|
சமீபத்திய பதிவுகள்
கோவில் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி
நாகர்கோவில், ஜூன் 6: நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
பெண்கள், குழந்தைகளும் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.கல்வீச்சில் இன்ஸ் பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், சத்யராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிள்ளையார்புரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.dinakaran.com/daily/2008/june/06/high3.asp
Read more...சின்ன பிள்ளைகள் இத படத்தை பார்த்தால் பயப்படுவாங்க,அதனால தைரியம் இருப்பவர்கள் மட்டும் இதை பாருங்கள்
இந்த படம் முழுமையாக பெரிதாக தெரிய வேண்டுமா?உங்கள் மவுஸ்சை இங்கே வைத்து கிளிக் பண்ணுங்க
http://tm.dinakaran.co.in/662008/TM_06-06-08_E1_06-03%20CNI.jpg
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவின் சான்டோ டொமிங்கோ நகரில் உள்ள மிருகக் காட்சி சாலையில் ஒரு மலைப்பாம்பு 31 குஞ்சுகள் பொரித்திருக்கிறது. அவற்றை அரவணைத்தபடி படுத்திருக்கிறது தாய்ப் பாம்பு.
கிரெடிட் கார்டுகளை கண்காணிக்க சட்டம்-மத்திய அரசு
கிரெடிட் கார்டுகளை கண்காணிக்க சட்டம்-மத்திய அரசு | |
டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கறுப்புபணம் அனுப்புவதை தடுக்கும் வகையில், கிரெடிட் கார்டுகளை கண்காணிப்பதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக, வெளிநாடுகளில் கோடி கணக்கில் பணம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகஅளவில் கறுப்புபணம் அனுப்பப்படுவதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2005 ஆம் ஆண்டில், கறுப்பு பணம் குவிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்மூலம், இந்திய வங்கிகள் மூலம் வெளிநாடுகளுக்கு கறுப்பு பணம் அனுப்புவது கண்காணிக்கப்பட்டது. கறுப்பு பண பரிமாற்றம் குறித்து, மத்திய நிதி அமைச்சகத்தின், புலானாய்வு அமைப்பு விசாரித்து, அமலாக்கப்பிரிவின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துவந்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், மாஸ்டர் மற்றும் விசா கிரெடிட் கார்டுகள், பண பரிமாற்ற சேவை நிறுவனங்கள், கேளிக்கை கூடங்கள் ஆகியவற்றையும் கறுப்பு பணம் குவிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. |
கைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்கிற கனவுகளில் இருக்கும் இளம்பெண்களே...
கைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்கிற கனவுகளில் இருக்கும் இளம்பெண்களே...
திரும்புகிற பக்கமெல்லாம் நவீன துறைகளின வேலை வாய்ப்புகள் உங்களுக்காகக் கதவுகளை மூடிக் கொண்டு காத்திருக்கின்றன.
இதோ, வாய்ப்புகளின் ஒவ்வொரு கதவையும் உங்களுக்காகத் திறந்து விடுகிறோம். கப்பென்று பிடித்துக் கொள்ளுங்கள். சரசரவென்று முன்னேறுங்கள்! ஆல்-தி-பெஸ்ட்!
சிந்தனை, துறுதுறு உழைப்பு, கிரியேடிவ்வான ஐடியாக்கள் நிறைய்ய ஆர்வம் என இந்த மூன்று தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு ஏற்றது இந்த அனிமேஷன் படிப்பு.
அதென்ன அனிமேஷன்?
நம் கற்பனைக்கு எட்டாத ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதுதான் அனிமேஷன். உண்மையில் `'Anima' என்பது லத்தீன் வார்த்தை Animaஎன்றால் Soul என்று அர்த்தம்.
உதாரணத்திற்கு யானைகளை வரைய வேண்டும் எனில், ஆண் யானை, பெண் யானைக்கென்று தனித்தனி குணாதிசயங்களையும்,உருவ அமைப்புகளையும் அதன் Soul மாறாமல் எடுத்துக்கொண்டு மற்றபடி கற்பனைத் திறனைச் சேர்த்து புதுவகை கேரக்டர்களாக உருவாக்கி உயிர் கொடுத்து விடுகிறார்கள்.
அனிமேஷன் பாடத்தைப் படிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன?
ஆக்கமும், ஆர்வமும், கற்பனைத் திறனும் இருந்தாலே போதும் எந்த வயதினரும் கற்றுக் கொள்ளலாம். அனிமேஷன் துறையில் பொதுவாக ஆர்ட்ஸ் & சயின்ஸ் படிக்கும் மாணவ, மாணவிகளும், விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
எங்கெங்கே இந்தப் பாடங்களைப் படிக்கலாம்?
ணு சத்தியபாமா யுனிவர்ஸிடியில் எம்.எஸ்.ஸி. இரண்டு வருட மல்ட்டி மீடியா கோர்ஸில் அனிமேஷன் சொல்லித் தருகிறார்கள்.
ணுசிக்கிம், மணிப்பால் யுனிவர்ஸிடியில் மூன்று வருட பி.எஸ்.ஸி. மல்ட்டி மீடியா கோர்ஸில் அனிமேஷன் படிப்பு இருக்கிறது.
(தமிழ்நாட்டில் உள்ள அரினா மல்ட்டி மீடியா நிறுவனத்துடன் இணைந்து இந்தக் கோர்ஸ் நடத்தப்படுகின்றது.)
பி.எஸ்.ஸி. விஷுவல் கம்யூனிகேஷன். இந்தக் கோர்ஸில் அனிமேஷன் ஒரு சப்ஜெட்டாக இருக்கின்றது.
ணு இதையெல்லாம் தவிர, நீங்கள் எந்தப் படிப்பு படித்திருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வயது ஆனாலும் சரி,டிப்ளமோ கோர்ஸாக அனிமேஷனைப் படிக்கலாம்.
ணு அநேகமாக எல்லா பெரிய கம்யூட்டர் கற்றுத் தரும் நிறுவனங்களிலும் அனிமேஷன் கோர்ஸைச் சொல்லித் தருகிறார்கள்.
தொகுப்பு:
கிருபானந்தன்
அனிமேஷனின் தந்தை யார் தெரியுமா?
சாட்சாத் வால்ட்டிஸ்னியேதான்.1928-ம் ஆண்டு அனிமேஜன் மூலம் ''Steam Boat Wile'' என்கிற பெயரில் குறும்படம் ஒன்றை ஒளி-ஒலிப்பதிவுடன் வெளியிட்டார். அதுதான் அனிமேஜன் படங்களுக்கான முதல் பிள்ளையார்சுழி.
என்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும்?
விளம்பரத்துறை, அனிமேஷனைப் பயன்படுத்திச் செய்யப்படும் பேனர்கள் மற்றும் ஹோர்டிங்குகள், சினிமா என்று எல்லாத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அனிமேஷன் கோர்ஸ் படித்தால் ஆரம்ப கட்ட சம்பளமே 15,000 முதல் 20,000 வரை கிடைக்கும், போகப் போக, சம்பளம் நீங்கள் எதிர்பாராத அளவு ஹை ஸ்பீடிலும் எகிறும்.
அனிமேஷன் கோர்ஸில் என்னனென்ன பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன?
றீ அனிமேஜன் அடிப்படை
றீ டிஜிட்டல் போஸ்ட் புரொடக்ஜன்
றீ அட்வர்டைசிங்
றீ கேம்ஸ்
றீ கிளாசிகல் அனிமேஜன்
றீ ஆடியோ, வீடியோ எடிட்டிங்
றீ ஸ்பெஜல் எஃபெக்ட்ஸ்
றீ பிலிம் மேக்கிங் 2டி மற்றும் 3டி அனிமேஜன்
றீ ஸ்டோரி போர்டு டிசைனர்
றீ ஃபிளாஷ் டெவலப்பர்
றீ கம்போஸ்ஸிட்டர்
றீ இது தவிர லேட்டஸ்டாக மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும் மாயா, 3டி மேக்ஸ் போன்ற சாஃப்ட்வேர்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
அனிமேஜன் கோர்ஸில் உள்ள மொத்த பாடப் பிரிவுகளில் ஏதேனும் நான்கைந்து பாடங்களை நீங்கள் செலக்ட் செய்துகூட படிக்கலாம். மொத்தமாக எல்லாப் பாடங்களையும் படிக்க சுமார் 80.000 வரை செலவாகும். ஆனால், மேற்சொன்ன பிரிவுகளில் எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதைத் தேர்வு செய்தும் படிக்கலாம். (இதற்கு 15,000 முதல் 25,000 வரை சராசரியாக செலவாகும்)
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் திருத்தம்:தீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பதை தடுக்க அதிரடி நடவடிக்கை
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் திருத்தம்:
தீவிரவாதிகளுக்கு பணம் கிடைப்பதை தடுக்க அதிரடி நடவடிக்கை
மத்திய மந்திரி சபை ஒப்புதல்
புதுடெல்லி, ஜுன்.6-
தீவிரவாதிகளுக்கு தாராளமாக பணம் கிடைப்பதை தடுக்க சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
அதிரடி நடவடிக்கை
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தை கடுமையாக்க மந்திரி சபை முடிவு செய்தது.
இதன்படி தற்போதுள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். அதன்மூலம் சூதாட்ட பொழுதுபோக்கு கிளப்புகள், விசா, மாஸ்டர் கார்டு ஆகிய கிரெடிட் கார்டு கேட்-வேக்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகள், வெஸ்டர்ன் ïனியன் போன்ற பண மாற்ற மற்றும் பண பரிமாற்ற சேவைகளை வழங்குபவர்கள் புதிய சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் நடைபெறும் சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றங்கள் பற்றி இந்த நிதி அமைப்புகள் அரசுக்கு கட்டாயம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு பணம் வந்து கொட்டுவதை தடுக்கவும், ஏற்றுமதி மதிப்பை குறைத்து காட்டி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம்
கொல்கத்தாவில் அவுரா - சால்ட்லேக் இடையே கங்கை நதியின் அடியில் ரூ.4 ஆயிரத்து 676 கோடி செலவில் புதிய மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கான செலவை மத்திய அரசும், மாநில அரசும் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளும்.
பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் துறைமுக நுழைவு வாயிலில் இருந்து 3.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறும். துறைமுக கால்வாய் மற்றும் படுகை பகுதிகள் 14.7 மீட்டர் ஆழம், 230 மீட்டர் அகலத்துக்கு ஆழப்படுத்தப்படும். இதுதவிர கப்பல் துறையின் வளைவு பகுதி உட்பட படுகை பகுதியும் 14.10 மீட்டர் ஆழப்படுத்தப்படும்.
தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் இந்த திட்டத்துக்கு ரூ.538 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.349.70 கோடியை தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் வழங்கும். மீதி ரூ.188.30 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் 75 ஆயிரம் டன் எடையுள்ள நான்காம் தலைமுறை சரக்கு கப்பல்களும், 4 ஆயிரம் டி.ஈ.யு. கப்பல்களும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து செல்ல இயலும்.
டாக்டர்கள் ஓய்வு வயது
அருணாசலப்பிரதேசத்தில் கடந்த 2005-ல் இயற்கை பேரழிவுகளில் சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் உருவாக்க, ரூ.399.20 கோடி திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிபுரியும் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனங்களில் நிர்வாக பணிகளில் இருக்கும் அதிகாரிகள் 65 வயது வரை பணிபுரிய விரும்பினால், ஆசிரியர் பணியில் தங்களை நியமிக்க கோரலாம்.
இந்த தகவல்களை மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பி.ஆர்.தாஸ் முன்சி நிருபர்களிடம் தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=417266&disdate=6/6/2008
Read more...புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி போன 4 வயது சிறுவன்
தைவான் நாட்டில் உள்ள காவோஷியாங் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன், புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டான். இவன் தன் தந்தை வைத்து இருக்கும் சிகரெட்டுகளை திருடி புகைப்பதை வழக்கமாக கொண்டவன். புகை பிடிக்கும்போது என் தந்தை ரொம்ப ``கூலாக'' இருப்பார். இதை பார்த்து தான் நானும் புகை பிடிக்க தொடங்கினேன் என்று கூறினான்.
முதலில் தந்தையிடம் இருந்து திருடியவன், பிறகு அண்ணனிடம் சிகரெட்டுகளை கடன் வாங்கத் தொடங்கினான். அண்ணனுக்கு வயது 9. அவனும் தந்தையிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். அண்ணனும், தம்பியும் புகை பிடிப்பதை ஒருநாள் பார்த்த தந்தை, உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு புகைபிடிப்பதை கைவிடுவதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=417313&disdate=6/6/2008
Read more...பாகிஸ்தானில் உள்ள டென்மார்க்கின் தூதரகம் மீதான தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம்-அல்கொய்தா அறிவிப்பு
கெய்ரோ, ஜுன்.6-
பாகிஸ்தானில் உள்ள டென்மார்க் நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா அறிவித்து உள்ளது.
8 பேர் பலி
பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டென்மார்க் நாட்டு தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 8 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது முதலில் தெரியாமல் இருந்தது. எந்த ஒரு அமைப்பும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
இப்போது இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.
இணைய தளத்தில் அறிக்கை
இது தொடர்பாக தீவிரவாதிகள் நடத்தி வரும் இணையதளத்தில் இடம் பெற்று உள்ள அல்கொய்தாவின் அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
டென்மார்க் பத்திரிகைகள் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை மறுபிரசுரம் செய்ததற்காக பழிவாங்கவேண்டும் என்று பின்லேடன் ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது
இஸ்லாம் மதத்தை பாதுகாக்கவும், முஸ்லிம்களின் கவுரவத்தை நிலைநாட்டவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
மன்னிப்பு கேட்காவிட்டால்...
கார்ட்டூன்களுக்காக டென்மார்க் மன்னிப்பு கேட்காவிட்டால் மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம். அல்கொய்தா தீவிரவாதிதான் இந்த தாக்குதலை நடத்தினார். இதற்காக சதித்திட்டம் தீட்டி செயல்படுத்த உதவிய பாகிஸ்தான் ஜிஹாதிகளுக்கு (போராளிகள்) நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தளபதி முஸ்தாபா அபுல் யாசித் கையெழுத்திட்டு இருக்கிறார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=417311&disdate=6/6/2008