தர்மபுரியில் விஜயகாந்த் பேச்சு ஒகேனக்கல் திட்டத்துக்காக தேமுதிக தொடர்ந்து போராடும்
>> Saturday, April 12, 2008
தர்மபுரி, ஏப். 11: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தர்மபுரியில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு கர்நாடக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது ஏமாற்றத்தை அளிக்கிறது. உடனடியாக மத்திய-மாநில அரசுகள் கலந்தாலோசித்து, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஜூன் மாதம் வரை பொறுத்திருப்போம், அதன் பிறகும் இத்திட்டம் தொடங்கப்படவில்லையெனில் தேமுதிக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#
0 கருத்துரைகள்:
Post a Comment