சமீபத்திய பதிவுகள்

வெப்சைட்டில் நம் குறிப்புகள்

>> Saturday, December 18, 2010


இணையத்தில் தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் உள்ள தகவல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அல்லது யாருக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுகிறீர்கள்.   இப்படிப் பல குறிப்புகள் அது குறித்து அமைக்க எண்ணுகிறீர்கள். இவற்றைக் குறித்து வைக்க என்ன செய்யலாம்? மேஜை மீதுள்ள ஒரு தாளில், இணைய தள முகவரி மற்றும் தகவல்கள், அனுப்ப வேண்டிய நபர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது பெயர் குறித்து வைக்கலாம். அல்லது இதற்கென டெக்ஸ்ட் எடிட்டரில் ஒரு பக்கம் திறந்து மேலே குறிப்பிட்டவற்றை தனியே அமைத்து வைக்கலாம். ஏன், இணையப் பக்கத்திலேயே, ஆங்காங்கே குறித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பி.டி.எப். பைல்களில்  பயன்படுத்தும் ""ஸ்டிக்கி நோட்ஸ்'' போல இணைய தளப் பக்கங்களிலும் குறித்து வைத்தால், நமக்கு வசதி தான். ஆனால் முடியவில்லையே என்று எண்ணுகிறீர்களா! கவலையை விடுங்கள். நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த வசதியை "Note Anywhere"  என்ற எக்ஸ்டன்ஷன் தொகுப்பு தருகிறது.  இந்த தொகுப்பின் மூலம், குரோம் பிரவுசரில் ஒரு இணைய தளத்தினைக் காண்கையில், அதில் குறிப்புகளை எழுதி வைக்க எண்ணினால், உடனே அமைத்து வைக்கலாம். நீங்கள் மீண்டும் குரோம் பிரவுசர் மூலம், அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அந்த குறிப்புகளும் சேர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.
இதனைப் பதிந்து கொள்ள, குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கவும். இதிலிருந்துhttps://chrome.google.com/extensions/detail/ bohahkiiknkelflnjjlipnaeapefmjbh   என்ற முகவரி யில் உள்ள தளம் செல்லவும்.  அடுத்து கிடைக்கும் "Confirm Installation"  என்ற டயலாக் பாக்ஸில்  "Install"  பட்டனில் கிளிக் செய்திடவும்.  இந்த எக்ஸ்டென்ஷன் பதிவு செய்யப்படும்.
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும், இணைய தளத்தில் குறிப்பினை அமைக்க, டூல்பாரில் கிடைக்கும் நோட் ஐகானில் கிளிக் செய்து நோட்ஸ் டைப் செய்திடவும். இப்போது அந்த ஐகான், நீங்கள் டைப் செய்திடும் நோட்ஸ்களின் எண்ணிக்கையைக் காட்டும். டைப் செய்த குறிப்பினை நீக்க வேண்டும் என்றால், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று, கிடைக்கும் கட்டத்தில் உள்ள 'x'   அடையாளம் மீது கிளிக் செய்திடவும்.  
அமைத்த நோட்ஸ் ஒன்றை, வேறு ஒரு இடத்தில் அமைக்க, அதனை அப்படியே இழுத்துச் சென்று விட்டுவிடலாம்.  இந்த நோட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால், ஆப்ஷன்ஸ் மூலம் அமைக்கப்பட்ட நோட்ஸ் சுருக்கத் தினைப் பார்க்கலாம். மேலும், நோட்ஸ் அமைக்கப்பட வேண்டிய எழுத்துவகை, எழுத்தின் வண்ணம், பின்புற வண்ணம் ஆகிவற்றையும் செட் செய்திடலாம். இவ்வாறு செட் செய்தவற்றை செட்டிங்ஸ் பிரிவில்   Save கிளிக் செய்து,  விரும்பும் வரை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம்.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP