சமீபத்திய பதிவுகள்

மறக்க முடியுமா? என்ன பாவம் செய்தோம்?

>> Saturday, June 20, 2009

மறக்க முடியுமா? என்ன பாவம் செய்தோம்?
By: அருட் தந்தை ஜெகத் கஸ்பார்
Courtesy: நக்கீரன் - ஆனி 15, 2009

மறக்க முடியுமா? அழகான இருசொற் கேள்வி. நக்கீரன் தந்த இத்தலைப்பிற்கு ஆழமான
பண்பாட்டுக் குணாதிசயங்கள் உண்டு. பைபிளில் கடவுள் சொல்வதாய் வரும் சொற்களில்
மிக அதிகமாய் மீண்டும் மீண்டும் பதிவு பெறும் சொற்கள் இரண்டு. ""மறவாதீர்கள்'',
""நினைவில் கொள்ளுங்கள்'' என்ற இரு சொற்கள். ஆங்கில மொழியில் மிகவும் பிடித்த,
சொலவடைகளில் ஒன்று:

The burden and bliss of memory தமிழில் நினைவுகளின் சுமையும், சுகமும் என
சுமாராக மொழிபெயர்க்கலாம்.

இன்று பாலஸ்தீன மக்கள் மீது சொல்லொணா அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் யூதர்கள்
ஒரு காலத்தில், பல்வேறு அடிமைத்தனங்களை அனுபவித்தவர்கள். சற்றேறக்குறைய 5000
ஆண்டு காலம் பூமியின் பல்வேறு பரப்புகளில் அடிமைகளாயும் நாடோடிகளாயும்
அவலமுற்று வாழ்ந்தவர்கள். வரலாறு முழுதும் வலிகளையே சுமந்து நடந்த யூதர்களால்
எப்படி இன்று பாலஸ்தீன இசுலாமிய மக்கள் மீது இத்துணை கொடூரம் காட்ட
முடிகிறதென்பது மானுட இயல்பின் புரிய இயலாத புதிர்களில் ஒன்று. ஆனால் 5000
ஆண்டு கால அடிமைத்தனத்தை அவர்களால் தாக்குப்பிடித்து, தப்பிப் பிழைத்திருந்து
1948-ல் இஸ்ரேல் என்ற நாட்டையும் பெற உதவியது அவர்களது ""மறவோம்'' என்ற
உறுதியும் ""நினைவில் கொண்டிருப்போம்'' என்ற வைராக்கியமும்.

பட்ட துன்பங்களை அவர்கள் மறக்க வில்லை. அனுபவித்த அவலங்கள் அனைத்தை யும்
பாடங்களில், பிரார்த்தனைகளில், உரை யாடல்களில், சமூக நிகழ்வுகளில், கதைகளில்,
காப்பியங்களில் என தமக்கும் தலைமுறை களுக்கும் நினைவுபடுத்திக் கொண்டே
இருந்தார்கள்.

நமக்கு பொங்கல், கிறிஸ்து பிறப்பு, ரம்ஜான் போல் யூதர்களுக்கும் ஆண்டு தோறும்
ஒரு திருவிழா உண்டு. அந்நாளில் எல்லா யூத வீடுகளிலும் பெரு விருந்து நடக்கும்.
அவ்விருந்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால் வேப்பங்காயை விட ஆயிரம்
மடங்கு கசக்கும் ரசம் ஒன்றை குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரும் குடித்தாக
வேண்டும். அக்கசந்த காடியை குடித்தபின் குடும்பத்தலைவர் யூத இனத்தின் துன்ப
வரலாற்றை நெடுங்கதையாக வருணிப்பார். நெஞ்சம் கனத்தவர்களாய் தம் இனம் கடந்து
வந்த பாதையின் பாடுகளை உள் வாங்குவார்கள். எக்காலத்திலும் எம் இனம் மீண்டும்
அத்தகு துன்பங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை வராதபடி நாம் இடைவிடா
விழிப்புணர்வோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்ற உறுதியையும் ஏற்பார்கள்.

1948-ல் தமக்கென இஸ்ரேல் நாடு கிடைக்கும் வரை சமூக நிகழ்வுகளிலெல்லாம் தமது
இனத்தின் அவலங்களை புனிதத்தன்மை சார்த்தி நினைவு கூர்ந்தார்கள். உதாரணமாக
அமெரிக்காவில் வாழ்ந்த கோடீசுவர யூதர் வீட்டுத் திருமண வைபவமானாலும் ஒரு சடங்கு
உண்டு. மணமகன் தன் பாதத்தால் கண்ணாடிக் குமிழ் ஒன்றை மிதித்து உடைக்க வேண்டும்.
மங்கலமான மணவிழாவில் மணமகனின் காலிலிருந்து ரத்தம் பீறிடும். அப்போது யூத மத
குரு அவன் காலில் கட்டுப் போட்டுக் கொண்டே சொல்வார்: ""மகனே, மணமகனே! இன்று
உனக்கும் நமக்கும் மகிழ்ச்சியான நாள் என்பது உண்மைதான். ஆனாலும் உன் காலில்
இப்போது நீ உணரும் வலிபோல நமது யூத இனம் நாடற்று அடிமைத் தனங்களை அனுபவித்து
வருகிறதென்பதை நினைவில் கொள்வாயாக!''.

1980-களில் உலகைக் கலக்கிய இசைக்குழு போனி எம்- இர்ய்ங்ஹ்ம் அவர்களது
பாடல்களில் மிகவும் புகழ் பெற்றது ""பாபிலோன் நதிக்கரை களிலே... இஹ் ற்ட்ங்
தண்ஸ்ங்ழ்ள் ர்ச் இஹக்ஷஹ்ப்ர்ய் என்ற பாடல். உண்மையில் அப்பாடலின் வரலாறு
யூதர்களுக் குரியது. பாபிலோனியப் பேரரசர் நெபுகத்நெசார் யூதர்களை வெற்றிகொண்டு
அடிமைகளாய் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அடிமை வேலைக்கிடையே
கிடைக்கும் ஓய்வின்போது தமது கடவுளைப் பற்றி பாடல் பாடும்படி சக பாபிலோனியர்கள்
கேட்கிறார்கள். அப்போது அவர்கள் மனதின் உணர்வுகளாய் பதிவு பெற்ற வரிகள்தான்
அப்பாடல். ""பாபிலோன் நதியின் கரையினில் நாங்கள் அமர்ந்து எங்கள் தந்தையர்
தேசத்தை நினைத்தபோது அழுதோம். எம்மை அடிமைப்படுத்தியவர்களோ எங்கள் கடவுளைப்
பற்றிப் பாடச் சொன்னார்கள். அடிமைப்படுத்தி யவர்களின் மண்ணில் நின்று கொண்டு
எங்கள் கடவுளின் பெயரை எப்படி நாங்கள் உச்சரிப்போம்?'' என்பதாக வளரும் மறக்க
முடியாத அந்தப் பாடல்.

வேரித்தாஸ் வானொலி நாட்களில் எமக்கு கடிதமெழுதும் பெண்களில் இருவர் சிவசங்கரி
மற்றும் அங்கயற்கண்ணி. அங்கயற்கண்ணி முதற்கடிதம் எழுதியது 1996 செப்டம்பர்
16-ம் தேதி. முதற்கடிதத்தின் சில வரிகள் இவை: ""சொந்த மண்ணில் அகதியாய் வயதான
பெற்றோருடனும், கணவர் பிள்ளைகளு டனும், உறவினருடனும் பரந்தனிலிருந்து பத்து
மைல் தூரத்தில் ஸ்கந்த புரத்தில் குடிசை கட்டி தஞ்சம் புகுந்திருக்கிறோம். மர
நிழலிலும் குளக்கரைகளிலும் பசியும் பட்டினியுமாய் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்ற
எம் மக்களின் பரிதாப நிலை நெஞ்சை உலுக்கு கிறது. ஒரு சமூகத்தை வேரோடு
பிடுங்கிவிட்ட வரலாறு இங்கே நடந்து முடிகிறது. எங்களின் எதிர்காலம் என்ன?
இன்றைய சந்தோஷங்களோ நாளைய நம்பிக்கைகளோ இல்லாத எங்கள் வாழ்க்கை எப்படி முடியப்
போகிறது? எங்கள் துயரங்கள் யாராலுமே புரிந்து கொள்ளப்படப் போவதில்லையா? நாங்கள்
ஏன் நேசிக்கப் படத்தகாதவர்கள் ஆனோம்?'' என்ற கேள்விகளோடு அக்கடிதம் வந்தது.
2002 வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் நானும் வேரித்தாஸ்
வானொலியை விட்டு அகல, தொடர்பறுந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் அங்கயற்கண்ணியிடமிருந்து மீண்டும் ஒரு மடல்.
முல்லைத்தீவு முற்றுகை நிகழுமுன்னரே தப்பி வந்து எழுதியிருக்கிறார். யார்
மூலமாகவோ அக்கடிதம் கொழும்புக்கு வந்து, அங்கிருந்து பிரான்சு நாட்டுக் குப்
போய், பிரான்சிலிருந்து நான் முன்பு தங்கியிருந்த தோமையார்மலை முகவரிக்கு
வந்து, கடந்த புதனன்று தமிழ்மையம் வந்து சேர்ந்தது. ஏப்ரல் 19-ம் தேதியிட்டு
எழுதப்பட்ட கடிதம்:

""எமக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இத்தனை துன்பங்களும் வதைகளும் பட எம் இனம்
என்ன பாவம் செய்தது? உங்களுக்கு நான் கடிதம் எழுதிய அந்நாட் களை விட நூறு
மடங்கு துன்பங்களை அனுபவித்து எல்லாமே இழந்து போன நிலை வர என்ன பிழை செய்தோம்?
தமிழராய் பிறந்தது அவ்வளவு பெரிய குற்றமா?

மரணத்தின் விளிம்பில் வந்து நிற்கிறோம். வன்னி மக்கள் இயல்பில் எளிமை
யானவர்கள். சக மனிதர்களை நேசிப்பவர்கள். சூது, வாது தெரியாதவர்கள். ஏழ்மை
யிலும் விருந்தினரை உபசரிக் கும் இனிய பண்புடையவர் கள். அம்மக்கள் ஒருவேளை
கஞ்சிக்கு பாத்திரமேந்தி மணிக்கணக்கில் காத்திருப்பது காணப் பொறுக்க வில்லை.
எதிரி நடுவில் ஆடு மாடுகள் போல் அடைபட்டுக் கிடக்கிறோம்.

ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து நாங்கள் காப்பாற்றப்பட மாட்டோமா எனத்
தவிக்கிறோம். கவலைப்படாதீர்கள் என்று எம் கண்ணீர் துடைக்க ஒரு கரமாவது நீளாதா
என அங்குமிங்கும் பார்க்கிறோம். யாரோடு நோவோம், யாருக் கெடுத்துரைப்போம்?
துயரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட எமக்கு எவரும் இல்லை. எனவேதான் எப்படியாவது
தங்கள் கரம் எட்டும் என்ற நம்பிக்கையில் இக்கடிதம் எழுதுகிறேன். என் மன
ஆறுதலுக்காக''.

-அங்கயற்கண்ணி எழுதியிருந்த நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி இது.

கடந்த வியாழன்கூட சவேரா விருந்தினர் விடுதியின் மேல்தள உணவகத்தில் மனச்சுமை
குறைக்க நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, ராய் என்ற வங்காளத்து நண்பர்
கேட்டார்: ""எல்லாம்தான் முடிந்துவிட்டதே... ஏன் தேவையில்லாமல் பெயரைக்
கெடுத்துக் கொள்கிறீர்கள்? திருவாசகம், சென்னை சங்கமம் போல் செய்வதற்கு எவ்வளவோ
நல்ல காரியங்கள் இருக்கின்றனவே...'' என்றார். நான் அவருக்குச் சொன்னேன்:

""மே 18-ம் தேதி மட்டுமே 20,000 தமிழ் மக்கள் முல்லைத்தீவில் உயிரோடு
புதைக்கப்பட்டார்கள். பதுங்கு குழிகளுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு
குற்றுயிராய் துடித்துக் கிடக்கையிலே புதைக்கப்படுகையில் இயலாமையின்
அந்தரிப்பொன்று அம்மக்களை ஆட் கொண்டிருக்குமே... அதற்கு அந்தக் கடவுள் மட்டுமே
சாட்சியாய் நின்றிருக்க முடியும். அவர் சாட்சியாய் நின்றிருந்த காரணத்தினால்
மட்டுமே நான் பேசுகிறேன். நான் பேசும் மொழியை பேசியவர்கள் என்பதால் அம்மக்கள்
கொல்லப்பட்டார்கள். ஏன் கொன்றீர்கள் என்றுகூட நான் இப்போது கேட்கவில்லை. மிகக்
குறைந்தபட்சம் என் சடலத்தையேனும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்
கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன்'' என்றேன்.

StumbleUpon.com Read more...

சிரிக்கவும் ,சிந்திக்கவும்

சிந்தனைத்துளி

அன்பு

புகழும்போது வெட்கப்பட்டும், அவமானப் படுத்தும்போது அமைதியாக இருந்தும் பழக்கப் பட்டவன் எவனோ அவனே மனிதர்களில் ம்பட்டவன்!
அன்பு இதயத்தின் இளமை சிந்தனை அதன் வளர்ச்சி; மேடைப்பேச்சு அதன் முதுமை! - கலீல் இப்ரான்


அச்சம்-அடிமை

அடால்ப் ஹிட்லர் மெய்ன் கேம்ப் என்ற தன் சுயசரிதையில் எழுதியது:
உனக்குப் பகைவன் என்று யாரும் இல்லாவிட்டால் நீ பெரிய தலைவனாக முடியாது. அப்படியே உனக்குப் பகைவன் அல்லது பகை நாடு என்று இல்லாவிட்டால் உன்னுடைய நாடே அபாயத்தில் இருப்பதாக மக்களை நம்பவைக்க வேண்டும். ஏனெனில், மக்களிடம் அச்சத்தை உண்டாக்கினால் - அவர்களை எளிதில் அடிமைப்படுத்தி விடலாம்.


தூற்றலும் - போற்றலும்!

தாகூர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் கல்கத்தா பல்கலைக் கழகம் நடத்திய மெட்ரிகுலேசன் தேர்வில் இலக்கணப் பிழை களை திருத்தும்படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தரப்பட்டது.
அதே பல்கலைக்கழகம் பின்னால் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌர வித்தது.


புத்தசாலி!

மகாத்மா காந்தி என்ற ஆவணப்படம் வெளிவந்தபோது, அதன் தயாரிப்பாளர் ஏ.கே.செட்டியார் புதுமையாக ஹிந்து நாளிதழில் " Mahatma Gandhi in Celluloid" என விளம்பரம் செய்தார்.
மறுநாளே ஆந்திராவிலிருந்து ஒரு வக்கில்: Please send one dozen by VPP என்று தந்தி அடித்தார்.
சுயஉதவிக்குழு திட்டத்தின் ஆதிபிதா யூனஸ் என்பவர். வங்க தேசம் என்ற பங்களாதேஷ் பொருளாதார பேராசிரியரான இவர் 1976இல் துவங்கிய கிராமின் என்ற வங்கிகள் 53 லட்சம் பேருக்கு 2500 கோடி கடன் தந்துள்ளது.
இவர் பெற்றிருக்கும் கௌரவ பட்டம் 27. விருதுகள் 62. நோபல் பரிசு - அதன் மதிப்பு 7 கோடி.


கையூட்டுக்கு கையரகாதி

ஓ.வி.அழகேசன் அவர்கள் இரயில்வே அமைச்சராக பணியாற்றியபோது துணை அமைச்சர் வடக்கத்தியர். தொழிலதிபருக்கு உடனடியாக 50 இரயில்வே வேகன்கள் தேவை. துணை அமைச்சர் ரூ.50 ஆயிரம் கேட்க தொழிலதிபரால் 22 ஆயிரமே தரமுடிந்தது. பேசியபடி பணம் வராததால் துணை அமைச்சர் ஹயீயீசடிஎநன என்று அனுமதித்ததை முன்னால் சூடிவ சேர்த்துவிட்டார். பதறிப்போன பார்ட்டி மீதி 28 ஆயிரத்தையும் எண்ணி வைத்தார். உடனே சூடிவ ஹயீயீசடிஎநன என்றது சூடிவந ஹயீயீசடிஎநன ஆனது. இதைக் கண்டு பிடித்தவர் நம்ம அழகேசன்தான்!


ஜாதக லட்சணம்

ஜாதகத்தோடு சோதிடனை சந்திக்கிறான் ஒருவன். அதைப் பார்த்த சோதிடன் அவனிடமே ஜாதகக் குறிப்பை மௌனமாக திருப்பித் தருகிறார். வந்தவனோ உண்மையை சொல்லுமாறு வேண்ட, இன்னும் 50 நாட்களில் இந்த ஜாதகத்துக்கு உரியவன் உயிர் இழப்பான் என்கிறான். அவனோ அதிர்ச்சி அடையாது ரூபாய் ஆயிரம் எடுத்துத்தர, சோதிடன் அதிர்ச் சியாகிறான். உயிருக்கு ஆபத்து என்கிறேன். நீயோ பணம் தருகிறாயே என வியப்புடன் கேட்க, பரவாயில்லை பணத்தை வைத்துக் கொள்ளுங் கள். இது என் பார்ட்னர் ஜாதகம் என்றானாம்.

StumbleUpon.com Read more...

மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது

மாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது: நடிகை அமலா

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 
நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
 
நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
 
நான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்.
 
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்ததை மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நினைத்தேன். ஆனால் அதில் எல்லாம் விட எனக்கு விலங்குகளுக்காக செய்து வரும் சேவைதான் உண்மையான மகிழ்ச்சியை தந்துள்ளது. எனது சேவைகளுக்கு கணவர் நாகார்ஜுன் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என்றார்.

StumbleUpon.com Read more...

பழைய செய்திகள்,புதிய உண்மைகள்

பழைய செய்திகள்,புதிய உண்மைகள்

 

நம்பிக்கை: பெங்குவின்பறவைகள் (Penguin) வடதுருவத் தில் வசிக்கின்றன.
உண்மை: பெங்குவின்களின் நாட்டைக் காணவேண்டும் என்று வடக்கு நோக்கி நீங்கள் பயணம் செய்தால், நீங்கள் தவறான திசையில் செல்கிறீர்கள் என்று பொருள். பெங்குவின்பறவைகள் தென் துருவத்திலும், தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அருகில் உள்ள குளுமையான கடல்களிலும் வாழ்கின்றன.


டினோசர் தான் பெரிய விலங்கா?

நம்பிக்கை: இதுவரை உயிர் வாழ்ந்திருந்த விலங்குகளிலேயே டினோசர் (Dinosaur) தான் மிகப் பெரிய விலங்காகும்.
உண்மை: இதுவரை வாழ்ந்த விலங்குகளி லேயே மிகப் பெரிய விலங்கினம் மாபெரும் நீலத் திமிங்கிலம்தான் (Blue Whale). பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் சுற்றித் திரிந்த மிகப் பெரிய டினோசரான பிரச்சியோசாரஸ் (Brachiosaurus) 68,040 கிலோ எடையும், 26 மீட்டர் நீளமும் கொண்டது. ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை 136,080 கிலோ; அதன் நீளம் 30.48 மீட்டர். இந்த மாபெரும் விலங்கினம் இன்றும் உலகின் பெருங்கடல் களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.


எல்லாப் பாம்புகளும் ஆபத்தானவையா?

நம்பிக்கை: எல்லா டினோசர்களுமே (Dinosaur) மிகப் பெரிய உருவங்கொண்டவை.
உண்மை: டினோசர் என்ற கிரேக்க சொல் அச்சம்தரத்தக்க மாபெரும் உருவம் என்ற பொருள் தரும். ஆனால் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்த விலங்குகளில் சில உருவத்தில் சிறியவையாகவும் இருந்துள்ளன. முழுமையாக வளர்ந்த

கம்போசோக்நாதூஸ் (Compsognathus Dinosaur) என்ற டினோசர் ஒரு வான் கோழியை விடப் பெரியதாக இருக்கவில்லை. அதன் உருவப் படிமங்கள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நம்பிக்கை: நச்சுப் பாம்புகள் (Poisonous Snakes) பெரும்பாலும் கூர்மையான தலையைக் கொண்டிருக்கும்.
உண்மை: கட்டுவிரியன், சாரை மற்றும் பல நச்சுப் பாம்புகள் கூர்மையான தலையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், நாகப்பாம்பு (Cobra) மற்றும் பவழப்பாம்புகளுக்கு (coral snake) கூர்மையான தலை இல்லை. என்றாலும் இவை மிகக் கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தவை. மேலும், நச்சுத் தன்மையற்ற பல பாம்பு வகைகளுக்கும் கூர்மையான முக்கோண வடிவம் கொண்ட தலை இருக்கும்.
ஒரு பாம்பு நச்சுத் தன்மை உடையதா என்பதை அறிய நிச்சயமான ஒரு வழி உள்ளது. அதன் மேல் தாடையில் இரண்டு நீளமான நச்சுப்பற்கள் இருக்கும். நச்சுத்தன்மையற்ற பாம்புகளுக்கு இத்தகைய நச்சுப் பற்கள் இருக்காது. எவ்வாறாயினும் பாம்புகளை மிக நெருங்கிப் பார்க்காமல் இருப்பதே நல்லது.

- இளங்கண்ணன்

StumbleUpon.com Read more...

தேர்தல்களும் ஜோதிடப் பைத்தியங்களும்!

 

18.4.2009 அன்று வெளிவந்துள்ள தி டைம்ஸ் ஆப் இண்டியா என்ற ஆங்கில நாளேட்டில் முதல் பக்கத்திலேயே தேர்தலில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஜோதிடர்கள்தான் என்ற பொருளில் தலைப்பிட்டு ஒரு முக்கியச் செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது.

நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு மன இறுக்கத்திலிருந்து வெளியேறிட ஜோதிடப் பைத்தியம் அவர்களுக்குப் புகலிடமாக மாறியுள்ளதாம்.

என்னே கொடுமை! எவ்வளவு அறியாமை, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு முடிந்து 12 மணிக்கு நடுநிசியில் சுதந்தர நாளை வைத்ததே ஜோதிட மூடநம்பிக்கையின் காரணமாகவே ஆகும்.

ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் மதச்சார்பின்மை பற்றி எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரைகள் கொண்ட நூலில் வேதனை யோடும் வெட்கத்தோடும் இதனைக் குறிப்பிட்டு உள்ளார்கள்.

சுதந்திரம் பிறக்கும்போது - அதுவும் பண்டித நேரு போன்ற அறிவியல் மனப்பான்மையாளர் தலைமை அமைச்சராகவும், அண்ணல் அம்பேத் கர்போன்ற பகுத்தறிவுவாதி சட்ட அமைச் சராகவும் அமைந்த அரசு - பதவியேற்கும்போதே இப்படி ஒரு மூடநம்பிக்கை படமெடுத்தாடிய பரிதாபத்தைப் பற்றி என்ன சொல்வது!

நம் நாட்டு நாளேடுகளில், வார ஏடுகளில் - நாய் விற்ற காசு குரைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது என்பதற்கொப்ப இந்த மூடநம்பிக்கைகளை நாளும் ராசி பலன், வருஷப்பிறப்புப் பலன், குருபெயர்ச்சிப் பலன் என்றெல்லாம் போட்டு, கொஞ்ச நஞ்சம் முளை கிளம்பும் பகுத்தறிவையும் அழித்து விடுகின்றன!

தேர்தலில் நிற்க ஜோதிடர்களை ஆஸ்தான ஜோதிடர்களாக்கிக் கொள்ள சிறிது கூட வெட்கமோ, கூச்சமோ கொள்ளாமல், எல்லோரும் நிர்வாணமாக உள்ள நாட்டில், கோவணம் கட்டியவனைப் பைத்தியக் காரன் என்று கருதும் கொடுமை, பகுத்தறிவுவாதிகளைக் கேலி செய்யும் வேதனை நம் விலாவைக் குடைகிறது!

அறிஞர் அண்ணா பெயரில் அரசியல் கட்சி நடத்தும் - திராவிடப் பாரம்பரியத்தில் ஆரிய மாயை புகுந்ததின் அருவருக்கத்தக்க விளைவு வேட்பாளர்களின் முதல் தகுதி - ஜோதிடப்பலன் தான் என்ற ஜெயலலிதா கட்சி அணுகு முறை மிகவும் வெட்ககரமானது அல்லவா?

பரப்பனங்காடி பணிக்கர்களின் சோழிஜோதிடம் வரை பார்த்துதானே 2004இல் 40 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது ஜெயலலிதா கட்சிக் கூட்டணி!

என்றாலும், சூதாட்டக்காரனுக்குப் புத்தி வராது; மேலும் மேலும் இழத் தொறூஉம் காதலிக்கும் சூதேபோன்று - இப்போது ஜாதகம் தேடும் மடமை தான் என்னே!

ஜாதகம் பார்த்த பின்பு தானே அந்த ஜெயலலிதா திருவள்ளூர் தனித் தொகுதி, விழுப்புரம் தனித் தொகுதி, சென்னை மத்திய தொகுதிகளில் தனது வேட்பாளர்களை அறிவித்து, அவர்கள் பிரச்சாரம் துவங்கிய பின்னர் மாற்றப்பட்டுள்ளனர்? அது ஏன் முன் கூட்டி ஜோதிடத்தில் தெரியவில்லை? சிந்திக்க வேண்டாமா?

வடநாடு இதில் மிகமிக மோசம்; வடநாட்டுத் தலைவர்கள் இதில் மற்ற எவரையும் விட மிஞ்சி, ஜோதிடப் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்!

கர்நாடகத்தில் முன்பு தேவகவுடா, நாமக்கல் ஜோசியரைப் பார்த்துத்தான் - நாமக்கல் ஆஞ்சி நேயருடன் தமிழ்நாடு - புதுவை சனீஸ்வர பகவான் உட்பட கூட்டணி அமைத்து தானே தேர்தல் களம் கண்டார்? பலன் என்ன?

விழிகளில் குளம் கண்டது தானே மிச்சம்? எடியூரப்பா என்ற இன்றுள்ள பாஜகவின் முதல் அமைச்சர் (கர்நாடகத்தில்) முன்பு ஜோதிடம் பார்த்து தானே பதவியேற்று ஒரே வாரத்தில் பதவி இழந்து தெருவில் நின்றார்; மறந்து விட்டதா?

கர்நாடகத்தில் இன்னும் ஜோதிடர்களின் வருவாய் கொட்டோ கொட் டென்று கொட்டுகிறதாம்!

40 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரை செலவிடும் இந்த ஜோதிடத் தொழிலில் (Astrology Industry) 500-600 கோடி ரூபாய் வருமானம் - இந்த 2009 தேர்தலில் வசூலாகி விட்டதாம்!

62 ஹோமம் உள்ளது; பூஜை புனஸ்காரம் உள்ளது; இதில் முட்டாள்தனத்திற்கு முடி சூட்டும் மற்றொரு கேலிக்குரிய செய்தி என்ன தெரியுமா?

தொகுதியின் அளவைப் பொறுத்து அதற்குரிய செலவு நீளும் அல்லது சுருங்குமாம்! இவ்வளவு அடி முட்டாள்களைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தின் யோக்கியதை எப்படி ஊழலற்றதாக அமையும்?

பகுத்தறிவுப் பிரச்சாரம், பெரியார்கள் தேவை எவ்வளவு என்பது புரியவில்லையா? ஜே.என். சோம்யாஜி என்கிற பெங்களூர் ஜோதிடர் கூறுகிறார் - மேலே சொன்ன கருத்தை!

பெங்களூர் மத்திய தொகுதிக்குக் குறைவான கட்டணச் செலவு; பெங்களூர் கிராமியத் தொகுதி - நீளமான படியால் அதிக செலவாம்!

300 நம்பூதிரி ஜோதிடர்கள், புரோகிதர்கள் இறக்குமதியாம்; யாகம் - யோக - புனர் பூஜைகள் - ஹோமம் வளர்ச்சி.

சஹஸ்தினடிஹோமம் வஷிகர்ண ஹோமம் (மற்றவர்களை உங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவர)

விபரீத பிரத்தியங்காரா (வெற்றி வாய்ப்பை பெருக்கிட) இப்படி - புரோகிதர்கள் கன்சல்டேஷன் பீஸ் எவ்வளவு தொகை தெரியுமா? ரூ. 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரையாம்! இவை தேர்தல் கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா? 24 மணி நேர யாகம், 72 மணி இடைநிறுத்தமில்லா யாகம் (இவை எல்லாம் போயஸ் தோட்டத்துக்கு அத்துபடி). இப்படிப் பலப்பல!

அட மண்டுகளா? உங்களது ஜோதிட மடைமைக்கு ஓர் எல்லையே இல்லையா?

ஜோதிடந்தனை இகழ் - பாரதியார்!

இந்த ஞான பூமி எப்படி உருப்படும்? ஒபாமாக்களுக்கே ஜோசியம் கூறும் அளவுக்கு இந்தக் கேலிக்கூத்து உச்சத்தை அடைய வில்லையா?

மக்களின் மடமைக்கு ஓர் எல்லையே இல்லையா?

பிரச்சாரம்! பிரச்சாரம்! பகுத்தறிவுப் பிரச்சாரம்தான் இனி அடைமழையாகப் பெய்தல் அவசியம்; அவசரம்!

- கி.வீரமணி
ஆசிரியர்

StumbleUpon.com Read more...

குஜராத் கலவரம்-அச்சுறுத்தும் ஆவணங்கள் சிக்குகிறார் நீரோ மன்னன் மோடி

குஜராத் கலவரம்-அச்சுறுத்தும் ஆவணங்கள்
சிக்குகிறார் நீரோ மன்னன் மோடி!
<http://files.periyar.org.in/viduthalai/20090620/news01.html>

அகமதாபாத், ஜூன் 20- குஜராத்தில் முசுலிம் களுக்கு எதிரான கல வரத்தின் போது,
முதல் வர் நரேந்திர மோடி பேசிய தொலை பேசி அழைப்புகள் குறித்த விவரங்கள்
எஸ்.அய்.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுப் படையி டம் ஒப்படைக்கப்பட்
டுள்ளது.
குஜராத்தில் கல வரம் உச்சகட்டத்தில் இருந்த போது முதல் வர் நரேந்திர மோடி
யிடம், முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி.
தலைவர் டாக் டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாகப் பேசி
உள்ளனர் என்று தொண்டு நிறுவனம் ஒன்று அறிக்கை அளித் துள்ளது.
பலமுறை அவர்கள் மோடியுடன் போனில் பேசியுள்ளதாகவும் அந்த தொண்டு நிறு வனம்
தெரிவித்துள் ளது. இவர்களில் மாயாபென் கோத் னானி மற்றும் ஜெய்தீப் படேல் ஆகிய
இரு வரும் நரோடி படியா மற்றும் நரோடா கிரா மத்தில் நடந்த ஒட்டு மொத்த படுகொலை
களைத் தூண்டிவிட் டும், நேரில் சென்று கல வரக்காரர்களை ஊக் கப்படுத்தியதாகவும்
கடும் குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ளவர்கள் ஆவர்.
இவ்வழக்கில் குஜ ராத் அமைச்சரான மாயாபென் கோத்னா னிக்கு வழங்கப்பட்டி ருந்த
ஜாமீன் சில நாள் களுக்கு முன் ரத்து செய்யப்பட்டதை யடுத்து, அவர் தலை
மறைவானார். இதைத் தொடர்ந்து அவரை நீக்கம் செய்ய மோடிக் குக் கோரிக்கை விடுக்
கப்பட்டதும், கோத்னா னியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க மோடி
மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. பின்னர் கோத் னானி பதவி விலகி
விட்டு சரணடைந்தார். தற்போது அவரும் படேலும் மீண்டும் தலைமறைவாகியுள் ளனர்.
எஸ்.அய்.டி.யிடம் மோடி தொடர்பு கொண்டு தொலை பேசி அழைப்புகள் குறித்து
ஆய்வறிக்கை அளித் துள்ள ஜன் சங் கர்ஷ் மன்ச் அமைப்பின் வழக் கறிஞர் முகுல்
சின்ஹா கூறுகையில், எங்களது ஆய்வுப்படி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி
முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை மோடிக்கு வந்த, அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள்
குறித்த விவரத்தைக் கொடுத் துள்ளோம்.
இதில் ஜெய்தீப் படேல் முதல்வர் அலுவலகத்து டன் 9 முறை பேசியுள் ளார். மாயாபென்
கோத் னானி 4 முறையும், ஜடாபியா 13 முறையும், அகமதாபாத் கூடுதல் ஆணையர் நான்கு
முறை யும், துணை ஆணையர் சவானி 2 முறையும் பேசி யுள்ளனர். இந்த தொலை பேசித்
தொடர்புகள் குறித்த விவரங்களை அய்.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா கொடுத்த
விவரங்களின் அடிப் படையில் நாங்கள் தொகுத்துள்ளோம் என்றார்.
குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்பு கள் குறித்து எஸ்.அய்.டி.
விசாரிக்க வேண்டும் என அண்மையில்தான் உச்சநீதிமன்றம் ஆணை யிட்டிருந்த நிலையில்,
மோடிக்கு வந்த தொலை பேசி அழைப்புகள் குறித்த விவரத்தை ஜன் சங்கர்ஷ் மன்ச்
எஸ்.அய். டி.யிடம் வழங்கியுள்ளது.
இந்த விவரங்களில் இருந்து குஜராத் கல வரங்களில் நரேந்திர மோடிக்கு நெருங்கிய
தொடர்பு இருந்தது என் பது மெய்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.<http://files.periyar.org.in/viduthalai/20090620/news01.html>

StumbleUpon.com Read more...

முகமது நபியை அவமதித்து பேசவில்லை: நடிகர் ஷாருக்கான் மறுப்பு

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அதில், அவர் முகமது நபி பற்றி கருத்து தெரிவித்து இருந்தார்.

வரலாற்றில் அவர் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறியிருந்தார். இதன் மூலம் முகமது நபியை அவமதித்ததாக ஷாருக்கான் மீது இஸ்லாமியர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
முஸ்லிம் ஆகிய நான் இஸ்லாம் கொள்கைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். "முகமது நபி"யை பற்றி அவமதித்து கருத்து கூறவில்லை. தவறாக புரிந்து கொண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பத்திரிக்கைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் விளக்கம் அனுப்பினேன். தங்களின் தவறை அப்பத்திரிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.

StumbleUpon.com Read more...

தமிழின துரோகிகளின் எட்டப்பர் சின்னப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது

தமிழின துரோகிகளின் எட்டப்பர் சின்னப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது

laughing-guy-thumb168075ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளுக்குள் தோன்றியிருந்த சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) ஆகிய கட்சிகளுக்கிடையில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஒரே கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்தன.

இதற்கமைய யாழ் மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும், வவுனியா நகரசபைத் தேர்தலில் புளொட் அமைப்பின் நங்கூரச்சின்னத்திலும் போட்டியிட இணங்கியிருந்தனர்.

முதலில் சின்னத்தைத் தேர்வுசெய்வதில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தனித்துப்போட்டியிடவும், புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தீர்மானித்தன. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் மீண்டும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

"இதுவொரு சின்னப் பிரச்சினை. இதற்காகச் சண்டையிடுவது முட்டாள்த்தனம்" என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூறினார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்குப் பலர் முன்வந்திருப்பதாகக் கொழும்பு ஊடகமொன்றிடம் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, அவர்களிலிருந்து பொருத்தமானவர்களைத் தாம் தெரிவுசெய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசைபத் தேர்தல்களில் ஈ.பி.டி.பி. கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.

StumbleUpon.com Read more...

தமிழீழச் செய்திகள்(காணொளி)

StumbleUpon.com Read more...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்-ஒரு விரிவான விளக்கம்






நன்றி: அதிர்வு

StumbleUpon.com Read more...

,உலக தமிழ் மக்களே இன்றைக்கு நீங்கள் நாங்கள் என்ற இந்த படங்களை பாருங்களேன்,நமது உறவுகளின் நிலையை அறியுங்கள்














நன்றி: அதிர்வு

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP