சமீபத்திய பதிவுகள்

பேண்ட், லுங்கியாக மாறும் கோவணம், லங்கோடு

>> Friday, May 27, 2011


இந்த கட்டுரை வினவு தளத்தில் இருந்து பாவிக்கப்படுகிறது.கட்டுரையின் கருத்து நன்றாக இருந்த படியினால் இங்கு பதிகிறேன்



மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி


சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1

இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

"மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல.அது ஒரு தேசிய மாற்றம்இந்து மதத்திலிருக்கும் போது 'வணக்கம்சொன்னவர்,முசுலீமாக மாறும்போது 'அஸ்ஸலாமு அலைக்கும்என்கிறார்.
கிறித்தவர் 'தோத்திரம்அல்லது 'குட்மார்னிங்என்கிறார்வேட்டி மாறிபேண்ட்டோலுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறதுபெண்கள் பூச்செடிபொட்டுவைத்துகோலமிட்டுகுத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறதுதேங்காய்உடைத்துகுத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும்காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறதுபிறந்த நாட்களுக்குக்கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.
'ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு மாறி பலதாரமணம்விவாகரத்துசெய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறதுபாரதத்தில் உள்ள புனிதஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்காமெதினாவாடிகன்,கான்ஸ்டாண்டிநோபிள்ஜெருசலேம் – புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன.முன்னோர்கள்தாத்தாபாட்டிகளை முட்டாள்கள்அறிவிலிகள் என்று கருதும்எண்ணம் வளர்கிறதுசித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியதுபோய் ஜனவரி கொண்டாடப்படுகிறது.
மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை,கொள்ளைகற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன.மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சிலஉதாரணங்களே."
இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் 'மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?' என்றவெளியீட்டில் இருந்து.
____________________________________________________________________________

நமஸ்காரம் போய் குட்மார்னிங்தோத்திரம்,அஸ்ஸலாமு அலைக்கும்.

ணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். 'நமஸ்காரத்தை' ஒழித்து தமிழகத்தில் 'வணக்கத்தை'க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட 'நமஸ்தே ஜீ' எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.
அடுத்து, 'குட் மார்னிங்' சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே 'அவாள்'தான். இன்று 'குட்மார்னிங்' பழைய சம்பிரதாயமாகி, "ஹாய், ஹல்லோ" தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?
தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் 'ஸ்'-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.
கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.
மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் 'வணக்கமும்' இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.
ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.

வேட்டி போய் பேண்ட்லுங்கி

ந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி 'இந்து'க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.
உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.  டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.
இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.