சமீபத்திய பதிவுகள்

"சதையை' பார்க்கும் கிரிக்கெட் வீரர்கள் * நடனப் பெண் ஆவேசம்

>> Friday, May 20, 2011

புதுடில்லி: "ஐ.பி.எல்., பார்ட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் தவறாக நடந்து கொள்கின்றனர். நடனப் பெண்களின் சதையை தான் பார்க்கின்றனர்,'' என, தென் ஆப்ரிக்க நடனப் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.பி.எல்., தொடரில் பார்வையாளர்களை மகிழ்விக்க, அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்கான போட்டிகளில் நடனம் ஆடுவதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து 40 பெண்கள், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவில் போட்டிகள் முடிந்ததும் நடக்கும் பார்ட்டிகளில், நடக்கும் சம்பவங்கள் குறித்து கேபிரியல்லா (22) என்ற நடனப் பெண், சமீபத்தில் வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" கிரிக்கெட் வீரர்கள் தகாத முறையிலும், அருவெறுக்கத் தக்கவகையிலும் நடந்து கொள்கின்றனர். இவர்கள் எங்களை பெண்களாக பார்ப்பதில்லை. வெறும் சதைப் பிண்டமாகத்தான் பார்க்கின்றனர்,'' என தெரிவித்து இருந்தார்.
இப்படி "உண்மையை' வெளியிட்டதால், கடந்த வாரம் இவர் மும்பை அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கேபிரியல்லா கூறியது:
பொதுவாக பார்ட்டிகளின் போது, அனைத்து இடங்களிலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு, வீரர்கள் என்ன செய்கின்றனர் என்று கண்காணிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் அவர்கள், எங்களை சுற்றித் தான் நின்று கொள்வார்கள். அவர்களை விட்டு நாங்கள் எங்கும் செல்ல முடியாது. மொத்தத்தில் எங்களை மாமிச பிண்டமாகத்தான் நடத்துகின்றனர். இதில் எந்தவொரு குறிப்பிட்ட வீரரையும் தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் சந்தித்த இந்திய வீரர்களில் தோனி, ரோகித் சர்மா இருவரும் எப்போதும், நாகரீகமுடன் நடந்து கொள்வார்கள்.
இதைத்தான் எனது "டுவிட்டரில்' தெரிவித்தேன். ஆனால், என்னை தொடரில் இருந்து நீக்கிவிட்டனர். உண்மையில் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை. ஏதோ மிகப்பெரிய தவறு செய்த கிரிமினல் போல என்னை நடத்தினர். எனது தரப்பு நியாயம் என்ன என்பதை சொல்வதற்கு கூட வாய்ப்புத் தரவில்லை.
இவ்வாறு கேபிரியல்லா தெரிவித்தார்.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP