சமீபத்திய பதிவுகள்

கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்.

>> Friday, September 26, 2008

lankasri.comகடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன.

இந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன.

இந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11,000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன.

இந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்கும் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம், இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள், இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1221061449&archive=&start_from=&ucat=2&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP