எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........
>> Wednesday, January 28, 2009
| |
எம்மினிய உறவுகளே!!!!!!!!!நீங்கள் எந்தெந்த நாட்டிற்கு, எந்தெந்த விதத்தில் எப்படியெப்படி நம் மக்களின் துயரங்களையும் ,சாவின் ஓலங்களையும் கொண்டு செல்லலாம் என்ற அங்கலாய்ப்புக்களாலும், ஆதங்க களாலும் மூளையை குடைந்து.. பாங்கிமூன்,ஒபாமா,நவநீதம்பிள்ளை,கருணாநிதி,மன்மோகன் சிங்,கோடன் பிறவுண், BBC, CNN என உங்களின் யாசகம் எல்லை கடந்து நிற்கின்றது.என்ன கண்டீர்கள் இந்த இழிவான உலகினிடத்து??!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஈழவிடுதலைப் போரிலும் சரி, இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலும் சரி இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப்படுகொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இரண்டு நாட்கள் களிந்துவிட்ட நிலையிலும்.............(உலகளாவிய ரீதியில் இளையவர்களின் உண்ணா நிலை தொடருமிடத்து கூட) நீங்கள் 50 000,40 000,15 000,10 000,7000 ,5000 எனத் திரண்டு முழக்கமிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தான் என்ன?????????????????? ஒப்பனைக்குத்தானும் பொதுவாக கூட ஒரு கண்டனத்தை வெளியிடவில்லை.....உலக நாடுகள் அதன் மனிதநேயத்தை தவற விட்ட நிலையில்.......இன்னும் இன்னும் அகிம்சைப்போராட்டங்களும், மெழுகுவர்த்தி ஊர்வலங்களும்,ஒன்று கூடல்களும்,மின்னஞ்சல்களும்,க ையெழுத்து வேட்டைகளும் எம்மக்களின் சாவின் ஓலத்தை இனியும் தடுத்திடப் போவதில்லை என்பதையே இந்த நாடுகள் கட்டியம் கூறி நிற்கின்றன. இப்போ நீங்கள் செயற்படும் வேகத்தை கொடியவன் மாவிலாற்றில் நிற்கும் போதோ, மல்லாவியில் நிற்கும் போதோ காட்டியிருந்தால் இந்த இரத்தவெள்ளத்தை சிறிதளவேனும் குறைத்திருக்க முடியும்.இப்போ காலம் கடந்து விட்டது..இனிப்பொறுத்திருக்க நேரமில்லை... இதன்பின்னும் எம்மக்கள் சாவின் விளிம்பில் நிற்கும் போதும் கூட இவர்களிடம் மண்டியிட உங்களால் எப்படி முடிகிறது?????.நீங்கள் மண்டியிட்டெழுவதற்குள் சுடுகாடாகிவிடும் எங்கள் நாடு.. எனவே , நாங்கள் விரைந்து செயற்பட வேண்டிய நேரமிது.... நாங்கள் ஒன்றும் முள்ளந்தண்டிலிகளோ, அடிமைகளோ, ஏதும் வழியற்றவர்களோ நாடற்றவர்களோ அல்லர்... நெஞ்சமதில் உரமேற்றி வெஞ்சமரில் பகை வீழ்த்தி வானும் மண்ணுமதிர இறக்கை கட்டி பறப்பவர்கள்..இன்னும் ஏன் இந்த இழி நிலை???? நிமிர்த்து உன்நெஞ்சத்தை கொடு உன் தோளை...வேண்டாம் இனி யாசகம்................................................... இன்று எதிரியானவன் எம் வீரர்முன் களமாடமுடியாமல் உலக வல்லரசுகளின் உதவியோடு மிதமிஞ்சிய கனரக ஆயுத பாவனை மூலமாக எம் வீரர்களை பின்நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறான். இன்றும் கூட சீனா , இந்தியாவிடம் இருந்து முறையே 160,120 என மொத்தம் 280 யுத்த தாங்கிகள் சென்றடைய இருக்கின்றது!!!! இவ்வாறு அவன் மிகப்பெரும் பொருளாதாரத்தை பிரயோகிக்கின்றான். ஆனால் நாம் பொருளாதாரத்தில் மிகவும் பலவீனமாக உள்ளோம் என்பதே உண்மை. இதை எதிர்கொள்ள, இதேபோன்றதொரு பலத்தை எமது பக்கமும் ஏற்படுத்தி எமது நாட்டிடம் நாம் வேண்டிடுவோம்..... அதற்க்கு இன்று இப்போ செய்ய வேண்டியது....... எமது தமிழீழ நாட்டை பொருளாதார ரீதியாக நாம் பலப்படுத்த வேண்டும் ....... நாம் எமது நாட்டை பொருளாதார பலம் கொண்டு நிமிர்த்தி எமது நிலங்களை மீட்டு அதன்மீதேறி நின்று உரிமையுடன் அங்கீகாரம் கேட்டால்..அன்றி இந்த சுயநல நாடுகள் ஏதும்தரா எமக்கு..... இல்லை இன்னும் இன்னும் அகிம்சைப்போராட்டங்களும், மெழுகுவர்த்தி ஊர்வலங்களும்,ஒன்று கூடல்களும்,மின்னஞ்சல்களும்,க ையெழுத்து வேட்டைகளும் செய்வதே எமக்கெந்த பாதிப்பையும் தராது என நினைத்து நடந்தால் உங்களை நீங்களே ஏமாற்றி நாதியற்ற இனமாக நடுத்தெருவில் நிறுத்தும் காலம் வந்து விடும். இரத்த வெள்ளத்தை பொருளாதார பலம் கொண்டு தடுப்போம்...................... குறிப்பு :- உங்கள் பிள்ளைகளோ , தாயோ , தகப்பனோ ,தங்கையோ தம்பியோ இன்று வன்னியில் இருந்தால்!!!!!!!!! உங்கள் உயிரைக்கூட கொடுக்க நீங்கள் தயாராக மாட்டீர்களா.. சிந்தியுங்கள் உறவுகளே.............................. |
0 கருத்துரைகள்:
Post a Comment