சமீபத்திய பதிவுகள்

ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்(முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும் )

>> Friday, December 19, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்(முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும் )




ஏகத்துவத்திற்கு பதில்



சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்

 
முன்னுரை: பொதுவாக இஸ்லாமியர்கள் "கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து அல்ல, பவுல் தான், இவர் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டார், சிலுவை, மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்ற கோட்பாடுகள் எல்லாம் பவுல் கண்டுபிடித்தது தான்" என்று மிகப் பெரிய பொய்யை ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

 
ஏகத்துவம் தளத்தில் வெளியான கட்டுரைகளுக்கு கீழ் கண்ட பதில்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இயேசுவின் செய்தியும், பவுலின் செய்தியும் ஒன்று தான், வெவ்வேறானது அல்ல என்பதை புதிய ஏற்பாட்டின் துணையோடு எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது சிலுவை மரணம், மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவரங்களை பவுல் தான் புகுத்தினார் என்று முஸ்லீம்கள் சொல்வது பொய், இயேசுவே பல சந்தர்பங்களில் இவைகளைப் பற்றி பேசியுள்ளார். கீழ் கண்ட நான்கு கட்டுரைகளில் இயேசுவின் போதனைக்கும், பவுலின் போதனைக்கும் இடையே உள்ள 133 ஒற்றுமைகளை நான்கு பகுதிகளாக காட்டியுள்ளோம்.
 
 
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்

பாகம் - 1 | பாகம் - 2 | பாகம் - 3 | பாகம் - 4
 
 
பவுலின் மனந்திரும்புதல் பற்றிய பதிலை கீழ் கண்ட இரண்டு தலைப்புகளாக பிரித்து நாம் காண்போம்.

 
1. சவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடுகள் இல்லை

 
2. முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்


 
1. சவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடுகள் இல்லை
 
 
தமஸ்குவிற்கு போகும் வழியில் இயேசு சவுலை சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றிய‌ விவரங்களிலிருந்து பல கேள்விகளை இஸ்லாமியர்கள் கேட்கின்றனர். முக்கியமாக, ஏகத்துவம் தளம் "கிறிஸ்தவமும் பவுலும் பாகம் - 1" (http://egathuvam.blogspot.com/2008/11/1.html) என்ற கட்டுரையில் கீழ் கண்ட கேள்விகளை முன் வைத்துள்ளனர். இக்கட்டுரையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலைக் காணலாம்.
 
 
1. சவுல் மட்டும் கீழே விழுந்தாரா அல்லது எல்லாரும் விழுந்தார்களா?

 
2. சவுல் மட்டும் சத்தத்தை கேட்டாரா அல்லது சவுலோடு இருந்த மனிதர்கள் எல்லாரும் "சத்தத்தை" கேட்டார்களா?

 
3. சவுலோடு பிரயாணம் செய்த மனிதர்கள் "யாரையாவது" கண்டார்களா? இல்லையா?

 
4. அப் 9ம் அதிகாரத்தில் அம்மனிதர்கள் "பிரமித்து நின்றார்கள்" என்றும், அப் 26ம் அதிகாரத்தில் "அவர்கள் கீழே விழுந்தார்கள்" என்றும் உள்ளதே, இதைப் பற்றிய விளக்கம் என்ன?

 
5. சொல்லப்பட்ட மூன்று விவரங்களில் ஒரு விவரத்தில் மட்டும் இயேசு சவுலிடம் அதிகமாக பேசியதாக உள்ளதே இதன் விளக்கம் என்ன?
 
 
அப்போஸ்தலர் நடபடிகளில் பவுலின் சாட்சி்:

 
தமஸ்குவிற்கு போகும் வழியில் இயேசு சவுலை சந்தித்த நிகழ்ச்சி அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் மூன்று இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

 
அப் 9ம் அதிகாரத்தில்: இந்த அதிகாரத்தில் லூக்கா, சவுல் தமஸ்கு வழியில் எப்படி இயேசுவால் சந்திக்கபட்டார் என்பதைச் சொல்கிறார்.

 
அப் 22ம் அதிகாரத்தில்: இந்த அதிகாரத்தில் பவுல் எருசலேமிலுள்ள யூதர்களிடம் தன் சாட்சியை பகிர்ந்துக் கொள்கிறார். இந்த யூதர்களுக்கு, பவுல் யார் என்று தெரியும், அவர் இதற்கு முன்பு எதை செய்துக்கொண்டு இருந்தார், இப்போது யாரைப் பற்றி பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறார் என்றும் தெரியும்.

 
அப் 26ம் அதிகாரத்தில்: எருசலேமில் தன் சாட்சியை சொன்ன பிறகு, பவுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ரோம இராஜ்ஜியத்தின் கவர்னர் "பெஸ்து"க்கும் மற்றும் இராஜா ஏரோது அகிரிப்பாவிற்கு (Roman Governor Festus and King Herod Agrippa) முன்பாக பவுல் தன் சாட்சியை பகிர்ந்துக்கொள்கிறார், மற்றும் தனக்காக வழக்காடுகிறார், அதாவது த‌ண்டனை அடையும் அளவிற்கு அரசாங்கத்திற்கு எதிராக எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று தனக்காக தானே வழக்காடுகிறார்.
 
 
 
கேள்வி 1: சவுல் மட்டும் கீழே விழுந்தாரா அல்லது எல்லாரும் விழுந்தார்களா?

 
லூக்கா தான் எழுதிய முதல் இரண்டு விவரங்களில் "சவுலோடு வந்தவர்கள் விழவில்லை". என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக இரண்டு விவரங்களில் "சவுல் விழுந்தார்" என்றுச் சொல்லியுள்ளார். அவர்களும் விழுந்தார்கள் என்ற விவரத்தை குறிப்பிடாமல் விட்டுவிட்டார் அவ்வளவே. எனவே ஒரு விவரத்தை சொல்ல வில்லையென்றால், அது நடக்கவில்லை என்று பொருள் இல்லை அது முரண்பாடும் இல்லை. அப் 26ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, எல்லாரும் தரையில் விழுந்தார்கள்.
 
 
அப் 9:4 அவன் தரையிலே விழுந்தான்….

அப் 22:7 நான் தரையிலே விழுந்தேன்…

அப் 26:14 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது:…
 
 
ஏன் மூன்று இடங்களிலும் (எல்லாரும் விழுந்தார்கள் என்று) சொல்லக்கூடாது என்று கேட்டால், நாம் ஒரு விவரத்தை அல்லது நிகழ்ச்சியைப் பற்றி விவரிக்கும் போது,

 
நாம் யாரிடம் அந்நிகழ்ச்சியை விவரிக்கிறோம்,

நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் எவ்வளவு? நாம் பேசும் சூழ்நிலை என்ன‌? மற்றும்

 
நாம் பேசுவதை கேட்கும் நபர்களின் புரிந்துக்கொள்ளும் தன்மை, போன்றவற்றை கருத்தில் கொண்டு தான் விவரிப்போம்.

 
உதாரணத்திற்கு: ஒர் நேர்க்காணலில்(Interview) ஒரு நபரிடன் உன் குடும்பம், படிப்பு மற்றும் பின்னனி பற்றி சொல் என்று கேட்பார்களானால், அந்த நபர் தன் குடும்பம் மற்றும் படிப்பு பற்றிய விவரங்களை சுருக்கமாக சில நிமிடங்களில் சொல்லி முடிப்பார். ஒரு நீண்ட சொற் பொழிவை அங்கு சொல்லிக் கொண்டு இருக்கமாட்டார். ஏனென்றால், தனக்கு அந்த வேலை தேவை என்ற கண்ணொட்டத்தில் தேவையான விவரங்களை மட்டுமே சொல்வார், சில விவரங்களை விட்டுவிடுவார்.

 
அதே நபரிடம், அவர் தன் வீட்டில் இருக்கும் போது, அவரிடம் அதிகமாக நேரம் இருக்கும் போது, அதே கேள்வியை மூன்றாவது நபர் ஒருவர் கேட்டால், அவரது பதில் எப்படி இருக்கும்?

 
அதே கேள்வியை அவரது புதிய நண்பர்கள் சிலர் (தன்னைப் பற்றி ஓரளவிற்கு தெரிந்தவர்கள்) கேட்டால் எப்படி பதில் இருக்கும்.

 
இந்த மூன்று முறையும் அவர் நேர்க்காணலில் சொன்னதையே சொல்வாரா? நேர்க்காணலில் எடுத்துக்கொண்ட நேரத்தையே எடுத்துகொள்வாரா?

 
நேர்க்காணலில் சொல்லும் போது தேவையில்லாத விவரங்களை அல்லது அந்த நேர்க்காணலில் தேவைப்படாத அதிக முக்கியத்துவம் இல்லாத விவரத்தைச் சொல்லமாட்டார். அதே நபர் தன் நண்பர்களிடம் சாவகாசமாக விவரிக்கும் போது, தனக்கு எத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களின் கணவர்மார்களின் வேலை என்ன, மற்றும் தன் பெற்றோர்கள் பற்றி விவரமாகச் சொல்வார்.

 
ஒரு வேளை நேர்க்காணலில் தனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்றுச் சொல்லியிருந்து, தன் நண்பர்களிடம் தன் சகோதரியின் கணவரைப் பற்றியும் அவரது தொழில் பற்றியும் சொன்னால், இது முரண்பாடாகுமா? ஆகாது.

 
நேர்க்காணலில் தன் சகோதரிக்கு திருமணமான விவரம் சொல்லாததால், உண்மையிலேயே தன் சகோதரிக்கு திருமணம் நடக்கவில்லை என்று புரிந்துக்கொள்ளமுடியுமா? ஆனால், அந்த நபர் நேர்க்காணல் அல்லாத நேரத்தில், அவர் சொன்னதால் அது முரண்பாடாக நாம் கருதமுடியுமா?

 
இதே போலத்தான், அப்போஸ்தலர் நடபடிகளில் 9, 22 மற்றும் 29ம் அதிகாரத்தில் தேவையானது மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

எனவே, தமஸ்கு வழியில் எல்லாரும் விழுந்தார்கள் ஆனால், தேவைப்படும் போது தேவையான விவரங்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

 
இந்த ஐந்து கேள்விகளுக்கும் என் பதிலை கொடுத்துவிட்டு, தமஸ்கு வழியில் நடந்த நிகழ்ச்சியை ஒரு வரிசைக் கிரமமாக நான் இக்கட்டுரையின் கடைசியில் விவரிக்கிறேன்.
 
 
கேள்வி 2: சவுல் மட்டும் சத்தத்தை கேட்டாரா அல்லது சவுலோடு இருந்த மனிதர்கள் எல்லாரும் "சத்தத்தை" கேட்டார்களா?
 
 
Act 9:7 அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.

Act 22:9 என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
 
 
இந்த இரண்டு இடங்களில், 9ம் அதிகாரம் சொல்கிறது, "அவர்கள் சத்தத்தை கேட்டார்கள்", ஆனால், 22ம் அதிகாரம் சொல்கிறது, "அவர்கள் என்னுடம் பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை" என்று. இந்த இடத்தில் "கேட்டல் – Hear - (akouō) " என்ற கிரேக்க வார்த்தையின் பொருளை நாம் காணவேண்டும்.
 
 
G191
ἀκούω
 
akouō
ak-oo'-o
 
A primary verb; to hear (in various senses): - give (in the) audience (of), come (to the ears), ([shall]) hear (-er, -ken), be noised, be reported, understand.

 
Outline of Biblical Usage

 
1) to be endowed with the faculty of hearing, not deaf
 
2) to hear
.....b) to attend to, consider what is or has been said
.....c) to understand, perceive the sense of what is said
 
 
3) to hear something
.....a) to perceive by the ear what is announced in one's presence
.....b) to get by hearing learn
.....c) a thing comes to one's ears, to find out, learn
.....d) to give ear to a teaching or a teacher
.....e) to comprehend, to understand
 
 
 
கிரேக்க வார்த்தை "akouō" என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன,

அதாவது, "கேட்டல் - Hear" என்ற பொருளும் உண்டு,

"புரிந்துக்கொள்ளுதல் - Understand" என்ற பொருளும் உண்டு.


இதன் படி, அப் 22:9ல் "என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை" என்றுச் சொல்லப்பட்டதின் அர்த்தம் அல்லது சரியான மொழிபெயர்ப்பு கிரேக்க மொழியில், "என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை" என்பதேயாகும். எனவே, இங்கு எந்த முரண்பாடும் இல்லை, கிரேக்க வார்த்தை "akouō" என்பதற்கு "கேட்டல்" மற்றும் "புரிந்துக்கொள்ளுதல்" என்ற அர்த்தங்கள் உள்ளன.

 
கொரிந்தியரிலிருந்து இன்னொரு உதாரணம்

 
 
கிரேக்க வார்த்தைக்கு(akouō) வெறும் "கேட்டல்- Hear" என்று தான் பொருள் வரும், புரிந்துக்கொள்ளுதல்(Understand or perceive or comprehend) என்ற பொருள் வராது என்று சிலர் சொல்லக்கூடும். அவர்களுக்காக, இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு வசனத்தை காண்போம்.

 
 
கீழ் கண்ட வசனத்தை கவனிக்கவும்: 1 கொரிந்தியர் 14:2

 
 
ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே(akouō) அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

For he that speaketh in an unknown tongue speaketh not unto men, but unto God: for no man understandeth(G191-akouō) him; howbeit in the spirit he speaketh mysteries.
 
 
இந்த வசனத்தை கவனிக்கும் போது, ஒரு மனிதன் சபையிலே அந்நிய பாஷையிலே பேசும் போது, அதை கேட்பவனுக்கு அவன் பேசுவது கேட்குமே ஒழிய ஆனால், அதன் அர்த்தம் புரியாது. இந்த இடத்திலும் அதே கிரேக்க வார்த்தை(understandeth-akouo) பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இதன் பொருள் என்ன? சத்தம் காதில் விழும் ஆனால், அதன் அர்த்தம் புரியாது. இந்த வசனத்திலும் "Akouo" என்ற வார்த்தை வருவதினால், "அவன் பேசுகிறதை ஒருவனும் கேட்கமுடியாது" என்று மொழிபெயர்க்க முடியாது, ஏனென்றால், பக்கத்தில் இருப்பவனுக்கு ஒருவன் சத்தமாக தேவனை வேறு ஒரு மொழியில் துதிப்பது காதில் விழாமல் இருக்காது, கண்டிப்பாக விழும், ஆனால், பக்கத்தில் இருப்பவனுக்கு "புரியாது" அவ்வளவே. இந்த இடத்தியில் "அறிய மாட்டான் அல்லது புரிந்துக்கொள்ளமாட்டன்" என்ற வார்த்தைக்கும் இதே கிரேக்க வார்த்தைத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 
பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் குர்‍ஆனை படிக்கும் முறை இது தான், அதாவது அவர்களுக்கு சத்தம் போட தெரியும்(அதாவது அரபி எழுத்துக்களை படிக்கத்தெரியும்) ஆனால், அதன் அர்த்தம் புரியாது. மற்றவர்கள் அவர்களுக்கு குர்‍ஆன் வசனத்தின் பொருளைச் சொன்னால் தான் அவர்களுக்கு நாம் என்ன படிக்கிறோம் என்று புரியும் அல்லது அவர்களாகவே தங்களுக்கு தெரிந்த (தாய்) மொழியில் படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

 
ஆக, சவுலோடு சென்ற எல்லா மனிதர்களும் சத்தத்தை கேட்டார்கள், அதாவது இயேசு பவுலோடு பேசுவதை கேட்டார்கள் ஆனால், அவர்களுக்கு இயேசு என்ன சொன்னார் என்பதின் அர்த்தம் புரியவில்லை. இதனையே ஒரு இடத்தில் விவரிக்கும் போது "அவர்கள் சத்தத்தை கேட்டார்கள்" என்றும், இன்னொரு இடத்தில் சொல்லும் போது "அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை (புரிந்துக்கொள்ளவில்லை)" என்றுச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கிரேக்க மொழியில் இரண்டு இடங்களிலும் ஒரே வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 
இன்னொரு கேள்வி: ஒரு இடத்தில் எல்லாரும் இருக்கும் போது, பேசும் வார்த்தைகள் ஒருவருக்கு மட்டும் புரியும், இன்னொருவருக்கு எப்படி புரியாமல் போகும்: என்ற கேள்வி எழும்பும், அதாவது சவுலுக்கு புரிந்த வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஏன் புரியாது? இதற்கு பதில் மிகவும் சுலபம், அதாவது இறைவன் நினைத்தால், எதையும் எப்படியும் அவரால் செய்யமுடியும், அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, இதனை இஸ்லாமியர்கள் கூட அங்கீகரிப்பார்கள்.

 
இருந்தாலும், இன்னொரு வசனத்தை பார்ப்போம், இங்கு பேசப்பட்டது வெவ்வேறு மனிதர்களுக்கு வித்தியாசமாக கேட்டுள்ளது அல்லது புரியவில்லை. கீழ் கண்ட வசனங்களைப் பாருங்கள்:
 
 
(யோவான் 12:28-29) பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்:இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
 
 
வானத்திலிருந்து வந்த ஒரு சத்தம், சிலருக்கு இடி முழக்கத்தின் சத்தம் போலவும், சிலருக்கு தேவதூதர் பேசியதாகவும் கேட்டுள்ளது. ஆக, தேவைப்படும் போது, தேவையானதை சரியாகச் செய்ய தேவனுக்கு எதுவும் தேவையில்லை.

 
இரண்டாம் கேள்விக்கு பதில் என்னவென்றால், சவுலும் அவரோடு வந்த எல்லாரும் சத்தத்தை கேட்டார்கள், ஆனால், சவுலுக்கு மட்டுமே கேட்ட வார்த்தைகளின் அர்த்தமும் புரிந்தது, அதனால் தான் அவர் மறுபடியும் நீர் யார் என்று கேட்கிறார் பதில் பெறுகிறார், இதனை கவனித்துக்கொண்டு இருந்த மற்றவர்கள், என்ன நடக்கிறது என்று புரியாமல் பிரமித்து நிற்கிறார்கள்.
 
 
 
3. சவுலோடு பிரயாணம் செய்த மனிதர்கள் "யாரையாவது" கண்டார்களா? இல்லையா?

 
சவுலோடு வந்தவர்கள் சத்தத்தை கேட்டார்களே ஒழிய அவர்கள் யாரையும் காணவில்லை. இங்கு முரண்பாட்டிற்கு இடமே இல்லை. அவர்கள் வெளிச்சத்தை கண்டார்கள், மற்றும் தங்களுக்கு புரியாத சத்தத்தை கேட்டார்கள், அவ்வளவே, அவர்கள் யாரையும் காணவில்லை.

 
இதே போல நடந்த இன்னொரு நிகழ்ச்சியை காணலாம் - தானியேல் கண்ட தரிசனம்:

 
இறைவன் விரும்பினால், ஒருவருக்கு மட்டுமே தரிசனம் தெரியும் படிச் செய்வார். எல்லாருக்கும் தன் சத்தம் கேட்கும் படிச் செய்வார் அல்லது ஒருவருக்கு மட்டும் கேட்கும் படிச் செய்வார். கீழே உள்ள வசனத்தை கவனிக்கவும், தானியேலுக்கு மட்டுமே தரிசனம் காணப்பட்டது, மற்றவர்கள் சத்தத்தை மட்டுமே கேட்டு, பயந்து ஒளிந்துக்கொண்டார்கள்.
 
 
(தானியேல் 10:4-7) முதலாம் மாதம் இருபத்துநாலந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது. தானியேலாகிய நான்மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுங்கி, ஓடி, ஒளித்துக்கொண்டார்கள்.
 
 
இன்னும் ஒரு சில முஸ்லீம்கள், இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், ஒருவருக்கு கேட்டு, இன்னொருவருக்கு கேட்கப்படாமல் இருப்பது எப்படி சாத்தியம், ஒருவருக்கு தெரிந்து மற்றவருக்கு தெரியாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்பார்கள், இப்படிப்பட்டவர்களுக்கு இந்த கட்டுரையின் கடைசியில் தரப்பட்ட விவரங்களைக் காணவும்(2. முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்) . இஸ்லாமியரின் நபியாகிய முஹம்மது அவர்களுக்கு எப்படி வெளிப்பாடுகள் வந்தது, எந்த நேரத்தில் வந்தது என்பதைப் பற்றி ஒரு விவரத்தைத் தருகிறேன் அதனை படித்து அப்படிப்பட்டவர்கள் முடிவு செய்யட்டும், இறைவனுக்கு எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை.
 
 
 
கேள்வி 4: அப் 9ம் அதிகாரத்தில் அம்மனிதர்கள் "பிரமித்து நின்றார்கள்" என்றும், அப் 26ம் அதிகாரத்தில் "அவர்கள் கீழே விழுந்தார்கள்" என்றும் உள்ளதே, இதைப் பற்றிய விளக்கம் என்ன?

 
சவுல் மட்டும் விழுந்தாரா? அல்லது எல்லாரும் விழுந்தார்களா? எல்லாரும் விழுந்திருந்தால் ஏன் "பிரமித்து நின்றார்கள்" என்று வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.

 
மேலோட்டமாக இந்த நிகழ்ச்சியை நாம் படித்தால், நமக்கு இப்படிப்பட்ட கேள்விகள் எழும்பும், ஆனால், நம்மையே அந்த இடத்தில் சவுலோடு வந்தவர்களில் ஒருவராக நினைத்து படித்தோமானால், இது ஒரு முரண்பாடே அல்ல என்பது விளங்கும்.

 
இந்த கட்டுரையின் முதல் கேள்வியில் நான் விளக்கினேன், சவுலோடு கூட எல்லாரும் விழுந்தார்கள். நாம் பேசும் இடம், நமக்கு தரப்பட்ட நேரம், மற்றும் நம்முடைய பேச்சில் நாம் சொல்லவேண்டிய முக்கியமான விவரம் போன்றவற்றை மனதில் கொண்டு, ஒரு நிகழ்ச்சியை ஒரே மாதிரியாக எப்போதும் நாம் சொல்லமாட்டோம், ஒரு சில விவரங்களை விட்டுவிடுவோம். ஆகையால் எல்லாரும் விழுந்தார்கள் என்பது தான் சரியாது.

 
அப்படியானால், அப் 9ம் அதிகாரத்தில் அவர்கள் பிரமித்து நின்றார்கள் என்று உள்ளதே அது எப்படி?

 
நீங்கள் சவுலோடு கூட சென்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள், அப்போது, வெளிச்சத்தினால் எல்லாரும் கீழே விழுந்தார்கள், அதில் நீங்களும் இருக்கிறீர்கள். விழுந்த உடன் என்ன செய்வீர்கள்? விழுந்த இடத்திலேயே அப்படியே இருப்பீர்களா அல்லது சில நொடிகளில் எழும்பி நிற்க முயற்சி செய்வீர்களா?

 
[நாம் கிரிக்கெட் பார்த்து இருப்போம், அதில் ஒரு பந்தை பிடிப்பதற்கு ஒரு விளையாட்டு வீரர் ஓடுவார் ஓடுவார், எல்லாரும் நினைப்போம், அவர் பிடித்துவிடுவார் என்று ஆனால், முயற்சி எடுத்தும் அவர் அந்த பந்தை தவறிவிடுகிறார், சில நேரங்களில் இப்படியாக தவறிவிடும் போது அவர் அப்படியே விழுந்த நிலையிலேயே இருப்பார், விளையாட்டை பார்த்துக்கொண்டு இருப்பவர்களாகிய நாம் நினைத்துக்கொள்ளவேண்டும், பாவம் இவர் பந்தை பிடிக்கவில்லையென்று வேதனை அடைகிறார் என்று. அதே விளையாட்டு வீரர் பந்து பவுண்டரியை நோக்கி செல்லும் போது அதை பிடித்துவிட்டால் உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்து சில நொடிகளில் அந்த பந்தை மற்ற வீரரிடம் வீசிவிடுவார்.]

 
ஒருவர் திடீரென்று ஒரு வெளிச்சம் கண்டு தடுமாறி விழும் போது, உடனே சுதாரித்துக்கொண்டு எழும்புவார், அப்படியே கிரிக்கெட் வீரர் போல விழுந்த ஸ்டைலிலேயே அப்படியே போஸ் கொடுக்கமாட்டார்கள். ஆக, சவுலோடு கூட சென்றவர்கள் எல்லாரும் விழுந்தார்கள், ஆனால், உடனே எழுந்திருக்க முயற்சி எடுத்து, சில வினாடிகள் ஆனாலும் எழுந்து நின்று இருப்பார்கள். விழுந்த எல்லாரும் விழுந்த நிலையிலேயே இருக்கமாட்டார்கள்.

 
அப்படியானால், ச‌வுல் மட்டும் ஏன் எழுந்திருக்கவில்லை?

 
சவுல் கூட எழுந்திருக்கவேண்டும், ஆனால், அவரால் முடியாத நிலை? ஏன்? அந்த வெளிச்சத்தினால், சவுலின் கண்கள் இருண்டுவிட்டது, மட்டுமல்ல, தன்னுடைய பெயரைச் சொல்லி ஒருவர் தன்னுடன் பேசுவதை அவர் கேட்டார்.

 
இப்படி சவுலே சவுலே என்று இரண்டு முறை கூப்பிட்டு, முள்ளில் உதைப்பது நல்லதல்ல என்றுச் சொன்னபோது, நீர் யார் ஆண்டவரே என்று சவுல் கேட்டபோது, அதற்கு நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றுச் சொன்ன இந்த நேரத்தில் தான், மற்றவர்கள் குருடராக ஆகாத காரணத்தால், எழுந்திருந்து, சத்தம் மட்டும் வருகிறது, சவுலும் பேசுகிறார் ஆனால், யாரையும் காணவில்லையே என்று பயந்து பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

 
சவுலும் இயேசு பேசும் அந்த ஒரு சில நிமிடங்கள் எல்லா மனிதர்களும் நம் கிரிக்கெட் வீரர்கள் போல விழுந்த நிலையிலேயே இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடமையாகாது.

 
ஆக, எல்லாரும் விழுந்தார்கள், உடனே எழும்ப முயற்சி எடுத்து எழும்பினார்கள், சவுலும் இயேசுவும் பேசும் அந்த நேரத்தில் பிரமித்து நின்றார்கள், இதில் எங்கும் முரண்பாடு இல்லை.

 
ஆக, எல்லாரும் விழுந்தார்கள், உடனே எழும்ப முயற்சி எடுத்து எழும்பினார்கள், சவுலும் இயேசுவும் பேசும் அந்த நேரத்தில் பிரமித்து நின்றார்கள், இதில் எங்கும் முரண்பாடு இல்லை. நான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, அப் 9ம் அதிகாரத்தில் லூக்கா இந்த நிகழ்ச்சியை தன் புத்தகத்தை படிப்பவர்களுக்காக சொன்னது, 22ம் அதிகாரத்தில் பவுல் எருசலேமில் யூதர்களுக்கு முன்பாக சாட்சியாகச் சொன்னது, மற்றும் இந்த 26ம் அதிகாரத்தில் பவுல் பெஸ்து என்ற ரோம ஆளுநருக்கு மற்றும் அகிரிப்பா இராஜாவிற்கும் சாட்சியாக சொன்னவிவரங்களாகும்.
 
 
(Act 26:13-19) மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலுன்றிநில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்படியாதவனாயிருக்கவில்லை.
 
 
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, இங்கு தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் பவுல் ஒன்றுவிடாமல் சொல்லவில்லை, தேவையானதை மட்டுமே சொல்லியுள்ளார்.

 
மேலேயுள்ள‌ வசனங்களை படித்தோமானால், இந்த இடத்தில் மட்டும் பவுல் எந்த விவரங்கள் தேவையற்றது என்பதால் விட்டுவிட்டார் என்பது நன்றாக விளங்கும். 26ம் அதிகாரத்தில் பவுல்:

 
1. தனக்கு கண்கள் குருடானதை அவர் சொல்லவில்லை,

 
2. அன‌னியா என்ப‌வ‌ர் மூல‌மாக ம‌றுப‌டியும் க‌ண்க‌ள் வ‌ந்த‌ விவ‌ர‌த்தைப் ப‌ற்றி அவ‌ர் சொல்ல‌வில்லை.

 
3. தான் எப்ப‌டி த‌ம‌ஸ்குவிற்கு க‌ண்க‌ள் இல்லாம‌ல் ம‌ற்றவ‌ர்க‌ளின் உத‌வியோடு வ‌ந்தார் என்றுச் சொல்ல‌வில்லை,

 
4. எத்த‌னை நாட்க‌ள் க‌ண்க‌ள் இல்லாம‌ல் இருந்தார் என்றும் சொல்ல‌வில்லை.

 
5. அதற்கு பதிலாக, தன் சாட்சியை சுருக்கமாகவும், அதே நேரத்தில் யூதர்கள் தன் மேல் சாட்டும் குற்றங்களை அவர்கள் நிருபிக்கமுடியாது என்றும் சொல்கிறார். அதனால், தான் அனனியா தனக்கு சொன்னவிவரங்களையும், தான் ஞானஸ்நானம் பெற்ற விவரத்தையும் அவர் சொல்லவில்லை.

 
6. ஆனால், லூக்கா தான் நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது, ஞானஸ்நானம் (அப் 9:18) பற்றியும் இதர விவரங்களையும் சொல்கிறார்.

 
 
ஆக, இந்த 26ம் அதிகாரத்தில் பல விவரங்களை எடுத்துவிட்டு, அனனியாவை பவுல் சந்தித்த பிறகு தனக்கு இயேசுவிடமிருந்து கிடைத்த தரிசனங்கள் மற்றும் கட்டளைகள் போன்றவற்றை சுருக்கமாகச் சொன்னார். பவுலின் வார்த்தைகள் எப்படி இருந்தது என்றால், நியாயம் விசாரிக்க உட்கார்ந்து இருக்கும் அகிரிப்பா இராஜாவையே கிறிஸ்தவராக மாற்றும் அளவிற்கு, தீர்க்கதரிசிகளை நீர் நம்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன், உமக்கு யூதர்களின் அனைத்து விவரங்களும் தெரியும் என்று பலவாறுச் சொல்கிறார்.

 
இந்த 25 மற்றும் 26ம் அதிகாரங்களை முழுவதுமாக படித்துப்பாருங்கள், பவுல் கொடுத்த சாட்சியின் பின்னனி என்ன என்பது தெளிவாக புரியும். பவுல், தான் எப்படி இயேசுவை ச‌ந்தித்தார் என்ற ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்லவில்லை, அதற்கும் அதிகமாக பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், மோசே என்று ஆரம்பித்து அனேக விவரஙகளைச் சொன்னார், அதற்கு பெஸ்து ஆளுநர் "உனக்கு பயித்தியம் பிடித்துள்ளது" என்று சத்தமிடுகிறார். அகிரிப்பா இராஜாவோ, "என்னை கிறிஸ்தவாக மாற்றிவிடுவாய் போல் இருக்கிறதே" என்றுச் சொல்கிறார்(புலம்புகிறார்).
 
 
(அப் 26:24-28) இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகக் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. அகிரிப்பா ராஜாவே, தீக்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்றான்.
 
 
ஆக, இஸ்லாமியர்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்னவென்றால், பவுல் தன் சாட்சியை சுருக்கமாகவும், பழைய ஏற்பாட்டு விவரங்களோடும், அதற்கு பின்பு நடந்த விவரங்களோடும், தனக்காக வழக்காடிய விவரங்களே 26ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 
பவுல் தரையிலே விழுந்து இருந்தபோதே இயேசு எல்லாவற்றையும் சொல்லவில்லை, பவுலை அனனியா சந்தித்து, கண்பார்வை அடைந்து, ஞானஸ்நானம் பெற்று, பிறகு தொடர்ந்து தனக்கு கிடைத்த இதர தரிசனங்களின் சுருக்கத்தையே பவுல் இங்கு சொல்லியுள்ளார். இது முரண்பாடோ அல்லது பிழையோ அல்ல.

 
முடிவுரை:

ஒவ்வொரு முறையும் நடந்த நிகழ்ச்சியை தேவையில்லாத இடங்களிலும் ஆதியிலிருந்து அந்தம்வரை யாரும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். எதற்கு முக்கியத்தும் தரவேண்டுமோ அதற்கு தந்து சுருக்கமாகச் சொல்வார்கள். இதனை புரிந்து கொள்ளாமல், இஸ்லாமியர்கள், ஆகா, இது தான் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

 
 
நான் முஸ்லீம்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்,

உங்களிடம் உங்கள் ஐந்து வயது மகனோ அல்லது மகளோ வந்து "திருமணம் என்றால் என்ன? பிள்ளைகள் எப்படி பிறக்கிறார்கள்? செக்ஸ் என்றால் என்ன? " என்ற கேள்விகளை கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

இதே கேள்வியை, அதே மகன் அல்லது மகள் தனக்கு 15 வயதாகும் போது கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

இதே கேள்வியை 20 வயதாகும் போது கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

இதே கேள்வியை, உங்கள் நண்பர் (சமவயதுள்ளவர்) கேட்டால் உங்கள் பதில் எப்படி இருக்கும்?

எல்லாருக்கும் ஒரே மாதிரியாக பதிலைத தருவீர்களா? அல்லது கேட்கும் நபரை பொருத்து, இடத்தை பொருத்து, அவரது வயதைப் பொருத்து, சுருக்கியோ, விவரித்தோ, தேவையில்லாததை மறைத்தோ சொல்வீர்களா? அல்லது கிளிப்பிள்ளையைப் போல ஒரே மாதிரியாக எல்லாருக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் சொல்வீர்களா?
 
 
இயேசு பவுலை தமஸ்கு சாலையில் சந்தித்த விவரங்கள் வரிசை கிரமமாக:

 
1. சவுலும் மற்றவர்களும் பிராயாணம் செய்துக்கொண்டு இருக்கும் போது, தமஸ்குவிற்கு அருகாமையில் வந்த போது, பெரிய வெளிச்சம் அவர்களைச் சுற்றி பிரகாசித்தது, எல்லாரும் கீழே விழுகிறார்கள்.

 
2. விழுந்தவுடன் சுதாரித்துக்கொண்டு எல்லாரும் எழுந்திருக்க முயற்சி எடுத்து இருப்பார்கள், கண்கள் இருள் அடையாத அனைவரும் சில வினாடிகளில் எழுந்தும் இருப்பார்கள்,

 
3. சவுலினால் மட்டும் எழுந்திருக்க முடியவில்லை, காரணம் அதிக வெளிச்சத்தினால் அவரது கண்கள் இருளடைந்தது, மற்றும் அவரது பெயரை இரண்டு முறை கூப்பிட்டு இயேசு பேசியதால், அவர் பேச்சு எல்லாம் முடிந்தவுடன் எழுந்திருக்க வேண்டும், அதுவும் மற்றவர்களின் துணைக்கொண்டு.

 
4. இயேசுவின் மற்றும் சவுலின் உரையாடலின் போது, மற்றவர்கள் எழுந்து நின்று, சத்தத்தை மட்டுமே கேட்டு, சவுல் மட்டும் பேசுவதை புரிந்துக்கொண்டு, வேறு மனிதர்களைக் காணாமல், திகைத்துப்போய் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.

 
5. சவுலுக்கு கண்கள் தெரியாமல் போகவே, அவர் மற்றவர்களின் துணைக்கொண்டு எழுந்து ஊருக்குள் வந்தார்.

 
6. அனனியாவை இயேசு அனுப்ப, அவர் விவரத்தை சவுலுக்குச் சொல்லி, ஜெபிக்க, கண்கள் மறுபடியும் தெரியவர, சவுல் ஞானஸ்நானம் பெற்றார்.

 

2. முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்

 
 
முஹம்மதுவிற்கு காபிரியேல் தூதன் 23 ஆண்டுகள் குர்‍ஆன் வசனங்களை சிறிது சிறிதாக இறக்கினார், முஹம்மதுவை காபிரியேல் தூதன் அனேக முறை சந்தித்தார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.

 
எல்லா நேரங்களிலும் குர்‍ஆன் வசனங்களை தூதன் சொல்லும்போது, முஹம்மது தனியாக இல்லை. அப்படி வெளிப்பாடு தனக்கு வரும் என்று அறிந்து எல்லாரையும் தான் இருக்கும் இடத்தை விட்டு சென்றுவிடுங்கள், தூதன் காபிரியேல் பேசுவது உங்கள் காதில் விழாதபடி அதிக தூரமான இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அவர் சொல்லியிருக்கமாட்டார். அதாவது முஹம்மதுவைச் சுற்றி அனேகர் இருக்கும் போதே சில நேரங்களில் அவருக்கு குர்‍ஆன் வசனங்களை தூதன் சொல்லியுள்ளார். விஷயம் இப்படி இருக்கும் போது:

 
மற்றவர்களின் கண்களுக்கு தெரியாத தூதன் இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தார்?

தூதர் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காமல், இவருக்கு மட்டும் எப்படி கேட்டது?

 
எப்போது தனக்கு வெளிப்பாடு வரும் என்று முஹம்மதுவிற்கே சரியாக தெரியாது, சரியான சமயத்தில் தேவைப்படும் போது அல்லா இறக்குவார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது, கிட்டத்தட்ட 6000 க்கும் அதிகமான வசனங்கள் முஹம்மது, தனி அறையில் [யாரும் இல்லாமல்] இருக்கும் போதா, இவரின் காதுகளில் அவைகள் தொணித்தது அல்லது தூதன் இவரின் காதுகளில் தொணிக்கச்செய்தார்? இல்லை இல்லை, இவருக்கு வெளிப்பாடுகள் வெளிப்பட்டும் போது இதர மனிதர்களும் இருந்துள்ளனர். பலர் அவருக்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்ட பிறகு அவரது முகம் எப்படி இருந்தது என்றுச் சொல்லியுள்ளார்கள். வஹி வந்த பிறகு அவருக்கு குளிர் காலத்திலும் வியர்வை வரும் என்று கூறியிருக்கின்றனர்.

 
வியர்வைத் துளிகள் வழியத் தொடங்குவதை கண்டவர்கள்
 
 
பாகம் 1, அத்தியாயம் 1, எண் 2

ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும்,

 
"கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா(ரலி) கூறினார்.

 
பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2661

 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

 
.... அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்" என்று கூறினார்கள். ......
 
 
ஆயிஷாவோடு முஹம்மது படுக்கையில் படுத்து இருக்கும் போது கூட குர்‍ஆன் வசனங்கள் இறங்கியுள்ளன.
 
 
பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2581

 
.....அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.....
 
 
குர்‍ஆன் வசனங்கள் எப்போதெல்லாம் இறங்கும்: அல்லா குர்‍ஆன் வசனங்களை இறக்குவதற்கு ஒரு நேரம் காலம் பார்க்கவில்லை, முஹம்மது தனியாக இருக்கும் போது மட்டும் இறக்கவில்லை அனேக நேரங்களில் அவர் மற்றவர்களோடு இருக்கும் போதும், இன்னும் சொல்லப்போனால், ஆயிஷாவோடு முஹம்மது படுத்து இருக்கும் போது கூட வசனங்கள் இறங்கியுள்ளன.

 
[முஹம்மது சொல்கிறார், ஆயிஷாவோடு இவர் படுத்து இருக்கும் போது மட்டுமே அல்லா குர்‍ஆன் வசனங்களை இறக்குகிறாராம். மற்ற எந்த மனைவியோடும் படுத்திருக்கும் போது அப்படி வசனங்கள் வருவதில்லையாம். ஒரு வேளை ஆயிஷா 18 வயதிற்குட்பட்டவர் என்பதாலும், முஹம்மதுவின் மனைவிகளில் ஆயிஷாவிற்கு மட்டும் தான் "முஹம்மது" முதல் கணவர் என்பதாலும் அல்லா இறக்கினாரோ என்னவோ, அது நமக்குத் தெரியாது, அல்லா தனக்கு எப்போது விருப்பமோ அப்போது இறக்கிக்கொள்ளட்டும், அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. இந்த கட்டுரையின் கருப்பொருள் இதுவல்ல, இக்கட்டுரையின் கருப்பொருள் ஒரு கூட்ட மக்கள் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் புரியும் வண்ணம் வசனத்தை இறக்கவோ, பேசவோ இறைவனால் முடியுமா முடியாதா என்பது தான்.]

 
இங்கு நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், முஹம்மதுவிற்கு வஹி மூலம் வசனங்கள் இறக்கப்படும் போது அனேகர் இருந்துள்ளனர். பவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியைப் பற்றி முஸ்லீம்கள் கேட்கும் அதே கேள்விகள் இங்கு கேட்கப்படுகின்றன.

 
1. காபிரியேல் தூதன் பேசுவது முஹம்மதுவிற்கு மட்டும் எப்படி கேட்கிறது, மற்றவர்களும் கூட இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படி கேட்கவில்லை?

2. ஆயிஷாவோடு ஒரே படுக்கையில் முஹம்மது படுத்து இருக்கும் போது கூட தூதன் சொல்லும் வசனங்கள் முஹம்மதுவிற்கு மட்டுமே கேட்கிறது. கணவன் மனைவி நேருக்கத்தில் இருக்கும் போது கூட முஹம்மதுவிற்கு மட்டும் வசனங்கள் கேட்கப்பட்டது. இது எப்படி?

இறைவனுக்கு எல்லாம் சாத்தியம்:

 
இங்கு நான் குறிப்பிட விரும்பியது, இறைவனால் எல்லாம் சத்தியம், அதாவது முஹம்மதுவோடு அனேகர் இருக்கும் போது, அவருக்கு மட்டுமே கேட்கும் படி தூதன் பேசுவது என்பது இறைவனுக்கு மிகவும் சுலபமான விஷயம், இதை எல்லா இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அது போல, ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் புரியும் படி பேசுவதும் இறைவனுக்கு சுலபம் [ தமஸ்கு சாலையில் இயேசு பவுலுக்கு மட்டும் புரியும் படி பேசியது].

 
ஆக, தேவன் யாருக்கு தரிசனம் தரவேண்டும் என்று விரும்புகிறாரோ அவருக்கு மட்டுமே தரிசனங்களைத் தருகிறார்[தானியேலுக்கு மட்டும் தெரிந்த தரிசனம் போல]. மற்றவர்கள் அங்கு இருந்தாலும், அவர்களுக்கு அது தெரிவதில்லை, தேவன் விரும்பினால் எல்லாருக்கும் தெரியவைப்பார்[மத்தேயு 17:1-9 வரை பார்க்கவும்].

ஆக, அருமையான இஸ்லாமியர்களே, அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். தேவனுக்கு சாத்தியமில்லாத காரியம் ஒன்றுமில்லை.

 
உங்கள் நபியின் காதுகளில் மட்டுமே தொணித்த வசனங்கள் மற்றவர்களுக்கு ஏன் கேட்கப்படவில்லை? தன்னோடு படுத்துக்கொண்டு இருந்த தன் மனைவிக்கு ஏன் அவ்வசனங்கள் கேட்கவில்லை. ஆக, இறைவன் விரும்பியது அவர் விரும்பியபடி நடக்கும்.

 
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொன்ன அல்லாவின் முரண்பாடுகள்:

பவுல் இயேசுவின் சத்தத்தைக் கேட்டு புரிந்துக்கொண்டது பொய் என்றுச் சொல்வீர்களானால், உங்கள் முஹம்மது கேட்டதும் பொய் தான், தூதன் அவரை சந்தித்தது கூட பொய் தான். முஹம்மதுவின் கற்பனையின் மொத்த வடிவமாம் குர்‍ஆனில் அனேக முரண்பாடுகள், பிழைகள், சரித்திர‌ நிகழ்வுகளின் முன்னுக்குப் பின் முரண்பட்ட விவரங்கள் மட்டுமல்ல, ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாக வித்தியாசமான சூழ்நிலைகளில் சொன்னதால், பைபிள் வேதம் இல்லை என்றுச் சொல்வீர்களானால், உங்கள் குர்‍ஆனிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன, அதற்கு உங்கள் பதில் என்ன?


படிக்கவும்: ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொன்ன அல்லாவின் முரண்பாடுகள்: பாகம் 1: (மோசேயும், எரியும் புதரும் - MOSES AND THE BURNING BUSH)

 
அல்லா ஒரு நிகழ்ச்சியை எப்படி வெவ்வேறாக தன் குர்‍ஆனில் சொல்லியுள்ளார் என்பதை அனேக குர்‍ஆன் வசனங்களைக் கொண்டு விளக்கியுள்ளோம். முஸ்லீம்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை கொண்டு இருப்பதால், அல்லாவிற்கு ஒரு நிகழ்ச்சியை ஒரே மாதிரியாக சொல்ல தெரியவில்லை என்ற முடிவிற்கு இஸ்லாமியர்கள் வரலாம். பைபிளுக்கு எந்த நிபந்தனையை இஸ்லாமியர்கள் வைப்பார்களோ அதே நிபந்தனையை சந்திக்க குர்‍ஆன் தோற்றுவிட்டது, அல்லது அல்லா தோற்றுவிட்டார்.



 

 
 

StumbleUpon.com Read more...

சிலி நாட்டில் நிலநடுக்கம்:வீடுகள் குலுங்கின

 
 
lankasri.comதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் இன்று அதிகாலை திடீர் என்று நில நடுக்கம் ஏற்பட்டது.தலைநகர் சான்டியாகோ அருகே உள்ள வால்பராசியோ மற்றும் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.3-ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நில நடுக்கத்தால் உயரமான கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.சில மாடி கட்டிடங்கள் இப்போது சாய்ந்த கோபுரம் போல் சரிந்த நிலையில் காணப்படுகிறது.அந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடினார்கள்.ஒரு சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.

இன்னும் சில வீடுகள் இடிந்து விழுந்தன.ஆனாலும் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.கடலுக்கு அடியில் 21.7 மைல் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல இந்தோனேஷியாவின் மாலுக்கு தீவுப்பகுதியிலும் நேற்று இரவு நில நடுக்கம் ஏற்பட்டு வீடுகள் குலுங்கின.5.2 ரிக்டர் அளவில் பதிவானது.ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1229680749&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஜார்ஜ்-புஷ் மீது ஷூ வீசியவர் மன்னிப்பு கடிதம்

 
 
lankasri.comஅமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் ஈராக்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர்மீது ஒரு வாலிபர் தனது ஷுவை கழற்றி 2-தடவை வீசினார்.ஜார்ஜ்புஷ் தலையை குனிந்து கொண்டதால் 2-தடவையும் அவர் தப்பி விட்டார்.ஷூ வீசிய அந்த பாக்தாத் டெலிவிஷன் நிருபர் முந்தாசர் சைதி கைது செய்யப்பட்டார்.

அவர் இப்போது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார்.அமெரிக்க எதிர்ப்பு நாடுகளில் இருந்து அவருக்கு பரிசுகள் குவிகின்றன.

இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அந்த வாலிபர் முந்தாசர் ஈராக் பிரதமர் நூரிமாலிகிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.தனது செயலுக்கு அவர் அந்த கடிதத்தில் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது செயல் தவறானதுதான்.அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.முன்பு (2005) ஒரு தடவை எனக்கு உங்கள் வீட்டில் விருந்து கொடுத்தீர்கள்.புஷ்மீது ஷூ வீசியதால் உங்களுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அந்த வாலிபர் கூறியுள்ளார்.

ஆனால் "மன்னிப்பு" என் பது ஈராக் பிரதமருக்கும் "புஷ்"க்கும் பிடிக்காத ஒன்றா அல்லது பிடித்த ஒன்றா என்பதுதான் தெரிய வில்லை.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி அவருக்கு 15-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும்.

இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் மீது வீசப்பட்ட ஷூவை அமெரிக்க அதிகாரிகளும் ஈராக் போலீசாரும் நன்கு சோதனை போட்டனர்.அதில் வெடிகுண்டுகள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்று துருவி துருவி ஆராய்ந்த பிறகு அந்த ஷூவை அழித்து விட்டனர்.இனி யாரும் அந்த ஷூவை கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்க முடியாது.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1229680561&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் ராக்கெட் வீசித் தாக்குதல்

 
 
lankasri.comபோர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக ஹமாஸ் அமைப்பு அறிவித்ததையடுத்து பாலஸ்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது இன்று காலை இரு ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை என இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.போர் நிறுத்தம் முடிந்துவிட்டது.இஸ்ரேல் போர் நிறுத்த நிபந்தனைகளை மதிக்காததால் அதைப் புதுப்பிக்க முடியாது என ஹமாஸ் அமைப்பு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1229678286&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

உலக பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்:எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றச்சாட்டு

உலக பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்:எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றச்சாட்டு
 
lankasri.comஉலக பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் என்று கருத்து கூறியுள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.நியூயார்க்கில் ஆசிய சொசைட்டி என்ற அமைப்பு ஏற்பாடு செய்த குழு விவாதத்தில் பங்கேற்று ருஷ்டி கூறியதாவது:

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அந்த நாட்டு அரசு கூறுவது பொய்.பயங்கரவாதம் என்றால் கண்ணைமூடிக்கொண்டு பாகிஸ்தான் என்று கூறும் நிலை உள்ளது.

மும்பை மீது தாக்குதல் நடத்தியவர்கள் காட்டுமிராண்டிகள்.அவர்களுக்கு தக்க பதிலடி தர அரசும்,பாதுகாப்புப் படைகளும் தவறிவிட்டன.

தமது மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை ஒழிப்போம் என்று பாகிஸ்தான் கூறுகிறது.அது அப்படி ஒழித்துக் காட்டுமா என்பது சந்தேகம்தான்.

பயங்கரவாதிகளால் சின்னாபின்னம் ஆவப்போவது பாகிஸ்தானே என்பதையும் சொந்த நாட்டின் நலனை கருதியாவது பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஒழிக்கவேண்டும் என்றும் பாகிஸ்தானை உலகநாடுகள் நிர்பந்திக்கவேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் துணைபுரிந்தவர் பர்வீஸ் முஷாரப் என்று பெருமைப்படப் பேசி அந்த நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் கண்டிக்கப்பட வேண்டியவர்தான்.இந்த நிதியுதவி பயங்கரவாதத்தை ஒடுக்கவே என்று நிபந்தனை ஏதும் விதிக்காமல் புஷ் வாரிக்கொடுத்தார்.முஷாரப் என்ன செய்தார்?

தான் ராணுவ தளபதியாக இருந்தபோது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காஷ்மீரில் சண்டையிட தூண்டுகோலாக இருந்தவர்தான் முஷாரப்.மேலைநாட்டவர் வந்தால் அவர்களுக்கு ஒரு முகமும் தீவிரவாதிகளுக்கு ஒரு முகமும் காட்டியவர் முஷாரப்.

காஷ்மீர் பிரச்னை,குஜராத் கலவரம்,பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றால் மும்பை தாக்குதல் நடந்ததாக எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார்.இது கண்டிக்கத்தக்கது.வேறுவேறு சித்தாந்தங்களின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கேற்ப பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என்றார் ருஷ்டி.

மும்பை தாக்குதலில் உறவினர்களை இழந்தவரும் எழுத்தாளருமான மீரா காம்தார் உள்ளிட்டோர் இந்த குழு விவாதத்தில் பங்கேற்றனர்.

 

 

StumbleUpon.com Read more...

மொஹாலி டெஸ்ட்:முதல்நாளில் இந்தியா

மொஹாலி டெஸ்ட்:முதல்நாளில் இந்தியா-179/1
இங்கிலாந்து அணிக்கு எதிராக மொஹாலியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.கம்பீர் 106 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இன்று துவங்கிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவு செய்ததைத் தொடர்ந்து துவக்க வீரர்களாக சேவாக்,கம்பீர் களமிறங்கினர்.

சென்னையில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட வீரேந்தர் சேவாக்,இன்றைய போட்டியிலும் தனது அதிரடியைத் தொடருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில்,அவர் ரன் எதுவும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து வந்த திராவிட்,இன்றைய போட்டியில் 2வது அல்லது 3வது விக்கெட்டுக்கு களமிறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தாலும்,அவர் வழக்கம் போல் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினார்.

இந்திய அணி 6 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த நிலையில் ஜோடி சேர்ந்த கம்பீர்-திராவிட் இணை துவக்கத்தில் ஆமை வேகத்தில் ரன் சேகரித்தாலும்,உணவு இடைவேளைக்கு பின்னர் சுமாராக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.

தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே திராவிட் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கௌதம் கம்பீர் தனது 4வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

முதல் நாளில் 72 ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்,போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தை நிறுத்துவதாக நடுவர்கள் அறிவித்தனர். அப்போது கம்பீர் 106 ரன்கள்,திராவிட் 65 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1229703314&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

ஈராக்கிய மருத்துவருக்கு ஆயுள் சிறைவாசம் கிடைக்கலாம்

 

  •  லண்டன், கிளாஸ்கோ நகரங்களில் தொடர் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் களை நடத்தச் சதி செய்த குற்றம் புரிந்ததாக ஈராக்கிய மருத்துவர் ஒருவர் பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.
    பிலால் அப்துல்லா என்ற அந்த மருத்துவர் கொலை செய்யச் சதி புரிந்ததாகவும், வெடிபொருட்களை வெடிக்கச் செய்ய சதி செய்ததாகவும் குற்றம் புரிந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    பிரிட்டனில் வேலை பார்க்கும் முகமது ஆஷா என்ற மற்றுமொரு ஜோர்டானிய மருத்துவர், இதே குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
    கிளாஸ்கோ விமான நிலையத்தின் பிரதான வாயிலுக்குள் எரிந்து கொண்டிருந்த ஜீப் ஒன்றை ஓட்டிச்சென்று தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்தக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட முயற்சியின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    கிளாஸ்கோ சம்பவத்துக்கு முதல் நாள், லண்டனில் இரவு விடுதி ஒன்றிலும், பஸ் நிறுத்துமிடம் ஒன்றிலும் கார் குண்டு வெடிப்புகள் நிகழ்த்த முயற்சி நடந்தது. அதிலும் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

StumbleUpon.com Read more...

சிங்கப்பூரையும் உலுக்கிய மும்பைத் தாக்குதல்

 

 நவம்பர் மாதம் 26ம் தேதி நிகழ்ந்த மும்பை தீவிரவாரத் தாக்குதல் சிங்கப்பூர் மக்களையும் உலுக்கியது. ஓபராய் ட்ரைடன்ட் ஹோட்டலில் தங்கி இருந்த 28 வயது இளம் சிங்கப்பூர் வழக்குரைஞரும் பிணை பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்ற செய்தி இங்குள்ள மக்கள் இதயங்களைப் பதை பதைக்க வைத்தது.
இரு நாட்களுக்கு பின்னர், அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார் என்று செய்தி, அவரின் கணவர், குடும்பத்தாரை மட்டுமின்றி ஒட்டு மொத்த சிங்கப்பூரர்களைக் கண் கலங்க வைத்தது.
மும்பையில் உலகப் பொருளியல் மந்தநிலையின் தாக்கம் பற்றி உரை நிகழ்த்த சென்ற திருமதி லோ ஹுவெய் யென் (உள்படம்), ஹோட்டலின் 19வது மாடியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் சிங்கப்பூரர் திருமதி லோ என்பது
குறிப்பிடத்தக்கது.
அவரது கண் விழிப்புச் சடங்குக்கும், பின்னர் இறுதிச் சடங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்கள் அஞ்லியைச் செலுத்தினர்.
அதிபர், பிரதமர், மூத்த அமைச்சர், அமைச்சர்கள், சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், திருமதி லோவை முன் பின் அறியாதவர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
திருமணமாகி ஒரு வருடமே ஆன தமது மனைவியின் இழப்பு தம் இதயத்தைப் பிளக்கும் துயரமாக அமைந்துவிட்டது என்றும் தீவிரவாதி களால் கொல்லப்படுவதற்கு சிறிது நேரம் வரை தம் மனைவி தம்முடன் தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பேசிக் கொண்டிருந்தார் என்று கண்ணீர் மல்க தகவல் சாதனங்களுக்குப் பேட்டியளித்தார் கணவர் திரு மைக்கல் புகேந்திரன்.
சிங்கப்பூரர்கள் பலரின் இதயத்தில் நீங்கா இடத் தைப் பிடித்தார் திருமதி லோ ஹுவெய் யென்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP