வரதட்சணை தராததால் இந்து மனைவியின் கண்களை தோண்டிய இந்து கணவன்
>> Saturday, April 12, 2008
வரதட்சணை தராததால் மனைவியின் கண்களை தோண்டிய கணவன்
நகரி, ஏப். 12-
ஒரிசா மாநிலம் ரூர்கே லாவை அடுத்த கோபிநாத்பூரை சேர்ந்தவர் பிருந்தாவன் இவரது மனைவி துளசி.
திருமணத்தின் போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் தருவதாக துளசியின் பெற்றோர் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் 15 பவுன் நகைதான் மகளுக்கு போட முடிந்தது.
இதையறிந்ததும் பிருந் தாவன் ஆவேசமானார். "மீதி நகையை ஒரு வாரத்தில் கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உன்னை உயிருடன் கொளுத்தி விடு வேன்'' என்று மிரட்டினார்.
ஆனாலும் துளசியின் பெற்றோரால் ஒரு வாரத்தில் 5 பவுன் நகை கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று பிருந்தாவன் துளசியை வரதட்சணை கேட்டு அடித்து உதைத்தார். பின்னர் துளசியை கட்டி வைத்து கத்தியால் அவரது 2 கண்களையும் தோண்டி எடுத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். அங்கு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பிருந்தாவன் தப்பி ஓடினார்.
கண்களை இழந்த துளசி தற்போது அங்குள்ள ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி போனோரு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிருந்தாவனை தேடி வருகிறார்கள். வரதட் சணைக்காக கணவன், மனைவியின் கண்களை தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.http://www.maalaimalar.com/
2 கருத்துரைகள்:
இவனை போன்ற மிருகங்களை தூக்கில் தொங்கவிட வேண்டும். அது இருக்கட்டும், அது என்ன "இந்து மனைவி", "இந்து கணவன்"? இதையே ஒரு முஸ்லிம் செய்திருந்தால் "முஸ்லிம் கணவன்", "முஸ்லிம் மனைவி" என்று கூறியிருப்பீர்களா? அரக்கர் குணம் படைத்தவர்களுக்கு ஏதய்யா சாதி, மதம்?
நன்றி அனானி அவர்களே.நீங்கள் சொன்ன பதிலை தினமும் கிறிஸ்தவர் அதைசெய்தார் இதை செய்தார் என்று பத்து இருபது பதிவு எழுது நண்பர் எழில் அவர்களுக்கு காதில் போய் ஏறும் படி சொல்லுங்கள்.
நான் இப்படி எழுத ஆரம்பித்தால் தினமும் ஒரு 100 பதிவுகள் எழுதலாம்.ஆனால் நான் அப்படி விரும்பவில்லை
Post a Comment