சமீபத்திய பதிவுகள்

ஆ. ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி மாறன்!

>> Sunday, August 7, 2011


 
 
2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ஆ. ராசாவும், கனிமொழியும் சிறை யிலுள்ளனர். சூன் மாத இறுதியில் வெளிவரவுள்ள குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்து கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏன், 'சூலை 7 இல் மாறன் கைது' என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடவும் தொடங்கியுள்ளன. 'நம் வாழ்வு' வாசகர்களுக்கு இந்த ஊழல் தொடர் கைது பற்றிய சிறிய தெளிவை அளிப்பது நல்லது.

முரசொலி மாறனின் வாரிசாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியால் முதல் முறையாக எம்.பி.யாக்கப்பட்டு எடுத்த எடுப்பிலேயே கேபினட் அமைச்சருமாகி, தி.மு.க. விலும், காங்கிரசிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றார் தயாநிதி மாறன். மாறன் தன் சகோதரர் கலாநிதியுடன் இணைந்து அரசியலில் - தி.மு.க.வில் வலுவாகக்காலூன்றி 'சன்' குழும சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்களைத் தீட்டினர். இத்திட்டத்தின் முதல் செயல்பாடாக 'தினகரன்' நாளிதழ் வாங்கப்பட்டு ஒரு பிரதி ரூ. 1க்கு விற்று எழுத்து வழி ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 'மத்தியில் சிறந்த அமைச்சர் யார்?' என்ற சர்வே தினகரனில் வெளிவந்தது. அதன்பின் 'கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்?' என்ற சர்வேயும் வெளிவந்தது. இவைகளில் மத்தியில் சிறந்த அமைச்சர் தயாநிதி மாறன் என்றும், மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து அடுத்தபடியாக தி.மு.க.வில் செல்வாக்குள்ள வாரிசாகவும் மறைமுகமாகக் காட்டப்பட்டார் தயாநிதி. இப்படி மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தி கலைஞருக்குப் பின் அழகிரியையும், கனிமொழியையும் அப்புறப்படுத்த மாறன் சகோதரர்கள் முயன்ற கதை நாம் அறிந்ததே.

தயாநிதி மாறன் தன் தந்தையின் மறைவுக்குப் பின் 2006 இல் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்தே தன்னையும், தன் சகோதரரின் வர்த்தக நலன்களையும் வளர்த்தெடுக்கவே முயற்சித்து வந்துள்ளார் என்று அவரது கட்சியினரே பேசுவதாக 'இந்தியா டுடே'யில் செய்தி வெளியானது.

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் ஊழல் கைவரிசை பற்றிய செய்திகள் வெளிவராத நாளும் இல்லை, வெளியிடா பத்திரிகையும் இல்லை. ஏர்செல்லின் உரிமையாளர் (முன்னாள்) சிவ சங்கரன், நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிட்டியின் முன்பு தயாநிதிக்கெதிரான வாக்குமூலம் அளித்துள்ளார். 

அவ்வாக்குமூலத்தின்படி 2005 இல் ஏர்செல் டிஷ்நெட் நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவதில் தொலைத் தொடர்புத் துறை தேவையில்லாக் காலதாமதம் செய்ததால் ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வீணாகி யது. இதனால் சிவசங்கரன் ஏர்செல் பங்குகளை மாக் ஸிஸீக்கு விற்றார். இந்தச் சூழ்நிலையில் மாக்ஸிஸ் வச மிருந்த ஏர்செல்லுக்கு 2001 ஆம் ஆண்டின் விலைப்படி மாறன் உரிமத்தை விற்றார். இதனால் அரசுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது. அதாவது 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற விதியை மீறி கொல்கொத்தாவில் ஏர்செல்லுக்கு 4.4. மெ.ஹெர்ட்ஸ் + 4.4. மெ.ஹெர்ட்ஸ் தொடக்க நிலை அலைவரிசை ஒதுக்கப்பட்டது. தயாநிதி மாறனின் தலையீடு இன்றி இம்முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அறிக்கை.
இவ்வாறு முறைகேடாக உரிமங்களையும், அலைவரிசையையும் பெற்றதற்கு நன்றிக்கடனாக மாறன் குடும்பத்தவரின் 'சன்' டைரக்ட் பிரைவேட் லிமிடெட்டில் மாக்ஸீஸ் குழுமம் ரூ. 625 கோடி முதலீடு செய்தது. மேலும் மாறன் குடும்பத்துக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்.எம். லிமிடெட் நிறுவனத்திலும் மாக்ஸிஸ் ரூ. 100 கோடி முதலீடு செய்தார்.

ஐ.மு.கூ. அரசின் 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை மாறன் மீறியுள்ளது வெளிப் படையான உண்மை. காரணம், 2004 டிசம்பர் 14 இல் ஆறு சர்க்கிள்களுக்கு உரிமம் கோரி வோடஃபோன் விண்ணப்பித்தது. அதற்கு மாறாக 2006 ஜனவரியில் நான்கு சர்க்கிள்களுக்கும், மார்ச் 3 இல் மூன்று சர்க்கிள்களுக்கும் மாக்ஸீஸ் விண்ணப்பித்து, அதே ஆண்டு டிசம்பர் 5 இல் உரிமத்தையும் பெற்றது. வோடஃபோன் மூன்று ஆண்டுகள் காத்திருக்க, ஏர்செல் மாக்ஸிஸ் உடனே பெற்றது எப்படி? ஏர்செல் என்பது ஓர் உண்மை நிறுவனமா இல்லை முகமூடி (சன் குழுமம்) நிறுவனமா என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சிவசங்கரனின் வாக்கு மூலம் 'சூரியக் குடும்பத்தின்' அசூர வளர்ச்சியைத் தடுத்து அவர்களை தகிப்பிற்குள்ளாக்கியுள்ளது. மாறன் - மாக்ஸிஸ் - ஏர்செல் கூட்டணி குறித்த புலனாய்வு மேற்கொள்ளும் துழாய்வில் ராசா, கனிமொழி வரிசையில் தயாநிதி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

மற்றொரு ஊழல், 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை தன் மூலமாக சன் டிவி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள செய்து அரசுக்கு ரூ. 440 கோடி இழப்பு ஏற்படச் செய்தார் மாறன் என்று சி.பி.ஐ அறிக்கை கூறுகிறது. இந்த 323 தொலைபேசி இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். போட்கிளப் பகுதியிலுள்ள தயாநிதி மாறனின் இல்லத்தில் நிறுவப்பட்டு திருட்டுத்தனமாக 3.4 கி.மீ. தொலைவுக்கு தரையடி வழியாக சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்விணைப்புகளில் பெரும்பாலானவை சென்னை பி.எஸ்.என்.எல்.லின் தலைமை பொது மேலாளரின் பெயரில் பதிவாகியுள்ளது. இவ்விணைப்புகள் அனைத்தும் அதிவேக தகவல்கள் பரிமாற்ற வசதியுள்ள ஐ.எஸ்.டி. என் தொழில்நுட்பத் தன்மையுடையவை. பி.ஆர்.ஏ. வசதி கொண்ட (குரல் தரவுகளை தடையின்றி எடுத்துச் செல்லக்கூடிய தொழில் நுட்பம்) வீடியோ கான்ஃபரன்சிங் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இணைப்புகள். மார்ச் 2007 ஒரு மாதத்தில் மட்டும் 24371515 என்ற ஒரு தொலைபேசி இணைப்பிலிருந்து மட்டுமே 48,72,027 அழைப்பு அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல், மாறன் - மாக்ஸிஸ் - ஏர்செல் கூட்டணி ஊழல், பி.எஸ்.என்.எல். ஊழல் என்று பல ஊழல்களில் சிக்கித் தவிக்கும் மாறன் சகோதரர்கள் தி.மு.க.வாலும், காங்கிரசாலும் கைவிடப்பட்ட நிலையில் நீதி தேவதையின் நியாயத் தீர்ப்பை பெறுவார்கள் என்று நம்புவோம். ஊழல் இல்லா இந்தியா உருவாக இது ஓர் உருப்படியான முன்னுதாரணமாகட்டும்.

source:namvalvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கழுத்தை நெரித்து கொன்ற பின் செக்ஸ்

கபட நாடகமாடிய காதலன் கழுத்தை நெரித்து கொன்ற பின் உறவு !
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பிரித்தானியா லங்கஷியர் பகுதியில், ஒரு வீட்டின் கதவை தீயணைக்கும் படையினர் அவசரமாக உடைக்கின்றனர். அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் அக்கம் பக்கத்தினர் திகைத்தனர் ! அவசரமாக பராமெடிக்ஸ் என்னும் அதி தீவிர சிக்கிசைப் பிரிவினர் உடைக்கப்பட்ட கதவுகள் ஊடாக உள்ளே சென்று அனா என்னும் 23 வதுப் பெண்ணைக் காப்பாற்ற முயல்கின்றனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்துபோனார். அவரைக் கொண்றதாக அவரின் காதலன் டானியல் கைதுசெய்யப்படுகிறார். ஆனால் எல்லொரும் கூறுவது போல அவர் தான் கொலைசெய்யவில்லை என்று கூறவில்லை. மாறாக புதிதாக ஒரு கதையைக் கூறி பிரித்தானிய பொலிசாரையும், நீதிபதிகளையும் குழப்பிவிடார். அவர் கூறுவதில் ஞாயம் இருக்கிறதா இல்லையா என்று எல்லோரும் வாதிட்டனர். பிரித்தானிய பத்திரிகைகளில் முதல் இடம் பிடித்த இக் கொலை வழக்கு பலரால் விவாதிக்கப்பட்டது. அது என்ன தெரியுமா ? மாட்டருக்கு வருவோம் !

தானும் தனது காதலியும் செக்ஸ்சில் ஈடுபடும்போது அதீத செக்ஸ் காரணமாக அவர் இறந்தார் என்கிறார் காதலர் டானியல். அப்படியானால் செக்ஸ் செய்யும்போது அவர் இறந்தாரா இல்லை இறந்த பின் இந் நபர் செக்ஸ் செய்தாரா என்று எல்லாம் பல கேள்விகள் எழுந்தது. குறிப்பாக டானியல் என்னும் இச் சந்தேக நபர், தான் பெண்களோடு செக்ஸ் செய்யும்போது அவர்களின் கழுத்தைப் பிடிப்பது வழக்கம், அதுபோலத் தான் இவர் கழுத்தையும் பிடித்தேன் என்கிறார். என்ன கொஞ்சம் இறுக்கிப் பிடித்துவிட்டேன் அதனால் அவர் மூச்சுத் திணறி இறந்துவிட்டார் எனக் கூறி "விதி" என்னும் படத்தில் வரும் கதைபோல நீதிமன்றில் சொல்லியுள்ளார். இதனால் நீதிபதிகள் தடுமாறிப்போய் உள்ளனர். கடந்த 1 வருடமாக இந்த வழக்கு தேங்கிக் கிடந்தது. சந்தேக நபரின் வக்கீலும் லேசுப்பட்ட ஆள் இல்லை. இது கொலை அல்ல விபத்து என வாதிட்டார். சந்தேக நபரான டானியல் விடுதலையாவார் என்று பொலிசார் அஞ்சினர். ஆனால் நீதி தோற்றுப்போகுமா ? 

மாரித் தவக்கை தன்வாயால் கெடும் என்பதுபோல, இவரது வழக்கில் தற்போது புதுத்திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் டானியல் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் தான் தனது காதலியை வேண்டும் என்றே கழுத்தை நெரித்துக் கொண்றதாகத் தெரிவித்துள்ளார். தனது காதலி தன்னுடன் இருக்கும்போது, வேறு ஒரு ஆணுடன் பழகி வந்ததாகவும் அதனைத் தான் அறிந்து கோபம் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டானியலின் உற்ற நண்பர் உடனே இதைப் பொலிசாருக்கு போட்டுக்கொடுத்துவிட்டார். அதனை இரகசியமாக பதிவுசெய்த பொலிசார் மேற்படி டானியலை அழைத்து விசாரனை நடத்தியுள்ளனர். அவ்விசாரணையில் டானியல் தான் வேண்டுமென்றே தன் காதலியைக் கொலைசெய்ததாக தற்போது ஒப்புகொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கு இம் மாதம் கோட்டில் எடுக்கப்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படலாம் என லங்கஷியர் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

 
source:athirvu
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பினாயக் சென்:விடுதலையான பழங்குடி போராளி!

 
 
உச்ச நீதி மன் றத்தில் டாக்டர் பினா யக் சென்னுக்கு ஜாமீன் கிடைத் திருக்கிறது. இதற் காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அவர் சொல்லி இருக் கிறார். 
அவர் யாராக இருக் கும் என்று உங்க ளால் ஊகிக்க முடி கிறதா? பினாயக் சென்னின் மனைவி இலினா சென்? அவருடைய மகள்? அவருடைய விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர்? அவர்கள் எல்லோருக்கும் பினாயக் சென்னின் விடுதலை மகிழ்ச்சி அளித்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் இப்படிச் சொன்னது வேறு யாரும் அல்ல, நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான்.
மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்பவர் என்று சத்தீஸ்கர் மாநில அரசு குற்றம் சாட்டியிருக்கும் ஒருவரை உச்ச நீதி மன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. அந்த மாவோ யிஸ்டுகளை பிரதமர் மன்மோகன் சிங் எப்படி அழைக் கிறார்? 'உள்நாட்டு அச்சுறுத்தல்' என்றே அவர் அவர்களைக் குறிப்பிடுகிறார். அவருடைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் பினாயக் சென்னின் விடு தலைக்காக ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? ஏனென்றால் அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. விசாரணை நீதி மன்றங்களிலும், உயர்நீதி மன்றங்களிலும் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் ஒருவருக்கு அதிருப்தி அளிக்கிறது என்றால் அவர் மேல் முறையீடு செய்யலாம். அதுவே அவருடைய நம் பிக்கை. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சத்தீஸ்கர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலருக்கு அதிருப்தி யைக் கொடுத்தது. அவருடைய ஜாமீன் மனு உயர் நீதி மன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் அவருக்கு இப்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக் கிறது. அதனால் அவ ருடைய நம்பிக் கைக்கு வலு சேர்ந் திருக்கிறது. அதனால் அவருக்கு மகிழ்ச்சி வருகிறது.
ஆனால் மேல் முறை யீட்டில் நியாயம் கிடைக்கும்வரை கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் ஒருவர் அடையும் பாதிப்பு களுக்கு என்ன பரி காரம் கிடைக்கிறது? டாக்டர் பினாயக் சென்னையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரை கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் சத்தீஸ்கர் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் இருக்கும் பல அறிஞர்கள் அவருடைய விடுதலைக்காகக் குரல் கொடுத்தார்கள். இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு 2009 ஆம் வருடம் மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
ஆனால் அவர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சுதந்திரமாக மக்களோடு இருக்க முடியவில்லை. கடந்த 2010 டிசம்பர் 24 ஆம் தேதி ரெய்ப்பூர் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பு அளித்தது. மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது ஏப்ரல் 15 ஆம் தேதிதான் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை கொடுத்திருக்கிறது. நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும்போது அவர் இரு விரல் காட்டி 'வெற்றி' என்று சொல்லி மகிழலாம். ஆனால் அவர் பெயரைச் சொன்னவுடன் நமக்கு என்ன பிம்பம் நினைவுக்கு வருகிறது? பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் பிம்பமாக நம் கண்முன் வரவில்லை. மாறாக, ஒரு காவல்துறை வாகனத்தில் கம்பிகளுக்குப் பின்னால் மன உறுதியுடனும், தீர்க்கமான கண்களுடனும் இருக்கும் பினாயக் சென்னின் முகமே நம் மனதில் நிற்கிறது. இது நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
பினாயக் சென்னின் குடும்பத்தின் உணர்வுகள் எப்படி இருக்கும்? அம்மா அனுசுயா சென்னுக்கு வயது 84. அவர் "இந்திய நீதிமன்றங்களின் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கிறது" என்றும், "வாய்மையே வெல்லும்" என்றும் நெகிழ்ச்சியோடு சொல்லி இருக்கிறார்.
மனைவி இலினா சென்னின் உணர்வுகளை யாராலும் விவரிக்கவே முடியாது. "இந்த விடுதலைக்கான கடுமை யான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அவரே" என்கிறார். 
பினாயக்கின் மகள் அபராஜிதா "அப்பா சிறையில் அடைக்கப் பட்டதில் இருந்து எங்கள் குடும்பம் நிலை குலைந்து போய் இருந்தது. இப்போது நான் அப்பாவை சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்" என்று பாசத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். 
அம்மா, மனைவி, மகள் எல்லோரையும் பரிதவிக்கச் செய்யும் விதத்தில் அந்த மருத்துவரை சத்தீஸ்கர் அரசு ஏன் குறிவைத்து அடிக்கிறது?
உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்போது என்ன சொல்லி இருக்கிறது? "நம்முடைய நாடு ஒரு ஜனநாயக நாடு. பினாயக் சென் நக்சலைட்டுகளின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால் அதுவே ராஜதுரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காது" என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. 
"நக்சலைட்டுகளின் பிரசுரங்களையும், இலக்கியங்களையும் அவர் வைத்திருந்தார் என்பதால் அவர் நக்சலைட் ஆகிவிடு வதில்லை. காந்திய இலக்கியங்களை ஒருவர் வைத்திருந் தால் அவரை காந்தியவாதி என்று சொல்லிவிட முடியுமா?" என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி கேட்டிருக்கிறார். 
பினாயக் சென்னை பிணையில் விடுவிப்பதற்கு எந்தக் காரணத்தையும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. பிணை நிபந்தனைகளையும் அது முன்வைக்கவில்லை. அவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டது.
சர்வதேசச் சமூகத்துக்குத் தெரிந்த முகமாக பினாயக் சென் இருக்கிறார். அவரை சத்தீஸ்கர் மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்தபோது உலகமெங்கும் இருந்து அவருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தன. வெளி உலகத்துக் குத் தெரியவராத எத்தனை பேர் இவரைப் போல இன்னும் நம்முடைய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்களோ என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள் இயல்பாக எழுவதை யாராவது தடுக்க முடியுமா? கொலை, கொள்ளை, வல்லுறவு வழக்குகளில் எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமீன் கிடைக்கிறது. ஆனால் பினாயக் சென் மாதிரியான மக்கள் சேவகருக்கு இவ்வளவு நீண்ட நீதிமன்றப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இந்த உண்மை நமக்கு கவலை அளிக்கிறது. ஆனால் ஒரு விசயத்துக்காக நாம் நிம்மதிப்  பெருமூச்சு விடலாம். சத்தீஸ்கர் சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதலில் பினாயக் சென் தாக்கப் பட்டார் போன்ற செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. அதற்காக முதலமைச்சர் ராமன் சிங்குக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
பினாயக் சென் போன்ற மனிதர்களை ஓர் அரசு அலைக் கழிப்பதைப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இங்கே சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளியில் பெரிய மனிதர்களாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்கள். வெளியில் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சிலர், சிறைகளில் வெளிச்சம் இல்லாமல் இருக் கிறார்கள். ஆட்சியில் இருக்க வேண்டியவர்கள் முகவரியில் லாமல் சமூகத்தில் அங்கும் இங்குமாகத் திரிகிறார்கள். ஒரு சமூகத்தில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். 
நாம் என்ன செய்கிறோம்? 
விரலில் மை தடவிக் கொண்டு முடிவுகளுக்காகக் காத்தி ருக்கிறோம்.
(நன்றி: 'குமுதம் ரிப்போர்ட்டர்')--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP