கோவில் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி
>> Friday, June 6, 2008
நாகர்கோவில், ஜூன் 6: நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
பெண்கள், குழந்தைகளும் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.கல்வீச்சில் இன்ஸ் பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், சத்யராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிள்ளையார்புரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment