சமீபத்திய பதிவுகள்

இலங்கையை கதிகலங்க வைக்கும் அமெரிக்க தமிழர்களின், இலங்கை தயாரிப்புகளை புறக்கணிக்கும் போராட்டம்

>> Saturday, December 5, 2009

புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது. 

இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria's Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் (United States Tamil Political Action Committee - USTPAC) 'இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு' (Sri Lankan Products Boycott Committee) இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது. 

"நண்பர்களே... உங்களை இந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது 'Made in Srilanka' என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது இரத்தம் தோய்ந்திருக்கிறது!" - இந்த வலி மிகுந்த வாசகங்களைப் பார்த்த பின்னும் யார் இலங்கைத் தயாரிப்புகளை வாங்குவார்கள். 

இதையெல்லாம் பார்த்துவிட்டு கடைகளுக்குள் சென்று வரும் வெளிநாட்டவர், தாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். 

சில அமெரிக்கர்கள், "இலங்கையில் நடந்த விஷயங்களை நாங்கள் அறிவோம். இப்போது நடக்கும் அவலங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களால் எப்படி இலங்கை தயாரிப்புகளை வாங்க முடியும்" என்றும் சில அமெரிக்கர்கள் திருப்பிக் கேட்டது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. 

இந்தப் போராட்டத்தைப் பார்த்து கோபம் கொண்டு தங்களிடம் சண்டைக்கு வந்த அமெரிக்க நிறுவனங்களிடம் பொறுமையாக தங்கள் தரப்பை விளக்கிய போராட்டக்காரர்கள், இலங்கையில் செய்யப்பட்டுள்ள உங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்த அவர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். 

டாக்டர் எலீன் ஷாண்டர், டாக்டர் சோம இளங்கோவன், சிவநாதன் போன்றோர் இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்து சட்டரீதியாக வழிநடத்தி வருகின்றனர். 

அமெரிக்க நிறுவனங்கள் என்றில்லாது, இங்கையில் முதலீடு செய்துள்ள பேறு நாட்டு நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தி வருகிறார்கள் போராட்டக் குழுவினர். 

இதுதான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு விழப்போகும் பேரடியாகப் பார்க்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களிடம் ஈழ விடுதலைப் போராட்டத்தை கையளித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 source:tamilwin --
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மாட்டிக்கிட்ட ஃபொன்சேகா மருமகன்! நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி பகீர் ராணுவ பேர ஊழல்..

 

''சிங்கள ராணுவத்தின் ஹீரோ நானே!'' என்ற அறைகூவலோடு சேர்த்து, ''ராஜபக்ஷே கொடுக்கிற வாக்குறுதிகளைவிட அதிகப்படியான நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்து காட்டுவேன்!'' என்று சொல்லி, தேர்தல் பிரசாரத்தை அட்வான்ஸாகவே தொடங்கிவிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு... கெட்ட காலமும் கூடவே தொடங்கி விட்டது!

அவருடைய மருமகன் தனுனா திலகரத்னே இப்போது அமெரிக்க போலீஸின் பிடியில். கப்பென்று அவரைக் கைது செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், பகீர் ஆயுத வியாபாரக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள்!

தனுனா திலகரத்னே அமெரிக்காவில் இருந்தபடியே இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறார் என்பது கடந்த சில மாதங்களாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்த கசப்பான குற்றச்சாட்டு. ''மாமனார் ராணுவத் தளபதி. மருமகன் ஆயுத சப்ளையர். இலங்கை ராணுவத் தரப்பிலிருந்து பறக்கிற ஒவ்வொரு தோட்டா விலிருந்தும், ஷெல்லில் இருந்தும் தளபதியின் மருமகன் லாபமாக அள்ளிக் குவிக்கிறார். தனுனா திலகரத்னே வாட கைக்குஎடுத்திருந்த கொழும்பு ஃபிளாட்டில் தற்போது தங்கி யிருப்பது அவருடைய ஆயுத ஏஜென்ட்டான அகமது நிசார்!'' என்று கூறி வந்தனர் சில பத்திரிகையாளர்கள். ''உயிரை அர்ப்பணித்து நாட்டுக்காக நாம் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்க, தளபதியின் மருமகன் நோகாமல் அதைக் காசாக்குகிறாரா?'' என்ற குமுறல் சிங்கள ராணுவத்தினர் மத்தியில் பரவலாக இருந்து வந்ததாம்.

''அகமது நிசார் போல ராணுவ பேரத்துக்கான ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு ஏஜென்ட்களை தனுனா திலகரத்னே வைத்திருக்கிறார்.. சிங்கள ராணுவததின் விங் கமாண்டர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து உக்ரைனிலிருந்து விமானம் வாங்கியது, ராணுவ உடுப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சீனாவிலிருந்து வாங்கியது என்று கமிஷன் பேரம் விளையாடியிருக்கிறது!'' என்றும் ராணுவத்தின் மத்தியில் ஒரு பேச்சு இருந்ததாம். அதெல்லாம், தனுனா கைதான நிலையில் இப்போது வெளிப்படையான விவாதமாக அங்கே அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் புள்ளியின் தொடர்புகளும் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது.

''சிங்கள ராணுவ வீரர்களுக்கான உணவு சப்ளை கான்ட்ராக்டிலும் பலே ஊழல்கள் நடந்திருக்கின்றன. மோசமான பாக்கெட் உணவை மலேஷியத் தமிழர் ஒருவர் மூலமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய் ததில் பல கோடிகள் விளையாடியிருக்கிறது. அந்த உணவை சாப்பிட்டு செரிமானம் இல்லாமல் நம் வீரர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதை சப்ளை செய்த ஏஜென்ட்கள் ஐரோப்பிய உயர்தட்டு ஹோட்டல்களில் ஷாம்பெயின் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்!'' என்று ராணுவ வீரர்கள் மத்தியில் கொதிப்பான ஒரு கடிதமும் சில காலத்துக்கு முன் சுற்றில் விடப்பட்டிருந்ததாம்.

''வாங்கிய ஷெல்களில் கால்வாசி வெடிக்காமலே போனது. இதனால், விடுதலைப் புலிகள் தாக்கியபோது பதிலடி கொடுக்கத் தவறி அநியாயமாக நமது வீரர்கள் பலர் உயிரைவிட்டிருக்கிறார்கள்!'' என்று இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள் ராணுவத்துக்குள்.

சரத் ஃபொன்சேகாவின் மகள் அப்ஸராவின் கணவர்தான் இந்த தனுனா திலகரத்னே. ஒக்லஹாமா மாநிலத்தில் எட்மன்டு என்ற நகரில் 'ஐ-கார்ப் இன்டர் நேஷனல்' என்ற கம்பெனி நடத்தும் இவர், 'கம்ப்யூட்டர் தொடர்பான பாகங்களை விற்கும் கம்பெனி' என்று போலியாக அரசு அனுமதி பெற்று, கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவந்தார் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு!

இதுபற்றி விஷயம் அறிந்தவர்கள், விளக்கமாக சில தகவல்களைக் கூறினர் -

''அமெரிக்காவில் 'ஹெச்-1 பி' எனும் வேலை விசாவில்தான் இருக்கிறார் தனுனா திலகரத்னே. தன் பார்ட்னர் குவிண்டா குணரத்னேவின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, அவரையே தன் புது கம்பெனியின் தலைவராக 'நியமித்து' மோசடி செய்துள்ளார். மேலும், தனுனா வேலை விசாவைப் பெறுவதற்காக, போலியாக ஒரு கம்பெனியை உருவாக்கி அதைக் காட்டியே விசா பெற்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஃபிளவர் மவுன்ட் நகரில் 'பிரிட்டிஷ் போர்னியோ டிஃபன்ஸ்' என்ற நிறுவனத்தையும் துவக்கி, மெக்ஸிகோ வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஆயுத சப்ளை செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதை முழுக் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்கள்தான் செய்ய முடியும். இவரோ வேலைக்கான விசாவில் வந்துவிட்டு, ஆயுத விற்பனை நடத்தியிருக்கிறார்!'' என்கிறார்கள். ''தனுனா திலகரத்னேவின் ஏஜென்ட்டான அகமத் நிசார் மூலம் பெற்ற வெடிகுண்டுகளில் 40 சதவிகிதம் வெத்துவேட்டு!'' என்று இலங்கையின் 58-வது பிரிவு பிரிகேடியர் சூரஜ் பன்சாஜியா மற்றும் பிரிகேடியர் சிவேந்திரா சில்லா ஆகியோர் அதிபர் ராஜபக்ஷேயிடம் புகார் கூறியுள்ளதும் இப்போது கவனிக்கத் தக்கது!

தனுனாவின் பாகிஸ்தான் தொடர்புகளைத் துருவும் அமெரிக்க அரசு, இவருக்கு அல்கொய்தா மற்றும் தாலிபன்கள் தொடர்புண்டா என்றும் ஆராய்வதாக ஒரு தகவல் கிளம்பி ஃபொன்சேகா வட்டாரத்துக்குப் புளியைக் கரைத்திருக்கிறது.

மருமகன் கதை இப்படி டாப் கியரில் போகிறது... மாமனார் ஃபொன்சேகாவோ அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' உள்ள, நிரந்தர தங்கும் உரிமை பெற்றவர்!

''ஃபொன்சேகாவின் மருமகன் என்ன செய்து வந்தார் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு இப்போதுதான் தெரிய வந்ததா என்ன? ராஜபக்ஷேவுக்கு எதிரான போர்க் குற்ற வாக்குமூலத்தை ஃபொன்சேகாவிடமிருந்து அழுத்தம் திருத்தமாகப் பெறுவதற்கும், இலங்கை தேர்தல் களத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக அவரை வெறியோடு சுழல வைப்பதற்காகவும்தான் மருமகன் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது அமெரிக்கா! மருமகன் சேர்த்த பணத்தை ஃபொன்சேகா உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றினார்களா என்ற கோணத்திலும் அடுத்த கட்ட விசாரணையைக் கொண்டு போகக்கூடும். அப்புறமென்ன... ஃபொன்சேகா முழுக்க முழுக்க அமெரிக்கா கீ கொடுக்கும் பொம்மையாக மாற வேண்டியதுதான்!'' என்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள விவரமான இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள்.


source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அரசு- பொன்சேகா மோதலால் வெளியே வரும் இரகசியங்கள்

 

sarath_mahindaஜெனரல் சரத் பொன்சேகா தனக்குரிய பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் குறைத்து விட்டதாகவும், அதனால் தனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறத்தில் அரசாங்கமோ இவர் சட்டவிரோதமான முறையில் அதிகளவு படையினரையும் வாகனங்களை வைத்திருப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு தரப்புகளும் சொல்லும் தகவல்களிலும் நிறையவே முரண்பாடுகள் இருப்பதையும், அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதையும் எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது- இராணுவ நடைமுறைகளுக்கு மாறாக எதையெதையெல்லாம் செய்தாரோ- அவையெல்லாம் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பத் தொடங்கியிருக்கிறது. இப்படியான ஒரு நிலை வரும் என்று அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றி தனக்கேயுரியது என்று கூறிவந்த அவரது வாயை அடைக்க அரசாங்கம் பெரும் முயற்சி செய்து வருகிறது. சிறந்த அரசியல் தலைமைத்துவத்தினால் தான் அதைச் சாதிக்க முடிந்ததாவும், அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. அதுமட்டுமன்றி இராணுவத் தளபதியை வைத்தே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பிரசாரங்களையும் முடுக்கி விட்டிருக்கிறது.


ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல்நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, முன்னர் இராணுவப் பேச்சாளர்களாக இருந்த மேஜர் ஜெனரல் தயா இரத்னாயக்க, மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க போன்றோரும்; ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். போர்முனையில் சிறப்பாகச் செயற்படும் அதிகாரிகளுக்கே பதவி உயர்வு என்று கூறி ஜெனரல ஜெனரல் சரத் பொன்சேகா சேவைமூப்பு வரிசையில் முன்னால் இருந்தவர்களைப் பின்தள்ளினார் அல்லது ஒதுக்கினார். அவரது அதே பாணியில் இப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் செயற்பட ஆரம்பித்துள்ளார்.

இது ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நெருக்கமாகச் செயற்பட்ட அதிகாரிகளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய 9 அதிகாரிகள் உள்ளிட்ட 47 இராணுவ உயரதிகாரிகள் இராணுவத் தளபதியினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது வழக்கமானதொன்று அல்ல. ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரத்தின் எதிரொலியாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரணி 52வது டிவிசனின் பொதுக் கட்டளை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். விசேட படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது- இராணுவத் தலைமையக திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய- பயிற்சி மற்றும் தந்திரோபாய வகுப்பு பணிப்பாளர் பிரிகேடியர் மைத்ரி டயஸ் வன்னிப் படைத் தலைமையகத்துக்கும்- ஜெனரல் சரத் பொன்சேகாவின் இணைப்புச் செயலாளராக இருந்த பிரிகேடியர் விமல் டயஸ் முல்லைத்தீவு படைத் தலைமையக நிர்வாகப் பிரிவுக்கும்- நடவடிக்கைப் பணிப்பாளர் பிரிகேடியர் டம்பத் பெர்னான்டோ மாதுறு ஓயா இராணுவப் பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- சிரேஷ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரி பிரிகேடியர் குலதுங்க திருகோணமலை இராணுவ இடைத்தங்கல் முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- பாதுகாப்பு இணைப்பாதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஜனக மகோற்றி 55வது டிவிசனின் இணைப்பதிகாரியாகவும், போர் உதவியாளராக இருந்த பிரிகேடியர் அத்துல சில்வா அம்பாறை இராணுவ தளபதியாகவும், சிரேஸ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஹெனடிகே புனானை 23-2 பிரிகேட் தளபதியாகவும், கேணல் கபில உடலுப்பொல ஒட்டுசுட்டான் 64வது டிவிசன் நிர்வாக அதிகாரியாகவும்- 59வது டிவிசன் தலைமை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் துமிந்த கெப்பிடிவலன அம்பாறை இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, தனது பாதுகாப்புக்காக 600 இராணுவத்தினரையும், 10 வாகனங்களைம், 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்குக் கட்டளையிடுமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதிக்கு 2 ஆயிரம் படையினரும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 படையினரும், இராணுவத் தளபதிக்கு 600 படையினரும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால தனக்கு 72 படையினர் மட்டுமே பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது மனுவில் கூறியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. தற்போது 62 படையினர் பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்டிருப்பினும் அவர்களில் இருபது பேர் மட்டுமே சுழற்சி முறையில் ஒரே நேரத்தில் கடமையில் இருக்க முடியும். இது தனது பாதுகாப்புக்கு போதுமானதல்ல என்பது அவரது நிலைப்பாடு.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் 600 படையினரைப் பாதுகாப்புக்கு அனுமதிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு கட்டளையிடுமாறும் உயர்நீதிமன்றிடம் கோரியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. அதேவேளை அரசாங்கமோ சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப்படியான படையினரையும் வாகனங்களையும் வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளரைக் கொண்டே சொல்ல வைத்திருக்கிறது. பதவியில் இருந்து விலக முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புத் தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். அதில் கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 21 கொமாண்டோ படையினர், சிங்க றெஜிமென்ட்டின் ஒரு மேஜர் மற்றும் இரு கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரிகள் உள்ளிட்ட 53 படையினர், 10 சாரதிகள், 5 பெண் படையினர், ஒரு குண்டு துளைக்காத வாகனம், 3 லான்ட்றோவர்கள், ஒரு கனரக வாகனம். ஒரு வான், ஒரு 26 ஆசன பஸ் என்பன தேவை என்று பட்டியலிட்டிருந்தார். அத்துடன் 10 பிஸ்டல்கள், மினியுசி அல்லது எச்கேஎம்பி-5 ரகத் துப்பாக்கிள் 10, ரி56 துப்பாக்கிகள் 72, பத்து வோக்கி ரோக்கிகள் ஒரு தொடர்பாடல் தள இணைப்பு என்பனவும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார் அவர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து விலகியதும் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு அணி 25 படையினராகக் குறைக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அது 72 பேராக அதிகரிக்கப்பட்டது. இதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் 5 பெண் படையினர் தவிர்ந்த 103 படையினரை அவர் தற்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்- இது சட்டவிரோமானது என்கிறது அரசாங்கம்

4 அதிகாரிகள் உள்ளிட்ட 28 கொமாண்டோக்கள், 3 அதிகாரிகள் உள்ளிட்ட 20 படையினர், 55 பாதுகாப்பு வீரர்கள், சமையற்காரர்கள், சாரதிகள், மருத்துவப் படைப்பிரிவைச் சேர்ந்த 7 படையினர், 3 கார்கள், 7 லான்ட் றோவர்கள், ஒரு டபிள்கப், ஒரு பஸ,; ஒரு அம்புலன்ஸ், 4 வான், 9 மோட்டார் சைக்கிள்கள் என்று 103 படையினரையும் அளவுக்கதிகமான வாகனங்;களையும் சரத் பொன்சேகா வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் குற்றம்சாட்டியிருக்கிறார். அதேவேளை, முன்;னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினர் பாதுகாப்பு வழங்குவதாக சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டை கடற்படையின் பேச்சாளர் கப்டன் சேனாரத் மறுத்துள்ளார். அடமிரல் வசந்த கரன்னகொடவுக்கு 2 அதிகாரிகள் உள்ளிட்ட 42 கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும், குண்டுதுளைக்காத வாகனம் ஒன்று, டிபென்டர் வாகனங்கள் 4, மோட்டார் சைக்கிள்கள் 4, வான்கள் 4 என்பனவே வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இரு தரப்பில் இரந்தும வெளியாகி வருகின்றன.

இந்த மோதல்களால் இதுவரை வெளிவராமல் மறைந்திருந்த பல உண்மைகளும் வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. கிளிநொச்சிக்கு போவதற்கு சரத் பொன்சேகா அச்சமடைந்திருந்ததாகவும், ஜனாதிபதியே தைரியமூட்டி அவரை அழைத்துச் சென்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்த வெளியாகியுள்ள தகவல் சரத் பொன்சேகாவின் ஆளுமையைச் சிறுமைப்படுத்தும் நோக்குடையதாகவே தெரிகிறது. அத்துடன் தான் எப்போதும் தோல்வியடையாத ஒருவர் என்று கூறியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காலத்தில் மூன்று தடவைகள் முகமாலையில் படையினர் படுதோல்வி கண்டு 600 படையினரை இழக்க நேரந்ததாகவும பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் போர்க்காலத்தில் நடந்த பல இரகசியங்கள் அம்பலப்படுத்துக்கு வரப் போகின்றன எனபதையே காட்டுகின்றன.

இராணுவத்தில் ஊழல்களை ஒழித்தது தானே என்று கூறிக் கொள்ளும் சரத் பொன்சேகாவே இப்போது அப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை முகம் கொடுக்கக் கூடிய நிலையும் தோன்றி வருகிறது. சரத் பொன்சேகாவின் இரர்ணுவத் தளபதியாக இருந்த போது அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் பதிவு செய்யப்பட்ட ஹிகோப் என்ற நிறுவனத்தின் ஊடாகப் பெருமளவு ஆயுத தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இந்த நிறுவனம் சரத் பொன்சேகாவின் மருமகனான திலுன திலகரட்ணவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இது பற்றிய பூரண விசாரணை ஒன்றுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடக்கப் போகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இது இன்னொரு புதிய பிரச்சினையைக் கிளப்பலாம். இப்படியாக இருதரப்பும் மோதிக் கொள்;வது போர்க்களத்தல் மறைக்கபட்ட பல உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடும். இந்த உண்மைகள் இரு தரப்புக்குமே நிச்சயம் சாதகமான விளைவுகளைக் கொடுக்காது.

நன்றி சுபத்ரா வீரகேசரி


source:tamilspy


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

"தமிழீழமே தமிழர் தாயகம்" - பிரான்சில் வாக்கெடுப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்


 

தமிழ் மக்களின் ஒரே விருப்பம் இறைமையுள்ள சுதந்திரமான தனித் தமிழீழம்தான் என்பதை வெளிப்படுத்தும் வாக்கெடுப்பில் பிரான்சில் வாழும் தமிழீழ மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளும்படி பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை கேட்டுக்கொண்டிருக்கின்றது என இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு தெரிவித்திருக்கின்து.

அச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

சுதந்திரமான இறைமையுள்ள தனித் தமிழீழமே தமிழ் மக்களின் ஒரே அபிலாசை என்பதை வலியுறுத்தி பிரான்சில் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. 1977ம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை மீள வலியுறுத்தி புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

கடந்த மே மாதம் நோர்வேயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதற்கு ஆதரவாக 99.98 வீதமானோர் வாக்களித்ததன் மூலம் சுநத்திரமும் இறையாண்மையும் உள்ள தமிழீழ தனியரசுக்கான தமது வேணவாவினை மீளுறுதிப்படுத்திவிட்டனர். அந்த வகையில் எதிர்வரும் 12ம், 13ம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ளது.

வாக்கெடுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக இந்த வாக்கெடுப்பினை ஏற்பாடு செய்துள்ள பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் இந்த முயற்சிக்கு பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களும் தமது ஆதரவினை வழங்கியுள்ளன.

பிரான்சில் முதற் தடவையாக நடைபெறும் தமிழ் மக்கள் தழுவிய இந்த வாக்கெடுப்பு தலைநகர் பரிஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழ் மக்கள் வாழும் வெளி மாநிலங்களான ஸ்தாஸ்பூர்க், லியோன் முலுஸ், நீஸ், போர்சோலை, துலுஸ், தூர் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது. ஏனைய மக்கள் குறைந்து வாழும் மாநிலங்களில் தபால் மூலமான வாக்குப் பதிவுகளுக்கு ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 30 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ள இந்த வாக்கெடுப்பினை கண்காணிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் பிரான்சின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல முன்வந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் ஒரே விருப்பம் இறைமையுள்ள சுதந்திரமான தனித் தமிழீழம்தான் என்பதை வெளிப்படுத்தும் வாக்கெடுப்பில் பிரான்சில் வாழும் தமிழீழ மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளும்படி பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை கேட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த வாக்களிப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தகுதியுள்ளவரெனத் தெரிவித்துள்ள தமிழீழ மக்கள் பேரவையினர், பிரான்ஸ் நாட்டிற்கு புதிதாக வந்தவர்களும் வாக்களிக்கலாம் எனவும் வாக்களிப்போர் தமது வசிப்பிடம் எங்குள்ளதோ அதற்கருகில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்குமாறும் கோரியுள்ளனர்.அதேவேளை, வாக்களிப்பு இடத்திற்கு வரஇயலாதோர் அவர்களின் பாதுகாவலர் அல்லது பிள்ளைகள் சம்பந்தபட்டவர்களின் அனுமதியுடன் அந்த வாக்கினை அளிக்கலாம் என்றும், இயலாதவர்களை வாக்குசாலைக்கு அழைத்து வருவதற்கான வாகன ஒழுங்குகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


source:eeladhesam
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்ச்சி தோல்வி

 

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இதற்கு முன்னர் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் கே.பி.க்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ள அந்த வங்கியிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கே.பி.யின் பெயரில் எவ்வித வங்கிக் கணக்கும் சுவிஸ் வங்கியிடம் இல்லையெனவும் அவர்கள் அந்தப் பணத்தை வேறு பெயர்களில் வைப்பிலிட்டிருக்கலாம் எனவும் சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. 

இந்த சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் அமெரிக்காவில் பெட்டகமொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால் தன்னை விடுவிக்க வேண்டுமென கே.பி. தெரிவித்திருப்பதாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கே.பி.க்குரிய சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.

கே.பி.யிடம் 600 வங்கிக் கணக்குகளும் 5 கப்பல்கள் இருப்பதாகவும் இவற்றில் மூன்று கப்பல்கள் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இந்த நிலையில் அந்தக் கப்பல்களை இலங்கைக்குக் கொண்டுவர தடையில்லை எனவும் அவற்றின் உரிமையைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு முடியாது எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தக் கப்பல்களைக் கொண்டுவந்து ஏதேனும் நஸ்டங்கள் ஏற்பட்டால், அந்தக் கப்பல்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு செலுத்த நேரிடும் என சர்வதேச சட்டவல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அரசு தொடங்கியது எய்ட்ஸை கட்டுப்படுத்த ஓரின சேர்க்கையாளர் விடுதி

சீன அரசு தொடங்கியது எய்ட்ஸை கட்டுப்படுத்த ஓரின சேர்க்கையாளர் விடுதி

 

Swine Flu

தலி: எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, சீனாவில் அரசு சார்பில் ஓரினச் சேர்க்கையாளர் மதுபான விடுதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.சீனாவில் ஒரு லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளான 10 முன்னணி நகரங்களில் யுன்னான் மாநிலத்தில் உள்ள தலி நகரமும் ஒன்று. குறிப்பாக, புதிதாக உருவாகும் எய்ட்ஸ் நோயாளிகளில் மூன்றில் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர்களாக உள்ளதாக சீனா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த இந்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தலி நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதி ஒன்றை சுகாதார துறை தொடங்கி உள்ளது.
ÔÔதலி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்கப்படும். மேலும், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும்ÕÕ என இந்த விடுதியின் காப்பாளர் ஜாங் ஜியான்போ தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ஆண்டுதோறும் ரூ.1.4 லட்சம் செலவிடுகிறோம். புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஓரினச் சேர்க்கையாளர் விடுதியின் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவது குறைந்தால் இதுபோன்ற விடுதிகள் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்ÕÕ என சுகாதார துறையின் உதவி இயக்குநர் ஜியாங் அம்மின் தெரிவித்துள்ளார்.நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் இது எந்த வகையில் எய்ட்ஸைக் கட்டுப்படுத்த உதவும் என அனைவரும் விவாதம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

எந்தச் சதியாலும் சிதைக்கப்பட முடியாத புலம்பெயர் தமிழ் மக்கள் பலம்!

 

pulamமுள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிந்து விட்டது ஈழத் தமிழர் பலம் என்றே சிங்கள இனவாதமும் அதன் துணை சக்திகளும் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி மகிழ்ந்தன.

வன்னிப் பேரவலத்திலிருந்து தமது உறவுகளைக் காப்பாற்றத் திரண்டு எழுந்த தமிழர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும அகிம்சைப் போரைத் தொடுத்தனர். விடுதலைப் புலிகளை களத்தில் தோற்கடித்த்துவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் செயலிழந்து விடுவார்கள் என்ற சிங்களத்தின் கணிப்பு புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களால் பொய்யாகிப் போனது. சிங்கள தேசம் அடுத்த திட்டத்தினுள் நுழைந்தது. தேசியத் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார் என்று படம் போட்டுக் காட்டி வித்தை செய்தது. அதை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் ஒட்டுக் குழுக்கள் மட்டுமே. ஈழத் தமிழர்களின் இதய நம்பிக்கையை எந்த சக்தியினாலும் நொருக்கிவிட முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்படுத்தப்பட்ட மூன்று இலட்சம் உறவுகளையும் விடுவிக்கத் தமது போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப்படுத்தினார்கள். சிங்கள தேசம் அரங்கேற்றிய அத்தனை சதிகளையும் முறியடித்து புலம்பெயர் தமிழர்கள் வெகுண்டெழுந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளை இருபத்தொரு நாடுகளின் உதவியுடன் அழித்துவிட முடிந்த மகிந்த ராஜபக்ஷவால் புலம்பெயர் தேசங்களில் போர்க் கோலம் பூண்டு திரண்டு எழுந்த தமிழர் படையை நெருங்க முடியவில்லை. அசைக்க முடியாத பெரும் சக்தியாக எழுந்த தமிழர் படையைக் கண்டு சிங்களம் அச்சம் கொண்டது. சதிகாரர் கூட்டத்தால் புலம்பெயர் தமிழர்கள் குறி வைக்கப்பட்டார்கள்.

பல சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. தப்பிச் சிறைப்பட்ட போராளிகளையும் தளபதிகளையும் ஆயுதக் கருவிகளாக்கியது சிங்கள அரசு. கிழக்கில் கருணா போலவே வடக்கிலும் ஒரு கருணா தயாராக்கப்பட்டார். சும்மா சொன்னால் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் காலம் கனியும்வரை காத்திருந்தார்கள். அதற்காக மாவீரர் தினத்தைக் குறி வைத்து வேகமாகச் செயற்பட்டார்கள். மௌனிக்க வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றவோ அவர்கள் கல்லறைகளில் மலர் தூவி அழவோ முடியாமல் தவித்து நிற்க… புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தேசியக் கடமைக்காகத் திரண்டனர்.

உலகம் முழுவதும் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்வுகள் நடந்தேறிய மண்டபங்கள் எல்லாம் வரலாறு காணாத தமிழர் கூட்டங்களால் நிறைந்து வழிந்ததனால் அதன் ஏற்பாட்டாளர்களே திக்குமுக்காடிப் போய்விட்டார்கள். புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியைத் தடுக்கத் தயாராகியிருந்த சதிக் கரங்களை உசுப்பிவிட்டது சிங்கள தேசம். விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் தலையில் சிங்களத்தால் சிறை பிடிக்கப்பட்ட தளபதி ஒருவரின் பெயரில் அறிக்கை ஒன்றும், ஒளித்தட்டு ஒன்றும் உருவாக்கப்பட்டு இணையத் தளங்களுக்கும் ஒரு சில தமிழர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. தளபதி ராம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் சிங்கள அரசின் கொடூரங்கள் பற்றி ஒற்றைவரிச் செய்தி கூட எழுதப்பட்டிருக்கவில்லை.

தமிழீழம் -சிறிலங்கா என்ற தேசங்களைக் குறிக்கும் சொற்கள் தவிர்க்கப்பட்டு இலங்கை அரசு என்றும் இலங்கைத் தீவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷவினால் தயாரிக்கப்பட்ட இந்த மாவீரர் தின அறிக்கை பாரிஸ் லாசப்பல் கடைத் தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத வேளையில் விரைந்து விநியோகம் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்கள். பாவம்… அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை இது. சிங்களத்தின் சதியாளர்களின் வழக்கமான பாணியாக விநியோகிக்கப்பட்ட இந்த துண்டுப்பிரசுர அறிக்கையும் ஒளித் தட்டும் வர்த்தகர்களால் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இத்தனை காலமும், ஈழத் தமிழர்களை சுட்டெரிக்க ஏவப்பட்ட அத்தனை துரோகங்களும் அவர்களைப் புடம் போட்டதே தவிர பொசுக்கிவிடவில்லை.

தமிழ்த் தேசிய உணர்வு கொண்டு… விடுதலை வேட்கையோடு விடுதலைப் புலிகளுடன் இணைந்து தாய்நாட்டை மீட்கப் புறப்பட்ட ஈழத் தமிழர்களது வைராக்கியத்தை இந்தத் துரோக நெருப்புக்களால் சுட்டெரிக்க முடியவில்லை. மாறாக… விடுதலை வேண்டும் அந்த இதயங்களில் கோபக் கனலை மூட்டி வேகப்படுத்தியதே தவிர சோர்வுக்குள் தள்ளவில்லை. சிங்களஅரசின் ஏவல் பிசாசுகளாக்கப்பட்ட இந்தத் துரோகக் கூட்டங்கள் தம் சொந்தத் தமிழர்களின் துயரங்கள் தீர என்ன செய்தார்கள்? டக்ளசாலும், கருணாவாலும்… ஆனந்தசங்கரியாலும்… பிற ஒட்டுக் குழுக்களாலும் ஈழத் தமிழர்களுக்காக எதைச் சாதிக்க முடிந்தது? தப்புத் தாளங்கள் போடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் எதைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது?

மனிதாபிமானம் மிக்க உலக நாடுகளே கண்டிக்கும் தமிழின அழிப்பைத் தடுக்க முடிந்ததா? முள்வேலி முகாம் மக்களின் அவலங்களைப் போக்க முடிந்ததா? மீள் குடியேற்றம் என்ற பெயரில், அந்த மக்கள் அநாதைகளாக்கப்பட்டு… அடையாள அட்டைகளில் குறிக்கப்பட்டுள்ள வெகுகாலமாகத் தொடர்பே இல்லாத பிறந்த கிராமங்களில் நிர்க்கதியாய் விடப்படும் கொடுமைகளை எதிர்க்க முடிந்ததா? மனித இனமே வெட்கப்படும் இழிநிலை வாழ்க்கை வாழ்ந்து… சிங்கள அரசு வீசி எறிவதைப் பொறுக்கும் இவர்களால் ஈழத் தமிழர்கள் எதையும் பெறப் போவதில்லை.

சிங்கள தேசத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, மௌனிக்க வைக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் ஒற்றைப் பலமாக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவதை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நடைபெற்று முடிந்த மாவீரர் தின எழுச்சி உலகிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது. எங்கள் தேசம் விடியும்வரை… எங்கள் மக்கள் விடுதலை பெறும்வரை நாங்கள் ஒன்றாக… எங்கள் தேசியக் கொடியின்கீழ்… எங்கள் தேசியத் தலைவரின் ஆணையை ஏற்றுப் போராடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. அதற்காக இணைந்த எங்கள் கரங்களைப் பிரித்து விடவும் முடியாது என்பதை மாவீரர் தின அணிவகுப்பின் மூலம் சிங்கள அரசுக்கும் அதன் எடுபிடித் துரோகிகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-சி.பாலச்சந்திரன்
நன்றி:ஈழநாடு


source:tamilspy


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மவுஸ் பிடிக்க சில யோசனைகள்

 
 

 கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்னைகளுக்குக் காரணமாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக் கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury  என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.
1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.
3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல்பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக்கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.
4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும் படியாகவும் அமைக்கலாம். 
5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு, அது வளைவாக இருக்கும். இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்துவது இயற்கைக்கு முரணானது. 
6. நம்மில் பெரும் பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்னையை மேலும் பெரிதாக மாற்றி, ஏற்கனவே நாம் கம்ப்யூட்டர் மலரில் எழுதிய கார்பல் டனல் பிரச்னையை உருவாக்கும். 
8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பயன் படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில் கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்சினையைத் தரும்.
9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன்பாட்டிலிருந்து மாறுபட்டது. கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப்பகுதியில் வைத்து ஓய்வளிக்கலாம். ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப் பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப் படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப்புள்ளியாக வைத்து இயக்கப்பட வேண்டும். மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும். 
10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில், பெரும் பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ், சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக் கின்றன. இது போன்ற வளைவான மவுஸ், பயன்பாட்டிற்குச் சரியானதல்ல. இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. 
சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.
11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது. இது ஒரு சிந்தனைதான்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP