சமீபத்திய பதிவுகள்

என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன். சங்கீதம் 2:8

>> Monday, April 21, 2008

என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன். சங்கீதம் 2:8

Look Beyond The Package

ஒரு இளைஞன் தனது கல்லூரி பட்ட படிப்பை முடிக்கும் சமயத்தில் இருந்தான். அவன் பல மாதங்களாக ஒரு அழகிய sports கார் வாங்க வேண்டும் என்றும், அதை அவன் விரும்பும் dealer-இன் showroom-இலிருந்து வாங்க வேண்டும் என்றும் விரும்பினான். மேலும் அதை வாங்கி தர கூடிய பொருளாதார நிலைமை தனது தந்தைக்கு உண்டு என்பதையும் அறிந்து தனது விருப்பத்தை தந்தையிடம் சொன்னான்.

பட்டமளிக்கும் நாள் நெருங்கி கொண்டிருந்த வேளையில், அவன் தன் தந்தை தனக்காக வாங்க போகிற காருக்காக காத்துக்கொண்டு இருந்தான்.

இறுதியாக, பட்டமளிக்கும் நாளும் வந்தது. அன்று காலையில் மகனை தனது அறைக்கு தந்தை அழைத்தார். தந்தை அவனிடம் "இப்படி ஒரு நல்ல மகனை தேவன் எனக்கு தந்தபடியினால் நான் பெருமிதம் கொள்கிறேன்" என்றும், "நான் உன்னை எவ்வளவு நேசிக்கின்றேன் என்று தெரியுமா?" என்றும் சொன்னார். பின்னர் அவர் அவன் கையில் அழகான மூடப்பட்ட ஒரு சிறு பரிசு பெட்டியை கொடுத்தார்.

மிகவும் ஆர்வமாக, சற்று ஏமாற்றம் அடைந்தவனாக அந்த பெட்டியைத் திறந்தான். அதற்குள் அழகான தோல் கவரினால் மூடப்பட்ட ஒரு வேதாகமம்(lovely, leather-bound Bible) இருந்தது. அதின் மேலே அவனின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பரிசு பொருளாக இருந்தது.

இவற்றை பார்த்தவுடன் கோபமடைந்தவனாக "நீங்க வைத்துள்ள பல கோடி சொத்துக்களினால் இந்த Bible-ஐ மட்டும் தான் உங்களால் எனக்கு வாங்கி தர முடிந்ததா?" என்று சத்தமிட்டு கத்தி தனது தந்தையுடன் சண்டை போட்டான். அவர் வாங்கி தந்த Bible-ளும் வேண்டாம் அவரும் வேண்டாம் என்று சொல்லி கோபமடைந்தவனாக வீட்டை விட்டு வெளியேறினான்.

பல வருடங்கள் கழிந்தது. அவன் தனது business-இல் வெற்றியடைந்தான். அவன் அழகான வீட்டில், அருமையான குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அப்போது அவன் தனது தந்தை மிகவும் வயதாகி இருப்பார், அவரை விட்டு வந்தது என்னுடைய தவறு தான், அவரை எப்படியாகிலும் சென்று பார்க்க வேண்டும் என்று உணர்ந்தான். அவனுடைய பட்டமளிக்கும் நாளுக்கு பின்பு அவரை அவன் பார்க்கவே இல்லை.

அவன் ஊருக்கு சென்று அவரை பார்ப்பதற்கு தேவையான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது, அவனுக்கு ஒரு telegram வந்தது. அதில் அவன் தந்தை மரித்து விட்டார் என்றும், அவருடைய எல்லா சொத்துக்களையும் அவனுடைய பெயரில் எழுதி வைத்துவிட்டார் என்றும், அவன் உடனடியாக அங்கு வர வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அவனது பொறுப்பில் கொள்ள வேண்டும் என்றும் எழுதி இருந்தது.

அவன் தந்தையின் வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஒரு விதமான சோகமும், மனஸ்தாபமும் அவன் உள்ளத்தை நிரப்பினது. அவன் தன் தந்தையின் அறைக்குள் சென்று, அவரது முக்கியமான பொருள்களுக்கு இடையே தேடிய போது அவனுக்கு பரிசு பொருளாக தரப்பட்ட அந்த Bible இன்னும் புதிதாகவே காணப்பட்டது. இதை தானே அவன் வேண்டாம் என்று உதறி வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால் இப்போதோ அவன் அதை கண்ணீரோடு திறந்தான். ஒவ்வொரு பக்கங்களாக திருப்பினான். அதிலே அவன் தந்தை ஒரு வசனத்தை மிக கவனமாக கோடிட்டு இருந்ததை கவனித்தான். அந்த வசனம் மத்தேயு 7:11 "ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?".

அவன் அந்த வசனத்தை வாசித்து கொண்டிருந்த போது ஒரு கார் சாவி அந்த Bible-இன் பின்புற அட்டையில் இருந்து கீழே விழுந்தது. கீழே விழுந்த சாவியை எடுத்து பார்த்தான். சாவியுடன் இணைந்திருந்த tag-இல் இருந்த dealer-இன் பெயரை பார்த்தான். அந்த dealer-இன் sports காரை தான் அவன் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

மேலும் அந்த tag-இன் மேலிருந்த தேதியை பார்த்து அதிர்ந்தான். அந்த தேதி அவன் பட்டம் வாங்கின அதே நாளாக இருந்தது. அந்த tag-இல் வார்த்தையாக பின்வருவன எழுதப்பட்டிருந்தது: "முழுவதுமாக பணம் செலுத்தப்பட்டது"("PAID IN FULL")


இதே போல நாமும் பல நேரங்களில் தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்திருக்கிறோம். காரணம் என்ன? நாம் எதிர்பார்க்கின்றது போல அந்த package இல்லாமல் இருப்பதினால் தானே.


Do not spoil what you have by desiring what you have not; but remember that what you now have was once among the things you only hoped for...

IF YOUR GIFT IS NOT PACKED THE WAY YOU WANT IT, IT'S BECAUSE IT IS BETTER PACKED THAT WAY! ALWAYS APPRECIATE LITTLE THINGS; THEY USUALLY LEAD YOU TO ATTACHMENTS!


(Source: Forwarded mail in English. Here i translated it into Tamil.)
 

StumbleUpon.com Read more...

சதாம் செய்த இரு பெரிய தவறுகள்!

துதில்லி, ஏப். 20: கடைசிவரை அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாத இரும்பு மனிதராகத் திகழ்ந்த இராக் அதிபர் சதாம் ஹுசைன் மீது அமெரிக்காவுக்கு கோபம்வர அவர் செய்த இரு பெரும் தவறுகளே காரணம் என இராக்கிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ரஞ்சித்சிங் கல்ஹா தெரிவித்துள்ளார்.

அவர் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள, "தி அல்டிமேட் பிரைஸ்' என்ற புத்தகத்தில் இந்தத் தகவலை அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்க டாலரின் புழக்கத்தைக் கடுமையாக எதிர்த்துவந்த சதாம் ஹுசேன், 2000-ம் ஆண்டு தங்களது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் பெட்ரோலியத்துக்கு அமெரிக்க டாலரை வாங்க மறுத்தார்.

அத்துடன் உடனடியாக 10 பில்லியன் வைப்பு நிதியாக இருந்த அமெரிக்க டாலரை அப்படியே யூரோவுக்கு மாற்றி மேலும் தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தார். இதனால் சதாம் ஹுசேன் மீது அமெரிக்காவின் ஆத்திரப்பார்வை திரும்பியது.

இராக் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியதும் அவ்வழியை ஈரானும் பின்பற்றியது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளும் இராக்கின் அமெரிக்க டாலர் புறக்கணிப்பு வழியை பின்பற்றத் தொடங்கின. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துடன் சதாமின் மீதான கோபத்தையும் அதிகரித்தது.

சதாமின் இதுபோன்ற நடவடிக்கையை தங்களுக்கு அவர் விடுக்கும் நேரடி சவாலாவும் அமெரிக்கா ஒருகட்டத்தில் எண்ணத் தொடங்கியது. இதன்பின்னரும் சதாமை வாலாட்டவிட்டால் அது தனக்கு பெரும் துன்பமாகவே முடியும் என்றும் அமெரிக்கா கருதியது.

அன்று முதல் சதாமுக்கு எதிராக அமெரிக்கா தருணம் பார்த்து காய் நகர்த்த ஆரம்பித்தது. இருப்பினும் இதற்கெல்லாம் சதாம் ஹுசேன் அஞ்சவில்லை. தனது அமெரிக்க டாலர் நிராகரிப்பை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

இரண்டாவது தவறு:இதுபோன்ற நிலையில் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தும் விதமாக சதாம் ஹுசேன் மற்றொரு செயலில் ஈடுபட்டார். தங்களது நாட்டில் அமெரிக்காவை சாராத எண்ணெய் கம்பெனிகளுக்குதான் ஒப்பந்தத்துக்கு அனுமதி என்பதுதான் அது. சதாமின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஒருகணம் தூக்கிவாறிப்போட்டதுடன் அவர் மீதான கோபத்தை கடுமையாக்கியது.

எனினும் இதனால் சதாமுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அவரை அனுசரித்து போகவேண்டிய கட்டாய நிலைக்கே அமெரிக்கா ஆளாகியிருந்தது. காரணம், தங்களது பெரும்பகுதி எரிபொருள் தேவைக்கு அமெரிக்கா இராக்கை சார்ந்திருந்ததே ஆகும்.

இருப்பினும் சதாம் ஹுசேனை பழி தீர்க்கவேண்டும் என்பதில் மட்டும் அமெரிக்கா குறியாக இருந்தது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டது என ரஞ்சித்சிங் கல்ஹா, தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20080420143943&Title=International+News&lTitle=NoY%FARNf+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=

StumbleUpon.com Read more...

அரவானிகள் அனைவரும் எனது சகோதரிகள் - தமிழக முதல்வர் கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்திஅம் மாள்

 


விழுப்புரம், ஏப். 21: அரவானிகள் அனைவரும் எனது சகோதரிகள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்திஅம் மாள் கூறினார்.

2008 கூவாகம் சித்திரைத் திருவிழாவையொட்டி தாய் திட்டம்-தாய் விழுதுகள் இணைந்து நடத்திய அரவானிகள் எழுச்சிப் பேரணி சங்க மம் என்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக் கூட்டத்துக்கு முன் தாய் திட்ட இயக்குநர்- லட்சுமிபாய் மற்றும் பல்வேறு பகுதி செய்தியாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அரவானிகள் பிரச் னைகள், தற்போது அவர்களின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் நடைபெற்ற அ வானிகள் சங்கமம் கூட்டத்தில் தலைமை தாங்கி தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்திஅம்மாள் பேசியது:

அரவானிகளாகிய நீங்கள் எனது சகோதரிகள். உங்களிடம் அனைத்து திறமையும் உள்ளது. நீங்கள் முயன்றால் முன்னேறலாம். உங்களது முன்னேற்றத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.


இக் கூட்டத்துக்கு முன் ராஜாத்தி அம்மாளை மனித உரிமை இயக்கத் தின் தலவைர் வழக்கறிஞர் ஜோஸ், வழக்கறிஞர் லூசி, அரவானிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ராதா, டயானா, ரம்யா உள்ளிட்ட 12 பேர் சந்தித்தித்து மனு அளித்தனர்.


அதில் அரவானிகளுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்துதல், கல்வி, வேலைவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட பிரச்னை ஆகியவை குறித்து சில கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளனர்.


 
நங்ய்க் ற்ட்ண்ள் ல்ஹஞ்ங் ற்ர் ஹ்ர்ன்ழ் ச்ழ்ண்ங்ய்க் 
மேலும் செய்திகள்
 
."அரசு ஏன் மெüனம் காக்கிறது': ஜெயலலிதா கேள்வி

.ஜெயலலிதாவுக்கு 20 அம்ச கூடுதல் பாதுகாப்பு: உயர் நீதிமன்றத்தில் மனு

.மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு: சாலை மறியல்; தடியடி

.சிலைகளுக்கான பாதுகாப்பு பரிந்துரைகள் அமலாக்கப்படுமா?

.அதிரடிப்படை தாக்குதல்; பாதிக்கப்பட்டவர்களில் விடுபட்டோருக்கும் நிவாரணம்: முதல்வர் கருணாநிதி

.சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

.காலையில் அதிமுக கோரிக்கை; மாலையில் அமைச்சர் ஆணை

.கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள்: இடதுசாரிகளுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

.சாதனைகளை விலைவாசி உயர்வு மறைத்துவிடக் கூடாது: வீரமணி

.வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் 50 லட்சம் பேர்!

.பிரியங்காவின் மனிதநேயத்தை தமிழக காங்கிரஸôர் பின்பற்றவேண்டும்: திருமாவளவன்

.இளம் சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ

.மகளிர் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம்: வருகிறது சட்டம்

.மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

.சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: மார்க்சிஸ்ட் கோரிக்கை

.ரூ.10 ஆயிரம் கோடி வன்னியர் சொத்துகளை ஒருங்கிணைத்திட ஜெகத்ரட்சகன் கோரிக்கை

.அனைத்து ஊர்களிலும் நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

.தீவிரவாதி நவீன் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக் கோரி மனு

.ஆள்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு

.முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

.நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: அமைச்சர் வேலு விளக்கம்

.ரயில் பயணிகள் எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை

.குழந்தைகளை பள்ளியை விட்டு நீக்கியதால் ரூ. 20 லட்சம் இழப்பீடு கேட்டு மனு

.வள்ளியூர் கோயிலில் சிலைகள் உடைப்பு

."மூத்த குடிமக்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ்'

."சமூக நலத்துறையில் 10,000 பேருக்கு வேலை'

.திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பரிசீலனை

.உப்பிலியப்பன் கோயில் ராமநவமி: பொதிகையில் நேரடி ஒளிபரப்பு
 
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080421174649&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

StumbleUpon.com Read more...

ஸ்பெயின் -ஆண்களை மிஞ்சிய பெண்கள்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/21/006/21_04_2008_006_003.jpg

StumbleUpon.com Read more...

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த புரூஸ் லீ யின் மரணம் மர்மம் என்ன?
Written by: JBR

ஜுலை 20 புரூஸ் லீயின் முப்பத்து நான்காவது நினைவு தினம். தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம்.

புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு சினிமாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் என்பதே சினிமா கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 பிரேம்களாக மாற்றியமைத்தனர்.

1940 நவம்பர் மாதம் 27-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் Grace ஒரு கத்தோலிகர்.

புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.
புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை La Salle College-ல் (Secondary School) கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி Linda Emery-ஐ சந்தித்தார்.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'Batman' படத்தின் தயாரிப்பாளர் William Dozier பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது 'The Green Hornet', 'Iron Side', 'Here Come the Brides' ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'Crawn Colony Cha Cha' சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.
புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'Way to the Dragon' படம் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆஃப் தி டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'Way to the Dragon' படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் தி ட்ராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே மிரட்டியது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை 'என்டர் தி ட்ராகன்' ரிலீஸாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.

கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.

புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.

புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர் முன் கோபத்துடன் நடந்து கொண்டது ஏராளமான விரோதிகளை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்களை பறி கொடுப்பதும் சாதாரணம்.

திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.

ஒரு கலையை எப்படி நேசிப்பது, அதனை எங்ஙனம் உச்சத்துக்கு கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொள்ளும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார் புரூஸ் லீ. அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் அமர்ந்த நாற்காலி காலியாகவே உள்ளது. அதில் அமரும் தகுதியுள்ள ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்க போவதில்லை!


http://tamil.cinesouth.com/specials/specials/bruceleetam.shtml

StumbleUpon.com Read more...

வாரத்தில் 9 பேரை காவு வாங்கும் நாடு

http://epaper.dinamalar.com/Web/Article/2008/04/21/006/21_04_2008_006_012.jpg

StumbleUpon.com Read more...

புரபஸரும்,மாணவர்களும்.

புரபஸரும்,மாணவர்களும்.

கல்லூரி ஒன்றில் புரபஸர் பிராக்டிக்கல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அவர் முன் இருந்த ஒரு டேபிளின் மீது ஒரு கண்ணாடி கிளாஸ் இருந்தது.அதில் கருப்பாக ஏதோ ஒன்று இருந்தது.மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக அமர்ந்திருந்தனர்.


புரபஸர் பேச ஆரம்பித்தார்"ஹலோ டியர்ஸ் எப்படி இருக்கிறீர்கள்.இன்றைக்கு நாம் ஒரு வித்தியயசமான பிராக்டிக்கல்ஸ் செய்யப் போகிறோம்.நம்முடைய சகிப்புத்தன்மை மட்டும் அல்ல நம்முடைய கூர்மையான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று இன்றைக்கு கற்றுக்கொள்ளப் போகிறோம்.


மாணவர்கள் உற்சாகமாக கோரசாக "ஓகே" சார்.


புரபஸர் மீண்டும்"டியர் ஸ்டூடண்ட் இந்த கிளாசில் சாக்கடை நீர் உள்ளது.இதை நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.அதன் பின் இந்த கிளாசை உங்கள் அனைவரிடமும் தருவேன்.நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்ய வேண்டும்.சரியா?


கிளாசை எடுத்து மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக புரபசர் தன் விரலை அந்த கிளாசில் உள்ள நீரில் முக்கி எடுத்து தன் நாக்கில் வைத்தார்.அனைத்து மாண்வர்களும் முகம் சுளித்துக்கொண்டனர்.கிளாஸ் மாணவர்களிடம் வந்தது.


அனைத்து மாணவர்களும் புரபஸர் என்ன செய்தாரோ அதை அப்படியே முகம் சுளித்துக்கொண்டு செய்தனர்.இரண்டு மூன்று மாண்வர்கள் வாந்தி எடுக்கவும் செய்தனர்.


மாணவர் தலைவன் எழந்தான் சார் நீங்கள் இப்படி செய்தது நியாயமில்லை.எப்படி இந்த சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொல்லலாம் என்று கேட்டான்.


உடனே புரபஸர் எழுந்து அந்த மாணவனை அமரச் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்"மை டியர் ஸ்டூடண்ட் உங்களை யார் சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொன்னது.நான் செய்வது போல் செய்ய சொன்னேன் அவ்வளவுதான்.நான் சாக்கடை நீரை நாக்கில் வைக்கும் படி உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அறிவில் குறைவுள்ளவனா?நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவில்லை என்பது இதில் இருந்து புரிந்து கொண்டேன்.நான் என்ன செய்தேன் தெரியுமா?கிளாசில் இருந்த தண்ணீரை என் விரலால் நனைத்த்து உண்மைதான்.ஆனால் என் நாக்கில் வைத்த விரல் அந்த நீரில் நனைத்த விரலை இல்லை.மற்றொரு விரலை"என்று கூறினார்.


மாணவர்கள் அனைவரும் வாய் அடைத்து போனார்கள்.

http://www.aanthaiyaar.blogspot.com/

StumbleUpon.com Read more...

ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.

கழுதையும்,மனிதர்களும்

ஒரு தந்தையும்,மகனும் பட்டணத்துக்கு போய் ஒரு கழுதை வாங்கி வந்தனர்.வரும் வழியில் தந்தை கழுதை மேல் ஏறிக்கொண்டார்.

சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் போயிக்கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் "என்ன கொடுமை இது சின்ன பையனை நடக்க வைத்து விட்டு இந்த கிழவன் சொகுசாக போகிறான் பாரு என்று திட்டிக்கொண்டே போனான்.

உடனே தகப்பன் கழுதையில் இருந்து இறங்கி தன் மகனை கழுதையில் ஏற்றினான்.சிறிது தூரம் போனவுடன் இன்னொருவன் சொன்னான் பாவம் கிழவனை நடக்கவிட்டு இந்த சின்ன பையன் பாரு சொகுசா போறான்.இரண்டு பேறும் ஏறிப்போக வேண்டியது தானே என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

உடனே அந்த தகப்பனும் மகனுடன் சேர்ந்து கழுதையில் ஏறிக்கொண்டார்.சிறிது தூரம் சென்ற உடன் இன்னொருவன் சொன்னான் படுபாவிகள் பாவம் அந்த வாயில்லா ஜீவனை எப்படி சித்ரவதை செய்கிறார்கள் என்று.

தகப்பனுக்கும்,மகனுக்கும் இது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.உடனே கழுதையில் இருந்து இறங்கி இருவரும் நடந்தே வந்தனர்.சிறிது தூரம் சென்றவுடன் வேறு ஒருவன் வந்து சொன்னான் " காசு கொடுத்து கழுதையை வாங்கி அதில் ஏறிப்போகாமல் நடந்து செல்கிறார்கள் முட்டாள்கள் என்று.

என்ன நண்பர்களே ஒன்னுமே புரியவில்லையா?ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.நாம எதை செய்தாலும் குறைதான் சொல்லுவார்கள்.ஆகவே மற்றவர்கள் சொல்லும் அனைத்தையும் நடைமுறைப்படுத்தக்கூடாது

http://www.aanthaiyaar.blogspot.com/

StumbleUpon.com Read more...

குத்துச்சண்டையும்,ராகுல்காந்தியும் பரபரப்புhttp://epaper.dinamalar.com

StumbleUpon.com Read more...

அம்மண(நிர்வாண) சாமியாரிடம் கவர்னர் ஆசீர்வாதம்
http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/04/21/002/21_04_2008_002_004_001.jpg

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP