காருக்கு கவர்ச்சி எண் பெற ஐந்தரை லட்சம்
>> Friday, April 30, 2010
விஜயவாடா : ஆந்திர மாநில எம்.பி., ஒருவர், 34 லட்ச ரூபாய் செலவழித்து வாங்கிய தனது புதிய ஜாகுவார் காருக்கு, பேன்சி நம்பர் வாங்க, ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். விஜயவாடா நகர் காங்கிரஸ் எம்.பி., லகடபதி ராஜகோபால், சில தினங்களுக்கு முன் கார் வாங்கினார். இந்த காருக்கு, பேன்சியாக நம்பர் வாங்க வேண்டுமென விரும்பிய அவர், தனக்கு விருப்பமான ஏபி09 பிஓய் 9999 என்ற எண் தேவையென, மாநில போக்குவரத்து ஆர்.டி.ஓ., அதிகாரிக்கு ஆன்லைன் மூலம், பதிவு செய்து கொண்டார். மொத்த கூட்டுத் தொகையும் '9 9999' ஆக வரும் இந்த பேன்சி நம்பர், அதிக பட்சமாக ஐந்தரை லட்ச ரூபாய் வரை ஏலம் போனது. லகடபதி ராஜகோபால் எம்.பி., இந்த தொகையை செலுத்தி, இந்த கவர்ச்சி எண்ணை ஏலம் எடுத்துள்ளார்.
source:dinamalar
--
http://thamilislam.tk
0 கருத்துரைகள்:
Post a Comment