சமீபத்திய பதிவுகள்

டீசல் இல்லை: 3,000 பேருந்துகள் நிறுத்தம்!-பயணிகள் கடும் அவதி!!

>> Tuesday, July 1, 2008

 


டீசல் இல்லை: 3,000 பேருந்துகள் நிறுத்தம்!-பயணிகள் கடும் அவதி!!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Bus
சென்னை: பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுக் கிடப்பதால் எரிபொருள் இல்லாமல் 3,000 தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டன. அதே போல 20 சதவீத அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இவை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினசரி இயங்கும் முக்கியப் பேருந்துகளாகும். மேலும் 20 சதவீத தொலைதூர அரசுப் பேருந்துகளும் அறிவிப்பின்றி சம்பந்தப்பட்ட கோட்ட பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

எண்ணெய் சப்ளை குறைவாக இருப்பதாகக் கூறி, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பெட்ரோல்- டீஸல் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கு வழங்கப்பட்டு வந்த எல்பிஜி வாயுவும் சுத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தவும், எப்படியாவது பெட்ரோல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளவுமே இப்படி ஒரு தற்காலிக பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு வந்து சேரவேண்டிய எண்ணெய்க் கப்பல் வராத்தால் பெடரோல் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் டீஸல் இல்லாத காரணத்தால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 3000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், பல ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

இனி டீஸல் கிடைத்தால்தான் தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியும் என பேருந்துகளின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நிலைமை சரியாகும் வரை பயணிகள் டிக்கெட் ரிசர்வேஷனையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கோயம்பேட்டில் தனியார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.

அரசுப் பேருந்துகளும் கணிசமான அளவுக்கு சர்வீஸ்களைக் குறைத்துள்ளன. ஆனால் இதுகுறித்து வெளிப்படையான அளிவிப்பு ஏதும் இல்லை. ஆனால் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு சுமை தூக்குவோர் சங்கம் கூறியுள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

டீசல் இல்ல, பஸ் இல்ல.. தனியார் கல்லூரிகள் மூடல்

 


டீசல் இல்ல, பஸ் இல்ல.. தனியார் கல்லூரிகள் மூடல்
    

சென்னை: டீசல் பற்றாக்குறை காரணமாக மாணவர்களைக் கூட்டிவர பேருந்துகளை இயக்க முடியாததால் சென்னை மற்றும் புற நகர்களில் இயங்கிவரும் பிரமாண்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகள் மூடப்படுவதாக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

குறிப்பாக புறநகர்களில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுமே உள்ளூர் மாணவர்களை நம்பி செயல்படுபவை அல்ல. இக்கல்லூரிகளில் 30 சதவிகித மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரிகள் இயக்கும் வாகனங்களிலும், வெகு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங்களிலும் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.

டீசல் சப்ளை சீராகும் வரை இனி பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம், கல்லூரிகளையும் மூடி வைக்கலாம் என நிர்வாகங்கள் முடிவெடுத்து அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளன.

எஸ்ஆர்எம் போன்ற பெரிய கல்லூரிகள் மட்டும் தங்கள் கல்லூரி பேருந்துகளுக்கென்று தனியாக வளாகத்துக்குள்ளேயே பங்க் வைத்துள்ளன. அதாவது மொத்தமாக டீசல் வாங்கி இருப்பு வைத்துள்ளன.

ஒரு வேளை இன்னும் சில தினங்கள் இதே நிலை நீடித்தால் அனைத்துக் கல்லூரிகளுமே மூடப்பட்டாலும் வியப்பில்லை.
 

StumbleUpon.com Read more...

பிளாக் மார்க்கெட்டில் பெட்ரோல்-இன்றைய ரேட்: லிட்டர் ரூ.75!

 


பிளாக் மார்க்கெட்டில் பெட்ரோல்-இன்றைய ரேட்: லிட்டர் ரூ.75!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

சென்னை: சென்னையின் புற நகர் பகுதிகளான மேடவாக்கம், மடிப்பாக்கம் பள்ளிக்கரணை மற்றும் சேலையூர் பகுதிகளில் ஒரு விட்டர் பெட்ரோல் ரூ.75 வரை பிளாக்கில் விற்கப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால், பைக், ஆட்டோக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பங்குகளைத் தவிர சில தனியார் கடைகளிலும் ஆயில் விற்பனை எனும் பெயரில் பெட்ரோல்-டீசல் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வந்தது.

இப்போது பங்குகள் மூடப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் பலரும் வேறு வழியில்லாமல், இந்த சில்லறை விற்பனையாளர்களைத் தேடிப் போகின்றனர்.

இதுதான் சரியான நேரமென்று முடிவு செய்துவிட்ட விற்பனையாளர்களும் ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் கூடுதலாக வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்று வருகின்றனர். பல இடங்களில் கெரசின் மற்றும் விலை மலிவான தின்னர் கலந்து விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இன்னும் சில இடங்களில் பெட்ரோல் பங்குகளுக்குப் பின்புறமாக வைத்து லிட்டருக்கு ரூ.20 கூடுதல் விலைக்கு பெட்ரோல் விற்கப்படுவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்த வண்ணமுள்ளன.
 சேலையூர் மற்றும் பள்ளிக் கரணையில் மூன்று பெட்ரோல் பங்குகளில் இப்படி கள்ளத்தானமாக பெட்ரோல் விற்கப்படுவது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடங்களுக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கள்ள வியாபாரிகள் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

அறிஞர் அண்ணாவும்-ஜிஹாத்தும்

அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: c அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்

அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்
 
இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே "ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது", அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.

வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா


பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.

அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.


Source: http://adirai-iic.blogspot.com/2008/06/blog-post_21.html

----------------------------------------------------------------------

ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்

முகமது ஓமன் நாட்டு அரசன் "ஜாஃபர்" மற்றும் அவர் சகோதரன் "அப்து அல் ஜலாந்தி" என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் "Amr bin al-'As al-Sahmi and Abu Zaid al-Ansari" கொண்டுச் சென்றார்.

இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:

2. இஸ்லாமில் கட்டாயமில்லை:

3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.

4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.

5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.

6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை.


இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள்.

ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.


Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman


சமத்துவம், சகோரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:

1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?

2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு "இந்த நாட்டு அரசனால் ஆபத்து ஏதாவது இருந்ததா?"

3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?

4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?

5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் "அழைப்பு" எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?

7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?

9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.

10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் "பக்தி", "நமாஜ்" அல்லது "தொழுகை" உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?

11. இஸ்லாமில் கட்டாயமில்ல, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?

12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?

கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
லூக்கா 9:5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
அப்போஸ்தல நடபடிகள் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.


இயேசு தன் செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஊரை விட்டு வரும் போது, காலில் படிந்த துசியைக்கூட உதறிவிட்டு வரும்படிச் சொன்னார், அவர்களை சபிக்கவேண்டாமென்றுச் சொன்னார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால், முகமதுவோ தன் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையானால், போர் செய்வேன், நாட்டை பிடிப்பேன், உன் வலிமையை அற்றுப்போகப்பண்ணுவேன் என்றுச் சொல்கிறார்.

இயேசு அஹிம்சை மூலமாக தன் செய்தியை தெரிவித்தார். முகமதுவோ "ஹிம்சை" மூலகாம தன் செய்தியைச் சொன்னார். ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் வேண்டுமானால், வெவ்வேறு குணங்களை கொண்டிருக்கலாம், ஆனால், ஒரு இறைவன் அனுப்பியவர்கள் வெவ்வேறு கோட்பாடுகள் கொண்டு தன் செய்திகளைச் சொல்லமாட்டார்கள்.

இதில் யாராவது ஒருவர் தான் உண்மையாக இருக்கமுடியும்? இயேசு அல்லது முகமது ? முகமது சொன்னதை பின்பற்றிக்கொண்டு, இயேசுவைக் கூட அதே இறைவன் தான் அனுப்பினான் என்றுச் சொல்வது அறிவுடமையாகுமா? சிந்தியுங்கள்.

எனவே, கிறிஸ்துவின் பாதையில், அமைதியின் பாதையில், உண்மையின் பாதையில் வரும் படி நான் உங்களை அழைக்கிறேன். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் வாழ்வில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவரும், நிம்மதியைக்கொண்டுவரும். இயேசுவை உங்கள் உள்ளத்தில் வரும் படி அழையுங்கள், அது போதும். உங்கள் மீது சாந்தி, சமாதானம் உண்டாகட்டும்.

1) Image Source:  http://www.answering-islam.de/Main/Muhammad/oman.gif
 
 
 

StumbleUpon.com Read more...

Dr. ஜாகிர் நாயக்

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

 

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

(கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)

முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)

பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் "Radiallah tala anho" (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.

இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

1. அரப்நியூஸ் செய்தித்தாள் கீழ் கண்டவாறு கூறுகிறது:

(Zakir Naik's Remarks on Yazid Spark Anger Among Muslims Shahid Raza Burney, Arab News )


மும்பையில் நடந்த 10 நாள் அமைதி முகாமில், நாயக் அவர்கள் யஜித் என்பவரின் பெயரை கூறியபோது, அதோடு கூட "ரதிஅல்லா தால அன்ஹூ" என்று கூறினார் மற்றும் கர்பலா என்ற போர் ஒரு "அரசியல் போர்" என்று கூறினார். இந்த அவரது கருத்தை பல இந்திய முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள் நாயக் அவர்கள் இதற்கு மன்னிப்பு கோரவில்லையானால், தன் கருத்தை திரும்ப பெறவில்லையானால் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்.ஷியா கோஜா ஜமாத்தின் தலைவர் சப்தார் கர்மாலி கூறும் போது:

"இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக செய்தார் என்றுச் சொல்லி, கீழ்தரமாக பேசிவிட்டார். டாக்டர் நாயக்கின் இந்த கூற்று முஸ்லீம்களின் மனதை புண்படுத்திவிட்டது மற்றும் இது ஷியா சுன்னி பிரச்சனையாக மாறவாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலேமா கவுன்சிலின் மௌலானா மஹ்மத் தர்யபடி கூறும் போது:

"முஸ்லிம்களின் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவர் தன் விமர்சனத்தை திரும்ப பெறவில்லை, அதற்கு பதிலாக, தான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க ஒரு பத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளார். அதாவது டாக்டர் நாயக் தன் விமர்சனத்தை வேண்டுமென்றே சொல்லியுள்ளார் என்று தெரிகிறது" என்றார்.

"இந்த நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டும், முஹரம் சமயத்தில் நாம் இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை நியாபகப்படுத்தி மனதில் நிருத்தவேண்டுமே ஒழிய, டாக்டர் ஜாகிர் நாயக் செய்த தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்" என்று அல்தாஃப் ஷைக் என்ற ஒரு கணிப் பொறியாளர் கூறினார்.

தேசிய‌ முஸ்லீம் பிரண்ட்(National Muslim Front) இயக்கத்தின் தலைவர் அஜிம் அலம்தார் கூறினார்:

"நாயக் இப்படி மன்னிக்க முடியாத விமர்சனத்தைச் செய்து, தன் காலை தன் வாயில் வைத்துக்கொண்டார். டாக்டர் நாயக் அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு ஈகோ(தற்பெருமை) பிரச்சனை உள்ளது, இஸ்லாமிய பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று அவர் எண்ணுகின்றார், இதனால் சில நேரங்களில் பிரச்சனை மிகவும் பெரியதாக மாறிவிடுகிறது" என்றார்.

Source: Arab News . Com

2. THE TIMES OF INDIA : (Row Over Islamic Preachers Remarks)

ஹஜ் முடித்து திரும்பி வந்த நாயக் தன் சகோதரர் முகம்மத் நாயக் மூலமாக சொன்ன விவரம்: "அந்த அமைதி முகாமில் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, நான் யாஜித் ஐ கடிந்துக்கொள்ளவும் இல்லை, புகழவும் இல்லை. நான் அவர் மீது அல்லா கிருபை புரிவானாக என்று தான் சொன்னேன். மட்டுமல்ல, நான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க தருல் உலோம் டியாபண்ட் பத்வாவும் உள்ளது என்றார்.

Naik, who returned from Haj on Wednesday, conveyed his reaction through his brother Mohammed Naik: "At the peace conference, while replying to a question, I neither condemned nor lauded Yazid. I did say 'May Allah be pleased with him' while mentioning Yazid. I can show the fatwas from seminaries like Darul Uloom Deoband supporting my stand."

Source : THE TIMES OF INDIA - Row over Islamic Preachers Remarks

3. இந்திய முஸ்லீம்கள் தளம் கட்டுரை கூறுகிறது: Mind Your Words Mr. Zakir Naik

பத்வாவை பற்றி அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜாகிர் நாயக் அவர்கள் புகழ்பெற்ற நல்ல இஸ்லாமிய அறிஞர் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன். இந்த பத்வாக்கள் என்னத்துக்கு பிரயோஜனபப்டும், குர்‍ஆன் தெளிவாக கீழ் கண்டவாறு சொல்லும் போது:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்‍ஆன் 4:93)

மற்றும் திரு நாயக் அவர்களுக்கு குர்‍ஆன் எல்லாம் மனப்பாடம் என்று நினைக்கிறேன்,

Source: Indian Muslims . In - Mind Your Words Mr. Zakir Naik

4. Islamic Insights.com : Zakir Naik Draws Ire With Karbala Comments

பெரும்பான்மையான சுன்னி அறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களாகிய இபின் கதிர், இபின் தைமியா மற்றும் அஹமத் பின் ஹன்பல் போன்றவர்கள் யாஜித்தை கண்டித்துள்ளார்கள் மற்றும் யாஜிதை சபிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Most Sunni scholars and jurists, including Ibn Kathir, Ibn Taymiyya, and Ahmad bin Hanbal, have condemned Yazid and deemed it permissible to curse him.

Source: Islamic Insights . Com - Zakir Naik Draws Ire with Karbala Comments

5. ஜாகிர் நாயக்கிற்கு இந்திய முஸ்லீம்கள் கண்டனம்: (Press Conference to condemn Dr. Zakir Naik)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Conference to condenmn Dr. Zakir Naik 01 - YouTube Link Part 1Press Conference to condenmn Dr. Zakir Naik 02 - You Tube Link Part 2Press Conference to condemn Dr. Zakir Naik 03 - You Tube Link Part 3Press Conference to condemn Dr. Zakir Naik 04 - You Tube Link Part 4Press Conference to condemn Dr. Zakir Naik 05 - You Tube Link Part 5டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வீடியோ: (இந்த வீடியோ யூடியூப்லிருந்து நீக்கப்பட்டு விட்டது.)

http://www.youtube.com/watch?v=k8xtVRy3960 (This video has been removed by the user)

டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த மறுப்பு

REPLY BY DR ZAKIR NAIK ON KARBALA & YAZID (YAZEED)
Dr. Naik's Response

இந்த செய்தி ஏன் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்படுகிறது:

பொதுவாக, குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ் வசனங்கள் இல்லாத பொதுவான கட்டுரைகளை அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி கட்டுரைகளை என் தளத்தில்(ஈஸா குர்‍ஆன்) நான் பதிப்பதில்லை. ஆனால், இந்த செய்தியை மட்டும் என் தளத்தில் பதிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால்,

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எது சொன்னாலும், என்ன சொன்னாலும் மற்ற மார்க்கம் பற்றி எந்த தவறான கருத்தைச் சொன்னாலும் அதை அப்படியே பரிசோதித்துப் பார்க்காமல் அப்படியே கேட்கும் முஸ்லீம்கள், இப்போது தங்கள் நம்பிக்கைப் பற்றி இவர் சொன்ன விவரங்கள் தவறு என்று சொல்கிறார்கள். என‌வே, திரு ஜாகிர் நாய‌க் அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து பிஜே அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து வேறு யாராக‌ இருந்தாலும் ச‌ரி என்னோடு சேர்த்து, ஏதாவ‌து விவ‌ர‌ம் சொன்னால், அது ச‌ரியான‌தா என்று கேள்வி கேட்டு ஆதார‌ம் தேடிப் பார்க்க‌வேண்டும், அது தான் ச‌ரியான‌ வ‌ழிமுறை என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும்.

2. பெரும்பான்மையாக இபின் கதிர் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு சொல்லும் உரையை நான் என் கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன், அதையெல்லாம் நம் இஸ்லாமியர்கள் தவறு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்பொது தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்று வரும் போது, இபின் கதிர் போன்ற சுன்னி இஸ்லாமிய அறிஞர்களே, யாஜித்தை கண்டித்துள்ளார்கள், அப்படி இருக்கும் பொது, ஜாகிர் நாயக் எப்படி யாஜித்துக்கு மதிப்பு தரலாம் என்று கேட்கிறார்கள்.

3. ஜாகிர் நாயக் அவர்கள் யாஜித்துக்கு மதிப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், இஸ்லாமை ஜாகிர் நாயக் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்படும் போது எப்படி அவர் மற்றவர்களின் வேத வசனங்களுக்கு பொருள் தருகிறார், மற்றும் நான் சொல்வது தான் சரியானது நீங்கள் சொல்வது தவறானது என்றுச் சொல்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.


முடிவுரை: தன் வினை தன்னைச் சுடும்.
 
http://unmaiadiyann.blogspot.com/2008/06/dr.html

StumbleUpon.com Read more...

எழுத்தாளர் சேவியர் அவர்களின் புதிய புத்தகம்கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.

வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.

மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.

ஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.

எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.

கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.

யார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் ? கிறிஸ்தவம் புனிதமா ? அவமானமா ? என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.

கிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.

கிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 100
http://sirippu.wordpress.com/2008/06/30/my_10th_book/#comment-2657

StumbleUpon.com Read more...

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 9 பேர் பலி

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 9 பேர் பலி

பெஷாவர் : பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வசித்துவருகின்றனர். இந்த இடத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதால், அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று விமானி இல்லாத ரிமோட் மூலம் இயங்கக்கூடிய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் பகுதியில் கைபர் கணவாய் அருகில் உள்ள ஹாஜி நம்தார் அமைப்பின் தலைமையிடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் முற்றிலுமாக சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
 
 

StumbleUpon.com Read more...

பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு : சென்னையில் பொதுமக்கள் அவதி

சென்னை : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அண்மையில் உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் சாதாரண பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்று பிரிமியம் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பும் குறைந்ததால், நகரின் பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், காவல்துறையினர் விரைந்துவந்து போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னை துறைமுகத்திற்கு டீசல் ஏற்றிவரும் டேங்கர் கப்பலின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்றும், இன்னும் ஓரிரு தினங்களில் இந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர்கிறது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP