சமீபத்திய பதிவுகள்

பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பாதுகாப்பான பகுதிளுக்கு த‌ப்பின‌ர்.

>> Sunday, May 17, 2009

கொழும்பு:முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் க‌ட்டுப்பாட்டிலுள்ள‌ ப‌குதியிலிருந்து பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் ப‌ல‌ப‌ட‌குக‌ளில் பாதுகாப்பான இடங்களுக்கு த‌ப்பின‌ர், என்று ஊர்ஜித‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கிற‌து. இதுவிப‌ர‌மாவ‌து:-

சனிக்கிழமை இரவும் ஞாயிறு அதிகாலையிலும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன. இதில், முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக இலங்கை ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.


ஞாயிறு அதிகாலை 1.30 அளவில் இந்த தாக்குஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்கள் பல படகுகள் இந்தத் தாக்குதலில் தப்பிச் சென்றுள்ளதனையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

26 வருடங்களுக்குப் பின் புலிகளிடம் இருந்து கடல்ப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் பாதுகாப்புத் தரப்பு வெளியிட்ட அறிக்கையின் பிற‌கே இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் ந‌டைபெற்றுள்ள‌து.

நந்திகடல்ப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தளபதிகள் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டதும் உண்மை எனத் தெரிய வருகிறது. இதில் யாழ்மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் முக்கிய தளபதி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிய வருகிறது. ஆயினும் புலிகள் தரப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் மூழ்கடிக்கப்பட்ட படகுகள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தவிர தப்பிச் சென்ற படகுகளில் சென்றவர்கள் யார்? அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற கேள்வி பாதுகாப்புத் தரப்பைப் பெரும் குழ‌ப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதே நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் அந்தப் படகுகளில் பாதுகாப்பான தமது தளத்திற்குச் சென்றுவிட்டார்க‌ள் என்ப‌து புலிக‌ள் த‌ர‌ப்பிலிருந்து ந‌ம‌க்கு கிடைத்த‌ ந‌ம்ப‌த்த‌குந்த‌ செய்தியாகும்.

ஆக விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்துகின்ற உயர் கட்டமைப்பு, புலனாய்வுக் கட்மைப்பு, அவற்றிற்குரிய ஆளணி தளவாடங்கள் என்பவை பாதுகாக்கப்பட்டு விட்டதாகவே புலிகளின் உட்கட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.

புலிக‌ள் இய‌க்க‌த்தை ந‌ட‌த்திச் செல்ல‌ அத‌ன் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் உயிரோடு இருக்க‌வேண்டும் என்ப‌து முக்கிய‌ம் என்ற‌ க‌ட்ட‌த்தை நெருங்கிய‌வேளையில் புலிக‌ள் உய‌ர்ம‌ட்ட‌த் த‌லைவ‌ர்க‌ளின் வேண்டுகோளுக்குச் செவிம‌டுத்தே பிர‌பாக‌ர‌ன் இத‌ற்கு ஒத்துகொண்டு பாதுகாப்பான‌ இட‌த்தை நோக்கி சென்றதாகவும் செய்திக‌ள் தெரிவிக்கிற‌து.

ஆனால் அரசாங்கம் நடத்திவரும் தற்போதைய ஊடக பிரச்சாரத்தை புலிகளும் மறுக்கப் போவதில்லை எனவும் தெரிய வருகிறது. காரணம் தொடருகின்ற சர்வதேச பிராந்திய அரசியல் நகர்வுகளிற்கு அரசாங்கத்தின் பிரச்சாரம் வெகுவாக உதவும் என்பதால் புலிகள் மவு‌னம் காக்கப்போவதாகவும் தெரியவ்ந்துள்ளது .

சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனின் அரசியல் நகர்வுகள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கை, அதனை நோக்கிய புலிகளின் பதில்கள், இந்திய அரசின் முன் நடவடிக்கைகள் சர்வதேசத்தின் கைகளில் வழங்கப்பட்டுள்ள பந்தை அவர்கள் பிரயோகிக்கும் முறை முதலானவற்றைப் பொறுத்தே புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் எனவும் புலிகள் தரப்பில் கூற‌ப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இலங்கையில் நடைபெற்ற‌ ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்ததையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும்,விடுதலைப்புலிகள் தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டுள்ளனர் அவர்களிடையேதான் பிரபாகரனும் இருக்கலாம் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கே? படையினர் சுற்றிவளைத்துள்ள 800 கிலோ மீட்ட‌ர் பரப்பிற்கு உள்ளேயா? அல்லது, அதற்கு வெளியே வன்னியிலா அல்லது அதற்கும் அப்பால் இலங்கையினுள்ளேயா? இல்லை வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றுவிட்டாரா? என்ற கேள்விகள் பலரையும் உலுப்பிய நிலையில் தான் "பிரபாகரனின் சடலம் கொழும்பு வைத்தியசாலையில் உள்ளது என்றும் பனாங்கொட ராணுவ முகாமில் என்றனர். இல்லை அவரது சடலம் எரிந்துவிட்டதகவும் கொழும்பு நகரில் கைத்தொலைபேசியில் இந்தத் தகவல்களையும் செவி வழியான தகவல்களையும் அரசாங்கத் தரப்பினர் வேகமாகப் பரப்பி விட்டனர்.

யுத்தத்தை முடிப்பதாக இருந்தால் குறைந்தபட்சம் பிரபாகரனை அல்லது பொட்டு அம்மானை முடித்தாக வேண்டும். அப்போதுதான் யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்க முடியும், என்பது இராசபக்சே அரசின் எண்ணம்.

அதனால் முடிந்து விட்டதாகக் கூறினால்த்தான் மக்களிடம் இவர்கள் யுத்தம் முடிந்ததாக கூற முடியும். என‌வே தான் இதை திட்ட‌மிட்டு அர‌சே இல‌ங்கையில் ப‌ர‌ப்பிய‌து.

இந்தியாவிலும் வேகமாகவே காட்டுத்தீயாக இச் செய்திகள் பரவின. பல ஊடகங்களும் செய்திகளை வேகமாகவே வெளியிட்டன. சில‌ த‌னியார் தொலைக்காட்சி நிறுவ‌ன‌ங்க‌ளும் செய்திக‌ளை திரும்ப‌த்திரும்ப‌ சொல்லிக்கொண்டிருந்த‌து.

இந்நிலையில் இலங்கை அரசும் பிரபாகரன் தப்பிச்சென்றுவிட்டார் என்ற செய்தியினை உறுதிப்படுத்தியுள்ளது.


StumbleUpon.com Read more...

நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் நீங்கள் சாகவில்லை.என்றும் எமக்குள் வாழ்கிறீர்கள்

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dPj0q0ecGG7L3b4j9Ei4d3g2h3cc2DpY3d436QV3b02ZLu2e விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலி:பாதுகாப்பு அமைச்சகம்
 ]
விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர்களது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளது. 

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக பா.நடேசன் பணியாற்றிவந்தார் .இவர் முன்னதாக ஸ்ரீலங்கா பொலிஸில் கான்ஸ்டபிளாகவும் கடமையாற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.விடுத்லை புலிகளின் சமாதான செயலக தலைவராக புலித்தேவனும், விடுதலை புலிகளின் விசேட இராணுவ தலைவராக ரமேஷும் கடமையாற்றி வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்தகவல்கள் குறித்து விடுதலை புலிகள் இதுவரை எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

StumbleUpon.com Read more...

புலிகளே! உங்களுக்காக நாங்கள் போராடுவோம்

 

சென்ற நூற்றாண்டின் இரத்தக்கறை நிறைந்த யூத இன அழிப்பு குரூரமானது. அதீதமான அறிவியல் மற்றும் திட்டமிடல் கொண்டு பல இலட்சம் யூதர்களை விச வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிப்படை கொன்றது. கொல்லப்பட்டவர்களின் எல்லா உடைமைகளும் நாஜிக்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகள் உட்பட. விச வாயுவால் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை எளிதாக கழற்ற முடியாது என்பதற்காக, விச வாயு அறைகளுக்கு அனுப்புவதற்கு முன்னரே, அவர்களை தமது உடைகளை முற்றிலும் கழற்றி விடுமாறு நாஜிக்கள் அவர்களிடம் சொல்வார்கள். தாம் கொலை செய்யப்படப் போகிறோம் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தும் எந்தவிதமான சிறு எதிர்ப்பும் இன்றி தமது உடைகளைக் கழற்றிவிட்டு விச வாயு அறைகளுக்குள் சென்று ஈசல் போல செத்து மடிந்தார்கள் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள். அப்பொழுது உலகம் கேட்டது, "எப்படி ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் இவர்கள் தமது அழிவை ஏற்றுக்கொண்டார்கள்?" என்று. அதே உலகம் சொன்னது "இனிமேல் இது போல ஒரு கொடுமை உலகில் வேறெங்கும் நடக்க விட மாட்டோம்" என்று.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அறை நூற்றாண்டாக அநீதிகள் நடைபெற்றுவருவதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். தமிழர்களின் மனித உரிமைகள் சில கோடி முறைகளாவது மீறப்பட்டிருக்கும். ஆனால் யூதர்களைப்போல தமிழர்கள் சாகவில்லை. எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். எதிர்த்து ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் அதே உலகம் தமிழர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்டி தமது புனித பிம்பங்களை தமக்குத்தாமே நிரூபித்துக்கொண்டார்கள். அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் தாண்டி, அவர்களின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பிற்காகவே, பல ஆயிரம் தமிழர்கள் ஈசல் போல கொல்லப்பட்டனர். இது போல வேறு எங்கும் நடைபெற விட மாட்டோம் என்று சூளுரைத்த உலகம் கொலைகாரர்களை தட்டிக்கொடுத்தது. கொலை செய்யப்படுபவர்களை கண்டித்தது. அவர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த இனப் படுகொலை நடந்து முடிந்துவிட்டது. இனிமேல் வருவார்கள் சாரி சாரியாக. "நாம் தவறு செய்துவிட்டோம், இனிமேல் இது போல மற்றொரு இனப்படுகொலை நடைபெற அனுமதிக்க மாட்டோம்" என சூளுரைப்பார்கள். திரைப்படங்கள் எடுத்து/பார்த்து கண்ணீர் சிந்தி ஆஸ்கர் பரிசுகொடுத்து தமது தூய்மையை நினைவூட்டிக்கொள்வார்கள். கட்டுரைகள் எழுதி புலிட்சர் பரிசுவாங்குவார்கள். ஏன் இலங்கையில் அமைதி கொண்டுவந்ததற்காக இந்திய இலங்கை ஏகாதிபத்தியங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகூட கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது.

இங்கே யாருமே பரிசுத்தமில்லை. புலிகளும்தான். அவர்களின் முரட்டுத்தனங்களாலும், முட்டாள்தனங்களாலும் தமிழர்கள் அடைந்ததைவிட இழந்தது அதிகமாக இருக்கலாம். உண்மை என்னவென்று அவர்களுக்கு முன்னும் பின்னும் நின்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் தெரியும்.

இதோ அந்த புலிகள் முப்பதாண்டுகளில் முதன் முதலாக தாம் தோல்வியடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட ஒரு போராட்டம் இப்படி முடிந்து விட்டதென்று வருத்தமாக இருக்கிறது. புலிகளின் மீது கோபமாகக்கூட இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்க, நான் நிச்சயமாக புலிகளின் பேரில் பெருமையடைகிறேன். அவர்கள் தோல்வியில் ஒன்றும் அவமானமில்லை. அதீதமான பெருமைதான் மிச்சமிருக்கமுடியும். புலிகளே! புலிகளின் பின்னின்ற ஈழத் தமிழ் மக்களே! உங்களின் மன உறுதியும் வீரமும் வரலாற்றில் வேறெங்கும் யாரும் கண்டதில்லை. இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு புலியின் தியாகமும் ஒரு சகாப்தம். உங்களுக்கு ஒத்தாசையாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட முடியாத எமது கையாலாகாமையை எண்ணி வெட்கப்படும் அதே நேரம், நீங்கள் பேசிய மொழியை நானும் பேசுகிறேன் என்பதற்காக நான் பெருமை அடைகிறேன். அந்த மொழிக்காக நீங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்தீர்கள் என்பதை நினைக்கும் ஓவ்வொரு பொழுதும் என் மெய் சிலிர்க்கிறது. எங்களை உங்களது தொப்புள் கொடி உறவுகள் என்று நீங்கள் அழைப்பீர்களே அதற்கு என்ன கைமாறு என்னால் செய்ய முடியும். உங்களது வீரத்தை நாங்கள் ஒரு காலத்திலும் மறக்கமாட்டோம். சர்வ தேசங்களின் துரோகத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துரோகத்தையும் நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

முப்பதாண்டு போராட்டம் ஒன்றும் இல்லாமல் முடிந்து விட்டதென்று துக்கமுற வேண்டாம். இலட்சம் மக்களின் தியாகத்தினால் எதுவும் நடக்கவில்லையே என்று அழுது புலம்ப வேண்டாம். முப்பது இலட்சம் தமிழர்கள் அன்றாடம் பட்ட அவதிகளுக்கு ஒரு முடிவில்லையா என வருந்த வேண்டாம். உங்களது தொப்புள் கொடி உறவுகள் உங்களை கைவிட்டு விட்டார்களே என்று துயரமடைய வேண்டாம். நீங்கள் முப்பதாண்டுகளாக தொடர்ந்து போராடி களைத்துப்போய் இருப்பீர்கள். நீங்கள் இப்போது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து போராட்டச் சுடரை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். அமைதியான முறையில் நமது இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுகிறோம். இது ஓரிரு வருடங்களில் முடியலாம் இல்லை பல வருடங்கள் எடுக்கலாம். ஆனால் உங்களுக்காக நாங்கள் போராடுவோம். நீங்கள் இப்பொழுது சற்று களைப்பாறுங்கள்.
 

StumbleUpon.com Read more...

கொலைக் களத்தின் இறுதிக் கட்டம்:காயமடைந்து வீழ்ந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!!உங்களுக்கு இருக்கும் தொடர்பு இது தான் கடைசியாகவும் இருக்கலாம்

தமிழின அழிப்பு கொலைக் களத்தின் இறுதிக் கட்டம்: கனரக பீரங்கிகளின் தாக்குதலோடு தொடங்கிவிட்டது சிங்களப் படை! காயமடைந்து வீழ்ந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!!
 
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் தணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தை இன்று காலை அடைந்திருப்பதாக - புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்திலிருந்து "புதினம்" செய்தியாளர் செய்மதித் தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்தார்.
இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட "புதினம்" செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:
 
பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.
 
கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்திலிருந்தும் சீறி வருகின்றன.
 
தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரம் மக்கள் இருக்கின்றனர்.
 
காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.
 
விடுதலைப் புலிகளின் பக்கத்திலிருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் - சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகல விதமான ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
 
கடந்த நான்கு நாட்களில் மட்டும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
 
கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரது உடலங்கள் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன.
 
திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.
 
இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர்.
 
படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.
 
படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொது மக்கள் மக்கள் - அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.
 
அதே போல - காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு 'சையனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.
 
பதுங்கு குழிகளுக்குள் இருந்த போதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.
 
கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து "புதினம்" நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து - உண்மையான செய்திகள் மட்டுமே வெளிவர உழைத்து - "புதினம்" நிறுவனத்தின் இரத்தமும், சதையுமாக இயங்கிய அந்த செய்தியாளர், கடைசியாக - "என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இது தான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்" என்று கூறினார்.

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தற்கொலை?

கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடலை அடையாளம் காண்பதற்காக இலங்கை ராணுவ முகாமிற்கு எடுத்து செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய தொலைக்காட்சியான சின்.என்.என். ஐபின் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அதே சமயம்

முல்லைத்தீவு பகுதியில் 150 விடுதலைப் புலிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நடைபெற்று வரும் புலிகளுக்கு எதிரான போரில் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் முக்கியத்தலைவர்கள் கூட்டாக தற்கொலை செய்து கொண்டு இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில்,

இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. இறந்து கிடந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார்.

இதனிடையே விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் ராணுவத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை முற்றிலும் வெற்றி கொண்டதாகவும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்தியாவின் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளான சிஎன்என் ஐபிஎன், என்டிடிவி, டைம்ஸ் நவ் உள்ளிட்டவை இதே செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகின்றன.

ஐபிஎன் செய்தி படிக்க http://ibnlive.in.com/news/lanka-army-claims-ltte-chief-prabhakaran-dead/92805-2.html

கடைசிச் செய்தி : மேற்கண்ட இந்த தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதயநாணயக்காரா மறுத்துள்ளார்

StumbleUpon.com Read more...

அவசரம்,தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய செய்தி

பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்

StumbleUpon.com Read more...

வன்னியில் காயமடைந்துள்ள 25,000 பொதுமக்களையும் காப்பாற்றுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள்: கடற்புலிகள் தளபதி கேணல் சூசை

வன்னியில் காயமடைந்துள்ள 25,000 பொதுமக்களையும் காப்பாற்றுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள்: கடற்புலிகள் தளபதி கேணல் சூசை

StumbleUpon.com Read more...

இந்த தேர்தலில் வென்ற,வீழ்ந்த பிரபலங்கள் யார் யார்?

படத்தை பெரிதாக்க அதன் கிளிக் செய்யவும்








ந்ன்றி தினமலர்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP