உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!
இதற்கு பீஜே அவர்கள், "எழுத்து விவாதத்தை நான் ஏற்கமாட்டேன், அப்படி ஏற்கவேண்டுமென்றாலும், விவாதம் புரிபவர் நேரடியாக வரவேண்டும், விலாசம் தரவேண்டும், தந்தையின் பெயரை தரவேண்டும், அதன் பிறகு தான் 'விவாதம் எழுத்தா... நேரடியா' என்று தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்". மட்டுமல்ல, இஸ்லாமிய அறிஞர்களுக்கு அருமையான ஒரு ஆலோசனையையும் பீஜே அவர்கள் கொடுத்துள்ளார்.
ஒரு மூத்த இஸ்லாமிய ஊழியர் எப்படியெல்லாம் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை இப்போது காணலாம்.
பீஜே அவர்கள் எழுதியது
இதற்கு நமது பதில்
கடிதம் மூலம் விவாதம் என்றாலும் நேரடி விவாதம் என்றாலும் விவாதிப்பவர் யார் என்பது தெரிய வேண்டும். ஏதோ ஒரு பெயரில் ஒளிந்து கொண்டு எதையாவது எழுதுபவனுடன் விவாதிப்பது நிழலுடன் விவாதிப்பதாகும்.
ஈஸா குர்ஆன்
பீஜே அவர்களே நான் "எதையாவது" எழுதுபவன் அல்ல, உண்மை இஸ்லாமை தமிழ் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இஸ்லாம் குறித்து நீங்கள் உங்கள் சொற்பொழிவுகளில் சொல்லாத, சொல்லமுடியாத விஷயங்களை நான் உங்கள் ஆதார நூல்களிலிருந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் (இஸ்லாமியர்கள்) எப்படி விமர்சித்தாலும் மற்றவர்கள் நல்லவர்களாக நடந்துக்கொள்வதால் தைரியமாக நீங்கள் மேடையில் பேசுவீர்கள். ஆனால், எங்கள் நிலை இப்படி இல்லையே.
"எங்கள் உயிரினும் மேலான எங்கள் நபிப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்றுச் சொல்லி, வன்முறையில் ஈடுபட காத்திருக்கும் அமைதி மன்னர்கள் சிலர் இஸ்லாமில் இருப்பதால் தான், முகத்தை மறைத்து எழுதவேண்டியுள்ளது".
இஸ்லாமியர்களின் வெறி எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பாருங்கள்.
பாங்களாதேஷ் நாட்டில் ஒரு இஸ்லாமியர் ஒரு நகைச்சுவை கார்ட்டூனை வரைந்தார், தான் வேலை செய்யும் பத்திரிக்கையில் பிரசுரித்தார். அதாவது ஒரு சிறுவன் கையில் பூனையை வைத்திருப்பான், அப்போது ஒரு இஸ்லாமியர் அவரிடம் இந்த பூனையின் பெயர் என்ன என்று கேட்டபோது, அந்த சிறுவன் இதன் பெயர் "முஹம்மது பூனை" என்று சொன்னானாம். அதாவது, இஸ்லாமியர்களில் அனேகர் தங்கள் பெயர்களில் "முஹம்மது" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது வழக்கமாக இருப்பதால், அந்த சிறுவன் அப்படிச்சொன்னான்.
நடந்தது என்ன? வன்முறை வெடித்தது. கார்ட்டூன் வரைந்த அந்த வாலிபன் மன்னிப்பு கோரினான், நான் வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறினான், அந்த செய்தித்தாளும் மன்னிப்பு கோரியது. வன்முறை குறையவில்லை, அதனால் அந்த வாலிபனை காவலர்கள் கைது செய்து பாதுகாப்பு வேண்டி சிறையில் அடைத்தாரகள்.
இந்த கார்ட்டூனை நைஜீரியாவில் சில அமைதி மன்னர்கள் இணையத்தில் கண்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வேறு கண்டத்தில் வாழும் நைஜீரிய கிறிஸ்தவர்களை தாக்கி கொன்றார்கள்.
புத்தி என்று ஒன்று இருந்தால், ஒரு இஸ்லாமியரால் பாங்களாதேஷ் நாட்டில் தவறுதலாக வரைந்த ஒரு கார்டூனுக்காக நைஜீரியாவில் கொலை செய்வார்களா? வன்முறையில் ஈடுபடுவார்களா?
இந்த ஒரு உதாரணமே போதும் என்று நினைக்கிறேன்.
பீஜே அவர்கள் எழுதியது
விவாதத்தில் ஒழுங்காக வாதங்களை எடுத்து வைக்கா விட்டால் அத்னால் கேவலம் வரும் என்ற் அச்ச்ம் தான் ஒருவனை சரியாக விவாதிக்க வைக்கும். உண்மையின் அடிப்படையில் விவாதிக்க வைக்கும். முகமூடி போட்டுக் கொண்டவனுக்கு இந்த நிலை இல்லை.
ஈஸா குர்ஆன்
பீஜே அவர்களே! ஒருவன் நேர்மையானவனாக இருந்தால், உண்மையுள்ளவனாக இருந்தால், எழுத்து மூலமாக பொய்களை வீசவேண்டிய அவசியமென்ன? ஆனால், நேர்மையில்லாதவன் தன் பிழைப்பிற்காக பொய்களையும், நீதியை அநீதி என்றும் அநீதியை நீதி என்றும் மேடையிலும் பேசுவான். ஈஸா குர்ஆன் தளம் மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறது. அனேக கட்டுரைகள் உள்ளன. இதே போல, ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளமும் உள்ளது, இன்றுவரை கிட்டத்தட்ட 100 கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு நான் சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் எங்கள் கட்டுரைகளை பதித்து, அதற்கு பதில் தாருங்கள். அப்போது எனக்கு அவமானம், கேவலம் தானாக வரும். பதில் கொடுக்க தயாரா? எங்கள் தளங்களின் தொடுப்புக்களை கொடுக்க தயாரா?
நான் பதிக்கும் கட்டுரைகளில் சொல்லப்படும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை அவைகளை படிப்பவர்களுக்கு புரியும். மற்றும் எங்கள் கட்டுரைகளில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை உங்களைப் போன்றவர்கள் தங்கள் தளங்களில் எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்காமலேயே பதில் எழுதும் நிலையை கவனித்தாலும் தெரிந்துவிடும்.
பீஜே அவர்கள் எழுதியது
எனவே ஈஸா நபிக்குத் தான் தந்தை இல்லை என்பதை நம்ப முடியும். அதற்காக இவர்களுக்கும் தந்தை இல்லையா? முகவ்ரி இல்லையா? எழுத்து மூலம் விவாதிப்பது என்றாலும் அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
ஈஸா குர்ஆன்
ஒருவரின் முகவரி தெரிந்தால் தான் நீங்கள் நம்புவீர்களோ...
ஒருவரின் முகத்தை பார்த்தால் தான் அவர் பேசுவதில் உண்மை இருக்கும் என்பதை நம்புவீரகளோ?
ஒப்பந்தம் என்றால் கட்டுரைகளிலும், மெயில்களிலும் எழுதி அனுப்பிகொண்டு, அவைகளை தங்கள் தளங்களில் பதித்து அதன் படி நடந்துக்கொண்டால் அது ஒப்பந்தமாகாதோ?
ஒரு மனிதனுக்கு அவன் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளே போதும், உண்மையுள்ளவனாக நடந்துக்கொள்வதற்கு. நேர்மை மேடையில் மட்டுமல்ல, எழுத்துக்களிலும் இருக்கவேண்டும்.
நீங்கள் எத்தனை மேடையில் பேசியிருக்கிறீர்கள், எவ்வளவு பொய்யையும் புரட்டையும் பேசியுள்ளீர்கள், நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் பயந்து நெர்மையானவராகவா நடந்துக்கொண்டீர்கள்? வாய்க்கு வந்தபடி பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறியுள்ளீர்கள். சரியாக ஆராயாமல் உங்கள் உள்ளத்தில் பட்டதெல்லாம் சொல்லியுள்ளீர்கள், கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பை விட்டுவிடுங்கள். கர்த்தருக்கு சித்தமானால், இனி உங்களின் நேர்மையை சோதிக்கும் பதில்கள் உங்கள் வரிகளிலிருந்தே வெளிக்காட்டுவோம். கிறிஸ்தவம் பற்றியும், இயேசு பற்றியும் நீங்கள் கூறியுள்ள, எழுதியுள்ள அனைத்து விமர்சனங்களுக்கும், பொய்களுக்கும் பதில்கள் சொல்லப்போகிறோம், அப்போது தெரியும், யார் உண்மை பேசுகிறார்கள் யார் பொய்யை பேசுகிறார்கள் என்று.
முஸ்லீம்கள் நேர்மையானவர்களாக இருந்தால், வன்முறையில் ஈடுபடாதவர்களாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் ஏன் மறைந்து இருந்து எழுதவேண்டும்?
பீஜே அவர்கள் எழுதியது
தன்னை அடையாளம் காட்டி விட்டு விவாதம் பற்றி பேசட்டும். அதன் பின் எழுத்து விவாதமா நேரடி விவாதமா என்பது பற்றி முடிவு செய்யலாம் என்று பதில் கொடுங்கள்.
ஈஸா குர்ஆன்
உங்களின் இந்த வரிகள் மூலமாகவே தெரிந்துவிடுகிறது நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று, விவாதம் புரிய அல்ல, விவகாரம் செய்ய.
பீஜே அவர்கள் எழுதியது
இந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
ஈஸா குர்ஆன்
நல்ல ஆலோசனை.
ஆனால், நாங்கள் அப்படி இல்லை, ஒருவர் விமர்சித்தால் அவர் பெயரைச் சொன்னாலும் பதில் தருவோம், பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் பதிலைத் தருவோம், அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரித்து மண்ணோடு மண்ணாக மாறி அழிந்துவிட்டவராக இருந்தாலும் பதிலைத் தருவோம்.
ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றுச் சொன்னாளாம். அது போல தான் உங்கள் வாதம் உள்ளது. தவறாக யாராவது விமர்சித்தால் உடனே அதற்கு பதில் கொடுத்து சத்தியத்தை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, பெயர் தெரிந்தால் தான் முகம் காட்டினால் தான் நான் பதில் கொடுப்பேன் என்பதிலிருந்து தெரிந்துவிடுகிறது.... இஸ்லாமை எழுத்துக்கள் மூலமாக காப்பாற்ற முயற்சிப்பது மிக மிக கடினம் என்று.
பீஜே அவர்கள் எழுதியது
பைபிளீல் உள்ள செக்ஸ் கதைகள், ஒருத்தன் பொண்டாட்டியை ஒருத்தன் எடுத்துக் கொள்வது, இன்னும் சொல்லி முடியாத அசிங்கங்களைக் கேட்டு இதர்கு பதில் சொல் என்று கேடக் வேண்டும். பாதிரியார் லீலைகைள் க்ன்னிகாஸ்திரி லீலைகள் குறித்து ஆதாரப்பூர்வமான் செய்திகளை எழுதி கடுமையாக் விமர்சிக்க வேண்டும்.
ஈஸா குர்ஆன்
பீஜே அவர்களே... அவ்வளவு என்ன அவசரம் சொல்லுங்கள். எழுதிய நான்கு வரிகளில் ஐந்து எழுத்துபிழைகளா?
நிதானமாக எழுதி, மறுபடியும் ஒரு முறை படித்துப்பார்த்து பதியுங்கள். எழுத்துப் பிழை வருவது சகஜம் தான் ஆனால், குர்ஆனை மொழியாக்கம் செய்த, அனேக புத்தகங்களை எழுதிய, அனேக மேடைகளைக் கண்ட உங்கள் வரிகளிலுமா இவ்வளவு பிழைகள்?
நேற்று முளைத்த காளானைப்போல உள்ள என்னைப் போன்றவன் எழுதுவதில் எழுத்து பிழை இருந்தால், சகித்துக்கொள்ளலாம். உங்கள் வரிகளிலுமா? ஒரு மூத்த இஸ்லாமிய அறிஞரா இப்படி எழுதுகிறார்... ஆச்சரியமாக உள்ளது.
அடுத்ததாக, செக்ஸ் பற்றி, லீலைகள் பற்றி சொல்லியுள்ளீர்கள். முதலில் உங்கள் முஹம்மது பற்றி எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு எழுதுங்கள், குர்ஆன் பற்றி தெரிந்துக்கொண்டு எழுதுங்கள். இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்வேன், ஏனென்றால் குர்ஆனை மொழியாக்கம் செய்த ஒரு பெரிய ஊழியரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்ற உணர்வு இருப்பதால் நேரம் வரும் போது, தகுந்த இடத்தில் பதிலைத் தருவேன்.
(வாசகர் கவனத்திற்கு: குர்ஆனை மொழியாக்கம் செய்து விளக்கவுரை கொடுத்தவரிடம்... குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்பது அதிகப்பிரசங்கித் தனம் என்று எண்ணாதீர்கள், காரணம் அவரது குர்ஆன் விளக்கவுரையில் அவர் கூறிய விவரங்களுக்கு நான் விளக்கமளித்த பிறகு வாசகர்கள் புரிந்துக்கொள்வீர்கள்).
பிறகு பாதிரிகளைப் பற்றி எழுதியுள்ளீர்கள்... என்ன செய்வது பீஜே அவர்களே, கிறிஸ்தவ பாதிரிகளிலும், கன்னியாஸ்திரிகளிலும் முஹம்மதுவை பின்பற்றி நடப்பவர்கள் சிலர் இருந்துவிடுவதுண்டு... என்ன செய்வது!
அப்படிப்பட்டவர்களைக் கொண்டு கிறிஸ்தவத்தை எடைபோடுவது சரியா...? ஆனால், உங்கள் முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாமை எல்லாரும் நன்றாக எடைப்போடலாம்...
பீஜே அவர்கள், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவத்தை கடுமையாக விமர்சியுங்கள் என்று உரிமையை கொடுத்துள்ளார். எனவே, இதே உரிமையை கிறிஸ்தவர்களும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஆதார பூர்வமான விவரங்களுடன், குர்ஆன் ஹதீஸ்களின் துணையுடன் "இஸ்லாமை கடுமையாக விமர்சிக்கலாம்". ஏனென்றால், இஸ்லாம் உரிமைகளை சமமாக எல்லாருக்கும் தரும் மார்க்கம் தானே!?! எங்களுக்கு உரிமையை கொடுத்தமைக்காக பீஜே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பீஜே அவர்கள் எழுதியது
எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.தூண்டி விடும் பாதிரிகள் கூட்டத்துக்கு இவர்கள் யார் என்பது தெரியும். தம்து மத நம்பிக்கையே ஆட்டம் காணும் போது அடங்குவார்கள். விரைவில் இந்தப் பணீயையும் நாம் செய்ய விருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
ஈஸா குர்ஆன்
இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று.
எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.
உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....
கேளுங்கள் பீஜே அவர்களே...
கேள்விகளை கேளுங்கள்...
எதை வேண்டுமானாலும் கேளுங்கள்...
ஆனால், ஜாக்கிரதை.......
நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...
என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
முடிவுரை:
ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்...
நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்".
எனவே, பீஜே அவர்கள் செய்வேன் என்றுச் சொன்ன "அந்த பணியை" அவர் செய்ய வேண்டும்...அப்போது தான் எங்கள் பணியை நாங்கள் செய்யமுடியும். உங்கள் கேள்விகளை எதிர் நோக்கியிருக்கும்.... உங்கள் வாசகன் ஈஸா குர்ஆன் உமர்.