சொல்கிறார். (ஆக, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இரவும் பகலும் இருந்ததும், 72 மணி நேரம் கொண்ட மூன்று முழு இரவும் பகலும் அல்ல, மூன்றாவது நாளிலேயே அவர் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டிருப்பார்).

இதுவரை நாம் கண்ட விவரங்களைக் கொண்டு, இயேசு யூதர்களுக்கு காட்டுவேன் என்றுச் சொன்ன அடையாளத்திற்கு எதிராக அஹமத் தீதத் அவர்களின் பலவீன வாதத்தில் உள்ள குறைபாடை நாம் வெளிக் கொணர்ந்துள்ளோம். அடுத்ததாக, யோனாவின் அடையாளம் என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாக நாம் ஆராய்வோம்.

பாகம் 1 முற்றிற்று

Source: http://www.answering-islam.org/Gilchrist/jonah.html

StumbleUpon.com Read more...

Breaking tamil News:உடனடி செய்திகள்

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழர்களின் படுகொலையை கண்டித்து சீர்காழி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தீக்குளிப்பு!

 
 
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீர்காழி வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர்  ரவிச்சந்திரன் (45 வயது) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதுபற்றி தெரியவருவதாவது:-
சீர்காழி மணல்மேடு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தன் வீட்டிற்கு வெளியே வந்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் இட்டபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 65 சதவீதம் தீக்காயங்களுடன் கருகி விட்டது.

தீக்குளித்த ரவிச்சந்திரனின்  உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனிக்கு கொண்டு சென்றனர். அப்போது, ஈழத்தில் தினந்தோறும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காகவும் அவர்களுக்கு எதுவும் உதவாத தன் கட்சியை கண்டித்தும் இந்த தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லியிருக்கிறார் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் மகளிர் காங்கிரஸ் பிரிவு உறுப்பினர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஒருவர் தீக்குளித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பில் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான படையினர் பலி;பெருமளவில் ஆயுத தளபாடங்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

 
 
 
பெப்ரவரி 1ம் திகதி விடுதலைப்புலிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான  கனரக  ஆயுதங்கள் அடங்கிய  படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா சிறப்பு படைப்பிரிவினர் மன்னாகண்டல் மற்றும் கேப்பாபுலவு ஆகிய பகுதிகளில் முகாமிலிருந்து புதுக்குடியிருப்பை பகுதியை கைப்பற்றும் நோக்கில் இறுதித் தாக்குதலுக்கு தயாராகி இருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணிகள் இராணுவத்தின் பின்வளங்களை ஊடறுத்து பாரிய முற்றுகைத் தாக்குதலை கடந்த முதலாம் திகதி மேற்கொண்டனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாகண்டல் பகுதிகளில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன.
இதனை அறிந்த விடுதலைப்புலிகள் அதிகாலை வேளையில் முகாமின் பின்தளப்பகுதி ஊடாக ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் 3 ம் திகதிவரை தொடர்ந்தது.
இதன்போது படையினர் எதிர்பார்க்காமல் இருந்த நிலையில் நடத்தப்பட்ட திடீர்த்தாக்குதலினால் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பலியாகினர்.  பல கனரக படையப்பொருட்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் 20  வழங்கல் ஊர்திகள், தமிழீழ  விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டன.

அத்துடன் 3ம் திகதி  கரும்புலி வீரர்களின் தாக்குதலினால் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல
120 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல
120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 2000
81 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 8000
ஏ.கே துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல
ஆர்.பி.ஜி புரொப்ளர்கள் - பல
எல்.எம்.ஜி துப்பாக்கிகள் - பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் புதன்கிழமை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதில் கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவருடனான படங்களும் பிரசுரமாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

Tiger female commandos in final preparation before the preemptive strike [Photo: LTTE]

An LTTE commando with mortar [Photo: LTTE]

An LTTE commander of the female fighters [Photo: LTTE]

LTTE female commandos before launching the attack [Photo: LTTE]

Tiger fighters in a tank heading towards a frontier.

 

 
 

StumbleUpon.com Read more...

இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு தெரிவிப்பு - விமல் வீரவன்ச

 
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கையில்

இறந்த உடலங்களைக் கொண்டு செல்லும் 35,000 பைகள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதனால் சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது விடுதலை புலிகளுக்கு சார்பாக செயற்பட்டுவருவதாகவும் குற்றம் சாட்டி இவரை சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சர்வதேச செஞ்லுவைச் சங்கத்தின் சார்பில் பேசவல்ல ஜெனிவா அதிகாரியான சைமன் சார்னோ தெரிவி்க்கையில் சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட தொகை மிகப்படுத்தியுள்ளதாகவும் நாம் வழமை போன்று இறந்த சடலங்களை கொண்டுவருவதற்கு 2000 பைகள் வாங்கவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரணமான தொகை இராணுவத்திலும் விடுதலை புலிகளிலும் உயிரிழந்தவர்களின் சடலங்களை பரிமாறிக் கொள்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு பம்பலப்பிட்டி லெயார்ட்ஸ் வீதியிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கிளை மீது சிங்களக் காடயர்களினால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

 
இராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து மவனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.


ஆனால் ராஜபக்ஷே ஆர்ப்பட்டமாய் முழங்குகிறார், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா சொல்லவில்லை என்று ! அரசாங்ககளுக்கிடையில் இப்படி புரிந்துணர்வு வெளிப்படையாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மீண்டும் ஈழம் குறித்த கவலை - முன்பு போல இல்லையென்றாலும் - எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதம், வைகோவின் ஆர்ப்பாட்டம், திரையுலகின் ராமேஸ்வரத்து கூட்டம், தி.மு.கவின் மனித சங்கிலி, அப்புறம் கருணாநிதியின் ராஜினாமா மிரட்டல்….தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஈழத்தின் அலறல் தமிழகத்தை இலேசாக உலுப்பியிருப்பது உண்மைதான்.

எழும்பியிருக்கும் இந்த உணர்வு உண்மையிலேயே ஈழத்தின் அவலத்தை துடைக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும், தமிழின ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் 'இந்தியா தலையிடவேண்டும், போரை நிறுத்த வேண்டும்' என்பதே! ஈழத்துப் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமை வகிப்பது போலவும் இக்கோரிக்கையை வற்புறுத்தினால் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலளிக்கலாம் என்பதும்தான் இந்த கோரிக்கையின் உட்கிடை.

இந்தியா அல்லது இந்திய அரசு என்பது என்ன? இது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் அல்லது முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தின் நலனைத்தான் இந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் கோரும் நலன்தான் இந்தியாவின் அயுலறவுக் கொள்கைகளை வழிநடத்தும். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பதோ, ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதோ, அணு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாகத் நெளிவதோ இப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் ஆசியுடன் தெற்காசியாவின் பிராந்திய வல்லராசகத் திகழவேண்டும், அதை ஒரு பொருளாதார வர்த்தக வலையமாக மாற்றி சந்தையை இந்திய தரகு முதலாளிகளுக்கு திறந்துவிடவேண்டுமெ என்பதுதான் இந்தியாவின் இலக்கு. இந்த நோக்குதான் இந்திய இலங்கை உறவை வழிநடத்துகிறதேயன்றி அடிபட்டுச் சாகும் ஈழத் தமிழ் மக்களின் அவலமல்ல. ஒரு ஐம்பதாண்டு இந்திய இலங்கை உறவின் வரலாற்றைப் பார்க்கும்போது இந்த ராஜாங்க ரகசியம் புலப்படும்.

60களில் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தப்படி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களை உழைத்தும் உயிரைக்கொடுத்தும் உருவாக்கிய தொழிலாளிகள் ஒரிரவில் அனாதைகளாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கு விரட்டப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்மக்களின் நலனுக்கு ஆதரவாக இந்தியா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? பாகிஸ்தான், சீனப்போர்களைத் தொடர்ந்து அன்று இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவு தேவைப்பட்டதால் இந்த அநீதியான கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்தியாவின் நலனுக்காக தமிழனின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இதுதான் மலையக இந்தியத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட கதை!

70களில் இலங்கையில் இப்போது சிங்கள இனவெறிக் கட்சியாக சீரழிந்துபோன ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி கட்சி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்தியபோது அதை அடக்குவதற்கு இந்தியா படையும், ஆயுத உதவியும் செய்தது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது "இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்யமாட்டோம்" என்று காங்கிரசு கட்சி அறிவிக்கிறதே அப்போது மட்டும் இந்தத் தலையிடாமைக் கொள்கை எங்கே போயிற்று? இலங்கையை தொடர்ந்து தனது செல்வாக்கில் வைத்திருக்கவே இந்திய அரசு இந்த உதவியைச் செய்தது.

அதன் பிறகு பாகிஸ்தானைத் துண்டாடி வங்கதேசத்தை உருவாக்க இந்திய இராணுவம் தலையிட்டது. அன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசைச் சரிக்கட்டிக் கொள்வதற்காக கச்சத்தீவு இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். பெரிய தீவை தனது செல்வாக்கில் வைக்க சிறிய தீவு தாரைவார்க்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவருகே மீன் பிடிக்கும் தமிழகத்து மீனவர்கள் காக்கை குருவி போல இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுதானே அச்சாரம்?

83 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு ஈழத்தில் போராளிக் குழுக்கள் தலையெடுத்த போது அந்தக் குழுக்களுக்கு இராணுவப்பயிற்சி அளித்து, ஆயுத உதவியும் செய்து ஆதரித்தது இந்திரா அரசாங்கம். இதையும் 'ஈழ விடுதலைக்கு இந்தியா செய்த உதவி' என்று இன்றைக்கும் உளறுபவர்கள் இருக்கின்றனர். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஈழம் விடுதலை அடைந்திருக்கும் என்று பேசித்திரியும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.

கச்சத்தீவைக் கொடுத்ததும், மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்ததும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைகள். 83 இல் போராளிகளை ஸ்பான்சர் செய்தது மிரட்டல்!

இரண்டு எதிரெதிதர் நிலைகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான். அன்று ரசிய ஆதரவு முகாமில் இந்தியா இருந்ததும், இலங்கை அமெரிக்க ஆதரவு முகாமிலும் இருந்தது. உலகு தழுவிய பனிப்போர் சூழலில்தான் இந்த 'ஸ்பான்சர்ஷிப் முடிவு' எடுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையை மிரட்டி தனது செல்வாக்கில் வைத்திருக்கும் பொருட்டே இந்திரா காந்தி போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தார். நிச்சயமாக இது ஈழத்தமிழரின் விடுதலைக்காக செய்யப்பட்டதில்லை. மேலும் இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றமுடியாத வடுவாய் பதிந்திருக்கும் பல சீரழிவுகளுக்கும் இந்திராவின் இந்த ஸ்பான்சர் புரட்சி வழி ஏற்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் விடுதலையை சாதிக்கலாம் என்ற பிரமையை ஈழத்தின் இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த இந்திய உளவுத் துறை, அதன் பொருட்டு பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் கடத்துவது, சக குழுக்களை அழிப்பது போன்ற சதிகளையும் சொல்லிக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் தமது இருப்பை மட்டும் உறுதி செய்வதற்கு மற்ற குழுக்களை ஈவிரக்கமின்றி துடைத்தழித்தனர். இப்படியாக தனது தெற்காசிய மேலாதிக்க நோக்கத்துக்காக இந்திய ஆளும் வர்க்கம் நடத்திய சூதாட்டத்தில், ஈழத்தின் எதிர்காலம் பகடைக்காய் ஆக்கப்பட்டது.

ஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும். அன்றைக்கு ஈழத்தின் போராளிக்குழுக்களை இந்திய உளவுத் துறைகள்தான் வழிநடத்தின என்பதிலிருந்து அந்தக்குழுக்களின் அரசியல் தரத்தை புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாக சொந்தநாட்டின் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் தேவையை, நிர்ப்பந்தத்தை இந்த குறுக்கு வழி ரத்து செய்து விட்டது.

இப்படி இந்தியாவால் மிரட்டப்பட்ட இலங்கை, அன்று ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவும் தொலைநோக்கில் இந்தியாவை ஈழ விடுதலைக்கு எதிராக நிறுத்துவதற்கு உதவும் என்று ஜெயவர்த்தனே-பிரேமதாசா கும்பல் புரிந்து கொண்டது. இந்திராவின் மரணத்திற்கு பிறகு இந்தி சினிமா ஹீரோவைப் போல வந்திறங்கிய ராஜீவ், ஈழத்தமிழர்கள் சார்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டார். அதை வைத்து இலங்கையை நிரந்தரமாக இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ளலாம் எனவும் இந்திய ஆளும் வர்க்கம் கணக்குப் போட்டது. இதே ஒப்பந்தத்தை வைத்து ஈழவிடுதலைக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் வழியை யோசித்தார் ஜெயவர்த்தனே.


திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் - ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. அதை அமல் படுத்தும் சாக்கில் தெற்காசிய நாட்டாமையின் இராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதோடு ஆதரித்து ஈழமக்களுக்கு துரோகமிழைத்தன. ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இந்தியாவின் தலையில் கட்டியதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை திருப்புவதில் வெற்றிபெற்றது இலங்கை அரசு.

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போர் துவங்கியது. சில நாட்களில் புலிகளை முடித்துவிடலாம் என்று அதிகரா வர்க்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய ராணுவம் 1500 வீரர்களைப் பலி கொடுத்தது. போரில் வெல்ல முடியாத ஆத்திரத்தை அப்பாவி தமிழ் மக்களை கொல்வதிலும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதிலும் தீர்த்துக் கொண்டது. இறுதியில் மூக்கறுபட்ட இந்திய ராணுவம் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா திரும்பியது. அதன் பின் ராஜிவ் கொலை செய்யப்பட்டார். இதை வைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்து தமிழ் நாட்டில் ஈழம் என்று சொன்னாலே கைது செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டது.

ராஜிவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிரான நிலைக்குச் சென்று விட்டதாகப் பலரும் பேசுகின்றனர். இது கடைந்தெடுத்த பொய்யாகும். சோ, சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கூட்டமும் ஊடகங்களும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ராஜீவின் மரணத்தை மிகப்பெரிய தேசிய அவமானமாக சித்தரித்துக் குமுறுகிறார்கள்.இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். அதுவும் கூட கொலை முயற்சிதான். இதற்காக இந்தியா இலங்கை மீது படையெடுத்ததா என்ன? அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா? இரண்டுமில்லை. அந்த சிப்பாய் தண்டனைக்காலம் முடிந்து தற்போது வெளியே வந்துவிட்டான். ராஜீவ் கொலை செய்யப்படாவிட்டாலும் புலிகள் விசயத்தில் இந்தியா இதே நிலையைத்தான் எடுத்திருக்கும்.

"தமிழர்கள் படற துன்பத்தைப் பார்த்து, ஏதோ நல்லது பண்லாம்னு எங்க ராஜீவ் காந்தி முயற்சி பண்ணாரு. அவரையே கொன்னுட்டீங்க, இனிமே நீங்க எக்கேடு கெட்டுப் போங்கப்பா. உங்க சங்காத்தமே வேணாம்" என்று இந்தியா மனம் வெறுத்து ஒதுங்கி விட்டதைப் போல காங்கிரஸ்காரர்கள் பேசுவதைக் கேட்கையில் ரத்தம் கொதிக்கிறது. "ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை மனசுல வச்சுக்காதீங்க, நீங்க தலையிட்டு பாத்து செஞ்சாதான் உண்டு" என்ற பாணியில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இந்திய அரசிடம் மன்றாடுவதைப் பார்க்கும் போதோ குமட்டுகிறது.

அப்படியெல்லாம் 'மனம் நொந்து' இந்தியா எந்தக் காலத்திலும் ஒதுங்கி விடவில்லை. எனவேதான் அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதையும், ஆயுதங்கள் தருவதையும் இந்தியா தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு அது அவசியம்.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்குமா? தனது மேலாதிக்க நலனுக்காக தமிழக மீனவர்களை ஆண்டு தோறும் இலங்கைக் கடற்படைக்கு காவு கொடுத்து வரும் அரசு, ஈழத்தமிழனின் உயிரைக் காப்பாற்றுமா?

புலிகள் ஈழம் கேட்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கமோ தெற்காசியாவைக் கேட்கிறது. இதில் எந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் மன்மோகன் சிங்? சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அவர் பேசியதைப் படித்துப் பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் அனைத்தையும் சேர்த்து தெற்காசிய சுதந்திரப் பொருளாதார மண்டலமாக்கி, எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே நாணயத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மன்மோகன் பேச்சின் மையப்பொருள்.

உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகப் பணக்கொழுப்பு பெருகி 'சந்தை … சந்தை' என்று தினவெடுத்துத் திரியும் அம்பானிக்கும், டாடாவுக்கும், மித்தலுக்கும் தெற்காசியாவை வாங்கித் தருவதற்கு இந்திய அரசு வேலை செய்யுமா, தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்கு வேலை செய்யுமா?

"வங்காளிகளுக்கு பங்களாதேஷ் வாங்கிக் கொடுக்கவில்லையா?" என்கிறார் கருணாநிதி. "அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே?" என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது. அன்றும் வங்காளிகளுக்கு தனி நாடு பெற்றுத்தருவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. பாகிஸ்தானை உடைப்பதுதான் அன்று இந்தியாவின் நோக்கம். நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பொசிந்தது - வங்காள தேசம் பிறந்தது. புல்லுக்கு நீர் இரைப்பது இந்தியாவின் நோக்கமாக அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை."இலங்கைக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் கொடுக்கிறார்கள். அதைத் தடுத்து இலங்கையை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரவேண்டுமானால், நாம் ஆயுதம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்பதுதான் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்வைக்கும் வாதம். "அப்படி நீங்கள் கொடுத்தாலும் எசமானே, சிங்களவன் உங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டான். தமிழன்தான் விசுவாசமாக இருப்பான். பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையில் இறங்கிவிட்டால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காகவாவது தமிழ் ஈழத்தை ஆதரியுங்கள்" என்பது இங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் எதிர்வாதம். இது எதிர்வாதமல்ல, அதே வாதம்தான் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. சிங்கள அடிமைத்தனத்துக்கு மாற்றாக இந்திய அடிமைத்தனத்தை சிபாரிசு செய்யும் இந்தக் கோரிக்கை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது என்பது உரைக்கவுமில்லை.

"இதெல்லாம் ஒரு தந்திரம். நாங்கள் இந்திய அரசிடம் ஏமாந்து விடுவோமா என்ன" என்று இந்தப் புத்திசாலிகள் நம்முடைய காதில் கிசுகிசுக்கிறார்கள். இதே வசனத்தைத் தான் இந்திய உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகள் 1983 இல் பேசினார்கள். கேட்டோம். தந்திரத்தில் வென்றது யார் என்பதையும் அனுபவத்தில் கண்டு விட்டோம். மறுபடியும் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் அதே தந்திரம்!

நம்முடைய தமிழ் உணர்வாளர்களுக்குக் கம்யூனிசத்தைக் கட்டோடு பிடிக்காது என்பது தெரிந்த கதை. இருந்தாலும் தொடர்ந்து வங்காளதேசத்தை உதாரணம் காட்டும் அவர்கள் ஒரு மாற்றத்துக்கு நேபாளத்தைப் பார்க்கலாமே! 'நேபாளத்தில் மன்னராட்சி தொடரவேண்டும்' என்பதற்காக இந்தியா செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. நேபாளத்துக்கு ஆயுத சப்ளை இந்தியாவும், அமெரிக்காவும்தான். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஆன உதவிகளையெல்லாம் இந்தியா செய்தது. பிறகு 'மாவோயிஸ்டுகளுடன் சேராதீர்கள்' என்று ஏழு கட்சிக் கூட்டணியை மிரட்டியது, தாஜா செய்தது. கூட்டணி அமைந்த பிறகு அதனை உடைக்க கொய்ராலாவைத் தூண்டி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்திலும், முன்னாள் காஷ்மீர் மன்னர் கரண்சிங்கை அனுப்பி, மன்னராட்சியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. பிறகு தேர்தலில் மாவோயிஸ்டுகளைத் தோற்கடிக்க தெராய் பகுதியில் தனிநாடு கோரிக்கையைத் தூண்டி விட்டு அவர்ளுக்கு ஆயுதமும் கொடுத்தது.

ஜனநாயகத்துக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கூறிய விளக்கம் என்ன? "நாம் மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், நேபாள மன்னர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவார்". இந்த விளக்கத்தின் சொற்களை மட்டும் மாற்றிப் பாருங்கள். "நாம் சிங்கள அரசை ஆதரிக்காவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்".

இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிக்கும் மேலாதிக்கக் கண்ணோட்டம் இப்படித்தான் தனது விளக்கத்தைக் கூறி வந்திருக்கிறது. இந்த விளக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமானால், உடம்பில் ஜனநாயக ரத்தம் ஓட வேண்டும். வெறும் தமிழ் ரத்தம் மட்டும் ஓடும் தமிழர்களால் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது.

"எங்களை ஆதரியுங்கள். மன்னரைக் காட்டிலும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்கிறோம்" என்று நேபாள மாவோயிஸ்டுகள் தமது நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிடம் இறைஞ்சவில்லை. புலிகளைப் போல நவீன ஆயுதங்கள், விமானப்படை, புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி, வானொலி, வானொளி .. எதுவும் அவர்களிடம் இல்லை.ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த 'வீரமும்' அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை, இத்தகைய ராஜ 'தந்திரங்கள்' தெரியாத காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்களோ!

தந்திரங்களால் எந்த நாடும் விடுதலை அடைய முடியாது. அப்படி அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டாலும் அது விடுதலையாக இருக்காது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.

wassatகுறிப்பு:

'இலங்கையில் இந்தியாவின் நலன்கள்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை. இலங்கையில் டாடாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு, டி.வி.எஸ், மகிந்திரா, பஜாஜ் வாகனங்களின் சந்தை எவ்வளவு, எண்ணெய்க் குதங்கள் எத்தனை, இன்னும் தனியார் துறை-பொதுத்துறை நலன்கள் என்னென்ன என்ற விவரங்களை ஈழத்தமிழ் வாசகர்கள் அறியத் தந்தால் இந்தியத் தமிழர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க உதவியாக இருக்கும்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆற்றிய அமைதிப் பணிகள், இந்திய உளவுத் துறையால் சீர்குலைக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் கதைகள் ஆகியவற்றையும் நினைவு படுத்தினால், பாரத மாதா பக்தர்கள் கொஞ்சம் புத்தி தெளியக்கூடும்.

"நேபாள மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவைத் தொழில் தொடங்க அழைக்கவில்லையா?"

என்பன போன்ற கேள்விகளுடன் எதிர்வாதத்துக்கு சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும். முதலில் கூரையேறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம். 'வானமேறி வைகுந்தம் போகும் வழி' பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.(நன்றி:vinavu.wordpress)

 

 

StumbleUpon.com Read more...

தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்லுகிறார்கள் கண்ணொளியில் நீங்களே பாருங்கள்http://www.nakkheeran.in/users/frmMoreWebTV.aspx

StumbleUpon.com Read more...

சிறிலங்கா படையினரின் உறவினர்கள் கொழும்பில் முற்றுகை: கடந்த சில நாட்களில் மட்டும் வன்னியில் 800 படையினர் பலி; 700 பேர் காயம்

 
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் இதுவரை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான படையினரின் உடலங்கள் எதுவும் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை எனவும் இதனால் சந்தேகம் கொண்ட மனைவிமாரும் பெற்றோரும் கொழும்பு இராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விபரங்களை தருமாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்து அனுராதபுரம், பொலநறுவ மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு இராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் படையினரை பார்வையிட அனுமதிக்குமாறும் பெற்றோரும் மனைவிமாரும் படைத் தளபதிகளிடம் மன்றாட்டமாக கேட்பதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800-க்கும் அதிமான படையினர் உயிரிழந்தும் 700-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என்பதை கொழும்பில் உள்ள உயர் இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்னியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட சாதாரண படையினரின் மாதாந்த சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே உறவினர்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, கொல்லப்பட்ட உயர் பதவியில் உள்ள படையினரின் சம்பளங்கள் மாத்திரமே அரசாங்கத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

 

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் யுத்த மூலோபாயம்

 

uj155nbnk4gepn552dwgubje_dm_20090123_06விடுதலைப் புலிகள் இனி வலிந்து தாக்குதல்கள் செய்வதென்பது பகற்கனவு என்பது சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றாகும். அவரின் மதிப்பீட்டின்படி விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் தோற்கடிப்பதற்கு இன்னமும் சிறிது காலமே போதுமானதொன்றாகும்.

 

சரத் பொன்சேகாவின் இத்தகைய மதிப்பீட்டிற்கு இதுவரையிலான யுத்தத்தில் - அதாவது படையெடுப்பின் மூலம் 15,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டதான அவரது மதிப்பீடு காரணமாக இருக்கலாம். அத்தோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் வெகுவாகச் சுருங்கி விட்டதும் காரணமாக இருக்கலாம்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் அளவு குறித்து அரச தரப்பிலிருந்தே குழப்பமான தகவல்கள் உள்ளன. 50 சதுரக் கிலோ மீற்றரிலிருந்து 500 சதுரக் கிலோ மீற்றர் வரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படும் புள்ளி விரங்கள் கூறுகின்றன. ஆகையினால், இப் பரப்புரை குறித்த மதிப்பீடு மாற்றம் கொண்டதாக இருப்பினும் அது குறிப்பிடத்தக்களவு - ஏன் வெகுவாகக் குறைந்து போய்விட்டது என்பது நிராகரிக்கப்பட முடியாததொன்றே ஆகும்.

இதனால் கொல்லப்பட்டதாக இராணுவம் மதிப்பீடு செய்யும் புலிகளின் எண்ணிக்கை சுருங்கி விட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பன புலிகள் இனி ஒரு வலிந்து தாக்குதலைச் செய்யமுடியாத நிலைக்கு அவர்களைத் தள்ளியள்ளது என்பது அவர்களின் மதிப்பீடு. அத்தோடு, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சிறிதுதூர இடைவெளியே உள்ளது என்ற இராணுவத் தலைமையின் பிரச்சாரம் இராணுவத்தினரை முன்னோக்கித்தள்ளவும், யுத்த ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தப் போதுமானதாகவுள்ளது.

இதே சமயம் தொடர்ச்சியான தாக்குதல்களை அதாவது இடைவிடாது நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலுக்குத் தயாராவதையோ, அதற்குரிய வளங்களைச் திரட்டுவதிலோ நெருக்கடியைத் தோற்றுவிக்கலாமென இராணுவத்தலைமை நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆகையினால், எத்தகைய இழப்பின் மத்தியிலும் நடவடிக்கை தொடர்வதில் அது தீவிரம் கொண்டதாகவே உள்ளது. இத்தகையதொரு நிலை வெளிப்பார்வையிலும் சரியானது போன்றே உள்ளது. அதாவது விடுதலைப் புலிகள் வலிந்து தாக்குதல்கள் செய்வதாயின் இதுவரை ஏன் செய்யவில்லை? விடுதலைப் புலிகளுக்குத் தாக்குதல் தயாரிப்பிற்கான வாய்ப்புக்கள் தற்பொழுது உள்ளதா? என்றகேள்வி எழுப்புபவர்கள் இன்று அதிகமாகவே உள்ளனர்.

ஒரு வகையில் பார்க்கப்போனால், விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் ஒரு தரப்பினர் கூடப் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியும் உள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதற்கான காலம் கடந்ததொன்றாகிவிட்டது. இனி வலிந்து தாக்குதல் சாத்தியமாகப் போவதில்லை எனக் கருதத் தலைப்பட்டுள்ளனர். இந்தவகையில் பார்க்கப்போனால், சிறீலங்கா இராணுவத்தரப்பு வெற்றி உறுதி என்று கருதுகின்றனர். அதாவது இனிப் புலிகள் மாற்றங்களை உருவாக்கத்தக்க தாக்குதல்களைச் செய்யும் வலுவை இழந்துவிட்டதாகவே கருதுகின்றனர்.

uj155nbnk4gepn552dwgubje_dm_20090123_061இதேவேளை வழமைபோலவே இராணுவ நடவடிக்கைகள் குறித்தோ, புலிகளின் எதிர்கால நடவடிக்கை குறித்தோ புலிகள் தரப்பில் இருந்து கருத்துக்கள் எவையும் முன்வைக்கப் படுவதாக இல்லை. ஆனால், சிறிலங்கா இராணுவம் விடுதலைப் புலிகள் பலம் குன்றிவிட்டதாகவும் இன்னமும் 1000 புலிகள் மடடுமே உள்ளனர் என்பதான மதிப்பீடுகளும் களமுனையில் இருந்துவரும் தகவல்களுக்குமிடையில் ஒப்புவமை இருப்பதாக இல்லை.
அதாவது பிரதேசம் சுருங்கிவிட்டது என்பது உண்மையே. ஆயினும், விடுதலைப் புலிகளின் ஆளணி வளம், ஆயுத வளம் பற்றிய கேள்விகளைக் களமுனைத் தகவல்கள் எழவைப்பவையாகவுள்ளன. சிறீலங்கா இராணுவம் இன்று தனது உயர்வலுவைப் பயன்படுத்திவருகின்றது என்பது அனைவருக்கும் தெரியாததொன்றல்ல. இதனைச் சிறீலங்காப் படைத்தரப்பே ஊர்ஜிதம் செய்வதாகவும் உள்ளது. ஆகையினால் களமுனையில் சிறீலங்காவின் கைவெகுவாக ஓங்கியிருத்தல் வேண்டும். ஏனெனில் 15,000 புலிகளைக் கொன்றுவிட்ட நிலையில், 1000 புலிகளால் எவ்வாறு சிறீலங்காவின் உயர்வலுக்கொண்ட படையணிகளை எதிர்கொள்ளமுடியும்?

ஆனால், களத்தில் இராணுவத்தரப்புக் கூறுவதுபோல் - அதுவும் கடந்த ஒரு வாரத்தில் கமுனையில் பெரும் மேலாண்மையை வெளிப்படுத்தியுள்ளதாக இல்லை. சில முன்னேற்றங்கள் எப்படியிருப்பினும் அது பெரும் இழப்பின்றி எட்டப்பட்டதாகவும் இல்லை. மாறாகக் கடந்தவாரத்தில், சிறீலங்கா இராணுவம் குறிப்பிடத்தக்கதான ஆளணியை இழந்துள்ளதோடு - சொல்லத்தக்கதான முன்னேற்றம் எதையும் அடைந்ததாக இல்லை. இத்தகையதொரு நிலையை 1000 போரை மட்டும் கொண்ட ஒரு மரபுவழிப் படையணியால் உருவாக்கமுடியுமா?
இது ஒருபுறம் இருக்க, கடந்தவாரம் களமுனையில் விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து குறிப்பிடும்படியான இரண்டு விடயங்களை எவராலும் அவதானிக்கத்தக்கதானதாகவுள்ளது. இதில் ஒன்று விடுதலைப் புலிகள் கணிசமான அளவில் ஆட்லறிப் பீரங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றமையானது. இதன்மூலம், விளங்கிக்கொள்ளப்படத்தக்கதான விடயமாகவுள்ளதொன்று புலிகளிடம் ஆட்லறி எறிகணைகள் கணிசமான அளவில் இருப்பில் இருக்கிறது என்பதாகும். அதாவது, சிறீலங்காப் படைத்தரப்பு, கூறிக்கொள்வது போன்று புலிகளின் விநியோகமார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுவிடவில்லை என்பது.
அடுத்ததாக, விடுதலைப் புலிகள் சில கனரக ஆயுதங்களைக் களத்தில் அறிமுகம் செய்துள்ளதோடு அதுகுறித்த தகவலையும் வெளியிட்டுள்ளமையாகும்.

அதாவது விடுதலைப் புலிகள் கனரக ஆயுதம் பொருத்தப்பட்ட டாங்கி தாக்குதலில் பயன்பட்டமையாகும். இவை இரண்டும் விடுதலைப் புலிகள் மரபுவழிப்படையணியாக செயற்படுவதில் முன்னேற்றம் கண்டுள்ளதன் வெளிப்பாடே ஆகும். ஆகையினால், விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளதேயொழிய அது பலவீனமடைந்துவிடவில்லை என்பதாகும். இவற்றின் அடிப்படையிலேயே, விடுதலைப் புலிகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை விளைவிக்கத்தக்கதான வலிந்து தாக்குதல்களைச் செய்யும் வலுக்கொண்டவர்களாக உள்ளனரே அன்றி - அத்தகைய தாக்குதல் செய்யும் சக்தியை இழந்துவிட்டனரா? என்பதை மதிப்பீடு செய்யமுடியும்.

சிறீலங்கா இராணுவத்தின் தொடர்ச்சியான படை நடவடிக்கைகாரணமாக, விடுதலைப் புலிகள் பெருமளவு நிலப்பரப்பை இழந்துள்ளமைஉண்மையே. இதில் சில கேந்திர முக்கியத்துவமானவை என்பதும் சில அரசியல் முக்கியத்துவம் கொண்டவை என்பதும் நிராகரிப்பதற்கு இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தாக்குதல் செய்யும் வலிமை இழந்துவிட்டனர் என்றோ, ஆளணியில் சந்தித்த இழப்பினால் மீளமுடியாத நிலையில் உள்ளனர் என்றோ மதிப்பீடு செய்தல் தவறானதாகும். அவ்வாறு மதிப்பீடு செய்வதனால், தற்பொழுது களமுனையில் புலிகள் போரிட்டுக்கொண்டிருக்க முடியாது. இத்தகையதொரு நிலையில் - அதாவது புலிகள் பலமிழக்காத நிலையில் இருப்பதாகக் கொள்ளப்படின் ஏன் இன்னமும் வலிந்து தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்கப்படமுடியாததாகிறது.

இதற்குப் பதில் தேடுவது சுலபமான காரியமாகவே இருக்கும். ஏனெனில், இது குறித்த பதிலுக்கு விடுதலைப் புலிகளின் யுத்த மூலோபாயம் குறித்துச் சரியான தகவல் பெறப்பட்டிருத்தல் அவசியமாகும். அதாவது நிலங்களைப் பிடித்தல் எமது நோக்கமல்ல, புலிகளை அழித்தலே நோக்கமென்ற இராணுவத்தின் மூலோபாயத்திற்கு மாற்றீடான புலிகளின் மூலோபாயம் என்ன? என்பது குறித்த தேடுதல் அவசியமாகும். ஆகையினால், விடுதலைப் புலிகள் இராணுவத்தின் மூலோபாயத்திற்குத் தம்மைப் பலியிடாது விட்டாலும், தற்பொழுது தமது மூலோபாயத்தை வெளிப்படுத்த அன்றி அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளைமேற்கொள்வதில் இதுவரையில் என்ன முன்னேற்றத்தை எட்டியுள்ளனர் என்பது இன்று அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வியாகும். அதாவது, இராணுவத்தின் மூலோபாயத்திற்குள் சிக்காத புலிகள், தற்போதைய தந்திரோபாயத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளமுடியுமா? என்பதே கேள்வியாகும்.

ஏனெனில், மூலோபாயத்தில் சிறீலங்கா இராணுவம் இதுவரை வெற்றிபெறவில்லையாயினும், விடுதலைப் புலிகளுக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும் கட்டம் ஒன்றை எட்டியுள்ளது என்பது நிராகரிக்கப்படமுடியாதது. ஆனால், விடுதலைப் புலிகள் இது தொடர்பான தகவல் எதையும் வெளியிடாதுவிட்டாலும், தம்மிடமுள்ள ஆளணி ஆயுததளவாடங்கள் என்பவற்றைக் கொண்டு வலிந்து தாக்குதல் திட்டத்தையோ அன்றிப் பெரும் முறியடிப்புச் சமர் ஒன்றையே நடத்தியே ஆதல் வேண்டும் என்பது அவசியமானதொன்றாகிவிட்டது. ஆனால் புலிகளிடம் குறிப்பிடத்தக்கதான ஆளணி - ஆயுத தளவாடங்கள் இருப்பினும் கூட ஒரு தாக்குதல் திட்டத்தை அவசர அவசரமாகவோ, அன்றி மூலோபாயத்திற்கு மாறாகவோ மேற்கொள்ளுதல் என்பதோ பொருத்தப்படானதாக இருக்கப் போவதில்லை. வெற்றி அளிப்பதாகவும் இருக்கப்போவதில்லை.

அதாவது மூலோபாயத்தின் அடிப்படையில், ஒரு தாக்குதல் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதனால், முதலில் திட்டமிடுதலும் அடுத்த தாக்குதலுக்குத் தயார்படுத்தலும் அடுத்த படைநகர்த்தலும் எனப்பல கட்டங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் எவையும் பூர்த்தியாகாது நடவடிக்கைகள் வெற்றியைத் தேடித்தரப்போவதில்லை. இவற்றைவிடப் பல புறக்காரணிகளும் நடவடிக்கைகளுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆகையினால் நெருக்கடிகள், அழுத்தங்கள் என்பனவற்றினால் முழுமை பெறாத திட்டம் ஒன்றை அமுல்படுத்துதல் நன்மை தேடித்தரமாட்டாது. ஒருவகையில் பார்க்கப்பபோனால் இராணுவம் நெருக்கடி ஒன்றைக் கொடுத்துள்ளது என்பது உண்மையே. ஆனால் அது புலிகளின் வலிந்து தாக்குதல் சக்தியை இல்லாது ஒழித்துவிட்டது எனக்கொள்ளமுடியாது.

http://www.nerudal.com/nerudal.423.html

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails