இந்தியா டுடேயின் பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால்
>> Monday, March 15, 2010
இந்தியா டுடேயின் பலம் பொருந்தியவர்கள் பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் செல்வாக்குப் படைத்தவர்களை வருடத்திற்கு ஒருமுறை பட்டியலிட்டு வரும் இந்தியா டுடே, 2010ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலம் படைத்தோர் பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இடம்பெற்றுள்ளார். நக்கீரன் இணையதளம் மூலம் தமிழகத்தின் பரபரப்புச் செய்திகள் உலகெங்கும் பரவுகிறது என்று குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சக்தி வாய்ந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இந்த இதழின் அம்பலம் குறித்து அஞ்சத் தவறுவதில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், குறைகள் - துஷ்பிரயோகம் குறித்த குற்றச் சாட்டுகள் இருப்பினும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் நடுவில் வளர்ந்த நக்கீரன் தமிழ் புலனாய்வு இதழியலின் முதலும் முடிவுமாகத் திகழ்கிறது. வாரமிருமுறை இதழ், இணையதளம், பதிப்பகம் என இவரது குழுமம் கிளை பரப்பியுள்ளது. அரசியல் செய்திக்கு நக்கீரன் என்று அடையாளம் பெற்றிருக்கிறது. வீரப்பன் புலனாய்வு குறித்தும் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் முதல் முறையாக எழுதும் யுத்தம் தொடர் நக்கீரனின் சமீபத்திய பரபரப்பாக உள்ளது என்றும் இந்தியா டுடேயில் குறிப்பிடப்பட்டுள்ளது. source:nakkheeran
இந்த பட்டியலில் மேலும் டி.வி.எஸ். மோட்டார்ஸின் எம்.டி. வேணு ஸ்ரீநிவாசன், இந்தியா சிமெண்ட்ஸின் எம்.டி. என்.ஸ்ரீநிவாசன், பாப்பீஸ் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வரும் ஏ.சக்திவேல், அப்போலோ குழுமத்தின் எம்.டி. ப்ரீத்தா ரெட்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி, நடிகர் கமல்ஹாசன், அடையாறு ஆனந்தபவனின் எம்.டி. கே.டி.ஸ்ரீநிவாச ராஜா, சந்திராயன் திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, உயிர்மை பதிப்பகத்தின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment