சமீபத்திய பதிவுகள்

கடலுக்கடியில் கருபுலிகளின் தாக்குதல்-ராணுவ டோராப்படகுகள் தப்பியோட்டம்

>> Saturday, May 2, 2009

புலிகளின் சுழியோடும் பிரிவினர் கடலுக்கடியில் தாக்குதல் டோராப்படகுகள் தப்பியோட்டம்

கடற்கரும் புலிகளின் சுழியோடும் பிரிவினர் நேற்றும் இன்றும் ஆழ்கடலில் பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது. 4 கி லே மீற்றர் பரப்பளவில் புலிகளை முடக்கியிருப்பதாக கூறிவரும் இராணுவத்தினர், புலிகள் தப்பிச் செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறு கடலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் தாக்குதல் படகுகள் மற்றும் டோராப்படகுகள் மீது புலிகளின் சுழியோடும் பிரிவினர் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் சுமார் 10 தடவைகள் தரையிறக்கம் மேற்கொள்ள முயற்சித்தும் இலங்கை இராணுவம் தோல்வியை தழுவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் வெடிபொருட்களை நிரப்பிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த கடற்படையினர் இந்த ஆழ் கடல் தாக்குதல் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் மிக அருகாமையில் நிலைகொண்டிருந்த இப் படகுகள் தற்போது ஆழ்கடல் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரட்டைவாய்கால் பகுதியிலும் கடும் சமர் இடம்பெற்றுவருவதாகவும், இருப்பினும் இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

StumbleUpon.com Read more...

பிச்சைக்காரர்கள்போல் கையேந்தும் மக்கள்-யாழ் ஆயர் கருத்து வீடியோ செய்தி

StumbleUpon.com Read more...

திருமாவளவன் திருமணம்

திருமாவளவன் திருமணம் செய்ய வேண்டும்; தாய் மீண்டும் உருக்கம்
 
சென்னை. மே. 1-
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் கிராமம். அங்குள்ள குடிசை வீட்டில் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன், தாய் பெரியம்மாள் வசித்து வருகிறார்கள்.
 
மகன் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற அரசியல் தலைவராகவும், லட்சோப லட்சதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி காட்டியாகவும் உள்ள போதிலும் தொல்காப்பியனும், பெரியம்மாளும் இன்னமும் எளிமையான சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வாழ்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி குடிசையில் இருந்தார்களோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார்கள்.
 
திருமாவளவனின் அப்பழுக்கற்ற அரசியலால் அவர்களது வாழ்க்கை நடைமுறைகளில் மாற்றம் ஏற்படவில்லை. தொல்காப்பியனுக்கு வயதாகி, உடல் தளர்ந்து விட்டதால் 75 வயதாகும் பெரியம்மாள் தான் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
 
தொல்காப்பியன்-பெரியம்மாள் தம்பதியருக்கு திருமாவளவன் ஒரே மகன். அந்த மகனுக்கு திருமணம் செய்து வைத்து, தம் குலம் தழைக்க, பேரன் பேத்திகளோடு கொஞ்சி குலாவ வேண்டும் என்பது பெரியம்மாளின் ஆசை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைப்பது என்ற ஒரே குறிக்கோளில் இருக்கும் திருமாவளவன் தன் லட்சியப்பயணத்தில் குடும்பம் ஒரு தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்று நினைத்து திருமணமே செய்து கொள்ளவில்லை.
 
மிக இளம் வயதிலேயே அரசியல் பாதைக்கு வந்து விட்ட திருமாவளவனுக்கு திருமணம் செய்து வைக்க தொல்காப்பியன்-பெரியம்மாள் தம்பதியர் பல தடவை முயன்றனர். ஆனால் திருமாவளவன் திருமண வாழ்க்கையில் ஆர்வம் காட்ட வில்லை.
 
இளம் வயதில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி வந்த திருமாவளவன், எனக்கு வயதாகி விட்டது. இனி எதற்கு திருமணம்? என்று கூறிவிட்டார்.
 
பந்தா இல்லாத யதார்த்தமான செயல்பாடு, எந்த இடத்திலும் கிடைத்ததை சாப்பிடும் மனசு, அடித்தட்டு மக்களுக்காக போராடும் குணம் என்றிருக்கும் திருமாவளவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவரது தாய் பெரியம்மாள் மனதில் ஆழமாக உள்ளது. திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்து விட்ட பிறகும் கூட பெரியம்மாள் மனதில் அந்த ஏக்கம் வளர்பிறை போல இருப்பது சமீபத்தில் தெரிந்தது. சிதம்பரம் பாராளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் பற்றி கேட்டதும் அந்த தாய் கண்ணீர் மல்க கூறியதாவது:-
 
என் மகனுக்கு இப்ப 47 வயதாகிறது. 1990-ல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை ஆரம்பித்தான். அதற்குப்பிறகு இங்க வீட்டுக்கு வருவது கூட அரிதாகி விட்டது. என் மகன் எப்ப வந்தாலும் எனக்கு செலவுக்கு 500, ஆயிரம்னு தருவான்.
 
என் மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. அவன் மூலம் என் பேரக்குழந்தைகளைப் கொஞ்ச ஆசை. ஆனால் என் மகன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.
 
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபட பிரம்மச்சாரியாகவே இருக்கப்போவதாக கூறி விட்டான். அவன் மனதை மாற்றி விடலாம் என்று முதல்-அமைச்சர் கலைஞர் கிட்ட கூட என் விருப்பத்தை தெரிவித்தேன். அவர் திருமாவளவனை சமரசம் செய்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து விடுவார் என்று நினைத்தேன். அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
 
சிதம்பரம் தொகுதியில் என் மகன் வெற்றி பெற்று எம்.பி. ஆவதை பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் அதை விட அவனை திருமணக்கோலத்தில் அழகு பார்க்கவே என் மனம் இன்னமும் துடிக்கிறது.
 
இவ்வாறு திருமாவள வனின் தாயார் பெரியம்மாள் கூறினார்.
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப்பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் கூறுகையில், திருமாவளவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. ஆனால் குடும்பத்துக்காக அவருக்கு நேரம் இல்லை. எங்கள் கட்சிக்காகவும், எங்கள் மக்களுக்காகவும் அவர் முழு நேரத்தையும் ஒதுக்கி உழைத்து வருகிறார் என்றார்.
 
 
நன்றி :மாலைமலர்

StumbleUpon.com Read more...

சற்று முன்னர் முல்லைத்தீவில் இருந்து பெறப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு வைத்தியசாலை மீது இன்று மீண்டும் தாக்குதல்
 

எல்லப் படங்களையும் பார்வையிட இங்கு அழுத்தவும்

இன்று காலை வழமையாக இயங்கிக்கொண்டிருந்த முல்லைத்தீவு வைத்தியசாலை மீது 9.00 மணியளவில் ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்ததாகவும் இதில் 23 நோயாளிகள் இறந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் வன்னியில் இருந்து டாக்டர் சத்தியமூர்த்தி அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் கடந்த வியாழன் அன்று இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்ததையும் நினைவுபடுத்தினார். அத்துடன் முல்லைத்தீவு வைத்தியசாலை திரும்பவும் காலை 10.30 மணிக்கு மீண்டும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கும் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள் இருப்பினும் வைத்தியசாலை தமது சேவைகளை இடை நிறுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எந்த வகையான இடர் வரினும் அங்குள்ள மருத்துவக் குழுவினர் தமிழ் மக்களுக்கு உதவிவருவது குறிப்பிடத்தக்கவிடையமாகும். குறிப்பாக முல்லைத்தீவு மருத்துவமனை தம்மாலான அனைத்து மருத்துவ உதவிகளையும் மக்களுக்கு வழங்கிவருகிறது. சற்று முன்னர் முல்லைத்தீவில் இருந்து பெறப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP