சமீபத்திய பதிவுகள்

இந்த வார இணைய தளம்

>> Sunday, January 31, 2010


 
 

 ஆன்லைன் கீபோர்டு
இங்கு சொல்லப்பட இருக்கிற கீ போர்டு இசை அமைக்கப் பயன்படும் கீ போர்டு. பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக் கீ போர்டுகளை வாங்கித் தருகின்றனர். சிலர் அருகில் கற்றுக் கொடுக்கும் மையங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி கீ போர்டை இசைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து இசை உருவாக்குவதன் முழு பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றனர். 
இது போன்ற ஆசையைத் தீர்க்கும் வகையில் ஆன்லைனில் பல விஷயங்களைக் கற்றுத் ரும் தளம் ஒன்று, கீ போர்டினையும் கற்றுத் தருகிறது. இதன் தளத்திலேயே ஒரு கீ போர்டு தரப்படுகிறது. இதில் Piano, Organ, Saxophone, Flute, Pan Pipes, Strings, Guitar, Steel Drumsமற்றும் Double Bass ஆகிய அனைத்து வாத்தியங்களிலும் கிடைக்கும் இசையைக் கற்றுக் கொள்ளலாம்; உருவாக்கலாம். இசைக்கையில் துணை புரிய ஆறு வகையான ட்ரம் பீட்ஸ் தரப்பட்டுள்ளது. இந்த கீ போர்டின் இடது பக்கம் மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. அவை Chord Mode, Play Chord மற்றும் Instructions. இந்த வழிகளில் சில கீகளைத் தேர்ந்தெடுத்து, அவை தொடர்ந்து வாசிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம். Instructions  என்ற பிரிவில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று குறிப்புகள் காணப்படுகின்றன. 
இந்த கீ போர்டில் நாம் விரும்பும் வாத்தியத்தைத் தேர்வு செய்து கீகளை அழுத்திப் பழகலாம். ஏற்கனவே கீ போர்டு இயக்கத் தெரிந்தவர்கள் இதில் இசை அமைக்கலாம். முதலில் உங்கள் சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒலி மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. 
இசையில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் உள்ள கீ போர்டு எப்படி இசை ஒலியைத் தருகிறது என்று விளையாட்டுக்காகக் கூட இதனை ஒலித்துப் பார்க்கலாம். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:  http://www.bgfl.org/index.cfm?s= 1&m=239&p=167,view_resource&id=50


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரன் இறப்பு சான்றிதழ்

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் : சி.பி.ஐ.,க்கு தரவில்லை இலங்கை
 

Front page news and headlines today புதுடில்லி : ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலை புலித் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்து எட்டு மாதங்களாகியும், அவரின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து இன்னும் சி.பி.ஐ.,க்கு வந்து சேரவில்லை.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், புலிகளின் தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் புலித் தலைவர் பிரபாகரனும் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றிருந்தார். ஆனால், அவரைப் பிடித்துக் கொண்டுவர முடியவில்லை என்பதால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், இலங்கையில் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் புலித்தலைவர் பிரபாகரன், எட்டு மாதங்களுக்கு முன், கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜிவ் கொலை வழக்கை முடிப்பதற்காக, பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை தர வேண்டும் என, இலங்கை அரசிடம் சி.பி.ஐ., கேட்டது. அந்தச் சான்றிதழ் இன்னும் இலங்கை அரசிடம் இருந்து வந்து சேரவில்லை என, தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதேபோல், ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.source:dinamalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈழம்:வெற்றி தந்துள்ள வெறி

'மகத்தான வாக்கு வித்தியாசத்தில் வென்று மறுபடியும் இலங்கை அதிபராகி இருக்கிறார் மகிந்தா ராஜ பக்ஷே!

இலங்கையில் 1972-ம் ஆண்டில் இருந்து அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் இருக்கிறது. வில்லியம் கோபல்லா, ஜெயவர்த்த னே, பிரேமதாசா, விஜேதுங்கே, சந்திரிகா குமாரதுங்கே ஆகியோரின் வரிசையில் கடந்த 2005-ம் ஆண்டு அதிபரானார் மகிந்தா ராஜபக்ஷே. 2012-ம் வருடம் வரை அவர் பதவியில் இருக்கும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் பெற்ற வெற்றியை முன்னிறுத்தி முன்னதாகவே தேர்தலை சந்தித்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய சாதனையும் நிகழ்த்தியிருக்கிறார்.

தேர்தல் முடிவில் ஃபொன்சேகா சார்ந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தொண்டர்கள்கடுமை யான விமர்சனங்களை முன்வைத்துக் கொந்தளிக் கின்றனர்.

ஐ.தே.க. செயலாளரான திஸ்ஸ அத்தனாயக்காவிடம் பேசினோம். ''இலங்கையில் தேர்தல் ஜனநாயகமான முறையில் நடக்காது என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். அதனால் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பார்வை யாளர்களை தேர்தலைக் கண்காணிக்க வரும்படி அழைத்திருந்தோம். அவர்கள் வராத நிலையில்... ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தேர்தலைக் கண்காணித்தனர்.

இந்தத் தேர்தலில் சிறுபான்மை இனமான தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு இருந்த 35 லட்சம் வாக்குகள் ஃபொன்சேகாவுக்கே ஆதரவாக இருந்தன. அதனால் சிறுபான்மை வாக்குகளை திட்டமிட்டுத் தடுத்தது ராஜபக்ஷே தரப்பு. தேர்தல் தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர், மாணிக்பாய், கோண்டாவில் போன்ற தமிழர் பகுதிகளில் அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தொடர்ச்சியாக 13 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஆவரங்காலில் உள்ள த.தே.கூ எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீட்டிலும் தாக்குதல் நடந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காகவே பேருந்து சேவைகளை சுத்தமாக நிறுத்தினர்; ரயில் சேவைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. வன்னி மாவட்டம் பண்டாரிக்குளம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது ராணுவம். கிழக்கில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கவச வண்டிகளையும் ராணுவத்தையும் நிறுத்தி, போர் சூழல் கணக்காய் மக்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மலையகத்தில் தமிழர் பகுதிகளில் மக்களின் வாக்காளர் அடையாள அட்டைகள் மொத்தமாக பிடுங்கப்பட்டு, கள்ள ஓட்டுப் போட பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 35 லட்சம்சிறுபான்மையினர் வாக்குகளில் வெறும் 6 லட்சம்வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. பதிவானவற்றில் 70 சதவிகித வாக்குகளை ஃபொன்சேகா பெற்றிருக்கிறார் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். முழு வாக்குகளும் பதிவாகியிருந்தால், தேர்தல் முடிவே மாறியிருக்கும். அதிபரின் சகோதரரான பசில் ராஜபக்ஷே, தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுவித்திருக்கிறார். வாக்கு எண்ணும் இடங்களில் எங்கள் முகவர்களை அனுமதிக்கவேயில்லை. பிற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளையும் ராஜபக்ஷேவுக்கு விழுந்ததாகக் கணக்குக் காட்டி அவரது வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியிருக்கிறார்கள்!'' என குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனார்.

'இதுகுறித்து இலங்கை அரசியல் விமர்சகர்களின் கருத்து என்ன?' என்று அவர்களிடம் பேசினோம்.

''இந்தத் தேர்தலில் சில சிங்களக் கட்சிகளையும், தமிழ்க் கட்சிகளையும் அரசியல்ரீதியாக தோற்கடித்திருக்கின்றனர் மக்கள். தற்போது ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்திய ஐ.தே.கூ இடம்பெற்றிருந்த ஜே.வி.பி., ஜாதீக ஹெல உறுமய போன்ற முக்கியமான சிங்களக் கட்சிகள், கடந்த 2005 தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஆதரவான கூட்டணியில் இருந்தன. அதோடு, தமிழர்கள் முற்று முழுதாகத் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். அப்போது ராஜபக்ஷே 50.29 சதவிகித வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றிருந்தார். எந்தப் பெரிய கூட்டணியும் இல்லாமல் தமிழர் வாக்குகளும் கிடைக்காமலேயே ரணில் 48.43 சதவிகித வாக்குகள் பெற்று மயிரிழையில் தோற்றிருந்தார். அந்தக் கணக்குடன் ஒப்பிடும்போது இந்த முறை ஜே.வி.பி., ஜாதீக ஹெல உறுமய போன்ற சிங்களக் கட்சிகள் ஃபொன்சேகாவையே ஆதரித்தன. தமிழர் வாக்கு வங்கியை வைத்திருக்கும் த.தே.கூ. அவரையே ஆதரிக்க... ஃபொன்சேகா மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றே எல்லோரும் கணித்தனர். ஆனாலும் ராஜபக்ஷே மீண்டும் ஜெயித்துவிட்டார். விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றிக்கு முழு நாயகனாக ராஜபக்ஷேவையே சிங்கள கிராமப்புற மக்கள் நினைத்ததுதான் இதற்கு முதல் காரணம். சிங்களக் கட்சிகளான ஜே.வி.பி-யின் கோட்டையாகக் கருதப்படும் திஸ்ஸமஹராம, ஐ.தே.கட்சியின் மீரிகம, ஜ.ஹெ.உறுமயவின் மொனராகலை போன்ற பகுதிகளில்கூட ராஜபக்ஷேவுக்குத்தான் மிக அதிக வாக்குகள் கிடைத்துள்ளன!

ராஜபக்ஷே தரப்பு... 'த.தே.கூட்டமைப்புடன் சில ரகசிய ஒப்பந்தங்களை ஃபொன்சேகா செய்து கொண்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் புலிகள் மீண்டும் தலை தூக்குவார்கள்...' என பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி அந்த ஒப்பந்த நகல்களையும் சிங்கள மக்களுக்கு வீடு தோறும் நோட்டீஸாக வழங்கியிருந்தது. இது சிங்கள மக்களின் இன வாதத்தைத் தூண்ட... அவர்கள் ராஜபக்ஷேவுக்கே வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலில் 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக ஃபொன்சேகா கூறியிருந்த நிலையில், 2,500 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவதாக ராஜபக்ஷே கூறியிருந்தார். இருந்தாலும் அரசு ஊழியர்களின் வாக்குகள் ராஜபக்ஷேவுக்குத்தான் விழுந்திருக்கின்றன!'' என்கிறார்கள்.

ஃபொன்சேகாவின் அடுத்த கட்ட 'மூவ்' குறித்து அவர் ஆதரவுப் பேச்சாளரான மனோ கணேசனிடம் பேசினோம். ''தேர்தலில் பல்வேறு அடக்குமுறைகளினால் ஆளும் தரப்பு வெற்றி கண்டுள்ளது. தற்போதைய நிலையில் ஃபொன்சேகாவின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை... அதனால் சில காலம் அவர் ஏதாவது ஒரு வெளிநாட்டில் வசிக்கலாம் என எண்ணுகிறார். தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டதற்காக ஒருவரை கைது செய்ய நினைப்பது ஜனநாயகத்தைக் கொல்வதற்கு சமமாகும்!'' என கொதித்தார்.

இதற்கிடையில் போர் காலங்களில் இலங்கை ராணுவத்துக்கு ஃபொன்சேகாவின் மருமகனின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஆயுத பேரங்களில் பெருமளவு ஊழல் இருப்பதாகச் சொல்லி அவரையும் அவர் மருமகனையும் கைது செய்யும் முடிவிலிருக்கிறாராம் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே. இந்த ஆயுத பேர குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே நாம் ஜூ.வி-யில் எழுதியுள்ளோம்!

தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கத்திடமும் பேசினோம். ''ஏற்கெனவே மூன்று தசாப்த காலமாக இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இது மிகவும் கெட்ட காலம்! தமிழ் மக்களைக் கொன்று குவித்து... அதன் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராஜபக்ஷே, தற்போது சிங்களப் பேரினவாதத்தின் பெரிய ஆதரவால் அசுர பலத்துடன் அதிபராகியிருக்கிறார். இது வேதனையில் வெந்து மடியும் தமிழர்களை இன்னும் கொடுமைக்கு உள்ளாக்குவதற்கான ஆரம்பம். தமிழ் மக்களுக்கு கேடயமாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில்... இனி எங்கட தமிழ் சொந்தங்களை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் எனத் தெரியவில்லை. அதற்கான வழிகளும் புலப்படவில்லை!'' என நா தழுதழுக்க தேம்பினார் சிவாஜிலிங்கம்.

''கள் குடித்த குரங்கை தேளும் கொட்டிய கதையாக ராஜபக்ஷேவின் இந்த மறுவெற்றி அமைந்திருக்கிறது. ஒருபக்கம், தனக்கு வாக்களித்த சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காகவும், இன்னொரு பக்கம் வெற்றி கொடுத்திருக்கும் வெறியில் தன் தமிழர் வேட்டையைத் தொடரவும் ராஜபக்ஷே அரசுக்கு தூண்டுதல் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது. இந்த தருணத்திலும்கூட உலக நடுநிலையாளர்களும், அங்கீகாரத்துக்குரிய அமைப்புகளும் இலங்கை யில் நேரடியாக இறங்கி தமிழர்களின் நேற்றைய - இன்றைய நிலைமை குறித்த உண்மைகளை ஆராயாவிட்டால், மிச்சம் மீதியுள்ள தமிழர்களின் 'நாளை' என்பது மிகப் பெரிய அவலமாகிவிடும்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் உள்ள நடுநிலையாளர்கள்.

துரோகமும் பாவமும் கூத்தாடும் அந்த மண்ணில் அடுத்து என்னதான் நடக்குமோ?

- மு.தாமரைக்கண்ணன்   
 

source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வலது கண் வழியே வெளியேறிய புல்லட்!

>> Saturday, January 30, 2010

 
 

ருத்துவத் துறையில் சென்னை எங்கேயோ சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி... இராக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இப்ராஹிம் நூரி. அவருக்கு ஐந்து சகோ தரிகள். குடும்பத்தைக் காப்பாற்ற இராக் ராணுவத் தில் சேர்ந்தார். கொஞ்ச நாட்களுக்கு முன் இரு குழுக்களுக்கு இடையே கலவரம் வெடித்தபோது பாதுகாப்புப் பணியில் இருந்த நூரியின்மீது எங்கி ருந்தோ பறந்து வந்த துப்பாக்கிக் குண்டு அவருடைய பின் மண்டையில் துளைத்து, வலது கண் வழியாக வெளியேறியது. குண்டு துளைத்ததில் வலது கண் ணுக்குக் கீழே ரத்தக் குழாய்கள், கண் நரம்புகள், எலும்புகள் சிதைந்துவிட்டன. வலது கண் இறங்கி விட்டது. இராக்கில் அவருக்குமுதலு தவி மட்டும் செய்து அனுப்பி விட்டார்கள். பல இடங்களில் விசாரித்து, கடைசியாக சிகிச் சைக்கு நூரி வந்து இறங்கிய இடம்... பாலாஜி பல் மற்றும்முகச் சீரமைப்பு மருத்துவமனை.

அங்கே நூரியின் முகத்தை ஆராய்ந்த டாக்டர் பாலாஜி, உடைந்த எலும்புகளுக்குப் பதில் டைட்டானியம் தகடுகள் பொருத்த முடிவு செய்தார். ஆபரேஷனில் வலது கண்ணை மேலே தூக்கி, அதற்குக் கீழே டைட்டானியம் தகடுகள் பொருத்தி, நூரியின் முகத்தை இயல்பான தோற்றத்துடன் சீரமைத்து விட்டார் பாலாஜி.

இந்த அபூர்வமான ஆபரேஷன்பற்றி டாக்டர் பாலாஜியிடம் பேசினேன். ''நூரி வரும்போது அவர் மனசில் நம்பிக்கையே இல்லை. நாலு மணி நேரம் ஆபரேஷன் பண்ணி, நூரியோட முகத்தைச் சீரமைச்சோம். இந்த ஆபரேஷனை அமெரிக்காவில் பண்ணியிருந்தால் 25 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாகி இருக்கும். இங்கே வெறும் 65 ஆயிரம் ரூபாய்தான் சார்ஜ் பண்ணினோம். குறைந்த கட்டணத்தில், சர்வதேசத் தரத்தில் ஆபரேஷன்கள் செய்வதால், வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் இருந்து நிறைய பேர் சென்னைக்கு வருகிறார்கள்.

நம்மை நம்பி வருகிறவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் கட்டணத்தைக் குறைத்து மருத்துவ சேவை ஆற்றி வருகிறோம். ஆபரேஷன் முடிந்துநூரி கிளம்பும்போது, அவரால் பேசவே முடியலை. ''என் வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சேன். நான் நல்லா இருந்தாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை''ன்னு அழுதார். நூரியோட அம்மா ''நீங்க இராக் வாங்க. நாங்க உங்களைப் பத்திரமா பார்த்துக்கிறோம்''னு கையைப் பிடிச்சுக் கேட்டாங்க. இந்த அன்புக்கு முன்னாடி பணமெல்லாம் ஒரு விஷயமா சார்?''- குரல் நெகிழ்ந்து கேட்கிறார் டாக்டர் பாலாஜி!

 


source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த தேர்தல்

 

மீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது.

சிங்களப் பெரும்பான்மை சக்திகளால் தமிழின அழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்த போது ஒருவர் தீர்மானம் எடுக்க அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றியவர் மற்றவர். இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நின்று ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நிலைபாட்டினை எடுத்தது மட்டுமல்லாமல் இருவர் தொடர்பிலான வெளிவராத பல உண்மைகள் வெளிவரத்தொடங்கின. இன்னும் பெருமளவில் வெளிவரும் என்பதனை யாரும் மறைக்க முடியாது.

அரசதலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழர் தரப்பு வாக்குகளைப் பெறுவது தொடர்பில் இரண்டுபிரதான தரப்புக்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டே வந்தன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை மௌனம் சாதித்து இறுதியில் தமது நிலைப்பாட்டினை எடுத்தது. நிலைப்பாடு வெளியாகியதும் மகிந்த தனது வழமையான ஆயுதத்தை கையிலெடுத்துக் கொண்டார். இனவாதம் என்கின்ற அந்த ஆயுதத்தை ஊடகங்கள் அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் இருந்தமையால் அதனைச் சிறப்பாக கையாண்டார். பொன்சேகாவிற்கும் சம்பந்தருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் அதன் மூலம் நாடு பிளவுபடப் போகின்றது. எனவே தமக்கு வாக்களிக்குமாறு சிங்கள மக்களிடம் மகிந்த மன்றாடினார். தென்னிலங்கை ஊடகங்கள் இனவாதத்தை மிக மோசமாகக் கக்கின.

இதனைவிடவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை சிதைக்கும் அல்லது உடைக்கும் நடவடிக்கையினையும் சிறப்பாக மகிந்த மேற்கொண்டார். அதற்காக பணத்தினையும், ஆயுதத்தினையும் கையிலெடுத்துச் செயற்பட்டார். பணம் பெற்றவர்கள் மகிந்தவிற்கு விசுவாசிகளாகச் செயற்பட்டனர். அதன் பலனாக ஒருவர் சுயேட்சையாக தேர்தலில் குதித்தார். அவரை தேர்தலில் இறக்கியதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதே நோக்கம். மற்றொரு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான கொழும்பு – 7 இல் அமைந்துள்ள காணி ஒன்றினை மகிந்த குடும்பம் விலைக்கு வாங்கியது. (அது முன்னர் வெளிநாட்டு தூதரகம் அமைந்திருந்த காணி, அதனை இடித்து மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவினால் புதிதாக பாரிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது) அந்தக் கொடுக்கல் வாங்கலின் விசுவாசமாக தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பங்கிற்கு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரை கடத்திய மகிந்த தரப்பு அவருடனான பேரம் பேசலினை (காட்டிக்கொடுப்பு அமைச்சர் ஒருவரின் ஊடான) அடுத்து கடத்தியவரையும் விடுவித்தது. இதற்கு நன்றிக்கடனாக அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் போர்க்காலத்திற்கு முன்பாகவே மகிந்ததரப்புடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் சாரம் என்னவென்றால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றுவது உட்பட எந்த ஒரு தமிழ்த்தேசிய சார்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்பது. மற்றுமொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச விடுத்த அன்புக் கட்டளையை சிரமேற்கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிற்கு வரமுடியாமலேயே வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தவினால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளின் பின்னர் மகிந்தவிற்கு சார்பான கூட்டங்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டார். வழமையாக மகிந்தவிற்கு வக்காளத்து வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். இன்னொருவர் மகிந்த கேட்டுக்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதைத் தவிர்ப்பதற்காக தன்னைத்தானே (தவறுதலாக) சுட்டுக்கொண்டு ஒதுங்கிக் கொண்டார். இவ்வாறான அனைவரையும் தன்னகத்தே கொண்டுள்ள கூட்டமைப்பு ஒரு முடிவினை எடுப்பதற்கு ஏன் காலதமாதம் ஆனது என்பதை இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகின்றோம்.

இவ்வளவு விடயங்களையும் அறிந்திருந்தும் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதென்ற முடிவிற்கு வந்துள்ளனர். இந்த இறுதி முடிவு எடுக்கப்படும் போது மேற்குறிப்பிட்ட அனைவரும் எதிரான நிலைப்பாட்டினையே வெளியிட்டிருக்கின்றனர். அவர்களில் ஒரு அம்மணி அழுது கூட பொன்சேகாவை ஆதரிக்கவேண்டாம் என்று மன்றாடியிருக்கின்றார். அந்தவேளை கூட்டமைப்பின் தலைவர் மிகக் கடும் சொற்பிரயோகங்களை மேற்கொண்டே இந்த இறுதி முடிவிற்கு வந்ததாக தெரியவருகின்றது.

உண்மையில் தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் பரவலாக வெளிவந்தது. குறிப்பாக கடும் தமிழ்த்தேசிய விசுவாசிகளிடம் இருந்தே இது வெளிவந்தது. அவர்களது மண் பற்றினையும், விடுதலைப் போரின் விசுவாசத்தையும் யாராலும் உதறிவிட முடியாது.

ஆனாலும் கூட்டமைப்பு முடிவிற்கு வருவதற்கான காரணங்களை தற்போது தருகின்றோம்.

வடக்கு கிழக்கினை இணைத்து காணி, மற்றும் பொலிஸ் நிர்வாகத்துடன் கூடிய அதிகார பரவலாக்கத்தை தமிழ் மக்களிடம் வழங்குவது. கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் மற்றும் மக்கள்அனைவரையும் விடுவித்தல்.

தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களில் இருந்து இராணுவ நிலைகளை அகற்றுதல்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக நீக்கி அப்பகுதிகளில் மக்களை குடியமர அனுமதித்தல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதான கோரிக்கைகளை தமிழத்தேசியக் கூட்டமைப்பு இரண்டு பிரதான தரப்புக்களிடமும் முன்வைத்தது.

மகிந்தவால் இவை நிராகரிக்கப்பட பொன்சேகா தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றை ஏற்றுக் கொள்வதுடன் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தம்மால் நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கி ஒப்பமிட்ட பத்திரத்தினை கூட்டமைப்பிடம் பொன்சேகா தரப்பு கையளித்துள்ளது.

இதனை அடுத்தே ஆதரவு நிலையினை கூட்டமைப்பு எடுத்தது மட்டுமல்லாமல் வாக்குறுதிப் பத்திரத்தினை இலங்கையில் உள்ள சர்வதேச தூதரங்கள் அனைத்திற்கும் கையளித்ததுடன் இந்தியாவிற்கும் நேரடியாகச் சென்று பத்திரத்தினைக் கையளித்து பொன்சேகா தரப்பு வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் தம்மால் எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இதனை இந்தியா உட்பட்ட சர்வதேச பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

உண்மையில் தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து மக்களுக்கான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் மக்களை ஏதோ ஒரு ஒருமைப்பாட்டிற்குள் அல்லது செயற்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு என்ன வழி இருக்கின்றது? தற்போதைய சூழலில் ஒரே வழி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்ற நகர்வுகள்.

சர்வதேச ரீதியாக நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்புக்கள், போராட்டங்கள், உயிர்க்கொடைகள் என பிரமாண்டமான ஒப்பிடமுடியாத நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனாலும் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் தொடர்ந்தும் மேம்பாடான செயற்பாடுகளை அல்லது அவர்களது கொள்கைகள் சிதைந்து போகாமல் இருப்பதற்கான வழிவகைகளை தக்கவைக்கவேண்டிய தேவை என்பது மிக முக்கியமாக உள்ளது. இம் மக்களை ஆற்றுப்படுத்த அல்லது வழிப்படுத்த ஒரு ஊடகம் கூட இல்லை என்பது ஒரு சிறிய உதாரணமாகும்.

இந்த நிலையில் தான் கூட்டமைப்பு எடுத்த இந்த நடவடிக்கையினை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது நிலையில் தமிழர் தாயக மக்கள் தமது வாக்குப் பலத்தினை நிறைவேற்றினார்கள். கூட்டமைப்பு ஏற்கனவே நடைபெற்ற அரசதலைவர் தேர்தலைப் புறக்கணித்தமை தவறு என்று வெளியிட்ட கருத்துக்கள் வேதனை அளிப்பது இயல்பானது தான். ஆனாலும் ஏற்கனவே யாழ்.குடாநாட்டில் இருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பல இடங்களில் தேசத்தின் குரல் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தமையை நாங்கள் நிராகரிக்க முடியுமா? அவர் அவ்வாறு கூறியிருந்தமையால் அவரை வரலாற்றுப் பக்கங்களில் இருந்து அகற்றிவிட முடியுமா? சில விதண்டாவாதக் கொள்கைகளை நாங்கள் வரித்துக் கொள்வதன் மூலம் எதனையும் சாதித்துவிடமுடியாது. அன்றைய ஜனாதிபதித் தேர்தல்ச் சூழலில் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டியிருந்தது என்பது ஒரு கள யதார்த்தம். ஆனாலும் அரசியல் நிலைபாடு என்பதனை முன்னெடுக்கின்ற போது சில மாறுபட்ட நிலைபாடுகளையும் கருத்துவெளிப்பாடுகளையும் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்பது தவிர்;க்கப்பட இயலாதது.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தற்போதைய கையறு நிலையிலும் ஆளுக்காள் விமர்சனங்களையும் விதண்டாவாதங்களையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது. ஓரளவு கள யதார்த்தத்தினையும் புரிந்து கொள்வேண்டும். எங்காவது ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒரு தளத்திற்கோ அல்லது பத்திரிகைக்கோ பட்டதை எழுதிவிட்டுப் போவது போன்ற தான நிலைபாட்டினை சில படைப்பாளர்கள் கொண்டிருப்பதுதான் கவலைக்குரியது. நாங்கள் அனாதைகள் எங்களுக்கான ஒருமைப்பாடு என்பது இனித்தான் மிக முக்கியமாக தேவை. சர்வதேச ரீதியிலான ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாங்கள் ஏன் தாயகத்தில் சிதைய வேண்டும் அல்லது விலை போகவேண்டும்.

நிற்க

இந்த அனைத்து விடயங்களையும் தாண்டி கூட்டமைப்பின் நிலைபாட்டினை ஏற்று தமிழர் தாயகத்தில் அனைத்து மக்களும் ஒருமித்த கொள்கை நிலைபாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அவர்களை விடவும் மலையக தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மற்றும் கொழும்பு பகுதிகளிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைபாட்டினை ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். என்பதனை ஏற்றுக் கொள்வேண்டும்.

வடக்கில் ஈபிடிபியினரும், கிழக்கில் கருணா, மற்றும் பிள்ளையான் குழுவினரும் முடிந்தவரையில் தேர்தல் நடவடிக்கைகளை மகிந்தவிற்கு சார்பாக மேற்கொண்டார்கள் வன்முறைகள் உட்பட. ஒப்பீட்டளவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாரிய தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆனாலும் பணம் கொடுத்தல், அச்சுறுத்தல் போன்ற வழமையான மகிந்தவின் அடியாட்களின் தில்லுமுல்லுகளுக்கு மத்தியில், எதற்கும் விலை போகாத தமிழ் பேசும் மக்கள் சர்வதேசத்திற்கும் இனவாதி மகிந்தவிற்கும் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள்.

தமிழ்மக்களுக்கு ஏதாவது கிடைத்துவிடுமோ என்ற ஒரே ஒரு காரணத்தினாலேயே சிங்கள மக்கள் பொன்சேகாவை நிராகரித்திருக்கின்றார்கள். இதன் பின்னரும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து வாழக்கூடிய சூழல் இலங்கையில் நிலவுகின்றதா? என்பதை மட்டுமல்ல சர்வதேசம் புரிந்து கொள்ள ஒரு செய்தியை இந்தத் தேர்தல் ஊடாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

நாங்கள் தனித்துவமானவர்கள் நாங்கள் ஒற்றுமையானவர்கள் எங்களுக்கான ஒருமைப்பாடு இருக்கின்றது. நாங்கள் சிந்திய குருதி வெள்ளத்திற்கும், உயிர்க்கொடைகளுக்கும் மத்தியில் துரோகங்களும், அச்சுறுத்தல்களும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதே… அது.

இராவணேசன்


source:tamilspy

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பொட்டு அம்மான், வைகோ மற்றும் பிரபாகரன்

>> Friday, January 29, 2010

 

பொட்டு அம்மான், வைகோ மற்றும் பிரபாகரன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது இங்கே……………………………..
source:eelamsoon

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

(பூச்சாண்டீஸ்) நகைச்சுவை காணொளி பாடலுடன்


(பூச்சாண்டீஸ்) நகைச்சுவை காணொளி பாடலுடன்………….


StumbleUpon.com Read more...

தென்கொரிய அதிபர் மனைவி மூதாததையர் அயோத்தி நகரத்தினர்


 
 T

Top global news updateசியோல்: தற்போதைய தென்கொரிய அதிபர் லீ யுங் மியுங் பக்கின் மனைவி, கிம் யூன் யோக்கின் முன்னோர்கள், அயோத்தியைச் சேர்ந்தவர்கள் என்ற சுவையான தகவல் வெளியாகியுள்ளது.தென் கொரிய அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் "தி கொரியா டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி:அதிபர் மனைவி கிம்மின் முன்னோர், அயோத்தி அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அந்த பரம்பரையில் பிறந்த ஹியோ வாங் யோக் என்ற பெண், கொரியாவுக்கு வந்து அப்போது இங்கு அரசாண்ட மன்னரை மணந்து கொண்டார்.கொரிய மொழியில் எழுதப்பட்ட 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த "சம்கக் யுசா' என்ற நூலில் இந்த செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஹியோ, தன் கனவில் அடிக்கடி ஒரு அழகான இளைஞரைக் கண்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக தன் பெற்றோர்களின் அனுமதியுடன் கப்பலேறி தென்கொரியா வந்து சேர்ந்தார். அப்படி வரும்போது, தன்னுடன் மீன்கள் படம் பொறித்த கல் ஒன்றையும் கொண்டு வந்தார்.தென்கொரியாவில், கயா பேரரசின் மன்னன் சுரோவைக் கண்டார். அவர்தான் தான் கனவில் கண்ட இளைஞர் என்று உணர்ந்த ஹியோ, சுரோவை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் மூலம்தான், கொரியாவில் கிம்ஹே கிம்ஸ் பேரரசு அமைந்தது.கடந்த 2004ல் கயா அரசர்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களும், இந்தியாவில் இப்பகுதியில் உள்ள குடிகளின் மரபணுக்களும் ஒத்திருந்தன. இதிலிருந்து கொரிய அரச பரம்பரைக்கும் இந்திய அரச பரம்பரைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.ஹியோ கொண்டு வந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருளாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இவ்வாறு "தி கொரியா டைம்ஸ்' கூறியுள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிங்களர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு அளிக்க முடியும்

 

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன்.

இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் (சிங்களர்கள்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் அளிக்க முடியும். இல்லாவிட்டால், அதை செயல்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்

source:uyarvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

முஜிபிர் கொலை குற்றவாளிகளுக்கு தாமத தண்டனை ஏன்? :

>> Thursday, January 28, 2010

முஜிபிர் கொலை குற்றவாளிகளுக்கு தாமத தண்டனை ஏன்? : சிறைவாசலில் மக்கள் மகிழ்ச்சி

 T

Top global news update 

தாகா: வங்கதேசத்தை உருவாக்கிய முஜிபிர் ரஹ்மான் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டனர். அவர் கொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் தாமதமாக நீதி கிடைத்தாலும் இந்தத் தீர்ப்பை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.


"வங்க பந்து' என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான், 1971ல் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்தை மீட்டு தனி நாடாக்கினார். பின் அந்நாட்டின் அதிபர் ஆனார்.அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து, 1975, ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஜூனியர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் வெடித்த புரட்சியின் போது, அவரது மாளிகைக்குள் ஒரு கும்பல் புகுந்து முஜிபுர் ரஹ்மான், அவர் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் உள்ளிட்ட 20 பேரை, சரமாரியாக சுட்டுக் கொன்றது.இச்சம்பவத்தின் போது ரஹ்மானின் மற்றொரு மகளான ஷேக் ஹசீனாவும், இளைய சகோதரி ஷேக் ரெகானாவும் வெளிநாட்டில் இருந்ததால் தப்பினர்.அதன் பின் அந்நாட்டில் அமைந்த அரசு, கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் உயர்பதவி அளித்தது. சிலர், கட்சிகள் தொடங்கி நடத்தி வந்தனர். முஜிபுர் ரஹ்மானைக் கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்க வகை செய்யும் சட்டமும் கொண்டுவரப்பட்டது.அச்சட்டத்தின் கருணையால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வந்தனர். 1998ல் தாகா கோர்ட், முஜிபுர் கொலை வழக்கில் 15 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் நான்கு பேர் மட்டும் உள்நாட்டில் இருந்தனர். மற்றவர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குத் தப்பியோடிவிட்டனர்.


இந்நிலையில், 2001ல் பேகம் கலீதா ஜியா ஆட்சி அமைந்தவுடன், பல்வேறு காரணங்களைக் கூறி வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. 2007ல் அதுவரை கிடப்பில் போடப்பட்ட வழக்குத் திரும்பவும் தூசி தட்டப்பட்டது. 2008ல் குற்றவாளிகளுள் ஒருவரை அமெரிக்கா, வங்கதேசத்திடம் ஒப்படைத்தது.இதற்கிடையில், 2009ல் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது.இதையடுத்து, முஜிபுர் மகள் ஷேக் ஹசீனா, 2009 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைத்தார். வழக்கை விரைவுபடுத்தினார். நேற்று முன்தினம் குற்றவாளிகளின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்த சில மணி நேரங்களில், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெயிலுக்கு முன் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, தண்டனையை உடனே நிறைவேற்றும்படி கோஷமிட்டனர். தாகா மத்திய சிறை மற்றும் காசிம்பூர் சிறைகளைச் சேர்ந்த ஏழுபேர் கொண்ட குழு, தண்டனையை நிறைவேற்றியது.பின் ஐந்து ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்பட்ட உடல்கள், குற்றவாளிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


ஒருநாட்டின் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பின் தாமதமாக கிடைத்துள்ள நீதி பற்றி கருத்து கூறிய சில வக்கீல்களும் அரசியல் ஆய்வாளர்களும், "முஜிபுர் கொலை வழக்கில் தாமதமாக தண்டனை நிறைவேற்றப்பட்டாலும், இது நீதியிடம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தக்கவைத்துள்ளது. மேலும் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தனர்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்


  

கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!
கம்ப்யூட்டர் வாங்கியபோது திரை எப்படி தோன்றியதோ, அப்படியே சிலர் வைத்திருப்பார்கள். பலருக்கு வண்ணக் கலவை பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு அதில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து படிப்பதில் சிரமம் இருக்கலாம். இருந்தாலும் கம்ப்யூட்டர் இப்படித்தான் காட்சி அளிக்கும் என்று எண்ணி அப்படியே பயன்படுத்துவார்கள். அதெல்லாம் வேண்டாம். நம் விருப்பப்படி திரைத் தோற்றத்தினை அமைத்துக் கொள்ளலாம். இதனைத்தான் விண்டோஸ் டிஸ்பிளே என்று கூறுகிறார்கள். இவற்றில் பல அம்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அவை என்ன மற்றும் எதனைக் குறிக்கின்றன என்று அறிந்து கொண்டால், நம் கம்ப்யூட்டர் நம் மனதிற்கேற்றபடியான தோற்றத்தில் இருக்கும். அவை குறித்து இங்கு காணலாம். 
டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதற்கான விண்டோவினை டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து பெறலாம். இதனையே கண்ட்ரோல் பேனல்(Control Panel) சென்று அங்கு Appearance and Themes பிரிவில் display கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு செல்கையில்Display Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் செட்டிங்ஸ் அமைக்கThemes, Desktop, Screen Saver, Appearance மற்றும் Settings என்னும் ஐந்து பிரிவுகள் தரப்பட்டிருக்கும். இதில் எந்த பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் Apply அல்லது OK என ஏதாவது ஒன்றில் அல்லது இரண்டிலும் கிளிக் செய்து வெளியேற வேண்டும். 
தீம்ஸ் (Themes) : தீம் என்பது ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேன்ஞ்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். 
டெஸ்க்டாப் (Desktop): இந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெஸ்க்டாப்பிற்கான பேக்ரவுண்ட் எனப்படும் பின்னணியில் தெரியும் படத்தை அமைக்கலாம். அந்த விண்டோவில் கொடுத்துள்ள படங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆன்லைனில் சென்று ஏதேனும் படம் ஒன்றை எடுத்து அமைக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள படங்களையும் பேக்ரவுண்ட் படமாக அமைக்கலாம். அது உங்கள் போட்டோவாகவோ அல்லது கார்ட்டூன் கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். இந்த விண்டோ மட்டுமின்றி இத்தகைய பட பைல்கள் அல்லது இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் உங்கள் மனதைக் கவரும் படங்கள் ஆகியவற்றில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும்மெனுவில் Set as Desktop Background என்பதில் கிளிக் செய்தும் பேக்ரவுண்டை அமைக்கலாம். Desktop Items என்ற விண்டோவினைப் பெற இங்கு Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும். இதில் General  மற்றும் Web  என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இதில்General   பிரிவில் எந்த ஷார்ட் கட் ஐகான்கள் டெஸ்க்டாப்பில் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது Desktop Cleanup என்னும் வசதியைப் பயன்படுத்தி அடிக்கடி பயன்படுத்தாத ஷார்ட்கட் ஐகான்களை எடுத்துவிடலாம். இந்த ஷார்ட் கட் ஐகான்களை எடுப்பதனால் அவை இயக்கிக் கொண்டு வரும் புரோகிராம்களுக்கு எந்த பாதிப்புவராது. புரோகிராம்களுக்கான குறுக்கு வழிகளை எடுக்கிறோம், அவ்வளவுதான். 
அடுத்ததாக Screen Saver என்னும் பிரிவு. இந்த பிரிவில் ஸ்கிரீன் சேவராக எந்த காட்சி வர வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது நீங்களே ஒரு காட்சியை உருவாக்கி பயன்படுத்தலாம். நீங்கள் கம்ப்யூட்டரில் எந்த வேலையையும் குறிப்பிட்ட காலத்தில் (நிமிடங்கள்) இயக்காமல் இருந்தால் ஸ்கிரீன் சேவர் இயக்கப்பட்டு காட்சி அளிக்கும். இணையத்தில் அழகான பல ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை நம்பகமான தளங்களில் உள்ளனவா என்று பார்த்து இறக்கிப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட அழகான ஸ்கிரீன் சேவர்களுடன் வைரஸ் அல்லது உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடும் பிஷிங் புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கிவிடும். விண்டோஸ் புரோகிராமிலேயே உள்ள ஸ்கிரீன் சேவர்களைப் பயன்படுத்துவதே நல்லது. பட்டியலில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என முன்காட்சியாகக் காட்டப்படும். அதனைப் பார்த்து உங்களுக்குப் பிடித்தால் அதனையே தேர்ந்தெடுத்து அமைக்கலாம். ஸ்கிரீன் சேவரே தேவையில்லை என்றாலும் அதற்கான பிரிவைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறலாம்.
இதே விண்டோவில் Power settings என்ற பிரிவில் நீங்கள் கம்ப்யூட்டரை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் மானிட்டருக்கு வரும் மின் சப்ளையை நிறுத்தவும் பின் நீங்கள் இயங்கத் தொடங்கியவுடன் இயக்கவும் செட் செய்திடலாம்.
அப்பியரன்ஸ் (Appearance): இந்த பிரிவுதான் உங்கள் டெஸ்க்டாப்பின் மிடுக்கான தோற்றத்தினை செட் செய்திடும் பிரிவாகும். இதில் விண்டோவின் ஸ்டைல் மற்றும் கலரை செட் செய்திடலாம். விண்டோவில் காட்டப்படும் பட்டன்கள் மற்றும் எழுத்துக்களின் அளவினை செட் செய்திடலாம். இந்த பிரிவில் கிடைக்கும் கீழாகச் செல்லும் அம்புக் குறியினை அழுத்தி பல்வேறு செட்டிங்குகளைப் பார்க்கலாம். அதில் எது உங்களுக்கு விருப்பமாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என்பது அருகில் கட்டத்தில் காட்டப்படும். அது பிடித்துப் போனால் அதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எழுத்தின் அளவு (Font size)  என்பது பலருக்கும் பயன்படும் ஒரு வசதி. விண்டோவில் காட்டப்படும் எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இன்னும் சற்று பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் இதனை மாற்றி செட் செய்திடலாம். இன்னும் கூடுதலாக இரண்டு வகைகள் உண்டு. அவை: Large Fonts மற்றும் Extra Large Fonts.. இன்னும் பல மாற்றங்களை இதில் மேற்கொள்ளலாம். Advanced  என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்டோ, அதன் பார்டர், ஐகான் அளவு மற்றும் மெனுக்கள் எப்படித் தோன்ற வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். 
செட்டிங்ஸ் (Settings) : இந்த டேப் தரும் பிரிவில் ஸ்க்ரீன் ரெசல்யூசன் மற்றும் கலரின் தன்மையை செட் செய்திடலாம். ரெசல்யூசன் என்பது திரையில் எத்தனை பிக்ஸெல்களில் வண்ணம் தரப்பட வேண்டும் என்பதாகும். எந்த அளவிற்கு அதிகமாக ரெசல்யூசனில் இதனை செட் செய்கிறோமோ அந்த அளவிற்கு திரையின் தோற்றம் தெளிவாகக் கிடைக்கும். கூடுதலான ரெசல்யூசன் உங்களுக்கு அதிக அளவில் திரை இடத்தைக் கொடுக்கும். ஆனால் இதனால் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் மிகச் சிறியதாக இருக்கலாம். எனவே எழுத்துவகையினைப் பெரிதாக்கி ஐகான் களையும் பெரியதாக அமைக்கலாம். உங்களுடைய மானிட்டரில் எந்த அளவிற்கு ரெசல்யூசனை கூடுதலாக வைக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே வைக்க முடியும். பல ரெசல்யூசன்களில் வைத்து சோதனை செய்து பார்த்து எது உங்களுக்கு நிறைவாக இருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம். Color quality ஆப்ஷன் எப்போதும் Highest (32 bit)  என்ற அளவில் வைக்கப்பட வேண்டும். உங்களுக்கு டிஸ்பிளே பிரச்னைகள் இருந்தால் Troubleshoot என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அங்கு தீர்வுகள் கிடைக்கும். இதே விண்டோவில் இருக்கும் அஞீதிச்ணஞிஞுஞீ பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது General, Adapter, Monitor, Troubleshoot, Color Management என்ற டேப்களுடன் விண்டோ ஒன்று காட்டப்படும். 
General: கூடுதலான ரெசல்யூசனில் திரைக் காட்சி அளவை செட் செய்திருந்தால் இங்கு உள்ள DPI (dots per inch) செட்டிங்ஸ் மூலம் டெக்ஸ்ட் உட்பட அனைத்து ஸ்கிரீன் சமாச்சாரங்களையும் பெரிதாகக் காட்டலாம்.
Adapter: இந்த பிரிவு உங்களுடைய கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் கார்டு குறித்த தகவல்களைக் கொடுக்கும். இதில் உள்ள Properties என்ற பிரிவில் கிளிக் செய்தால் அப்போது பயன்பட்டுக் கொண்டிருக்கும் டிரைவர் சாப்ட்வேர்கள் அனைத்தும் குறித்த தகவல்கள் கிடைக்கும்.Monitor: மானிட்டர் திரை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ரெப்ரெஷ் ரேட்டை இங்கு அதிகப்படுத்தலாம். குறைவான ரெப்ரெஷ் ரேட் இருந்தால் அதனால் கண்களுக்குக் கெடுதல் வருமாதலால் இந்த புதுப்பிக்கும் ரேட்டினை அதிகமாக வைத்தல் நல்லதுதான். இந்த திரையில் Hide modes that this monitor cannot display என்று இருப்பதனை டிக் செய்திட வேண்டும். அதன் பின் ஆரோ அழுத்தி மெனுவினை விரித்து அதிக பட்ச ரெப்ரெஷ் ரேட்டினை அமைக்கவும். எல்.சி.டி. திரைகளுக்கு இந்த பிரச்னை இல்லை. 
Troubleshoot: இதில் உள்ள Hardware acceleration slider  ஐப் பயன்படுத்தி கிராபிக்ஸ் கார்ட் செயல்பாட்டை மாற்றலாம். 
Color Management: டிசைனர்கள் மற்றும் போட்டோ கிராபர்கள் பலவகையான கலர் திட்டங்களை அமைக்க இந்த பிரிவு உதவுகிறது. கடைசியாக உள்ள டேப் உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்டிற்கான செட்டிங்ஸ் அமைப்புகளை அமைக்க உதவுகிறது. இதனை ட்யூன் செய்வதற்கான வழிகளை அந்த கிராபிக்ஸ் கார்ட் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பெற வேண்டும். அவ்வப்போது அந்நிறுவனம் இந்த கார்டுக்கென வழங்கும் மேம்படுத்தப்பட்ட டிரைவர் புரோகிராம்களை டவுண்லோட் செய்து சிஸ்டம் பைல்களுடன் சேர்க்க வேண்டும்.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP