சமீபத்திய பதிவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவாவில் இயங்க இருக்கிறது

>> Monday, October 12, 2009

 

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கை: 

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழு ஓக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் தொடக்கம் 4 ஆம் நாள் வரை ஒஸ்லோவில் கூடியது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பான நடைமுறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது. ஒஸ்லோவில் உள்ள தமிழ் சமூகத்தை ஆலோசனைக் குழு பொதுமேடையில் சந்தித்தது. தனிப்பட்டவர்களோடும் கலந்தாலோசனை செய்தது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கு முதற்படியாக அரசியல் யாப்பு அவைக்கு ஒரு தேர்தலை நடத்த வேண்டும். அரசியல்யாப்பு அவை ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்குளையும் அனுமதிக்கும்
களமாக விளங்கும். இந்த ஆலோசனைக் குழு தேர்தல் தொடர்பான நடை முறைகள் பற்றிக் கலந்துரையாடியது. தேர்தலில் போட்டி இடுவதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் குறிப்பிட்ட வயதெல்லை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கும் குறிப்பிட்ட அகவை அடைந்தவர்கள் யார் என்பதையும் அதற்கான சான்றுகள் எவை என்பதையும் பற்றி ஆராயப்பட்டன.
அரசியல்யாப்பு அவைக்கு நேரடித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நெறிமுறை வகுக்கப்படும்.

வாக்காளர்கள் முன்கூட்டியே பதிவு செய்யவும் பங்குகொள்ளவும் அனுமதிக்கப்படுவர். ஆலோசனைக் குழு அரசியல்யாப்பு அவையில் இருபாலாரும் பிரதிநித்துவம் செய்வது பற்றியும் ஆராய்ந்தது. தேர்தல்
பற்றிய திட்டமிடல், கண்காணிப்பு தொடர்பாக உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களை அமர்த்துவதுபற்றிய சாத்தியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நாடளாவிய அடிப்படைடயில் அமைக்கப்படும் செயற்குழுக்கள் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் அடிப்படை வேலையை மேற்கொள்ளும். இதில், தேர்தலைத் திட்டமிட்டு நடத்துவதற்கு உதவுதல்,புலம்பெயர் தமிழர்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் செய்திப் பரம்பல் செய்வது உள்ளடக்கப்படும்.

ஜெனிவாவில் அமைக்க இருக்கும் நாடு கடந்த அரசின் தலைமைச் செயலகமானது நாடளாவிய செயற்குழுக்களை ஒருங்கிணைக்கவும் மனிதவுரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும். வன்னியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதவுரிமை நெருக்கடிகள் பற்றி கலந்துரையாடிய ஆலோசனைக் குழு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது குடும்பத்தோடு
மீள் சேர்த்து வைக்கவும் பன்னாட்டு மட்டத்தில் அவர்களுக்குரிய பாதுகாப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும் அதற்குத் தேவையான வழிவகைகள் பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும்
பாடுபடும். அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் தரவுகளை ஆவணப்படுத்துவதில் ஆலோசனைக் குழு ஈடுபட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசு நிரந்தரமாக உச்ச சிங்கள மேலாண்மைக்கு கீழ்ப்பட்ட வன்னி வதை முகாம்களில் தொடர்ந்து 300000 தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமையை ஆலோசனைக் குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இந்த வதைமுகாம்களைப் பார்வையிட செய்தியாளர்களுக்கும் பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இடம் பெயர்ந்தோர் தொடர்பான 14 வது கோட்பாடு 'சுதந்திரமாக நடமாடும் உரிமையை' உறுதிப்படுத்தும் உரிமைக்கு எதிரானது. இது பன்னாட்டு சட்டத்தின் 13 ஆவது விதியையும் மீறுவததாக உள்ளது.

மேலும் பன்னாட்டு அரசியல் சட்டத்தின் 9 ஆவது 12 ஆவது 14 ஆவது சட்டத்திற்கெதிராக மக்களின் அரசியல் குடியியல் உரிமைகளை மறுப்பதாக நாம் கருதுகின்றோம். ஐ.நா சபையின் மனிதவுரிமை ஆணையம் இவ்வுரிமைகள் மீறப்படாதிருப்பதைக் கண்காணிக்கும் பொறுப்புடையது. அகதி முகாமில் சித்திரவதைக்குள்ளாகியும் கடத்தப்பட்டும் காணாமற் போகும் தமிழ் இளைஞர்கள் குறித்து ஐ.நா.சபையின் மனிதவுரிமைக் குழ விசாரணை நடத்த வேண்டும். இப்படியான நடவடிக்கைகள் மனிதவுரிமைகளையும் மானிட நேயத்தையும் மீறும் செயலாகும். முனிதவுரிமை மீறல்களைச் செய்த அரசுக்கு வழங்கும் ஐப்எஸ்ரி வரிச்சலுகையையும் அளைத்துலக நாணய நிதியம் வழங்கும் கடனையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும் என்று இவ் ஆலோசனைக் குழு கேட்டுக் கொள்கின்றது.

அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலை செய்ய அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அத்துடன் அந்த மக்கள் அனைவரும் அவரவரது
சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துல சட்ட வரைவுகளின்படி தமிழ் மக்களின் உரிமையை மறுத்தவர்களின் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும். அனைத்துல சமூகம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களை விடுவிக்கவும் தலையீடு செய்தல்
வேண்டும். இது அவர்களது கடமையும் பொறுப்பும் ஆகும். பன்னாட்டு சமூகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கின்றோம்.


source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிஸ்டம் இயக்கம் அறிய ரைட் கிளிக் மெனு விரிய

  

 

இந்த வாரத்திற்கான டவுண்லோட் புரோகிராம்களாக இரண்டினைத் தருகிறேன். இவை இரண்டுமே ஒரே தளத்திலிருந்து நீங்கள் பெறலாம். அதன் முகவரி www.moo0.com

முதல் புரோகிராம் சிஸ்டம் மானிட்டர்(SystemMonitor) என்னும் புரோகிராம். இது உங்கள் சிபியுவின் திறனை, உங்கள் கம்ப்யூட்டர் எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்று தெளிவாகக் காட்டும். தற்போது கிடைக்கும் இந்த புரோகிராம் பதிப்பினை இறக்கிப் பதிந்து இயக்கினால் 32 வகையான தகவல்கள் காட்டப்படுகின்றன. சிபியு, மெமரி, நெட்வொர்க், ஹார்ட் டிஸ்க் குறித்த பலவகையான தகவல்கள் கிடைக்கின்றன. 
இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை எது அழுத்திக் கொண்டிருக்கிறது என்று கண்டறியலாம். உங்கள் கம்ப்யூட்டர் இயங்காத நிலைக்குச் சென்று ஹேங் ஆனால், அது எதனால் ஏற்பட்டது என்றும் அறியலாம். கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பல வழிகளில் அறிய இது உதவுகிறது. இது காட்டும் வியூ மிகப் பெரிதாக இருப்பதாக உணர்ந்தால் அதன் மீது இருமுறை கிளிக் செய்தால், அது உடனே சுருக்கப்பட்டுக் காட்ட்டப்படும். மேலும் பல வசதிகள் நம் விருப்பத்திற்கேற்ப தரப்பட்டுள்ளன. மேலே கூறியுள்ள தளம் சென்றால் இந்த தளம் தரும் இன்னும் சில புரோகிராம்களின் பட்டியலை ஸ்கிரீன் ஷாட்களுடன் காணலாம். அதில் சிஸ்டம் மானிட்டருக்கான இடத்தில் கிளிக் செய்தால்,இந்த புரோகிராமின் செயல்பாடு மற்றும் பிற தகவல்கள் கிடைக்கும். கீழாகத் தரப்பட்டிருக்கும் டவுண்லோட் பட்டனில் அழுத்தினால், இந்த புரோகிராமிற்கான பைல் டவுண்லோட் ஆகும். பின்னர் பதிந்து இயக்கலாம்.
அடுத்ததாக இதே தளத்தில் ரைட் கிளிக்கர் புரோ (RightClicker Pro) என்ற புரோகிராம் கிடைக்கிறது. ரைட் கிளிக் செய்து நாம் பல புரோகிராம்கள் குறித்த மெனு பெறுகிறோம். இதனை காண்டெக்ஸ்ட் மெனு (Context Menu) என்றும் கூறுவார்கள். இந்த மெனுவிற்குக் கூடுதலாகப் பல பயன்களை இந்த புரோகிராம் தருகிறது. அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் எக்ஸ்புளோரர் விண்டோவினை இரண்டாக டூப்ளிகேட் செய்கிறது. பைலைத் திறக்க, நகர்த்த, காப்பி செய்திட மெனுக்களைத் தருகிறது. ஏற்கனவே சிஸ்டம் தரும் காண்டெக்ஸ்ட் மெனுவினை மறைக்க முடிகிறது. இதனைப் பதிந்து இயக்கிப் பார்த்தால் இன்னும் பல பயனுள்ள வழிகளைத் தருவதனைக் காணலாம். இவற்றின் மூலம் நம் கம்ப்யூட்டர் பயன்பாடு இன்னும் வேகமாகவும் எளிதாகவும் அமையும். இதில் தேவையில்லாத மெனுக்களை நீக்கவும் வழி தரப்பட்டுள்ளது. மேலும் மெனுக்களை உங்கள் வசதிக்கேற்ற வகையில் வரிசைப்படுத்தி அமைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள அனைத்து மெனுக்களையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டுமானால் ஷிப்ட் கீ அழுத்தி ரைட் கிளிக் செய்தால் போதும். 
மேலே கூறப்பட்ட இரு புரோகிராம்களும் இலவசமே. கட்டணம் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடனும் கிடைக்கிறது. இந்த புரோகிராம்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு கூடுதல் வசதிகள் தரப்படுவது இவற்றின் சிறப்பாகும். அண்மையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இவை மேம்படுத்தப்பட்டு இலவசமாகவும் வழங்கப்படுகின்றன.எந்த வகை இன்ஸ்டலேஷன் வேண்டும்?
சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், ஏதாவது ஒரு நிலையில், இதனை எந்த வகையில் இன்ஸ்டால் செய்திட வேண்டும் எனக் கேட்கும். பொதுவாக நாம் இதற்கு நேரம் எதனையும் ஒதுக்கிச் சிந்திக்காமல், அந்த புரோகிராம் எதனைத் தானாகத் தேர்ந்தெடுத்துள்ளதோ அதனையே தேர்ந்தெடுத்து விடுவோம். 
ஏன் அப்படி? எத்தனை வகை இன்ஸ்டலேஷன் உள்ளன? அவை என்ன கூறுகின்றன? எதனை நாம் தேர்ந்தெடுக்கலாம்? என்று இங்கு பார்க்கலாம். பொதுவாக Typical, Custom மற்றும் Compact என மூன்று வகை இன்ஸ்டலேஷனுக்கு ஆப்ஷன்ஸ் தரப்படும் Compact என்பது சிக்கனமான முறையில், தேவையற்ற, எப்போதாவது பயன்படுத்தும் வசதிகளை நீக்கி, அத்தியாவசிய வசதிகளை மட்டும் பெறுவகையில் இன்ஸ்டலேஷன் செய்வது. இதில் சிக்கனம் என்பது டிஸ்க் இட சிக்கனம் ஆகும். இந்த வகை முன்பு ஹார்ட் டிஸ்க் என்பது நம்மால் குறைந்த செலவில் பெறமுடியாத நிலையில் எண்ணி வகைப்படுத்தப்பட்ட வழியாகும். ஆனால் இப்போது ஹார்ட் டிஸ்க்கின் விலை நாம் எதிர்பார்க்காத அளவில் குறைந்துள்ளது மட்டுமின்றி, கொள்ளளவும் நாம் எண்ணிப்பாராத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே இடப்பற்றாக்குறை டிஸ்க்கில் ஏற்படும் நிலையில் மட்டுமே நான் இந்த வகை இன்ஸ்டலேஷனை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவேன்.இதில் இன்னொரு தொல்லையும் உள்ளது. இந்த வகை இன்ஸ்டலேஷனை மேற்கொண்டால், பின் புரோகிராமினைப் பயன்படுத்துகையில் சில கூடுதல் பைல்கள் தேவை எனில், புரோகிராம் உங்களிடம், சோர்ஸ் சிடியை டிரைவில் செருகுங்கள். நீங்கள் பயன்படுத்த விரும்பும் வசதிக்கான பைல்களெல்லாம் இதில் நிறுவப்படவில்லை என்று ஒரு செய்தியைக் காட்டும். அப்போது நாம் அந்த புரோகிராமின் ஒரிஜினல், சோர்ஸ் சிடியைத் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்துவதில் நேரத்தினைச் செலவழிக்க முடியாது. எனவே அடுத்த இரண்டு வகை இன்ஸ்டலேஷனைக் காணலாம். எதனைத் தேர்ந்தெடுக்கலாம்? Typical அல்லது Custom? Typical என்பதைத் தேர்ந்தெடுத்தால் அது மிக வேகமாக புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடும். இந்த வகை இன்ஸ்டலேஷனுக்கு நாம் கஷ்டப்பட்டு எதனையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் இதிலும் சில வசதிகள் விடுபட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக இந்த ஆப்ஷனையே பல புரோகிராம்கள், டிபால்ட்டாக தேர்ந்தெடுத்து வைத்திருக்கும். பாதுகாப்பாகவும் விரைவாகவும், பல வசதிகளைக் கொடுக்கும் வகையிலும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடும். இருப்பினும் அடுத்த மூன்றாவது வகையினையும் பார்க்கலாம். வழக்கமாக நான் இதனைத்தான் தேர்ந்தெடுப்பேன். இதன் மூலம் நாம் விரும்பும் வசதிகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். தேவையற்ற மொழிகளின் (ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்ச், ஜெர்மன் போன்றவை) வழி புரோகிராம் இயங்குவதைத் தடுக்கலாம். எனவே இதனைப் பொறுமையாகப் படித்து நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் செய்திடலாம். என்னால் இதனை எல்லாம் புரிந்து இன்ஸ்டால் செய்திட முடியாது என்று எண்ணினால் இரண்டாவதாக உள்ள Typical  வகையை மேற்கொள்ளலாம்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சந்திரயான்-1 கண்டுபிடிப்புக்கு 'நாசா' பாராட்டு மழை


 

Front page news and headlines today

விண்வெளி ஆய்வில் பல வெற்றிக் கொடிகளை நாட்டி, சாதனைகளை புரிந்துள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா', சந்திரனில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உண்டு என்ற சந்திரயான்-1 விண்கலத்தின் கண்டுபிடிப்பை வியந்து, பாராட்டியுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பி, ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும், இந்தியா அனுப்பிய ஆளில்லா விண்கலமான சந்திரயான்-1 மட்டுமே சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக கண்டுபிடித்து, உலக விண்வெளி ஆராய்ச்சி அரங்கில் இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ளது. சந்திரனில் நீர், மற்ற இயற்கை வளங்கள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ள இந்தியா எடுத்த முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று சந்திராயன்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலம், சந்திரனை பற்றிய பல தகவல்களை கடந்த 10 மாதங்களாக தெரிவித்து வந்தது. இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 29ம் தேதியன்று சந்திரயான்-1க்கும் இஸ்ரோவுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான் கிட்டத்தட்ட 95 சதவீத பணிகளை முடித்து விட்டது. இதுவரை சந்திரயான்-1 அனுப்பிய தகவல்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற் கொள்ள உதவிடும் என்பதால் இத்திட்டம் தோல்வி என்ற கருத்து தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.""சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தமைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இதுவரை சந்திரன் என்பது பாறைகள் நிறைந்த தரைப்பகுதியை கொண்ட ஒரு கிரகம் என்பதை இஸ்ரோவின் இந்த கண்டுபிடிப்பு பொய்யாக்கியுள்ளது'' என்று நாசா விண்வெளி மையத்தின் இயக்குனர் ஜிம் கிரீன் மனமார பாராட்டியுள்ளார். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வசதி கொண்ட நாசா உள்ளிட்ட உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செய்ய முடியாத ஒரு இமாலய சாதனையை இஸ்ரோ செய்து காட்டியுள்ளது. வெற்றிகரமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது, விண்ணில் செலுத்தப்பட்ட 15 நாட்களுக்கு பின், சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கொண்ட உறுதியான தகவல்களை அது அனுப்பியது. சந்திரனில் அந்த விண்கலம் எடுத்த புகைப்படங்களில் இருந்து தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தெரிந்தது. மேலும், சந்திரயான்-1ல் பொருத்தப்பட்டிருந்த எச்.ஒய்.எஸ்-1 மூலம் அது உறுதி செய்யப்பட்டது. இந்த வகையில், சந்திரனில் தண்ணீர் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கடந்த பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வருகிறது. ஆனால், சந்திரயான்-1 தெரிவித்துள்ள தகவல் மூலம் எதிர்பார்த்ததற்கு மேலாக சந்திரனில் அதிகளவு தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.சந்திரனில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 விண்கலம் மூலம் ஆய்வு நடத்தி முதன்முதலாக கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளலாம். ஆனால், சந்திரயான்-1 எடுத்து அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிடம் மட்டுமே உள்ளது. ""எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களுக்கு சந்திரயான்-1 விண்கலத்தின் செயல்பாடுகள் உதவிகரமாக இருக்கும். சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை கொண்டு சந்திரயான்-2 விண்கலத்தை 2012ம் ஆண்டின் இறுதியில் அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது'' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அறிவிப்புதான் என்றாலும், இந்தியா அனுப்பும் விண்கலங்கள் தரும் புகைப்படங்களையும், சிக்னல்களையும் இஸ்ரோவே ஆய்வு செய்து அதிலுள்ள கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாகும்.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – பகுதி 02


anna-thalaiதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய காலப்பகுதியாக 2002ம் ஆண்டின் பின்னான காலப்பகுதி அமைந்துள்ளது. அதாவது சமாதான காலப்பகுதி என்று குறிப்பிடலாம். இந்தச் சமாதான காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகப் பகுதியான வன்னிப் பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டுப் பிரமுகர்களின் வருகை, வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த அதேவேளையில்தான், விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் ஊடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன.

இதனை முறியடித்து இவ்வாறானவர்களை கண்டறிந்து இந்த ஊடுருவல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துரோகத்தனங்களில் ஈடுபட்டிருந்ததால், சந்தேகத்துக்கு இடமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மக்களிடையே சில மனக்கசப்பும் ஏற்படத்தான் செய்தது.

எனினும், தாயகத்தின் பாதுகாப்பு என்ற வகையில் இந்த நடவடிக்கைக்கு பெருமளவு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான சிறீலங்கா அரசின் பொருளாதார தடை தளர்த்தப்பட்டது விடுதலைப் புலிகளும், வன்னி வாழ் மக்களும் பொருளாதார ரீதியான வளர்ச்சியை பெறுவதற்கு சற்று வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

ஆனால், இது மறைமுகமாக தமிழீழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் மறைமுகப் பாதிப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறு வன்னி மக்கள் மீதான பொருளாதாரத் தடை, சிறீலங்கா அரசால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்களது நிர்வாக பகுதிகளுக்கும் பொருளாதார தடைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு விடுதலைப் புலிகளால் சிறீலங்கா படையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் எழுந்த அல்லது உருவாக்கப்பட்ட பிரச்சினைதான் மாவிலாற்றுப் பிரச்சினை. சிறீலங்கா அரச படைகளால் மாவிலாற்றில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மாவிலாற்று நீர்ப் பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்போம்.

இயற்கையின் எழில் நிறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. இயற்கைத் துறைமுகம், விமானப்படைத்தளம், எண்ணை சேமிப்புக் கிணறுகள்… என்று பல நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது காணப்படுகின்றது. விஞ்ஞானியான ஆதர் சீ கிளாக் அவர்கள் கூட, ஆசியாக் கண்டத்தில் திருகோணமலையை முக்கிய இடமாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது செய்மதி ஏவுதளம் அமைக்கக்கூடிய இடமாக திருகோணமலை விளங்குவதாக அவர் கணித்திருந்தார். அதேவேளை, பல்வேறு நாடுகளுக்கும் திருகோணமலையை முதன்மையான இடமாக கருதுகின்றன. இந்நிலையில், திருகோணமலையில் சில இடங்கள் சிறீலங்கா அரசால் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கும் விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அமையப் பெற்ற இடத்தில் இருந்து கொண்டே விடுதலைப் புலிகள் 2003ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய துரோகத்தனத்தினை களைவதற்காக படை எடுத்து, அதில் வெற்றியும் பெற்றார்கள்.

கிழக்கில் இருந்து விடுதலைப் போராட்டத்தின் துரோகிகள் விரட்டி அடிக்கப்பட்டு பாதுகாப்பான நிலை கொண்டுவரப்பட்டதன் பின்னர் அங்கு விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் மீண்டும் செயற்படத் தொடங்கின. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் தொடக்கம் வெருகல் துறைமுகத்துவாரம் வரையான 50 கிலோ மீற்றர் கரையோரப்பகுதி விடுதலைப் புலிகளின் திறமைமிக்க நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்கியது.

பல கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையும், கடல் தொழிலையும் தமது தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கல்வியில் சற்று குறைவான நிலையே இங்கு காணப்பட்டது. இம்மக்கள் தமது அன்றாட பொருட்களைக் கூட சிறீலங்கா படையினரின் பிரதேசங்களுக்குள் சென்றே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் பொலிஸ் சோதனை நிலையம் ஊடாகவும், ஈச்சிலம்பற்று, வெருகல் கிராம மக்கள் சேருநுவர படை சோதனை நிலையம் ஊடாகவும், கதிரவெளி மக்கள் வாளைச்சேனை படைச் சோதனை நிலையம் ஊடாகவும் சென்றே பொருட்கள் பெறவேண்டும்.

ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களை மாத்திரம் கொண்டு செல்லலாம். பெருமளவு பொருட்கள் எடுத்துச்சென்றால் அவர் படையினரால் சந்தேகப்பட்டு விசாரிக்கப்படுவார். இவ்வாறு அங்குள்ள மக்களுக்கான பொருளாதார தடை சிறீலங்காப் படையினரால் போடப்பட்டிருந்தது. இவற்றின் மத்தியில்தான் விடுதலைப் புலிகள் தமது நிர்வாகத்தை அங்கு நடத்தினார்கள். காட்டுவழியாகவும், கடல்வழியாகவும் பொருட்களைக் கொள்வனவு செய்தே விடுதலைப் புலிகள் தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள்.

அங்கு பல பயிற்சித் தளங்களை நிறுவினார்கள். பலநூறு புதிய போராளிகளை உருவாக்கினார்கள். மறைமுகமாக விடுதலைப் புலிகளின் கடற்படைத்தளங்கள் அங்கு நிறுவப்பட்டன. இதன் பிரகாரம் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதத் தளபாடங்கள் கப்பல் வழியாக திருகோணமலையில் ஒரு தொகுதி இறக்கப்படுகின்றது. இவ்வாறு அங்கு கடற்புலிகளின் நிலைப்படுத்தல் உயர்ந்துகொண்டு சென்றது.

இதனாலேயே, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படும் காலப்பகுதியாக 2003ம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதி அமைந்தது. கடற்புலிகளின் பலமே விடுதலைப் புலிகளின் பலம் என்றும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பலமான அணியாக கடற்புலிகளின் அணி செயற்பட்டது. இது சிறீலங்காக் கடற்படைக்கு மாத்திரமல்ல, தரைப்படைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்தது. தங்களுக்கான படையினர் பலத்தை பெருக்கிக்கொண்டும், ஆயுத தளவாடங்களை கொள்வனவு செய்துகொண்டுமிருந்த சிறீலங்காப் படையினருக்கு விடுதலைப் புலிகள் தங்கள் படை பலத்தை பெருக்குகின்றார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனால், தமது இராணுவ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறைத்துக்கொண்டு, விடுதலைப் புலிகள் சமாதான காலத்திலும் ஆயுதக் கொள்வனவிலும், புதிய போராளிகளை இணைப்பதிலும் ஈடுபடுகின்றார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். இதன் ஒரு கட்டமாக எழுந்த அழுத்தம் காரணமாக, சமாதானத் தூதுவர்களாக இருந்த நோர்வேயின் சமாதான அதிகாரிகள் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் படகுக் கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிடுகின்றார்கள்.

கடற்புலிகள் தமது படகுகளின் வடிவங்களையும் தாக்குதல் படைகளையும் படகு கட்டுமானங்களையும் அவர்களுக்கு காட்டியதோடு கடலில் அதன் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தார்கள். இவை தொடர்பான தகவல்கள் சிறீலங்கா கடற்படையினரை சென்றடைகின்றன. இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ படகுசேவை ஊடாகவும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் பலத்தினை சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் ஆராய்கின்றார்கள்.

அத்துடன், சிறிய சிறிய படகுகளில் சென்று எதிரிக்கு பாரிய இழப்பினைக் கொடுக்கலாம் என்பதையும் ஏற்கனவே கடற்புலிகள் வெளிப்படையாகக் காட்டியிருந்தார்கள். இதன் பிரகாரம், புதிதாக சிறீலங்கா கடற்படையின் தரை இறக்கும் படகணிப் படகுகள் கடற்புலிகளின் சிறிய ரகத் தாக்குதல் படகு போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றார்கள். அவைதான் பின்நாளில் கடற்புலிகளுடன் மோதிய அரோ வகைப் படகுகள்.

கடற்புலிகளின் படகுகளை பார்த்தே இந்தப் படகுகளை சிறீலங்காப் படையினர் வடிவமைத்துக் கொண்டார்கள். இந்த அரோ வகைப் படகுகளில் சில நவீன வசதிகளை சிறீலங்காக் கடற்படையினர் ஏற்படுத்தினார்கள். இதன் நவீன கட்டுமானத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவி கிடைத்திருந்தது. இவ்வாறான சுமார் நூறு வரையான அரோ படகுகளை கடற்புலிகளை எதிர்ப்பதற்காக என்றே சிறீலங்காப் படையினர் உருவாக்கியிருந்தார்கள்.

இதேநேரம், கிழக்கில் திருகோணமலையில் பல அரசியல் பணிகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள். சமாதான காலத்தைப் பயன்படுத்தி சம்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் போன்ற பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் புனரமைக்கப்படுகின்றன. இந்தப் புனரமைப்பிற்கு சிறீலங்கா அரசே உதவுகின்றது. இதனுாடாக படையினர் விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளை கண்காணிக்கிறார்கள். இதனிடையே ஒட்டுக்குழுக்களின் துரோகத்தனமும், ஊடுருவல்களும் தலைதூக்குகின்றன. இவற்றையும் விடுதலைப் முறியடிக்கின்றார்கள்.

இந்த முறியடிப்பில் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக மாவீரர் லெப்.கேணல் அறிவு திறம்பட செயற்படுகின்றார்.அத்துடன், அங்குள்ள மாவீரர் குடும்பங்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலை செல்லாத வறிய மாணவர்கள் இனம்காணப்பட்டு கல்வி கழகம் ஊடாக அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இனம்காணப்பட்டு உயர்தரம் படித்த மாணவர்கள் தொண்டர் ஆசிரியர் ஊடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

மருத்துவ பிரச்சினை இனம் காணப்பட்டு வன்னியில் இருந்து தியாகதீபம் திலீபன் மருத்துவ சேவையினை வரவழைக்கப்பட்டு மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு, மக்களின் நோய்கள் தீர்க்கப்படுகின்றன. கடற்புலிகளின் ஏற்பாட்டில் சங்கங்கள் ஊடாக கடற் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு, தொழில் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுகின்றது. சம்பூர் வெருகல் பிரதேச மக்கள் வளமான மக்களாக மாற்றம் கண்டு வந்துகொண்டிருந்தார்கள். அத்துடன், பொருண்மிய கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது.

மக்களின் சீர்திருத்தத்தை கண்காணிக்க (தமிழீழ காவல்துறை தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது) நீதி, நிர்வாகம் அங்கு கொண்டு செல்லப்படுகின்றது. மக்களிடையேயான பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்கின்றன. பிரச்சினைகள் களையப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் இந்த சீரான நிர்வாகக் கட்டமைப்பு அயல் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் அவமானத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றது.

இதனால் சில சிங்கள கிராமத்தின் முதன்மையானவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களுடன் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டார்கள். மூதூரைப் பொறுத்தமட்டில் மூதூர் இஸ்லாம் மக்களைக் கொண்ட நகரமாக காணப்படுகிறது. தமிழ் – முஸ்லீம் மக்களிடையேயான பிரச்சினைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தீர்க்கப்பட்டு, இரு பகுதியிருக்கும் இடையிலான உறவு அங்கு வளர்க்கப்படுகின்றது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் கட்டுமானங்கள் அங்கும் திறம்பட செய்படுகின்றன. இந்நிலையில், வன்னியில் இருந்து தளபதி பால்ராஜ் தலைவரால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

(தொடரும்…)

நன்றி: ஈழமுரசு


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP