|
சமீபத்திய பதிவுகள்
தமிழ்மண வாசகர்களுக்கு நன்றி
முதலாவது தமிழ்மண வாசக பெருமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.கடந்த ஒரு சில நாட்களாக தமிழ்மண நிர்வாகத்தின் மாற்றத்தினை தொடர்ந்து என்னுடைய பதிவுகள் தமிழ்மண செய்திபிரிவிற்கு மாற்றப்பட்டது.அதிலிருந்து என் பதிவுகளுக்கு வாசகர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போனது.ஆனால் இன்று என்னுடைய பதிவை சூடான இடுகைக்கு வாசகர்கள் வர வைத்துள்ளார்கள் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.எனவேதான் என்னுடைய நன்றியை உங்களுக்கு தெரிவித்தேன்.
தமிழ்மண நிர்வாகிகளுக்கு நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல பெருமளவில் என்னுடைய பதிவுகளில் காப்பி பேஸ்ட் செய்திகளை குறைத்துவிட்டேன்.தொடர்ர்ந்து தமிழீழ அவலங்களை மக்களுக்கு எடுத்துக்காண்பிப்பதில் சோர்ந்து போகாமல் உள்ளேன்.
என் பதிவுகளில் ஒரு சிலவற்றை தவிர மற்றவைகள் என்னுடைய சொந்த விமர்ச்சனங்களாகவே வெளியிடும் அளவுக்கு என்னை மாற்றிக்கொண்டுள்ளேன்.தாங்கள் விரும்பினால் இடுகைகள் முன் பகுதியில் வர அனுமதி அளித்தால் மகிழ்ச்சி அடைவோம்.