சமீபத்திய பதிவுகள்

இந்த வார இணையதளம்: மனதிற்கு இதமான இயற்கை

>> Thursday, October 8, 2009

  

ஏன் மலை வாசஸ்தலங்களுக்கும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கும் சுற்றுலா செல்கிறோம். அவற்றின் அருகே, அவற்றோடு இணைந்து இருக்கையில் நம் மனது லேசாகிறது; நாம் நம் கவலைகளை மறக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளில் நம் மனது அல்லாடுகையில் நமக்கு இலவசமாக இதம் தரும் இடங்கள் இந்த இயற்கை தானே.  இந்த இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் எழில் கொண்ட அந்த காட்சிகளை நல்ல போட்டோக்களாகப் பெற்று, அவற்றைப் பார்த்து பரவசம் அடைகின்றனர். அத்தகைய அழகு கொழிக்கும் இடங்களை ஓர் இணைய தளம் நமக்குத் தருகிறது. நாம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, தேர்ந்தெடுத்து இந்த உலகின் அற்புத இயற்கைக் காட்சிகளை பதிந்து வழங்குகிறது. ஒரு போட்டோ காலரியாக, வரிசையாக இல்லாமல், ஒரு பிளாக் போல, பல பக்கங்களில் இது அமைந்துள்ளது. மொத்தம் 9935 பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 10 படங்கள் உள்ளன. எத்தனை பக்கங்களில் இது இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஆச்சரியப்பட வேண்டாம். ஏறத்தாழ 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாக்காக இது நீண்டு இருக்கிறது. இவற்றை வகை வகையாகப் பிரித்தும் காணலாம். அண்மையில் மக்களிடையே பிரபலமானவை, புதிதாக சேர்க்கப்பட்டவை, இன்று அதிகமாகக் காணப்பட்டவை, அதிக வோட்டுகள் பெற்றவை, குறிப்புகள் எழுதப்பட்டவை, மிக அதிகமாக மக்களிடையே இடம் பெற்றவை எனப் பல வகைகளில் இவை பிரிக்கப்பட்டும் தரப்படுகின்றன. ஒவ்வொரு போட்டோ அருகேயும் இந்த வகைப் பிரிவுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. இந்த போட்டோக்களைப் பார்ப்பது மட்டுமின்றி, இவற்றின் அழகு குறித்து வோட்டும் போடலாம். உங்களிடம் மிக அழகான போட்டோ ஒன்று உள்ளதா? அதனை இந்த தளத்திற்கு அனுப்பலாம். அதற்கான அப்லோட் படிவம் ஒன்று இதில் தரப்பட்டுள்ளது. 
இந்த தளத்திற்குள் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்த தளம் கிடைக்கும் முகவரி: http://pixdaus.comsource:dinamalar
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP