ஜார்ஜ்-புஷ் மீது ஷூ வீசியவர் மன்னிப்பு கடிதம்
>> Friday, December 19, 2008
|
|
அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் ஈராக்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர்மீது ஒரு வாலிபர் தனது ஷுவை கழற்றி 2-தடவை வீசினார்.ஜார்ஜ்புஷ் தலையை குனிந்து கொண்டதால் 2-தடவையும் அவர் தப்பி விட்டார்.ஷூ வீசிய அந்த பாக்தாத் டெலிவிஷன் நிருபர் முந்தாசர் சைதி கைது செய்யப்பட்டார். அவர் இப்போது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து விட்டார்.அமெரிக்க எதிர்ப்பு நாடுகளில் இருந்து அவருக்கு பரிசுகள் குவிகின்றன. இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அந்த வாலிபர் முந்தாசர் ஈராக் பிரதமர் நூரிமாலிகிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.தனது செயலுக்கு அவர் அந்த கடிதத்தில் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- எனது செயல் தவறானதுதான்.அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.முன்பு (2005) ஒரு தடவை எனக்கு உங்கள் வீட்டில் விருந்து கொடுத்தீர்கள்.புஷ்மீது ஷூ வீசியதால் உங்களுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பது எனக்கு தெரியும். இவ்வாறு அந்த கடிதத்தில் அந்த வாலிபர் கூறியுள்ளார். ஆனால் "மன்னிப்பு" என் பது ஈராக் பிரதமருக்கும் "புஷ்"க்கும் பிடிக்காத ஒன்றா அல்லது பிடித்த ஒன்றா என்பதுதான் தெரிய வில்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி அவருக்கு 15-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் மீது வீசப்பட்ட ஷூவை அமெரிக்க அதிகாரிகளும் ஈராக் போலீசாரும் நன்கு சோதனை போட்டனர்.அதில் வெடிகுண்டுகள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்று துருவி துருவி ஆராய்ந்த பிறகு அந்த ஷூவை அழித்து விட்டனர்.இனி யாரும் அந்த ஷூவை கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்க முடியாது. |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1229680561&archive=&start_from=&ucat=1&
0 கருத்துரைகள்:
Post a Comment