சமீபத்திய பதிவுகள்

இஸ்லாம்;இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

>> Thursday, January 10, 2008

இஸ்லாம்;இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்



இந்த சாட்சியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்கலாம்.அதன் தொடுப்பு; http://www.islamreview.com/testimonials/akbar.shtml

இங்கே அதை சுருக்கி கொடுக்கிறேன்.இந்த கட்டுரைகளை மொழிபெயர்க்க முழு அனுமதி அளித்துள்ள தள நிர்வாகத்துக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.






என்னுடைய வாழ்க்கை சாட்சி

இந்தியாவில் இருந்து அக்பர்

என்னுடைய பெயர் அக்பர் ,தந்தை முகமது காஜா மொஹினுதீன்,தாய் நவான்பீ

"

என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் " என்று அப் பவுல் ரோமர் 10:20ல் எழுதியபடி நாங்கள் அவரை தேடாமல் இருந்தும் எங்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார் . எனது ஒவ்வொரு மூச்சும் அவரை வாழ்த்த வேண்டும் .இனிய பாடல்களை பாடவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் .

என்னுடைய சாட்சி

என்னுடைய குடும்பத்தில 6 வது மகனாக நான் பிறந்தேன். எனது தந்தை மத்திய இரயிவேயில் புகைவண்டி ஓட்டுனராக இருந்தார் .என் தாய் இல்லத்தரசியாக இருந்தார்கள் .அவர்கள் சிறந்த குர் ஆன் ஆசிரியையாகவும் இருந்தார்கள் .இஸ்லாமின் நம்பிக்கைகள் ,கொள்கைகள் மற்றும் போதனைகள் மீது மிகுந்த பற்றுடையவர்கள். இஸ்லாம் மீது உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையிலும் ,பயத்திலும் என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் .

தேவன்

வெளிப்பட்டார்

என்னுடைய மூத்த அண்ணன் முஸ்தபா ஒரு நாள் சாலையி நடந்துகொண்டிருக்கும் போது தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ஒரு சத்தத்தை கேட்டார்

."

முஸ்தபா ", முஸ்தபா என்னை நோக்கிப்பார்,நான் உன் தேவனாகிய கர்த்தர் ". அவர் சுற்றி முற்றிப் பார்த்தார் . ஆனால் அவரைத்தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது .மீண்டும் இரண்டாவது தடவை சத்தம் வந்த போது , அது மேலே இருந்து வந்தது என்பதை முஸ்தபா உணர்ந்து கொண்டார் . ஆனால் அது யாருடைய சத்தம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே மின்சார சக்தி போன்ற ஒரு வல்லமை அவரை ஆட்கொண்டு கிறிஸ்தவக் கூடுகை நடந்துகொண்டிருந்த ஒரு சிறு கூடாரத்திற்கு வழிநடத்தியது. அங்கே பிரசங்கியார் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு இருந்தார்.முஸ்தபாவை சுற்ரியிருந்த வல்லமை சொன்னது"இந்த மனிதர் பிரசங்கிக்கிறவர் தான் உன்னோடே வ்ழியில் பேசினார்".தன்னோடு பேசினது இயேசு என்று அறிந்தவுடன் ,அவரை தனது இரட்சகராகவும்,ஆண்டவராகவும் முஸ்தபா ஏற்றுக்கொண்டார்.பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்தில் இடைப்பட்டார்.என்னுடைய சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தொடர்ந்து ஏழு நாட்கள் அவர் இயேசுவை தரிசித்தார். அன்றிலிருந்து அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.அதற்கு பிறகு அவர் குர்ஆன் படிப்பதில்லை.எங்களோடு மசூதிக்கு வருவதில்லை.என் பெற்றோர் அவருக்கு கிறிஸ்துவில் இருந்த விசுவாசத்தை கண்டுபிடித்தனர் .

அவருடைய

கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்கு விசனமாய் இருந்தது . இஸ்லாமியர்களான நாங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை. ஒரு நபியாகவே நம்புகிறோம் .

ஆனால்

என் சகோதரன் இயேசுவை தேவகுமாரன் என்று விசுவாசிப்பதினால் என் பெற்றோர் என் சகோதரன் மீது மிகவும் கோபமடைந்தனர்.அநேக நாட்கள் குர் ஆன் மற்றும் வேதத்தைப் பற்றிய விவாதங்களும் நடந்தன.யாரும் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை .ஆனால் என் சகோதரன் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது அற்புதங்கள் நிகழ்வதை என் பெற்றோர் கவனித்தார்கள்.கேன்சர் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ,குருடர்கள்,முடவர்கள் ,பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவர் இயேசுவின் நாமத்தினால் ஜெபித்தபோது சுகமானார்கள் .

ஒரு

நாள் என்னுடைய அத்தை முறையான உறவினர் ஒருவர் எங்களை பார்க்கவந்தார்கள் .அவர்கள் " blood hemorrhage "என்ற இரத்தம் சம்மந்தமான நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள் . அநேக நாட்களாய் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தார்கள் .என் தாயார் அவர்களை ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டி செல்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது என் தயார் என் சகோதரனிடம் அவர்களுக்காக ஜெபிக்கும் படி கூறினார்கள் .முஸ்தபா அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடனயே அவர்கள் தரையிலே விழுந்தார்கள் ."நான் இவளை விடமாட்டேன்,நான் இவளை விடமாட்டேன்" என்ற கூச்சல் அவர்களிடமிருந்து வந்தது. அவர்கள் ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம் .என் சகோதரன் இயேசுவின் நாமத்தை சொன்னபோதெல்லாம் ஆவர்களுக்குள் இருந்த பிசாசு நடுங்கியது .தன்னுடைய கண்களை இறுக ,இறுக மூடிக்கொண்டார்கள்."நீ யார்'" என்று அந்த ஆவியை பார்த்து என் சகோதரன் கேட்டபோது," இந்த பெண்ணுடைய எதிரியால் அனுப்பப்பட்ட ஒரு ஆவி நான் , இவளை இந்த நோயால் கொல்லும்படி நான் வந்தேன்"" உன்னால் தான் நான் இவளை விட்டு போகிறேன், வேறு யாராவது இருந்தால் இவளை கொன்றிருப்பேன் .என்று கூறிக்கொண்டு அந்த அசுத்த ஆவி அவர்களை விட்டு வெளியேறியது .அதற்கு பிறகு அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். அந்த வலியும் இல்லை,ரத்த வெளியேற்றமும் இல்லை . நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்கள் .

என்

கண்காண இவைகளை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அநேக கேள்விகள் எழும்பினது ?

"

ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்த ஆவி விலகியது ? மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரகளில் ஏன் போவதில்லை? முகமதுவின் நாமத்துக்கு ஏன் அசுத்த ஆவிகள் கீழ்படிவது இல்லை? இயேசுவின் நாமத்துக்கு கீழ்படிவதேன்?இயேசுவின் நாமத்தில் என்ன வல்லமையும் ,அதிகாரமும் உள்ளது ?இப்படி பல சிந்தனைகளும், கேள்விகளும் எனக்குள் நிரம்பியது.

சத்தியத்தை

தேடுதல்

திறந்த

இதயத்தோடு உண்மையை தேடி நான் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்துக்கொண்டிருந்த போது மாற்கு 16:16-18 வசனங்களுக்கு வந்தேன் .17வது வசனத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயேசு சொல்லொயிருக்கிறார்." என்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன , என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள்" இதை படித்தபோது என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது.எத்தனை ஆச்சரியம் அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.என் கண் காண அவை நிறைவேறியது .

இந்த

சம்பவம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மீது எனக்கு ஒரு விசுவாசத்தை கொண்டு வந்தது.இயேசுவுக்கு சுவிஷேசம் கொடுக்கப்பட்டது .ஆனால் அவை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் என்று என்னுடைய இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனக்கு கற்றுகொடுத்திருந்தனர் ."அப்படியானால் இன்றைக்கும் இயேசுவின் அந்த வார்த்தை எப்படி கிரியை செய்கின்றது ? கண்டிப்பாக வேதத்தில் இயேசு கூறிய அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க முடியும்."என்று சொல்லி நான் தொடர்ந்து வேதத்தை வாசித்தேன்.இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் , கிறிஸ்தவக்கொள்கைகளைப் பற்றியும் முஸ்லீம்கள் கூறும் ஆதாரமில்லாத கூற்றுகளுக்ககெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.நான் தேவனுடைய வார்த்தையை வேதத்தில் வாசித்ஹ போதுஅது என்னை சரி படுத்தியது .இஸ்லாமிய மத அறிஞர்களால் கிறிஸ்தவத்திற்கு எதிராக நான் கற்றிருந்த எல்லா தவறான உபதேசங்களையும் புரிந்து கொள்ள உதவியது .

இயேசுகிறிஸ்துவின்

வார்த்தைகளால் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் மீது மிகுந்த அன்பாயிருக்கிற பிதாவினிடத்தில் பேசவும் , உறவு வைத்துக்கொள்ளவும் அறிந்து கொண்டேன்.முதல் முறையாக என் ஆவியில் இருந்த வெற்றிடம் நீங்கி தேவ அன்பும்,பிரசன்னமும் என்னை நிறைத்தது .சிலுவையில் மரித்து உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்க்காக இயேசுவை அனுப்பினதின் மூலம் வெளிப்பட்ட தேவ அன்பையும் ,அவருடைய தீர்மானத்தையும் , அவருடைய நீயாயத்தீர்ப்பையும் நன்றாக புரிந்து கொண்டேன் .

1998

டிசம்பர் 24-ம் தேதி நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராகவும்,ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றேன். அந்த நாளிலிருந்து சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும்,அழிகின்ற மக்களுக்கு சத்திய வார்த்தைகளை அறிவிக்கவும் என் இருதயத்திற்குள் தேவனுடைய அழைப்பு எரிகின்ற நெருப்பைப்போல் ஏவத்தொடங்கியது.எனவே maltinationational company யிலிருந்து என்னுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு தேவனுடைய பணிக்கு என்னை அர்ப்பணித்தேன்.

ஊழியம்

நானும்

என் சகோதரன் முஸ்தபாவும் சேர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தொடங்கினோம். இந்த செய்தி எங்கள் பட்டணம் முழுவதும் பரவியது.அது என் பெற்றோருக்கு பெரிய அவமானமாக இருந்தது.இஸ்லாமிய சமுதாயத்தில் முன்னுதாரனமாக இருந்த எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் பெற்றோருக்கு அவமானமாயிருந்தது.

ஆனால்

நாளடைவில் தேவன் அவர்களுடைய இருதயத்தை திறந்ததினிமித்தம் என் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்.

என்

தாயும், தகப்பனும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்

"

என்னுடைய மகன்கள் பிரசங்கிப்பது உண்மையென்றால் நான் அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்"என்று என் தாய் தேவனிடத்தில் கேள்வி கேட்டார்கள்.அப்படி அவர்கள் ஜெபித்தபோது ஒரு தரிசனம் கண்டார்கள்.அந்த தரிசனத்தில் தன் முழு சரீரத்தில் காயங்களோடு இயேசு காட்சி அளித்தார்.அவருடைய காயங்களிலிருந்து இரத்தம் புரண்டோடியது.அதை கண்ட என் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.உடனே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனாலும் என் தந்தைக்கு பயந்து அவர்கள் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தார்கள்.

ஒரு

நாள் ரெயிலை ஓட்டிக்கொண்டிருந்த என் தகப்பனார் ஓரிடத்தில் எஞ்சினை பரிசோதிக்கும் படி இறங்கி ,பரிசோதித்துவிட்டு மீண்டும் ஏறியிருக்கிறார். ஏதோ கடித்தது போல் இருந்தது .அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை .வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவருடைய பாதம் மிகவும் வீங்கியிருந்தது .மருத்துவரிடம் சென்றோம் ."இது elephantiasis என்ற வியாதி இதை சுகப்படுத்த மருந்து எதுவும் கிடையாது "என்று கூறிவிட்டார் .என் தகப்பனார் மிகவும் மனமுடைந்து போனார்.

நாங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், அவர் சுகப்படுத்துவதையும் கூறினோம்.உடனே என் தந்தை சொன்னார் ,"அவர் என்னை சுகமாக்கினால் நான் அவரில் விசுவாசம் வைத்து என் இரட்சகராகவும்,தேவனாகவும் ஏற்றுக்கொள்வேன்".நாங்கள் அவருக்காக ஜெபித்து ஒரு பாட்டிலில் எண்ணையைக் கொடுத்தோம்." இந்த எண்ணை சிலுவையில் இயேசு உங்களுக்காக சிந்திய இரத்தத்தை பிரதிபலிக்கிறது .விசுவாசத்தோடு தடவுங்கள் "என்று சொன்னோம் .

அதை

எடுத்து சென்ற அவர் வேலை நடுவில் தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் அதை தடவினார். இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய பாதத்தில் வீக்கம் முழுவதும் சுகமாயிருந்தது . இந்த அற்புதத்தின் மூலம் இயேசுவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார் .ஞானஸ்தானமும் பெற்றார் .

சமுதாயத்திலிருந்து

ஒதுக்கி வைக்கப்பட்டோம் .

எங்கள்

பகுதியிலிருந்த முஸ்லீம்களால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டோம். அருகில் இருந்தவர்களும்,உறவினர்களும் எங்களை கைவிட்டனர். தேவனுக்காக பாட்னுபவிப்பதை ஆசீர்வாதமாக கருதினோம் . அவருக்காக பாடுபட்டதும், இப்போது அனுபவிக்கிறவைகளும் அவருடைய சிலுவை மரணத்திற்கு முன் ஒன்றுமில்லை .

எங்களுடைய

பட்டணத்திலேயே தேவ அழைப்பின் பேரில் சபையை நிறுவி ஊழியம் செய்தோம் .ஆத்துமாக்கள் பெருகினர்.ஊழியமும் வளர்ந்து பெருகியது.

முஸ்லீம்கள்

மத்தியில் ஊழியம் செய்வதற்கு மும்பையில் ஒரு புதிய பணித்தளத்திற்கு தேவன் வழிநடத்தினார். நானும் என் மனைவி சூசனும் 2005- ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம் .

இயேசுவுக்காக

இஸ்லாமியர்களை ஆதாயம் செய்யும் ஊழியம் ;

இந்த

ஊழியம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடக்கிறது.இந்த Winning Muslims For Christ Ministry யின் தரிசனம் ,சபைகளில் இஸ்லாமியர்களைக் குறித்த பாரத்தை அளிப்பதும் ,இஸ்லாமியர்களுக்கான ஊழியத்தை செய்வதற்கு சபைகளை பக்குவப்படுத்துவதும். இந்த ஊழியத்தின் பயிற்சி முகாம்களையும் ,கருத்தரங்குகளையும் ,சிறப்பு வகுப்புகளையும் நடத்தி சபைகளையும் ,தனி னபர்களையும் முஸீம் சுவிசேஷத்திற்கு தயார்படுத்துகிறது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP