வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
>> Friday, October 23, 2009
பிரவுசர் சந்தையில் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருகிறது. இந்த பிரவுசரின் நான்கு போட்டியாளர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் இணைய தளங்களையும், பல்வேறு வகையான புள்ளிவிபரங்களையும், தொழில் நுட்பத்தி னையும் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வரும் நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு, அண்மையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிரவுசர் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் வசம் இருந்த அதன் பயனாளர் எண்ணிக்கை 67 சதவிகிதத்திலிருந்து 65.7 % ஆகக் குறைந்துள்ளது. அண்மையில் தான் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் புதிய ஒரு மைல்கல்லைத் தன் பயணத்தில் கடந்தது. இதன் பதிப்பு 3.5 வெளியிடப்பட்டு, பழைய பிரவுசர் இடத்தில் அமர்ந்தது. இதன் வசதிகள் பலரின் கவனத்தை இழுத்தது. அதிவேக ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பில்ட் இன் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளுடன், வாடிக்கையாளர்களைக் கட்டிப் போட்டிருப்பதுடன், புதியவர்களையும் ஈர்க்கிறது. source:dinamalar
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சென்ற இரண்டு மாதங்களில் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 23 சதவிகிதத்திலிருந்து 23.8% ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசரின் ரசிகர்கள் எண்ணிக்கை4.1% லிருந்து 4.2% ஆக உயர்ந்துள்ளது. கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.8%லிருந்து 3.2% ஆகக் கூடியுள்ளது. ஆப்பராவின் பயனாளர்கள் 2%லிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளனர். இந்த சதவிகிதம் என்ன மிகக் குறைவு என்று எண்ணாதீர்கள். பல கோடிக்கணக்கான இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக் கையோடு இதனைப் பொருத்திப் பார்த்தால் பல லட்சக் கணக்கில் இவர்களின் எண்ணிக்கைய நீங்கள் உணரலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்தாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, இப்போது அதிகமான பயனாளர்களைக் கொண்டதாக மாறிவருகிறது. இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமையலாம்
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment