சமீபத்திய பதிவுகள்

கூகிள் குரோமில் தமிழ்கிறிஸ்தவர்கள் தளம்

>> Wednesday, September 3, 2008

கூகிள் நிறுவனம் புதிதாக‌ குரோம் (Chrome) என்னும் இணைய உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது


அதில் தமிழ்கிறிஸ்தவர்கள் தளம் அழகாக தெரிகிறது.விருப்பம் உள்ளவர்கள் இந்த உலாவியை தரவிறக்கிக்கொள்ளவும்.தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்

StumbleUpon.com Read more...

அட தினமலர், பைத்தியமே!

 

வழக்கம்போல டவுட் தனபாலு என்ற தினமலர் அக்கப்போர் பகுதியில் இன்றைக்கும் உச்சிக்குடுமித் தனத்தோடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி தமிழக செயலாளர் வரதராஜன்: ஒரிசா வன்முறைகளைக் கண்டித்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜ.க. வினர் போட்டியாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, தமிழகத் திலும் கலவரங்களை அரங்கேற்றும் ஒத்திகையோ என்ற அய்யப்பாடு எழுகிறது.
டவுட் தனபாலு: உங்க லாஜிக்கையே புரிஞ்சுக்க முடிய லையே... ஒரிசாவுல நடந்த ஒரு பிரச்சினையை, தேவையில்லாம தமிழகத்துக்குக் கொண்டு வந்து, அதுவும் மாணவர்கள்ட்ட அதைப்பத்தி பிரச்சாரம் பண்ணலாமான்னு கேட்டா, அதையும் கலவரத்துக்கு ஒத்திகைன்னா என்னங்க அர்த்தம்...? அவங்க பண்ணா, ஜனநாயக நடவடிக்கை; இவங்க பண்ணா கலவர ஒத்திகையா...? ("தினமலர்", 1.9.2008).
அடிபட்டவன் அழுவது என்பது இயற்கை; ஒரிசாவில் சிறுபான்மை மக்களான கிறித்தவர்கள் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், தமிழகத்தில் கிறித்தவக் கல்வி நிறுவனங் கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில், ஒரு நாள் விடுமுறை விட்டது என்பது அந்த வகையைச் சேர்ந்ததாகும்.
அதனை எதிர்த்து பா.ஜ.க.வினர் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது - நாங்கள் அடிப்போம் - நீங்கள் அழக்கூடாது! என்கிற அராஜகம் - இந்துத்துவாவைச் சேர்ந்தது. வெண் ணெய்யும் - சுண்ணாம்பும் ஒன்றல்ல!

 

http://files.periyar.org.in/viduthalai/20080901/news05.html

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் வன்முறைகள்

ஒரிசாவில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் வன்முறைகள்
சாமியாரைக் கொன்றதாகப் பழிபோட்டு கிறிஸ்தவர்கள், கன்னியாஸ்திரிகள்,
தேவலாயங்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர்
சிறுபான்மை மக்கள் அடித்து விரட்டப்படுகின்றனர்
கூடுதல் இராணுவத்தை அனுப்பி சிறுபான்மை மக்களைக் காப்பாற்றுக!
மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்

பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்த பிஜு ஜனதா தள முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி நடைபெறும் ஒரிசாவில் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் கிறித்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளை - கூடுதல் இராணுவத்தை அனுப்பி கலவரத்தை ஒடுக்கி, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
ஒரிசா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்சின் துணைப் பிரிவுகளான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளின் வன்முறை வெறியாட்டங்கள் எல்லை கடந்து சென்று கொண்டுள்ளன!
பா.ஜ.க.வுடன் உள்ள உறவே மூலகாரணம்
நவீன் பட்நாய்க் தலைமையில் உள்ள ஒரிசா மாநில அரசு, பா.ஜ.க.வுடன் உறவு பூண்ட கூட்டணியின் தைரியமும், கண்டும் காணாத அரசின் போக்கும்தான் இதற்குக் காரணமா என்று தெரியவில்லை; என்றாலும் மூலகாரணம் இதுதான் என்பது வெளிப்படையாகும்!
கிறித்தவர்களின் மாதா கோயில்களை இடிப்பதோடு, கிறித்தவப் பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் மற்றவர்களை மேற்கூறிய இந்து தீவிரவாத அமைப்பினர் ஊர்களிலிருந்து அடித்து விரட்டுவது, தீயிட்டுக் கொளுத்துவது போன்ற வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அற்ற தன்மை நீடிக்கிறது!
மதத் தீவிரவாதத்தை எம்மதத்தினர் கிளப்பினாலும் மனித நேயர்கள் சகிக்கமாட்டார்கள் - கண்டிக்கவே செய்வர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து தொழுநோயாளிகளுக்கு கிராமங்களில் சிகிச்சை அளித்த கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரின் இரு குழந்தைகளையும் சேர்த்து உயிருடன் - அவருடைய ஜீப்பில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர் பஜ்ரங் தளம் என்ற அமைப்பினர்! 1999ஆம் ஆண்டில் (ஜனவரி 23). அதே ஒரிசாவில் கன்னியாஸ்திரிகளை, பெண் வேடமிட்டுச் சென்று கடத்திக் கொலை செய்த கூட்டம்தான் அது!
இதை எப்படி ஒரிசா மாநில அரசு தடுக்காமல் - வேடிக்கை பார்க்கிறது?
பழிபோட்டு கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள்!
சில தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு காவிச் சாமியாரைக் காட்டி, (மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது) அப்பழியை கிறித்தவர் மீது போட்டு, இப்படி ஒரு வன்முறை வெறியாட்டத்தை அங்கு இந்துத் தீவிரவாதிகள் - மதவெறியர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்!
மதத்தை ஏற்காதவர்கள் நாம் என்றாலும், மனித நேய மனித உரிமை அடிப்படையில் அத்தகைய கொடுஞ்செயல்களைக் கண்டிக்கத் தவறமாட்டோம்!
சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு - கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் திராவிடர் கழகத்தவர்கள்.
மேலும் இராணுவத்தை அனுப்புக!
மத்திய அரசு இதைக் கண்ட பிறகும் சும்மா இருக்கக் கூடாது. எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் - மேலும் கூடுதலாக இராணுவத்தை அங்கு அனுப்பி, பாதித்த சிறுபான்மை மக்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சென்னை
31.8.2008
 

StumbleUpon.com Read more...

மல்லாவியை இராணுவத்தினர் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

மல்லாவியை இராணுவத்தினர் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு : விடுதலைப் புலிகளுக்கு மிகவும் முக்கிய இடமாக விளங்கிய மல்லாவிப் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Image

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் கட்டளையின் கீழ் செயற்படும் 573வது படைப்பிரிவின், 57வது படையணி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மல்லாவியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கடுமையான பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதும், நேற்று பிற்பகல் அவர்கள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றிருப்பதாக இராணுவத்தினரை மேற்கொள்காட்டி பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணுக்காய் பகுதியை ஒரு வாரகாலத்திற்கு முன்னர் கைப்பற்றியிருந்த இராணுவத்தினர் தற்பொழுது மல்லாவியையும் கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

மல்லாவியில் விடுதலைப் புலிகள் பாரிய பாதுகாப்பு அரண்களை அமைத்து இராணுவத்தினரின் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டிருந்ததாகவும், தற்பொழுது விடுதலைப் புலிகளின் மல்லாவி, துணுக்காய்க்கு இடையிலான விநியோகப் பாதை தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

மல்லாவிப் பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றதையடுத்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையொன்றை விடுதலைப் புலிகள் இழந்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான மூன்றாவது நகரமாக மல்லாவி விளங்கியதாக இராணுவம் கூறுகிறது.

இதேவேளை, கிளிநொச்சி வன்னேரிப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேறல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்புத் தாக்குதல்களில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 60 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

- நமது செய்தியாளர் பிரசாந்தன்
 

StumbleUpon.com Read more...

அதிகாலை செய்தி எதிரொலி-க‌லைவாண‌ர் வீட்டுக்கு ப‌டையெடுப்பு

 
 
 
 
Imageஅதிகாலை செய்தி எதிரொலி தி.மு.க‌. அதிமுக‌. க‌லைவாண‌ர் வீட்டுக்கு ப‌டையெடுப்பு : நாகர்கோவில் செப் 3 : கண்ணீர் வடிக்கும் கலைவாணரின் வாரிசுகள் என்ற தலைப்பில் அவ‌ர‌து வாரிசுக‌ள் அவ‌ர‌து வீட்டுக்கு வ‌ரிகூட‌ க‌ட்ட‌ இய‌லாம‌ல் துய‌ர‌த்தில் மூழ்கியுள்ள‌ன‌ர். திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டவர், இன்றுள்ள முன்னனி நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பவர் கலைவாணர் என்.எஸ்.கே.Image
ஆனால் அவர் வாழ்ந்ததற்கு அடையாளமான இல்லம் இல்லாமலே போய்விடும் நிலையில் உள்ளது இன்று! என்று சில‌ நாட்களுக்கு முன் அதிகாலையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இத‌னைய‌டுத்து கும‌ரி மாவ‌ட்ட‌ அமைச்ச‌ரான சுரேஷ்ராஜனின் உதவியாளர் கலைவாணரின் வீட்டுக்குச் சென்று அங்கிருப்போரிடம் வரி பாக்கி விவரங்களை கேட்டு அமைச்சரிடம் தெரிவித்தார்.
அத‌ன் பின் நிக‌ழ்ச்சியொன்றில் ப‌ங்கேற்க‌ வ‌ந்திருந்த‌ அமைச்ச‌ர் சுரேஷ்ராஜ‌ன், "க‌லைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டுக்கு தற்போதுள்ள வரிப்பாக்கியைச் செலுத்த கன்னியாகுமரி மாவட்ட திமுக உதவி செய்யும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் கலைவாணரின் வீட்டை நினைவில்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தால், பல்வேறு தடங்கல்கள் வருகின்றன. வாரிசுதாரர்கள் சிலர் தங்களிடம் உள்ள கடன் தொகை குறித்தும் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் இருக்கிறது என்றார் அமைச்சர்.
 
Image
க‌லைவாண‌ர் வீடு
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலரும் கலைவாணரின் வாரிசுகளை சந்தித்துப் பேச முயற்சி மேற்கொண்டுள்ளதாக அவரது பேரன் ராஜன் நம்மிடம் தெரிவித்தார். திமுகவோ அதிமுகவோ உதவி செய்து க‌லைவாணர் இல்லத்தை பாதுகாத்தால் அதுவே போதும். உடனடி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்த அனைத்துத் தரப்பினரையும் அதிகாலை மனமாறப் பாராட்டுகிறது.
 
- ந‌ம‌து செய்தியாள‌ர் ஷாகுல் அமீது

 

 
http://www.adhikaalai.com/index.php?/en/???????-???????/???????-???????/???????-??????-???????-??????????-??????????-????????????

StumbleUpon.com Read more...

இலங்கையில் உச்சக்கட்ட போர் : 75 ராணுவத்தினர் பலி

இலங்கையில் உச்சக்கட்ட போர் : 75 ராணுவத்தினர் பலி    
 
Imageஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனியின் சொந்த ஊரான மல்லாவியை இலங்கை ராணுவம் பிடித்து விட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.
வன்னோரிக்கும் அக்கராயன் பகுதிக்கும் இடையே இலங்கையின் 8,9,1 0ம் பிரிவு இலங்கை ராணுவத்தினர் ஏராளமான ஆயுதங்களுடன் முன்னேறி வந்தனர். அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்த ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் ஆவேசமாக எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்புக்கும் ராக்கெட், பீரங்கி தாக்குதல் நடந்தது.
மாலை வரை நடந்த இந்த தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 30பேர் கொல்லப்பட்டனர். 50 ராணுவத்தினர் காயம் அடைந்தனர். ராணுவத்திடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.
 
நாச்சிகுபா பகுதியில் இருதரப்புக்கும் இடையே 2நாட்களாக விடிய விடிய சண்டை நடந்தது. இதில் 45 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
 
மல்லாரி பகுதியை பிடித்த ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் மொத்தம் 75 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
 
முழங்காவில், நாச்சிகுடா, வன்னேரி பகுதிகளில் கொல்லப்பட்ட சில ராணு வத்தினர் உடல்களை விடுதலைப்புலிகள் கிளி நொச்சிக்கு கொண்டு வந்தனர். அடையாளம் தெரியாத வகையில் சிதைந்த உடல்களை விடுதலைப்புலிகளே புதைத்தனர்.

 

 

StumbleUpon.com Read more...

பலி 2 பேர்தானா? சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து பின்னணியில் திடுக் தகவல்கள்

   
 

 

 

 

Imageசரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தினால் 2 பேர் உயிர் இழந்துள்ள நிலையில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தினால் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் , உயிர் இழந்தவர்களைப் பற்றிய உண்மை நிலவரங்களை சரவணா ஸ்டோர் நிர்வாகம் மூடி மறைப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக மக்கள் வெள்ளத்துடன் காணப்படும் தி.நகர் ரெங்கநாதன் தெரு, இந்த தீ விபத்தால் வெறிச்சோடிக் கிடப்பதுடன் பலவியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

 

நேற்று காலை 5.30 மணி அளவில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதில் பாத்திரக்கடையின் 5 தளங்களும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகத் தெரிவிக்கும் நிர்வாகத்தினர், பல உண்மை நிலவரங்களை மூடி மறைப்பதாகவும்,தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்களின் தொழில் போட்டியால் இந்த நாச வேலையில் சதி நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 18 மணி நேரத்துக்கு மேல் கொழுந்து விட்டெரிந்த இந்த் தீ வீபத்து காலை 10 மணிக்கு மேல் நடந்திருந்தால் ஆயிரக் கணக்கானோர் பலியாகி இருப்பார்கள் என்றும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சரவணா ஸ்டோர் குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் போதுமான பாதுகாப்பு வசதிகளோ அல்லது இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும்போது அதிலிருந்து தப்பிக்கவோ எவ்வித வசதிகளும் இல்லை என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தீ விபத்து சரவணா ஸ்டோர் நிறுவனதுக்கும் மட்டுமுள்ள இழப்பல்ல ஒட்டு மொத்த ரெங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு என்றும் பல்ரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் இறந்த ஊழியர்கள் கோட்டைச்சாமி, ராமகிருஷ்ணன் ஆகியோரின் உடல்களை காணவில்லை என்று பொய்த் தகவல் சொல்லி நிர்வாகத்தினர் பலரையும் ஏமாற்றி வருவதாக குற்ற்ம் சொல்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதால் விரைவில் பலவித திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து ஊடகங்களிலும் விளம்பரத்தால் வாடிக்கையாளர்களை வசப்படுத்தியிருந்த சரவணா ஸ்டோரின் போலித்தோற்றம் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகாவே பலரும் கருதுகின்றனர்.

வாடிக்கையாளர்களின் பணத்தால் செல்வங்களில் கொழிக்கும் நிறுவனங்களில் அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளனவா? என்பதையும்,அத்துமீறும் கடைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதும் அரசாங்கத்தின் கடமை.அப்பொழுதுதான் ஷாப்பிங் போய்விட்டு பொதுமக்கள் உயிருடன் வீடு திரும்ப உத்தரவாதம் கிடைக்கும்.

-பழ.அசோக்குமார்

 

 

http://www.adhikaalai.com/index.php?/en/????????????????/????????????????/???????????-2-????????-????-??????????-?????-????????

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP