சமீபத்திய பதிவுகள்

முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தை மறைத்த கூகுள் ஏர்த் !

>> Saturday, March 31, 2012

கூகுள் தேடுபொறி, கூகுள் ஏத் எனப்படும் அதி நவீன சட்டலைட்டைப் பயன்படுத்தி பூமியின் எப்பாகத்தையும் பார்க்கும் தொழில் நுட்ப்ப புரட்சியை ஏற்படுத்தியது யாவரும் அறிந்ததே. நிலப்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக பார்ப்பது போல, கூகுள் ஏத் எனப்படும் சட்டலைட் மூலம் நாம் உலகின் எப்பாகத்தையும் பார்க்க முடியும். உதாரணமாக லண்டனில் வசிப்பவர் ஒருவர் இலங்கைக்கு மேலே சென்று, அங்கிருந்து யாழ்ப்பானத்தைப் பார்த்து, அதிலும் நல்லூர் கோவிலை துல்லியமாகப் பார்க்க முடியும். அதுமட்டும் அல்ல மட்டும் அல்ல வெளிவீதியையும் பார்க்க முடியும். சிரியாவில் நடைபெற்ற அரச அடக்குமுறை, பலஸ்தீனத்தின் மேல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று, சம்பவம் நடந்த இடங்களை ஊடகவியலாளர்களும், அதிகாரிகளும், மற்றும் பொதுமக்களும் பார்க்க கூகுள் ஏத் உதவியாக இருக்கும்.

2004ம் ஆண்டு இலங்கையை சுணாமி தாக்கியவேளை, கடல் நீர் எவ்வாறு நாட்டிற்குள் உட் புகுந்தது என்பதனை கூகுள் ஏத் தான் முதன் முறையாகத் துல்லியமாக எடுத்து உலகிற்கு காட்டியது. பொதுவாக கூகுள் ஏத் எனப்படும் பொறிமுறை பாவிக்கும் சட்டலைட் சுமார், 2 வாரங்கள் அல்லது 1 வாரத்துக்கு ஒருமுறையாவது உலகின் பல்வேறு பகுதிகளைப் படமெடுத்து அதனை சேமித்து வருகிறது. ஆகக் கூடச் சொல்லப்போனால் 1 மாதத்திற்கு ஒரு தடவையாவது அது எல்லா இடங்களையும் படம் எடுத்து சேமிப்பது வழக்கம். பழைய படங்களை நாம் எமது கணணியில் சேமித்தால், பின்னர் கூகுள் ஏத் தரும் புதிய படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே நடந்திருக்கும் மாற்றங்களை நாம் அவதானிக்க முடியும். இது உலகின் நகரப் பகுதிகள் காடுகள், வீதிகள், கட்டிடங்கள் என ஒன்றையும் விட்டுவைக்காமல் அப்படியே படம் எடுத்து சேமித்து வைக்கிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் அதன் கழுகு போன்ற (கமரா) கண்ணில் எந்த ஒரு பகுதியும் தப்பிக்க முடியாது. 

ஆனால் 2009ம் ஆண்டு ஏப்பிரல், மே, மற்றும் ஜூன் என 3 மாதங்களாக, முள்ளிவாய்க்காலை, கூகுள் ஏத் படம் எடுக்கவில்லை. குறிப்பாக உலகில் உள்ள பல தமிழர்கள் கூகுள் ஏத் சட்டலைட்டை பாவித்து முள்ளிவாய்க்காலைப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கே சேமித்து வைக்கப்பட்டிருந்த படங்கள் பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு சென்ற பின்னரும், அவர்கள் அங்கே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தது மட்டுமல்லாது, இறுதியாக அங்கிருந்து அவர்கள் அகன்று சென்றது கூட கூகுள் ஏத்தில் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்டு மக்களுக்கு அது காட்டப்படவில்லையா ? இல்லை பதிவே செய்யப்படவில்லையா என்பதே தற்போது எழுந்துள்ள பெருங்கேள்வி ஆகும்.

2009ம் ஆண்டு உலகளாவியரீதியாக தமிழர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டனர். நடக்கும் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேசத்திடம் வேண்டி நின்றனர். பிரித்தானியா ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு பிரேரணை ஒன்றைக் கொண்டுசென்றது. இதனை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரத்துச் செய்தது. மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்திகள் உலகளாவியரீதியில் பரவலாக அடிபட்டபோதிலும் கூகுள் ஏத் ஏன் அப்பகுதியை படம் எடுக்கவில்லை ? அப்படிப் படம் எடுத்திருந்தால் முள்ளிவாய்க்காலில் மக்கள் அமைத்திருந்த கூடாரங்கள், அங்கே விழுந்து வெடித்த ஷெல்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் துல்லியமாகப் படமாக பெற்றிருக்க முடியும். ஆனால் அதனை ஏன் கூகுள் ஏத் செய்யவில்லை ?

இலங்கை அரசுடன் இவர்கள் ஏதாவது ஒப்பந்தம் போட்டார்களா ? என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளதாக அமெரிக்க ஆங்கில நாளேடு ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலைப் படம் எடுத்துவிட்டு, அதனை சேமித்துவைத்து தற்போது எடுக்கப்பட்ட படம்போல கூகுள் ஏன் காட்டிவந்தது என்பது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்கு கூகுள் நிறுவனம் பதில் சொல்லியாகவேண்டும் என அந்த ஆங்கில ஊடகம் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. 


source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP