சமீபத்திய பதிவுகள்

லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

>> Saturday, January 31, 2009

 
 
சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.
லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
அத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் உள்ளனர்.
 

 

http://www.puthinam.com/full.php?2b24OOA4b3dC6Dp24d01VoK3a03O4AUb4d24SmA4e0dW0Mtjce0cf1e02cceAcY43e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP