சமீபத்திய பதிவுகள்

சுவிஸ் தமிழின் தற்போதைய செய்திகள்

>> Saturday, January 31, 2009புலிகள் ஆதரவு முழக்கங்கள் : முத்துக்குமார் அஞ்சலி ஊர்வலத்தில் பொங்கிய ஈழ உணர்வு!


ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் உடல் தகனத்திற்காக வடசென்னையில் உள்ள மூலக்கொத்தலம் மயானத்திற்கு ஊர்வலமாக கொளத்தூரில் இருந்து கொண்டு செல்லப் பட்டது. 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஊர்வலத்தில் ஒரு வயது குழந்தை முதல் முதிர்ந்தவர்கள் வரை பலரும் பங்கேற்றனர்.
(Nakkheeran)
31 Jan 2009 உழவன்


மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்த தயாரில்லை - கோதபாய


சிவிலியன்களை பாதிப்பை பூஜ்ஜியமாக பேணுவதனை முதனிலை நோக்காகக் கொண்டு அரசாங்கம் யுத்தத்தை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
31 Jan 2009 உழவன்


வன்னி பொதுமக்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது கடமையை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை - த.தே.கூ


வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என தமிழர் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
31 Jan 2009 உழவன்


வி.பாலகுமாரை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப விடுதலைப்புலிகள் முயற்சி:புலனாய்வுத் துறை தெரிவிப்பு


இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்துள்ள விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் வி.பாலகுமாரை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அரச புலனாய்வுதுறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
31 Jan 2009 உழவன்


செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு


வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான அலுவலகம் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட கைக்கண்டு வீச்சில் அலுவலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 Jan 2009 உழவன்


அஞ்சலி செலுத்த சென்ற தி.மு.க. மீது கல்வீச்சு - 'முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்லையாம்' - கருணாநிதி


இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
31 Jan 2009 உழவன்


விடுதலைப் புலிகளால் சர்வதேசத்துடனான உறவுகளுக்கு வெளியுறவுச் செயலர் நியமனம்


விடுதலைப் புலிகளால் சர்வதேசத்துடனான உறவுகளுக்கு புதிய பொறுப்பாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அதியுயர் உறுப்பினர்களில் ஒருவரான செல்வராசா பத்மநாதன் அவர்களை புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச தொடர்புகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக விடுதலைப் புலிகளின் தலைமையகத்தால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
31 Jan 2009 உழவன்


பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்த்தை அமெரிக்கா நீக்கும் - ஒபமாவுக்கான தமிழர்கள் அமைப்பு நம்பிக்கை


தமிழினத்தின் ஒரே காவலர்களாக விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2009 உழவன்


நடிகர் நாகேஷ் காலமானார்


திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் .
31 Jan 2009 உழவன்


"தமிழீழ மக்கள் படுகொலையை இந்தியா தடுக்க வேண்டும்": தன்னையே எரியூட்டிய மதுரை தமிழர்


தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மதுரையைச் சேர்ந்த தமிழரான ரவி நேற்று தன்னையே எரியூட்டிக்கொண்டார்.
31 Jan 2009 Vimal


தமிழகத்தில் சிறிலங்காவின் சுதந்திர நாளன்று முழு அடைப்பு: ஒரே மேடையில் அனைத்து கட்சி தலைவர்களும் கூடி முடிவு


ஈழத் தமிழர் பாதுகாப்புக்காக தமிழகம் தழுவிய அளவில் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) பொது வேலை நிறுத்தமும், சனிக்கிழமை (07.02.09) கறுப்புக்கொடி பேரணிகளும் நடத்தப்படும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2009 உழவன்


பிரபாகரனை கொன்றுவிட்டு ஏனைய தமிழர்களையும் கொல்லப் போவதாக சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் கூறுகின்றனர்:


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முதலில் கொன்று விட்டு, அதன் பின்னர் ஏனைய தமிழர்களைக் கொல்ல போவதாக கொழும்பு நகரில் உள்ள சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
31 Jan 2009 உழவன்


தமிழ்நாட்டில் மற்றுமொரு இளைஞர் தீமூட்டியுள்ளார்


தமிழ் நாட்டில் மற்றுமொரு இளைஞர் தன்னைதானே தீமூட்டி ஈழத் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.
31 Jan 2009 உழவன்


வன்னியில் இருந்து வெளியேறிய இளைஞர்களும், பெண்களும் தனித்தனியான இரகசிய முகாம்களில் சித்திரவதை; படுகொலை


வன்னிபெரு நிலப்பரப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்களில் பலர் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வவுனியா தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
31 Jan 2009 உழவன்


மீண்டும் இன்று 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படையினரால் கொலை: 129 பேர் படுகாயம்: சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலயம்" கொலைக் களமாகியது: அவலப்பட்டு மக்கள் சிதறி ஓட்டம்


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான சுதந்திரபுரம் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
31 Jan 2009 உழவன்


மோதல் தவிர்ப்பு காலத்திலும் இலங்கை இராணுவம் பொதுமக்களின் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் தாக்குதல்


முல்லைத்தீவின் சுதந்திரபுரத்தில், இராணுவம் தொடந்தும் இன்று காலை பாதுகாப்பு வலய பொதுமக்களை இலக்கு வைத்து எறிகணை வீச்சுகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக 8 பொதுமக்கள் படுகாயமடைந்த நிலையில் உடையார்கட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
31 Jan 2009 உழவன்


இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பும் தஞ்சை விமான நிலையத்தை முற்றுகை போராட்டம்: கொளத்தூர் மணி, மணியரசன் உட்பட 250 பேர் கைது


தஞ்சை விமானப் படைத்தளத்தில் இருந்து இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாகக் கூறி தமிழர் ஒருங்கிணைப்பு குழு "விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டம்" நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
31 Jan 2009 உழவன்


சிங்களத்தின் 61 வது சுதந்திர கொண்டாட்டம்! தமிழ்மக்கள் உயிர் வாழ்வின் மரணப் போராட்டம்!: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை


பிரெஞ்சு வாழ் தமிழ்மக்களே! சிங்கள தேசத்தின் 61 வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் துயரம் கொண்ட பெருந்துயர் நாளாக உலகிற்கு சொல்லுவோம். கொடிய அரசின் திட்டமிட்ட தமிழ்இன அழிப்பின் உச்ச நாளாக கொள்வோம். இது குறித்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
31 Jan 2009 kusnacht siva


உடையார்கட்டுப் பகுதியில் சிறிலங்காவின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோர் விவரம்முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டுப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு ஆசிரியை, ஒரு சிறுமி உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்
31 Jan 2009 kusnacht siva


உறைபனி குளிரையும் புறந்தள்ளி கனடாவை உலுக்கியெடுத்த மனித சங்கிலிப் பேரணி: 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு


உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு கனடா முயற்சிக்க வேண்டும் எனக் கோரியும் கனடா, ரொறன்ரோவில் நேற்று நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டம் கனடாவின் இன்றைய முக்கிய செய்தியாகவும் ஊடகங்களின் பேசுபொருளாகவும் இடம்பிடித்தது. ஆங்கில ஊடகங்கள் தமது கணிப்பின்படி 80,000 பேர் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளன.
31 Jan 2009 kusnacht siva


தமிழர் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கவும்: மகிந்தவிடம் எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு வேண்டுகோள்


வவுனியா உள்ளிட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரான்ஸ் நாட்டில் இருந்து செயற்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
30 Jan 2009 Vimal


வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிகள் வீரவணக்கம்


ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
30 Jan 2009 Vimal


கிழக்கில் ஆயுதக்குழுக்களினதும், படையினரினதும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஹர்த்தால் அனுஸ்ட்டிப்பு


கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களினதும், படையினரினதும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமைதியாக பூரண ஹர்த்தால் அனுஸ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 Jan 2009 உழவன்


முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு


முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
30 Jan 2009 உழவன்


முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதில் சிக்கல்: 'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்';கடிதத்தில் குறிப்பிட்ட வாசகம்!


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று வாலிபர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு முத்துக்குமாரின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
30 Jan 2009 kusnacht siva


3,000 இந்திய இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராய் போரிட கொழும்பு பயணம்


3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் கொழும்பு ஊடாக முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர். wassat
30 Jan 2009 உழவன்


48 மணி நேர அவகாசத்தில் கடும் எறிகணைத் தாக்குதல் - 44 பேர் பலி, 178 பேர் படுகாயம்


சிறிலங்கா அரசு 48 மணி நேர அவகாசத்தை வழங்கியுள்ள காலப்பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற படையினரின் எறிகணைத் தாக்குதலில் 44 பொது மக்கள் பலியாகியுள்ளதுடன், 178 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
30 Jan 2009 உழவன்


திருகோணமலையில் புலிகளின் தாக்குதலில் நான்கு படையினர் பலி


திருகோணமலையில் விடுதலை புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் 4 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Jan 2009 உழவன்


படையினரால் மீட்கப்பட்ட வாகனம் தமது அமைப்பிற்கு சொந்தமானதல்ல – யுனிசெப்


தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இராணுவப் படையினரால் மீட்கப்பட்ட வாகனம் தமது அமைப்பிற்கு சொந்தமானதல்ல என யுனிசெப் தெரிவித்துள்ளது.
30 Jan 2009 உழவன்


மருந்து, உணவு வசதிகளுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு தென் ஆபிரிக்கா அரசாங்கம் வலியுறுத்தல்


பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்களுக்கான மருந்து, உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதுடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு தென்னாபிரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
30 Jan 2009 உழவன்


ஈழப்பிரச்சனைக்காக நெல்லையில் பட்டத்தை வாங்க மறுத்த கல்லூரி இளைஞர்


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி பூபதி என்ற இளைஞர் தனக்கு அளிக்கப்பட்ட பட்டதை வாங்க மறுத்துள்ளார்.
30 Jan 2009 உழவன்


அரசு நிதியை பெற மறுத்த முத்துக்குமார் குடும்பம்


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து மரணம் அடைந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது தங்கை தமிழரசி வசித்து வரும் கொளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
30 Jan 2009 உழவன்


தமிழர் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கவும்: மகிந்தவிடம் எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு வேண்டுகோள்


வவுனியா உள்ளிட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரான்ஸ் நாட்டில் இருந்து செயற்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
30 Jan 2009 உழவன்


சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த முயற்சி


ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.
30 Jan 2009 உழவன்


இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை: ஐ.நா. இணைப்பாளர் கார்டன் வைஸ்


இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என ஐ.நா. மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
30 Jan 2009 உழவன்


பிரபாகரன் போன்ற மாவீரன் இதுவரை பிறக்கவில்லை; புலிகள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள்: திருமாவளவன் பேச்சு


வரலாற்றுக்கு முன்பும் சரி, வரலாற்றுக்கு பின்பும் சரி பிரபாகரன் போல மாவீரன் உலகத்தில் இதுவரை பிறக்கவில்லை. அப்படிப்பட்ட விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரண் அடையமாட்டார்கள். நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்
30 Jan 2009 kusnacht siva


ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு


சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து நேற்று வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதநேய பணிகளின் ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவிக்கையில்
30 Jan 2009 kusnacht siva


சிறிலங்காவின் சுதந்திர நாளில் நோர்வேயில் மாபெரும் தீப்பந்தப் பேரணி


சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாளை புறக்கணிக்கும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெறவுள்ளது.
30 Jan 2009 kusnacht siva


புதுக்குடியிருப்பு மருத்துவமனையை நோக்கி சிறிலங்கா படையினர் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையைச் சுற்றி நேற்று வியாழக்கிழமை இரண்டு மணிநேரம் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
30 Jan 2009 kusnacht siva


பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர கெடு!


இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
29 Jan 2009 உழவன்


பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு மனிதாபிமான யுத்தநிறுத்தத்திற்கு கோரிக்கை


பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் வியாழக்கிழமை சிறீலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் மனிதாபிமான யுத்ததநிறுத்தத்திற்கு உடன்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
29 Jan 2009 உழவன்


இலங்கையில் அடுத்தது என்ன?: ஆய்வு (பிபிசி செய்தியாளர் ஜில் மெக்கெவரிங்)


இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பகுதிகளுக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் மிகவும் ஆழமாக அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இந்த நடவடிக்கைகள் தமக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளதாக அரசாங்கம் பெருமிதங்கொள்கின்ற போதிலும், அந்த நடவடிக்கைகளின் வெற்றி குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விட்டன.
29 Jan 2009 உழவன்


விடுதலைப் புலிகளின் 35அடி நீளமான நீர்மூழ்கிக் கப்பலல்?


விடுதலைப் புலிகளின் 35அடி நீளமான நீர்மூழ்கிக் கப்பலொன்றினைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நகர்த்துவதற்குரிய ஊர்தியொன்றையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளன. இதற்கு 26 சக்கரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2009 உழவன்


காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.


29 Jan 2009 Vimal


சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, மருத்துவ வசதி அளிக்கத் தயார் - தமிழக மருத்துவர்கள்


மனித உரிமகளுக்கு எதிராக அப்பாவி தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்கள். சிறிலங்கா அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
29 Jan 2009 Vimal


ஐ.நா. சபை முன்பாக தமிழ் இளையோர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்


சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் சுவிஸ் தமிழ் இளையோர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Jan 2009 Vimal


கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திடீர் கைது


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரகசிய காவல்துறையினர் வீதிகளில் நடத்திய விசாரணைகள், சோதனை நடவடிக்ககைகளில் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
29 Jan 2009 Vimal


கல்மடு குளத்தை குண்டு வைத்து தகர்த்ததில் கொல்லப்பட்ட படையினரில் இந்தியப் படையினர்? தொல்.திருமாவளவன்


விடுதலைப்புலிகள் கல்மடு குளத்தை குண்டு வைத்து தகர்த்ததில் சுமார் 4ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் கொல்லப்பட்டவர்கள் 200 இந்திய படையினர் அடங்கியிருப்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
29 Jan 2009 Vimal


விதியின் சதியா? மதியின் பிழையா?


விதியின் சதியா? மதியின் பிழையா?
இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்
முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
29 Jan 2009 kusnacht siva


இன்னுயிரையே ஈந்து தமிழனைக்காக்ககூக்குரலிட்டு உள்ளான் ஒரு உண்மை உணர்வாளன்


ஈழத் தமிழ் இனத்தையே ஒட்டுமொத்தமாகக் கொன்று ஒழித்துக் கட்டி விட்டுத்தான் மறுவேலை என்று மார்தட்டுகிறார் இலங்கை அதிபர் ராஜபக்ச. அநதக் கொலை வெறியரோடு விருந்து உண்டு விட்டுத் திரும்புகிறார் இந்திய மத்திய அமைச்சர்.
29 Jan 2009 kusnacht siva


தமிழகத்திலிருந்து பல முத்துக்குமரன்கள் உருவாவதை தடுக்க முடியாது - திருமாவளவன் கருத்து


அரசு ஈழத் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதை தடுக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
29 Jan 2009 Vimal


முத்துக்குமாரின் மரணம்: சிறீலங்கா வங்கி அலுவலம் மீது தாக்குதல்


முத்துக்குமாரின் தீக்குளிப்பு தற்கொலையின் எதிரொலியாக சென்னையில் உள்ள சிறீலங்கா நாட்டுக்குச் சொந்தமான வங்கி அலுவலம் இனம் தெரியாதோரால் தாக்கி நொருக்கப்பட்டுள்ளது.
29 Jan 2009 Vimal


சிறிலங்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த நோயாளர்களுக்கான போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்ய ஐ.நா.வுக்கு பா.நடேசன் வேண்டுகோள்


சிறிலங்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த நோயாளர்களுக்கான போக்குவரத்துக்களை ஒழுங்கு செய்ய ஐ.நா. உள்ளிட்ட அனைத்துலக அமைப்புக்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Jan 2009 Vimal


இந்தியா இப்போதும் மௌனியாக இருக்குமா? மீண்டும் மக்கள் மீது சிங்கள கொடும் படை தாக்குதல்: 44 பேர் படுகொலை; 178 பேர் படுகாயம்!


சிறிலங்கா படையினர் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர்.
29 Jan 2009 Vimal


ஈழத் தமிழர் படுகொலை: இந்திய அரசினை கண்டித்து சென்னையில் இளைஞன் தீக்குளித்து தற்கொலை


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
29 Jan 2009 Vimal


புலிகளின் சுனாமித் தாக்குதல் ஆயிரம் படை பலி-புலிகள்


கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது
29 Jan 2009 kusnacht siva


பிரணாப் விஜயம் வெறும் பம்மாத்து தமிழகத் தலைவர்கள் கடும் கொதிப்பு


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று திரும்பியிருக்கின்றமை தமிழக மக்களை யும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான இந்திய அரசின் பம்மாத்து நடவடிக்கை என்று தமிழகத் தலைவர்கள் பலர் கண்டித்திருக்கின்றனர்.
29 Jan 2009 kusnacht siva


செங்கல்பட்டு மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம் முடிவுக்கு வந்தது; சட்டக்கல்லூரியில் இருந்து மாணவர்கள் இடைநிறுத்தம்


இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டு அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த ஏழு நாட்களாக நடத்திய உண்ணாநிலை போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பழச்சாறினை கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்தார்.
29 Jan 2009 kusnacht siva


சிறிலங்கா நிகழ்த்தி வரும் மனிதப் பேரவலத்தை கண்டித்து லண்டனில் 31 இல் கண்டன ஊர்வலம்


சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தைக் கண்டித்தும் அனைத்துலகத்திற்கு உணர்த்தும் வகையிலும் லண்டனில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் ஊர்வலத்தில் லண்டன் வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொண்டு பேரெழுச்சியைக் காட்ட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Jan 2009 kusnacht siva


சிறிலங்கா படையினரின் தாக்குதலில் க.வே.பாலகுமாரன் படுகாயம்சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார்
29 Jan 2009 kusnacht siva


எமது அரசியல் வாழ்வு அடியோடு நாசமாகி போனாலும் பரவாயில்லை; ஈழத் தமிழர்களை காப்பதற்கு நாம் போராடுவோம்: வைகோ


எங்கள் அரசியல் வாழ்வு அடியோடு நாசமாகி போனாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களை காப்பதற்கு நாங்கள் போராடுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
29 Jan 2009 kusnacht siva


இலங்கை பிரச்சனை - ஒத்தக் கருத்துள்ள தலைவர்களின் கூட்ட முடிவுநக்கீரன் Web
28 Jan 2009 Vimal


எங்கள் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் உரிமை இல்லை - சோமவன்ச


இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டுமெனவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தவே.
28 Jan 2009 Vimal


உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிஸ் பணியகம் விடுக்கும் அவசர வேண்டுகோள்!


சிறீலங்கா இனவெறி அரசின் இனஅழிப்பு நடவடிக்கையால் தாயகத்தில் நாளாந்தம் நமது உறவுகள் இரத்தமும் சதையுமாய் சிதறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் நாம் எமது உறவுகளுக்காக பல வழிகளில் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
28 Jan 2009 Vimal


கனடாவில் சிறிலங்கா துணைத் தூதரகத்தினை முற்றுகையிட்ட தமிழர்கள்


வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருப்பிடங்களை விட்டு துரத்தப்பட்ட மக்கள் மீது சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதலைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கனடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. (நன்றி-புதினம்)
28 Jan 2009 Vimal


பிரான்சிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக 10 ஆயிரம் மக்கள் அணிதிரண்டனர்


பரிஸ் லாச்சப்பல் பகுதியில் நேற்று மாலை பிரமாண்டமான கண்டன ஒன்றுகூடல் ஒன்றை தன்னிச்சையாக நடத்தியிருந்த தமிழ் மக்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று பரிசின் முக்கிய பகுதியான எத்தவால் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கண்ட ஒன்றுகூடலில் பெரும் எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
28 Jan 2009 Vimal


புதுக்குடியிருப்பு மருத்துவமனை காயமடைந்தோரால் நிரம்பியது


புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களால் காயமடையும் பொது மக்களின் தொகை அதிகரித்துவருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
28 Jan 2009 Vimal


கருணாநிதி சொன்னால் புலிகள் கேட்பார்கள்:ஜெ.


இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசுவதற்காகவும், போர் நிறுத்தம் வேண்டும் என்றால் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்ளவும் இலங்கைக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே.
28 Jan 2009 Vimal


இலங்கை பிரச்சனையில் ஒத்தக் கருத்துள்ள தலைவர்களின் கூட்ட முடிவு!


ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒத்தக் கருத்துள்ள தலைவர்களின் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்தார்.
28 Jan 2009 Vimal


12 இலக்க துப்பாக்கியைக் கூட பயன்படுத்திப் பழக்கமற்ற மருத்துவர் படையினரின் தாக்குதலில் 320 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது எப்படி? கெஹெலிய


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரின் தாக்குதலில் 320 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
28 Jan 2009 Vimal


150 படையினர் 1,500 புலிகள் பலி - பிரிகேடியர் அறிவிப்பு


வடக்கில் இடம்பெற்றுவரும் இருதரப்பு மோதல்களின் போது கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ள அதேநேரம், 1500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
28 Jan 2009 உழவன்


இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறியது சிறிலங்கா அரசு; மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல்: 21 பேர் படுகொலை; 121 பேர் காயம்


பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழ் மக்கள் 10 பேரை சிங்கள அரசு படுகொலை செய்துள்ளது.
28 Jan 2009 உழவன்


விஸ்வமடு சந்தி படையின்ர் வசம்: பாதுகாப்பு அமைச்சகம்


முல்லைத்தீவின் விஸ்வமடு நோக்கி முன்நகர்ந்த படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன. இத்தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் 58வது டிவிசன் படைப் பிரிவினர் இன்று புதன்கிழமை பிற்பகல் விஸ்வமடு சந்தியை அடைந்துள்ளனர்.
28 Jan 2009 உழவன்


இலங்கையின் உள்விவகாரத்திலும் வேறு எவரும் தலையிட முடியாது


இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியாக இருக்கட்டும் அல்லது வேறு எவராவது இருக்கட்டும் வரலாம் போகலாம் யுத்தம் நிறுத்தப்பட மாட்டாது. புலிகளை ஒடுக்குவதற்கான யுத்தத்தில் 95 வீதம் முடிவடைந்து விட்டது. 5 வீதமே எஞ்சியிருக்கிறது. அதனையும் முடித்த பின்பே யுத்தம் நிறுத்தப்படும்
28 Jan 2009 kusnacht siva


முதலில் யார் எழுவது நீயா ? நானா


வன்னியில் இருந்து வெளியேற மட்டும் தான் புலிகள் தடை விதித்திருந்தார்கள். ஆனால் மனிக் பாமில் இயற்கை உபாதை கழிப்பிற்கு கூட பாஸ் எடுக்க வேண்டியிருக்கின்றதே என்ற ஆதங்கங்களை கேட்க முடிகின்றது
28 Jan 2009 kusnacht siva


மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளியேன்! மகிந்தா


புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதோடு நாட்டில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
28 Jan 2009 kusnacht siva


யாரின் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழக முதல்வர்.....?


ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி எடுக்கும் குயுக்தித் தன நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் இத்தகைய பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்விவகாரத்தைத் தமிழக முதல்வர் கையாளும் மெத்தனப் போக்கை நோக்கும்போது, பிரச்சினைக்குத் தீர்வு என்ற "சுகம்" கிட்டும், ஆனால் ஈழத் தமிழ் மக்கள் தான் இங்கு "தப்பவே மாட்டார்கள்" என்பது நமக்கு உறுதியாகின்றது
28 Jan 2009 kusnacht siva


துரோகத்தை மறைக்கவே பிரணாப் இலங்கை பயணம்: வைகோ குற்றச்சாட்டு


இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகத்தை மறைக்கவே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுள்ளார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
28 Jan 2009 kusnacht siva


புலிகளின் குரல்" ஒலிபரப்புக்கு சிறிலங்கா அரசு தடை


தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

28 Jan 2009 kusnacht siva


இலங்கைத் பிரச்சனைக்காக தமிழக எம்.பி.க்கள் இராஜினாமா செய்ய வேண்டும்: மாணவர்களின் 6 வது நாள் உண்ணாவிரத மேடையில் திருமா


இலங்கை தமிழர் பிரச்சினைக்காக, தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் உடனே இராஜினாமா செய்ய வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்
28 Jan 2009 kusnacht siva


செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களுடன் திரை உலகத்தினர் சந்திப்பு


இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து 6 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களை திரைப்பட நடிகர் வடிவேலு, இயக்குநர்கள் சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி, மனோபாலா உள்ளிட்டோர் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
28 Jan 2009 kusnacht siva


வன்னி தமிழர்கள் நிலை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை- இடம்பெயர்ந்த மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர் உணவு உதவி


வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
வெல்லம்பிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இதனை உலக உணவுத்திட்டத்தின் ஊடாக வழங்கினார்.
28 Jan 2009 kusnacht siva


மீண்டும் "செம்மணி" புதைகுழிகள்?: வெளியேறிய 100-க்கும் அதிகமான இளைஞர்கள்- பெண்களை கொன்று புதைத்தது சிறிலங்கா!


சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன
28 Jan 2009 kusnacht siva


பிரான்சில் தமிழர்கள் புரட்சி


பிரான்சில் தமிழ் மக்கள் பெரும் புரட்சிகரமான போராட்டம் ஒன்றை நடத்தி முடித்திருக்கின்றார்கள். பிரான்சில் தமிழ் மக்கள் இதுவரை நடத்திய போராட்டங்களில் இன்றைய போராட்டம் போன்று என்றுமே நடந்ததில்லை எனும் அளவிற்கு இந்தப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள்.
27 Jan 2009 உழவன்


வன்னியில் ஆயிரக்கணக்காண மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.


வன்னியில் ஆயிரக்காண மக்கள் எதுவித நிவாரணமும் இன்றி தவிப்பதாக தமிழர் புனர்வாழ்வு கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவுத் திட்டமே வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணங்களை விநியோகித்து வருகிறது.
27 Jan 2009 Vimal


அவலப்படும் வன்னி மக்கள் மீது நோர்வே ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது: தூதரக அறிக்கையில் தெரிவிப்பு


இலங்கையின் வன்னிப் பகுதியில் பரிதவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுவதற்கு காலந்தாழ்த்தாது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வைத்தியசாலை நடவடிக்கைகளும் தடையின்றி நடத்தப்பட வேண்டும். காயமடைந்த மக்களுக்கான மருந்து உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று நோர்வே வற்புறுத்தியுள்ளது.
27 Jan 2009 உழவன்


வே.பிரபாகரன் அவர்கள் தொடர்பான புலனாய்வுத் தகவலைபெற்றுக்கொள்ள மலேசியா முயற்சி


விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் இடங்கள் பற்றிய புலனாய்வுத் தகவலை இந்தியா மற்றும் இன்ரர் போலிடமிருந்து பெற்றுக்கொள்ள மலேசியா விரும்புகின்றது.
27 Jan 2009 உழவன்


பிரணாப் பயணம் பலனளிக்காது - சிங்கள அரசை வலுப்படுத்துவதற்கும், தமிழினத்தை அழிப்பதற்கும்தான் பயன்படும் : திருமாவளவன்


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம், இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் எந்தவித பயனும் அளிக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
27 Jan 2009 உழவன்


இந்தியா கொடுத்த ஏவுகணைகளே தமிழர்களை காவு கொள்கின்றது: வைகோ குற்றச்சாட்டு


இந்தியா கொடுத்த குறைந்த தொலைவு ஏவுகணைகளைக் கொண்டே ஈழத் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் காவு கொள்கின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
27 Jan 2009 உழவன்


ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா கண்டனம்


கிழக்குப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளில் தன்னை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈடுபடுத்திக் கொள்ளாததற்கு சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
27 Jan 2009 உழவன்


மௌனம் கலைத்து கண்டனம் தெரிவித்தது நோர்வே


இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாவதை நோர்வே வன்மையாக கண்டித்துள்ளது.
27 Jan 2009 உழவன்


கருணா நிதிக்கு ஒரு கண்ணீர் மடல்...!


தமிழக முதலமைச்சராம் மூத்தமிழ் வேந்தனாம்
கலைஞர் அவர்களிற்கு ஒரு கண்ணீர் மடல்.
இலங்கை பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை
இனவழிப்பு வெறியோடு கொன்றழித்து வருகிறது
27 Jan 2009 kusnacht siva


ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....


தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை.
27 Jan 2009 kusnacht siva


விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் கிடையாது


விடுதலை புலிகள் மீது கருணை காட்டமாட்டோம். அதேநேரத்தில் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க முயற்சி செய்வோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
27 Jan 2009 kusnacht siva


"விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்?


இந்தியா கொடுத்த குறைந்த தொலைவு ஏவுகணைகளைக் கொண்டே ஈழத் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் காவு கொள்கின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்
27 Jan 2009 kusnacht siva


தமிழகத் தலைவர்கள் வன்னிக்குப் போய் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும்: மகிந்த கிண்டல்


போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு தமிழக தலைவர்கள் வன்னிக்கு போய் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த கிண்டலடித்துள்ளார்.
27 Jan 2009 kusnacht siva


மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்புவன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்
27 Jan 2009 kusnacht siva


முல்லைத்தீவு நகருக்குள் படையினர் பிரவேசித்துள்ளதை தேசிய கொடிகளை ஏற்றி ஒருமாதத்திற்கு கொண்டாடவேண்டும் - சிங்கள மக்களுக்கு சரத் பொன்சேகா உத்தரவு


படையினர் வெற்றிகொள்கின்றபோது மக்கள் வழங்குகின்ற ஒத்துழைப்புகள் படையினரின் எதிர்கால வெற்றிக்கு வழிசமைக்கும் என்பதனால் படைவெற்றிகளை கடந்தகாலங்களில் கொண்டாடியது போல முல்லைத்தீவு நகருக்குள் படையினர் பிரவேசித்துள்ளதையும் தேசிய கொடிகளை ஏற்றி ஒருமாதத்திற்கு கொண்டாடவேண்டும் என்று சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உத்தரவிட்டுள்ளார்.
27 Jan 2009 உழவன்


24 மணி நேரத்தில் 300 பொதுமக்கள் பலி, மேலும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம்


வன்னியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 300 பொதுமக்கள் பலியானதுடன், மேலும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
26 Jan 2009 உழவன்


ஈழத்தில் உயிர்பலி புலம்பெயர்தேசத்தில் தினவெடுக்கும் துரோகிள்நீங்களும் நாங்களும் நினைப்பது போல் யுத்தம் முடிந்தால் சரி எல்லாம் வழமைக்குத் திரும்பி விடும். யாழ்தேவியில் யாழ்ப்பாணம் போய் கசூரினாவில் குளித்து கூவிலில் கள்ளடித்து பருத்தித்துறையில் புட்டும் கணவாயக்கறியும் உண்ணலாம் என்பது சிந்தனைக்கு மட்டும் தான். புலிகள் தோற்றால் போதும் எல்லாம் கிடைத்துவிடும் என்று காத்துக்கிடக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் புலிகள் வெல்லும் வரை பொறுத்திருப்போம் என புலம்பெயர் தேசத்தில் தினவெடுக்கும் தோள்களுக்கும் இந்த மனித அவலங்கள் புரியாதவை.

26 Jan 2009 kusnacht siva


புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க சிங்கள படையுடன் இணைந்து தேடும் இந்திய உளவு படை


முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க சிங்கள படைகளுடன் இணைந்து கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
26 Jan 2009 kusnacht siva


முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ள படையினர், புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி


முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ள படையினர், புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி தீவிர முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26 Jan 2009 kusnacht siva


"மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்: 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி, 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் !


வன்னி உடையார்கட்டு பகுதியில் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படையினர் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்துள்ளனர்.

26 Jan 2009 kusnacht siva


பலமுடன் இருந்தால் மதிப்பார்கள், நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள்மேற்குலகின் கண்காணிப்பில், 2002 பெப்ரவரியில் உருவான சமாதான ஒப்பந்தம் ஜனவரி 2008 இல் இலங்கை அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2008 இல் ஐ.நா. அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.2002 இலிருந்து 2008 ஜனவரி வரை, மேற்குலக நாடுகள் வகித்த முக்கிய பாத்திரத்தை, ஒப்பந்த கிழிப்போடு இந்தியா கையேற்றது. அதன் பணி இன்னமும் வன்னியில் தொடர்கிறது.இந்நிலையில் பிரித்தானிய அரசிடமிருந்து, பேரினவாதத் தொனியில், அறிக்கையொன்று வெளிவந்து புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
26 Jan 2009 kusnacht siva


விடுதலைப் புலிகளால் உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்படும் கள செய்திகளே, உண்மையானவை


கல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது.

26 Jan 2009 kusnacht siva


தமிழீழத்தை அங்கீகரிக்கும்படி மத்திய அரசை தமிழக அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும்: இராமதாஸ் வலியுறுத்தல்


ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்
26 Jan 2009 kusnacht siva


விடுதலைப் புலிகளை அழிக்கும் போரை இயக்கி தமிழினத்தை வேரறுக்க இந்திய அரசு திட்டம்: வைகோ சீற்றம்


தமிழர்களை அழிக்க சிங்கள அரசாங்கம் நடத்தும் இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் தான் தேவையான அனைத்தையும் வழங்கி இயக்கி வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கம் - தற்போது இறுதி கட்டமாக - தமிழினத்தை வேரறுப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டத்தை அரங்கேற்றுகின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சீற்றம் வெளியிட்டுள்ளார்.
26 Jan 2009 kusnacht siva


தமிழ் மக்கள் நாளாந்தம் செத்து மடியும் போது சிறிலங்கா அரசை பாராட்டியிருப்பது வேதனையளிக்கிறது: அகாசியிடம் த.தே.கூ.


வன்னியில் வானூர்தி தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதல்களாலும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களாலும் தமிழ் மக்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலை குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டியிருப்பது பெரும் வேதனை அளிப்பதாகவுள்ளது என ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
26 Jan 2009 kusnacht siva


வன்னியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் - 22 பொதுமக்கள் பலி – 60 பேர்காயம்


வன்னியில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டு 60 பேர் வரை காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 Jan 2009 உழவன்


வரலாறு கவனிக்கிறது


வரலாற்றால் சபிக்கப்பட்ட இரு நிலங்கள். நவீன உலகைப் பின்னோக்கி இழுக்கும் இரு போர் வெறியர்கள். துப்பாக்கிகள், எறிகணைகள், வெடிகுண்டுகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ரத்தம், ஓலம், மரண ஓட்டம், சாவு...
25 Jan 2009 Vimal


மிகுதியையும் மிக விரைவில் வெற்றிகொள்வோம் என்று இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.


பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் படையினர் 95 வீதம் வெற்றி கண்டுள்ளனர் - இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவிப்பு( வீரகேசரி )
25 Jan 2009 Vimal


கல்மடு - சொல்லப்படாத கதை:-GTN - போர்நிலவரச் செய்தியாளர்:


முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு கல்மடுக் குளத்தின் அணைக்கட்டு நேற்று குண்டு வைத்து தகர்கப்பட்டது. குளத்தில் தேக்கிவைக்கப்பட்ட நீர் அணை புரண்டு ஓடி அயலில் உள்ள கிராமங்களை நீரில் மூழ்கடித்தது. இதனைப் பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் உறுதிப்படுத்தியது.
25 Jan 2009 உழவன்


முல்லைத்தீவு நகரம் படையினர் கட்டுப்பாட்டில்


முல்லைத்தீவு நகரம் சற்று நேரத்துக்கு முன்னர் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
25 Jan 2009 உழவன்


இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழர் இன அழிப்பு யுத்தம். இந்திய அரசால் வகுக்கப்பட்ட சதித்திட்டம்: வைகோ ஆவேசம்


இலங்கையில் தமிழ் இனத்துக்கே பேரழிவு நேரும் வகையில், சிங்கள இனவெறி அரசின் இராணுவம் கொலை வெறித் தாக்குதல் நடத்துகிறது. அதற்கு இந்திய அரசாங்கம் முழு உதவியும், ஆயுதங்களும் வழங்குகிறது. இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழர் இன அழிப்பு யுத்தம். இந்திய அரசால் வகுக்கப்பட்ட சதித்திட்டம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
25 Jan 2009 உழவன்


முல்லைத்தீவுக்குள் படையினர் பிரவேசித்துள்ளனர்: இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு


விடுதலைப்புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்பட்ட முல்லைத்தீவுக்குள் சிறிலங்கா படையினர் இன்று காலை பிரவேசித்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
25 Jan 2009 உழவன்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails