சமீபத்திய பதிவுகள்

தமிழீழத்தை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள்

>> Friday, July 2, 2010

 

தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள் , என்று எங்களுக்கெல்லாம் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி நிற்பவர் எங்கள் தேசிய தலைவர்.

அவரை பயங்கரவாதியாக பார்த்தவன் கூட , தங்கள் எதிரியாக பார்த்த துரோகிகள் கூட அவரது தலைமையும் உறுதியையும் கண்டு வியந்தவர்கள் தான்!
சைக்கிள் இல் தொடங்கி விமான படை வரை கட்டி அமைக்க எதனை உயிர்கள் எவ்வளவு பணம் , எத்தனை கட்டமைப்புகள் ! இவ்வளவையும் காட்டி தந்த தலைவருக்கு அதன் விலைமதிக்க முடியாத அர்பணிப்பு புரிந்து இருந்தது.

அதனாலோ என்னவோ இதை எந்த நிலையிலும் கைவிட்டால் தான் என்றாலும் பரவாயில்லை சுட்டு விடுங்கள் என்று கூறி நின்றார்.
இன்றைக்கு அதை நாம் மனதில் நிறுத்துவோம் . பல பேர் பல காரணங்கள் கூறினாலும் தமிழீழம் என்பது அமைக்கப்படவேண்டும் . அதை யார் கைவிட்டாலும் அவர்களை ஒதுக்கி , எங்கள் போராக , இளையோரின் ஒன்றிணைந்த சக்தியாக, ஜனநாயக வழியில் நிச்சயம் தொடர வேண்டும் , தொடரப்படும் !
ஒரு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பு மூலம் எங்கள் மக்கள் அதை தீர்மானிக்கும் உரிமை பெறப்படும் வரை நாங்கள் பயணிப்போம் .

இன்றைக்கு இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த நிலையில் , எல்லாரும் தங்கள் தான் புலிகள் என்று அறிக்கை விடும் நிலையில் , மக்கள் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார்கள் . தமிழீழ விடிவை நோக்கி பயணிக்கும் எல்லா அமைப்புகளையும் ஆதரித்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவை , தமிழ் இளையோர் அமைப்பு என்பன மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த போதெல்லாம் மக்கள் இணைந்து நின்று தங்கள் உணர்வை காட்டினர் .
வட்டுகோட்டை தீர்மானம் , தமிழீழ அரசு தேர்தல் என்றால் இணைந்து நின்று முடியுமானோர் வாக்களித்து எம்மின போராட்டத்தை நிமிர்த்த தங்கள் ஆதரவை தந்தனர். இதை எவர் எதிரதாலும் , எவர் கை விட்டாலும் அவர்களை தூக்கி எறிந்து விட்டு எவர் சரியான திசையில் பயணிக்கிரரோ அவருக்கு தம் ஆதரவை எப்ப்ளுதும் வழங்க மக்கள் நிச்சயமாக முன்வந்து உள்ளனர்.

இலங்கை அரசு வாங்க நினைக்கும் தலைவர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் என்றால் கூட தூக்கி , தமிழீழ கோரிக்கையை கை விட்டால் , நிச்சயம் அவர்களையும் தூக்கி எறிய தயங்க மாட்டோம் . தேசிய தலைவரின் வரிகள் காதில் ஒலிக்கட்டும் ! பலர் தங்கள் சொந்த இலாபத்துக்காக , உள்வீட்டு பிரச்சைனக்காக எங்கள் போராடத்தை மழுங்கடிக்க எதிரியுடன் கூட்டு சேர்வது முதன் முறையல்லவே!

கருணாவில் இருந்து டக்லஸ் வரை தங்கள் உள்வீட்டு பிரச்சனைக்காக சிங்கள அரசுடன் சேர்ந்தவர்கள் தானே. தமிழீழம் வேண்டாம் , புலிகளிடம் இருந்து எங்களை காத்தருள்க என்று சிங்கள பேரினவாதிகளின் கை பொம்மை ஆகியவர் பட்டியல் இன்னமும் முடியவில்லை.

ஆனால் இம்முறை அவர்கள் நேரடியாக சந்திக்க போவது மக்களை!. புலிகள் என்றும் எதிரிகள் என்றும் நாங்கள் பார்கபோவது இல்லை , யார் என்றாலும் எங்கள் தேசிய தலைவனின் பாதையை மறந்து , இத்தனை தமிழ் இளையோர் தங்கள் உயிரை கொடுத்த ஒரு இலக்கை அடையாமல் கைவிட்டால் மன்னிக்க போவதும் இல்லை அதுவரை நாம் தூங்க போவதும் இல்லை.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். இதை உரக்க கூறுவோம் ! எங்கள் எதிர்களின் காதுகளில் வீழட்டும் ! புலிகளின் தலைவர்கள் சிலரை வளைத்து போட்டால் அடங்குவதற்கு இது ஒன்றும் தண்ணீரில் அடங்கும் தாகமல்ல, கண்ணீர் காய்ந்து போன கன்னங்கள் இறுகிய உள்ளத்தோடு தொடங்கிய போர்! சிவகுமாரன் தொட்டு தீபன் வரை உயிரை கொடுத்து வளர்த்த தீ!

தெளிவாக இருப்போம் ! அறிவோடு நடப்போம்


source:tamilspy
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

1,330 குறள் சொல்லும் பனியன் தொழிலாளி திருவள்ளுவர் வேடமிட்டு பங்கேற்பு

 

அவிநாசி : திருக்குறளை எந்த முறையில் கேட்டாலும் "படக்' கென்று பதில் சொல்லும் பனியன் தொழிலாளி ரங்கராஜன், திருவள்ளுவர் வேடமிட்டு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார்.


அவிநாசி அருகே அம்மாபாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன். 10வது வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். திருக்குறள் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், கடந்த ஆறு ஆண்டுகளாக திருக்குறளை "கரைத்து' குடித்து விட்டார். மொத்தமுள்ள 1,330 குறளில், எந்த வகையில் கேள்வி கேட்டாலும், அதற்கான பதில் ரங்கராஜனிடமிருந்து "படக்' கென்று வருகிறது.அவிநாசி, அம்மாபாளையம், திருமுருகன்பூண்டி வட்டாரத்தில் பகுதிநேரமாக குழந்தைகளுக்கு, ரங்கராஜன் திருக்குறள் சொல்லிக் கொடுத்து வருகிறார். தற்போது கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க திருவள்ளுவர் போல வேடமிட்டு, கைகளில் ஓலைச்சுவடியும், எழுத்தாணியுமாக நேற்று கோவை புறப்பட்டார்.


திருக்குறள் மீதான ஆர்வம் குறித்து, ரங்கராஜன் கூறியதாவது:ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த தலைமையாசிரியர் அருணாசலம் மற்றும் நண்பர்கள் அளித்த ஊக்கம் காரணமாக திருக்குறளை படிக்க ஆரம்பித்தேன். ஆறு மாதத்தில் அனைத்து குறள்கள், அதற்கான பொருளை மனப்பாடம் செய்தேன். எந்த எண், பொருள், தலை கீழாக, உதடு ஒட்டும், ஒட்டாத குறள், மலர்களின் பெயர் உள்ள குறள், உடல் உறுப்புகள் வரும் குறள், ஒன்று முதல் பத்து வரை எண் சொற்கள் உள்ள குறள் இவ்வாறு 35 வகையான கேள்விகளை கேட்டால், உடனே பதில் கூறுவேன்.பல மேடைகளில் பரிசுகள் பெற்றிருந்தாலும், பெருமை வாய்ந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திருவள்ளுவர் வேடமிட்டு பங்கேற்க லட்சியம் வைத்திருந்தேன். அதை தற்போது நிறைவேற்றியுள்ளேன். செம்மொழி மாநாட்டில் எப்படியாவது முதல்வரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பதே எனது ஆசை.இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

குரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்


 
 

நாம் இன்டர்நெட்டில் உள்ள தள முகவரிகளை அட்ரஸ் பாரில் டைப் செய்திடுகையில், டttணீ://என டைப் செய்து, பின் தள முகவரிகளை அமைக்கிறோம். சில பிரவுசர்களில் நாம் தள முகவரிகளை மட்டும் அமைத்தால், இந்த http:// அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, தளம் தேடப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது. வேர்ல்ட் வைட் வெப் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த http:// இணைய தளங்களைத் தேடித் தரத் தேவையில்லை.
குரோம் பிரவுசரை வடிவமைத்தவர்கள், அந்த பிரவுசரில் இந்த முன்தொட்டு (http:// ) இல்லாமல் தங்கள் அட்ரஸ் பாரைத் தற்போது அமைத்துள்ளனர். இதனைப் பயன்படுத்துபவர்கள், http:// கொடுத்து இணைய தள முகவரியினை அமைத்தாலும், அது எடுக்கப்பட்டுவிடும். ஆனால் https  மற்றும் ftp ஆகியவை, எடுக்கப்படவில்லை. இவை அட்ரஸ் பாரில் காட்டப்படுகின்றன. ஏனென்றால் https போன்றவை பாதுகாப்பான இணைய தளத்தைச் சுட்டிக்காட்டி தேடித்தருபவையாக இருப்பதால், இவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. http:// க்குப் பதிலாக ஐகான் ஒன்று காட்டப்படுகிறது.
இதில் சில சிக்கல்கள் உள்ளன. குரோம் பிரவுசர் தானாக http://ஐ இணைக்கிறது; ஆனால் http://  நம் கண்களுக்குக் காட்டப்படாமல், ஐகான் ஒன்று காட்டப்படுகிறது. இந்த நிலையில் ஏதேனும் ஒரு இணைய தள முகவரியினை காப்பி செய்திடுகையில் நாம் http://விடுத்து காப்பி செய்திட முடியாது. அதனுடன் காப்பி செய்து பேஸ்ட் செய்தால், இரண்டு முறை டttணீ:// அமைந்திடும். இந்த http:// இல்லாத வகையில் அட்ரஸ் அமைக்கும் மாற்றம், அண்மைக் காலத்தில் வந்துள்ள குரோம் பிரவுசர்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை வடிவமைத் தவர்கள், இந்த மாற்றத்தை இனி மாற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதாவது இனி வரும் குரோம் பிரவுசர் பதிப்புகளில் http://இல்லாமலேயே தான் அட்ரஸ் பாரில் முகவரிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான், வேர்ல்ட் வைட் வெப்பினை வடிவமைத்த டிம் பெர்னர்ஸ் லீ ½ (Sir Tim BernersLee) http:// குறியீட்டில் சாய்வு கோடு குறியீடு தேவையற்றது என்று கூறி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

"ஆபாசம் அகற்றப்படும்"

கொழும்பில் ஏராளமான விளம்பரப் பலகைகளைக் காணலாம்
கொழும்பில் ஏராளமான விளம்பரப் பலகைகளைக் காணலாம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஆபாசமான விளம்பரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் என்று அவர்கள் கருதுபவற்றை அகறுவதற்கான நடவடிக்கை ஒன்றை தாம் ஆரம்பித்திருப்பதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

அரைகுறை ஆடையில் உள்ள பெண்களின் படங்கள் போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவற்றால் பெண்களும், சிறார்களும் பாதிக்கப்படுவதை தாம் தடுக்கப்போவதாக பொலிஸ் கூறுகிறது.

இந்த நடவடிக்கைக்கு சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.



source:BBC
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP