சமீபத்திய பதிவுகள்

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா?-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்

>> Sunday, July 27, 2008

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா?-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள் 

மும்பை, ஜுலை. 28-

தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுதொடர்பாக வந்த மிரட்டல் இ-மெயிலில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 25-ந் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.

பெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் சங்கிலி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் பலியானார்கள். 140-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இது, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்கள் இணைந்த அமைப்பு ஆகும். இந்த தீவிரவாத இயக்கம், 14 பக்க இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இது நிறுத்தப்படாவிட்டால், மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கும், துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த 2006-ம் ஆண்டு ஜுலை 11-ந் தேதி நடந்த குண்டு வெடிப்புகளை அவர்கள் அதற்குள் மறந்து விட்டார்களா?

சிறுபான்மை மக்கள், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜ்ஜார்களே, பலத்தை காட்டி, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும்போது, நாம் அதை விட அதிகமாக பலத்தை காட்டி அரசாங்கத்தை பணிய வைக்க வேண்டாமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மும்பையில் மாளிகை கட்ட திட்டமிட்டுள்ள இடம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே, மாளிகை கட்டுவதற்கு முன்பு, முகேஷ் அம்பானி, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக அது மாறிவிடும்.

உத்தரபிரதேச பார் கவுன்சில் வக்கீல்கள் முஸ்லிம்களின் வழக்குகளில் ஆஜராக மறுக்கிறார்கள். எனவே, உத்தரபிரதேச பார் கவுன்சிலையும் எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் இ-மெயிலின் அடிப்படையில் பார்க்கும்போது, சதிகார தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

மும்பையில் உள்ள பங்கு சந்தை கட்டிடம், சித்திவிநாயகர் கோவில், மந்திராலயம், மும்பை மாநகராட்சி கட்டிடம் மற்றும் பெரிய கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள மராட்டிய முதல்-மந்திரி,
துணை முதல்-மந்திரி, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் விசேஷ பாதுகாப்பில் உள்ள மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 

StumbleUpon.com Read more...

குண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்

குண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்

ஆமதாபாத்,ஜுலை. 27-

கோத்ரா சம்பவத்துக்கு பழிக்கு பழிவாங்குவோம், முடிந்தால் அதை தடுத்து பாருங்கள் என்று தீவிர வாதிகளிடம் இருந்து இ மெயிலில் மிரட்டல் வந்தது. மும்பையில் இருந்து இந்த மிரட்டல் வந்ததாக தெரிய வந்துள்ளது.

ஆமதாபாத்தில் 14 இடங் களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் தீவிரவாதிகளிடம் இருந்து 10 நிமிடங்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு
அந்த மிரட்டல் வந்துள்ளது. டெலிவிஷனுக்கும் இந்த மிரட்டல் அனுப்பப் பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருந்த தாவது:-

இன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள் மரணத்தின் பயங்கரத்தை உணரப் போகிறீர்கள்.

புனித போர் (ஜிகாத்) மீண்டும் தொடங்கி விட்டது. குஜராத்தில் கோத்ரா சம்பவத் துக்கு பழிவாங்கப் போகிறோம் இந்தியாவில் உள்ள முஜாகதீன்களும், பிடாயின்களும் தயாராகி விட்டனர். முடிந்தால் அவர் களை தடுத்துப் பாருங்கள் புனித போரின் பயங்கரம் என்ன என்பதை உணரப் போகிறீர்கள்.

மத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விரைவில் குண்டுகள் வெடிக்கும்.

குஜராத் முதல் மந்திரி நரேந்தர மோடிக்கு பாடம் கற்பிப்போம். நரேந்திர மோடியே உங்கள் மாநிலத்திலேயே நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் பாருங்கள்.

இவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதத்தின் முன் பகுதியில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர படமும் இருந்தது.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் பொறுப்பு ஏற்கிறோம் என்றும் கூறியுள்ள அந்த கடிதத்தில் அல்அர்பி, குரு அல் ஹிந்தி என்று கையெழுத்து போடப்பட்டுள்ளது.

இந்த இ மெயில் மும்பை யில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீத் ஹேவுட், சி.1503-1504, கினியா சி.எச்.எஸ்.பிளாட், செக்டார் 2, 3, 16-ஏ, சம்பாடா, மும்பை என்ற முகவரி இருந்தது.

மும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில்தான் மிரட்டல் கடிதத்தை அனுப் பியவன் தங்கி இருந்ததாக தெரிகிறது.
 

StumbleUpon.com Read more...

ஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக தீவிரவாதி, டெல்லியில் கைது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்


புதுடெல்லி, ஜுலை.28-

45 பேரை பலிகொண்ட ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இஸ்லாமிய மாணவர் இயக்க தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரை தொடர்ந்து, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானார்கள்.

டெல்லியில் கைது

குஜராத் போலீசார் நடத்திய விசாரணையில், இஸ்லாமிய மாணவர் இயக்க (சிமி) தீவிரவாதி அப்துல் ஹலீம் என்பவருக்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் தொடர்புடைய ஹலீம், டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார்.

ஆமதாபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து, குஜராத் போலீசார் டெல்லி போலீசாருடன் தொடர்பு கொண்டு ஹலீமுக்கு வலை விரித்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், டெல்லி நகரின் இதயப் பகுதியான டேனி லிம்டாவில் பதுங்கி இருந்தபோது ஹலீம் பிடிபட்டார்.

ஹலீம் கைதான தகவலை ஆமதாபாத் இணை போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா உறுதி செய்தார். ஆமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலில் கைதானது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு பயிற்சி

குஜராத் கலவரத்தை தொடர்ந்து, அகதிகள் முகாமில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஹலீம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த குடும்பங்களை சேர்ந்த ஆவேசமான இளைஞர்களை திரட்டி உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துச்சென்ற ஹலீம், பின்னர் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.

அந்த இளைஞர்கள் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் நாச வேலைகளை மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர், அப்துல் ஹலீம் என்று குஜராத் போலீசார் தெரிவித்தனர். தற்போது போலீசாரின் பிடியில் சிக்கிய ஹலீமிடம் ஆமதாபாத் குண்டு வெடிப்பு பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=428240&disdate=7/28/2008

StumbleUpon.com Read more...

பாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி




StumbleUpon.com Read more...

தொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்!

தொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்!  
நேற்று முன்தினம் பெங்களூருவிலும், நேற்று அகமதபாத்திலும் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இ‌தி‌லஇருவ‌ரகொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ‌ர்‌த்தம‌ற்ற, மோசமான இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/27/1080727004_1.htm

StumbleUpon.com Read more...

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)





குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2


குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 


முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.


குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:


 
குர்‍ஆன் 19:7


'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).


யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.

சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்


1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia | John Hyrcanus-Brittanica | John Hyrcanus - Jewish Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க : 1 மக்காபீஸ் 2:1 :
மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1 மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:

இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)

பல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.

தமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான், ஜான் டிரஸ்ட் நிறுவனம்,

19:7 'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம்.
இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

தமிழாக்கம்: தமிழாக்கம்: பி.ஜைனுல் ஆபிதீன்

19:7 "ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர்
யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை" (என இறைவன் கூறினான்)

ஆங்கில மொழி பெயர்ப்புக்கள்


Translation: Pickthall

(It was said unto him): O Zachariah! Lo! We bring thee tidings of a son whose name is John; we have given the same name to none before (him).

Translation: Arberry

'O Zachariah, We give thee good tidings of a boy, whose name is John. No namesake have We given him aforetime.'

Translation: Palmer

'O Zachariah! verily, we, give thee glad tidings of a son, whose name shall be John. We never made a namesake of his before.'

Translation: Rodwell

"O Zachariah! verily we announce to thee a son, - his name John: That name We have given to none before him."

Translation: Sale

[And the angel answered him], o Zacharias, verily we bring thee tidings of a son, whose name [shall be] John; we have not caused any to bear the same name before him.

Translation: Yusuf Ali

(His prayer was answered): "O Zakariya! We give thee good news of a son: His name shall be Yahya: on none by that name have We conferred distinction before."

யூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ! குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள்ளார்.

ஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).

God, exalted be He, in responding to his request for a son that will be the incarnation of His mercy, says: 'O Zachariah! Indeed We give you good tidings of a boy, who will inherit in the way that you have requested - whose name is John. Never before have We made anyone his namesake', that is, [never has there been] anyone with the name 'John'.
Source- Tafsir al-Jalalayn


இந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.
Question 1  Answer 1 (Historical)  Answer 2 (Scriptural)
Question 2  Answer 1  Answer 2






மேலும் படிக்க:

1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்.

2) குர்‍ஆனின் சரித்திர தவறு: "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது

3) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்

4) குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled



 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP