சமீபத்திய பதிவுகள்

சச்சின் சதம்: இந்தியா பதிலடி

>> Monday, January 18, 2010

  

சிட்டகாங்: சிட்டகாங்கில் நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் சச்சின், சதம் அடித்து ஜொலித்தார். இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. "டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன்களை விரைவில் இழந்துள்ள வங்கதேச அணி, முதல் இன்னிங்சை திணறலுடன் துவக்கியுள்ளது. 


வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்டகாங், ஜோகர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் சேவக் (52), சச்சின் அரைசதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து இருந்தது. சச்சின் (76), இஷாந்த் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் நாள் போன்று, இரண்டாம் நாளான நேற்றும் காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. 


சச்சின் சதம்: தனது முந்தைய நாள் ஸ்கோருடன் மேலும் ரன்எதுவும் சேர்க்காத நிலையில், இஷாந்த் சர்மா (1) வீழ்ந்தார். தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஹுசைனின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து சதம் கடந்தார். இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் சச்சின் எடுத்த 44 வது சதம். 


இந்தியா "ஆல் அவுட்': சச்சினுடன் இணைந்த ஸ்ரீசாந்த், சற்று தாக்குப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும் (1) சாகிப் அல் ஹசன் சுழலில் சிக்கி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சச்சின் 105 ரன்னுடன் (2 சிக்சர், 11 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளர் சகாதத் ஹுசைன் இருவரும், தலா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.


சூப்பர் துவக்கம்: பின் முதல் இன்னிங்சை துவங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ருல் கெய்ல் இருவரும் "சூப்பர்' துவக்கம் கொடுத்தனர். ஜாகிர் கானின் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் தமிம் இக்பால். இம்ருல் கெய்ஸ், தன்பங்குக்கு 2 பவுண்டரி அடித்து ஜாகிரை பதம் பார்த்தார். 


ஜாகிர் அபாரம்: முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், ஜாகிர் பந்தில் இம்ருல் கெய்ஸ் (23) அவுட்டானார். அடுத்து வந்த நபீஸ் (4) இஷாந்த் சர்மாவின் வேகத்துக்கு பலியானார். அதிரடியில் அசத்திய தமிம் இக்பாலை (31) ஜாகிர் போல்டாக்கினார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து திணறத்துவங்கியது. 
இந்நிலையில் அதிக பனி மூட்டத்தால் வெளிச்சமின்மை ஏற்பட, போட்டி நிறுத்தப்பட்டது. 


இந்தியா பதிலடி: முதல் நாளில் பேட்டிங்கில் சொதப்பி, குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இந்திய அணி, நேற்று பவுலிங்கில் அசத்த துவங்கியுள்ளது. வங்கதேசத்தின் "டாப் ஆர்டர்' வீரர்களை வெளியேற்றிய நமது பவுலர்கள், இன்று "மிடில் ஆர்டரையும்' உடனடியாக சிதறச் செய்தால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும். 
------


நேற்றைய துளிகள்...
*இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக நேற்று தனது குறைந்தபட்ச ஸ்கோரை (243) பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2000ல் நடந்த தாகா டெஸ்டில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. 
*வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் 6 வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். 
* வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் சகாதத் ஹுசைன் 3 வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
* இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (53) குவித்த ஜோடி என்ற பெயரை தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் தட்டிச் சென்றனர். இதற்கு முன்பு கடந்த 2005ல் நடந்த டெஸ்டில் நபீஸ் இக்பால், ஜாவெத் ஓவர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்து இருந்தனர்.
----


சச்சின் சாதனை சதம்
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நேற்று சர்வதேச டெஸ்ட் அரங்கில் 44வது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக சதம் எடுத்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (39) உள்ளார்.


-------


வீணான நேரம்
 சிட்டகாங்கில் நடக்கும் முதல் டெஸ்டில் பனிமூட்டத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் முதல் நாளில், 70 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட போட்டி, நேற்றும் 269 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. நேற்று 24.5 ஓவர்கள் தான் வீசப்பட்டது. கடந்த இரண்டு நாளில் 180 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில், 88 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டுள்ளது. அதாவது சுமார் 6 மணி நேர (339 நிமிடம்) ஆட்டம் பனியின் காரணமாக பாதித்துள்ளது.
----


அதிக ரன்கள் எடுப்போம்
போட்டி குறித்து வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஜமை சிட்டன்ஸ் கூறுகையில்,"" இந்திய அணியின் "டெயிலெண்டர்களை' விரைவாக வெளியேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் 3 பேட்ஸ்மேன்களை விரைவாக இழந்தாலும், மீதமுள்ள வீரர்கள் இன்று சிறப்பாக பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார். 
---------------


பவுலிங் செய்த தோனி
முதுகு வலியால் இந்திய கேப்டன் தோனி வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. நேற்று வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்ட போது, மைதானத்தில் தோனி, பவுலிங் பயிற்சி செய்தார். இந்திய வீரர்கள் காம்பிர், சேவக் இருவருக்கும் பந்து வீசினார். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
---


ஸ்கோர்போர்டு


முதல் இன்னிங்ஸ்


இந்தியா
காம்பிர்(கே)முஷ்பிகுர்(ப)ஹுசைன் 23(44)
சேவக்(கே)தமிம் இக்பால்(ப)சாகிப் 52(51)
டிராவிட்(ப)ஹுசைன் 4(10)
சச்சின்--அவுட் இல்லை- 105(166)
லட்சுமண்(ஸ்டம்டு)முஷ்பிகுர்(ப)சாகிப்  7(30)
யுவராஜ்(கே)ரூபல் ஹுசைன்(ப)சாகிப்  12(31)
கார்த்திக்(கே)ரகிபுல் ஹசன்(ப)ஹுசைன் 0(3)
அமித் மிஸ்ரா-எல்.பி.டபிள்யு.,(ப)ஹுசைன் 14(41)
ஜாகிர்(கே)ரகிபுல் ஹசன்(ப)சாகிப் 11(18)
இஷாந்த்(கே)முஷ்பிகுர்(ப)ஹுசைன் 1(24)
ஸ்ரீசாந்த்(கே)இம்ருல்(ப)சாகிப் 1(12)
உதிரிகள் 13
மொத்தம் (70.5 ஓவரில் ஆல் அவுட்) 243


விக்கெட் வீழ்ச்சி: 1-79(சேவக்), 2-79(காம்பிர்), 3-85(டிராவிட்), 4-107(லட்சுமண்), 5-149(யுவராஜ்), 6-150(கார்த்திக்), 7-182(அமித் மிஸ்ரா), 8-209(ஜாகிர்), 9-230(இஷாந்த்), 10-243(ஸ்ரீசாந்த்).


பந்து வீச்சு: சபியுல் இஸ்லாம் 9-1-41-0, ஹுசைன் 18-2-71-5, ரூபல் ஹுசைன் 10-0-40-0, சாகிப் 29.5-10-62-5, மகமதுல்லா 3-0-17-0, அஷ்ரபுல் 1-0-5-0.


வங்கதேசம்
தமிம் இக்பால்(ப)ஜாகிர் 31(45)
இம்ருல்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 23(46)
நபீஸ்(கே)லட்சுமண்(ப)இஷாந்த் 4(3)
அஷ்ரபுல்--அவுட் இல்லை- 0(5)
ரகிபுல் ஹசன்-அவுட் இல்லை- 1(3)
உதிரிகள் 0
மொத்தம் (17 ஓவரில் 3 விக்.,) 59


விக்கெட் வீழ்ச்சி: 1-53(இம்ருல்), 2-58(நபீஸ்), 4-58(தமிம் இக்பால்).


பந்துவீச்சு: ஜாகிர் கான் 9-1-32-2, ஸ்ரீசாந்த் 3-0-13-0, இஷாந்த் 5-1-14-1.


latest score:BAN 154/6 in 43.1 Overs

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.


 

தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.

சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.

எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.

இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.

சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.

எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
 .


source:.lttepress

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு

 

ழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளில் சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின் பேரில், அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்ததுதான்.

பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலை. அப்படிக் கொல்லப் பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள்! போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17-ம் தேதிக்குப் பிறகும்கூட முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்து படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. போரின் இறுதியில் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கண்களையும், கைகளையும் கட்டி அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னால் உலகமெங்கும் வெளியாகின. அவையெல்லாம் பொய் யான காட்சிகள் என்று சிங்கள அரசாங்கம் மறுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோ காட்சிகளை அறிவியல்பூர்வமாக சோதனை செய்த ஐ.நா. சபை, அது உண்மையான காட்சிதான் என்பதை இப்போது உறுதி செய்து உள்ளது.

ஐ.நா. சபையில் உள்ள சட்டவிரோதமான படுகொலைகள் குறித்து ஆராயும் பிரிவுக்கு பொறுப்பாக உள்ள பிலிப் ஆல்ஸ்டன், இது குறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கடந்த டிசம்பர் 18-ம் தேதி இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். அதில், 'இலங்கை அரசு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நாளுக்கு முன்தினமான 2009, மே 17-ம் தேதி நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய புலிகளின் மூன்று தலைவர்களும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வடக்குப் புறமாக ஓர் இடத்தில் சிக்கிக் கொண்டனர். தூதர்கள் மூலமாக அவர்கள் உங்கள் அரசை தொடர்புகொண்டு இலங்கை ராணுவத்திடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். ராணுவத் துறை செயலாளரும், உங்கள் அரசு ஆலோசகர்களில் ஒருவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்களை வெள்ளைத் துணியேந்தி வருமாறு கூறியுள்ளனர். அந்த சமயத்தில் போர் முனையிலிருந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் தலைவருக்கு ராணுவ ஆலோசகரிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. மே 18-ம் தேதி அதிகாலையில் நடேசன், புலித் தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் வெள்ளை துணிகளை பிடித்தபடி ராணுவத்தை நோக்கிச் சரணடைய வந்தபோது அவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் சரமாரியாக சுட்டு, அவர்களை படுகொலை செய்துள்ளனர். அவர்களோடு வந்த அவர்களது குடும்பத்தினரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்...' என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிலிப் ஆல்ஸ்டன், இந்த விவரங்களையெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் எனவும், சம்பவம் நடத்த நேரத்தில் இலங்கை ராணுவத்தோடு சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் சிலரும் இந்தத் தகவல்களை உறுதிப் படுத்தியுள்ளனர் என்றும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

1949-ம் ஆண்டில் இயற் றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3, போர்க்காலத்தில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய நியதிகள் பற்றிக் கூறியுள்ளது. 'போரில் நேரடியாகப் பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பத்தினர், ஆயுதங்களை கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும்!' என்று வலியுறுத்தியுள்ளது. அது போலவே சர்வதேச மனித உரிமை சட்டங்களும், ஆயுதங்களைக் கைவிட்டவர்களைக் கொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்றுள்ள இனப்படுகொலை என்பது சர்வதேச சட்டங்களுக்கும், நியதிகளுக்கும் மாறானதாக நடத்தப்பட்டுள்ளது. எனவே, இதைப் பற்றி இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் என பிலிப் ஆல்ஸ்டன் கூறியிருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தின் இறுதியில் மூன்று பிரச்னைகளை வலியுறுத்தி உள்ளார். 'போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் உண்மைதானா? அதை நீங்கள் மறுப்பீர்களேயானால்... அப்படி இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று நிரூபிக்க ஆதாரங்களோடு உங்கள் அரசு முன்வர வேண்டும். நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து நாங்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பரிசீலித்து, அதற்கு நீங்கள் பதில் கூறவேண்டும்!' என ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக ஐ.நா. சபை விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஐ.நா. சபையைச் சேர்ந்த அதிகாரிகளே இத்தகைய இனப்படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமை காரியதரிசியாக இருக்கும் விஜய் நம்பியார், ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காக பலரிடமும் அணுகிப் பேசி வந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் வழியாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள்தான் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப் பட்டதில் விஜய் நம்பி யாருக்கும் பங்கு உள்ளது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, அவர் மீது முதலில் ஐ.நா. சபை விசாரணை நடத்தட்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து சுமார் எட்டு மாதங்கள் ஆகும் நிலையிலும் அங்கே தமிழர்கள் கொல்லப்படுவது நின்றபாடில்லை. 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போதும் கூட சிங்கள ராணுவம் இப்படி சித்ரவதை செய்கிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 'வன்னி டெக்' என்னும் நிறுவனத்தின் இயக்குநராயிருந்த கதிரவேலு தயாபர ராஜா என்பவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பாலகுமார், தன் மகனோடு சரணடைந்து ராணுவத்தினால் கூட்டிச் செல்லப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ராணு வம் ரகசியமாக வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கும் அந்த அறிக்கை, தயாபர ராஜாவுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறியுள்ளது.

வன்னி டெக் என்பது சுயேச்சையாக நடத்தப்பட்டு வந்த ஓர் அமைப்பு. சில காலத்துக்குப் பிறகு புலிகள் அந்த அமைப்பை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அதற்கு தேவையான டீசல், ஜெனரேட்டர் முதலானவற்றை புலிகள் வாங்கி வந்தனர். இன்னும்கூட அந்த நிறுவனம் சுதந்திரமாகவே செயல்பட்டு வந்தது. அதன் இயக்குநராக இருந்த தயாபர ராஜா தனக்கென்று சம்பளம் எதையும் வாங்கிக் கொண்டதில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதயகலா என் பவரும் தயாபர ராஜாவும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அந்தத் திருமணம் புலிகளுக்கு உடன்பாடாக இல்லாத காரணத்தால் அவர் தனது பதவியை விட்டு விலகி விட்டார். அந்த நேரம் புதுக்குடியிருப்பு பகுதியில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தனது பதவியிலிருந்து விலகி மனைவியோடு வெளியேறிய தயாபர ராஜா, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவுத் துறையின் விசாரணைக்கென்று அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்புவுக்கும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத ஒரு முகாமுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தயாபர ராஜாவும், உதயகலாவும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். போர் முடிந்து பல மாதங்கள் வரை அவர்கள் சித்ரவதை செய்யப்படுவது நிற்கவே இல்லை.

இடையிடையே உதயகலாவின் பாட்டி அவர்களைச் சென்று சந்தித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்ட விவரம் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனிடையே, கடந்த 2009 செப்டம்பர் 15-ம் தேதி தயாபர ராஜா இறந்து விட்டார். அதற்கு முன் இப்படி யாராவது இறந்தால் அவர்களை புலிகள்தான் கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை ராணுவம் எளிதாகப் பொய் சொல்லித் தப்பித்து விடும். ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழலில் இலங்கை ராணுவம் பழி போடுவதற்கு யாரும் இல்லை. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தயாபர ராஜா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டபோது, அவரது மார்பில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயம் இருந்தது. உதயகலா இப்போது விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடக்கக் கூட முடியாத நிலை. அந்த அளவுக்குக் கொடிய சித்ரவதை...!

இலங்கையில் தமிழ் மக்கள் இப்போதும் எவ்வாறு கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சியாகும். தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கென்று பாதுகாப்பாக எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட் டுள்ளது. அங்கு அதிகாரத்துக்காகப் போட்டியிடும் இரண்டு கொலைகாரர்களில் எவருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள் போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அந்தக் கடமை தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் அதிகம் உள்ளது.

இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் சில முன்முயற்சி எடுத்தபோது, அதைத் தடுத்து இலங்கை அரசை காப்பாற்றியது இந்தியாதான். இன்று மீண்டும் அத்தகைய சூழல் உருவாகியிருக்கிறது. ஐ.நா. சபையின் அதிகாரி பிலிப் ஆல்ஸ்டனின் அறிக்கைக்குப் பிறகு சர்வதேசச் சூழல் சற்றே மாறியிருக்கிறது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு, இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். இலங்கையை, 'இனப்படுகொலை செய்த நாடு' என்று அறிவிக்குமாறு ஐ.நா. சபையை இந்திய அரசு வலியுறுத்தினால்... நிச்சயமாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

இலங்கைப் பிரச்னையை புலிகளை மட்டுமே மையமாக வைத்து அணுகிக்கொண்டிருந்த இந்திய அரசு, அதே வித அணுகுமுறையை இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்கு உரியதாகும். தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது முன்பைவிட, இப்போது அதிகம் தெளிவாகி உள்ளது. இந்நிலையிலேனும் இந்தியாவின் பாதுகாப்பைக் கருதியாவது இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் கட்சி பேதம் பாராமல் ஒருமித்துக் குரல் எழுப்ப வேண்டும்


source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விண் ஸிப் 14

 
 

பல்களைச் சுருக்கி அமைக்கவும், பின் அவற்றை விரித்துப் பயன்படுத்தவும் விண்ஸிப் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராம் ஆகும். இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இதன் சோதனைப் பதிப்பு இலவசமாக இதன் நிறுவனத்தால் வழங்கப்படுவதால், பலரும் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அதன் பல வசதிகளைப் பயன்படுத்தி விண்ஸிப் புரோகிராமின் புதிய பதிப்பு 14 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் சோதனைப் பதிப்பு இலவசமாகக் கிடைக்கிறது.
விண்டோஸ் 7 தரும் லைப்ரரி மற்றும் ஜம்ப் லிஸ்ட் வசதிகளை விண்ஸிப் 14 நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வந்தது போன்ற பயன்பாட்டு எளிமையை இது தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களில் உள்ள பைல்களை விண்டோஸ் 7 லைப்ரரி மூலம் ஸிப் செய்திடலாம். பைல்கள் எங்கிருந்தாலும் அவற்றை மொத்தமாக ஒரு ஸிப் பைலில் கொண்டு வரலாம். இந்த வசதி இதற்கு முன் இல்லை. விண்ஸிப் புரோகிராமினை ஜம்ப் லிஸ்ட்டில் இணைத்து வைக்கலாம். தேவைப்படுகையில் இதனைக் கிளிக் செய்து நேரடியாகப் பயன்படுத்தலாம். பைல்களைச் சுருக்கலாம்; விரித்துப் பயன்படுத்தலாம்.
விண் ஸிப் 14, விண்டோஸ் 7 வசதிகளைப் பயன்படுத்தினாலும், இதற்கு முன் உள்ள விண்டோஸ் சிஸ்டங்களுடனும் பயன்படுத்தலாம். 
இந்த பதிப்பில் சுருக்கப்பட்ட பைல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தானாகவே தற்காலிகமாகத் தான் உருவாக்கிய பைல்களை அழிக்கிறது. சுருக்கப்பட்ட பைல்களின் நகல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றையும் நீக்குகிறது. பைல்களை முன்னதாகப் பார்ப்பதற்கு மட்டும் என உருவாக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அழிக்கிறது. 
மேலே சொல்லப்பட்ட வசதிகள் அனைத்தும்,ஏற்கனவே விண்ஸிப் புரோகிராம்களில் தரப்பட்ட வசதிகள் அனைத்திற்கும் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன. இந்த விண்ஸிப் பதிப்பில் .zipx என்னும் கம்ப்ரஸன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான சுருக்கும் நிலையைக் காட்டிலும், கூடுதலாக சிறிய அளவில் பைல்களைச் சுருக்குகிறது. ஏற்கனவே சுருக்கப்பட்ட வடிவில் இருக்கும் .jpgபைல்களை மேலும் 20% சுருக்குகிறது. 
50 டாலர் கூடுதலாகச் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடன் விண்ஸிப் 14 கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி பைல்களை சிடி மற்றும் டிவிடிக்களில் எழுதலாம்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி இருக்கையில், ஏன் இது போன்ற தனியாக கம்ப்ரஸ் செய்திடும் புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என சிலர் வாதிடலாம். விண்ஸிப், விண்டோஸ் தரும் வசதிகளைக் காட்டிலும் சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. எளிதாக ஸிப் செய்வதும், அவற்றை விரித்துக் கொடுப்பதும் விண்ஸிப் புரோகிராமின் தனி குணங்களாகும். 
வழக்கம்போல விண்ஸிப் 14 பதிப்பின் சோதனைக்குத் தரப்படும் புரோகிராமினைhttp://www.winzip.com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். கட்டணம் செலுத்தி வாங்க விரும்பினால் 30 டாலர் செலுத்த வேண்டும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழ்தேசிய இனத்தின் இறைமை

 

தீவின் எஞ்சிய பிரதேசங்களைப் போன்றே தமிழ்ப் பிரதேசங்களும் போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தருக்கும் பின்னர் ஆங்கிலேயருக்கும் கைமாறின. 1948 பெப்ருவரி நான்காந் தேதியன்று இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

1802இல் இலங்கைத் தீவு அவ்வாண்டின் ஏமியன்ஸ் ஒப்பந்தத்தின்மூலம் ஆங்கில முடியரசிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஏமியன்ஸ் ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்ட அறோசிமித்தின் இலங்கைத் தேசப்படம் இத்தீவை இரு வேறு நாடுகளாக – வடக்கையும் கிழக்கையும் கொண்ட ஒரு தமிழ் நாடாகவும், தென்மேற்கையும் மத்திய பகுதிகளையும் கொண்ட ஒரு சிங்கள நாடாகவும் – காட்டுகின்றது. அடிக்கடி எடுத்துக்காட்டப்படும் ஒரு குறிப்பேட்டில் சேர் ஹியு கிளெக்ஹோர்ன் 1799 யூனில் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கு எழுதியதாவது மிகப் புராதன காலந்தொட்டு இரு வேறு தேசிய இனங்கள் இத்தீவின் உடைமையைத் தமக்கிடையில் பிரித்துக்கொண்டுள்ளன.

முதலாவது அதன் தென்மேற்குப் பகுதிகளில் நாட்டின் உட்புறத்தில் குடியிருக்கின்ற சிங்களவர், இரண்டாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உடைமையாகக் கொண்டுள்ள மலபார்கள் (அதாவது தமிழர்). இவ்விரு தேசிய இனங்களும் அவற்றின் சமயம், மொழி, பழக்கவழக்கங்கள் என்பவற்றில் முழுமையாக வேறுபடுகின்றன. (தமிழ்த் தகவல் நிலையத்திலிருந்து எடுத்துக்காட்டு 1997:2).மேலும், புகழ்பெற்ற பிரதம நீதியரசர் சேர் அலெக்சான்டர் ஜோன்ஸ்ரன் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் றோயல் ஏசியாடிக் சொசைட்டிக்கு 1827 யூலை 1ஆந் தேதியன்று எழுதியதாவது ஆகக்கூடிய கமத்தொழில் சுபிட்சம் நிலவிய காலப்பகுதியில் இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதிலும் வசித்த மக்கள் இனம் அதேகாலப்பகுதியில் இந்தியாவின் தென்குடாநாட்டில் வசித்த மக்கள் இனத்தைப் போன்று அதே மொழியைப் பேசினரென்பதையும், அதே எழுத்து வரிவடிவத்தைப் பயன்படுத்தினரென்பதையும், அதே தோற்றுமூலத்தையும் சமயத்தையும் சாதிகளையும் சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்தனரென்பதையும் அவர்களிடமுள்ள மற்றும் எனது கைவசமுள்ள வெவ்வேறு வரலாறுகள் எல்லாவற்றிலிருந்தும் நிச்சயமாக முடிவுசெய்யலாமென்று நான் நினைக்கின்றேன். (ஈழத்தின் இறைமை பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டு, www.tamilnationorg@history06a=d;2000.

இலங்கைத் தீவு இரு தனிவேறான பிராந்தியங்களைக் கொண்டிருந்ததென்பதற்கு 1799இன் கிளெக்ஹோர்ன் குறிப்பேட்டையும் 1802இன் அறோசிமித் தேசப்படத்தையும் அதிகாரபூர்வமான சான்றுகளாகக் கொள்ளலாம். பிரதம நீதியரசர் சேர் அலெக்சான்டர் ஜோன்ஸ்ரனின் கடிதம் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. 1815இல் கண்டி இராச்சியமும் 1818இல் வன்னிப் பிரதானிகளும் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் மட்டும்தான் ஆங்கிலேய அரசாங்கம் முழுத் தீவையும் ஒருங்கிணைத்ததென்பதை நினைவில் கொள்ளவேண்டியது முக்கியமானதாகும். அவர்கள் அதனை ஒரு புவியியல் அலகாக உணர்ந்தனரேயன்றி அரசியல் அல்லது தேசிய அரசுகளாக அல்ல. ஆங்கிலேய அரசாங்கம் 1833இல் நிருவாகத்தை ஒருங்கிணைத்தபோதிலும், அது அறிமுகப்படுத்திய கச்சேரி முறைமையுடன் முன்னர் நடைமுறையிலிருந்த வெவ்வேறு சுதேச நிருவாகக் கட்டமைப்புக்களையும் அது ஒருங்கிணைத்தது. அவர்கள் கடந்த காலத்தை முறித்துக் கொள்ள விரும்பவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. உள்நாட்டு மற்றும் மரபுவழக்கான சட்டங்கள் தொடர்ந்தும் நடப்பிலிருந்தன.

ஒல்லாந்தரால் கடலோரப் பிரதேசங்களில் அறிமுகப் படுத்தப்பட்டிருந்த ரோமன் டச்சுச் சட்டம் (RDL), நாட்டின் பொதுச் சட்டமாகத் தொடர்ந்தது. முன்னைய சட்ட முறைமை முழுத் தீவையும் அளாவியதாக இருக்கமுடியவில்லை. அவ்வாறே ஆங்கிலக் கல்வி கற்ற புதிய உயர்குடி வகுப்பினரால் இத்தீவின் இரு மக்களுக்குமிடையிலான வேறுபாடுகளைக் களைந்து அவர்களை ஒரே தேசமாகக் கொண்டுவரவும் முடியவில்லை. இது சாத்தியமற்ற ஒரு பொறுப்பாகத் தோன்றுகிறது. டொனமூர் மற்றும் சோல்பரி ஆணைக்குழுக்கள் முன்னிலையிலான நடவடிக்கைகள் தனியார் இலங்கைத் தேசமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளின் தோல்விக்குச் சிறந்த சான்று பகர்கின்றன. எனவே 1948இல் ஆங்கிலேயர் வெளியேறியதைத் தொடர்ந்து கைக்கொள்ளப்பட்ட அடாத அரசியலமைப்பின் பயனால் இத்தீவிலுள்ள தமிழர் சிங்களவரின் தயவில் விடப்பட்டனரென்பதைச் சொல்லத் தேவையில்லை.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றிய கடைசியான ரோயல் கமிசனுக்குத் தலைமைதாங்கிய சோல்பரி பிரபு, இலங்கையின் விவகாரங்கள் தொடர்பில் பின்னர் தாம் பெற்றுக்கொண்ட அனுபவம் முன்னர் இருந்திருக்குமாயின் தமது விதப்புரைகள் வேறுபட்டிருக்குமென்று மனம் வருந்திக் கூறியதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும்). கச்சேரி முறைமையினுள் வெவ்வேறு பிரதேசங்களின் சுதேச நிருவாக முறைமையை ஒருங்கிணைத்தலைத் தவிர வெவ்வேறு இனக் குழுக்களுக்கிடையில் நடைமுறையிலிருந்த அதிகாரச் சமநிலையைக் குழப்பாதிருத்தலிலும் கவனஞ்செலுத்தப்பட்டது. சட்ட சபையில் உறுப்பாண்மை இனப் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைந்ததாகச் சிங்களவருக்கும் தமிழருக்குமிடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விகிதாசாரத்தைக் கொண்டிருந்தது. காலப்போக்கில் இது மாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இற்கும் 1931இற்குமிடையில் சிங்களவருக்கும் தமிழருக்குமிடையிலான விகிதாசாரம் 2 : 1 என்றாகியது. சட்ட சபையில் 16 சிங்கள உறுப்பினர்களுக்கு எட்டுத் தமிழர் இருந்தனர். மேலும் சட்ட சபையில் பிரதிநிதித்துவம், தனியொரு சமூகம் எதுவும் கூட்டாக ஏனைய எல்லாச் சமூகங்களையும் வாக்களித்து வெல்லக்கூடிய நிலையில் இருத்தலாகாதென்ற டெவொன்சயர் சூத்திரத்துக்கு உட்பட்டதாயிருந்தது.

டொனமூர் அரசியலமைப்பு, அதனை ஆக்கியவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக, பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் தேசிய சிந்தனையை ஊக்குவிக்குமென்றும் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவம் இன ரீதியான சிந்தனையை ஊக்குவிக்குமென்றும், வெளிப்படுத்தியது. பெரிதும் வியக்கத்தக்கதாக ஆளுநர் அன்ட்று கல்டெகொட் பிரபுவும் சோல்பரி ஆணையாளரும் காலனித்துவ அலுவலகத்தினரும் அவ்வாறே எண்ணினர். பல்லினக் குடியேற்ற நாடுகளிலிருந்து கைக்கொள்ளப்பட்ட டெவொன்சயர் சூத்திரம் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் சேர்த்துக் கைவிடப்பட்டது. எனினும் 1948இல் சுதந்திரம் வழங்கப்பட்டபோது ஆங்கிலேய அரசாங்கம் அரசியலமைப்பிலுள்ள பாகுபாடின்மை வாசகக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும்படி சிங்களவரை மட்டும் கொண்ட அமைச்சர்களின் சபையை உண்மையில் தூண்டியது. சோல்பரி அரசியலமைப்பின் 29ஆம் உறுப்புரையின்படி சமாதானம், பாதுகாப்பு, நல்ல ஆட்சிமுறை என்பவற்றுக்கான சட்டங்களை ஆக்குவதற்குப் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டபோதிலும், ஏனைய சமூகங்களுக்குச் சமமான முறையில் பிரயோகிக்கப்படாமல் ஏதேனும் ஒரு சமூகத்துக்குச் சாதகமான அல்லது பாதகமான பாகுபாடான சட்டங்களை ஆக்குவதற்கான ஆற்றல் பாராளுமன்றத்துக்குக் குறிப்பாக மறுக்கப்பட்டது. அரசியலமைப்பிலுள்ள இந்த ஏற்பாட்டுடன் சேர்த்து, அன்று வாதத்துக்கிடமின்றிச் சிங்களவரின் தன்னிகரற்ற தலைவராயிருந்த அதிகௌரவ டி.எஸ்.சேனாநாயக்க அவர்களால், அரசியலமைப்பைச் செயற்படுத்துவதில் சிங்களவருடன் தமிழர் இணைந்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாதென்ற திட்டவட்டமான உத்தரவாதமும் பாராளுமன்றச் சபையில் வைத்து வழங்கப்பட்டது (ஹன்சாட் 8 நவம்பர் 1945: பத்தி 6931).

உறுப்புரை 29 பாராளுமன்றத்தையன்றி அரசியலமைப்பையே இறைமையுடையதாக்குகின்ற வலிமையுடைய ஒரு வாசகமெனப் பிரிவி கவுன்சில் தீர்ப்பளித்துள்ளது. இந்த ஏற்பாடு, அதிகௌரவ டி.எஸ்.சேனாநாயக்கவின் உத்தரவாதத்துடன் சேர்ந்து, இலங்கை டொமினியனின் அரசியற் சமுதாயத்தை நிபந்தனைக்குட்பட்ட ஓர் அரசியற் சமுதாயமாக்குகின்றது. தெளிவாக இந்நிபந்தனை, தமிழருக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதற்கு இனப்பெரும்பான்மை அதன் எண்ணிக்கைப் பலத்தைப் பயன்படுத்தாதென்ற உத்தரவாதமாகும். எனினும் இந்நிபந்தனை திரும்பத் திரும்ப மீறப்பட்டுள்ளமையும் கடுமையான பாகுபாடான நடவடிக்கைகள் உண்மையில் இடம்பெற்றுள்ளமையும் தமிழர் அந்த அரசியற் சமுதாயத்திலிருந்து விருப்பப்படி வெளியேறுவதற்கான உரிமையை அவர்களுக்கு அளிக்கின்றன. தமிழரின் ஆதரவற்றதும் அவர்களின் பிரதிநிதிகள் அதிலிருந்து வெளிநடப்புச் செய்ததுமான ஓர் அரசியலமைப்புச் சபைதான் 1972இன் தொல்குடிசார்ந்த குடியரசு அரசியலமைப்பை ஆக்கியது. அது கடந்த காலத்துடன் சட்டத் தொடர்ச்சியைக் கொண்டிராத ஓர் அரசியலமைப்பு. தமிழ்த் தேசிய இனம் அதனை ஆக்குவதற்கு ஒப்புதலளிக்கவில்லை.

எனவே அங்கு ஓர் பிளவு இருந்தது. இரு வேறுபட்ட தேசிய இனங்களென்பதை மீண்டுமொரு தடவை தெளிவாகக் காட்டுகின்றதாகக் குடியிருந்தவர்களின் இறைமைகள் தோன்றின. வடக்கையும் கிழக்கையும் உள்ளடக்குவதற்கான இலங்கையின் கோரிக்கையிலுள்ள சட்ட மற்றும் அரசியலமைப்புக் குறைபாடுகள் இப்போது எளிதில் உணரத்தக்கனவாயிருக்கும். இலங்கை வடக்கிலும் கிழக்கிலுமுள்ள மக்களின் அதிகாரமின்றி அமைக்கப்பட்டதனால் அது ஆங்கிலேய டொமீனியனின் முன்னைய அரசியற் சமுதாயங்களின் பின்னுரித்தாளியல்ல. அரசியல் அதிகாரம் இந்நாட்டு மக்களுக்குக் கைமாற்றப்பட்டபோதிலும் அவர்களின் இறைமையின் கருவூலமாக ஆங்கிலேய அரசியே தொடர்ந்துமிருந்தார்). அரசியலமைப்புச் சபை அங்கீகரித்ததைத் தொடர்ந்து 1972 மே 22ஆந் தேதியன்று அமுலுக்கு வந்த குடியரசு அரசியலமைப்பு இச்சட்டத் தொடர்ச்சியை அறுத்துக்கொண்டதுடன், இந்த இறைமையின் கருவூலம் மக்கள்தாமேயென்று பிரகடனப்படுத்தியதன் மூலம் மக்களின் இறைமைக்கும் உத்தரவாதமளித்தது.

ஆனால், தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதிகள் இந்த அரசியலமைப்புக்குத் தமது ஒப்புதலைக் கொடுக்க மறுத்ததுடன், அதனை நிராகரித்தும் விட்டனர். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 19 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பேர் 1972 மே 22ஆந் தேதிய முடிவுக்கட்டமான இக்கூட்டத்தைப் பகிஸ்கரித்து அதனை நிராகரித்தனர். எனவே இந்த அரசியலமைப்புக்குச் சட்டத் தொடர்ச்சியோ தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்புதலோ இல்லையென்பது தெளிவாகின்றது. முன்னர் கூறியவாறு தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையும் அதன் அரசுரிமையும் முதலில் 1619இல் கைப்பற்றல் உரிமையின் மூலம் பறிக்கப்பட்டன. ஆனால் அதன் இறைமையைச் சட்டத் தொடர்ச்சியின் மூலமாகவோ ஒப்புதல் மூலமாகவோ அல்லது கைப்பற்றல் உரிமையின் மூலமாகவோ பறித்துக்கொண்டது சிங்களத் தேசிய இனம்.

தமிழ்த் தேசிய இனம் சர்வதேசச் சட்டத் தரங்களின்படி, சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில், அதன் இறைமையையும் அரசுரிமையையும் மீளத் தாபிப்பதற்கான உரிமையை உண்மையில் கொண்டுள்ளதெனத் தமிழ்த் தேசியவாதிகள் வாதிடுகின்றனர். சிங்களத் தேசிய இனம் அதன் ஆட்சியைத் தமிழ்த் தேசிய இனத்தின்மீது திணிக்க முடியாதென்றும் ஈழத்தைச் சிங்கள அரசின் ஒரு குடியேற்ற நாடாக மாற்ற முடியாதென்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டலாம். தற்போதைய அரசியலமைப்பு சிங்களத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அந்நோக்கத்துக்காக, அத்தேசிய இனத்தினால் வழங்கப்பட்ட ஆணையின்பேரில் வரைவு செய்யப்பட்டதொன்றாகும். ஒரு தனிவேறான தமிழ் அரசை (ஈழம்) தாபிப்பதற்கான ஆணையைக் கோரி 1977இன் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) வடக்கிலும் கிழக்கிலுமுள்ள 26 ஆசனங்களில் 18ஐ வென்றது. தமிழ் மொழியையே பேசுகின்ற முஸ்லிம்கள் ஐ.தே.கட்சியை (UNP) ஆதரித்து 6 ஆசனங்களை வென்றனர். ஆனால் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழர் ஈழ அரசின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஆணையை த.ஐ.வி. முன்னணிக்கு வழங்கினர்.

தமிழ்த் தேசியவாதிகள் இவ்வாதத்தை மேலும் முன்னெடுத்து இலங்கை அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்மீது சட்டப்படியான உரிமை இல்லாமையின்பேரில் வருந்துகின்றதென்றும் நடைபெறுகின்ற யுத்தம் சட்டப்படியான நிலை பற்றிய நெருக்கடிகளில் ஒன்றென்றும் கூறத் துணியலாம். இதன் தொடர் முடிவுதான் சர்வதேச சமூகத்தின் சில பிரிவினரால் இலங்கையின் ஐக்கியம் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு பற்றிய வற்புறுத்தல், ஏற்றுக்கொள்ளத் தகாததும் தமிழ்த் தேசிய இனத்தின் சட்டப்படியான அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்படுகின்றதென்பதுமாகும்.


source:tamilspy
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஹைபனேஷன் – என்ன நடக்கிறது?:வேர்ட் டிப்ஸ், டிப்ஸ்

வேர்ட் டிப்ஸ், டிப்ஸ்
 


வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது அடிக்கடி சொற்களில் ஹைபனேஷன் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் கட்டயாம் நீங்கள் அதனோடு தொடர்புள்ள ஹாட் ஸோன் (Hot Zone) என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வேர்ட் உங்கள் டாகுமெண்ட்டை ஹைபனேட் செய்திடுகையில், ஹைபனேட் செய்யப்படும் சொல்லில் எவ்வளவு பகுதியை முந்தைய வரியில் அமைக்க முடியும் என்று கணக்கிடுகிறது. இதற்காகத்தான் ஹாட் ஸோன் அல்லது ஹைபனேஷன் ஸோன் என்பதைக் கணக்கிடுகிறது. ஒவ்வொரு வரியிலும் தேவைப்படும்போது இந்த ஹாட் ஸோன் வலது முனையில் கிடைக்கிறது. இந்த ஹாட் ஸோன் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அதாவது 0.25 அங்குலம் என வைத்துக் கொண்டால் அந்த அளவிற்குள் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடமுடிந்தால் மட்டுமே, வேர்ட் ஒரு சொல்லை ஹைபனேட் செய்திடும். இல்லை என்றால் அடுத்த வரிக்குக் கொண்டு வந்திடும். இதனை செட் செய்வதற்குக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும். மெனு பாரில் Tools அழுத்திப் பின் Language என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த சப் மெனுவில்Hyphenation  என்ற பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் Hyphernate என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் ஒரு டாகுமெண்ட் தானாக ஹைபனேட் செய்திடட்டுமா? பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களை மட்டும் ஹைபனேட் செய்திடவா? என்ற ஆப்ஷன்களோடு Hot Zone எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற ஆப்ஷனும் தரப்படும். இதனை நாமே செட் செய்து கொள்ளலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறி, ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டில் இதனைச் சோதனை செய்து கொள்ளலாம்.
சிறிய டேஷ் அமைப்பது எப்படி?
வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில் ஹைபன் என்னும் சிறிய இடைக்கோடு அமைக்கிறோம். சில வேளைகளில் இரண்டு ஹைபன் அளவில் ஒரு டேஷ் கோடு அமைக்க விரும்புகிறோம். இதனை எம் டேஷ் (em dash) என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இரண்டு டேஷ் அடையாளங்களை அடுத்தடுத்து அமைத்துவிட்டால், வேர்ட் அதனைப் புரிந்து கொண்டு சற்றுப் பெரிய எம் டேஷ் ஆக அமைக்கும். சில வேர்ட் தொகுப்புகளில் இந்த வசதி எடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் சில கீகளை அழுத்துவதன் மூலம் இந்த எம் டேஷ் அடையாளத்தை அமைக்கலாம். 
1. கண்ட்ரோல்+ஆல்ட்+மைனஸ் அடையாளத்தினை அழுத்தினால் இந்த டேஷ் அடையாளம் கிடைக்கும். 
2. நம்லாக் கீயினை அழுத்திய பின் நியூமெரிக் கீ பேடில், ஆல்ட் கீயை அழுத்தியவாறு 0151 என அழுத்தினாலும் இந்த டேஷ் அடையாளம் கிடைக்கும். 
3. Insert  மெனு அழுத்திக் கிடைக்கும் மெனுவில் Symbol என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் Symbol என்ற சிறிய விண்டோவில் இது போன்ற சிம்பல்கள் நிறைய இருக்கும். அதில் இதனைச் தேர்ந்தெடுத்து இன்ஸெர்ட் பட்டனை அழுத்தினால் இந்த டேஷ் அடையாளம் கிடைக்கும். 
இடது மார்ஜின் இடம் காண 
வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் பொதுவாக நம் டாகுமெண்ட்டின் இடது ஓரம், மானிட்டரின் இடது பக்கமாக ஓரத்தில் உள்ள ரூலர் அருகே காட்டப்படும். வலது மார்ஜின் இட வெளி நன்றாகக் காட்டப்படும். இந்த மார்ஜின் வெளியை நன்றாகப் பார்க்க வேண்டுமென்றால், கீழாக உள்ள ஸ்குரோல் பாரினை, இருபுறமும் மாற்றி இழுத்துப் பார்க்கலாம்.
சில வேளைகளில் ட்ராப்ட் அல்லது நார்மல் வியூவில் நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்து கொண்டிருக்கையில், டாகுமெண்ட் முழுவதையும் வலது பக்கம் ஒதுக்கி இடது மார்ஜின் வெளியைப் பார்க்க விரும்புவோம். இதற்கு ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, ஸ்குரோல் பாரில் இடது ஓரத்தில் உள்ள அம்புக்குறி மீது கிளிக் செய்திடுங்கள். டாகுமெண்ட் முழுவதும் வலதுபுற ஓரத்திற்கு நகர்த்தப்பட்டு இடதுபுற மார்ஜின் வெளிகாட்டப்படும். மீண்டும் இதனை இடது ஓரமாகவும் நகர்த்திக் கொள்ளலாம். 
இந்த வேலையை நார்மல், ட்ராப்ட் அல்லது அவுட்லைன் வியூவில் இருக்கும்போது மட்டுமே மேற்கொள்ள முடியும். நார்மல் மற்றும் ட்ராப்ட் வியூ என்ற இரண்டும் ஒரே வியூதான். நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் புரோகிராமினைப் பொறுத்து இது மாறும். பிரின்ட் லே அவுட் வியூவில் இந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த வியூவில் டாகுமெண்ட்டின் முழு இடது மார்ஜின் வெளியையும் காணலாம். 
பாண்ட் டயலாக் பாக்ஸ்
வேர்டில் உள்ள ஒரு இன்ட்ரஸ்டிங் ஷார்ட் கட் கீ கண்ட்ரோல்+ ஷிப்ட்+பி (Ctrl+Shft+P).  பொதுவாக ஒரு ஷார்ட் கட் கீ அதற்கான ஒரு வேலையை மேற்கொள்ளும். இந்த கீ நீங்கள் மானிட்டர் ஸ்கிரீனில் என்ன வைத்திருக்கிறீர்களோ அதற்கேற்றபடி செயல்படும். வேர்ட் புரோகிராமில் எழுத்துவகைக்கான பார்மட்டிங் டூல்பாரை இயக்கி மேலாக வைத்திருந்தால், இந்த கீகளை அழுத்தியவுடன், கர்சர் எழுத்துவகையின் அளவைக் குறிக்கும் எண் உள்ள கட்டத்தில் நிற்கும். நாம் எழுத்தை எந்த அளவில் வைக்க வேண்டுமோ அந்த அளவினை டைப்செய்து என்டர் செய்து வேலையை முடிக்கலாம். ஒரு வேளை நீங்கள் பார்மட்டிங் டூல்பாரை இயக்கமால், திரையில் அது காட்டப்படாமல் இருந்து, இந்த கீகளை இயக்கினால் என்ன செயல்பாடு நடைபெறும்? நேரடியாக பாண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இந்த டயலாக் பாக்ஸில் பாண்ட் சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். 

டிப்ஸ்... டிப்ஸ்...
விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தில் நம் கம்ப்யூட்டர் ஐகான்களை நம் இஷ்டப்பட்ட இடைவெளியில் அமைக்கலாம். டெஸ்க்டாப்பில் எங்காவது ரைட் கிளிக் செய்தி டவும். கிடைக்கும் மெனுவில்Properties  பிரிவைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள Appearanceடேபில் கிளிக் செய்திடவும். அங்குள்ள Advance  பட்டனில் அதன்பின் கிளிக்கிடவும். அங்கு ஐtஞுட் என்ற பிரிவில் உங்கள் ஐகானை எப்படி எல்லாம் வளைக்கலாம் என்று காணலாம். எடுத்துக்காட்டாக நெட்டு வரிசையிலும் படுக்கை வரிசையிலுமாக ஐகான்கள் அமைக்கப்படும் இடை வெளியை மாற்றலாம். அனைத் தையும் முடித்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் செட் செய்தபடி ஐகான்கள் அமைந் திருக்கும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உன்னத படைப்பான இயற்கை-காணொளி

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP