சமீபத்திய பதிவுகள்

மயக்க குளிர்பானம் கொடுத்து 5 மாணவிகளை கற்பழித்த பள்ளி முதல்வர் முகமது சலாவுதீன் அயூப்

>> Friday, July 23, 2010

மயக்க குளிர்பானம் கொடுத்து    5 மாணவிகளை கற்பழித்த    பள்ளி முதல்வர் கைது;    வீடியோ படம் எடுத்து மிரட்டினார்
நகரி, ஜூலை. 23-
 
ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் பார்க்வுட் சர்வதேச பள்ளி உள்ளது. இதன் முதல்வராக இருப்பவர் முகமது சலாவுதீன் அயூப் (50). இவர் குத்துச்சண்டையில் தீவிர ஆர்வம் உடையவர். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாலை நேரத்தில் குத்துச்சண்டை பயிற்சி அளிப்பார். அப்போது சில்மிஷத்தில் ஈடுபடுவார். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க மாட்டார்.
 
இந்நிலையில் பிளஸ்-1 மாணவி அஜிதாவை (பெயர் மாற்றம்) ஒரு ஆண்டுக்கு முன்பு குத்துச்சண்டை பயிற்சிக்கு தனியாக அழைத்துச் சென்றார்.
அப்போது அவர் அஜிதாவுக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து கற்பழித்தார். பின்னர் அதை தனது நவீன வீடியோ கேமராவில் பதிவு செய்தார்.
 
அஜிதா மயக்கம் தெளிந்ததும் கூச்சல் போட்டார். ஆனால் அவர் வீடியோ படத்தை காட்டி நீ இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். இதில் மிரண்டு போன அஜிதா பணிந்தார்.
 
அதன் பிறகு அவளை பல தடவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றும் தனது ஆசையை தீர்த்துக் கொண்டார்.
 
இந்நிலையில் அஜிதா கர்ப்பமானார். அதன் பிறகும் சலாவுதீனின் சித்ரவதை தொடர்ந்ததால் மும்பையில் உள்ள பெற்றோரிடம் கூறினாள்.
 
இதையடுத்து பெற்றோர் விரைந்து வந்து சலாவுதீன் மீது போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சலாவுதீனை கைது செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் அஜிதா மற்றும் 4 மாணவிகளுடன் சலாவுதீன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சி.டி. கிடைத்தது.
 
இதைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளி முதல்வரால் கற்பழிக்கப்பட்ட மற்ற 4 மாணவிகளும் புகார் செய்தனர். அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
 
மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பழித்து வீடியோ படம் எடுத்த தகவல் விகாராபாத் நகரில் பரவியது. இதில் ஆத்திரமடைந்த பொது மக்கள் பள்ளியை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
 
அஜிதாவின் பெற்றோர் தனது மகளை பள்ளி முதல்வர் சலாவுதீன் ஒரு ஆண்டு "செக்ஸ்" சித்ரவதை செய்ததாக மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் புகார் செய்தனர்.
 
5 மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பழித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோவில் இடிப்பு- பக்தர்கள் போராட்டம்


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் இந்து கோவில் [^]ஒன்று உள்ளது. 87 வருடங்களுக்கு முன் 1923ம் ஆண்டில் லாலா தன்சுக் ராய் என்பவரால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.

இந்தக் கோவிலை இடிக்க ராவல்பிண்டி மாகாண அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து நேற்று அக்கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது.

இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து, சீ்க்கிய பக்தர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் [^] நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களும் ஆதரவு [^]தெரிவித்ததால் நிலைமை மோசமடைந்தது.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து கோவில் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட தாய்க்கு மூன்றாவது குழந்தை!உலகின் மிகவும் சிறிய உருவம் உடைய தாய் என்ற சாதனை படைத்த பெண்ணுக்கு மூன்றாவது தடவையாகவும் குழந்தை பிறந்துள்ளது.

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரேசிய் ஹெரல்ட்(வயது 36) என்பவரே உலகின் மிகச் சிறிய உருவம் உடைய தாய் என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர். இவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உண்டு. இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

 

தற்போது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவரின் உயரம் வெறும் இரண்டு அடியும் நான்கு அங்குலமும் மாத்திரமே. இந்தக் குழந்தை ஏழு மாதங்களுக்கு முன் பிறந்திருக்கின்றது. ஆயினும் குழந்தை சுவாசிக்கின்றமையில் சில இடர்ப்பாடுகளை எதிர்நோக்கி இருக்கின்றது.

 

இதனால் கடந்த மாதம்தான் குழந்தையை வைத்தியசாலையில் இருந்து கூட்டிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தாயும், சேயும் தற்போது நலமாக உள்ளனர். இந்தச் சிறிய உருவம் கொண்டவரின் கணவருக்கு 27 வயது. உயரமோ 5 அடி ஒன்பது அங்குலம். மூத்த குழந்தைக்கு மூன்று வயது.

 

இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது. மூத்த குழந்தையும், மூன்றாவது குழந்தையும் தாயைப் போலவே உள்ளனவாம். இரண்டாவது குழந்தை சாதாரண உயரத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சின்ன உருவம் கொண்ட அம்மா இன்னும் ஒரு குழந்தை வேண்டும் என்று கூறுகின்றார்


source:tailcnn


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP