பெண்கள் எத்தனை தடவை உடலுறவு கொண்டாலும் கன்னித்தன்மை மாறாமல் குமரிப்பெண்களாய் இருப்பார்களாம்.
>> Tuesday, March 11, 2008
இந்த புத்தகத்தை பார்த்தால், ஒரு இஸ்லாமியர் தான் எழுதினார் என்று சொல்லலாம். ஆனால், இப்பொது யாரிடமாவது கேட்டால், இதில் மேற்கோல் காட்டப்பட்ட ஹதீஸ் ஆதாரங்கள் மிகவும் பலவீனமானவை, இவைகளை நாம் நம்பவேண்டியதில்லை என்றுச் சொல்லி தப்பித்துக்கொள்வார்கள்.
ஆனால், சொர்க்கத்தில் அல்லா பெண்களை கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமில்லை. குர்-ஆனின் இந்த வசனங்களை பார்க்கவும்.
குர்ஆன் 37:48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
குர்ஆன் 52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
குர்ஆன் 44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
குர்ஆன் 55:56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
[ யாரும் தொடாமல் தான் மட்டும் தான் முதல் முதலில் தொடவேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு உண்டு, இந்த Weakness ஐ அல்லா கண்டுபிடித்துள்ளார். ]
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். ( குர்ஆன் 56:22)
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (குர்ஆன் 56:23)
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். (குர்ஆன் 56:24)
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (குர்ஆன் 55:72)
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்ஆன் 55:74)
சஹி புகாரி என்று இஸ்லாமியர்களால் உண்மை என்று கருதப்படுகின்ற ஹதீஸிலிருந்து
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2796
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3254
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.
[ கண்ணாடி போல இருப்பார்கள். என்னே ஒரு பாக்கியம். அதாவது Transperant என்று சொல்வோமே அதுபோல, இந்த பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அவர்கள் பின்னாலே என்ன பொருள் உள்ளதோ அது தெரியும். அப்படியானால், வயிற்றுப்பகுதியில் பார்த்தோமானால், வயிற்றில் உள்ள குடல், நரம்புகள், இரத்தவோட்டம் எல்லாமே பார்க்கலாம் என்றுச் சொல்லுங்க. நான் எழுதும் போதே, இயேசுவின் மீது எனக்கு கோபம் வருகிறது, ஏன் இதை எல்லாம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டார்.
குறைந்தது, இந்த உலகத்தில் என்னோடு உள்ள மனைவியை, சொர்க்கத்தில் மறுபடியும் இளமையை கொண்டுவந்து(எனக்கு கூட இளமை வேண்டும்) எங்கள் இருவரை திருமணம் செய்து வைக்ககூடாதா? இவ்வுலகத்தில் உள்ள எல்லா உணர்வுகளோடு. அதை விடுத்து, நீங்கள் தேவதூதரைப்போல் இருப்பீர்கள், அங்கு பெண் கொடுப்பதும் இல்லை, கொள்வதுமில்லை என்றுச் சொல்கிறார் நம் தேவன். என்ன செய்ய , நாம் கொடுத்துவைத்தது இவ்வளவு தான்.]
Source of Quran and Hadith verses : http://chittarkottai.com
http://unmaiadiyann.blogspot.com/2007/08/blog-post_2850.html Read more...