சமீபத்திய பதிவுகள்

வளரட்டும் கூகுள்! வாழ்த்துக்கள்!

>> Wednesday, October 12, 2011



சென்ற செப்டம்பர் 27ல் கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஏதேனும் சிறப்பு பெற்ற நாளாக இருந்தால், அதற்கேற்ற வகையில் தன் கூகுள் இலச்சினையை வடிவமைத்து வழங்குவது கூகுள் தேடுதளத்தின் சிறப்பாகும். இதனைத் தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டில், தன் பெயரான கூகுள் என்ற சொல்லுக்குப் பின்னர் ஓர் ஆச்சரியக் குறியினை அமைத்து டூடுலாகக் (Doodle) காட்டியது கூகுள் நிறுவனம். (ஆங்கிலத்தில் Doodle என்பது, பொறுப்பின்றி எதனையேனும் கிறுக்கலாக அமைக்கும் சொல்லைக் குறிக்கும்.) அத்துடன் இலச்சினையே மறைக்கும் அளவிற்கு பிறந்தநாள் கேக், அன்பளிப்புகள், தொப்பிகள் மற்றும் பலூன்கள் இருந்தன. இனி, கூகுள் நடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
1998: கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 27ல் கொண்டாடினாலும், செப்டம்பர் 15 அன்று தான், கூகுள் தளத்தின் இணையப் பெயர் பதியப்பட்டது. நிறுவனமாக உருவானது செப்டம்பர் 4. இரண்டு முறை இந்த இரண்டு தேதிகளை விலக்கி, கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 7ல் கொண்டாடியது. தன் தளத்தில் இதனை ஒரு டூடுலாக அமைத்தது அதன் நான்காவது பிறந்த நாள் (2002) கொண்டாடிய போதுதான். Larry Page and Sergey Brin ஆகிய இருவர் தான், இந்நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தனர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவர், இதில் ஒரு லட்சம் டாலர் தொடக்க முதலீடாகத் தந்தார். 
1999: சில மாதங்களே கார் ஷெட்டில் கூகுள் இயங்கியது. ஜூன் 1999ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக, 2 கோடியே 50 லட்சம் டாலர் மூலதன நிதியைக் கொண்டதாக கூகுள் வளர்ந்தது. 
2000: அதிசயப்படத்தக்க வகையில், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக இயங்கிய யாஹூ நிறுவனம், கூகுளின் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்து செயல்படுத்தியது. கூகுள் தளத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 10 கோடியைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து தனக்கு வருமானம் ஈட்டித் தரும் AdSense புரோகிராமினைக் கூகுள் தொடங்கியது. 
2001: கூகுள் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இயங்கத் தொடங்கியது. முதல் முதலாக ஜப்பானில், டோக்யோவில் தன் அலுவலகக் கிளையைத் தொடங்கியது. Eric Schmidt இதன் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்று, நிறுவனத் தை வளர்ச்சியில் இமாலய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
2002: புதிய சேவைகளை இணைத்து இலவசமாகவே வழங்கும் Google Labs தொடங்கப்பட்டது. ஷாப்பிங் தேடல்களுக்கு Froogle உருவானது. தொடர்ந்து Google News தொடங்கப் பட்டது. 
2003: பைரா லேப்ஸ் (Pyra Labs) நிறுவனத்தினை வாங்கி, வலைமனை (Blogs) வசதியைத் தரத் தொடங்கியது. இப்போது கூகுள் புக் சர்ச் (Google Book Search) என்று அழைக்கப்படுகின்ற கூகுள் பிரின்ட்ஸ் வசதி தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான நூல்கள் அதன் டிஜிட்டல் வடிவில் இலவசமாகக் கிடைத்தன.
2004: கூகுளின் தேடல் அட்டவணை பொருட்களின் எண்ணிக்கை (Search Index) 800 கோடியைத் தாண்டியது. கூகுள் ப்ளெக்ஸ் என்ற தன் சொந்தக் கட்டடத்திற்கு கூகுள் தன் அலுவலகத்தினை மாற்றியது. இந்த ஆண்டில் கூகுள் மேற்கொண்ட சிறப்பான மாற்றம், இணைய மெயில் வசதியான, ஜிமெயில் தளத்தைத் தன் ரசிகர்களுக்கு வழங்கியதுதான். இமெயில் சந்தையில் மட்டுமின்றி, மனித குல வரலாற்றிலும், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 
2005: கூகுள் மேப்ஸ் மீது தன் கவனத்தை கூகுள் திருப்பியது. அத்துடன் கூகுள் ரீடர் மற்றும் கூகுள் அனலிடிக்ஸ் என்ற இரு வேறு வசதிகளும் அறிமுகமாயின. Gmail, Blogger and Search ஆகியவற்றின் மொபைல் பதிப்புகளுக்கும் அடிப்படை அமைக்கப்பட்டது. 
2006: யு-ட்யூப் வசதியை வாங்கியது கூகுள் நிறுவனம். கூகுள் மேப்ஸ் விரிவு படுத்தப்பட்டது. கூகுள் டாக்ஸ், ஜிமெயில் ஆகியவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை புயல் வேகத்தில் உயர்ந்தது. கூகுள் மேப்ஸ் உடன் இணைந்து, கூகுள் தெரு நிலை போட்டோ சேவையினை வழங்கியது.
2008: ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுடன் போட்டியிடும் வகையில், மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. குரோம் பிரவுசரை வெளியிட்டு, பிரவுசர் யுத்தத்தில் முன்னிலை இடம் பிடித்தது.
2009: தேடல், பிரவுசர் மற்றும் ஜிமெயில் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் பயன்படுத்து பவர் அனைவரையும் மடக்கிப் பிடிக்க, தன் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது கூகுள்.
2010: இணைய வெளியில் நீட்டத் தொடங்கிய தன் கரங்கள் தரும் சேவையினைப் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, ஒரு மிகப் பெரிய பலவானாக கூகுள் மாறியது.
2011: மோட்டாரோலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தன் நிறுவனத்தின் சேவைத் தளத்தில் பெரிய விரிவாக்கத்தினை கூகுள் ஏற்படுத்தியது. 
கடந்த 13 ஆண்டு காலத்தில், அனைத்து மக்களின் வாழ்வை எளிதாகவும், பொருள் பொதிந்ததாகவும் மாற்றுவதில் கூகுள் மிகப் பெரிய அளவில் உழைத்துள்ளது. ஒரு சில தவறுகளை கூகுள் ஏற்படுத்தி இருக்கலாம்; ஆனால் அவை தன்னைத் திருத்திக் கொள்ள ஏற்பட்டவையாக கூகுள் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பல வசதிகளை மனித இனத்திற்குத் தந்துள்ளது. "கெட்டதாக இருக்காதே, கெட்டவற்றிற்குத் துணை போகாதே' ("Don't be evil") என்ற தன் இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் தன் நேரம் பலம் அனைத்தையும் கூகுள் செலவழித்து வெற்றியும் கண்டுள்ளது. இந்த வெற்றி இனியும் தொடரும் என்ற நம்பிக்கை கூகுள் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, நமக்கும் ஏற்பட்டுள்ளது. வளரட்டும் கூகுள்! வாழ்த்துவோம் அத
னை


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP