சமீபத்திய பதிவுகள்

எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் தகவல்

>> Tuesday, September 8, 2009


 
 

சமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகளை, இலங்கைக்கான ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டிருந்தது.

அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம், தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார். இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன் தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க் குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கை அரசின் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு முறை தமிழர்களை ஏமாற்றியிருக்கிறார்.

இவ்வாறு இலங்கை அரசுடன் இவர் சேர்ந்து நாடகமாடுவது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. இவர் முகத்திரை கிழிந்துள்ளது. இவரா சமாதான காலகட்டத்தில் இதய சுத்தியுடன் நடு நிலை வகித்திருப்பார்? அல்லது இதய சுத்தியுடன் சமாதானம் மலரவேன்டும் எனப் பாடுபட்டிருப்பார்? தமிழர்கள் இவரை நம்பியதற்கு, இவர் கொடுத்த பரிசு நம்பிக்கைத் துரோகம்.  இன்று சிங்கள நாளிதழ்களில் எரிக் சொல்ஹெய்ம் இந்தப் படுகொலை வீடியோ பொய்யானவை என்று கூறியதாகச் செய்திவெளியிட்டு கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர். கோத்தபாய ராஜபக்சவும் இதனை எரிக் சொல்ஹெய்ம் கூறியதாகச் சிங்கள செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அதாவது நாம் இவரைக் கேட்டோமா இந்த வீடியோ பற்றிக் கருத்துக் கூறும்படி? தானாகவே வந்து கருத்துரைத்துப் பின்னர் அக்கருத்தை மறுத்து, உண்மையான சம்பவங்களைப் பொய்யாக்க நினைக்கிறார் எரிக் சொல்ஹெய்ம். இவரை அனைத்துத் தமிழர்களும் ஓரம்கட்டவேன்டும். இவ்வாறான களைகள் முதலில் களையப்பட்டாலே, தமிழர்கள் சுயநிர்ணயம் கிட்டும்.








இன்று சிங்கள நாழிதள்கள் வெளியிட்டுள்ள செய்திகளைத் தாம் கூறவில்லை என்றால், எரிக் சொல்ஹெய்ம் உடனடியாக மறுப்பறிவித்தல் ஒன்றை விடவேன்டும் என்பதே மக்கள் கோரிக்கை. இச் செய்தியை வெளியிட்ட சிங்கள நாழிதழ் ஒன்று இங்கு ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

 
 
source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி




வன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து "அல்ஜசீரா" தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.


இம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை "அல்ஜீரா" பேட்டி கண்டுள்ளது.

தமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் "அல்ஜசீரா தொலைக்காட்சி" சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் "அரச பயங்கரவாதம்" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான "அல்ஜசீரா தொலைக் காட்சி" சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.

ஏற்கனவே "சனல்04" தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.
--


source:eegarai
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சானல் 4 இன் வாயை மூடும் சிங்கள இனவாதிகளின் நகர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம

250809 001தயவு செய்து இந்த மடலை சிரத்தையுடன் படியுங்கள்

இல்லையேல் யாவும் கை நழுவி போக கூடும். பிரித்தானிய ஸ்ரீ லங்கன் பேரவை என்னும் சிங்கள இனவாதிகளை மட்டும் பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்பு சானல் 4 இற்கு எதிராக குரல் கொடுக்க சகல சிங்கள மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பேஸ் புக் போன்ற பிரபல தளங்கள் ஊடாக என்றும் இல்லாதவாறு பெருமளவில் இந்த பிரசாரம் முன்னெடுக்க படுகிறது.

இப்படியான எதிர்ப்புகளை தவிர்க்க பல ஊடகங்களை ஸ்ரீ லங்கா பற்றி பாராமுகம் காட்டும் நிலைமைக்கு தள்ள படலாம்.

இன்று விடுதலை புலிகள் விட்டு சென்ற பெரும் அரசியல் இடைவெளியை நிரப்ப முடயாமல் தவிக்கும் பொழுது உலக தலைவர்களினதும் ஊடகங்களினதும் தமிழர் வாழ்வுரிமைக்கான குரல் மிக முக்கியமானதாகும்.

இந்த வழியில் சானல் 4 இன் முயற்சி இன்று ஐ நா சபை , அமெரிக்கா வரை கேட்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. அண்மையில் காட்டப்பட்ட காணொளி உலக அரங்கில் ஸ்ரீ லங்காவை அழுத்ததிற்கு உள்ளகியுள்ளதனால் சானல் 4 மீது சேறு பூச சகல முயற்சிகளையும் ஸ்ரீ லங்கா எடுத்து வருகிறது.

ஏற்கனவே பிரித்தானிய தலைவர்களிடம் தனது சானல் 4 மீதான அதிருப்தியை வெளிகாடியுள்ளதை நாம் அறிவோம். இதற்கு அடுத்த கட்ட நகர்வாக ,

விடுதலை புலிகளின் வீழ்ச்சியுடன் அமைதியாகி விட்ட பிரித்தானிய தமிழர்களின் குறைபாட்டை தமது பலமாக்கி கோதபாய ராஜபக்சே இன் வழிபடுத்தலில் பெரும் பண உதவியோடு BSLF அமைப்பு வரும் சனிகிழமை 05 செப்ட் 2009 அன்று எதிர்ப்பியக்கம் ஒன்றை நடாத்தவுள்ளது.

இந்த நிலையில் சானல் 4 இன் வீர செயலுக்கு மதிபளிக்கும் தமிழர்களும் இலஙகையரும் இணைந்து உங்களிடம் வேண்டுவது ஊடக சுதந்திரத்துக்கான உங்கள் குரல் மட்டுமே. இந்த பொது பிரச்சனையிலாவது உங்கள் ஒன்று பட்ட ஆதரவை எதிர்பார்கிறோம்.

தமிழ் சுதந்திர போரில் நடந்த உண்மை கதைகளை வெளிக்கொண்டு வந்த சானல் 4 இற்கு என்றும் எமது நன்றியை சொல்லுவோம்!

இலங்கையின் வடக்கே இரும்பு திரைக்கு பின்னால் நடந்த படுகொலைகளை வெளி உலக்குக்கு காட்டிய சானல் 4 இற்கு என்றும் எங்கள் ஆதரவை உரத்து சொல்லுவோம் !

news@channel4.com என்ற மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதுவதுடன் BSLF போன்ற ஸ்ரீ லங்கா அரசின் பணத்தில் முகவர்களாக செயற்படும் அமைப்பின் முயற்சிகளை கணக்கில் எடுக்காது ஊடக அடிமைப்பட்ட மக்களுக்கான குரலாக என்றும் ஒலிக்க சானல் 4 ஐ வேண்டுமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி

source:tamilspy
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அஞ்சாதே-பிரபாகரன் பேசுகிறார்


1953-ம்ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மானுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது".

ஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் கார ணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக் குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடி னார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள்.

எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல -ஆயிரம், லட்சங்களி லான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும்.

எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக". பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.

sweetdreams1

வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?" என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது."

அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் – ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்…?" அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்… ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது".

ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் – ""நாயே… சாகப்போகிறாய்… இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?" உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா… உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்" என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.

பைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: ""உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்" முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை? உண்மை தான்… உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.

மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் : ""அஞ்சாதீர்கள், உடலை மட் டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.

""தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர் களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் துளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல் லாம்- அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.

குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள் யாவும் மக்களுக்காய் விநியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம் தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராஜ பக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின் னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் -தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற் கான புறச்சூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர் பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத் துணை இறுக்கம் காட்டுமென்றும், ராஜபக்சே அரசுக்கு முழு பக்கபலமாய் இருக்குமென்றும், நாம் எதிர்பார்க்க வில்லை.

எமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்."

உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

(நினைவுகள் சுழலும்)

source:nakkheeran

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP