சமீபத்திய பதிவுகள்

சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; “சிம்” கார்டில் ரகசியம் அம்பலம்?

>> Wednesday, May 27, 2009

 
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் துப்பாக்கி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சாட்டிலைட் போன் சிம்கார்டை எடுத்து இலங்கை ராணுவ உளவு பிரிவினர் ஆராய்ந்தனர். அந்த போனில் அவர் பேசிய எண்கள் அவருக்கு வந்த போன்களின் எண்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன.

இதன் மூலம் பிரபாகரனுடன் யார்-யார்? பேசியுள்ளனர். அவர் யாருக்கெல்லாம் போன் செய்து பேசி இருக்கிறார் என்ற விவரங்களை கண்டு பிடித்து உள்ளனர்.

தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. அந்த தலைவர்கள் யார்? எந்தெந்த தேதிகளில் பேசி உள்ளனர். எந்த எண்ணில் இருந்து பேசி இருக்கிறார். போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இது பற்றி இலங்கை மந்திரி பாண்டுலா குண வர்த்தனே கூறும் போது பிரபாகரன் போன் சிம் கார்டு மூலம் அவருக்கு யார்-யாருடன்? தொடர்பு இருந்தது என்பதை கண்டு பிடித்துள்ளோம்.

தென் இந்தியாவில் முக்கிய தலைவர்கள் அவருடன் பேசி இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

StumbleUpon.com Read more...

பிரபாகரனின் 2-வது மகன் பாலச்சந்திரன் எங்கே?

பிரபாகரனின் 2-வது மகன் பாலச்சந்திரன் எங்கே?

StumbleUpon.com Read more...

இறுதி யுத்தத்தில் 24,100 சிறிலங்கா படையினர் பலி

இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி
தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக இறுதியாக சிறிலங்கா அரசாங்கம் 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த படை நடவடிக்கைகளில் இருந்து இறுதிப்படை நடவடிக்கைகள்வரை சிறி லங்கா இராணுவத்தில் 24 100 இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும், (இதில் தப்பியோடியோர் -காணாமற்போனோர் பட்டியல் உள்ளடக்கப்படவில்லை) இராணுவப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த எண்ணிக்கைகளை தலைகீழாக மாற்றியே சிறி லங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள அமைப்பொன்றை ஆதாரமாகக்காட்டி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் ஆரம்பம் முதலே தமது இழப்புக்களை சிறி லங்கா இராணுவத்தினர் மிகையாக குறைத்தே செய்திகளை வெளியிட்டுவருவதாக சிங்கள மக்களுக்கே புரியும் எனவும், அவர்கள் வாழை மரக்குற்றிகளை தமது பிள்ளைகளின் சடலம் என்று சொல்லப்பட்டே இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே மாவிலாறு மற்றும் கிழக்கு மாகாண விடுவிப்பின்போது 2 900 இராணுவத்தினரும், வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1300 இராணுவத்தினரும் (கபறனை தாக்குதல் உட்பட), மன்னார் பிரதேசங்களில் எற்பட்ட மோதல்களின்போது 3100 இராணுவத்தினரும், மாங்குளம் பிரதேச மீட்பின்போது 2500 பேரும், மல்லாவி, துணுக்காய் பகுதிகளின் மீட்பின்போது 3500 பேரும், பின்னர் நடந்த இடை மோதல்களில் 1700 பேரும் பூனகரி மோதல்களின்போது 4200 பேரும், கிளிநொச்சி கைப்பற்றுதலில் 2600 பேரும், பின்னர் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி ஊடறுப்புத்தாக்குதலில், 2300 பேரும், விடுதலைப்புலிகளின் குளம் உடைப்புத்தாக்குதலில் 3300 பேரும் பின்னர் இடம்பெற்ற இறுதித்தாக்குதலில் மிகுதி இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமது தரப்பு இழப்புக்கள் பற்றி குறிப்பிட்ட சிறி லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இறுதிமோதல்களில் 6200 படையினர் மட்டுமே பலியானதாகவும், இத்தனைநாள் இடம்பெற்றமோதல்களில் சுமார் 22 அயிரம் வரையான படைவீரர்களே இறந்துள்ளதாக தெரிவித்தமை மிகவும் கேலிக்குரியதெனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP