சமீபத்திய பதிவுகள்

இலங்கையிலே யுத்தங்கள் ஓயவேண்டுமே.....கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை

>> Wednesday, January 28, 2009

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை,கண்ணீரால் நனைக்கிறேன் கர்த்தாவே.இலங்கையில் யுத்தங்கள் ஓயவேண்டுமே

http://tamilchristiansongs.org/player/hndlrb.php?ff=Berchmans/Jebathotta%20Jeyageethangal/Jebathotta%20Jeyageethangal%2013

StumbleUpon.com Read more...

செவ்வாய் கிரகத்தில் பனிப்பொழிவு

   அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
 செவ்வாய்க் கிரகத்தில் பனிப்பொழிவு இடம்பெற்றமைக்கான சான்றுகளை அக்கிரகத்தில் நிலை கொண்டுள்ள பீனிக்ஸ் விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. மேற்படி விண்கலத்திலுள்ள தன்னியக்க இயந்திரமானது செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்தினூடாக நீர் மூலக்கூறுகளை கொண்ட பாரிய பனிப்பளிங்குருக்கள் விழுவதை எடுத்துக்காட்டும் தரவுகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தன்னியக்க உபகரணத்தின் லேசர் கதிரலைகள் மூலமே செவ்வாய்க் கிரக வளிமண்டலத்தின் கூறுகளை ஆராய்ந்து மேற்படி தரவுகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பனிப் பளிங்குருக்களானது செவ்வாயின் மேற்பரப்பை அணுகுவதற்கு முன்பு, நீராவி நிலையை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.

""இந்த பனி செவ்வாயின் மேற்பரப்பை உண்மையில் எவ்வாறு அடைகிறது என்பதை எதிர்வரும் மாதம்மேலும் உன்னிப்பாக அவதானிக்கத் திட்டமிட்டுள்ளோம்'' என பீனிக்ஸ் விண்கலத்தின் முன்னணி விஞ்ஞானியான ரொரன்டோ யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜிம் வைட்வே கூறினார்.

""இது செவ்வாய்க் கிரகத்தில் மேற்பரப்பில் நீர் ஆவியாகி ஒடுங்கும் ஐதரசன் வட்டசெயற்பாடு இடம்பெறுவது தொடர்பில் முக்கிய சான்றாக இது உள்ளது'' என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மே 25 ஆம் திகதி செவ்வாய்க்கிரகத்தின் வட பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய பீனிக்ஸ் விண்கலமானது, செவ்வாய்க்கிரகத்தில் பூகர்ப்பவியல் மற்றும் சுற்றுச் சூழலை ஆராயும் முகமாக பலதரப்பட்ட உபகரணங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ் விண்கலத்திலுள்ள காலநிலை அவதான நிலையம், செவ்வாய்க்கிரகத்தின் வெப்பநிலை, அமுக்கம் வளிமண்டலத்தில் இடம்பெறும் மாற்றங்கள் என்பனவற்றை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது.

 

 

StumbleUpon.com Read more...

தமிழ் பெண்களை கற்பழிக்கும் சிங்களர்கள் !

 

 

army21.jpg
இலங்கை முல்லைத்தீவில் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வரும் சிங்கள ராணுவத்தினர், விசாரணை என்ற பெயரில் தமிழ் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்து, எரித்துப் புதைக்கும் அதிச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளையங்களில் தாக்குதல் நடத்த மாட்டோம் என சிங்கள அரசு அறிவித்தப் போதிலும், ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுவர், சிறுமியர் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிங்கள அரசு அமைத்திருக்கும் பாதுகாப்பு வளையங்களில் தங்கியிருக்கும் தமிழ் பெண்களை ராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதுடன், அவர்களை கொலை செய்து, எரித்து புதைப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் 27 இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக அப்பகுதியில் வசிக்கும் சிங்கள தொழிலாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் 25 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்ட சடலங்களை ராணுவத்தினர் எரித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

போரை நிறுத்த மாட்டோம் தமிழர்களை கொஞ்சமாக கொல்லுகிறோம்     
 
போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்களை கொஞ்சமாக கொல்கிறோம் என ராஜபக்ச கொழுப்புடன் கூறியுள்ளார். இதைக் கேட்பதற்காக பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் போயிருக்கவே தேவை யில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் தமிழகத்தை பொறுத்தவரை, தமிழர்களை பொறுத்தவரை பெரும் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

ஏனெனில் இலங்கையில் தமிழின படுகொலைக்கு காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறி வருவதற்கும், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழர்கள் எதிர்பார்த்து காத்து நிற்கிற, தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை அதிபரிடம் வெளியுறவுத்துறை மந்திரி பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.

போரை நிறுத்த மாட்டோம்; வேண்டுமானால் போர் முனையில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களை கொஞ்சமாக கொல்லுகிறோம் என்று இனவெறி பிடித்த ராஜபக்ச சொல்லியிருக்கிறார்.
இதைக்கேட்டு வருவதற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கொழும்புக்கு நேரில் சென்றிருக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

 

http://www.nerudal.com/content/view/5868/1/

StumbleUpon.com Read more...

எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........

     
 
எம்மினிய உறவுகளே!!!!!!!!!நீங்கள் எந்தெந்த நாட்டிற்கு, எந்தெந்த விதத்தில் எப்படியெப்படி நம் மக்களின் துயரங்களையும் ,சாவின் ஓலங்களையும் கொண்டு செல்லலாம் என்ற அங்கலாய்ப்புக்களாலும்,  ஆதங்க களாலும் மூளையை குடைந்து.. பாங்கிமூன்,ஒபாமா,நவநீதம்பிள்ளை,கருணாநிதி,மன்மோகன் சிங்,கோடன் பிறவுண், BBC, CNN என உங்களின் யாசகம் எல்லை கடந்து நிற்கின்றது.என்ன கண்டீர்கள் இந்த இழிவான உலகினிடத்து??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
ஈழவிடுதலைப் போரிலும் சரி, இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலும் சரி இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப்படுகொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இரண்டு நாட்கள் களிந்துவிட்ட நிலையிலும்.............(உலகளாவிய ரீதியில் இளையவர்களின் உண்ணா நிலை தொடருமிடத்து கூட) நீங்கள் 50 000,40 000,15 000,10 000,7000 ,5000 எனத் திரண்டு முழக்கமிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தான் என்ன??????????????????

ஒப்பனைக்குத்தானும் பொதுவாக கூட ஒரு கண்டனத்தை வெளியிடவில்லை.....உலக நாடுகள் அதன் மனிதநேயத்தை தவற விட்ட நிலையில்.......இன்னும் இன்னும் அகிம்சைப்போராட்டங்களும், மெழுகுவர்த்தி ஊர்வலங்களும்,ஒன்று கூடல்களும்,மின்னஞ்சல்களும்,க
ையெழுத்து வேட்டைகளும் எம்மக்களின் சாவின் ஓலத்தை இனியும் தடுத்திடப் போவதில்லை என்பதையே இந்த நாடுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

இப்போ நீங்கள் செயற்படும் வேகத்தை கொடியவன் மாவிலாற்றில் நிற்கும் போதோ, மல்லாவியில் நிற்கும் போதோ காட்டியிருந்தால் இந்த இரத்தவெள்ளத்தை சிறிதளவேனும் குறைத்திருக்க முடியும்.இப்போ காலம் கடந்து விட்டது..இனிப்பொறுத்திருக்க நேரமில்லை...

இதன்பின்னும் எம்மக்கள் சாவின் விளிம்பில் நிற்கும் போதும் கூட இவர்களிடம் மண்டியிட உங்களால் எப்படி முடிகிறது?????.நீங்கள் மண்டியிட்டெழுவதற்குள் சுடுகாடாகிவிடும் எங்கள் நாடு.. எனவே , நாங்கள் விரைந்து செயற்பட வேண்டிய நேரமிது....

நாங்கள் ஒன்றும் முள்ளந்தண்டிலிகளோ, அடிமைகளோ, ஏதும் வழியற்றவர்களோ நாடற்றவர்களோ அல்லர்...

நெஞ்சமதில் உரமேற்றி வெஞ்சமரில் பகை வீழ்த்தி வானும் மண்ணுமதிர இறக்கை கட்டி பறப்பவர்கள்..இன்னும் ஏன் இந்த இழி நிலை????
நிமிர்த்து உன்நெஞ்சத்தை கொடு உன் தோளை...வேண்டாம் இனி யாசகம்...................................................

இன்று எதிரியானவன் எம் வீரர்முன் களமாடமுடியாமல் உலக வல்லரசுகளின் உதவியோடு மிதமிஞ்சிய கனரக ஆயுத பாவனை மூலமாக எம் வீரர்களை பின்நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறான். இன்றும் கூட சீனா , இந்தியாவிடம் இருந்து முறையே 160,120 என மொத்தம் 280 யுத்த தாங்கிகள் சென்றடைய இருக்கின்றது!!!! இவ்வாறு அவன் மிகப்பெரும் பொருளாதாரத்தை பிரயோகிக்கின்றான்.
ஆனால் நாம் பொருளாதாரத்தில் மிகவும் பலவீனமாக உள்ளோம் என்பதே உண்மை.

இதை எதிர்கொள்ள, இதேபோன்றதொரு பலத்தை எமது பக்கமும் ஏற்படுத்தி எமது நாட்டிடம் நாம் வேண்டிடுவோம்.....

அதற்க்கு இன்று இப்போ செய்ய வேண்டியது.......

எமது தமிழீழ நாட்டை பொருளாதார ரீதியாக நாம் பலப்படுத்த வேண்டும் .......

நாம் எமது நாட்டை பொருளாதார பலம் கொண்டு நிமிர்த்தி எமது நிலங்களை மீட்டு அதன்மீதேறி நின்று உரிமையுடன் அங்கீகாரம் கேட்டால்..அன்றி இந்த சுயநல நாடுகள் ஏதும்தரா எமக்கு.....


இல்லை இன்னும் இன்னும் அகிம்சைப்போராட்டங்களும், மெழுகுவர்த்தி ஊர்வலங்களும்,ஒன்று கூடல்களும்,மின்னஞ்சல்களும்,க
ையெழுத்து வேட்டைகளும் செய்வதே எமக்கெந்த பாதிப்பையும் தராது என நினைத்து நடந்தால் உங்களை நீங்களே ஏமாற்றி நாதியற்ற இனமாக நடுத்தெருவில் நிறுத்தும் காலம் வந்து விடும்.


இரத்த வெள்ளத்தை பொருளாதார பலம் கொண்டு தடுப்போம்......................

குறிப்பு :- உங்கள் பிள்ளைகளோ , தாயோ , தகப்பனோ ,தங்கையோ தம்பியோ இன்று வன்னியில் இருந்தால்!!!!!!!!! உங்கள் உயிரைக்கூட கொடுக்க நீங்கள் தயாராக மாட்டீர்களா.. சிந்தியுங்கள் உறவுகளே..............................

 

 

StumbleUpon.com Read more...

புலிகளின் சுனாமித் தாக்குதல்

புலிகளின் சுனாமித் தாக்குதல்    
  
கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
 
""முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார். அணையை உடைப்பது மட்டுமல்லாமல் பாய்ந்தோடும் வெள்ளத்தில் படகுகளை செலுத்தி தாக்குதல் நடத்தலாம். இதில் தப்பிக்கும் ராணுவத்தினர் தர்மபுரம் நோக்கித்தான் ஓடி வரவேண்டும். அங்கேயும் அவர்களை வளைத்து தாக்குதல் நடத்தினால்... ராணுவத்திற்கு நிச்சயம் பெரிய இழப்புகள் ஏற்படுமென்றும் சூசை விவரித் துள்ளார். அதாவது படைபலத்தை இழக்காமல், ஆள் சேதமில்லாமல், அணைக்கட்டை உடைத்து எதிரிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதும் ஒருவகை போர் யுக்திதான் என்றும் முக்கிய தளபதிகள் விவாதித்துள்ளனர். இதனை பிரபாகரன் ஒப்புக்கொள்ளவே... அந்த யுக்தி தக்க நேரத்தில் கையாளப்பட்டுள்ளது!'' என்கின்றன வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

அதன்படியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி அறிவிப்பு செய்த இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா, ""விசுவமடு பகுதியில் உள்ள கல்மடு குளம்அணைக்கட்டை புலிகள் வெடிவைத்து தகர்த்துள்ளனர். அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 4 அடி உயரத்திற்கும் மேலாக சீறிப்பாய்ந்துள்ளது வெள்ளம். இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் படையணியினர் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் ராணுவத்திற்கு எவ்வளவு இழப்புகள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அப்பகுதியிலுள்ள படையணியினரோடு தொடர்பு கள் துண்டிக்கப்பட்டுள்ளது'' என்று வெளிப் படையாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு 24, 25 தேதிகள் வரை இலங் கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சம்பவம் குறித்த பரபரப்புகள் அடங்கவில்லை. இதற்கு காரணம்... இந்த சம்பவத்தில் 500-ல் ஆரம்பித்து 1000, 1200, 2000 என ராணுவத்தினர் பெரிய அளவில் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிற செய்தி பரவியதுதான்.

கல்மடுகுளம் அணைக்கட்டு பற்றி வன்னி பகுதியில் விசாரித்தபோது, ""முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ-35 நெடுஞ்சாலைக்கு தென் மேற்கு பகுதியில் இருக்கிறது விசுவமடுகுளம். இதன் அருகே உள்ளதுதான் கல்மடுகுளம் நீர்த்தேக்கம். ஏ-35 சாலை வழியாக ராமநாதபுரம், தர்மபுரம், விசுவமடுகுளம் ஆகிய பகுதிகளை சுற்றி ஓடுகிற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் இந்த நீர்த்தேக்கம். இது நாலரை கிலோமீட்டர் சதுர பரப்பளவு கொண்டது. கடந்த மாதம் இப்பகுதியில் பொழிந்த கனமழையால் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

முல்லைத்தீவை முழுமையாக முற்றுகை யிட்டு பல வழிகளில் முன்னேறி வருகிற ராணுவம், கிளிநொச்சிக்கு அருகே உள்ள இரணைமடு விலிருந்து ராமநாதபுரம் வழியாக ஏ-35 நெடுஞ் சாலையை அடைவதற்காக முன்னேறியது. இந்த வழியில் ஏ-35 சாலையை அடையவேண்டுமானால் ராமநாதபுரம் அடுத்துள்ள விசுவமடுகுளத்தை கைப்பற்றி அதனை கடக்க வேண்டும். கடந்த ஒருவார மாக இந்த பகுதியில் சண்டை உக்கிர மாக இரு தரப்புக்கும் நடந்து வருகிறது.

இந்த சூழலில்தான் 24-ந்தேதி நள்ளிரவு விசுவமடுகுளத்தை நோக்கி ஆட்லெறி தாக்குதல் நடத்திக்கொண்டே ராணுவம் முன்னேற... நேரம் நள்ளிரவைத் தாண்டி கடந்தது. கல்மடுகுளத்தை கடந்துவிட்டால் விசுவமடு குளத்தை நெருங்கிவிடலாம். கல்மடுகுளம் அணைக்கட்டை நெருங்கத் துவங்கியது ராணுவம். அப்போது நேரம் 1.40. திடீரென்று பெருத்த சத்தத்துடன் அணைக்கட்டு வெடித்து சிதற... திடீரென உருவான சுனாமிபோல் நீர்த்தேக்கத்தின் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. கல்மடுகுளத்தை நெருங்கி வந்த ராணுவத்தினர் இதில் சிக்கிக்கொண்டு தத்தளித்துள்ளனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் தயாராக 5 படகுகளில் காத்திருந்த தற்கொலை கடற்புலிகள் வெள்ளத்தின் பாய்ச்சலோடு படகுகளை ஆக்ரோஷமாக செலுத்தினர். படகுகளில் வைத்திருந்த ஆட்லெறி ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்குதலை நடத்தினர். புலிகளின் செயற்கை சுனாமியை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய ராணுவத் தினரால், எதிர்பாராத இந்த தாக்குதலையும் சமாளிக்கமுடியவில்லை. இரவு நேரமென்பதால் தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்பதை அவர்களால் அவதானிக்கமுடியவில்லை. வெள்ளத்திலும் தாக்குதலிலும் தப்பியவர்கள் கல்மடுகுளத்திற்கு மேலே உள்ள தர்மபுரம் பகுதிக்குள் நுழைய... அங்கு ஏற்கனவே சண்டை நடந்து வருவதால் இவர்களை எதிர் பார்த்திருந்ததுபோல அவர்களை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தி யுள்ளனர் புலிகள்.

இப்படி இயற்கை சீற்றத்தை உருவாக்கி யும் பாய்ந்து செல்லும் நீரிலே பயணித்து தாக்குதல் நடத்தியும், தப்பிப்பவர் களை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தியும் என ஒரே நிகழ்வில் 3 வித அட்டாக்குகளை நடத்தியிருப்பதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்'' என்று வன்னியிலிருந்து தகவல்கள் கிடைக் கின்றன.

புலிகளின் இந்த யுக்தியை ஒப்புகொள்கிற இலங்கை ராணுவத்தினர், ""எங்களுக்கு பெரியளவில் இழப்புகள் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் மருத்துவமனைகளில் கேஷுவாலிட்டி அதிகரித்திருக்கும்'' என்று மறுக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன், ""கல்மடு குளம் அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரியஇழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததையடுத்து கொழும்பிலிருந்து வன்னி பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தது'' என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

கல்மடுகுளம் அணைக்கட்டு உடைக் கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்குமோ என்று அதிர்ச்சியடைந்த அதிபர் ராஜபக்சே அவசரம் அவசரமாக சரத்பொன்சேகா உள்ளிட்ட ராணுவ தளபதிகளுடன் தீவிர ஆலோசணை நடத்தி னார். முதல் கட்ட ஆலோசனையில், "ஆணையிறவு பகுதியிலிருந்து 374 படைப் பிரிவுதான் விசுவமடு நோக்கி முன்னகர்வு தாக்குதல்களை நடத்தியது. அந்த படைப்பிரி வில் 3000 படையினர் இருந்துள்ளனர். தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வெள்ளம் அப்பகுதிகளை சூழ்ந்திருப்பதால் தண்ணீர் வடிந்தபிறகுதான் நமக்கான இழப்பு தெரியவரும்' என்று ராணுவத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதாக கொழும்பி லுள்ள ராணுவ வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.

இதற்கிடையே கல்மடுகுளம் அணைக் கட்டு உடைக்கப் பட்ட சம்பவத்தில் ராணுவத்திற்கு எதிராக செய்தி எழுதக்கூடாது என்று இலங்கை பத்திரி கைகளை எச்சரித் துள்ளார் அதிபர் ராஜபக்சே. அதனால் பல பத்திரிகைகள் யூகமாக கூட இதனைப்பற்றி எழுதவில்லை.

உண்மையில் என்னதான் நடந்தது? என்று புலிகள் வட்டாரத்தில் கேட்டபோது,

""அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 1000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 700 உடல்களிலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர் களின் உடல்கள் ராணுவகட்டுப்பாட்டு பகுதிகளில் கிடக்கிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்சே, இதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி 300 பேரை கொன்றுள்ளார். இத்தனைக்கும் ராஜபக்சே அறிவித்த பாதுகாப்பான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை நடத்தி தனது பழிவாங்கும் உணர்ச்சியை தணித்துக்கொண்டிருக்கிறார்.

அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணு வத்தின் இழப்புகள் பற்றி 26-ந்தேதி வெளிப் படையாக அறிவிக்க இருந்தோம். ஆனால் குழந்தைகள், முதியவர்கள், சிறுவர்கள் என 300 பேர் கொல்லப்பட்டிருப்பதால் இந்த மனித அவலம் வெளி உலகத்திற்கு தெரி யாமலே போய்விடுமென்பதால்தான் அணைக் கட்டு விவகாரத்தை அறிவிக்காமல் தவிர்த் துள்ளோம்'' என்று தெரிவிக்கிறது புலிகள் தரப்பு.
 

நெருடல் இணையம்

 

http://www.nerudal.com/content/view/5869/1/

StumbleUpon.com Read more...

Mail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் - 1

  

ஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்

 

அப்துல் மஜீத்

 

முன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், இந்த என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, இவைகளை இங்கு பதிக்கிறேன்.


 
அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1
 
// Abdul Majeeth said:

அன்புள்ள ந‌ண்ப‌ர் ஈஸா குரான் அவ‌ர்க‌ளூக்கு உங்க‌ள் பெயர் தெரியாத‌தால் இப்ப‌டி குரிப்பிடுகிறேன்.த‌ங்க‌ளூடைய‌ க‌ட்டுரைக‌லை எல்லாம் ப‌டித்தேன் ந‌ல்ல‌ முய‌ற்சி. பாராட்டுக்க‌ள். //
 
 
அன்பான சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே, உங்கள் மெயிலுக்காக நன்றி.

என்னுடைய தளத்தின் பெயர் ஈஸா குர்‍ஆன் மற்றும் என் புனைப்பெயர் "உமர்". நீங்கள் இணையத்திற்கு புதியவராக இருந்திருப்பீர்கள், அதனால், என் பெயர் தெரியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். மற்றும் புதியவர்களுக்கு என் பெயர் தெரியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமிய தளங்களாகும், அவர்கள் எழுதும் கட்டுரைகளில் என் தளத்தின் பெயரையும் என் பெயரையும் குறிப்பிடுவதில்லை, அதற்கு பதிலாக, "கிறிஸ்தவர்கள்" என்ற ஒரு பொதுப்படையான பெயரை குறிப்பிடுகிறார்கள். எங்கள் தளங்களின் தொடுப்பையும் கொடுக்கமாட்டார்கள், அவ்வளவு பயந்துள்ளார்கள், இஸ்லாமுக்காக இணையத்தில் உழைக்கும் அறிஞர்கள். எங்கே உங்களைப் போன்ற புதியவர்கள் எங்கள் தளங்களை படித்துவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம்.
 
 
// Abdul Majeeth said:

தங்க‌ளூடைய‌ கீழ்க்கண்ட க‌ட்டுரையில் அதில் முஸ்லிம்க‌ள் ப‌தில் சொல்வ‌தில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளீர்க‌ள். ஆனால் ந‌டைமுரையில் த‌மிழக‌த்தில் முஸ்லிம்க‌ள் ம‌ட்டும்தான் இஸ்லாம் ஒரு இனிய‌ மார்க்கம் மற்றூம் கேள்வி பிறந்தது இன்றூ ( IFT-PERAMBUR ANSWERS BY DR.K.V.S.HABEEB MOHAMMED) போன்ற நிக‌ழ்ச்சிக‌ளீன் மூல‌ம் முஸ்லிம‌ல்லாத‌வ‌ர்க‌ளூக்கு இஸ்லாத்தை ப‌ற்றீய‌ கேள்விக‌ளூக்கு ஒரு ச‌பையில் ப‌ல்வேறூ த‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் முன்னிலையில்,அழகிய‌ முரையில், த‌குந்த ஆதார‌ங்க‌ளோடடு ப‌தில் அளீக்கின்றார்க‌ள். //
 
 
உங்களின் இந்த மெயிலுக்கு சம்மந்தப்பட்டு நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன், அதனை இங்கே படிக்கவும்: "ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? ".

இந்த கட்டுரையில் இஸ்லாமியர்கள் ஏன் மேடைகள் போட்டு, இஸ்லாம் பற்றி விவரிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளேன் படிக்கவும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் நிகழ்ச்சிப் பற்றி தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

நீங்கள் மேற்கோள் காட்டிய என் வரிகள் கீழ் கண்ட கட்டுரையிலிருந்து எடுத்துள்ளீர்கள்.

பின் ஏன் இந்த கட்டுரையில் இப்படி எழுதினேன் என்று நீங்கள் யோசிக்கலாம். நான் எழுதிய வரிகளை நன்றாக கவனிக்கவும்.
 
முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

 
நான் மேலே எழுதிய வரிகள் முழுக்க முழுக்க இணையம் வைத்து எழுதுபவர்களுக்கு என்பதை கீழ் கண்ட வரிகளிலிருந்து நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.

// சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "...." என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். //
 
 
அதாவது, இணையம் வைத்து இஸ்லாம் பர‌ப்புவர்கள் நாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, "விஷமிகள், கோழைகள், தொடை நடுங்கிகள்" என்று வசை பாடுகிறார்கள். மற்றும் "இஸ்லாமுக்கும், எங்கள் நபிக்கும்" அவதூறு செய்கிறார்கள் என்றுச் சொல்கிறார்களே தவிர அறிவுடமையோடு பதில் சொல்வதில்லை. அப்படி பதில் சொல்ல விரும்புபவர்கள் கூட,

யாருக்கு பதில் சொல்கிறார்கள்?

அவர்களின் தளத்தின் பெயர் என்ன?

எந்த கட்டுரைக்கு பதில் சொல்கிறோம்?

என்று நியாயமான முறையில் பதில் சொல்வதில்லை.
 
 
// Abdul Majeeth said:

உங்க‌ளீட‌ம் ச‌த்திய‌ வேதாக‌ம‌ம் இருப்ப‌தாக‌ சொல்லும் நீங்க‌ள் (அல்ல‌து உங்க‌ள் போதகர்க‌ள்) இது போன்ற ஓர் நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்த‌லாம் அல்ல‌வா? முஸ்லிம்க‌ளாகிய‌ நாங்க‌ள் அத‌னை மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறோம். //
 
 
நான் மேலே கொடுத்த கட்டுரையை நீங்கள் படித்தால் உங்களுக்குப் புரியும் ஏன் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், இதற்கு பல காரணங்களை நான் கொடுத்துள்ளேன். மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நான் அக்கட்டுரையில் குறிப்பிட்ட அவசியங்கள் இல்லை, எனவே, நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆனால், அனேக இணையங்கள், புத்தகங்கள் எங்களுக்கு உண்டு, அதாவது இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு பதில் தருவதற்கு. தமிழில் கடந்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் காலம் செல்லச் செல்ல அனேக தளங்கள், கேள்வி பதில் தளங்கள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே எழுதிய கட்டுரையை படித்துவிட்டு, இந்த என் பதிலை(கடிதத்தை) படிப்பீர்களானால், உங்களுக்கு நான் சொல்வது நன்றாக புரியும்.

மற்றும் எங்களுக்கு இஸ்லாமில் உள்ளது போல (உபயோகமில்லாத) சடங்காச்சாரங்கள் இல்லை, அதாவது, இத்தனை முறை தொழுதுக்கொள், இத்தனை முறை கைகளை இப்படி கழுவு, நமாஜ் படிக்கும் போது இப்படி விரலை ஆட்டு போன்ற பழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லாததால், கிறிஸ்தவர்களுக்கும் பெரும்பான்மையாக "இறைவனை தொழுதுக்கொள்ளும்" முறைப்பற்றி அதிக சந்தேகங்கள் வருவதில்லை. எனவே, கிறிஸ்தவர்களுக்காக நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தத்தேவையில்லை.
 
// Abdul Majeeth said:

மேலும் என‌க்கு த‌ங்க‌ளால் ஒரு விஷய‌ம் தெரிய‌வேண்டும் அதாவ‌து பைபிளீன் வ‌ர‌லாறூ, புதிய‌ ம‌ற்றூம் ப‌ழய‌ ஏற்பாடு இய‌ற்றப்பட்ட‌து யாரால்?எப்பொழுது? தொகுக்க‌ப்ப‌ட்ட‌து யாரால்?எப்பொழுது? கால‌ங்க‌லை (கி.மு,கி.பி) தெளீவாக‌ குறீப்பிட‌வும். //
 
 
உங்களுக்கு பைபிள் பற்றிய விவரங்கள் தேவையானால், அவைகளை கீழ் கண்ட தொடுப்புகளில் சென்று ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளவும், தமிழில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அதே நேரத்தில், எந்த கேள்வியை நீங்கள் பைபிளுக்கு எதிராக கேட்பீர்களோ, அதே கேள்விக்கு நீங்கள் குர்‍ஆனுக்காகவும் பதில் சொல்லியாக வேண்டும்.

உங்கள் குர்‍ஆன் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் படிக்கவும், உங்களுக்கு உண்மை அப்போது விளங்கும்.

குர்‍ஆன் முழுமையானதா?

குர்‍ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது அவைகள் என்ன?

ஏன் குர்‍ஆனின் பிரதியை எரித்தார்கள்?

இப்போதுள்ள குர்‍ஆன் பிரதிகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று பல கட்டுரைகள் உண்டு.
 
 
முதலாவது, குர்‍ஆன் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள், பைபிள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் ஒரு முழுமையான நிலைக்கு வரமுடியும், உங்கள் இமாம்கள், அறிஞர்கள் சொல்வதை மட்டும் நம்பினால், நீங்கள் எதையும் முழுவதுமாக புரிந்துக்கொள்ளமாட்டீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொன்னதால், நான் விவாதம் பற்றிய சில விவரங்களை தரவிரும்புகிறேன்.

விவாதம் என்றுச் சொன்னால், அதற்கு ஒரு தலைப்பு வேண்டும், நீங்கள் எந்த தலைப்பையும் தெரிந்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு,
 
1) பைபிளின் வரலாறு மற்றும் குர்‍ஆனின் வரலாறு

2) இயேசுவின் வாழ்க்கை மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை

3) முஹம்மதுவின் திருமண வாழ்க்கை

4) இயேசு தேவ குமாரனா? மற்றும் முஹம்மது இறைத்தூதரா?

5) இஸ்லாம் அமைதி மார்க்கமா?

6) இஸ்லாம் எப்படி பரவியது?

7) பைபிள் முரண்பாடுகள், குர்‍ஆன் முரண்பாடுகள்

 
இத்தலைப்புக்கள் ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன், நீங்கள் உங்கள் சொந்தமாகவும் தலைப்புக்களைத் தரலாம். ஆனால், நீங்கள் பைபிள் பற்றி ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், நான் என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் நான் குர்‍ஆன் பற்றி கேள்விகள் எழுப்புவேன்.

நீங்களும் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அல்லது விளக்கலாம், இப்படி நாம் தொடருவோம்.

அதை விடுத்துவிட்டு, கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தால், அது விவாதம் என்று சொல்லமாட்டார்கள். என் பழக்கமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் குர்‍ஆனுக்கும், முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் கேள்விகள் கேட்பது தான்.

இதனை என் எல்லா கட்டுரைகளையும் படித்தால் உங்களுக்கு புரியும், படிக்கவும்,

என் தளங்கள்:

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளம்:

மற்றும் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலும் என் கட்டுரைகள் வெளியாகின்றன.

மேற்கொண்டு விவாதம் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிவிக்கவும்.

 
1. எழுத்து விவாதத்தை மட்டுமே நான் ஏற்பேன்.

2. மெயில் மூல‌ம் ந‌ட‌ந்தாலும் ச‌ரி, அல்ல‌து

3. த‌மிழ் கிறிஸ்டிய‌ன்ஸ் போர‌ம் (www.tamilchristians.com) த‌ள‌த்தில் நாம் விவாதித்த‌லும் ச‌ரி.

4. மெயில் மூலம் நடந்தாலும், என் தளங்களில், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலும் உங்கள் பதிலும் என் பதிலும் பதிக்கப்படும், இதனால் எல்லா மக்களும் நம் உரையாடலை அறியா வாய்ப்பு உண்டாகும்.

 
உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும்.

உண்மையிலேயே நீங்கள் புதியவராக இருந்தால், என் தள அனைத்து கட்டுரைகளையும் படிக்கும் படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் கிறிஸ்தவம் பற்றியும், இஸ்லாம் பற்றியும் ஓரளவிற்கு உங்களுக்குப் புரியும்.

கீழ் கண்ட இஸ்லாமிய அறிஞர்களுக்கு(தளங்களுக்கு) கிறிஸ்தவர்களின் பதில்கள்

டாக்டர் அஹமத் தீதத்
டாக்டர் ஜாகிர் நாயக்
பி. ஜைனுல் ஆபீதீன்
இஸ்லாம் கல்வி தளம் மற்றும் எம். எம். அக்பர்
தமிழ் முஸ்லீம் (இது தான் இஸ்லாம் தளம்)
நேசமுடன் தளம்
அபூமுஹை தளம்
ஏகத்துவ தளம்
சுவர்ன தென்றல் தளம்
இஸ்லாம் இணைய பேரவை தளம்

இப்படிக்கு உங்கள் சகோதரன்

உமர் 

StumbleUpon.com Read more...

பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்

  PDF Print E-mail
   
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்
(உள்ளே:> பிறநாட்டு தலைவர்களுக்கான கடித மாதிரி மற்றும் கலைஞரிடம் ஒரு மனு தொர்பு இலக்கங்களுடன்)

உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது.

அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே

எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின்  உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம்.

நாம் செய்ய கூடியவை

1."இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்?" என்று ஒவ்வொரு தமிழனும் காலையில் தன்னை தானே கேட்க வேண்டும்.

2. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

3. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங்கள்.

4.இளையோர்களே உடனயாக உங்கள் Facebook Status இனை மாற்றுங்கள் "Pls stop genocide in Sri Lanka: More than 300 killed 1200 injured within a day"
அத்துடன் உங்கள் நாட்டு நண்பர்களுக்கும் இதனை உபதேசம் செய்து அவர்களையும் 2 நாட்களுக்கு இதனை போட செய்யுங்கள். (தமிழர் அல்லாத நண்பர்கள்)
வலிகளில் நொந்து கிடந்து அழுவதை விடுத்து வலிகளிலிருந்தும் வலிமை பெறுபவர்களாய் எழுவோம்! எழுவோம்!!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!

வன்னியில் தமிழின அழிப்பை, ஒரு பெரும் மனிதப்படுகொலையை சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எமது இனத்தைக் காக்க உடன் அழைப்போம். கீழ்வருபவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து உடன் பேசுங்கள். இன அழிப்பை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறு உடன் வேண்டுங்கள்.

அமெரிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஒபாமா 

தொலைபேசி: 001 202-456-1111
தொலை நகல் : 001 202-456-2461

கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் -


தொலைபேசி - 001 613-992-4211
தொலைநகல் - 001 613-941-6900

கனடிய வெளிவிவகார அமைச்சர் - லோரன்ஸ் கனன்
தொலைபேசி - 001 613-992-5516
தொலைநகல் - 001 613-992-6802

லிபரல் கட்சித்தலைவர் - மைக்கல் இக்னாட்டியெவ்
தொலைபேசி - 001 613-995-9364
தொலைநகல் - 001 613-992-5880

புதிய சனநாயகக்கட்சித்தலைவர் - ஐக் லேட்டன்

தொலைபேசி - 001 613-995-7224
தொலைநகல் - 001 613-995-4565

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி

இருப்பிடம் - 00 91 44 281 15225
காரியாலயம் - 00 91 44 256 72345

Sample Letter;

His Excellency;

Re: Tamils situation Vanni reached Crisis Level; Urging to Stop the Sri Lankan State Genocides against Tamils


I want to take this opportunity to state the terrible crisis deliberately created on the innocent Tamil civilians in Vanni by the government of Sri Lankan and its armed forces. The recent, Gaza tragedy
look too small, compared to what is happening in Vanni for our brethrens for past 25 days. Please break your silence and bring an end to this state enforced Sri Lankan army menace against innocent
Tamils civilians in Vanni.

The Sri Lankan government forces announced 'Safety Zone' few days ago to draw innocent civilians into the so called area such as Suthanthirapuram, Udaiyaarkaddu, and Vallipuram in the Mullaitivu
District. Now, these innocent civilians are being continuously shelled with heavy artilleries and multibarrels by the Sri Lankan Army. According to the government own medical officer in declare the
situation in the Vanni is beyond them. I am calling immediate intervention of the international community to save these civilians from enforced genocides.

The U.N agency says situation in Mulaitivu, Vanni deteriorated to the crisis level. Today alone, at least 300 civilians were dead and over 1000 civilians are badly wounded. A government medical officer working a hospital says, him and medical staff in Vanni unable to treat the large amount of wounded civilians as medical supplies and personals are in very short supply even the hospitals are coming under terrible shell attacks.Wounded even includes Red Cross (ICRC) personals. Genocides continue unabated while the world watching silently. This cannot be accepted, it is the moral duty of the U.N to step in to save the Tamils, please do not allow another Darfur in Sri Lanka.

It is most disheartening to see thousands of our mothers, fathers, sons, daughters, brothers, sisters,infants and children are being brutally killed by the occupying Sri Lankan security forces and we are
unable to continue with our daily lives.Please use your good offices to press the Sri Lankan government to stop the war, stop the genocides of Tamils, send the international monitoring mission to save civilians, send medial staff and supply immediately as thousands are bleeding to their deaths. Please see the attached info rmation SOS call from the Mulaitivu government medical officer.
I earnestly urge you to do your utmost to bring an immediate end to the genocides of Tamils by the Sri Lanka . Recognize their rights to self-determination as this is the only meaningful solution will bring end to the crisis to permanent end.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28151

Thank you for your kind attention on this matter.

Yours Truly,

---

கலைஞர் கருணாநிதிக்கான கடிதம்


உலக தமிழினத் தலைவரும்,
தமிழினக் காவலருமாகிய,
மாண்புமிகு முதல்வர்,
கலைஞர் கருணாநிதி அவர்களே
,

இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக  உயிர் கசியும் ஈழத் தமிழனின் கண்ணீர் மனு!!!!
"யாரொடு நோகேன் யார்க்கெடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்"


முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி ஓடிச் சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை.பதுங்கு குழிகளே கல்லறைகளாகிவிட்டன ஐயா.

ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?

நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் ஐயா.

ஸ்ரீலங்கா அரசின் கோரமான  இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் -  உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும். நாங்கள் யாரிடம் போவோம். யார்கெடுத்து உரைப்போம்.

கலைஞரே எம் காவல் தலைவரே,ஐயா

நீங்கள் எங்களுக்காக ஆட்சி இழந்து சிறை சென்ற பெரும் தலைவர். இன்று கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.

காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"


தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் ஐயா.

தமிழின தலைவரே , தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை ஐயா


உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,

அன்புள்ள

எம் அன்பிற்கினிய மக்களே இபொழுதே மின்னஞ்சல் அல்லது  தொலைநகல் அனுப்புங்கள்

தொலைநகல் விரும்பத்தக்கது

கலைஞர் தொலைநகல்:0091 44 281 11133
கலைஞர் மின்னஞ்சல்: cmcell @ tn . gov . in ( CMCELL @ TN . GOV . IN )

கலைஞர் இருப்பிடம் : 00 91 44 281 15225
கலைஞர் அலுவலகம்: 00914425672345 

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்  தமிழன் மாய்ந்து கொண்டிருக்கிறான்
 
 

StumbleUpon.com Read more...

அண்ணன் திருமவளவனுக்கு ஈழ தமிழனின் இறுதி கடிதம்

அண்ணன் திருமவளவனுக்கு ஈழ தமிழனின் இறுதி கடிதம்      
 
விடுதலைச் சிறுத்தைகள்  கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"


ஈழ மக்களின் விடிவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் வரை சென்ற உங்களின் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ் நாளில் மறக்கமுடியாதவை.

பற்று உள்ளவனுக்கு தான் பயம் வரும்,
பயம் உள்ளவனுக்கு தான் சாவு தினம் தினம்,
சாவையும் துச்சமென நினைத்து உண்ணாநிலை போராட்டத்தினை நடாத்தியமை ஈழ தமிழர் மீதான அக்கறைக்கு மேலாக கொண்ட கொள்கையின் விசுவாசத்தினையே பறை சாற்றுகின்றது. எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் அண்ணன் திருமா உள்ளார் என்ற நம்பிக்கை துளியுடன் இந்த மடலை உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

அண்ணா !!!

முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள்.

அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை. ஓயாத மழையால் எம் பதுங்கு குழிகளும் நீர் நிறைந்த கிடங்குகளாய் மாறி கூவி வரும் எறிகணை மழைக்கு எமை அந்தரிக்க விட்டுவிட்டது.

காக்க யாருமற்ற ஏதிலிகளாய் இன்று உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம்.

காயமடைந்தவர் அனைவரும் கண்முன்னே மடிய ஓலமிட்டு அங்குமிங்கும் ஓடித் திரிகின்றோம்.

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?


தட்டி கேட்க கூட யாரும் வரவில்லையே?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.
மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் அண்ணா! சாக முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்
.

ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?

நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் அண்ணா!

ஸ்ரீலங்கா அரசின் கோரமான  இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும்.

கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.

காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.

தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் அண்ணா.

எம் தமிழ் அண்ணனே செயல் வீரனே , எம் தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,

அன்புள்ள

சாவின் மடியில் உள்ள ஈழ தமிழன்

இதனை அண்ணன் திருமவளவனுக்கு அனுப்பிவையுங்கள் thirumaa@hotmail.com
 
 

StumbleUpon.com Read more...

சிங்கள அரசிற்கு தஞ்சையிலிருந்து ஆயுதம்: வரும் வெள்ளியன்று விமானப்படைத்தளம் முற்றுகை - தமிழர் ஒருங்கிணைப்பு அறிவிப்பு

 
 
 
ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் தமிழர்களை அழிக்க சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் முற்றுகைப் போராட்டம் நடத்த தமிழர் ஒருங்கிணைப்பு முடிவு செய்துள்ளது.
வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பெ.தி.க., த.தே.பொ.க., த.தே.வி.இ., தமிழர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கெடுக்கின்றன.

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற தாய்த்தமிழர்கள் கட்சி வேறுபாடு இன்றி இம்முற்றுகைப் போராட்டத்திற்கு வருமாறு உரிமையோடும் உறவோடும் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
தமிழர்கள் ஒருங்கிணைப்பு.

 

 

StumbleUpon.com Read more...

பிரணாப் முகர்ஜிக்கு அளித்த வாக்குறுதியை சிறிலங்கா அரசு மீறியது; இன்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்: 23 பேர் படுகொலை; 121 பேர் காயம்

 
 
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியா வெளியுறவு அமைச்சருக்கு  வாக்குறுதி வழங்கி 12 மணி நேரத்துக்குள்ளாகவே தமிழ் பொதுமக்கள் 23 பேரை சிங்கள அரசு எறிகணை வீசி படுகொலை செய்துள்ளது. மேலும் 121 பேர் காயமடைந்துள்ளனர்.
 
இன்று புதன்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 நிமிடம் வரை இடைவிடாத எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்றதாக வன்னி தகல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது ஜனாதிபதி இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் இருந்தார்.
ஆனால், 12 மணி நேரத்தில் அதுவும் பிரணாப் முகர்ஜி கொழும்பில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் வன்னியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே "மக்கள் பாதுகாப்பு வலய"ப் பகுதிகளான உடையார்கட்டு, மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம், வல்லிபுனம் ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாக அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவில்  பாரதிபுரம் உள்ள காந்தி சிறுவர் பராமரிப்பு இல்லம் மீது இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மற்றும் சுதந்திரபுரம் பிரதேசத்தில் உள்ள தென்இந்திய திருச்சபை (அமெரிக்கன் மிஸன்) தேவாலயத்தை இலக்குவைத்து தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போது மதகுருவான பங்குத்தந்தை ஆனந்தராசாவும் மேலும் மூன்று பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 2004 ம் ஆண்டு சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட் சிறுவர்களைப் பராமரிக்கும் செந்தளிர் இல்லம் மற்றும் வயோதிப பெண்கள் புனர்வாழ்வு அபிவிருத்தி நிலையம் என்பனவற்றை நோக்கியும் ஆடலறி தாக்குதலை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உடையார்கட்டு, தேவிபுரம், வள்ளிபுனம் பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் 45 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் இன்று வரையில் காயமடைந்தவர்களில் 556 பேர் மருத்துவமனையில் தற்போதும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 200 பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்

 

 

StumbleUpon.com Read more...

மாயைக்குள் மூழ்கியுள்ள அனைத்துலகமும் வன்னியில் தோன்றியுள்ள மனித அவலங்களும் - அருஷ்

 

 


- வேல்ஸிலிருந்து அருஷ் -

போரில் வெற்றி தோல்வி என்பது என்ன? ஒரு தரப்பின் பேரழிவு மறு தரப்பின் வெற்றியாக கொள்ளப்படுவதே போரியலின் வெற்றி தோல்விக்கான கருதுகோள். உதாரணமாக 1954 ஆம் ஆண்டு வியட்னாமில் தியான் பியன் பூ பகுதியில் பிரான்ஸ் படைகள் சந்தித்த பேரழிவை குறிப்பிடலாம். இந்த சமரில்  பிரான்ஸிய இராணுவத்தில் 7,000 இற்கு மேற்பட்டோர் கொல் லப்பட்டதுடன், 12,000 இற்கு மேற்பட்டோர் சரணடைந்திருந்தனர்.

ஆனால் தற்போது தென்னிலங்கையில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் வன்னிப் படை நடவடிக்கையின் வெற்றி தோல்விகள் தொடர்பான கருத்துக்களை கூறுவதற்கு படைத்துறை வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என மிகவும் பெரியதொரு கூட்டம் அலைமோதுகின்றது. எதன் அடிப்படையில் இந்தக் கூட்டம் அலைமோதுகின்றது.

படைத்துறை ரீதியாக விடுதலைப்புலிகள் பேரழிவை சந்தித்துள்ளார்கள் என்று இவர்கள் நம்பியுள்ளார்களா? அதற்காக முன்வைக்கப்பட்ட சான்றுகள் என்ன? என்பவை தான் இவர்களின் கருத்துகளை பார்க்கும் போது ஒவ்வொரு மனங்களிலும் எழும் மில்லியன் டொலர் கேள்விகள். ஏனெனில் படைத்துறை ரீதியாக எந்த ஒரு தரப்பும் அழிவை சந்திக்காத போது வெற்றி தோல்விகளை கணிக்க முடியாது. கைவிடப்பட்ட பதுங்கு குழிகளும், நிலங்களும், மரங்களும், அரச கட்டிடங்களும் ஒரு தரப்பின் பேரழிவாக கொள்ள முடியாது. இருந்த போதும் அரச தரப்பு மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் தென்னிலங்கையை மட்டுமின்றி அகில உலகத்தையும் ஒரு மாயைக்குள் தள்ளியுள்ளது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் 1995 களில் யாழ் நகரத்தை தமது தலைநகரம் என அவர்கள் அறிவிக்கவில்லை, ஆனால் சந்திரிகா அரசாங்கம் தனது போருக்கு வலுச்சேர்த்து, தென்னிலங்கையில் அதிக அரசியல் ஆதரவை திரட்டும் முகமாக யாழ்குடாநாட்டை விடுதலைப்புலிகளின் தலைமைத் தளமாக தானே பிரகடனப்படுத்திக் கொண்டது.

கிளிநொச்சி நகரத்தையும் விடுதலைப்புலிகள் தமது தலைநகரமாக அறிவிக்கவில்லை. அது அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு உகந்த இடம். மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசம். அவ்வளவு தான். ஆனால் விடுதலைப்புலிகளின் பிரதான தளமாகவும், தலைநகரமாகவும் கிளிநொச்சி நகரம் சித்திரிக்கப்பட்டது.

உலகின் விடுதலைப்போராட்ட வரலாறுகளை நாம் கருத்தில் எடுத்தால் அவர்களின் பிரதான நிலையிடங்களும், தளங்களும் அடிக்கடி இடம்மாறியிருந்ததை நாம் காணலாம். பண்டைய காலத்தில் நிலப்பரப்பை கைப்பற்றுவது அரசர்களின் வெற்றியாக கருதப்பட்டது, ஆனால் அதே நிலப்பரப்புக்கள் மீண்டும் அதற்கு உரிமை உடையவர்களால் கைப்பற்றப்பட்ட போது ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து தான் மெல்ல மெல்ல நவீன போரியல் உத்திகள் உருவாகியிருந்தன.

நவீன போரியல் தத்துவங்களில் நிலப்பரப்புக்களின் நீள அகலத்திலோ அல்லது ஆட்பல அதிகரிப்புக்களிலோ போரின் நகர்வு அதிகம் தங்கியிருப்பதில்லை. அதற்கு அப்பால் போரின் நகர்வுத்திறனை தீர்மானிக்கும் காரணிகளாக நவீன ஆயுதங்களும் அதற்கு ஏற்ற களமுனைகளும், போரியல் உத்திகளுமே அங்கம் வகிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் ஆட்தொகையையும், ஆயுத வளங்களையும் கருத்தில் எடுத்தால் விடுதலைப்புலிகளின் ஆட்பலமும், ஆயுத பலமும் குறைவானவை, எனவே அவர்கள் படைவலுச்சமநிலையை எட்டுவது என்பது கொள்கை ரீதியாக சாத்தியமற்ற ஒன்றாகவே முன்னர் பலருக்கும் தோன்றியிருந்தது. ஆனால் 2001 ஆம் ஆண்டு தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வியுடன் ஒரு பøடவலு சமநிலை ஏற்பட்டது எவ்வாறு?

படை வளங்களுக்கு அப்பால் போரியல் உத்திகள் படை வலுச்சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்து விடுகின்றன. உதாரணமாக ஏறத்தாழ 54 இலட்சம் யூத மக்களை கொண்ட இஸ்ரேல் எவ்வாறு பல கோடி மக்களை கொண்ட அரபு நாடுகளின் மத்தியில் வலுவுள்ளதாக திகழ்கின்றது? நவீன ஆயுதங்களும், நுட்பமான போரியல் உத்திகளும் தான் அதற்குக் காரணம்.
வன்னியின் தற்போதைய நிலையும் அதுதான். அரச தரப்பு விடுதலைப்புலிகளினதும், தமிழ் மக்களினதும் உளவுரண்களை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

 

பிரசார போரின் நோக்கமும் அதுவே. ஆனால் இதனைக் கொண்டு வெற்றி தோல்விக ளையோ அல்லது படைவலுச் சமநிலை களையோ யாரும் கணிப்பிட்டுவிட முடியுமா என்பதும் கேள்வியே.
இருந்த போதும் பாரிய படை வளத்துடன் இராணுவம் முல்லைத்தீவை நோக்கிய முற்றுகையை தீவிரமாக்கி வருகையில் கடற்படையினரும் முல்லைத்தீவில் இருந்து சுண்டிக்குளம் வரையிலான 20 கடல்மைல் நீளமான கடற்பரப்பில் 25 க்கு மேற்பட்ட கடற்படை கப்பல்களை நிறுத்தியுள்ளனர்.

இந்தப் படகு தொகுதியில் அதிகவேக டோராப்படகுகள், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புக் கடற் தாக்குதல் பிரிவு (குணீஞுஞிடிச்டூ ஆணிச்t குணுதச்ஞீணூணிண), விரைவு நடவடிக்கைப் பிரிவு (கீச்ணீடிஞீ அஞிtடிணிண குணுதச்ஞீணூணிண) போன்ற கடற்படை அணிகளும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்படை வரலாற்றில் இது மிகப்பெரும் சுற்றிவளைப்புக்கும் எனவும் இதற்கு வடபிராந்திய மற்றும் கிழக்குப் பிராந்திய கடற்படை வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் கடற்படையினரின் இந்த வியூகத்தின் மீது கடற்புலிகள் கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் ஒரு டோரா படகு மூழ்கடிக்கப்பட்டதுடன், அதில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதøலப்புலிகளின் நான்கு தாக்குதல் படகுகளை தாம் எதிர்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல்களில் தமது அதிவேகத்தாக்குதல் படகு ஒன்று கடுமையாக சேதமடைந்ததாகவும் கடற்படை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. வெடிமருந்து நிரப் பப்பட்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகு டோரா படகிற்கு அருகில் வெடித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (16) ஏ9 பாதையின் இரணைமடுப் பகுதிக்கு கிழக்காக 6 கி.மீ தொலைவில் உள்ள தர்மபுரம் பகுதிக்கு நகர்ந்த 571 மற்றும் 572 ஆவது பிரிகேட்டுக்களை சேர்ந்த இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது 51 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்திவெளியிட்டது. எனினும் 20 புலிகளும் 7 படையினரும் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கைக்கு 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் சிறப்பு கொமாண்டேப் படையினரை பயன்படுத்தியிருந்தார். இந்த நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலானது படைத்தரப்புக்கு மற்றுமொரு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
அதாவது, கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இரணைமடு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலின் போது ரீ55 ரக டாங்கியை பயன்படுத்தியிருந்த விடுதலைப்புலிகள் தற்போது, ரீ86 ரக கவசத்தாக்குதல் வாகனத்தை (அணூட்ணிதணூஞுஞீ ஊடிஞ்டtடிணஞ் ஙஞுடடிஞிடூஞு) பயன்படுத்தியுள்ளனர். இந்த வாகனமானது துருப்புக்காவியாகவும் பயன்படுத்தப்பட முடியும் (8 பேர் பயணம் செய்ய முடியும்). சோவியத்தின் ஆMக1 கவசத்தாக்குதல் வாகனத்தின் பிரதி வடிவமான இந்த வாகனம் சீன நாட்டு தயாரிப்பõகும். விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இதுவரை காலமும் பீரங்கி மற்றும் மோட்டார் படையணிகளின் வளர்ச்சியில் இராணுவத்தின் தாக்குதலுக்கு நிகரான வளாச்சியை கண்டிருந்ததுடன் அது படைத்தரப்புக்கு பாரிய பின்னடைவுகளை கொடுத்ததுடன், களமுனை மாற்றங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இராணுவத்தின் கவசத்தாக்குதல் படையணி பயன்படுத்தும் டாங்கிகளையும், கவசத்தாக்குதல் வாகனங்களையும் ஒத்த கனரக வாகனங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதைய டுத்து விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படையணியை உருவாக்கி விட்டனர் என்ற தகவலை இந்த தாக்குதலின் பின்னர் கொழு ம்பு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. ஓயாதஅலைகள்02, ஓயாத அலைகள்03 நடவ டிக்கை மற்றும் ஆனையிறவு மீட்பு நடவ டிக்கைகள் போன்றவற்றில் விடுதலைப் புலி கள் பெருமளவான கவசத்தாக்குதல் வாகனங் களையும் டாங்கிகளையும் கைப்பற்றியி ருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும் கடந்த வியாழக்கிழமை விசுவமடுவை அண்டிய நெத்தலியாறு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை நோக்கி முன்நகர்ந்த இராணுவ அணிகளின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களிலும் படைத்தரப்பு அதிக இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதித்தாக்குதல்களுக்கு இரு தரப்புகளும் தம்மைத் தயார்ப்படுத்தி வரும்போதும், வன்னியில் வாழும் மக்கள் குறுகிய நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் கடுøமயான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். அங்கு நடைபெற்ற தொடர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் கடந்த வியாழக்கிழமை வரை ஏறத்தாழ 146 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மூன்று தினங்களில் 88 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை வள்ளிபுனம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இயங்கிவந்த முல்லைத்தீவு வைத்தியசாலையும் எறிகணைத்தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது, இதன் போது 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 100 க்கு மேற்பட்டோர் காயமøடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்துவரும் இந்த மக்களை குண்டு வீச்சுக்கள் கடுமையாக பாதித்து வருகின்றன. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் அங்கு நடைபெற்ற தாக்குதல்களில் 146 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் பலர் சிறுவர்களும் குழந்தைகளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெருமளவில் காயமடையும் மக்களை பராமரிக்கும் வைத்தியசாலை வசதிகள் அங்கு இல்லை. இந்த நிலையில் காயமடையும் மக்கள் வீடுகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட படுக்கைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதும் வேதனையானது. இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், உலகின் ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒன்றுபட்டு வருகையில் அதிக தமிழ் மக்களை கொண்ட தமிழகத்தின் பங்களிப்புகள் காத்திரமான செயல்திறனை ஆற்ற முடியும். உலகெங்கும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்திவரும் போதும் அனைத்துலக சமூகம் இது தொடர்பில் அதிக கவனம் எடுக்காதது வேதனையானது.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதும், அதனை நடைமுறைப்படுத்தி வருவதும் ஒருபுறம் இருக்க, பேச்சுக்களின் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறைகூவல் விடுத்து வந்த அனைத்துலகத்தின் முக்கிய நாடுகளும் இன்று தமிழ் மக்கள் பாரிய ஒரு  நெருக்கடிக்குள் நிற்கையில் மௌனமாகி போனது கவலையானது. அனைத்துலகத்தின் ஊடகங்களும் இந்த மனித அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் பாரபட்சம் காட்டி வருகின்றன. இவை தவிர தமிழ் மக்களின் போராட்டம் படைத்துறை ரீதியாக நசுக்கப்பட்டால் இலங்கையில் கால்பதிப்பது யார் என்ற போட்டிகள் அனைத்துலகின் வல் லரசு நாடுகளிடம் ஏற்பட்டுள்ளதை தற்போது உணரமுடிகின்றது. இலங்கைக்கு வந்து செல்லும் அதிகளவான படை அதிகாரிகளினதும், ஆலோசகர்களினதும் வரவுகளில் இருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவும் தனது உளவு விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பான "றோ'வின் விமானம் ஒன்று வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் பாக்கு நீரிணைக்கு மேலாக வந்த விமானம் முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து பின்னர் மீண்டும் அதே பாதையினால் திரும்பி சென்றுள்ளது எனவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விமானம் எதுவும் பறக்கவில்லையென கடந்த வியாழக்கிழமை விமானப்படைப் பேச்சாளர் ஜனக
நாணயக்கார அதனை மறுத்திருந்தார். கடந்த ஜனவரி 3 ஆம் நாளும் விமானம் மூலம் வன்னிப் பகுதியை இந்திய உளவு அமைப்பு கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 2006 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலும் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், 27 பேர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என அரச தரப்பின் பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெருமளவான ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். எஞ்சியுள்ள ஊடகவிய லாளர்களும் போர் தொடர்பாக அரசாங்கம் வெளியிடும் தகவல்களை எழுதிவிட்டு மௌ னமாக இருந்துவிடுகின்றனர். எனவே வன் னிப் போர் நடவடிக்கையில் ஒரு தரப்பின் தக வல்கள் தான் அனைத்துலகத்தின் கவனத் துக்கு அதிகம் செல்கின்றன. இந்த தகவல் களை நம்பியே அனைத்துலகத்தின் கணிப்பீ டுகளும், செயற் பாடுகளும் அமைந்துள்ளன.

 

http://www.pathivu.com/news/14/54//d,view.aspx

StumbleUpon.com Read more...

மனிதப் படுகொலைகளை நிறுத்தக் கோரி யாழ் ஆயர் தலைமையில் உண்ணா விரதப் போராட்டம்

 


அரச படையினரால் மேற்கொள்ளப்படும் மனிதப் படுகொலைகளை நிறுத்தக் கோரியும் இடம்பெயர்ந்து வாழும் லட்சக் கணக்கான மக்களின் நலன் கோரியும் யாழ் ஆயர் தலைமையில் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டம்

யாழ் ஆயர் வணக்கதிற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில்  ஆயரின் வணக்க ஸ்தலமான யாழ் பெரிய கோவில் முன்னறிலில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள இதன் போது  குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துமாறு அவர் வேண்கோள் விடுத்துள்ளார்

யுத்த சூன்ய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசம் இடம்பெயர் சிவிலியன்களது எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குறைவாகக் காணப்படுவதாகவும், இதனால் சிவிலியன் நலன் கருதி குறித்த பகுதியை விஸ்தரிக்குமாறு கோரியுள்ளார். இவ்வாறு கிழக்கு பகுதியிலும் பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட வேண்டும் இது முற்றிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

StumbleUpon.com Read more...

மீண்டும் "செம்மணி" புதைகுழிகள்?: வெளியேறிய 100-க்கும் அதிகமான இளைஞர்கள்- பெண்களை கொன்று புதைத்தது சிறிலங்கா!

 
 
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம், பொலநறுவையில் உள்ள மயானங்கள், காட்டுப் பிரதேசங்கள் மற்றும் வவுனியாவில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற பற்றை பகுதிகள் போன்ற இடங்களிலேயே கொல்லப்படும் இளைஞர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுவதாகவும் பெண்களின் உடலங்கள் எரிக்கப்படுகின்றது என்றும் நேரில் கண்ட சிங்கள தொழிலாளர்கள் அனுராதபுரத்தில் உள்ள பிரதேச ஊடகவியலாளர்கள் சிலரிடம் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்
27 பெண்கள் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர் என்றும் அனுராதபுரம் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போன அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் குறித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாது உள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
அப்படி இருந்தும் சில முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் ஆணைக்குழு அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுப்பு தெரிவித்துள்ளனர். 
வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் வவுனியா நகருக்கு வெளியே செல்ல முடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன.
வவுனியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அவர்களை பார்வையிட முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் 600-க்கும் அதிகமான இளைஞர்கள், பெண்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு ஒன்று சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்போதைய சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா அப்போது யாழ். மாட்ட கட்டளை அதிகாரியாக கடமையாற்றி இருந்தார் என்பதே அதற்கு காரணமாகும்.

யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமராசாமி அரியாலை சந்தியில் உள்ள படையினரின் சோதனைச் சாவடியில் கைதாகி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போதே செம்மணி புதைகுழி விவகாரம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

StumbleUpon.com Read more...

வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்

 
 
சு.ஞாலவன்

 
யூத மக்கள் மீதான இனப்படுகொலையை இந்த உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. வருடா வருடம் தவறாமல் நினைவு கூரவும் வேறு செய்கிறது. ஆனாலும், உலகெங்கும் தலைதூக்கும்இனக்குரோத உணர்வுகளையும், அதற்குத் தூபமிட்டு கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலைகளையும், புதிய புதிய ஹிட்லர்களையும இனங்கண்டு மனிதாபிமான முன்னெடுப்புக்களைச் செய்வதற்கான பொறுப்புணர்ச்சியோ அன்றி நாகரிக முதிர்ச்சியோ இன்னும் தான் சர்வதேசத்திற்கும் அதன் பல்வேறு பெயர் சூட்டல்களுடன் கூடிய நிறுவனங்களுக்கும் கிட்டிவிடவில்லை என்பதை ஒவ்வோர் ஈழத்தமிழனாலும் அதிகமாகவே உணரமுடிகிறது.

 
"பயங்கரவாத" த்தைப் போலவே விருப்பிற்கேற்ப ஒவ்வொருவரும் அர்த்தம் கற்பிக்கும் "சனநாயக" மான இவ்வுலகிலே இறைமையின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடுமைகள்யாவும் அங்கீகாரம் பெறுவது வேதனைக்குரியது. இப்படியான சூழலிலே தமது இருப்புக்களை கௌரவமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கை மட்டுமே கொண்ட பல்தரப்பு பிரமுகர்களினதும் கண்டனம் அல்லாத கவலைகள் மற்றும் அக்களை போன்ற அனுதாப அறிக்கைகளால் அல்லலுறும் மக்களுக்கு ஆவது ஏதுமில்லை.

 
இவ்வாறிருக்க ஈழத்தமிழ் இனத்திற்கு வேறெந்த தீர்வு அல்லது தெரிவு எஞ்சியுள்ளது என்ற கேள்வி முக்கியம் பெறுகின்றது. இப்போது நம் தாயகம் எதிர்கொள்ளும் நிலைமையின் தீவிரமும் நெருக்கடியும் தமிழர் பலம் பலவீனமாகி விட்டதான  கேள்வியை ஒரு சிலர் மத்தியில் எழுப்பக்கூடும். அவ்வாறு ஒரு சிலரிடையே எழும் எண்ணமானது தமிழினத்தின் எதிர்காலத்தை இல்லாமற்செய்ய விளையும் சிங்களப் பேரினவாதத்தின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் விதத்தில், சிலரால் விவாதிக்கப்படுவது குறித்து நாம் விழிப்பாயிருக்கவேண்டும்.

 
"இன்றிரவுதான் உனக்குக் கடைசி இரவு: நாளை என்பது உனக்கு இல்லவே இல்லை!"

 
என்று யாராவது நமக்குச் சொல்ல, அதையே நாமும் நம்பி எங்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதற்கான எமது ஆற்றலைக் கைவிடலாமோ?

 
'யுத்தங்களின் வெற்றிகள் களங்களில் தீர்மானிக்கப்படுவதில்லை மாறாக அதில் ஈடுபட்டுள்ளவர்களின் மனங்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது' என்கிறது. நீண்டகாலமாகவே தன்னை நிலைநிறுத்தி வரும் முதுமொழி ஒன்று.

 
ஆகவே நாளை மீதான நம்பிக்கையை மறுதலிக்கும் நச்சுக்கருத்துக்களை இனங்கண்டுடனே புறந்தள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.அதேவேளை தமிழர் பலர் இன்று பலவீனப்பட்டுள்ளது என்பது உண்மையல்ல! மாறாகச் சிங்களப் பேரினவாதம் மூன்றாமுலக நாடொன்றிற்கு முற்றிலும் பாதகமான விரலை மீறிய வீக்கத்துடன் தனது ஏனைய சகல ஒதுக்கீடுகளையும் வலுவாகவே மட்டுப்படுத்திக்கொண்டு, நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாத விலையேற்றங்களின் துணையுடன் பற்களைக் கடித்துக்கொண்டு தனது முழுப்பலத்தையும் ஓரிடத்தில் குவித்து முக்கிக் கொண்டிருக்கிறது.

 
தனது தரப்பு இழப்புகளை வெளிவிடாத ரம்புக்வெல கூட கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3000 படையினர் (நாளொன்றுக்கு 33 படையினர்) கொல்லப்பட்டு 12,000 பேர்வரை காயமடைந்ததாக (அங்கவீனர்களாக) தெரிவித்துள்ளார்.

 
ஆக மூன்று மாதங்களில் 1500 0 படையினரை இழக்கும் இந்நிலையை சிறிலங்காவின் படைத்தரப்பால் தொடர்ந்தும் ஈடுசெய்து கொள்வது சாத்தியமானதா என்பதைத் தெளிவாகவே நம்மால் உணரமுடியும். அதேவேளை இப்படியானதொரு தீவிர விலைகொடுபப்ற்கு அது தயாராக உள்ளதற்கு வலுவான காரணம் இருக்கவே செய்கிறது.

 
ஒரு பெரும்பான்மை இனத்தின் அரச கட்டுமானத்துடன் கூடிய தனது படைகளுக்கு ஏற்படும் இழப்புக்களும் நெருக்கடிகளும் அதற்குக் காரணமான விடுதலைப்புலிகளுக்கும் ஏதோ ஒரு விகித அளவிலாவது ஏற்படத்தானே வேண்டும். ஆகவே தனக்கு இரண்டு கண்கள் போனாலும் போகட்டும்: புலிகளுக்கு ஒரு கண் ஆவதுபோகட்டும் என்ற கணிப்பிலே தன்னால் முடிந்ததற்கும் மேலான தளபாட வளங்களை உலகெங்கிலுமிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டு, தனது படைப்பலத்தை ஒன்று திரட்டி வன்னிக்கான முற்றுகைப்போரில் இறங்கியிருந்தது.

 
ஒப்பீட்டளவிலே சிங்களப் படைகளின் இழப்பு அதிகமாயினும், தமிழர் தாயகம் துண்டாடப்பட்டுள்ளநிலையில் தனது ஆளணி வன்னிக்குள்ளே மட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில் புலிகளால் நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்கமுடியாது என்ற இறுமாப்புக்கணிப்பீட்டிற்குள் சிங்களப் பேரினவாதம் மூழ்கியுள்ளது. இதை உணர்ந்தவர்களாகவே இன்று வன்னி வாழ் தமிழன் ஒவ்வொருவரும்ஃஒவ்வொருத்தியும் வீரச்சாவாகி விதைதவர் விட்டுச்சென்ற இடத்தை, கடமையைத் தம் தோளில் ஏற்றிக்கொண்டு தயாராகஉள்ளனர்.

 
ஆக்கிரமிப்பு வெறியர்களில் கடைசியானவானும் வீழ்த்தப்படும்வரை ஒவ்வொரு தமிழனும், குறிப்பாக எல்லைகள் மீட்க்கப்படும் வரைக்கும் இப்போதைய வன்னியில் சகலரும் ஈழத் தமிழினத்தின் தலைவிதியை எழுதும் தற்காலக் கடமையை ஆற்ற வேண்டியது அவசியம்.

 
ஒற்றைத் துரோகியால் எம்மினம் ஒருபோதும் பலமிழந்து போகாது. ஏனெனில் ஆணிவேர்களுடன் பக்கவேர்களும் ஆயிரமாயிரமாய் அணிவகுத்து நிற்க, ஒட்டுண்ணியாகிவிட்ட ஒற்றைக் கோடரிக் காம்பைக் காட்டி ஒப்பாரிவைப்பதில் அர்த்தமில்லை. சூரியனுக்கு சொந்தமானவர்களான நாம் சோகத்தைச்சூட்டிக்கொள்ளக் கூடாது. வெறுமனே ஐந்து ஆண்டுகளில் மட்டுமே 60 இலட்சம் (ஆறுமில்லியன்) மக்களை இப்படுகொலைக்குப் பறிகொடுத்த யூத இனம் இவ்விடத்தில் எங்களுக்கு அநேகமான வரலாற்று படிப்பினைகளைத் தந்து நிற்கின்றது.

 
அதிலும் குறிப்பாக மிகவும் பகிரங்கமாகவே தனது இப்படுகொலையைத் தமிழர் மீது மேற்கொண்டுவரும் சிங்களத்தைக் கண்டிக்கும் நேர்மையற்று. வெற்றுச் சாட்டுப்போக்குகளை அறிக்கைகளால் விடுத்துவரும் பன்னாட்டு பிரமுகர்களின் பாராமுகம் பெருத்த ஏமாற்றத்தை நமக்கு அளித்து வருவதைப் போலவே யூதர்களின் அன்றைய ஏமாற்றமும் கொடூரமானது.

 
அதிலும் நேச நாடுகளால் மிகமோசமான கொலைகாரணக விமர்சிக்கப்பட்ட ஹிட்லரினால் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதன் பின் மண (உழnஉநவெசயவழைnஉயஅpள) எனப்படும் தடுப்பு முகாம்களில் அரைப்பிணங்களாக உயிர்பிழைத்த யூதர்கள் இஸ்ரேலிற்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் அங்கே செல்வதை அரேபியர்கள் விரும்பவில்லை.

 
எண்ணெய் வழங்கும் அரேபியர்கள் விருப்பத்தை மறுதலிக்க மேற்குலகமும் தயாராக இருக்கவில்லை. விளைவு: யூதர்கள் சைப்ரஸ் தீவிலே நாசிகளின் தடுப்பு முகாம்களுக்கு இணையான, ஆனாலும் 'நலன்புரிமுகாம்' என்ற பெயரிலேமோசமான நிலைமைகளின் கீழ் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தளர்ந்து போய்விடவில்லை. யூதர்கள் அம்முகாம்களிலிருந்தும் ஏனைய இடங்களிலிருந்தும் தப்பி இஸ்ரேலிற்குச் சென்று பிரித்தானியர் மற்றும் பல்வேறு அரபு நாட்டுப் படைகளையும் எதிர்த்துப் போராடித்தாயகத்தை வென்றெடுத்தனர்.

 
இதற்கான பயிற்சிகளை சைப்ரஸ் முகாம்களில் இரவு வேளைகளிலே தும்புத்தடி, கற்கள், பொல்லுகளை துப்பாக்கிகளாகவும் எறிகுண்டுகளாகவும் எறிகுண்டுகளாகவும் பாவித்தே பெற்றிருந்தனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இன்றுங்கூட அரபு நாடுகளிடமே எண்ணெய் வளம் குவிந்து கிடக்கிறது. ஆனாலும் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் தனக்குச் சார்பாக அல்லது குறைந்தபட்சம் தன்கெதிராகப் பேசமுடியாதவாறு சர்வதேச அரசியற்களத்தைத் தனக்குச் சாதகமாக இஸ்ரேல் வென்றெடுத்துள்ளது.

 
ஆகவே அடுத்தவர் நமக்கு ஆதரவாக வருவாரெனப் பார்த்துக்கிடக்காமல், ஆகவேண்டியதை நாம் முன்னெடுப்பதனூடாகவே உள்நாட்டிலும் உலக அரங்கிலும் எங்களுக்குச் சாதகமான சூழலைவென்றெடுக்கமுடியும்.

 
இவ்விடத்தில் 1ஆம் உலக நாடான போலந்து தேசம் நேற்றோ - கூட்டமைப்பிலே இணைந்து கொள்ள விண்ணப்பித்தபோது, அதன் வான்படையின் வளப்பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, ஜேர்மனி தன்னிடமிருந்த சில மிக்-27 விமானங்களை அதற்கு நன்கொடையாக வழங்கியிருந்தது. ஆரம்பித்தில் மிகவும் நன்றியுணர்வோடு இவற்றைப் பெற்றுக்கொண்ட போலந்து பின்னாளில் அவற்றின் பராமரிப்புச் செலவு பாரதூரம் என்பதனாலேயே சற்றே காலம் கடந்ததுடன் கைகழுவி விட்டது ஜேர்மனி என்பதை உணர்ந்துகொள்ளத் தொடங்கியிருந்து.

 
ஆக உலகின் முன்னணி நாடுகளான ஜேர்மனி மற்றும் போலந்திற்கே கட்டுப்படியாகாதவற்றையே சிறிலங்கா கொள்வனவு செய்துவைத்துள்ளது.

 
பணிப்பெண்களாக அனுப்பப்பட்ட தனது குடிமக்கள் துஷ்பிரயோககப் படுத்தப்பட்ட போதிலும் தட்டிக்கேட்காமல் அந்நியச் செலவணியை அறவிட்டாலே போதுமென அங்கலாய்த்துக்கிடக்கும் சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவிலேயே, நிலைகுலைந்து எரித்திரியாவை ஆக்கிரமித்த எதியோப்பியா ஈற்றில் தோல்வியுடன், எச்சில் நடாக உலகில் அடையாளம் பெற்றதைப் போன்ற இக்கட்டை அடையும் சில நாடுகளின் நயவஞ்சகமான முண்டுகொடுத்தல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே சாத்தியப்படும்.

 
மூழ்கும் கப்பலில் எந்த முட்டாளும் ஏறமாட்டான் என்பது இந்தப் பின்புல ஆதரவுநாடுகளுக்கு அதிகமே பொருந்தும். தயாகம் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில் அழகாய் இருப்பதோ, ஆரோக்கியமாய் இருப்பதோ மட்டும் ஆபத்தில்லை: ஆக்கிரமிப்பாளனுக்குக் கீழே அடிமையாய் இருப்பதுவும்கூட ஆபத்துதான். ஏனெனில் இனப்படுகொலையின்போது அடிமைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை.

 
அதிலும் சிங்களப் பேரினவாதத்திற்கு அன்போ, மானுடமோ புரியாது. அதற்குப் புரியும் மொழி ஒன்று மட்டுமே! அதைப் பேச எழுவது ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களினதும் உடனடிக் கடமையாகவுள்ளது. ஆகவே வலிகளுக்காக நொந்து கிடந்து அழுவதை விடுப்போம்: வலிகளிலிருந்தும் வலிழம பெறுபவர்களாய் எழுவோம்! வாழ்வோம்!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!

 
அடக்கி, ஒடுங்கிப்போன 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இனப்படுகொலை அவர்களின் வரலாறானது. எஞ்சிய 40 இலட்சம் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டினை உருவாக்கி இன்று உலகின் விதியையே தீர்மானிக்கிறார்கள்! ஆகவே நாம் எப்படி இருப்போம் என்பதை நாமே தீர்மாகிக்கிறார்கள்! ஆகவே நாம் எப்படி இருப்போம் என்பதை நாமே தீர்மானிப்போம்! முடியாதவர்கள் மூக்கைச் சொறியட்டும், ஏனையவர்கள் எதிர்காலத்தை எமதாக்கட்டும்!!
 

StumbleUpon.com Read more...

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஒபமா முற்றுப்புள்ளி

  
'பயங்கரவாத்திற்கு எதிரான போர்' என்று கூறிக்கொண்டு சிறிலங்கா தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கொண்டுவந்த திட்டத்திற்கு தற்போதைய புதிய ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 
இன்று வியாழக்கிழமை அமெரிக்க புதிய அதிபர் பராக் ஒபாமா ஒரு ஆணை பிறப்பித்திருக்கின்றார். புஷ் அரசு கொண்டு வந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற திட்டத்திற்கு முடிவு கட்டும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதேநேரம், இத்தனை நாளும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடத்தி வந்தபோரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

 
ஒரு ஜனாதிபதியானவர் வெறும் போரை மட்டும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது என வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு இது தொடர்பாக அவர் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

 
அத்துடன், புஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உளவுக் கட்டமைப்பு அதிபர் ஒபமாவினால் துடைத்தழிக்கப் பட்டுள்ளது. கியூபாவில் அமைந்துள்ள 'கொண்டனாமாவே' முகாம் மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு வசதியாக புஷ் அரசாங்கத்தினால் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

 
இதேவேளை, உலகம் எங்கும் சி.ஐ.ஏ. நடத்தி வந்த இரகசிய சிறைகளும் ஒபமாவினால் தடை செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, முக்கியமாக செப்டெம்பர் 11 2001ற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட வழங்கறிஞர்களின் வாதங்களையும், சட்ட ஆணைகளையும், விசாரணைக் கருத்துக்களையும் தள்ளுபடி செய்துள்ளார்.

 
இது ஒரு சடுதியான வரலாற்று திருப்பம். அமெரிக்க வரலாற்றில் ஒபமாவின் முடிவு ஒரு சடுதியான மாற்றம் எனக் கூறப்படுகின்றது. அதேவேளை, அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிராக மக்கள் வைத்திருந்த அபகீர்த்தி ஒபமாவின் இந்த முடிவின் மூலம் களையப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

 
இது இவ்வாறிருக்க, ஒபமா அதிபராகப் பதவியேற்ற போது சிறிலங்கா அறிவித்த வாழ்த்துச் செய்தியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒபமாவுடன் தோளோடு தோள் நிற்போம் என்று அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிறிலங்காவிற்கு பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

தமிழ் பத்திரிகைகள் சிங்கள மக்களுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன: பத்திரிகை ஆசிரியர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

 
 
பத்திரிகைகள் பக்கம் சாராது நடுநிலைமையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்புண்டு. தமிழ்ப் பத்திரிகைகள் தமிழர்களிடத்தில் சிங்கள மக்களுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று மாலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகள் மெதுவாக முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதோடு நாட்டில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன்
ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைக்கவோ இழுத்தடிக்கவோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
ஊடகவியலாளர்களைத் தாக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது. அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கும்போது இத்தகைய கேவலமான வேலையை செய்ய வேண்டிய எந்தத் தேவையும் அரசுக்கு இல்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்படும்போது அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமானதொரு செயலாகும்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பன தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரிகைகள் பக்கம் சாராது நடுநிலைமையூடன் செய்திகளை வெளியிட வேண்டும். குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்புண்டு. தமிழ்ப் பத்திரிகைகள் தமிழர்களிடத்தில் சிங்கள மக்களுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.இச்செயல் நாட்டு மக்களுக்கு மத்தியில் பாரதூரமான குரோதத்தை ஏற்படுத்தி அமைதியின்மையைத் தோற்றுவிக்கும்.
அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவேயன்றி தமிழ் மக்களுக்கெதிரானதல்ல.
வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செயற்பட வேண்டும். புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகளை வலியுறுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dPj0K0ecQG773b4F9EM4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

முதஎழுவது நீயா ? நானாலில் யார்

  
வன்னியில் மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது, ஏறத்தாள நான்கு இலட்சம் மனித உயிர்கள் தமது அடுத்து நிமிட இருப்பிற்கான உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் உணவு வாகனத் தொடரணி வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அங்கு வாழும் அப்பாவி மக்கள் உணவின்றியும் இறக்கும் நிலை ஏற்படும்.

எப்படியாவது தமிழர்களின் தொகை குறைந்தால் சரி என்ற தென்னிலங்கையின் எதிர்பார்ப்பிற்கு பல வழிகளில் ஆதரவு பெருகுகின்றது.

பருவம் தப்பி பெய்யும் மழையும் வன்னியில் நாளாந்த இடம்பெயர்வை சந்திக்கும் மக்களை தனது பங்கிற்கு வதைத்து அழிக்கின்றது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்சவை அழைத்து ஐநாவின் செயலாளர் நேற்று பேச்சு நடத்தியிருக்கின்றார். என்ன பேசினார்கள் என்பது முக்கியத்துவமற்றுப் போனாலும் பேச்சுவார்த்தையின் பின்னர் வன்னிக் களமுனையில் மாற்றங்கள் ஏற்படாதமையால் அது நிச்சயம் தமிழர்களுக்கு சாதகமான பேச்சுவார்தை அல்ல என்ற நிலைப்பாட்டிற்கு நாம் இலகுவாக வரமுடியும்

எனினும் இந்தச் சந்திப்பில் அரசாங்க தரப்பு வன்னிக்கான சில வார கால உணவுத் தடையை ஏற்படுத்துமாறு ஐநாவின் செயலரை கோரியதாகவும் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஐநா அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னிக்கான உணவுத் தடை என்பது மக்கள் மேல் தாம் கொண்ட அக்கறை காரணமாக ஏற்படுத்தபட வேண்டிய ஒன்று என்பதே அரசாங்க தரப்பு வாதம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மக்களின் சுயாதீன நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் வரை அந்த பகுதி மக்களுக்கு உணவு விநியோகம் நடத்தப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் அறிவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

மனிதாபிமான செயல்பாடுகளுக்கான அமைப்பு என்ற போர்வையில் இயங்கும் ஐநாவோ அல்லது வேறு எந்த அமைப்போ அவ்வாறான ஒரு முடிவினை அறிவித்தால் கூட தமிழர் தரப்பால் எதுவும் செய்ய முடியாது. அந்த நிலையை தான் நாங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்.

இன்று வன்னி மக்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய பேசும் உலகிடம் வன்னியில் இருந்து வந்து வவுனியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் அவலங்களை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி யுத்தமற்ற சூழலில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் கனவுடன் வெளியேறிய நூற்றுக்கணக்கான மக்களின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகிப் போன சோகத்தை நாங்கள் மிகக்கவனமாக மறந்து விட்டோம்.

வன்னியில் இருந்து வெளியேற மட்டும் தான் புலிகள் தடை விதித்திருந்தார்கள். ஆனால் மனிக் பாமில் இயற்கை உபாதை கழிப்பிற்கு கூட பாஸ் எடுக்க வேண்டியிருக்கின்றதே என்ற ஆதங்கங்களை கேட்க முடிகின்றது.

வன்னியில் இருந்து வவுனியாவிற்கு வந்த மக்களுக்காக முழுமையான நடமாடும் சுதந்திரத்தையும் அரசும் அதன் இயந்திரங்களும் பறித்துவிட்டமை பற்றி எவரும் பேசுவதில்லையே ஏன் ?

தமிழ் தேசியவாதம் வளர்க்கும் ஊடகங்களைப் பொறுத்த வரை அவர்கள் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள், வன்னியில் இருந்து செத்து மடியாமல் சொகுசு வாழ்விற்காக எதிரியிடம் சரணடைந்தவர்கள் அவர்கள் எப்படி போனால் நமக்கென்ன என்ற 'நல்ல' எண்ணம்.

மனிக் பாம் நெலுக்குளம் இன்னும் சில தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்ல வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அங்கு இல்லை.

அவர்கள் பாவம் மனைவி குழந்தைகளை பத்திரமான அயல் நாட்டில் தங்க வைத்து விட்டு பாராளுமன்ற ஆசனத்தை கட்டிப்பிடிப்பதற்காக அங்கும் இங்குமாய் பறந்து திரியவே நேரம் போதாமல் இருக்க மனிக் பாமும் மண்ணாங்கட்டியும்.

திறந்த வெளிகளில் சிறைவைக்கப்பட்டுள்ள மக்களில் இளவயதினர் தினமும் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்... செல்லப்படுகின்றனர்... செல்லப்படுகின்றனர்.. ஆம் அவர்களில் பலர் திரும்பவே இல்லை.

அவர்கள் பற்றியும் நாம் பேசமாட்டோம் ஏனென்றால் அவர்கள் துரோகிகள்.

கடந்த புதன்கிழமை 5 இளம் யுவதிகள் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் எல்லா விசாரணைகளும் நடத்திய பின்னர் மேல் விசாரணைக்காக அவர்களை மேலுலகம் அனுப்பியிருக்கிறது பாதுகாப்புத் தரப்பு.

இது தவிர விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மேலும் பலர் அனுராதபுரத்தின் மக்கள் நடமாட்டமற்ற வனப்பகுதிகளில் வைத்து கொலை செய்யப்பட்டு எரியூட்டபட்டுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள பெரும்பான்மையின ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்து செல்பவர்களை கொன்று புதைக்க வேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவு மேலிடத்தில் இருந்து கிடைத்திருக்கின்றதாம். இது மகிழ்விற்குரியதல்ல கொன்று எரித்து விடுங்கள் என்பது தான் உத்தரவாம். தமிழர்கள் என்பதால் அவர்கள் பாரம்பரியப்படி எரித்துவிடச் சொல்கின்றார்கள் என்று நீங்கள் எண்ணமாட்டீர்கள். காரணம் மேலும் ஒரு செம்மணி விவகாரம் உருவாகாமல் பார்த்து நடக்குமாறு பெரியவர் சொல்லி இருக்கின்றார்.

ஏற்கனவே யாழ்மாவட்ட கட்டளை தளபதியாக சரத்பொன்சேகா இருந்த போது நடைபெற்ற செம்மணி புதைகுழிகள் எம்மில் பலருக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் பொன்சேகா அதை மறக்கவில்லை அதனால் தான் கொல்லப்படுகின்றவர்களின் உடலங்களை எரிக்கும் உத்தரவை கண்டிப்புடன் பிறப்பித்திருக்கின்றாh.;

அவர்கள் பற்றியும் நாம் பேசமாட்டோம் ஏனென்றால் அவர்கள் துரோகிகள்.

சரி புலிசார்பு ஊடகங்கள் இவர்கள் பற்றி பேசமால் இருப்பதற்கு காரணங்கள் மலிவாக இருக்கின்றன.

புலிஎதிர்ப்;பு புஸ்வாணங்கள் ஏன் மௌனம் காக்கின்றன? புலிகளுக்கு எதிரான அமைப்புகள் ஒவ்வொன்றும் தமக்கென்று ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களையும் வானொலிகளையும் நடத்தி வருகின்றன. இவை எவையும் மக்கள் பற்றி கதைப்பதில்லை மாறாக புலி எதிர்ப்புப் புராணங்களை மட்டுமே பாடித் தீர்க்கின்றன.

இவை மக்களின் அவலங்களின் ஊடு புலி எதிர்ப்பு காரணிகளை மட்டுமே தேடுகின்றன.

அதனால் புலிகளில் இருந்து விடுபட்ட மக்கள் பற்றி அவர்கள் எண்ணி பார்க்க மறந்து விடுகின்றார்கள்.

வவுனியாவில் புலிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அலுவலகங்கள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் இந்த மக்களின் அவலங்கள் தெளிவாக தெரிந்தும் ஆனாலும் மௌனமாகவே இருக்கின்றார்கள்

சரி அவர்களையும் விட்டு விடுவோம் இலங்கையில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு வலயங்களினுள் வாழ்பவர்கள், அரசாங்கத்தின் பிச்சையேற்று உண்பவர்கள் அவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக பேச மட்டுமல்ல சிந்திக்கவும் முடியாது.

அப்படியானால் புலத்தில் அரங்கேறும் ஜனநாயக ஊடகங்கள், புலிப்பாசிசத்தில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கதறிஅழும் ஜீவன்கள் இந்த விடயத்தை கவனிக்காமல் போனது ஏன் ?

இதிலும் காரணம் தேடும் தேவைகள் இல்லை. மாற்று கருத்து, சுதந்திரமான கருத்தால் உரிமை, ஜனநாயகம், முதலாளித்துவ எதிர்ப்பு, அதிகாரத்தை நோக்கி உண்மைகள் பேசும் முனைப்பு எல்லாம் புலி எதிர்ப்பின் பால் தோற்றம் பெற்றனவே அன்றி அவர்கள் கூறும் ஜனநாயகம், சோசலிசம் சார்ந்த கோட்பாட்டு வயப்பட்டிருக்கவில்லை.

மக்களின் வாழ்வியல் உரிமைகள் குறித்தும் அவர்களின் ஜனநாயகம் குறித்தும் கடிவாளம் இடப்பட்ட கண்கொண்டு அவர்கள் பார்கின்றார்கள். எப்படியாவது புலிகளையும் ஜனநாயக மறுப்பையும் ஒருகோட்டில் இணைக்க கிடைத்தால் போதும் ஏசி அறையில் ஓசியில் கிடைக்கும் காசில் வாங்கி கணனித்திரையில் தங்கள் தத்துவ வித்தகங்களை கொட்டித் தீர்ப்பார்கள்.

இவர்களின் வெளிப்பாடுகளின் அடிநாதமாய் இருப்பது புலிஎதிர்ப்பு வாதம் மட்டும் தான்.

ஆக மொத்தம் எந்த மக்களின் விடுதலைக்காக போராட இவர்கள் எல்லோரும் புறப்பட்டார்களோ அந்த மக்களை எல்லோரும் கூட்டமாக மறந்து விட்டார்கள்.

தமது இருப்புக் குறித்தும் அதனை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது குறித்தும் புலிகள் சிந்திப்பதும் அதற்கு உடந்தையாக மக்களை பயன்படுத்த முனைவதும், அதே மக்களை புலிகள் தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்துகின்றார்கள் என்ற கோசங்களின் ஊடே புலி எதிhப்பு பிரசாரம் செய்வதும் ஒன்று தான்.

இரண்டின் ஊடாகவும் மக்களின் விடுதலை என்பது கிடைத்துவிடப் போவதில்லை.

அதிமேதாவித்தன எழுத்துக்களால் புலிகளை வசைபாடும் தோழர்களும் எழுச்சி மிக்க வார்தைகளில் மக்களை சிக்க வைத்து உங்கள் இருப்புகளை உறுதிப்படுத்த முற்படும் புலிசார்ப்பு ஊடகங்கள் மற்றும் அமைப்புகளும் ஒரு கணம் இந்த மக்களை பற்றி மட்டும் சிந்தித்து பாருங்கள்..

புலிகளும் சரி புலி எதிர்பாளர்களும் சரி உடனடியாக மாறிவிடுவார்கள் என்று எதிர்பார்பது தவறு தான். ஆனாலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் நிலைக்காவது நாங்கள் மாற வேண்டும் என்பது தான் ஆதங்கம்.

நீங்கள் எல்லோரும் ஒன்றாய் எழுத்து மக்களுக்காக குரல் கொடுத்தால் எல்லாம் கிடைத்துவிடும்.

என்ன செய்ய ஒன்றாய் எழுவதென்றால் கூட முதலில் நீயா நானா என்ற கேள்வி தானே முந்திக்கொண்டு எழுகின்றது.

தமிழனின் தலையெழுத்தை இந்த பேனாவை கொண்டு எப்படி தான் மாற்றி எழுதுவது.

 
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233133479&archive=&start_from=&ucat=&
 

 


  13  user online 

StumbleUpon.com Read more...

இலங்கையின் உள்விவகாரத்திலும் வேறு எவரும் தலையிட முடியாது

 
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியாக இருக்கட்டும் அல்லது வேறு எவராவது இருக்கட்டும் வரலாம் போகலாம் யுத்தம் நிறுத்தப்பட மாட்டாது. புலிகளை ஒடுக்குவதற்கான யுத்தத்தில் 95 வீதம் முடி