சமீபத்திய பதிவுகள்

அமெரிக்காவில் பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம்

>> Wednesday, February 24, 2010

 
 
அமெரிக்காவில்    பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம்
புளோரிடா, பிப். 25-
 
அமெரிக்காவில் உள்ள ஏர்லாண்டோ என்ற இடத்தில் கடல்வாழ் உயிரினங்கள் பூங்கா உள்ளது. இங்கு திமிங்கலங்கள் உள் பட ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதில் திமிங்கலத்தின் பயிற்சியாளராக டான் பிரான்ஞ்சு (வயது40) என்ற பெண் ஊழியர் இருந்தார்.
 
திமிங்கலத்தை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது டான் பிரான்ஞ்சு திமிங்கலம் இருந்த தொட்டியில் மேல் நின்று திமிங்கலத்தை பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கி சொல்லி கொண்டிருந்தார். 
அப்போது அவர் திடீரென திமிங்கலத்தின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். உடனே அந்த திமிங்கலம் பாய்ந்து சென்று அவரை கடித்து குதறியது.
 
பார்வையாளர்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. இதை பார்த்ததும் அவர்கள் அலறினார்கள்.
 
உடனே மற்ற பயிற்சியாளர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் திமிங்கலம் அவரை கடித்து கொன்று விட்டது. தீயணைப்பு படையினர் வந்து உடலை மீட்டனர்.
 
இந்த திமிங்கலம் ஏற்கனவே 2 பயிற்சியாளர்களை கொன்று இருப்பது குறிப்பிடத்தக்கது

source:maalaimalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சச்சின் 200 ரன் அடித்த காணொளி
StumbleUpon.com Read more...

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

Sachin Tendulkar Rare Picture Collections


StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP