சமீபத்திய பதிவுகள்

அந்நியரை ஈர்த்த அன்னைத்தமிழ் - பாகம் 1

>> Thursday, December 3, 2009

 

அந்நியரை ஈர்த்த அன்னைத்தமிழ் - பாகம் 1


tamilநீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.


தமிழ்மொழியின் வரலாற்று வீழ்ச்சியும் அதன் சீரழிவுகளும்

       "ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள். ஆம். சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது . சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றது. சிறிது, சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வியாபிக்க, தென் பகுதியில் திராவிட இனம் சிறுமை படதொடங்கியது.(அது இன்று வரை தெடர்கிறது). கழகக்காலம் வரையில் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த, நம் தாய்மொழியாகிய தூய,இனிய செந்தமிழ், அதற்குப் பின், ஆரியரின் வேதமத்தாலும், மற்ற காரணங்களாலும் தாக்குண்டு, படிபடியாய்ச் சீர்கெட்டது. தொல்காப்பியத்துள் கூறப்பெறும் வடமொழிச் சேர்ப்பு இலக்கணமும், அம் மொழி வந்து தமிழில் கலந்து வழஙகுவதற்கு வழிவகுத்ததாகவே அமையும். ஆரியரின் வேதமொழியும் வடதிரவிட மொழிகளான பிராகிருதமும் பாலியும் கலந்து செய்யப் பெற்ற சமற்கிருதமும் சமய நோக்கத்துடன் தமிழ் மொழியொடு கலக்கப்பெற்று அதைச் சீர்குலைத்தன. வேத ஆரியர்களும், தமிழ் மூல நூல்களைத் தம் மொழியாகிய சமற்கிருத்தில் பெயர்த்தெழுதித் தம் மொழிக்கு ஏற்றம் தேடிக் கொண்டு, தமிழ் மூலநூல்களை அழித்தனர். இவ்வாறு மதப் போராட்டங்களாலும், வேதமத்தின் அளவிறந்த வளர்ச்சியாலும் தமிழ்மொழி மேன்மேலும் சீரழிந்து கலப்பு மொழியாய்ப் பெருமை குன்றி வாழ வேண்டுயதாயிற்று. ஊர்ப் பெயர்களும் வடமொழியாகிய சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பெற்று வழ்க்கூன்றன. ஏராளமான வடமொழிச் சொற்கள் மக்கள் வாழ்வியலின் அன்றாடப் புழக்கத்தில் ஏறின. உரைநடை நூல்கள், செய்யுள் நூல்கள்,இசை,நாடகம் எனும் அனைத்திலும் வடமொழி ஆட்சி செலுத்தியது. களப்பிரர், பல்லவர் ஆட்சியரசுகள் வடமொழியாளர்க்கும் அவரின் வேத மதத்துக்குமே ஊக்கமளித்துப் போற்றிப் புரந்தன. மக்களுக்குள் சாதி வேறுபாடுகள் கற்பிக்கப்பெற்று, இனவொற்றுமையும் சீர்குலைக்கப்பெற்றது. அரசியல், குமகாயம், சமயம் ஆகிய முத்துறைகளிலும் பிராமணர்களின் ஆளுமை கொடிகட்டிப் பறந்தது. இந்த வீழ்ச்சி பயணம் 17ம் நூற்றாண்டு வரை தெடர்ந்து.


தரங்கை வளர்த்த தமிழியல்
தரங்கம்பாடிக் கடற்கரையில் 1706ஆம் ஆண்டு ஆனித் திங்கள் சீகன்பால்கு(Bartholomaeus Ziegenbalg) கால் வைத்த அன்றே தமிழ் வளர்ச்சி பாதையில் வீருநடை போடதுவங்கியது. இவ்வாறு கிறித்தவ மதத்திற்க்கும் தமிழியிற் கல்விக்கும் ஒரே சமயத்தில் தூதுவராக விளங்கிய அந்தப் பெருமகன் முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிவைத்த தமிழியலை நன்றியுணர்வோடு குறிப்பிட்டாக வேண்டும். என்ன செய்தார் அவர்: • தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து உலகநீதி,கொன்றைவேந்தன், நீதிவெண்பா முதலிய தமிழ் நூல்களை மொழிபெயர்த்தது • ஓலைச்சவடிகளாக இருந்த தமிழ்நூல்களைத் தேடித் தொகுத்து ஒரு நூலகத்தை நிறுவிக்ககொண்டது • தமிழ்ச் சுவடிக்களுக்கு ஒரு விளக்கப் பட்டியலை அமைத்துக்கொண்டது • தமிழைப் பயிலும்போதே அகராதிகளைத் தொகுக்கத் தொடங்கியது. • தமக்குப் பின் தமிழைக் கற்போருக்குப் பயன்படுமாறு தமிழ் இலக்கணம் ஒன்றை வரையறுத்தது. • தமிழ் மக்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கியது.இது போன்ற தமிழ் பணிகளை அவர் கணணி,வகனம்,தட்டச்சு மற்றும் சரியாக காகிதம் கூட இல்லாமல் மணலில் தமிழை எழுதிப் பழகி மேற்கண்ட பணிகளை நிறைவேற்றியது வியப்புக்குரியதேயாகும். தொலைநோக்கோடு செயலாக்கப்பட்ட இப்பணிகளின் மூலமாகத் தமிழியலுக்கு வலிவான கால்கோளை அமைத்துவிட்டதோடு தமிழியல் வரலாற்றில் புது மரபொன்றையும் அவர் உருவாக்கிவிட்டார்.இவருக்குப் பின் சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்த வால்தர்(Walther), பப்ரிலியுஸ்(Fabricius), ப்ரைடஹதுப்ட்(Breithaupt), பைஸன் ஹெர்ட்ஸ்(Beisenherx) கிரவுல்(Graul), ரெனியுஸ்(Rhenius), பைத்தான்(Beythan), ஷொமேருஸ்(Schomerus), லேமன்(Lehmann) போன்ற பேரறிஞர்களும் சீகன்பால்கின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழியலை வளர்த்தனர். இதன் விளைவாக இந்தியவியலோடு தமிழியலும் இணைந்து செயல்படத் தொடங்கியது. தொடக்காலத் தமிழியலுக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி சிரிவான நூல்களும் கட்டுரைகளும் முன்பே வெளிவந்துள்ளன. பேராசிரியர் தனிநாயக் தொகுத்து வழங்கிய 'வெளிநாடுகளில் தமிழியல்: நல்ல கட்டுரைத் தொகுதி(Xavier S.Thaninayagam, Tamil Studies Abroad: Asymposium, 1968) என்னும் நூலில் டாக்டர் ஆல்ப்ரெஹ்ட் வெட்ஸலர்(Dr.Albrecht Wetzler) டாக்டர் அரனோலேமன்( Dr.Arno Lehmann) ஆகிய இருவரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவற்றை விரிவாக் காணலாம்.

செம்மொழி
கால்டுவெல் (Rev. Robert Caldwell) அவர்களின் "திரவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்" . தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பை உணர்த்தியதுடன், தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதென்னும் தவறான கருத்தை உடைத்தெறிந்து; அஃது ஓர் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை நிலைநாட்டியது. தமிழ் ஒரு செம்மொழி என்பதை நிலை நாட்டுவதற்க்காக அவர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கால்நடை பயணமாக ஒவ்வொரு கிராம பகுதிக்கும் சென்று தமிழ் சொற்களை தொகுத்தார்(Word List ). என்னென்றால் அங்கு தான் வடமொழி சொற்கள் கலக்காத தூய தமிழ் சொற்கள் கிடைக்கும் என்று அவர் அவ்வாறு செய்தார். அவ்வாறு அவர் தொகுத்த சொற்கள் முலம் அவர் தமிழ் தனித்தியங்க வல்ல நல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுருத்தினார்.
கால்டுவெல் பற்றிய ஒரு சம்பவத்தை தங்களிடம் பகிந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த திரு.க.அன்பழகன் ஒரு முறை திருநெல்வேலிக்கு அரசாங்க அலுவல் காரியமாக வந்தார் அப்போது அவர் திருநெல்வேலிக்கு அருகில் கால்டுவெல் கடைசியாக இருந்த விட்டிற்க்கு வருகை தந்தார். அந்த நினைவு இடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கால்டுவெல் பயன்படுத்திய பொருள்களை பார்த்துக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் அங்கு இருந்த ஒருவர் கால்டுவெல் பயன்படுத்தி வந்த ஒரு படுக்கையை காண்பித்து இதில் தான் கால்டுவெல் தூங்கினார் என்று கூறினார். அதற்க்கு அன்பழகன் "கால்டுவெல்க்கு உண்மையிலே தூங்க நேரம் இருந்ததா என்ன?" . ஆம் அவருக்கு தூங்க நேரம் இருந்து இருக்காது தான். எம் மொழியை, எம்தமிழ் மொழியை செம்மொழி என இந்த தரணிக்கு உணர்த்த அவர் இரவு பகல் பாராது அயராது உழைத்தார். தமிழ் மொழியை கன்னித்தமிழ் என்பதை அவர் நிருபணம் செய்ய அவர் தம்மையே அதற்கென அர்ப்பணித்தார். தமிழ் ஒரு செம்மொழி என அறிவிக்கபட இருக்கும் இந்த நேரத்தில் கால்டுவெல் செய்த பணியை நாம் கடுகளவும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

..............தொடரும்

By Vijay

 

உங்கள் பார்வைக்கு

தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி

 tamil vowelsconsonantstamil numbers

source:www.tamilchristians.com
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

3 கருத்துரைகள்:

Unknown December 4, 2009 at 12:30 AM  

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு முகவுரை

Anonymous December 4, 2009 at 12:32 AM  

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு முகவுரை

Unknown December 4, 2009 at 12:33 AM  

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு முகவுரை

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP