சமீபத்திய பதிவுகள்

வெள்ளை கொடி பிடித்து பேச்சுவார்த்தைக்கு சென்ற நடேசனை கொன்று விட்டனர்

>> Monday, May 18, 2009

வெள்ளை கொடி பிடித்து பேச்சுவார்த்தைக்கு சென்ற நடேசனை கொன்று விட்டனர்: விடுதலைப்புலிகள் புகார்
 
StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்

தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்": செ.பத்மநாதன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
"சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்” 15

பிரபாகரன் சந்தித்த "மரணங்கள்" 15
ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. 'எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்' என்று மார்தட்டும் 'இந்து' நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

1984 ஜூலை 24 ஆம் தேதி 'இந்து' நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.
"சென்னை-ஜூலை 13 - 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்' வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் "வீடியோ கேசட்" மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை."

-என்று செய்தி வெளியிட்டது 'இந்து' ஏடு.

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் 'இந்து' ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் 'இந்து' ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான"உண்மைகளை" வெளியிட்ட "தரம் நிறைந்த" 'இந்து' பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, 'மரணச் செய்தி' வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, "இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்" - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான 'கெடு'வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் 'புளோட்' இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் 'இந்து' ஏட்டின் வழியாக பிரபாகரன் "கொல்லப்பட்டார்".

"இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!"

-என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது 'Pirabhakaran Phenomenon'என்ற நூலில்.
மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

(It may not be wrong to infer that Indias intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

-என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு 'இந்தியா டுடே' இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

"1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் 'எம்.வி. அகத்' கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
-1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், 'ரா' (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,'ரா'வின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது"

-என்று 'இந்தியா டுடே' அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

பிரபாகரனின் இரண்டாவது "மரணம்"
1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை "மரணமடையச்" செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை'மரணமடைய'ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

கொழும்பிலிருந்து வெளிவரும், 'அய்லேன்ட்' நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. 'ஏ.எஃப்.பி.'என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

"இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்."

"ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்".

"சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்."

"இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்"
-இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் 'இரண்டாவது மரணம்' பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

"விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்."

-இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட "கற்பனை மரணத்துக்கு"இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

1989 ஆம் ஆண்டில், பிரபாகரனின் 'மரணச் செய்தியை' அறிவித்த 'இந்து' பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு 'கற்பனை மரணச்' செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன 'இந்து' மட்டும், மீண்டும் பிரபாகரன்'மரணச் செய்தியை' வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, 'இந்து', பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - "பிரபாகரன் எங்கே?" என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

"சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?"

-என்றெல்லாம் கேட்ட 'இந்து',

"பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை"

-என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் 'பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம்' போலும்!

பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - 'ஏ.எஃப்.பி.'செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்து'இந்து' ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் 'இந்து'வின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்"மரணமடைந்த" அந்த "செய்தியை" உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் "உறுதி" செய்தார்.

'ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், 'மாவீரர்'துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமான"உண்மைத்" தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் "திறமை" மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான 'தினகரா'தலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!"பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது."

இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன 'இந்து' ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
-அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்

புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு "தேசிய நாளேட்டுக்கு" உரிய தகுதியா? 'இந்து' ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை "சுனாமிப் பேரலையில் சாகடித்த" பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

 • ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. 'எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்' என்று மார்தட்டும் 'இந்து' நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

  1984
  ஜூலை 24 ஆம் தேதி 'இந்து' நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.

  "சென்னை-ஜூலை 13 - 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்' வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் "வீடியோ கேசட்" மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

  லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை."

  -
  என்று செய்தி வெளியிட்டது 'இந்து' ஏடு.

  புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் 'இந்து' ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் 'இந்து' ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான"உண்மைகளை" வெளியிட்ட "தரம் நிறைந்த" 'இந்து' பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, 'மரணச் செய்தி' வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

  ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, "இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்" - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான 'கெடு'வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

  பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

  1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் 'புளோட்' இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

  அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் 'இந்து' ஏட்டின் வழியாக பிரபாகரன் "கொல்லப்பட்டார்".

  "இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!"

  -
  என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது 'Pirabhakaran Phenomenon'என்ற நூலில்.
  மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

  (It may not be wrong to infer that
  Indias
  intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

  -
  என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

  பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு 'இந்தியா டுடே' இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

  "1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் 'எம்.வி. அகத்' கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
  -1993
  டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், 'ரா' (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,'ரா'வின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது"

  -
  என்று 'இந்தியா டுடே' அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

  1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

  பிரபாகரனின் இரண்டாவது "மரணம்"

  1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை "மரணமடையச்" செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை'மரணமடைய'ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

  கொழும்பிலிருந்து வெளிவரும், 'அய்லேன்ட்' நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. 'ஏ.எஃப்.பி.'என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

  "இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்."

  "ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்".

  "சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்."

  "இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்"
  -
  இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

  மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

  இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் 'இரண்டாவது மரணம்' பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

  "விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்."

  -
  இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட "கற்பனை மரணத்துக்கு"இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

  1989
  ஆம் ஆண்டில், பிரபாகரனின் 'மரணச் செய்தியை' அறிவித்த 'இந்து' பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு 'கற்பனை மரணச்' செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன 'இந்து' மட்டும், மீண்டும் பிரபாகரன்'மரணச் செய்தியை' வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

  ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, 'இந்து', பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - "பிரபாகரன் எங்கே?" என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

  "சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?"

  -
  என்றெல்லாம் கேட்ட 'இந்து',

  "பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை"

  -
  என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் 'பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம்' போலும்!

  பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - 'ஏ.எஃப்.பி.'செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்து'இந்து' ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் 'இந்து'வின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்"மரணமடைந்த" அந்த "செய்தியை" உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் "உறுதி" செய்தார்.

  'ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

  வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், 'மாவீரர்'துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
  அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

  இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமான"உண்மைத்" தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

  உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் "திறமை" மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

  சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான 'தினகரா'தலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!"பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது."

  இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன 'இந்து' ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
  -
  அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்

  புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு "தேசிய நாளேட்டுக்கு" உரிய தகுதியா? 'இந்து' ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

  உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

  சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை "சுனாமிப் பேரலையில் சாகடித்த" பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP